Skip to content
Home » 03.காரிகை

03.காரிகை

அரண்மனை போன்ற வீட்டில் என்றுமில்லாமல் அன்று அனைவரின் பேச்சு சத்தமும் அதிகமாக கேட்டு கொண்டிருந்தது.

“பத்மா எதுக்காக இவ்வளவு அடம்பிடிக்கிற உன் கால்ல நான் குணபடுத்தியாகனும் ட்ரீட்மெண்ட் எடுக்காம அப்படியே விட்டா அப்பறம் உன் கால்யை எடுக்க வேண்டி வந்திடும் ப்ளீஸ் என் கூட அமெரிக்கா வா நாம போய் ட்ரீட்மென்ட் பார்க்கலாம்…” என்று கத்தி கெஞ்சி கொண்டிருந்தார் அந்த வீட்டில் வயதில் மட்டுமே பெரிய மனிதனாக இருந்த நாராயணமூர்த்தி.

பத்மா என்கிற பத்மாவதி பிடிவாதமாக வீல்சேரில் அமர்ந்திருந்தவர் “என் பொண்ணுக்கு ஒரு நல்லது நடக்காம நான் எதுக்கும் ஒத்துழைக்க மாட்டேன்…” என்பரை கோபமாக பார்த்தனர் அவர் முன் இருந்த அவருடைய அன்பு கணவர் மற்றும் பையனும் இரண்டு பெண்களும்.

“அப்பா பார்த்தீங்களா? இவங்க கிட்ட இப்பிடி பேச முடியாது அவங்க உடம்போட நல்லதுக்காக நாம பேசுறோம் ஆனா அவங்க இப்பவும் அந்த திமிருபிடிச்சவளுக்காக தானே பேசுறாங்க…” என்று கடுப்பாக கத்தினாள் ரேஷ்மா பிறந்த பெண்களில் முத்தவள் அவள் தான்.

“அம்மா இன்னைக்கு நீங்க இந்த நிலமையிலே இருக்கிறீங்கன்னா அதுக்கு காரணம் நீங்க எவளுக்காக இங்க நின்னு போராட்டம் பண்ணுறீங்களோ அவள் தான் அதையும் ஞாபகம் வெச்சுக்கங்க…” என்று எக்ததாளமாக கூறிய தன் இரண்டாவது மகளான திவ்யாவை நிமிர்ந்து ஒரு பார்வை பார்த்தவர்.

“தொட்டதுக்கு எல்லாம் என் பிள்ளையே குறை சொல்லன்னா தூக்கம் வராதா உங்களுக்கு… அவ செஞ்சான்னு சொல்றீங்களே அவ ஒன்னும் என்னை வேணும்ன்னு போய் கார்லே தள்ளி விடலே அது ஒரு ஆக்ஷ்சிடன் என் கவன குறைவாலே நடந்தது…” என்று அழுத்தமாக தீர்க்கமாக கூறியவரின் அருகே அவர் கை பிடித்தபடிஅமர்ந்த தீபக்.

“அம்மா உங்களை இந்த நிலமையிலே எங்க யாராலையும் பார்க்க முடியலே மா முணு மாசமா இப்பிடியே இருக்கீங்க இதுலே கால் டேமேஜ் ஆகிட்டு வருதுன்னு டாக்டர் வேற சொல்றாங்க ட்ரீட்மென்ட்க்காக அழைச்சிட்டு போக நினைச்சா ஏன்ம்மா பிடிவாதம் பிடிக்குறீங்க சரி உங்களுக்கு என்ன வேணும் என்ன நடந்தா எங்ககூட ட்ரீட்மென்ட்க்கு வருவீங்க…” என பொறுமையாக கேட்டவனிடம் கண்ணீரோடு பார்வையைதிருப்பியவர்.

“பொறந்ததுலே இருந்து உங்களை விட அவ எவ்வளவு கஷ்டத்தை அனுபவிச்சாஇவ்வளோ ஏன் உங்க மூணு பேருக்கும் வாழ்க்கையிலே தேவையான நேரத்துலே தேவையான எல்லாத்தையும் செஞ்ச உன் அப்பா வீட்டுக்கு நாலாவதா கடைகுட்டியாபொறந்த அவளுக்கு என்னத்த பண்ணினாரு 24 வயசு பொண்ணு இந்த வயசு வரதுக்கு முன்னாடியே உங்க அப்பா மத்த பொண்ணுங்களுக்கு சீர்வரிசையோட சொத்து பத்துன்னு கொடுத்து கல்யாணம் பண்ணி வெச்சாரு ஆனா இவளுக்கு என்ன பண்ணினாரு? ஆசையா MBA படிச்சு வந்தவ சொந்தமா தொழில் ஆரம்பிக்கலாம்ன்னு நினைச்சிகடனா தான் பணம் கேட்டா ஒத்த ரூவாகொடுத்தீங்களா? ஏன் உன்கிட்டயும் தானே வந்து கேட்டா அதுக்கு உன் பொண்டாட்டி கொடுத்தாளா?…” என்றவரின் பேச்சில் புரியாத பார்வையை தன் மனைவியின்பக்கம் திருப்ப அவளோ தலைகுனிந்து நின்றாள்.

“கடைசியிலே உங்கப்பா என்ன பண்ணினாரு கடனுக்கு போய் நின்ன இடத்துலே எல்லாம் கடன் கொடுக்க விடாம தானே செஞ்சாரு அப்பவா இப்பவான்னு இருந்த கம்பனியே அவள் தலையிலே கட்டி அதை ரன் பண்ண சொன்னாரு அதையும் இப்போ எல்லாரும் திரும்பி பாக்குற அளவுக்கு கொண்டு வந்து விட்டிட்டா இதுக்கு அவளுக்கான உரிமையை கொடுக்காம அந்த கம்பனியையும் உன் அப்பா அவர் பேர்லே எழுதிகிட்டு அவளுக்கு மாசா மாசம் சம்பளம் கொடுக்கிறாரு அதை எல்லாம் அமைதியா தானே கடந்து வந்தா ஏதாவது திரும்பி பேசினாளா நீங்க மிதிக்க மிதிக்க அமைதியா தானே போயிட்டிருக்கா நான் இருக்கும்  போதே இப்பிடி செய்றீங்க ட்ரீட்மென்ட் எடுக்க போன இடத்துலே எனக்கு ஏதும் ஆகிட்டா அப்பறம் அவளை நடுத்தெருவுலே கொண்டு போய் விடமாட்டீங்கன்னு என்ன நிச்சயம் அதான் இதுக்கு எல்லாம் ஒரு முடிவா இதை யோசிச்சு வெச்சிருக்கேன் அது நடக்குற வர நான் இங்கயிருந்து எங்கயும் போக மாட்டேன்…” என்றவர் முடிவாக சொல்லி விட்டு நாராயணனின் பக்கம் பார்வையை திருப்பியவர் “இப்போ உடனே விக்ராந்த் தம்பியை வர சொல்லுங்க…” என்றவர் கூற “இப்போ மேனஜர் எதுக்கு பத்மா…” என்றவர் அவர் சொன்னதை செய்யாமலும் இல்லை.

சிறிது நேரத்தில் வேகமாக ஒரு BMW வந்து அந்த வீட்டின் முன் நிற்க அதில் இருந்து கோர்ட் சூட் சகிதம் நிமிர்வாக இறங்கி வந்தாள் கவிரத்னா அவளின் நிமிர்வும் திமிரும் இன்னும் அழகாக இருந்தது அவளிற்கு அந்த கார் கூட பத்மா அவளது பிறந்தநாள் பரிசாக அவர் அப்பா வழி கொடுத்த பணத்தால் தான் வாங்கி கொடுத்தார் அதனால் தான் அதை வாங்கி கொண்டாள் இங்கு ஒரு வேலை சாப்பாடு கூட பணம் கொடுத்து தான் சாப்பிடுகிறாள் என்பது வேறு கதை மற்றவர்களின் பார்வைக்கு அது திமிர் என்றால் அவளுக்கு அது தன்மானம்.ஒவ்வொரு காலடியையும் அழுத்தமாக அந்த வீட்டினுள் எடுத்து வைத்து வந்தவளின் பார்வை அனைவரின் மீது பட்டு திரும்பியது கடைசியாக தாயை  கண்டவள் ஒரு மெல்லிய சிரிப்பை உதிர்த்து விட்டு அங்கிருந்து தன்னறைக்கு செல்ல திரும்பியவளை ஏய் நில்லு… என்ற தந்தையின் அழைப்பில் கால்கள் அப்படியே நிற்க அவரை திரும்பி பார்த்தவளை “இங்க வா உன்னோட கொஞ்சம் பேசனும்…” என்று ஒட்டாத பார்வையோடு அலட்சியமாக அழைக்க அந்த பேச்சு எல்லாம் பழகியவளுக்கு அது கஷ்டமாக தெரியவில்லை அவர் முன் போய் நின்றவள் “என்னப்பா சொல்லுங்க…” என்றவளின் பேச்சில் கடுப்பானவர் “உனக்கு எத்தின தடவைசொல்றது என்னை அப்பான்னு கூப்பிடாதன்னு…” என்று எரிச்சலை அடக்க முடியாமல் கத்த அப்போது எல்லாம் அமைதியாக போனவள் இன்று ஏனோ கேட்டு விட்டாள் “என்னை பெத்தவரு நீங்க தானே சாரி வேற யாரையும் அப்பிடி கூப்பிட்டு எங்கம்மாவை கலங்கபடுத்த விரும்பலே…” என்றவளின் தீர்க்கமான வார்த்தையில் அவருக்கு மண்டை சூடாகியது.”ரத்னா குட்டி இங்க வா…” என்று அழைத்த தாயின் அருகே போய் அமர்ந்து கொண்டாள் வெளி உலகத்துக்கு முன் வீட்டினருக்கு முன் கெத்தாக திமிராக நிற்பவள் தாயிடம் மட்டும் குழந்தையாக மாறி விடுவாள் அம்மா…. என்று அவர் தோளில் சாய்ந்து கொண்டவளிடம் “அம்மா உனக்கிட்ட கடைசியா ஒன்னு கேட்க போறேன்டா எனக்காக செய்வியா?…” என்றவரிடம் “ம்ம் சொல்லுங்கம்மா…” என்றவளிடம் பேச்சோடு நிறுத்தாமல் சத்தியமும் வாங்கி கொண்டவர் மெல்ல பேச்சை தொடங்கினார்.

“ரத்னா குட்டி அம்மா ஒருத்தரை காட்டுவேன் அவங்களே நீ கல்யாணம் பண்ணிக்கனும்டா…” என்று சொல்ல அவரை  திகைப்பாக பார்த்தவள் “அம்மா என்ன இது எனக்குஅது எல்லாம் எதுவும் வேணாம்…” என்றவளின் கையை பற்றி கொண்டவர் “ப்ளீஸ் அம்மாகாக டா உன்னை தனியே விட்டிட்டு போனா என் பொணம் கூட நிம்மதியா எரியாது….” என கண் கலங்கியவரை கட்டி கொண்டவள் ஏன்ம்மா இப்பிடி பேசுறே என்றவளின் கண்களும் கலங்கியது.

“ஹேய் உன் ட்ராமாவே கொஞ்சம் நிறுத்துறியா? இவ்வளோ சொல்றாங்களே பண்ணி தொலய வேண்டியது தானே…” என வெடுக்கென பேசிய திவ்யாவிற்கு தெரியவில்லை போலும் தன் கூடபிறந்தவளுக்கு உணர்வுகள் இருக்கிறது அவள் ஒன்றும் பிணம் இல்லை உயிருள்ள மனிதன்  என்பது “இங்க பாரு அம்மாவை ட்ரீட்மென்ட்காக அப்பா அமெரிக்கா கூட்டிட்டு போக போறாரு ஆனா அம்மா உனக்கு கல்யாணம் பண்ணாம போக மாட்டேன்னு அடம்பிடிக்கிறாங்க எங்களுக்கு எங்க அம்மா வேணும் நீ பொறந்ததுல இருந்துஅவங்க எங்களே விட்டு தூரமா இருந்திட்டாங்க தயவு செஞ்சு இனியாவது எங்களுக்கு அவங்களே குடு கல்யாணத்தை பண்ணிட்டு இங்கயிருந்து எங்களை விட்டு போய்டு….” என்றவளின் முன் கை எடுத்து கும்பிடாத குறையாக விரட்டினாள் ரேஷ்மா.

இவர்களின் பஞ்சாயத்து ஓட இங்குநாராயணனின் பீஏ ராஜன் விக்ராந்த்யை அழைத்து கொண்டு வந்து சேர்ந்தார் அவர்களை புரியாமல் மற்றவர்கள் பார்த்து கொண்டிருக்க விக்ராந்த் அருகே வீல்சேர்யை கையால் தள்ளியபடி வந்த பத்மாவை புரியாமல் பார்த்த விக்ராந்த்யிடம் “தம்பி எனக்கு ஒரு உதவி பண்ணுவியா?…” என கேட்டவரின் கலங்கிய கண்களை கண்டவனுக்கு ஏனோ மறுக்க தோன்றவில்லை “சொல்லுங்க மேடம் செய்றேன்…” என்றவனுக்கு அவரை பல தடவை ஆபிஸில், வீட்டில் என பார்த்திருக்க அவரின் இதமான பேச்சும் எல்லாரிடமும் சமமாக நடந்து கொள்ளும் அவரின் குணமும் அவர் மீது ஒரு மரியாதையை வர வைத்திருந்தது.

“என் பொண்ணை கல்யாணம் பண்ணிக்கிறீங்களா தம்பி?..” என நேரடியாக கேட்டவரை கண்டு அதிர்ச்சியானவன் “மேடம் சாரி எனக்குன்னு சில கடமைகள் இருக்கு அதுக்கு அப்பறம் தான் என் கல்யாணம் எல்லாம் இதுலே நான் உங்க கம்பனிலே மேனஜரா வேலை பாக்குறவன் நான் எப்பிடி உங்க பொண்ணை கல்யாணம் பண்ணிக்க முடியும்…” அவன் பேச்சிலே புரிந்தது நீங்கள் வேறு நான் வேறு என்று அத்தோடு அவன் மூளைபல விதமாய் யோசிக்க தொடங்கியிருந்தது.”தம்பி உங்க நிலமை புரியிது திடீர்ன்னு கூப்பிட்டு பொண்ணை கட்டிக்கிறீங்களான்னு கேட்டா யாரா இருந்தாலும் யோசிப்பாங்க என் பொண்ணுக்கு பையன் கிடைக்காம இல்லை உங்க அளவுக்கு வேற யாரும் அவளை சந்தோஷமாவும் பத்திரமாவும் பார்த்துப் பாங்களான்னு தான் தெரியாது உங்களை பத்தி விசாரிச்சு தான் இந்த முடிவுக்கு வந்தேன்…” என்றவர் “தம்பி உங்க காலிலே வேணுன்னாலும் விழுறேன் என் பொண்ணை கட்டிக்கங்க ப்ளீஸ்….” என கெஞ்ச தொடங்கியவர் அவனின் காலில் விழ போக அதை கண்டு குடும்பத்தவர்களுக்கு பற்றி கொண்டு வந்தது இதில் நாராயணன் ஒரு படி மேல் போய் “ஹேய் பத்மா அறிவில்லை உனக்கு நம்ம கிட்ட வேலை செய்றநாய் அவன் கால்லே போய் நீ விழுற அதுவும் இந்த ராஷி கெட்டவளுக்காக…” என மகளையும் சேர்த்து கடிந்து கொண்டார்.அவரை ஒரு பார்வை பார்த்த விக்ராந்த்யிற்கு புரிந்து போனது இந்த வீட்டில் கவிரத்னாவின் நிலை என்ன என்று “ஹலோ சார் உங்ககிட்ட வேலை செய்றேன்னா நான் ஒன்னும் உங்க அடிமை கிடையாது நீங்க எனக்கு சம்பளம் குடுத்து என் அறிவையும் என் உழைப்பையும் பண்டமாற்று முறையா வாங்குறீங்க அவ்வளவு தான் என் வேலை எதுவோ அதை செய்றேன் சம்பளம் கொடுக்க வேண்டியது உங்க பொறுப்பு எங்களே மாதிரி யாரும் இல்லைன்னா ஒரு கம்பனியும் இருக்காது நீங்களும் MDன்னு உக்கார்ந்திட்டு இருக்கவும் மாட்டீங்க இந்த உலகத்துலே எல்லாரும் சமமானவன் தான்னு நினைக்கிறவன் நான் எல்லாருக்கும் ஒரு தேவை இருக்கு என்கிட்ட இருந்து என்னோட உழைப்பும் அறிவும் உங்களுக்கு தேவை இதை எடுத்திட்டு அதுக்கு அடிமைன்னு பேர் வெச்சா உங்களுக்கு நாங்க வேறு பேர் வைக்க வேண்டி இருக்கும்… என்று திமிராக பதில் கூறியவன் பத்மா புறம் திரும்பி  இதை தவிர வேற என்ன உதவி கேட்டாலும் செய்றேன் ஆனா இது மட்டும் என்னாலே முடியாது மேடம்…” என திட்ட வட்டமாக கூறி அங்கிருந்து நகர போனவனின் முன் தன் புடவையை விரித்து மடி பிச்சை கேட்க தொடங்கி விட்டார் பத்மா அதை பார்க்க சக்தி இல்லாதவன் திரும்பி கவிரத்னாவை பார்க்க அவளின் கலங்கிய விழிகளையும் அவள் தாய்யை பார்த்த பார்வையையும் கண்டவனின் மனம் ஏதோ சொல்ல கண்களை இறுக மூடி திறந்தவன் தன்னிலையில் கூட இல்லாமல் ஏதோ தன்னை கட்டி போட்ட நிலையில் சரி என்பது போல் தலையசைத்தான்.அதில் சந்தோஷமடைந்தவராய் இருவரையும் பூஜை அறை முன் நிறுத்தி அங்கிருந்த தாலியை எடுத்து கொடுக்கபெண்ணவளின் கண்களை பார்த்தபடியே மூன்று முடிச்சிட்டான் விக்ராந்த் அடுத்த பத்து நிமிடங்களில் திருமணத்தை பதிவு செய்வதற்கு ஆட்கள் வந்து விட விக்ராந்த் சார்பில் தீபக்யும் கவிரத்னா சார்பில் நிலாவும் சாட்சியாக கையெழுத்திட்டனர் இப்போது ஒரு நிம்மதியோடு பத்மாவதியின் மனம் அமைதியடைய மகளின் ஆசை இதிலாவது நிறைவேறட்டும் என்று மகிழ்ந்தார்.

இதை எல்லாம் பார்த்த மற்றவர்களுக்குபத்மா முன்னேற்பாடாக முடிவு செய்து அனைத்திற்கும் ஏற்பாடு செய்திருக்கிறார் என்று தெட்ட தெளிவாக தெரிய வர அதே சமயம் அவர்கள் பார்வையில் ஒரு ஏளனமும் குடி கொண்டது தங்களில் வசதி குறைந்தவனை அதுவும் தங்களிடம் வேலை செய்பவனை இவள் திருமணம் செய்திருக்கிறாள் என்று அங்கிருந்து வேலையாள் ஒருவர் மூலம் ஒரு பெட்டியை தயார்படுத்த தொடங்கிய பத்மா விக்ராந்த் பக்கம் பார்வையை திருப்பியவர் “நீங்க செஞ்ச இந்த உதவியே நான் என்னைக்கும் மறக்க மாட்டேன் தம்பி ரொம்ப நன்றி…” என கையெடுத்து கும்பிட அதை கண்டு மனம் பொறுக்க முடியாமல் “எங்களை விட வயதிலே மூத்தவரும் அனுபவசாலியா இருப்பவங்க நீங்க ஏதோ காரணம் இல்லாம எனக்கு உங்க பொண்ணை கட்டி வைத்திருக்க மாட்டீங்கன்னு புரியிது உங்களுக்கு வாக்கு கொடுக்குறேன் என் மனைவியே இனி நான் நல்லபடியா பார்த்துக்கிறேன்…” என்றவன் அங்கிருந்து கவிரத்னாவின் கைபிடித்து அழைத்து போக ஒரு நிமிசம் என்றவள் தன் தாயை ஓடி சென்று கட்டி கொண்டவள் “ட்ரீட்மென்ட் முடிஞ்சதும் என்னை பார்க்க வந்திடுமா உன்னை எதிர்பார்த்திட்டு இருப்பேன்…” என்றவள் அங்கு நின்ற தீபக்யின் மனைவி நிலாவை கட்டி கொண்டவள் தாங்க்ஸ்… என்று அவள் கன்னத்தில் முத்தமிட்டவள் அங்கிருந்து விக்ராந்த் உடன் வந்துவிட்டாள் அவர்கள் இருவரையும் கழுகு கண் கொண்டு புரியாத பார்வை பார்த்து நின்றனர் சகோதரிகள் இருவரும் தன்னோடு நடந்த உரையாடலை மட்டும்  கூறி தன் தாயிடம் தன்னிலையை எடுத்து கூற தொடங்கினான் விக்ராந்த்.

3 thoughts on “03.காரிகை”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *