Skip to content
Home » வேண்டும் நீ எந்தன் நிழலாய்-89

வேண்டும் நீ எந்தன் நிழலாய்-89

அத்தியாயம் – 89

Thank you for reading this post, provide your thoughts and give encouragement.

மறுநாள் அதிகாலையே அவனது அந்த மொபைலை ரெடி செய்து கொண்டு வந்து அவனிடம் நீட்டினான் ஹர்ஷத்.

அதை வாங்கியதும் சிறு குழந்தைபோல மகிழ்ச்சியாய் பார்த்த ஆராஷி ஹர்ஷத்க்கு புதிது.

எப்போதும் உர்ரென ஆளுமையான பார்வையோடும் நிமிர்ந்த நடையோடும் எல்லா ஹீரோக்களையும் மாடல்களையும் பின்னுக்கு தள்ளி முதலில் வகிக்கும் அவனது வசீகர தோற்றமும் இல்லாமல் இப்போது பார்ப்பது அவ்வளவு குழந்தை தனமான ஆராஷி.
அவனது மகிழ்ச்சி ஹர்ஷத்தையும் தொற்றிக்கொள்ள சகறு குழந்தைக்கு சொல்வது போல மொபைலை பத்திரமாக தான் வைத்திருப்பதாகவும் அவர் கேட்கும்போது கொடுப்பதாகவும் இப்போது வேலை இருப்பதையும் சொன்னதால் மனமே இல்லாமல் அதை அவனிடம் கொடுத்தான்.
அவனிடம் கேட்க நினைத்த கேள்விகளை யாருமே அவனது உடல்நலம் கருதி கேட்கவில்லை.

அன்றைய தினம் மீண்டும் மீட் இருந்தது அதனால் கண்டிப்பாக பவுண்டரை வீடியோ காலில் வரவேண்டும் ஏனெனில் அவன் இன்னும் இருவாரங்களில் ஜப்பான் திரும்ப இருப்பதால் சில விஷயங்களை பேச வேண்டும் என்று கூறி இருந்தான் ஆராஷி.
இதனை ஏற்கனவே நிதினும் கூறி இருந்ததால் அவளும் வேறு வழியின்றி இன்றைய அலுவல்களை ஒத்தி வைத்து மீட்டிங்குக்கு ரெடியானாள்.
அன்றைய தினம் அவனது ஒரு பாடல் ரெக்கார்டிங் வேறு இருப்பதால் அவனுக்காக அவளது வேலைகளை ஒதுக்கி வைத்துவிட்டாள்.
ஃபவுண்டரா நிதினை மாத்தலாம் என நினைத்து தங்களது குடும்ப லாயரிடம் பேசியவளுக்கு கிடைத்தது. ஃபவுண்டராக மேதாஶ்ரீ அவர் இறந்தால் அவரது கணவன் மட்டுமே இருக்க முடியும் மேலும் இப்போது இருக்கும் ஃபவுண்டர் அவரது பதவியை அவள் கணவன் அல்லாது வேறு ஒருவருக்கு மாற்றினால் ரெனி ஃபேஷன்ஸ்ஸுடனான ஆராஷி ஷிமிஜு வின் கான்ட்ராக்ட் ரத்து செய்யப்படும் என உஷாராக உயில் எழுதி வைத்து விட்டிருந்தார் சரத்ஶ்ரீ.
‘இந்த அப்பாவ’ என்று மனதில் எண்ணியவள் என்றாகினும் இதை நான் எதிர்கொள்ள வேண்டும் என்று எண்ணியபடியேதான் அன்றைய மீட்க்கு ரெடியானாள்.

இரவுதான் பாடல் ரெக்கார்டிங் என்பதால் மாலைநேரம் மீட்டிங்குக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
அனைவரும் மீட்டிங் கான்ப்ரன்ஸ் ரூமில் இருக்க பார்வையற்ற குழந்தை முதல்முறை தாயின் முகம் காண தவிப்பது போல தவிப்பாய் அமர்ந்து இருந்தான் ஆராஷி.
அவனது கையை பற்றிய ரியோட்டோ ஆறுதலாய் அவனது கையின் மேல் தட்ட அவனை பார்த்த ஆராஷி சிறு பதட்டோடான சிரிப்பை கொடுத்தவன் தன் கண்களை சிமிட்டி அவனுக்கு தான் நன்றாக இருப்பதாக சொன்னான்.

அவனது பதட்டம் சிரிப்பை கொடுத்தாலும் அவனது மனதை எல்லோருக்கும் புரிய வைத்தது.
காதலை வெறுத்திருந்த ஹர்ஷத்துக்கு கூட இவனது இந்த காதலும் மேதாவின் காதலும் வியப்பை தந்தது பார்க்காமல் பேசாமல் ஏன் காதலாய் ஒரு தொடுதல்கூட இல்லாத இவர்களது தொலைதூர காதல் எவ்வளவு அழகானதாய் இருக்கிறது என்றே வியந்தான்.
சற்று நேரத்தில் அந்த பெரிய திரையில் தோன்றினாள் மேதஷ்வினி மாஸ்க் அணிந்து கொண்டு அமர்ந்து இருந்தாள்.
அவளது முகத்தை பார்க்க ஆவலாக காத்திருந்தவனுக்கு மாஸ்க் போட்டு மறைத்த முகமும் அந்த கண்கள் தன்னை காணாமல் மற்ற எல்லோரையும் காணும் அவளது மைவிழி அவனை மட்டும் தவிர்ப்பதை பார்த்து ஒரு பெருமூச்சை விட்டான்.
இதை பார்த்துக்கொண்டு இருந்த அருந்ததி
“அண்ணா மேடம்கிட்ட நேரடியா இவர பேச விட்டுடுங்க இல்லனா விடுற சூடான மூச்சுல நாமலாம் இங்கேயே வெந்துடுவோம் போல” என்று நிதினுக்கு மட்டும் கேட்கும்படி ரகசியமாக சொல்ல அவனும் அமைதியாக சிரித்துக்கொண்டான். அதை கேட்டுவிட்ட ஆராஷிக்கும் லேசாக சிரிப்பு வந்தது.

மாலைவணக்கம் அனைவருக்கும் தெரிவித்து தனது முகத்தில் ஏதோ இன்பெக்ஃஷன் ஆகி இருப்பதாக சொன்னவள் அதனால்தான் மாஸ்க் அணிந்து இருப்பதாக கூறியபடி அன்றைய தினம் மீட்டிங் கன்டினியூ செய்ய முடியாததற்கு தனது மன்னிப்பை வேண்டியவள் புதிய பாட்னர்ஷிப் கம்பெனியின் பெயரை யாருமே அவளுக்கு கூறவில்லையே என கேட்டாள்
அதுவரை அமைதியாக இருந்த நிதின் எழுந்து

“அது உங்களுக்கு உங்க பாட்னரே சொல்லனும்னு இருந்தார் அதனாலதான் அதை மட்டும் உங்ககிட்ட சொல்லல நீங்க எங்க இருக்கீங்கனு சொன்னா அவர் நேர்ல உங்கள மீட் பண்ணி டெவலப்மெண்ட் பத்தியும் பேசி அவரோட அவார்ட் பங்க்ஷனுக்கு இன்வைட் பண்ணனும்னு சொன்னாரு அதனால்தான் நாங்க சொல்லல மேடம்” என்றுவிட்டு ஆராஷியை பார்த்துவிட்டு அமர ஆராஷி அவளை பார்த்தவாறு எழுந்தவன் அவளுக்கு தமிழர் மரபுபடி கைகூப்பி வணக்கம் வைத்தான்.
அவளுக்கு அவனை தவிர்க்க முடியாத சூழலால் அவளும் அவனுக்கு எழுந்து நின்று கைகூப்பி வணக்கம் வைத்தாள்.

அவனை தன் கண்கள் முழுதுமாய் நிரப்பிக்கொண்டவள் அப்போதுதான் கவனித்தாள் அவன் ட்ரான்ஸ்லேட்டர் அணியாமல் இருப்பதை பார்த்த மேதா நிதினிடம்
“மிஸ்டர் நிதின் சர் ஏன் அவருக்கு டிரான்ஸ்லேட்டர் அரேஞ்ச் செய்யல?” என்று கேள்வி கேட்டபடி அங்கு நின்றிருந்த ஹர்ஷத்தை தான் பார்த்தாள் முறைத்தபடி.

‘ம்ம்க்கும் நம்மள முறைக்க ஆரம்பிச்சுட்டா என்னமோ நான் சொல்றதெல்லாம் இவன் கேட்கிறமாதிரி’ என்று எண்ணியவன் தன் பின்னே கட்டியிருந்த கையை பிரித்து முன்னே கொண்டு வர அவனது கையில் இருந்தது டிரான்ஸ்லேட்டர்.
அதை பார்த்தவள் குழப்பமாய் பார்க்க ஆராஷி ஜாப்பனீஸில் பேச ஆரம்பித்தான்.
மற்ற அனைவரும்தான் ட்ரான்ஸ்லேட்டர் அணிந்தபடி அமர்ந்து இருந்தனர்.

“நான்தான் டிரான்ஸ்லேட்டரை வேணாம்னு சொன்னேன் மேதஷ்வினி மேடம்.
நீங்களும் நானும் மட்டும் தானே பேச போறோம் அதுக்கு எதுக்கு டிரான்ஸ்லேட்டர்னுதான் வேணாம்னு சொல்லிட்டேன்.
ஆனா நாம பேசுறது அவங்களுக்கு புரியனும்னுதான் அவங்களுக்கு டிரான்ஸ்லேட்டரை போட்டு விட்டுட்டேன் இதுல உங்களுக்கு ஏதாவது பிரச்சனைனா சொல்லுங்க நான் மாத்திடுறேன்” என்று அவன் அவளது கண்களையே பார்த்தபடி பேச அவனது பார்வையில் தடுமாறியவள்

“நோ நோ ப்ராப்ளம்” என்றபடி அமைதியானாள் கைகள் வேர்த்துக்கொட்ட ஆரம்பித்து விட்டது அவளுக்கு அவனது பார்வையில்.
பின்னே மேடம் புடவை அல்லவா கட்டிக்கொண்டு அமர்ந்து இருந்தாள் அவள் எழுந்து வணக்கம் வைக்கும்போது ஒரு நிமிடம் விலகிய இடுப்பு சேலையில் அவளது யாருமே கவனிக்காத மச்சத்தை அவன் கவனித்து விட்டானே. அவன் பார்த்து இருக்க மாட்டான் என நினைத்து தனது உடையை நொடியில் சரிசெய்தவளுக்கு திக்கென்று இருந்தது அவனது பார்வை.
‘என்ன எல்லார் முன்னாடியும் இப்படி பார்த்து வைக்குறார்? நான்தான் அவர் பார்க்கும் முன்னமே சரி செஞ்சுட்டேனே? அப்போகூட அவரை பார்த்தானே அவர்தான் என்னை கவனிக்கலையே?’ என்றுதான் எண்ணினாள்.

பெண் தனக்கு பிடித்த ஆண் தனது சின்ன சின்ன விஷயங்களை கவனிக்க மாட்டார்கள் என்று எண்ணி இருப்பர் ஆனால் அவனோ அவனுக்கு மட்டும் பிடித்தவளின் சிறு அசைவையும் கவனித்து கவி எழுதிவிடுவான் என்று அறியாமல் இருந்து விடுவர்.

1 thought on “வேண்டும் நீ எந்தன் நிழலாய்-89”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *