Skip to content
Home » 02.காரிகை

02.காரிகை

சிங்காரபட்டினத்தை தன் கதிர் கொண்டு பொன்னிறமாக ஜொலிக்க வைத்து கொண்டிருந்த கதிரவனை விரட்டவே ஒரு பக்கம் காரிருள் பரவி கொண்டு வந்த நேரமது மனித பறவைகள் அனைவரும் கூட்டுக்குள் அடைக்கலமாகி கொண்டிருக்க வீட்டுக்கு கோபமாக வந்து கொண்டிருந்தார் காத்தவராயன்.

சோர்வு நீங்க உறக்கத்தை தழுவ தன்னை மறந்து உறங்கி வெகுநேரம் கழித்து தான் எழுந்தாள் கவிரத்னா வெளியில் பேச்சு சத்தம் கேட்க அவசரமாக எழுந்து தன்னை சரி செய்து கொண்டவள் வெளியே வர அங்கு தலையை தொங்க விட்டபடி விக்ராந்த் நின்று கொண்டிருக்க அவனருகே இரு தங்கைகளும் கலக்கமாக நின்று கொண்டிருந்தனர்.

“என்ன காரியம் பண்ணிட்டு வந்திருக்கன்னு தெரியிதா நாளை பின்ன நம்ம சாதிசனத்துக்கு முன்னாடி எப்பிடி போய் நிக்கிறது இதுலே உன் மாமனுக்கு என்ன பதில் சொல்றது….” என ஒருவர் கத்தி கொண்டிருப்பதை கண்டவள் அவரின் வயதும் அவரின் ஆளுமையில் குடும்பமே கட்டுபட்டு நிற்பதை கண்டு புரிந்து கொண்டாள் அவர் தான் இந்த வீட்டின் ஆணிவேர் ஆன காத்தவராயன் என்று,

.படபடப்பாக வெளியே வந்தவளின் பக்கம் தான் இப்போது அனைவரின் பார்வையும் திரும்ப ஒரு வித சங்கடத்தோடு நின்றவளினருகே ஓடி வந்து அவள் கை பிடித்து கொண்டாள் அகல்யா அதில் ஒருவித நிம்மதி அவளை சூழ்ந்து கொண்டது “இந்த பொண்ணு யாரு? என்னன்னாவது சொல்லு நீ பாட்டுக்கு தாலி கட்டி வீட்டார கூட்டி வந்து வெச்சிருக்க எவனோ ஒருத்தன் சொல்லி விஷயம் கேள்விபட்டு வர வேண்டியிருக்கு…” என விக்ராந்திடம் அவர் சற்று கோபமாக கேட்கவும்அவன் வாய் திறந்தான் “அப்பா இவங்க நான் வேலை பார்த்த கம்பனி MDயோட பொண்ணுப்பா பேர் கவிரத்னா…” என்று சொல்ல அதில் அவள் அந்தஸ்த்தை உணர்ந்தவர் ஏதோ பேச வாய் எடுக்கஇருவர் வீட்டுக்குள் திடுப்பென கத்தியபடி நுழைந்தனர்.

“மாப்பிளை என்ன? வேலை பார்த்திட்டு வந்து நிக்கிறவ இது தான் உன்னை நம்பி நிக்கிறவளுக்கு நீ செய்ற நல்ல காரியமா? துரோகி…” என கத்தியவர் வேற யாருமில்லை காத்தவராயனின் தங்கை காஞ்சனாவின் கணவன் பாண்டி…”மாமா அது என்னோட சூழ்நிலை வேற வழியில்லாதப்போ தாலி கட்ட வேண்டியதாகிடுச்சு நான் யாருக்கும் துரோகம் பண்ணனும்னு அவசியமும் இல்ல…” கொஞ்சம் பொறுக்க முடியாமல் இவன் பதிலுக்கு கத்தினான்.

“இப்போ என்னான்டே கத்தி என்ன நெறஞ்சது இப்போ எம் பொண்ணுக்கு என்ன பதில் இனி அவளை யாரு கட்டிபா மச்சான் உன் மகனை பதில் சொல்ல சொல்லு…” என்று அவர் தாம் தூம் என குதிக்க காஞ்சனா சேலை முந்தானையை வாயில் பொற்றி கொண்டு கண்ணீர் வடிக்க காத்தவராயன் எதையும் பேச முடியாமல் அமைதியாக நின்றார் அதை பார்த்தவளுக்கு தன்னாலும் தன் தாயாலும் தானே இவர்களின் குடும்பத்துக்குள் பிரச்சினை என எண்ணி கவலையாக நின்று கொண்டிருந்தாள் கவிரத்னா.

பொன்னி இதை எல்லாம் பார்க்க முடியாமல் “அண்ணே எம் புள்ளதான் சொல்றானே சூழ்நிலைன்னு அவன் என்னைக்கு எங்களே மீறி செஞ்சிருக்கான் அவனக்கு அது பிடிக்கும் இது பிடிக்கும்ன்னு கூட சொல்ல தெரியாதவன் நீங்க வாங்கின கடனை கட்ட முடியாம இருந்த நேரம் உதவியா இந்த வீட்டை அடமானம் வெச்சி பணம் கட்டி தான் உங்களை வெளியே தலைகாட்ட வெச்சாரு என் வீட்டுகாரரு வீடு ஏலத்துலே வரதை பொறுக்க முடியாம கடனும் சுத்தி முத்தி கழுத்தை நெறிக்க வரவும் தானே கிளம்பி போனான் அது மட்டுமா நீங்க உங்க பையனுக்கு அக்சிதாவை அவசரமா கட்டி வைக்கனும்ன்னு சொன்னதுக்காக தானே ஊர் பக்கம் கூட வராம சென்னையிலே போய் யாருமில்லாதவனா கெடந்தான் நீங்க என்னடான்னா எதையும் புரிஞ்சிக்காம இப்பிடி துரோகின்னு பேசுறிய…” என்றவரை முறைத்தபடியே”அவன் தங்கச்சிக்கு முறையா கட்டி வெச்சி சீர்வரிசை செய்றது அவனோட பொறுப்பு தானே அதுக்கு போனா அந்த வேலையை முடிச்சிட்டுல்லே வந்திருக்கனும் இப்போ ஒருத்திய கூட இழுத்திட்டுல்ல வந்திருக்கான் வெக்கம் கெட்ட பயே…” என்று மேலும் வார்த்தை விட தன் தந்தைக்காக அமைதியாக கோபத்தை கட்டுபடுத்தி கொண்டு நின்றான் விக்ராந்த்.

அவர் பேச்சை தடுக்கும் விதமாக அடுத்ததை பேச தொடங்கினார் காத்தவராயன் “இந்தாம்மா ரத்னா உனக்கு என் பையனை கட்டிக்கிட்டதுல முழு சம்மதமா? இல்லை யார் கட்டாயத்துலயாவது ஒத்துக்கிட்டியா?…” என கேட்டவரின் கேள்வியில் அவள் பார்வை விக்ராந்த் பக்கம் திரும்ப அவனும் அவளை தான் பார்த்தான் அதில் என்ன கண்டாளோ “அன்கிள் எனக்கு இந்த கல்யாணத்துல முழு சம்மதம் அவரை பிடிச்சு தான் இந்த தாலியை வாங்கினேன்…” என்றவள் அவரை பார்த்தபடி உறுதியாகஇதை கேட்ட பாண்டி “நீ பிடிச்சு தாலி வாங்கினியோ பிடிக்காம தாலி வாங்கினியோ அதை நாங்க ஏத்துக்கனுமாக்கும் என்ன மச்சான் இவகிட்ட போய் கேட்டுகிட்டு இருக்கியே கட்டினவன் கையாலே அதை இறக்கி வெச்சிட்டா தொல்லை ஒளிஞ்சது அடுத்த முகூர்த்தத்துலே நல்ல நாள் பார்த்து மாப்பிள்ளைக்கும் எம்புள்ளைக்கும் கல்யாணம் பண்ணி வைச்சிட்டா எவனும் நாக்கு மேல பல்லு போட்டு பேச மாட்டானுங்க…” என்றவரின் பேச்சில் குடும்பத்தாருக்கு திகைப்பு எனில் விக்ராந்த்யிற்கு கோபம் எல்லையை கடக்க அதற்குள் பொங்கி எழுந்து விட்டாள் கவிரத்னா.

“என் தாலியே நீங்க இறக்கி வைக்க பாக்குறீங்களா? ஹலோ மிஸ்டர் இது ஒன்னும் திருட்டு தாலி கிடையாது எங்க வீட்டாளுங்க முன்னாடி இவர் என் கழுத்துலே கட்டினது அது மட்டுமில்ல முறையா கல்யாணத்தை ரெஜிஸ்டர் பண்ணிருக்கோம் இதுக்கு மேல ஏதாவது செய்ய நினைச்சா நான் கோர்ட் கேஷ்ன்னு இழுத்திட்டு போய் ஜெயிலே தள்ளிடுவேன் முடிஞ்சா என்கிட்ட நெருங்கி பாருங்க அப்பறம் தெரியும் நான் யாருன்னு…” என்றவளை கண்டு அங்கிருந்தவர்களுக்கு திகைப்பாக இருக்க அவளின் கோபமும் ஒருவித திமிரும் பாண்டியனை கொஞ்சம் நடுங்க வைக்க தான் செய்தது.

காத்தவராயன் அவளை ஒரு அர்த்தம் உள்ள பார்வை பார்த்தவர் “பாண்டி இதோட இதை விட்டிடலாம் பெண் எடுத்து பெண் கொடுக்கலாம்னு தான் நமக்குள்ள பேசிக்கிட்டது ஆனா பரிசமும் போடலே இன்னாருக்கு இவங்க தான்னு யாருக்கு யாரையும் காட்டி அவங்க மனதுலே ஆசையே வளர்க்கலே அது என் பொண்ணு விஷயத்துலே எப்பிடியோ ஆனா என் பையன் மனசுலே நம்ம மஹா பத்தி எந்த எண்ணமும் இல்லை அது எனக்கு நல்லாவே தெரியும் இதுதான் நடக்கனும்ன்னு இருக்கு அது அப்பிடியே நடந்திடுச்சு நம்ம மஹாக்கு நல்ல இடமா பார்க்கலாம் விக்ராந்த் பொண்டாட்டி இந்த வீட்டோட மருமக இனி இந்த ரத்னா பொண்ணு தான் ஒரு நல்ல நாள் பார்த்து நம்ம முறைபடி நம்ம குலதெய்வ கோயிலுலே தாலி பிரிச்சு கோர்த்திடலாம்…” என்றவர் முடிவாக கூறி விட்டு சென்று விட அதற்கு மேல் எதுவும் பேச முடியாமல் பற்களை கடித்த பாண்டி

.”பணக்கார சம்மதம் வந்ததும் தங்கச்சி குடும்பம் வேண்டாதவகளாகிட்டாகே பார்த்தியா…” என காஞ்சனா மீது எரிந்து விழுந்தவர் கவிரத்னாவை முறைத்து விட்டு அங்கிருந்து சென்று விட போகும் அவர்களையே கண்கள் கலங்க சிறு அச்சத்தோடு பார்த்து கொண்டிருந்தாள் அக்சிதா.

“அம்மாடி புயல் வந்து தாக்கிட்டு போனாப்புலே இருக்கு வீடு…” என்ற கடைகுட்டி அண்ணே அண்ணே என எதையோ சிந்தித்து கொண்டிருந்தவனை சுரண்டினாள் அதில் சுயம் வந்தவன் என்ன குட்டிம்மா.. என்றவனிடம் “நீ சாப்பாடு கொடுக்க போனப்போ அப்பா கடையிலே இல்லன்னு சொன்ன அண்ணி பத்தி அப்பாக்கு எப்பிடி தெரிஞ்சது வீட்டுக்குள்ள வந்தபோ கோபமா வந்தாக…” என்றவளிடம் தெரியாது என்பது போல் தலையாட்ட அதை கேட்ட பொன்னி தான்.

“அதான் திரியிறானுகளே வெளங்காதவனுங்க உன் மாமனுக்கு சொம்பு தூக்கின்னு அவனுங்க வேலையா கெடக்கும்… என்றவர் “சரி சரி போய் படிக்கிறதை பாரு அதை விட்டிட்டு மத்ததுக்கு தலை போடாதே…” என சிறு எச்சரிக்கையோடு தன் வேலையை பார்க்க சென்று விட பலதை யோசித்து கொண்டிருந்த அக்சிதா தன் அண்ணியானவளை ஒரு பார்வை பார்த்து விட்டு அறைக்குள் சென்று விட அவளின் கலங்கிய கண்கள் அவளின் நிலையை சொல்லாமல் சொல்லியது தடுமாற்றத்தோடு இருந்த தன் தந்தையின் தொழிலை எடுத்து வெற்றியோடு நடாத்தி வந்தவளிற்கு மனிதனை எடை போடும் பார்வை ஒன்றும் அவ்வளவு கடினமானதாக இருக்கவில்லை தான் பிறந்ததில் இருந்த அதை கண் முன் பார்த்து அனுபவித்து தானே வளர்ந்தாள் அதை அவ்வளவு எளிதில் மறந்து விடுமா நெஞ்சம் ஆள் ஆளுக்கு ஒரு சிந்தனையில் இருக்க இரவு நெருங்கி அனைவரையும் சாப்பிட கூப்பிட்ட நேரம் தான் தங்கள் நிலையில் இருந்து இறங்கி வந்தனர் ஒவ்வொருவருக்கும் சப்பாத்தியை பரிமாறிய பொன்னியின் பார்வை மருமகளை அடிக்கடி தொட்டு தழுவியது.பசி வயிற்றை கிள்ளியது அனைவரும் கீழே அமர்ந்து சாப்பிட்டு கொண்டிருக்க அவர்களின் அருகே தானும் ஒருவளாக அமர்ந்தவள் ஒருவருக்கு ஒருவர் பரிமாறியபடி அண்ணன் கையால் இரு தங்கைகளும் உணவை வாங்கி மென்ற படியே உண்டவர்களை கண்டு வித்தியாசமாக இருந்தது அவளுக்கு தன் வீட்டில் யார் சாப்பிட்டார்கள் சாப்பிடவில்லை என்பது கூட தெரியாமலிருக்கும் ஏன் இது போல் ஒரு நாள் குடும்பத்தோடு இருந்து கதை பேசி சாப்பிட்டு அந்த நேரத்தை இதமாக கழித்திருக்கிறார்களா? என கேட்டாள் அது இல்லை என்பது அவள் பதில் அதுதான் உண்மையும் கூடசாப்பிட்டு கொண்டிருந்தவளின் பசியை அறிந்த பொன்னி அவளுக்கு என பகல் வைத்த சாதத்தையும் பரிமாற வயிரு நிறைய சாப்பிட்டவளின் மனதும் நிறைந்திருந்தது.

வீட்டின் முன் திண்ணையில் அமர்ந்திருந்தனர் மொத்த பேரும் இதமான இரவின் குளிரோடு தேகம் சிலிர்க்க வைத்த காற்றில் ஆழ மூச்சிழுத்து விட்டவள் அதை ரசித்து கொண்டிருக்க மற்றவர்களிடையே ஒரு அமைதி அதை உடைக்கவே விக்ராந்த் பொன்னியின் கை பற்றி “சாரிமா  இன்னைக்கு உங்க மனசு கஷ்டபடுறே மாதிரி நடந்துகிட்டத்துக்கு நான் தப்பு பண்ணலம்மா… என்ற எடத்துலே யார் இருந்தாலும் இதை தான் பண்ணியிருப்பாங்க ப்ளீஸ்ம்மா என்கூட பேசுமா இப்பிடி அமைதியா இருக்கிறத பார்த்தா எனக்கு என்னவோ மாதிரி இருக்கு…” என்றவனை நிமிர்ந்து பார்த்தவர் ஒரு பெருமூச்சை எடுத்து விட்டு “உன் மேல குத்தம் சொன்னா அது அந்த ஆண்டவனுக்கு கூட அடுக்காதுய்யா வீட்டு தலைபிள்ளை நீ உன் கல்யாணத்தை எங்களாலே நேர்ல பார்க்க முடியலங்கிற வருத்தம் தான்ய்யா…” என்றவரின் கண்களிள் துளிர்த்த கண்ணீரை துடைத்தபடி அப்பிடி என்னதான்ய்யா நடந்தது உங்களுக்கு எப்பிடி கல்யாணம் ஆகிச்சு…” என்றவரின் கேள்வியில் இருவரின் பார்வையும் ஒரு நேர்கோட்டில் சந்தித்து திரும்பி கொண்டது.

3 thoughts on “02.காரிகை”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *