அத்தியாயம் – 59
அருந்ததியை கண்காட்டியபடி தனது டிரான்ஸ்லேட்டரை எடுத்து ஆன் செய்து மாட்டியபடி அவர்களுக்கும் சேர்த்து டீ ஆர்டர் செய்தான் கூடவே அனைவருக்கும் டிஃபனும்.
அவள் அருகில் சென்ற நிதின்
“அரூமா அவளுக்கு ஒன்னுமில்லடா பார்த்தல ரொம்ப சோர்வா இருக்கா அதான் அப்படி இருக்கா அழுறத நிறுத்து” என்று நிதின் கூற
“அவளை பார்த்தீங்களா அண்ணா எப்படி இருக்கா? இத்தனை நாள் அப்பாவை தேடாதவ இன்னைக்கு உங்களகூட விட்டுட்டு இவரு கையை பிடிச்சுட்டு அப்பானு தூக்கத்தில ஒலர்ரா நான் தப்பு பண்ணிட்டேன் அண்ணா நானும் அவகூட போய் இருக்கனும் எப்பவும் கவனமா இருக்குறவள நான் நம்பி தனியா அனுப்பி தப்பு பண்ணிட்டேன்” என்றபடி அழுதவள் ஆராவை பார்த்து
“அவளுக்கு என்ன ஆச்சுனு கொஞ்சம் டீடெயிலா சொல்றீங்களா?” என்று கேட்க அவர்கள் பேசுவதை கேட்ட டிரைவர் வெளியே சென்றுவிட்டார்.
“நான் அவளுக்காக வெயிட் பன்னேன் ஆனா அவ ஏதோ வாங்கனும்னு சொல்லவும்தான் முன்ன கிளம்பினேன் அங்கிருந்து ஒரு அஞ்சு கிலோமீட்டர் தூரம்தான் போய் இருப்பேன் அப்போதான் என் கார்ல கூட இருந்த கார்ட்க்கு நிதின் சார்கிட்ட இருந்து ஃபோன் வந்தது அவர் ரொம்ப டென்ஷனா பேசினார் போல அதும் கார்ட்ஸ்கிட்ட என்ன ஏதுனு விசாரிக்கவும் அவர் தகவல் சொல்லவும்தான் உடனே நிதின்கிட்ட நான் வாங்கி பேசினேன் அவரை லொகேஷனை அனுப்ப சொல்லி போககுள்ள ஒரு மூனு பசங்க மேதாவ சுத்தி பேசிட்டு இருந்தவங்கள்ள பார்த்து தான் நான் கார்ட்க்கு முன்னமே இறங்கினேன் ஒரு பையன் அவமேல கையை வைக்க போனான் அதுக்குள்ள நான் அவனை தடுத்து அடிக்க கார்ட்ஸ் அடிச்சுட்டாங்க நான் உடனே மேதாவ எழுந்து வண்டிக்கு போக சொன்னேன் ஆனா அவ அன்கம்பர்டபுளா சுத்தி சுத்தி பார்த்து மாட்டேன்னு சொல்லி அப்படியே இருந்தவ அழ ஆரம்பிச்சுட்டா அப்போதான் என்னானு பார்த்தா அவளுக்கு மென்ஸஸ் ஆகி இருந்தது புரிஞ்சது அதுல அவ டிரஸ்லாம் ஸ்பாயில் ஆகி இருக்குனு புரிஞ்சது.
அவ அங்க இருந்து நகர தயங்குறதும் புரிஞ்சது”
“ஐய்யோ பேடை டேபிள் மேலேயே மறந்து வெச்சுட்டு போய் இருந்தாளே” என்று அருந்ததி கூற
அதை ஆமோதித்தவன் “உடனே உங்களுக்கு ஃபோன் பண்ணேன் பட் எடுக்கல அதான் அவளோட தயக்கத்தை புரிஞ்சு அதுக்கு மேல அவள அங்க விட்டாலும் ஆபத்துனு புரிஞ்சு கார்ட்ஸ் அண்ட் டிரைவர் எல்லாரையும் போக சொன்னேன் முதல்ல அப்புறம் தான் அவள கார்ல ஏற சொன்னேன் வயிறுவலியில வேற துடிச்சு இருந்தா போல அது பயம் பதட்டம்னு எல்லாம் சேர்ந்து மயங்கி விழுந்துட்டா” என்றபடி நடந்த அனைத்தையும் கூறி முடித்தவன் அப்போது தான் அவளை பற்றிய பேச்சு ஒருமையில் இருப்பதை உணர்ந்தவன் அவர்கள் அதை கவனிக்கவில்லை என்று எண்ணி லாவகமாக பேச்சை மாற்றினான்.
ஆனால் அவன் பேசும்போதே அதை கவனித்துவிட்டான் நிதின்.
இவன் அனைத்தையும் சொல்லி முடிக்க அருந்ததியோ அழ ஆரம்பித்து இருந்தாள்.
“என்னாலதான் நான் தூங்காம அவகூட போய் இருக்கனும்.
அப்படி என்ன எனக்கு தூக்கம் முக்கியம் அந்த நேரத்தில யாருமே இல்லாம அவ எவ்ளோ கஷ்டப்பட்டு இருப்பா பயத்தோட வலியோட எவ்ளோ கஷ்டப்பட்டாளோ? நான் மொபைலை சைலண்ட்ல போடாம இருந்து இருக்கனும் நேத்து ஒருநாள் தூங்காம இருந்து இருக்கனும்” என்று அழ அவளுக்கு ஆறுதல் கூறியவன்
“நடக்கனும்னு இருந்தா நீயோ இல்ல நானோ யார் என்ன பண்ணாலும் மாத்த முடியாது அரூமா.. அவளுக்கு உடம்ப தேத்துற வழியை பார்ப்போம்” என்று விட்டு அவளை அழைத்து செல்வதை பற்றி பேச டிரான்ஸ்லேட்டரை போட்டு இருந்ததால் அவனுக்கும் புரிய
“அவளால இப்போ நகர கூட முடியாது நிதின் சர் ஏற்கனவே மீடியா அண்ட் அவுட்டர் பீபிள் கண்ணுல படாம நான் இங்க கொண்டு வரவே படாதபாடு பட்டேன் நல்லவேளையா நைட்னால நான் கூட்டிட்டு வந்துட்டேன் இப்போ பகல்நேரம் இப்போ கூட்டி போக முடியாது தூக்கிட்டு தான் போகணும் அப்படி போனா என்னோட ரூம்ல இருந்து போறதால வீணா தப்பான நியூஸ் பரப்பிடுவாங்க.
ஆல்ரெடி டாக்டர் கிட்ட வேற இவ என் வொய்ஃப்னு சொல்லிதான் ட்ரீட்மெண்ட் பார்க்க வெச்சோம் இப்போ ஏதாவதுனா அசிங்கமாகிடும். ஆல்ரெடி என்னோட பிரைவசில ரொம்ப ப்ராப்ளம் ஆகிட்டு மேல மேல என்னோட ப்ரைவசிய கெடுத்துக்க நான் விரும்பல அவ இங்கேயே இருக்கட்டும் திரும்ப திரும்ப தூக்கிட்டு சுத்த வேணாம் அருந்ததி மேடம் வேணா இங்கேயே தங்கி அவள பார்த்துக்கட்டும்” என்று கூற நிதினுக்கும் அதுவே சரியென பட
அருந்ததியிடம் அவனும் அதையே சொல்ல சரியென அவளும் மேதாவின் அறையை நோக்கி நடந்தாள்.
அப்போது
“ஒரு நிமிஷம்” என்று கூற
நின்று அவனை பார்த்தவளிடம்
“நீங்களே பார்த்தீங்கல்ல அவளுக்கு தேவையானதுலாம் செஞ்சு நானே தூங்க வெச்சுட்டேன் சும்மா தூங்கபோறவ பக்கத்துல உட்கார்ந்து என்ன பண்ண போறீங்க? நீங்க போய் ப்ரஷ் ஆகிட்டு குளிச்சிட்டு சாப்பிட்டு உங்களுக்கு அவசியமான திங்க்ஸ் மட்டும் எடுத்துட்டு வாங்க அதுவரைக்கும் நான் பார்த்துக்கிறேன் அப்புறம் நீங்க வந்து பார்த்துக்கோங்க அதுக்குள்ள அவளும் தூங்கி எழுந்து இருப்பா ” என்று அழுத்தமாக கூற எதுவும் பேசாமல் தன் அண்ணனனை பார்க்க
‘என்ன இவன் அவளகூட இவ பக்கத்தில விட மாட்டேங்கிறானே? என்னவா இருக்கும்?’ என்று எண்ணியவன்
“சரி அப்படியே செய் அரூமா நானும் கிளம்புறேன் எனக்கும் வேலை இருக்கு போட்டது போட்டபடியே ஓடிவந்துட்டேன்” என்று கூறியபடி அவனிடம் விடைபெற்று இருவரும் கிளம்பினர்.
டிரைவரிடம் இன்று வெளியில் செல்லும் வேலை எதுவும் இல்லை அவரை கிளம்பும்படி சொன்னவன் தற்போது அவளது அறையாக இருந்த அவனது
அறையில் சென்று மெத்தையில் அமர்ந்தான்.
வெளியே வந்த அருந்ததியோ
“என்ன அண்ணா அவரும் சொல்றாருனு நீங்களும் அவர் சொல்றதுக்கெல்லாம் தலையாட்டுறீங்க அவளுக்கு இங்க அன்கம்பர்டபுளா இருக்காதா? அவரு ஆபத்துல உதவினாரு ஓகே அவளுக்கு உடம்பு சரியாகும்போது அவரை பார்த்தா அவளுக்கு ஃபேஸ் பண்ண கஷ்டமா இருக்காதா?” என்று கோவமாய் கேட்க
“அரூ இதுல நம்ம மேதாவை பத்தி மட்டுமே யோசிக்காதே அவரு சொல்றதுலயும் நியாயம் இருக்குல அதை யோசி.
நேத்தனா நைட் டைம் அதனால மத்தவங்க கண்ணுல படாம கூட்டிட்டு வந்துட்டாரு இப்போ அவளால எழகூட முடியாம இருக்கா நாம அவள தூக்கிட்டுதான் போகணும் அப்படி பன்றது நல்லதா யோசி யாராவது பார்த்து தப்பா ஏதாவது மீடியாக்கு பரப்பி விட்டா அவருக்கும் கஷ்டம் நம்ம மேதாக்கும் கஷ்டம்.
பார்த்தல அவள எப்படி துவண்டு போய் இருக்கானு அவள இங்க அங்கனு அலைய விடுறது நல்லதா யோசி உன்ன விட எனக்கு வயசும் ஜாஸ்தி அனுபவமும் ஜாஸ்தி நான் யோசிக்க மாட்டேனா நீ சொன்னதெல்லாம்” என்று அவன் கூற அமைதியானாள் அருந்ததி.
“இப்போதைக்கு நமக்கு நம்ம மேதா உடம்பு சரியாகனும் பார்த்தல அவள அப்பானு பொலம்புறா நம்ம முன்னாடிலாம் எதையும் காட்டிக்காம நடிச்சு இருக்கா அவன் கையை புடிச்சப்போ அப்பா சொன்னா அப்பாவோட ஆறுதல அவன்கிட்ட தான் தேடுறா அதைதான் அவன் அவளுக்கு கொடுத்து இருக்கான் அதனால அவளா எழுந்து நடந்து வரும்வரை அவள் இங்கேயே இருக்குறது தான் நல்லதுனு தோணுது அரூமா.
எனக்கு நீ வேற மேதா வேற இல்லடா உங்க ரெண்டு பேருக்கும் என்ன ஆச்சோ ஏதாச்சோனு தான் நான் எல்லாத்தையும் போட்டுட்டு ஓடி வந்தேன் அவ சேஃப்னு தெரிஞ்சதும் உனக்கு என்னவோனு தான் முதல்ல உன்ன பார்க்க வந்தேன் உங்க ரெண்டு பேரையும் பார்த்த அப்புறம்தான் எனக்கு உயிரே வந்துச்சு திரும்ப உன்ன அங்க தனியா விட எனக்கு மனசில்ல அரூமா நீ வா குளிச்சிட்டு ப்ரஷ் ஆகு நானே உன்ன இங்க திரும்ப கொண்டு வந்து விட்டு நானும் கிளம்புறேன் எனக்கு உன்னோட சேஃப்டியும் முக்கியம் இப்போதைக்கு உங்க ரெண்டு பேருக்கும் ஒரு ஆம்பள துணை வேணும் அது அந்த ஆராஷிதான் ஏன்னா இங்க வேற யாரையும் நம்ப முடியல உடனே பெண்ணியம்லாம் பேசாதே எனக்கும் புரியுது ஆனால் எனக்கு ஏதோ பதட்டமாவே இருக்கு உங்கள இங்க தனியா விட்டுட்டு என்னால அங்க இருக்க முடியாது புரிஞ்சுக்கடா அவளுக்கு உடம்பு சரியானதும் உடனே ஊருக்கு கிளம்பி வந்துடுங்க நான் டிக்கெட் அரேன்ஞ்ச் பண்றேன் ஓகே” என்று கூற அவனது பேச்சிலும் நியாயத்தை உணர்ந்தவள்
“சரிங்கண்ணா நீங்க டென்ஷன் ஆகாதீங்க நான் பார்த்துக்கிறேன் நான் ப்ரெஷ் ஆகிட்டு எல்லாம் பேக் பண்ணிட்டு வந்துடுறேன்” என்று கூற அவளது பேச்சில் அமைதியானவன் அவளது தோளில் கையை போட்டு அழைத்து சென்றான் அங்கு சென்று குளிக்க சென்றவள் தனக்கும் மேதாவிற்கும் தற்போது தேவையானதை எடுத்து தனியே வைத்தவள் மீதி எல்லாவற்றையும் எடுத்து பேக் செய்து வைத்துவிட்டு வெளியே வந்தாள் அவளை அழைத்துக்கொண்டு சென்ற நிதின் அங்கு அவளை விட்டு மேதா எழுந்ததும் அவனுக்கு அழைக்கும்படி கூறிவிட்டு மீண்டும் ஒருமுறை ஆராஷிக்கும் அவளுக்கும் பத்திரம் கூறிவிட்டே சென்றான்.