Skip to content
Home » 01.காரிகை

01.காரிகை

இயற்கையோடு ஒன்றி போன சிங்காரபட்டின கிராமத்தில் போடபட்டிருந்த மண்பாதையில் புழுதியை கிளப்பி கொண்டு வந்து நின்ற காரில் இருந்து இறங்கினான் அவன் பார்ப்பவரை ஒரு முறை திரும்பி பார்க்க வைக்கும் அழகன் முறுக்கேறிய உடல் வாகை கொண்டவனின் நிறம் கருப்பு என்றில்லாமல் வெள்ளை என்றில்லாமல் பொதுவான நிறத்தில் அழகாக இருந்தான் அவனை மேலும் எடுப்பாக காட்டுவது போல் இருந்தது அவன் அணிந்திருந்த வைட் கலர் சர்ட் மற்றும் ப்ளு ஜீன்யும் தன்னிடம் புன்னகை முகமாக பேசுபவர்களிடம் கனிவாக நடந்து கொள்பவன் இன்று அமைதியாக ஒரு வித இறுக்கத்தோடு நின்று கொண்டிருந்தான் அவன் விக்ராந்த்.

தங்கள் ள வீட்டின் முன் நின்ற காரை கண்டு வெளியில் வந்து எட்டி பார்த்த பொன்னி அங்கு தன் மகன் நிற்பதை கண்டு தன் வயதை மறந்து ஓடி போய் அவனை அணைத்து கொண்டார்.

“ஏய்யா…. ராசா எப்பிடியா இருக்க…” என கண்கள் கலங்கியபடி அவனை நலம் விசாரிக்க தன் தாயின் எந்தவித எதிர்பார்ப்பும் இன்றிய தூய அன்பில் குற்ற உணர்வு ஆட்கொள்ள எதுவும் பேசாமல் அமைதியாக தலை குனிந்தபடி நின்றான் “என்னய்யா அமைதியா இருக்க ஆமா உன் முகம் ஏன் சோகமாக இருக்கு என்னாச்சுய்யா…” என கலக்கமாக கேட்டவரிற்கு பதிலாக இவரின் சம்பாஷனையை கேட்டு இதற்கு மேலும் காரினுள் இருப்பது சரியாகாது என கார் கதவை திறந்து கொண்டு பெண்ணவள் இறங்க பொன்னியின் பார்வை அவள் பக்கம் திரும்பியது.

தன் மகனோடு வந்த பெண்ணை கண்ட பொன்னி அவளை மேலிருந்து கீழ் வரைஆராய்யும் பார்வை பார்த்தார் வைட் என்ட் ப்ளாகில் டிப் டாப் ஆக கோர்ட் சூட் அணிந்து இருந்தவளை கண்டு வியப்பில் கண்களை விரித்தவர் அடுத்த நொடி அவர் பார்வை ஒன்றில் நிலைகுத்தி நின்றது மஞ்சள் கயிற்றில் பொன் தாலியுடன் ஈரம் கூட காயாத நிலையில் அவள் கழுத்தில் அது தொங்கி கொண்டிருந்தது அதை கண்டு அதிர்ச்சியாகி நிற்க தன் தாயை வருத்தம் தொய்ந்த குரலோடு ஏறிட்டவன் “அம்மா இவங்க என்னோட பாஸ் இப்போ என் பொண்டாட்டி…”என தயக்கமாக கூற அவனை நிமிர்ந்து பார்த்த அவனின் மனையாட்டி அவன் நிலை கண்டு இதற்கு காரணம் ஆனவரின் மேல் கோபம்கொண்டாள்.

உச்சி வெயில் மண்டையை பிளக்க தன் மகனா இது?? என அதிர்ச்சி விலகாத பார்வை பார்த்தவரை பின்னால் இருந்து வந்த குரல் களைத்தது “அம்மா அண்ணே எவ்ளோ நாள் கழிச்சி வந்திருக்கு நீ என்னன்னா வெளியே நின்னு கனவு கண்டுகிட்டிருக்கியேமா உள்ளார கூட்டி வா சுத்தி முத்தி எல்லாரும் நம்மளுகளே தான் பாக்குதுங்க…” என்ற அந்த வீட்டின் கடை குட்டியின் பேச்சில் சுயம் வந்தவர் சுற்றி ஒரு பார்வை பார்த்து விட்டு உள்ளார வாய்யா….. என சுரத்தே இல்லாத குரலில் சொல்லி விட்டு நகர அம்மா…. என சிறு பயத்தோடு அழைக்க உள்ளவா பேசிக்கலாம் என்று நகர்ந்து விட பெண்ணவளை திரும்பிபார்த்தவன் மேடம் என்று எதையோ சொல்ல தடுமாற அதை புரிந்து கொண்டவளாய் அவ்வளவு நேரம் அவர்களின் அருகே நின்ற ட்ரைவரிடம் திரும்பி நீங்க கிளம்புங்க குமார்ண்ணா… என்றவள் தனது பையை எடுத்து கொண்டு நகர அவரோ அந்த ஊரையும் வீட்டையும் ஒரு பார்வை பார்த்தவர் “எப்பிடி வாழ்ந்த புள்ள இன்னைக்கு…” என பெருமூச்சு விட்டு கவலைபட்டபடி அங்கிருந்து நகர்ந்தார் அது மட்டும் தான் அவரால் முடிந்த ஒன்று.

விக்ராந்த் முன்னால் நடக்க அவன் பின் வீட்டை சுத்தி நோட்டம் விட்டபடி நடந்தாள் அவள் மரங்கள் பல சூழ்ந்து சுற்றிவர வேலி போடபட்டிருக்க அந்த காணியின் மத்தியில் பழமை மாறாமல் கட்டபட்டிருந்தது அந்த வீடு பாதைக்கு வீட்டிற்குமே கொஞ்ச தூரம் நடந்து செல்ல வேண்டியிருந்தது.

வாசலருகே வர நில்லுங்க… என கத்த அந்த குரலின் ஆளுமையில் பெண்ணவளுக்கு கூட திக் என்று இருந்தது இப்போது அவரா தன் மகனை அணைத்து கொஞ்சியவர் என்ற சந்தேகம் வந்து விட்டது அவர்கள் முன் வந்து நின்றவரின் முகம் கொஞ்சம் இறுக்கமாக அதே சமயம் கண்களும்கலங்கியிருந்தது.மகளை விட்டு ஆரத்தி எடுத்து வலதுகாலை எடுத்து வைத்து உள்ள வர சொல்லி விட்டு அங்கிருந்து நகர்ந்து விட போகும் அவரையே வருத்தம் தொய்ந்த முகத்தோடு பார்த்து கொண்டு நின்றான் விக்ராந்த்.

அவர்களின் அருகே வந்து நின்ற கடைகுட்டி தன் கண்களை உருட்டி அண்ணா இவக யாரு? என்று கேட்க தன்னிலை மாறி அவளின் தலையை தடவி விட்டு “இவங்க உன் அண்ணி இனிமே இங்கன தான் இருக்க போறாக நீதான் பாத்துக்கனும்…” என்று அங்கிருந்து ஒரு சிறிய அறைக்குள் சென்று விட பெண்ணவளோ ஒரு வித தயக்கத்தோடு வீட்டை சுற்றி பார்வையை சுழற்றினாள்.இரண்டு பெரிய அறைகளோடு ஒரு ஹால் அதை ஒட்டி அந்த சிறிய அறையும் பூஜை அறை அத்தோடு சமையலறை என அந்த வீடு அடக்கமாகியிருக்க தன் வீட்டோடு இதை ஒப்பிட்டு பார்க்கும் போது இங்கு ஏனோ அவள் மனது நிம்மதியான ஒரு உணர்வில் சிக்கி கொண்டது.

எங்க வீடு பிடிச்சிருக்கா? என்று குறும்போடு கேட்டவளின் பக்கம் பார்வையை திருப்பியவள் மெலிதாக சிரித்து “ம்ம் ரொம்ப அழகா இருக்கு ஆமா உன் பேர் என்ன?…” என்று கேட்க தன்னை பற்றி கேட்டதும் கள்ளம் கபடமில்லாத பெண்ணவள் “என் பேரு அகல்யா நான் டென்த் படிக்கிறேன் எனக்கு ஒரு அக்கா இருக்கா அவ பேரு அக்சிதா காலேஜ் போய்யிருகா வந்ததும் காட்டுறேன் அப்பறம் அது எங்கே அம்மா பொன்னி அப்பறம் அப்பா கடைக்கு போய்யிருக்காக அவர் பேரு காத்தவராயன் அப்பறம் எங்கே அண்ணன் அது சென்னையிலே ஒரு பெரிய கம்பனிலே வேலை பாக்குது தெரியுமா?…” என்று தன் மொத்த குடும்பத்தையும் கூறி கொண்டிருந்தவள்.”

ஆமா உங்க பேரு என்ன அண்ணி கேக்க மறந்துட்டேன்….” என கண் சிமிட்ட மெலிதாக புன்னகைத்தவள் கவிரத்னா… என்று கூற “வாவ் உங்களே மாதிரியே உங்க பேரும் ரொம்ப அழகா இருக்கு..” என்று அவள் கன்னம் பிடித்து கிள்ள அதில் தன் முத்து பற்கள் தெரிய சிரித்தவள் நீயும் தான் என சின்னவளை கொஞ்ச அதற்குள் பொன்னி அவளை அழைக்கவும்.

“இருங்கண்ணி இதோ வந்துறேன்…” என்று சிட்டாக பறந்து சென்றவளை கண்டு மெலிதாக புன்னகைத்தவளின் பின் வந்து நின்ற விக்ராந்த் அவளின் புன்னகையையும் முக பிரகாசத்தையும் கண்டு ஆச்சிரியமாக பார்த்தவன் பின் தன்னை அதில் இருந்து மீட்டு கொண்டு மேடம்…. என அழைக்க திரும்பி பார்த்தவளிடம் “அதுதான் தங்கச்சிங்களோட ரூம் போய் ரெஸ்ட் எடுங்க மேடம் அது வந்து உங்க அளவுக்கு வசதி கிடையாது என்று தயக்கமாக உரைத்தவன் சாரி நான் மட்டும் உங்க கழுத்துல தாலி கட்டலன்னா நீங்க சந்தோஷமா இருந்திருப்பீங்க..” என்று கூறியவனை கண்டு “நீங்க எதுக்கு மிஸ்டர் இப்போ கவலைபடுறீங்கஎன்னை மாதிரியே நீங்களும் ஒரு சூழ்நிலை கைதியாகிட்டீங்க அவ்ளோ தான் எங்க அம்மாவாலே தானே எல்லாம் இப்போ எங்களாலே உங்க அம்மா மனசை கஷ்டபடுத்திட்டோம்….” என்று வருத்தமாக சொல்ல அவனும் அமைதியாகினான் பின் ஏதோ யோசனை வந்தவனாக குட்டிமா…. என குரல் கொடுக்க அவரமாக ஒரு தூக்குவாளியுடன் வெளியே வந்தாள் அவள்.

என்னண்ணே… என்றவளிடம் “எங்கடா போக போற..” என்று கனிவாக கேட்க “அப்பாக்கு சாப்பாடு குடுக்க போறேன் மத்தியானம் ஆகிடுச்சுல்ல அப்பா பார்த்திட்டு இருப்பாரு…” “சரி அதை நான் கொண்டு போறேன் நீ இவங்க கூட இரு…” என்று அங்கிருந்து அவன் தனது பைக்யை எடுத்து கொண்டு சென்று விட போகும் அவனை பார்த்தபடியே நின்றவளை தங்களது அறைக்குள் அழைத்து செல்ல தனது கோர்ட்யை கழட்டி வைத்தவள் “அகல் இங்க பாத்ரூம் எங்க இருக்கு எனக்கு குளிக்கனும் போல இருக்கு…” “வாங்கண்ணி பின்னாடி தான் இருக்கு ட்ரெஸ் எடுத்திட்டு வாங்க நா கூட்டிட்டு போறேன்…” என்றதும் சம்மதமாக தலையசைத்தாள் தான் கொண்டு வந்த சூட்கேஸ்யை திறக்க சில புதிய ஆடைகள் அவளுக்கு தேவையான பொருட்கள் என அதில் அழகாக அடுக்கி வைக்கபட்டிருந்தது அம்மா முன்னாடியே ப்ளேன்லே தான் இருந்திருக்காங்க போல என யோசனையில் இருந்தவளை களைத்து அவளை பின்னால் அழைத்து கொண்டு சென்றால் அகல்யா.

சுற்றி ஒரு மறைப்போடு கீழ் கொங்ரீட் கொட்டி மட்டுப்படுத்தபட்டு விட்ட நிலம் அதனுள் ஒரு குழாய் அருகில் பெரிய பக்கெட் இருக்க அள்ளி குளிப்பதற்கு கோப்பை ஒன்று வைத்திருந்ததுஅதை எல்லாம் பார்த்தவளுக்கு சற்று சிரமாக இருக்க அதே சமயம் பயமாகவும் இருந்தது திறந்த வான் மேல் தெரிய குளிக்கும் போது யாரும் பார்த்து விடுவார்களோ என்றிருந்தது அங்கிருந்த பகெட்யில் தண்ணியை நிறைய விட்டவள் “ஏதும் வேணும்ன்னா கூப்பிடுங்க அண்ணி நான் வெளியே தான் நிக்கிறேன்…” என்று குரல் கொடுத்து விட்டு கிணற்று திண்டில் போய் அமர்ந்து விட்டாள்.கோப்பை நிறைய நீரை எடுத்து தன் மேனியில் ஊற்றியவளுக்கு அந்த நீரின் குளிர்ச்சியில் ஒரு புது உற்சாகம் பிறந்தது நேற்று நடந்தவை நிழல் போல் தொடர அதை ஒதுக்கி விட்டு இதுதான் தன் வாழ்க்கை என முடிவாகி தான் அங்கிருந்து வந்தேன் இனி நடந்ததை நினைக்ககூடாது என்று அவைகளை ஒதுக்கி வைத்து விட்டு குளித்து முடித்து சுடிதார் ஒன்றை போட்டு கொண்டவள் வெளியே வர அண்ணி குளிச்சிட்டீங்களா?. என்று வந்தவள் வாங்க என அழைத்து கொண்டு அறைக்குள் வர வீடே நிசப்பதமாக இருந்தது.

“ஆன்டி எங்க அகல்மா…” என்று கேட்டவளிடம் “அம்மா ரூம்ல இருக்காக அண்ணி சமையல் வேலையை முடிச்சு சாப்பிட்டு சத்த நேரம் கண்ணசருவாக நீங்க சாப்பிடுறீங்களா அண்ணி?…” என்றவளிடம் “அது எதுவும் வேணாம் அகல் ரொம்ப நேரம் ட்ராவல் பண்ணி வந்தது சோர்வா இருக்கு நான் கொஞ்ச நேரம் தூங்குறேன்…” என்று அங்கிருந்த கட்டிலில் உறங்க சரி…. என்று கதவை சாத்தி வைத்து விட்டு அவள் சென்று விட இவ்வளவு நாளும் கடினபட்டு உறங்கும் உறக்கம் இன்று இந்த இதமான சூழலில் கண்களை மூடியதும் உறங்கி போனாள் பெண்ணவள் இன்றோடு தன் வாழ்வின் மாற்றம் அறியாது.

8 thoughts on “01.காரிகை”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *