அத்தியாயம் – 101
🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁
‘ஐயோ இவருக்கு சப்போர்ட் பண்ண போய் நான் மாட்டிக்குவேன் போலவே’ என்று தன்னையே நொந்து சுற்றிக்கொண்டு இருந்த ட்ரோன் கேமிராக்கள் அவள்புறம் திரும்பும் போதெல்லாம் முகத்தை மறைத்து இருந்தவளுக்கு அசெகரியமாக இருக்க கிளம்பிவிடலாம் என எழுந்து கொண்டிருந்தவளுக்கு பக்கத்தில் ஒரு செக்யூரிட்டி வந்து வழிமறித்து நின்று விட எழுந்தவள் அவரை நகர சொல்ல வாயெடுக்க அதற்குள் மைக்கில் அறிவிப்பு வந்தது நிகழ்ச்சி துவங்கப்போவதாக.
அதில் வழியின்றி அப்படியே அமரந்தாள் மேதா.
முதலில் பேசிய நிகழ்ச்சி விரிவுரையாளர் விழாவை பற்றியும் அதில் ஆராஷிக்கு கிடைத்த விருதை பற்றியும் இந்நிகழ்வில் அவரது ரசிகர்களுக்கு புது புது சர்ப்ரைஸ் இருப்பதாக கூற கூட்டமே ஆர்பரித்தது ஆராஷியின் பெயரை.
அதையெல்லாம் பார்த்தவளுக்கு தன்னவனை நினைத்து பெருமைதான் ஆனால் அவன் நடிப்பை விடப்போவதாக அறிவிக்க உள்ளான் அதிலும் அவனுக்கு ஓபன் டெத் த்ரட் வந்துள்ளது என்ற எண்ணமே அவளை மகிழ்ச்சியாய் இருக்கவிடவில்லை.
முதலில் விருந்தினர்களை வரவேற்ற MC அதன்பின் சீஃப் கெஸ்ட்டை வரவேற்று உரையாற்ற அதன்பின்னர் அழைத்த சீஃப் கெஸ்ட் எல்லோரும் ஆராஷியையும் ரியோட்டோவையும் பாராட்டி பேசினர். கடைசியாக வரவேற்றார் விழாவின் நாயகனை அவார்ட்டை வாங்கிகொள்ள.
அதுவரை அமைதியாக இருந்த கூட்டம் ஆராஷியையும் ரியோட்டோவையும் கூச்சலிட்டு வரவேற்க ஆரவாராமாய் இருந்தது அங்கு.
மேடையில் நடுநாயகமாக வந்து நின்ற சகோதரர்கள் கூட்டத்தை முதலில் கைகூப்பி தலை வணங்கினர்.
அதில் அனைவரும் கத்த ஆராஷி பேச துவங்கினான்.
அவன் பேசுவது நிதினின் குடும்பத்திற்கு புரியும்படி அவர்களுக்கு மட்டும் டிரான்ஸ்லேட்டரை கொடுத்து இருந்தான்.
அவர்களுக்காக ப்ரத்யேக மொழிப்பெயர்ப்பாளரையும் ஏற்பாடு செய்திருந்தான்.
ஹர்ஷத்தை மட்டும் மேடை அருகில் நிற்கவைத்து இருந்தான்.
ஹர்ஷத் மாஸ்க் அணிந்து இருந்ததால் அவனை யாருக்கும் தெரியாமல் போனது.
எல்லாவற்றையும் ஒரு நொடியில் ஆராய்ந்தவன் பேச துவங்கினான்.
“எல்லாருக்கும் வணக்கம்” என்று அவன் துவங்க ஆரவார சத்தம் அங்கிருந்தவர்களின் காதை துளைத்தது.
ஷ்ஷ் என்று அவன் வாயில் விரல்வைத்து கூற உடனடியாக கூட்டம் அமைதியானது.
“இங்க நான் மட்டும் இல்ல நம்ம கெஸ்ட்டும் இருக்காங்க அதனால நாம சத்தத்தை குறைச்சுக்கலாமா? சோ பாடும் போது சவுண்ட் ஏத்திக்கலாம் ஓகே இப்போ நான் கொஞ்சம் பேசணும்” என்று கூற கூட்டம் அமைதியாக இருந்தது.
அதில் லேசாக சிரித்தவன்
“முதல்ல நம்மளோட அழைப்பை ஏற்று வந்த கெஸ்ட்டை நான் வரவேற்கிறேன்.
இத்தனை மாசம் நான் ஜப்பான்ல இல்ல ஆனாலும் எனக்கு இப்பவரை சப்போர்ட் பன்ற என் ப்ரண்ட்ஸ் அண்ட் ஃபேன்ஸ் உங்க சப்போர்ட் இல்லனா நான் இந்த அளவுக்கு வந்து இருக்க மாட்டேன் அதனால இந்த அவார்ட்ட உங்களுக்கு தான் சமர்ப்பணம்.
அப்புறம் உங்க எல்லாருக்கும் ஒரு குட் நியூஸ் என்னனா? நானும் என்னோட ஆரம்பம்ல இருந்து இப்போவரை எனக்கு சப்போர்ட் செஞ்சு என்மேல நம்பிக்கை வைத்து எனக்கு ஆரம்பம் முதல் இப்போ வரை ஸ்பான்சர் பன்ற சரத்ஶ்ரீ சர் அவங்க கம்பெனி ரெனி ஃபேஷன்ஸ்.
மை வார்ம் வெல்கம் ட்டூ திஸ் ஃபேமிலி இன் மை ஃபங்ஷன்.
அவங்களோட டை அப் பண்ணி நாங்க கொலாப்ல ஆரம்பிச்சு இருக்குற மேத்ராஷ்க்கு உங்க எல்லாரோட ஆதரவையும் கேட்டுக்கிறேன்” என்று கூற அரங்கமே கரகோஷத்தில் அதிர்ந்தது.
அவர்களது ஆரவாரம் முடிய காத்திருந்தவன்
“மேத்ராஷ்க்கு உங்களோட எல்லாரோட ஆதரவும் வேணும்.
அண்ட் நான் இண்டியா போனப்போ அங்க ஒரு ஆட் ஷூட் நடிச்சேன் அதோட ஃபோட்டோஷூட் அப்போ அப்போ அப்டேட் பண்ணேன்ல அது பத்தி பேசணும்.
இது ஒரு இண்டியன் டிபரண்ட் கல்ச்சுரல் வெட்டிங் அண்ட் ஜூவல்ஸ் ஷூட் அது ஃபுல் அண்ட் ஃபுல் எனக்கு வேற மாதிரியான எக்ஸ்பீரியன்ஸ் அண்ட் மறக்கமுடியாத நினைவுகளை கொடுத்த ஆட் ஷூட் இதுல என்கூட நடிச்ச ஆக்ட்ரஸ் முகம் காட்டமாட்டாங்க அதனால அவங்க யாருனு உங்களுக்கு தெரியாது ஆனா அவங்ககூட நடிச்சது ஒரு நைஸ் எக்ஸ்பீரியன்ஸ்.
என்னை இண்டியன் டிரடிஷனல் காஸ்ட்யூம்ல அழகா காட்டின அருந்ததிக்கும் நிதின் சாரோட சிஸ்டர் அதாவது எனக்கான காஸ்ட்யூம் டிசைனர் அவங்களுக்கும் நான் ஸ்பெஷல் தேங்க்ஸ் சொல்லிக்கிறேன்.
அந்த ஆட் ஷூட் எடிட்டிங் முடிச்சு ரெடியாகிடுச்சு அதை உங்க முன்ன நான் ரிலீஸ் செய்யனும்னு தான் ரிக்குவஸ்ட் வெச்சேன் வெயிட் பண்ணி அதை இவ்ளோ லேட்டா ரிலீஸ் ஆக ஒத்துக்கிட்ட அருந்ததி மேடம்க்கு ரொம்ப ரொம்ப நன்றி.
அண்ட் இந்த ஷூட்ல பார்த்து பார்த்து என்னை கவனிச்சுகிட்ட என்னோட இண்டியன் பி.ஏ அண்ட் மை ட்ரான்ஸ்லேட்டர் அவங்களுக்கு என் ஸ்பெஷல் தேங்க்ஸ்.
பிகாஸ் அவங்க எனக்கு அழகா புரியவைக்கலைனா எனக்கு இப்படி நடிக்க வந்து இருக்காது அதான்” என்று கூற அனைவரின் கரகோஷமும் எழுந்தது.
தலையை குனிந்து அவனது பேச்சை கேட்டபடி இருந்த மேதாவிற்கு எழுந்து சென்றுவிடலாமா என்ற எண்ணம் இன்னும் அதிகமாகவே தோன்றியது.
“இந்த அவார்ட்எனக்கு பெருமையை சேர்த்ததவிட அந்த ஆட் எனக்கு ரொம்ப ரொம்ப பெருமையை சேர்க்கும்னு நம்புறேன் அதுவும் உங்க கையில தான் இருக்கு அதை என் ரசிகர்களான உங்க முன்ன ரிலீஸ் பன்றதுல சந்தோஷம் இதோ உங்களுக்காக அந்த ஆட் ஷூட் என் வாழ்க்கையில் எந்த சந்தோஷமான விஷயமும் என் ரசிகர்களோட தான் நான் கொண்டாடனும்னு இதையும் உங்களோட சேர்ந்து ரிலீஸ் செய்ய வந்தேன் செய்யலாமா?” என்று ஆராஷி கேட்க
“ஓகே” என்று கூட்டம் சத்தமிட “ம்ம் தேங்க்ஸ் மை டியர்ஸ்” எனக்கூறி திரையை காட்ட
அழகாக எடிட் செய்யப்பட்ட அந்த ஆட் ஷூட் திரையில் ஓடத்துவங்கியது.
அழகான திருமண முறைகளில் மிகவும் அழகாக நேர்த்தியாக காட்டப்பட்டு இருந்தான் ஆராஷி.
கூடவே நடித்த மேதாவின் உடைகளும் நகைகளும் அழகாக கவர் செய்யப்பட்டு இருக்க உண்மையாகவே திருமணம் ஆனது போலவே ஜொலித்தது ஆராஷியின் அழகான முகம் அதில்.
எல்லோரும் மெய்மறந்து பார்த்தனர் அத்தனையையும் மேதாவும் கவனித்தாள் அவளது பயம் எங்காவது மேதாவின் முகம் காட்டப்பட்டு விடுமோ என தான்.
அனைவரும் ஆர்பரித்து வாவ், ஆசம் என்றெல்லாம் கூற முடியும்போது சரியாக மேதாவை இடுப்பில் கை வைத்து ஆராஷி இழுக்க அவள் அவனது நெஞ்சில் மோதி நிற்க கட் செய்து அவளது கண்கள் அவனை காதலாய் பார்க்கும் அந்த கிளிக்கில் நிறைவடைந்தது ஆட்.
தலையில் கையை வைத்துவிட்டாள் மேதா.
‘அடிப்பாவி இந்த சீனையா கடைசியா வைப்ப?’ என்று தன் தோழியை வறுத்து எடுத்துக்கொண்டு இருந்தாள்.
அந்த கடைசி சீனை பார்த்த அனைவரும் ஆரவாரம் செய்து ஆராஷி டூ யூ லவ் ஹர்? என்று கோஷம் எழுப்பி கேள்வி கேட்க சிரித்தபடி அவர்கள் முன் நின்றவன்
“அவங்க சொன்ன சீன் அது நான் நடிச்சேன்” என்று பதில் கூறியபடி கூட்டத்தை பார்க்க யாரும் நம்பாமல் கூச்சலிட்டனர்.
“இந்த ஆட் இவ்ளோ ரியலிஸ்டிக்கா வர கஷ்டப்பட்டது இந்த ஷூட்டோட டைரக்டர் மிஸ் அருந்ததி தான் இந்த ஆட் ஓட எல்லா பெருமையும் அவங்களுக்கு தான் சேரும்” என்று கூற திரையில் உடனே அருந்ததி காட்டப்பட அவளுக்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது எழுந்து வணக்கம் வைத்தவள் ப்ளீஸ் கட் என்று கூற அதற்கும் கூச்சலிட்டனர் அனைவரும்.
அவளுக்கு தொல்லைதராமல் ஆராஷியை ஜூம் செய்தனர்.
“ஐயம் சோ எக்ஸைடட் ட்டூ சீ திஸ் ஆட் இன் வேர்ல்ட்வைட் பிகாஸ் இது ரொம்ப ஸ்பெஷல் ஒரே கண்ட்ரில நான் டிபரண்ட் கைண்ட் ஆஃப் மேரேஜ் பத்தி தெரிஞ்சுக்கிட்டேன் அந்த கல்ச்சர் பத்தி புரிஞ்சு டீடெயில்ஸ் கேட்டு கத்துகிட்டு நடிச்சேன்.
அவ்ளோ சூப்பரா எடுத்தாங்க அருந்ததி அண்ட் அவங்க டீம்” என்று அவன் பேச
“டெல் அஸ் அபெளட் ஹீரோயின்” என்று கூட்டத்தில் சத்தம் வர
லேசாக சிரித்தவன்.
“சாரி அந்த ஹீரோயின் என்கிட்ட பேசகூட இல்ல ஆனா சீன்ல கரெக்டா நடிச்சாங்க” என்று அவன் பொய்யை கலந்து பேச அடப்பாவி என்று ஆனது மேதாவின் குடும்பத்திற்கு.
ரசிகர்கள் கூட்டத்திற்கு சப்பென்று ஆனது.
“எப்படி இருந்ததுனு உங்க கருத்துக்களை கட்டாயம் சொல்லுங்க” என்று அவன் பேச இட்ஸ் லுக் லைக் ரியல் மேரேஜ் என்று கூட்டம் கூச்சலிட சிரித்தபடி வணக்கம் வைத்தான் அவன் பேச கேட்ட மியோவிற்கோ இவனை பேரும் புகழும் வாங்கவே விடக்கூடாது என்ற எண்ணமே மேலோங்கி இருந்தது.
அவனது பேச்சில் முகத்தை எங்கே மறைப்பேன் என
ஒளிந்து ஒளிந்து அவனை கண்காணித்தாள் மேதா.
