அத்தியாயம் – 95
🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁
“என்கிட்ட எல்லாம் நீங்க வெளிப்படையா சொல்ற மாதிரி என்னை பத்தியும் உங்களுக்கு எல்லா விஷயமும் வெளிப்படையா இருக்கனும்னு தான் சொல்றேன்.
கண்டிப்பா நீங்க தெரிஞ்சுக்கிட்டே ஆகணும்.
இது மேதாக்கு சரத்ஶ்ரீ சர் மூலமா தெரிஞ்சு இருக்கலாம் ஆனா என் அண்ணாக்கு கூட தெரியாத விஷயம்.
ஏன்னா நான் அவ்ளோ டிப்ரஷன்ல போய் சூசைட் வரை ட்ரை பண்ணதுக்கு காரணம் என் சித்தினு சொல்ற மியா தான்”என்று அவன் ஆரம்பிக்க அனைவரது கவனமும் அவன்மேல்தான் இருந்தது.
“எங்க அப்பாவை விட என்னோட அம்மா வசதியானவங்க எங்க அப்பாவோட எக்ஸ் லவ்வர்தான் அந்த மியா
லிவ்விங் ட்டூகெதர், டேட்டிங், பெட் ஷேரிங்லாம் ஜப்பான்ல சாதாரணம் இன்டியா போல ஒருத்தனுக்கு ஒருத்தினு லாம் கல்ச்சர் ஃபாலோ பண்ண மாட்டாங்க.
அப்படி எங்க அப்பா எங்க அம்மாவை விட்டு வேலைக்காக பிரிஞ்சு இருந்த சமயம் மியாவோட டேட்டிங்ல இருந்து இருக்கார் ஆனா அவர் அவங்கள டச் பண்ணதே இல்லைனு சொல்றார் ஆனா அவங்க சொல்றது ஒரு நாள் அவர் முழு போதையில் என்ன செஞ்சார்னு மறந்துட்டதாகவும் சொல்றாங்க அதுக்கு அப்புறம் அப்பா அவங்களோட பணத்தாசையை புரிஞ்சு அவங்கள விட்டு பிரிஞ்சு வந்துட்டாங்க இந்த விஷயத்தை அம்மாகிட்டயும் சொல்லிட்டாங்க பட் அவங்க சடனா அப்பாவை தேடி வந்தாங்க அண்ட் அவங்களோட பையனோட டி.என்.ஏ டெஸ்ட் அண்ட் அவனோட ஃபேஸ் எல்லாம் எங்க அப்பாவோட மேட்ச் ஆக இருக்குறதா காட்டினாங்க.
நான் எங்க அப்பா அந்த பையன் எல்லாம் பார்க்க ஒரே போல இருந்தோம் அதனால அப்பாவும் அவங்க பொய் சொல்லலனு நினைச்சுட்டு இருந்தார்.
ஆனா அது எல்லாமே அவங்க எங்க சொத்தையெல்லாம் பிடுங்க ஏமாத்தின வேலைனு எங்க அம்மா கண்டுபிடிச்சுட்டாங்க அவங்க பேசிட்டு இருந்தது எல்லாம் அவங்க கேட்டுட்டாங்க.
எங்க அம்மாவை மனநலம் சரியில்லாதவங்களா மாத்தி என்னையும் கேய்யா மாத்தி எங்கள விரட்டிட்டு அவங்க பையனை இந்த சொத்துக்குலாம் வாரிசா மாத்துறதுதான் அவங்க ப்ளான் அதுக்காக அவங்க பையனை எங்க அப்பா சாயல்ல அவங்க ப்ளாஸ்டிக் சர்ஜரி செஞ்சு மாத்தி இருக்காங்க.
இது எங்க அம்மா கேட்டதை அவங்க பார்த்துட்டாங்க அதனால ஒரே சமயத்தில எங்க அம்மாவை கொன்னு என்னை வெச்சு என்னை கே…கேயா மாத்தி பா..” என்று அவன் பேச தடுமாற அவனது தோளில் ஆதரவாய் கைவைத்த ஹர்ஷத்
“வேணாம் கஷ்டப்படுத்திக்காதீங்க நீங்க எமோஷனல் ஆனா ஹெல்த் ஸ்பாயில் ஆகும்” என்று அவன் ஆராஷியை அமைதிபடுத்த முயல
“இல்ல ஹர்ஷத் இதை இவங்க கண்டிப்பா தெரிஞ்சுக்கணும்
அதுக்கு நான் சொல்லியே ஆகணும்” என்றபடி தன்னை ஆசுவாசப்படுத்தி கொண்டு பேச ஆரம்பித்தான்.
“எங்க அம்மா எனக்கு ஃபோன் பண்ணி நீ எங்கனா போய்டுடா உன்னை இந்தி மியா கிட்ட இருந்து யாராலும் காப்பாத்த முடியாது நான் சொல்ற இடத்துக்கு வானு சொன்னாங்க அந்த இடம் கொஞ்சம் தூரமா இருந்ததால் நான் போகுறதுக்குள்ள அவங்களுக்கு ஆக்சிடெண்ட் ஆகிடுச்சு நான் அதுல ரொம்ப அழுதுட்டு இருந்தேன் அப்போ எனக்கு பதினேழு வயசுதான் அப்படி நானும் அப்பாவும் கவலையில இருக்கும்போதுதான் அவங்க என்னை கவனிச்சுக்கிறேன்னு சொல்லி எங்க அப்பாவை ப்ரெயின் வாஷ் பண்ணி
அம்மாவோட இழப்புல இருந்து வெளிய வர நான் இடம் மாறினா நல்லா இருக்கும்னும் என்னை வெளிநாட்டுக்கு படிக்க அனுப்புறேன்னும் சொல்லி என்னை அவங்க ஆளுங்க கூட அனுப்பி அவங்க என்னை ஒரு இடத்துல அடைச்சு வெச்சு எனக்கு மயக்க ஊசி போட்டு இருட்டு ரூம்ல அடைச்சு என்னை ஃபார்ன் வீடியோ எடுக்க ட்ரை பண்ணாங்க நிறைய ஃபார்ன் வீடியோல நடிக்குற பொண்ணுங்களையும் கேய்யா இருக்குற பசங்களையும் அந்த ரூம்ல விட்டு என்னை தொடவும் கொடுமை செய்யவும் என் டிரஸ்ஸ அன்டிரஸ் செய்யும்படியும் ரொம்ப அசிங்கமா என்கிட்ட பேசும்படியும் செஞ்சு என்னை ரொம்ப கொடுமை படுத்தினாங்க இதுதான் நான் பொண்ணுங்கள வெறுக்க ஒரு காரணமா அமைஞ்சுட்டது.
அந்த வயசுல எனக்கு நேர்ந்த கொடுமையோட தாக்கம்
எதுக்குமே நான் அவங்களுக்கு அடிபணியலனு கடைசியில என்னை அடிச்சு துன்புறுத்தி போதை பழக்கத்துக்கு அடிமையாக்கிட நினைச்சாங்க ஆனா அதுக்குள்ள எங்க அப்பாவோட சொத்தை எழுதி வாங்கினவங்களால எங்கம்மாவோட சொத்தை ஆட்கொள்ள முடியல எங்க அம்மா சாகுற கடைசி நேரம் உயிலை மாத்தி எழுதி இருக்காங்க அப்படி எழுதிட்டு திரும்ப வரும்போது தான் அவங்கள கொன்னு இருக்காங்க.
அதன்படி எனக்கு திருமணம் ஆகி குழந்தை பிறந்த அப்புறம்தான் என் அம்மாவோட சொத்து எங்களுக்கு வரும்னும் இடையில நான் இறந்துட்டாலும் அது அனாதை ஆஸ்ரமம்க்கு போய்டும் இல்ல ஒருவேளை நான் பையித்தியம் ஆகிட்டா மட்டும்தான் அந்த சொத்து எங்க அப்பாக்கு வரும்னு எழுதி இருந்தது.
அதனால எனக்கு போதை ஊசி போட்டு என்னை பையித்தியமா மாத்த முடிவு பன்னாங்க.
அதுக்குள்ள தான் எங்கம்மா சாகுற கடைசி நேரத்தில் சரத்ஶ்ரீ சர்கிட்ட எல்லாம் சொல்லி இருக்காங்க அதன்படி அவர் எங்கப்பா கிட்ட பேச போய் இருக்காரு ஆனா அவரு அப்போ மியாவை நம்பினாரே தவிர சரத்ஶ்ரீ சரை நம்பல அப்புறம் மியாவோட ஆக்டிவிட்டீஸ் வெச்சுதான் சரத்ஶ்ரீ சர்க்கு நான் ஃபாரின் போகலனும் என்னை கடத்தின விஷயமும் தெரிய வந்து என்னை அங்க இருந்து காப்பாத்தினார்.
அப்புறம் அவரே என்னை நல்ல சைக்காலஜி டாக்டர் கிட்ட ட்ரீட்மெண்ட் எடுக்க வெச்சு
கொஞ்சம் கொஞ்சமா என்னை மீண்டு வர வெச்சார்.
அந்த சம்பவத்தால நான் எங்க அப்பாகிட்ட கூட சேரலை அதனாலேயே என்னை தனியா தங்க வெச்சு எனக்கு நல்லபடிப்பு எல்லாம் கொடுத்தார் ஆனாலும் என்னால அந்த தாக்கத்தில இருந்து மீண்டு வரமுடியல அவ்ளோவா அதனால எங்க அப்பாக்கிட்ட பேசி ரியோட்டோ அண்ணாவை தத்து எடுக்க வெச்சு என்கூட பழக வெச்சு எனக்கு ஸ்பான்சரா மாறி என்னை நல்வழி படுத்தினார்.
நான் அந்த கஷ்டம் தாங்காம பொண்ணு ஆணுனு யாரையுமே கிட்ட சேர்க்காம ரொம்ப இன்ட்ரோவெர்ட்டா சைக்கோ மாதிரி ஆகிட்டேன் சூசைட் அட்டம்ப்ட் பண்ணப்போதான் மேதாவை பார்த்தேன் அதும் அவளோட கண்ணை மட்டும் தான் பார்த்தேன்
அப்போ அவ பேசின வார்த்தைகள் எங்க அம்மா என்கிட்ட அடிக்கடி சொல்ற வார்த்தைகள் அந்த வார்த்தைகள் என்னை உயிர்வாழ வெச்சது. ஆனா என்னோட வலி என்னை அவகிட்ட நெருங்க விடல. வளர்ந்துட்டேனே தவிர இன்னமும் ரொம்ப எமோஷனல் ஆனா எனக்கு அந்த பழைய நியாபகங்கள் வந்து மன அழுத்தம் வந்துடும் இதிலிருந்துலாம் என்னை மீட்டதும் என்னை வளர வெச்சதும் மீராவா நான் பார்த்த என் மேதானு தெரிஞ்சப்போ நான் எவ்ளோ பெரிய கொடுமைக்காரன்.
கண் இருந்தும் குருடன்னு தான் தோணுச்சு.
என் சித்தினு சொல்லி அவங்க பண்ண கொடுமைகளை நினைச்சாலே உடம்புலாம் பதறும்.
அவங்க மகனோட வாழ்க்கைக்காக என் வாழ்க்கையையும் என் அம்மா வாழ்க்கையையும் பாழாக்க பார்த்த அவங்கள பார்த்தா எனக்கு அவ்வளவு கோவம் வரும் அதுல இருந்து என்னை வெளியே வரவெச்சது மீராவோட எனக்காக அழுத அந்த கண்கள்தான்.
எங்க அம்மாக்கு அப்புறம் எனக்காக ஒருத்தர் இருக்காங்கனு அவதான் காட்டினா.
என்னை இப்போ நான் ஒரு உலகம் அறிஞ்ச நடிகனாவும் பாடகனாவும் இருக்க காரணம் அவர்தான்.
அவர் மூலமா எல்லாம் செய்ய வெச்ச என் அஷ்ஷூதான்.
அந்த பழைய நியாபகங்கள் வந்து என்னை நிலைகுலைய வைக்கும்போது என் மேதா சொன்ன அந்த வார்த்தைகளை தான் நினைப்பேன்.
அது என் அம்மா அடிக்கடி சொல்ற வார்த்தைகள் நான் சாக கிடந்த நேரத்தில அவ சொன்ன அந்த வார்த்தைகள்தான் இன்னும் என்னை உயிரோட வெச்சு இருக்கு.
இப்படி ஒவ்வொரு சந்தர்ப்பத்திலயும் என்னை காப்பாத்தி என் உயிரை எனக்கு திருப்பி கொடுத்தவ என் மேதா.
அவளை விட்டுப் போகனும்னா அது முடியாத காரியம்.
இதுவரைக்கும் என்னை அவ காப்பாத்தினா எனக்கே தெரியாம இனி அது என் வேலை.
என்னை சுத்தியும் என் மேதாவையும் சுத்தியும் இருக்குறவங்க பாதுகாப்பு இனி என் பொறுப்பு
என்னை பத்தி எல்லாம் சொல்லிட்டேன் இதுக்கு மேல என்மேல உங்களுக்கு நம்பிக்கை இருந்தா அவளை என்னை நம்பி ஒப்படைங்க” என்று நிதின் முன் நின்றான்.
அவனது கதையை கேட்டு எல்லோரும் அதிர்ந்து நின்றிருக்க இதுவரை அவனுக்காக மேதா செய்திருக்கும் வேலைகளை கேள்விப்பட்டதும் அவன்மேலான அவளது காதல் எவ்வளவு ஆழமானதாக இருக்க வேண்டும் என்பது தான் அவர்கள் எண்ணமாக இருந்தது அதைவிட அந்த சிறிய வயதில் மேதா தாயை இழந்து தவித்ததை விட இவன் பட்ட கஷ்டங்களை எண்ண எண்ண அவர்களுக்கு திக்கென்று இருந்தது.
