கலைச்செல்விக்கு பல நாள் தவத்திற்கு பின்பு கிடைத்த வரம் போல் தான் ஸ்ரீ நண்பியாக கிடைத்தது அவளை தவிர அந்த வகுப்பறையில் எவருமே அவளுடன் பேசுவது இல்லை ஏன் அவளை ஒரு ஆளாக கண்டுக்கொள்வதும் இல்லை அது மனதிற்குள் வருத்ததை கொடுத்தாலும் அதை மறக்க வைக்கவே அவளுக்கு துணையாக நின்றாள் ஸ்ரீ.
“ஏய் இப்போ எதுக்கு ஃபோட்டோ எடுக்க வேணாம்னு சொல்ற வா இங்கே எவ்ளோ நல்லா இருக்கு பாரு அசையாம அப்படியே நில்லு…” என்றவளிடம் “வேண்டாம் ஸ்ரீ…” என மறுத்துக்கொண்டு இருந்தாள் கலைச்செல்வி.
“நான் ரொம்ப அசிங்கமா இருக்கேன் பாரு…” என சோகமாக சொன்னவளை கண்டு தலையில் அடித்துக் கொண்டவள் “இப்போ என்கூட நிக்கிறியா இல்லையா நிக்கலே உன் கூட பேச மாட்டேன்…”
“அய்யோ அப்படி எல்லாம் சொல்லாத சரி நான் நிக்கிறேன்…” என்றவளின் கன்னம் கிள்ளி முத்தம் வைத்து அவளை அங்கே நில்லு இங்கே நில்லு என வளைத்து வளைத்து ஃபோட்டோ எடுத்துக்கொண்டு இருக்க இப்படியா? என கேட்டப்படி பின்னால் நகர்ந்தவள் யார் மீதோ மோதி விழப்போனாள்.
“அச்சோ சாரி கவனிக்கலே…” என பட்டென விலகி நிமிர்ந்தவளை புன்னகையுடன் இட்ஸ் ஓகே.. என சொல்லி விட்டு நகர்ந்தான் அவன் தன் விழி இமை அசையாது போகும் அவனை பார்த்துக்கொண்டு இருந்தாள் கலைச்செல்வி.
“அவரு நமக்கு சீனியர் ஸ்டைலா ஹேன்ட்சமா ரொம்ப அழகா இருக்காருலே…” என்ற ஸ்ரீயிடம்,
“ம்ம் கூடவே ரொம்ப நல்ல மனசு…” என லேசாக புன்னகைத்து கூறியபடி ஸ்ரீயுடன் க்ளாஸ் ரூமிற்கு நடையை கட்டினாள் “கலை நீ போயிட்டு இரு நான் கலா மிஸ் கூப்பிட்டாங்க போய் என்னனு பார்த்திட்டு க்ளாஸ்க்கு வரேன் சரியா…”
“ஓகே சீக்கிரம் வந்திடு ஸ்ரீ…” என்றவள் அவளை அனுப்பி வைத்து விட்டு க்ளாஸ் ரூமிற்கு செல்ல ஓரிடத்தில் வழிமறைத்து நின்றனர் அந்த நால்வரும்.
“ஏய் கருப்பட்டி இங்கே வா…” என அழைக்க “அய்யோ இவங்களா…” என பயந்துடன் பார்த்துக் கொண்டு இருக்க “கூப்பிட கூப்பிட உன் இஷ்டத்துக்கு கண்டுக்காம போற உனக்கு எவ்ளோ தெனாவெட்டு…” என்ற ஒருவன் அவளின் கரம் பற்றி இழுத்து காலியான அந்த வகுப்பறைக்குள் தள்ளி விட்டு நால்வரும் உள்ளே வந்ததும் கதவை மறைத்து நின்று கொண்டனர்.
அதை கண்டு மேலும் பயந்து போனாள் கலைச்செல்வி “ப்ளீஸ் என்னை விடுங்களே எதுக்கு இப்படி டார்ச்சர் பண்ணுறீங்க…”
“ஏன்னா எங்களுக்கு நீதான் என்டர்டெயின்மென்ட்…” என்று ஒருத்தன் கேவலமாக பற்களை காட்டி சிரித்தான்.
“இப்போ நீ என்ன பண்ணுற நாங்க போட்டிருக்கிற செருப்பு எல்லாம் துடைச்சு குடுக்கிற அதுவும் உன் துப்பட்டாவாலே அன்னைக்கு கூப்பிட கூப்பிட கேட்காதே மாதிரி போனதுக்கு தான் இந்த தண்டனை ம்ம் வேகமா தொடச்சி விடு…”
“தொட… தொடைச்சி விட்டா என்னை அனுப்பிடுவீங்களா சீனியர்?…” என அழுதபடி கேட்டாள் ஏனோ இந்த மாதிரி யாருமற்ற அறைக்குள் இவர்களிடம் மாட்டிக்கொண்டது அவளுக்கு அத்தனை அச்சத்தை கொடுத்தது அதன் வெளிப்பாடாக வடிந்த கண்ணீரை கூட துடைக்க முடியவில்லை.
“ம்ம் சரி அனுப்பி விடுறோம் மொத தொடைச்சி விடு…” என்றதும் அவசரமாக அவர்கள் காலில் மாட்டி இருந்த செருப்பை வாங்கி தன் ஷால் மூலமாக துடைத்து கொடுத்தவளை நால்வரும் ஒருவருக்கு ஒருவர் பார்த்துவிட்டு தங்களுக்குள் சிரித்தனர்.
“பண்ணலாமா?..” என ஒருவன் கேட்க மற்ற மூவரும் “ம்ம் பண்ணி பார்க்கலாம்…” என்று பேசிக்கொள்ள இதையறியாத கலைச்செல்வி இவர்கள் கொடுத்த வேலையை செய்து முடித்து விட்டால் சென்று விடலாம் என்று அதில் கவனத்தை பதித்து இருந்தாள்.
செருப்பை துடைத்து கொடுத்து விட்டு அவசரமாக பூட்டிய கதவை நோக்கி ஓட குறுக்கே வந்து நின்றான் ஒருவன் “அதுக்குள்ள உன்னை விட்டிட முடியாது உன் பேருல இருக்கிற கலை உன்கிட்டயும் இருக்கான்னு ஒருதடவை செக் பண்ண போறோம் நாங்க பார்த்து தெரிஞ்சுக்கிட்டு உன்னை விட்டிடுறோம்…” என அவளை நெருங்க பீதியாகி போனவள்.
“சொன்ன வேலையை முடிச்சிட்டேன்ல என்னை விடுங்க…” என கத்தியபடிவெளியே ஓட போக அதில் ஒருவன் அவள் முடியை பிடித்து துப்பட்டாவை கழட்டி எரிய “ஹெல்ப் ஹெல்ப்..” என கத்தினாள் கலைச்செல்வி.
“டேய் ஒருத்தன் அவளோட வாயை மூடுங்கடா…”
“ச்சீ இவளை தொடனுமா என்னாலே முடியாது…” என ஒருத்தன் அவசரமாக பின்வாங்க “பைத்தியம் இவளை போய் தொட எங்களுக்கும் தான் அருவருப்பா இருக்கு ஆனா இவளுக்கு நம்ம மேல இருக்கிற பயத்தை அனுபவிக்க தான் பண்ண சொல்றேன் இல்லை இவ கத்துற கத்துலே யாராவது வந்தா நமக்கு தான் பிரச்சினை…” என ஒருவன் அவன் காதுக்குள் ரகசியமாக சொல்லவும் அந்த வகுப்பறையின் அறைக்கதவை உடைத்துக்கொண்டு ஒருவன் உள்ளே வந்தான்.
அவன் வேறு யாருமில்லை சற்று நேரத்திற்கு முன்பு கலைச்செல்வி தெரியாமல் மோதிய ஆணவன் அவன் இவர்களுக்கும் சீனியர் நால்வரையும் கலைச்செல்வியும் மாறி மாறி அழுத்தமாக பார்த்தவன் அந்த நால்வர் கன்னத்திலும் பொறி பறக்க மாறி மாறி அறைந்தான் அதை விழிவிரித்து வியப்பாக பார்த்தவளை அந்த நால்வரும் கொலைகாண்டில் முறைத்ததை கவனிக்க தவறினாள்.
“இனிமே இந்த மாதிரி ஏதாவது பண்ணதை பார்த்தேன் ஸ்ட்ரைட்டா பிரின்சிபால் சார்கிட்ட போற மாதிரி இருக்கும் க்ளாஸ்க்கு போங்கடா…” என்றதும் நால்வரும் அவசரமாக வெளியில் ஓடினர்.
“உன் பேரு என்ன? எந்த டிபார்ட்மெண்ட்..” என கேட்டவனிடம் திக்கிதிணறி தன்னை பற்றி கூற “ம்ம் இனிமே ஏதாவது பிரச்சினை பண்ணா அமைதியா இருக்காம பிரின்சிபால் சார்கிட்ட இல்லையா என்கிட்டயாவது வந்து சொல்லு இப்படி பயந்து நிக்காத புரியிதா?…” என்றதும் வேகமாக தலையசைத்தாள்.
“ஓகே வா போலாம்…” என்றவன் பின் தயங்கி “உன்கிட்ட ஏதும் தப்பா…”
“இல்… இல்லை அதுக்குள்ள தான் நீங்க வந்திட்டீங்க…”
“தாங்க் காட் ஓகே வா க்ளாஸ்க்கு போலாம்…” என்றவன் அவளை முன்னால் நடக்கவிட்டு பின்னால் வந்தான் அவளுடைய க்ளாஸ் வர அதே நேரம் மூச்சு வாங்க வேர்த்துக் கொட்ட இவளுக்கு நேர் எதிரில் இருந்து ஓடி வந்தாள் ஸ்ரீ.
“ஏய் எங்கடி போன உன்னை எங்கே எல்லாம் தேடுறது…” என்றவளை கட்டிக்கொண்டு நடந்ததை சொன்னாள் அதை கூறும் போது அழுது விட்டாள்“சரி சரி ஒன்னுமில்ல விடு பார்த்துக்கலாம்…” என்று கண்ணை துடைத்து விட கலைச்செல்வி மெதுவாக திரும்பி அவனைப் பார்த்து “ரொம்ப நன்றி சீனியர்…” என்றதும் வரிசை பற்கள் தெரிய அழகாக சிரித்தவன் தலையசைத்து விடைபெற இவளும் தலையசைத்து விட்டு வகுப்பறைக்குள் செல்ல அங்கிருந்த அத்தனை பேரும் இவளை தான் வியப்புடன் பார்த்தனர் அதில் அளவுக்கு அதிகமாக பொறாமையும் இருந்தது இவளுக்கு தெரியாமல் போனது.
நால்வர் கூட்டமும் ஒன்று கூடி நின்று கொண்டு இருந்தனர் கல்லூரி மைதானத்தில் “கடைசியிலே இப்படி ஆகிடுச்சே அதுவும் அவள் முன்னாடி அடிச்சு அசிங்கப்படுத்திட்டான்…”
“ஆமாடா சில பேரை பார்த்தா ஏன்னு தெரியாமலே பிடிக்காது அந்த லிஸ்ட்ல இருக்கிறவ தான் இவளும் ஏன்னு தெரியலே அவளை பார்த்தாலே எனக்கு கோவம் கோவமா வருது ஏதாவது அவளை பண்ணியே ஆகனும்டா…” என்றான் மற்றொருவன்.
“ஆமா ஆமா ஆனா அவளை மட்டும் இல்லை அவளுக்கு சப்போர்ட் பண்ணானே அந்த யாதவ் அவனையும் சேர்த்து ஏதாவது பண்ணனும்…”
“அவள் அழுது கெஞ்சுறப்போ உண்மையிலே ரொம்ப என்டர்டெயின்மென்டா இருக்குடா இன்னும் கெஞ்ச விடனும்…” என்றான் இன்னொருவன் கொஞ்சம் அல்ல மிகவும் சைக்கோ தனம் கொண்ட குணம் படைத்த இவர்களின் சதி வேலையினால் கலைச்செல்வி எவ்வளவு துன்பம் அடைய போகிறாளோ? பெண்ணின் உணர்வுகளை மதிக்க தெரியாத இதுபோல் சைக்கோ இருக்கும் வரைக்கும் எங்கு தாழ்வு மனப்பான்மையை உடைத்து முன்னேற்றம் காண்பது.
“மச்சான் இனிதான் கவனமா இருக்கனும்டா அவன் சீஎம் பையன் பார்த்து தான் வேலையை ஆரம்பிக்கனும் எது பண்ணாலும் குறிப்பா எந்த டவுட்டும் வரவே கூடாது…” என நால்வரும் ஒருவருக்கு ஒருவர் பேசிக்கொண்டனர்.
“கலை… கலை… அதையே யோசிச்சிட்டு இருக்கியா? விடு அதான் சீனியர் வந்து காப்பாத்திட்டாருல்ல இப்பவும் அதையே நினைச்சிட்டு இருந்தா எப்படி அவங்க திரும்ப ஏதாவது வாலாட்டினா எவிடென்ஸோட பிரின்சிபால் சார்கிட்ட கொண்டு போய் கொடுத்து அவனுங்களை காலேஜ்ல இருந்தே தூக்கிருவோம்…”
“அய்யோ அப்படி எல்லாம் பண்ணக்கூடாது ஸ்ரீ அவங்க லைஃப் போயிரும் பாவம் அவங்களும் கஷ்டப்பட்டு படிச்சு தானே இங்கே வந்திருப்பாங்க…” என அந்த நால்வருக்காக இரக்கப்பட்டாள்.
“அது உன் குணம் ஆனா அதுங்க அப்படி இல்லையே ஏதோ நீ அதுங்களோட ஜென்ம விரோதி மாதிரிலே நடந்துக்கிறானுங்க எனக்கு என்னவோ இது சரியா படலே இவனுங்களை ஏதாவது பண்ணா தான் சரி…” என்றவளிடம் யோசனை வந்தவளாக “சரி அதை விடு ஆமா எதுக்கு கலா மிஸ் கூப்பிட்டாங்கன்னு போன என்ன சொன்னாங்க மிஸ்…”
“அது காலேஜ்ல ஒரு இசை நிகழ்ச்சி மாதிரி ஏற்பாடு பண்ணி இருங்காங்கலாம் அதுலே நான், நீ அப்பறம் இன்னும் கொஞ்சம் பேர் சேர்ந்து ஒரு க்ரூப் டான்ஸ் ஆட போறோம் அதான் நேம் லிஸ்ட் கேட்டாங்க சொல்லிட்டு வந்தேன்…”
“என் பேரையும் குடுத்தியா எதுக்கு ஸ்ரீ என் பேரையும் குடுத்த என்னாலே எல்லாம் ஆட முடியாது…”
“குடுத்தது குடுத்தது தான் உன்னாலே நல்லா டான்ஸ் பண்ண முடியும்னு எனக்கு தெரியும் எங்ககூட ஆடுற அவளோ தான் நாளையிலே இருந்து ஒரு மணிநேரம் ப்ராக்டிஸ் இருக்குன்னு சொல்ல சொன்னாங்க நாளைக்கு வரப்போ பாவடை தாவணி இருந்தா எடுத்திட்டு வா அதுதான் எல்லாரும் போடனுமாம் பங்சன் அன்னைக்கு மிஸ் எல்லாருக்கும் ஒரே மாதிரி ட்ரெஸ் தைச்சு கொடுப்பாங்க நாம அதுக்கு அமெளன்ட் மட்டும் கொடுத்தா போதும்….”
“என்ன பாவடை தாவணியா? எனக்கு டான்ஸ் ஆடுறதா இருந்தாலும் ஓகே ஆனா பாவாடை தாவணி எல்லாம் என்னாலே உடுக்க முடியாது அதுவும் அத்தனை பேர் முன்னாடி…”
“ஏன் அந்த உடுப்புக்கு என்ன குறைச்சல்நல்லா தான் இருக்கும் கலை ஒரு தடவை போட்டு பாரு அப்பறம் உனக்கே பிடிச்சிரும்…”
“இல்லை என் கலருக்கு இந்த கருப்பு சுடிதார் தான் சரி வேற கலர் ட்ரெஸ் போட்டா என் கலர் தான் பளிச்சின்னு தெரியும் ஸ்ரீ ரொம்ப அசிங்கமா இருப்பேன் அதெல்லாம் வேணாம் நீ முதல் வேலையா மிஸ்கிட்ட சொல்லி என் பேரை எடுத்திட்டு வேற யாரையாவது போட சொல்லு அதான் கரெக்ட்…” என பிடிவாதமாக சொன்னவளை எப்படி ஒத்துக்கொள்ள வைப்பது என்று ஸ்ரீக்கு புரியாமல் போனது.
அவனுங்களை அடிச்சதோட சும்மா விட்டுருக்க கூடாது!!!… இன்னும் என்ன செய்ய போறானுங்களோ!??
Thankyou sis
Nalla adi koduthu irukanum pathathu avangaluku ithula inum ethathu panna yosikranga paru . Colour ah patha kovam varutha nee pana kariyam athuku evlo kovam varanum avalum oru manushi tha una mari
அந்த நாலு பேரோட கொட்டத்தை முழுசத அடக்காம, இப்படி பாதியிலே விட்டா… அடிப்பட்ட நாகம் திரும்ப கொத்த தானே வரும்.
பாவம் கலை
Sema sema interesting epi
Nice epi👍