Skip to content
Home » 01. அழகிற்கு ஏதடி வர்ணங்கள்

01. அழகிற்கு ஏதடி வர்ணங்கள்

இயற்கை எழில் கொஞ்சும் தங்கள் ஊரை விடியலின் மடியில் நின்று ரசிக்க யாருக்கு தான் பிடிக்காது அதுவும் மஞ்சள் நிற ஒளிகீற்று மேனியில் படும் போது அதில் எத்தனை சுகம் அதை எல்லாம் அனுபவிக்கும் மனநிலையில் தான் இல்லை என்பது போல் அந்த கதிரவனையே கோபமாக பார்த்துக் கொண்டிருந்தாள் அணங்கியவள் விடியலை வெறுப்பவள் ஏன் தன்னையே கூட அதிகமாக வெறுப்பவள் ஒவ்வொரு நாளும் ஏன் பிறக்கிறது என கோபம் கொள்பவள் இப்படிப்பட்ட வெறுப்புகள் கொண்ட குணமல்ல அவளிற்கு இந்த சமூகத்தினரால் திணிக்கப்பட்ட ஒன்று அவளை இப்படி எல்லாம் மாற்றி வைத்திருக்கிறது.

காலையில் எழுந்ததும் அறையை விட்டுஎழுந்து சென்ற மகள் இன்னும் வீட்டுக்குள் வராமல் என்ன செய்கிறாள் என்ற யோசனையுடன் வெளியே வந்த கல்யாணி‌ “செல்வி எவ்வளவு நேரம் இப்படியே இருக்க போற காலேஜ் போகனும்லே போய் ரெடியாகு காலையிலே உனக்கு இதே வேலையா போச்சு ஸ்கூல் போகும் போது‌ தான் இப்படி இருந்தேன்னு பார்த்தா இப்பவும் இப்படியே இருக்கிற என்னதான் உன் மனசுலே நினைச்சிட்டு இருக்கேன்னு ஒன்னுமே தெரியலே டைம் ஆகுது கிளம்பு…” என அவசரப்படுத்தி விட்டு தன் வேலையை பார்க்க சென்ற தாயை கண்டு பெருமூச்சு விட்டபடி தன்னறைக்குள் சென்று இன்று தன் முதல் நாள் காலேஜுக்கு செல்ல தயாராகினாள் செல்வி என்கிற கலைச்செல்வி.

குளித்து முடித்து வந்தவளின் கண்ணில் புதிதாக வாங்கிய வெள்ளையும் அதில் சிவப்புநிற பூக்கள் ஆங்காங்கே தெளிக்கப்பட்டதாக வடிவமைக்கப்பட்ட சுடிதார் அத்தனை அழகாக இருந்தது அவளுக்காக பார்த்து பார்த்து அவளது தந்தை வாங்கி கொடுத்திருக்க அதை எடுத்து தன் மேல் வைத்து பார்த்தவள் அழகான வெள்ளை தாளில் கருப்பு மை கொட்டியது போல் அசிங்கமாக தான் இருப்பதாக தோன்ற வழக்கமான கவலை இருளாக சூழ்ந்திட அதை தன் கபோர்ட்டில் அப்படியே மடித்து வைத்து விட்டு வழக்கமாக‌ அணிய கூடிய கருப்பு நிற சுடிதாரை எடுத்து அணிந்து கொண்டு வெளியே வர தன் மகளை எதிர்பார்த்து காத்து நின்ற பெற்றோர்கள் இருவருக்கும் மனம் பாரமாகியது.

“முதல் நாள் காலேஜ் போறப்போ கூட இப்படி தான் போகனுமா வாங்கி வெச்சதை எடுத்துப் போட்டு போறதுக்கு என்ன செல்வி அது ரொம்ப நல்லா இருக்கும் ஒரு தடவை போட்டு தான் பாரேன்…” பொறுக்க முடியாமல் கேட்டு விட்ட தன் தாயை நிமிர்ந்து பார்த்தவள்.

“காக்கைக்கு தன் குஞ்சு எப்பவும் பொன் குஞ்சு தான் ம்மா ஆனா இந்த வீட்டை நான் தாண்டினால் மத்தவங்க பார்வைக்கு கருப்பு நிற காகமா‌ மட்டும் தான் நான் தெரிவேன்…” என்றவளை மனதில் உள்ள வலியை மறைத்து காலேஜிற்கு அழைத்துக்கொண்டு சென்றார் சுந்தர்.

பள்ளி படிப்பு முடிந்து ஒரு புதிதான உலகத்திற்குள் மாணவர்கள் அனைவரும் உற்சாகத்துடன் அடி எடுத்து வைத்தனர் ஆயிரம் கனவுகள் தாங்கிய பட்டாம்பூச்சியில் இவளும் ஒருத்தியாக அந்த காலேஜிற்குள் தன் வலது காலை எடுத்து வைத்து உள்ளே நுழைந்தாள் அவளுக்கு பிடித்த காலேஜ் பிடித்த படிப்பு இதுவெல்லாம் கனவு போல் இருந்தது இதுநாள்‌ வரை நம்பமுடியவில்லை இருக்கும் கவலை மறந்து தன் சிறகு விரித்து பறக்க முயன்றவளின் சிறகு மறுகணம் உடைந்து போனது அவர்களால் இடைவரை நீண்ட தன் கூந்தலை யாரோ பிடித்து இழுப்பதைக் கண்டு வலியுடன் கூந்தலை பிடித்துக் கொண்டு திரும்பினாள் சீனியர் என்கின்ற பெயரில் நான்கு சாத்தான்கள் அவள் முன்பு நின்றிருந்தனர்.

“முடியை விடுங்க…” என்றவள் பிடித்திருந்தவனின் கரத்தை தட்டி விட்டு நிமிர்ந்து நின்றாள் “கரிகட்டைக்கு திமிற பார்த்தியா மச்சான்?…”

“ம்ம் திமிரு தானே அடக்கிட்டா போச்சு டோன்ட் வொரி மச்சான் ஆமா உன் பேர் என்ன?…” என விசாரணை நடத்தினான் இன்னொருவன் பதில் சொல்லாமல் திரும்பி நடக்கப் போனவளை சொடக்கிட்டு அழைத்தான்.

“பதில் சொல்லாம எங்கே போற நாங்க கேட்டா உடனே பதில் வரனும் இல்லை…” என பற்களை கடிக்க வீணாக எதற்கு பிரச்சினை பெயர் தானே கேட்கிறார்கள் சொல்லி விட்டு நகர்ந்து விடலாம் என்றவள் “கலைச்செல்வி…” என்றாள் மெதுவாக,

“கலைச்செல்வியா? ஆமா இங்கே எங்க கலை இருக்கு மச்சான் எனக்கு அப்படி ஒன்னும் தெரியல உனக்கு ஏதாவது தெரியிதா?…” என அவள் உடலை சுட்டிக்காட்டி கேட்க இவன் கேள்வியில் மற்ற மூவரும் பயங்கரமாக சிரித்தனர்.

“நீயே அடையாளம் தெரியமாட்டேங்குற உனக்கு எதுக்கு இந்த கருப்பு ட்ரெஸ் ஆளையும் மூஞ்சையும் பாரு கரிக்கட்டை…” என்றவர்களின் வார்த்தைகளில் உடைப்பெடுத்து வந்த அழுகையை தனக்குள் கடினப்பட்டு அடக்கிக் கொண்டவள் சுற்றி முற்றி பார்த்தாள் நடப்பதை அத்தனை பேரும் சுற்றி நின்று வேடிக்கைப் பார்த்து சிரித்துக்கொண்டு இருந்தார்கள் ஒருத்தருக்கு கூடவா மனிதாபிமானம் என்று ஒன்று இல்லை என நினைத்தப்படி “நான் க்..ளாஸ்கு போ…கனும்…” என்றவளை நால்வரும் ஒரு சேரப் பார்த்தனர்.

“ஏய் ப்ளெக் ஃபோர்ட் இங்கே நடந்தை எவன்கிட்டயாவது சொல்லி பிரச்சினை பண்ண நினைச்ச உன்னை உருத்தெரியாம அழிச்சிடுவோம் இங்கே எங்களை மீறி எதுவும் உன்னாலே செய்ய முடியாது ஞாபகம் இருக்கட்டும் போய் தொலை…” என்றபடி அவளை விட்டு நடந்தனர் தன் கன்னம் தாண்டிய கண்ணீரை துடைத்துக் கொண்டு தன் க்ளாஸ் எது என தேடிக்கண்டுப்பிடித்து நுழைந்தாள்.

ஐடி பிரிவு தேர்ந்து எடுத்து படிக்க தான் ஆசை அது இப்போது நிறைவேறிவிட்டது ஆனால் அதை கூட முழுமையாக அனுபவிக்க முடியாமல் வந்த முதல் நாளே செய்து விட்டனர் நால்வரும் இவர்களுக்கான வரவேற்பு விழா எல்லாம் நடந்து முடிந்து விட்டது இன்று முதல் நாள் வகுப்புகள் நடைபெற இருந்தது இவள் வகுப்பிற்குள் நுழைந்ததும் அனைவரது பார்வையும் இவளை நோக்கி தான் திரும்பியது “ஹேய் இவ தான் இன்னைக்கு சீனியர் கேங்கிட்ட மாட்டிக்கிட்டது…” என குசு குசுவென ஒருவருக்கு ஒருவர் பேசிக்கொள்ள அது இவளுக்கும் தெளிவாக கேட்டது அமைதியாக கடைசி இருக்கையில் போய் அமர்ந்து கொண்டாள்.

அவளருகில் ஒருவள் முகத்தை தூக்கி வைத்துக்கொண்டு ஏதோ கோபமாக பேனாவை வைத்து கிறுக்கி கொண்டு அமர்ந்து இருந்தாள் இவளுக்கு அவளோடு பேச கூட பயமாக இருந்தது எங்கு தான் ஏதும் பேசபோய் தன் மேல் பாய்ந்து விடுவாளோ என்று அமைதியாக தான் உண்டு தன் வேலை உண்டு என அமர்ந்து இருந்தாள் அதே நேரம் க்ளாஸ் ரூமையும் நோட்டம் விட்டாள் அங்கு இருந்தவர்கள் ஒருவருக்கு ஒருவர் தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டு நட்பு பாராட்டி கொண்டு இருந்தனர் இவளை திரும்பி பார்த்து ஏதோ பேசி சிரித்தப்படி இருப்பதையும் கண்டு கொண்டாள் பார்வை அவர்கள் மீது வைக்காது வெளியில் பார்வையை பதித்து சுற்றுப்புத்தை வேடிக்கைப் பார்க்க ஆரம்பித்தாள்.

ஸ்கூல் காலங்களில் கூட அவளுக்கு ஒரு தோழி கூட இல்லை சில பெற்றோர்கள் கெட்ட குணம் கொண்ட பிள்ளைகளை கண்டாள் அவர்களோடு சேராத விலகி இரு என எச்சரிக்கை செய்வார்கள் ஆனால் அந்த காலம் மாறி இப்போது அவர்களின் தோற்றத்தையும் பின்புலத்தையும் அறிந்து நட்பு பாராட்டு என்று அல்லவா சொல்லிக்கொடுக்கிறார்கள் அதில் அவள் நிலையை சொல்லவா வேண்டும் ஸ்கூல் காலம் முழுவதும் தனிமையிலே கடந்து போனது அது போல் காலேஜ் வாழ்விலும் நடக்கப்போகிறது என விரக்தியில் அமர்ந்து இருந்தவளுக்கு தெரியாது தன் வாழ்கை பல கோணங்களில் திசை திரும்பப் போகிறது என்று.

முதல் நாள் வகுப்புகள் நடாத்தப்பட்டது மற்றையது எல்லாம் தூக்கி போட்டு அதில் கவனமாக இருந்தவளுக்கு ஏதோ தோன்ற திரும்பிப் பார்த்தாள் தன் பக்கத்தில் இருந்தவள் மேஜை மீது தலையை வைத்து உறங்கிக் கொண்டிருந்தாள் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கிறாள் என அவளிடம் இருந்து வந்த சீரான மூச்சுக்காற்றிலே தெரிந்தது “அய்யோ இவ என்ன இப்படி தூங்குறா ப்ரொபஸர் பார்த்தா திட்டுவாரே…” என கவலை கொண்டாள் ஆனால் பேராசிரியர் தன் வேலை பாடம் நடாத்துவது மட்டுமே என்று அதில் குறியாக இருந்தவர் பெல் அடிக்கவும் விடைப்பெற்று சென்று விட இவள் திரும்பி பார்த்தாள் இன்னும் உறங்கி கொண்டு தான் இருந்தாள் அவள்.

உணவுவேளை‌ ஆரம்பித்து விட்டதற்கான அடையாளமாக பெல் அடிக்க அமைதியாக கொண்டு வந்து இருந்த சாப்பாட்டை எடுத்து சாப்பிட்டுக்கொண்டு இருந்தாள் வகுப்பே காலியாக இருந்தது அனைவரும் கேன்டீன் பக்கம் சென்று இருந்தனர் வகுப்பிலே அமர்ந்து இருந்தாள் பசியில் இருப்பாளே எழுப்பி விடலாமா? என்று தோன்றினாலும் எழுப்பினாள் சண்டைக்கு வந்து விடுவாளோ என்று அமைதியாக சாப்பிட சிக்கன் பிரியாணி ஸ்மெல்… ஹ்ம்ம்… என மோப்பம் பிடித்து பட்டென கண்களை திறந்து எழுந்தமர்ந்தாள் அவள்.

முகத்தை கழுவி விட்டு மீண்டும் இருக்கையில் வந்து அமர்ந்தவள் தன் சாப்பாட்டை எடுத்துப் பார்த்தாள் தயிர்சாதமும் வெண்டைக்காய் பொரியலும் பல்லை காட்டி நிற்க முகத்தை சுழித்தாள் அவளின் நடவடிக்கைகளை எல்லாம் கவனித்துக்கொண்டு இருந்த கலை தன் பிரியாணியை அவளிடம் தள்ளி வைத்தாள்.

அவளை அப்போது தான் ஒழுங்காக பார்த்தாள் கருப்பாக இருந்தாலும் கலையாக இருந்தாள் கண் வாய் மூக்கு என அனைத்தும் அளவெடுத்து செய்தது போல் இருந்தது “நீ ரொம்ப அழகா இருக்க ஆமா உன் பேர் என்ன?..” என்றவளின் பேச்சில் புரையேறி பலமாக இரும “ஹேய் பார்த்து பார்த்து தண்ணி குடி…” என அவள் தலையை தட்டிக்கொடுத்தவள் அவள் கொடுத்த பிரியாணி சாப்பிட்டாள்.

“நீ இதை சாப்பிடு என் அம்மாக்கு இதை தவிர எதுவும் செய்ய தெரியாது…” என்றவள் தயிர்சாதத்தை அவள் பக்கம் தள்ளி வைத்தாள்.

“என்கூட சகஜமா பழகுறியே யாராவது ஏதும் சொல்லி உன்னை கிண்டல் பண்ண போறாங்க‌…” என்றாள் கலைச்செல்வி.

“எதுக்கு கிண்டல் பண்ண போறாங்க…” என வாய்க்குள் சாப்பாட்டை அதக்கியபடி கேட்டாள்.

“அ..து நான் ரொம்ப கருப்பா அசிங்கமா இருக்கேன் ஆனா நீ அப்படி இல்லையே ரொம்ப அழகா இருக்க என்கூட சேர்ந்தா என்னோட கருப்பு உன்கிட்ட ஒட்டிக்கும் க்ளாஸ்ல இருக்கிறவங்க உன்னை ஏதாவது சொல்லுவாங்க…” என்றவளை ஒரு விசித்திரப்பிறவியை போல் பார்த்து வைத்தாள்.

“காலேஜ் படிக்கிற பொண்ணு மாதிரியா பேசுற உன்கூட சேர்ந்தா உன் கருப்பு என்னை ஒட்டிக்குமா? உனக்கே இது காமெடியா தோனல…” ஆனால் அவளுக்கு தெரியாது அல்லவா பக்குவமாக நடந்துக் கொள்ள கூடிய பெரியவர்களே அவள் காதுபடவே தங்களது பிள்ளைகளுக்கு அறிவுரை என்ற பெயரில் தங்களுடைய பேச்சாலே இந்த பாகுபாடு பார்க்கும் தன்மையை வளர்த்து விட்டிருந்தார்கள் என்பது அதை எல்லாம் கேட்டு கேட்டு அது அவள் ஆழ் மனதில் “ஓ அப்படித்தான் இருக்குமோ…” என பதிந்து விட்டது என்று எவ்வளவு தான் வயது ஏற ஏற கொஞ்சமாக புரிதல் உணர்வு வளர்ந்தாலும் ஏனோ சிறுவயதிலே தோன்றிய இவ்வாறான தாக்கங்கள் அவள் மனதை விட்டு தற்போது வரைக்கும் அழிய மறுக்கின்றது.

7 thoughts on “01. அழகிற்கு ஏதடி வர்ணங்கள்”

 1. Avatar

  அருமையான ஆரம்பம்!!… இந்த மாதிரி நிறைய கஷ்டபடுவங்டளை நான் பார்த்திருக்கேன்!!… இதை கதைக்கருவாய் தேர்ந்தெடுத்தற்கு வாழ்த்துகள்!!..

  கொஞ்சம் Punctuation மட்டும் செக் பன்னி கரெக்டா பன்னுங்க!!..

 2. CRVS2797

  ரொம்ப பாவம் தான் கலைச்செல்வி..! ஏன் தான் இப்படி இருக்காங்களோ..? பாடி ஷேமிங் கூடாதுன்னு இன்னுமா இவங்களுக்கு புரியலை.

  1. Fajeeha Mumthaj

   மாற்றம் இல்லையே இன்னும் இது தொடர்ந்திட்டு தான் இருக்கு 😔 தொடர்ந்து சப்போர்ட் பண்ணுங்க 🙏

 3. Avatar

  ஆரம்பமே அருமை. . கதை கரு சூப்பர். .. இப்போதும் இந்த நிறங்கள் வைத்த கேரக்டர் மூடிவு பண்றங்க

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *