அத்தியாயம் – 96
- 🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁
யாருக்கு என்ன பேசுவதென்பதே புரியாமல் நின்றனர் அனைவரும்.
நிதினுக்கோ தன் முன் நிற்பவன் தன் தங்கையை தனக்கு தரும்படி கேட்பவன் அந்த பதின்பருவ பிள்ளையாய் தெரிந்தான்.
“எனக்கு அவங்க பண்ண அந்த கொடுமையால என்னால எந்த பையன் பொண்ணுனு யாரோடையும் சிரிச்சு இல்ல சாதாரணமா கூட பேச ஆகல.
ரொம்ப டிஃப்ரஷன் மோட்க்கு போய்ட்டேன். சரத்ஶ்ரீ சர்ரும் என் அண்ணா ரியோட்டோவும் என் லைஃப்ல வரலைனா என் லைஃப்ல நான் இந்நேரம் ஏதாவது சைக்கோவா இருந்து இருப்பேன்.
அண்ணன் அவரோட கவலையெல்லாம் ஓரம்கட்டி வெச்சுட்டு என்னை சரி செய்ய முயற்சி செஞ்சாரு அதும் என்னை பத்தின முழு உண்மையும் தெரியாமலே.
அவரை நான் எவ்ளோ கஷ்டப்படுத்தி இருக்கேன்னு எனக்கே இப்போதான் புரியுது மேதாவையும் அப்படித்தான் கொடுமை செஞ்சுட்டேன்ல. அவளுக்கும் என்னை பத்தி தெரியாம நான் கொடுமை பண்ணதை யோசிச்சா அவளும் என்னைலாம் காரி துப்பிட்டு போய் இருப்பானு தான் தோணுது” என்று முடித்தான்.
‘எப்படி இவனால் அத்தகைய கொடுமைகளை அந்த வயதில் தாங்கிக்கொள்ள முடிந்தது? எப்படி இவனால் அதை கடந்து வாழ முடிந்தது? எப்படி இவனால் அந்த வயதில் அத்தனை பாரத்தையும் மறைத்துக்கொண்டு புன்னகைக்க முடிந்தது.
தன் அத்தனை வலியையும் வேதனையையும் தன் வெற்றி படியாய் மாற்றி அதில் ஏறி உயரத்தில் நிற்க ஒரு அசாத்திய தைரியமும் தன்னம்பிக்கையும் வேண்டுமே? அந்த வயதில் இவனுக்கு அந்த சக்தியை கொடுத்தவளா தன் தங்கை? சிறுபிள்ளை என்று எண்ணியிருந்தவள் இன்று அவள் செய்தவைகளை கேட்கும் போது குழந்தை பருவத்திலேயே குடும்ப பொறுப்புகளையும் பிஸினஸ் பொறுப்புகளையும் தாங்கி கொண்டு இருந்தவளையா நாம் வளர்ந்த குழந்தையாக பார்த்தோம்? அவளின் உண்மையான முகத்தை அறிந்தவர் யார்?
தன் திறமைகளையெல்லாம் மறைத்து சிறு பிள்ளை போல செல்லம் கொஞ்சிய என் குழந்தையா இவ்வளவு பெரிய பெரிய செய்துவிட்டாள்? எவ்வளவு பெயர் வாங்கிய பெரிய பாடகன் நடிகன் ஒரு பிச்சைக்காரனை போல கைநீட்டி அவளை கேட்டு நிற்கிறானே அதில் என்ன தவறு? இவனையே எண்ணி அந்த வயதிலேயே அவனது தாய்போல அவனை மடிதாங்கி அவனை இன்று பாரே போற்றும் ஒரு திறமையானவனாய் வலம் வர செய்தவளை தானே கேட்கிறான். இவனை விடவா வேறு ஒருவன் வந்து அவறை தாங்கிவிடப்போகிறான்.
இல்லை வேறு ஒருவனை அவள்தான் ஏற்பாளா?
அவனிடம் எதுவுமே இல்லாதபோதே அவனை விலகாமல் காத்தவள் ஆயிற்றே அவளா அவனை விலகுவாள்.
ஆனால் விலகி இருக்கிறாளே? காரணமாய் கேட்ட விஷயம் அவளால் ஒரு குழந்தைக்கு தாயாக முடியாது என்பதாயிற்றே அந்த குறையோடு இவனுக்கு கொடுக்கவும் மனம் ஏற்கவில்லையே.
இருவரும் வாழ்வில் எவ்வளவு துயரங்களைதான் தாங்குவார்கள்?’ என்று பலவிதமாய் யோசித்தவன்
ஆராஷியை பார்க்க அவனது சிறு உருவம்தான் அவன் கண்களுக்கு தெரிந்தது அவனை அணைத்துக்கொண்டவன்
“எப்படி இவ்ளோ வலியை சுமந்துட்டு சிரிச்சுட்டு இருக்க நீ? அந்த வயசுல என்ன செய்ய முடியும் உன்னால? எதிர்த்து போராட எவ்ளோ கஷ்டப்பட்டு இருப்படா மோனே? மனசுக்குள்ளேயே வெச்சு புழுங்கிட்டு இருந்து இருக்கியே ரொம்ப வலிச்சுதா?” என்று நிதின் கேட்க லேசாக புரிந்தாலும் அவனது அணைப்பு வலுவாக இருந்ததாலும் முழுதாக புரியாததால் அவன் ஹர்ஷத்தை பார்க்க அவன் மொழிப்பெயர்க்க
லேசாக சிரித்தபடி அவனது அணைப்பிலிருந்து விலகியவன்.
“மேதா அளவுக்குலாம் கஷ்டப்படலை நிதின் சர்” என்று தனது வசீகர புன்னகையோடு சொன்னவனை பார்த்தவனுக்கு இதயமே வலித்தது.
‘எவ்வளவு காயம் கண்டாலும் அதை ஏற்று புன்னகைக்க பழகி விட்டானே இவன்.
நிஜவாழ்க்கையிலுமா இவனுக்கு இந்த நாடகவேஷம்?
எப்போது தான் இவன் இவனாக இருப்பானோ?’ என்று எண்ணியவன் அதை கேட்கவும் செய்தான்.
“நீ நீயா இந்த பொய் சிரிப்புலாம் இல்லாம இருந்ததே இல்லையா ஆரா?” என்று கேட்க அதற்கும் அதே புன்னகையை வீசியவன்.
“மேதாவோட இருந்தப்போ” என்றவன் தொடர்ந்தான்
“அவளோட இருந்த டைம் நான் அவளோட சண்டை போட ரெடியாகி இருக்கேன் ஆனா அந்த அளவுக்கு உரிமையா நான் யார்கிட்டயும் இருந்ததே இல்லை உரிமையா சண்டைபோட நமக்கு அவங்ககிட்ட உரிமை இருக்கனும் அந்த உரிமையை அவங்க கொடுத்து இருந்தா தான் நாம உரிமையா சண்டைபோட கூட முடியும்.
எனக்கே தெரியாம அந்த உரிமையை நான் எடுத்து இருக்கேன் அவ எனக்கே தெரியாம அந்த உரிமையை எனக்கு கொடுத்து இருக்கா
அப்படிலாம் நான் அண்ணாகிட்டகூட சண்டைப்போட்டு அவளை சீண்டிலாம் இருந்தது இல்லை ஏன் இதுவரை யார்கிட்டயுமே நான் அப்படிலாம் இருந்ததே இல்ல அவளை தவிர.
அதெல்லாம் இப்போ யோசிச்சாதான் தெரியுது அவ என்னை எவ்ளோ ஆக்ரமித்து இருக்கானு” என்று கூற அனைவரது முகத்திலும் லேசான புன்னகை ஒருவளை தவிர அது அருந்ததி தான்.
இவனை கவனித்ததில் எல்லோரும் அவளை கவனிக்க மறந்தனர் ஆனால் கவனிக்க வேண்டியவன் கவனித்து இருந்தானே கூடவே ஆராஷியும்.
ஆனாலும் அதை அவன் காட்டிக்கொள்ளவில்லை.
“எல்லாரும் என்னை பெரிய ஆர்டிஸ்ட்டா தான் பார்த்தாங்களே தவிர எனக்கும் ஃபீலிங்க்ஸ் இருக்கும்னு என்னை பார்த்து புரிஞ்சு பேசினவ அவமட்டும்தான்.
நான் இங்க வந்த புதுசுல ஒரு டைரக்டர் என்னை கான்டாக்ட் பண்ண ட்ரை பண்ணாரு.
அவரை தடுத்து திட்டி அனுப்பி வெச்சது மேதாதான்
எல்லாரும் எனக்குனு ஒரு ப்ரைவசி இருக்கும்னு யோசிச்சவ அவ ஒருத்தி மட்டும் தான்.
ஷூட் முடிஞ்ச ஒரு ஒரு நேரமும் எல்லாரும் அவங்களுக்கு தேவையானது என்கிட்ட இருந்து கிடைச்சதானு தான் பார்த்தாங்க.
அவ மட்டும் தான் தினமும் ஆர் யு ஓகே சர்னு கேட்பா உங்களுக்கு சீன் ஓகேதானேனுதான் டைரக்டர் கூட கேட்பார் ஆனா என்னை என் மனசு எப்படி இருக்கும் என்னோட மைண்ட்செட் அந்த நேரம் எப்படி இருக்கும்னு யோசிச்சவ அவ மட்டும் தான்.
ஆனா விதியை பார்த்தீங்களா?
இதெல்லாம் எனக்கு அவ என்கூடவே இருந்து செய்யும்போது எதுவுமே பெருசா தெரியல அவ என்னை விட்டு போன அப்புறம்தான் எல்லாமே எனக்கு தெரியுது.
ஜாப்பனீஸில்ல ஒரு ஃபேமஸ் லைன் சொல்லுவாங்க
நிலாவும் சூரியனும் உண்மையான காதலர்கள் அதனாலதான் அவங்களால சந்திச்சுக்கவே முடியலனு
நானும் மேதாவும் கூட அப்படித்தான்ல எங்களால சந்திச்சுக்கவே முடியல” என்று அவன் வருந்த ஆறுதலாய் தோளில் கைவைத்தான் ரியோட்டோ.
அவனை பார்த்து வலியோடு புன்னகைத்தவன்
“கடைசிவரை அவளை நான் பார்க்கவே மாட்டேனா? என்னை மன்னிக்கவே மாட்டாளா?” என்று அவன் உடைந்துபோன குரலில் கேட்க.
“டேய் என்னடா இப்படிலாம் பேசுற? கண்டிப்பா மேதாவை பார்ப்படா” என்று ரியோட்டோ அவனை அணைத்து ஆறுதல் படுத்த மேலும் உடைந்தவனாய் ஆனவன் தன் கலங்கிய கண்ணீரை மறைத்தபடி சிரிப்பை வரவழைத்துக்கொண்டு புன்னகைத்தான்.