Skip to content
Home » 05.காரிகை

05.காரிகை

அவரை திகைப்போடு பார்த்து கொண்டிருந்தவளை “என்ன? அங்கனயே நின்னுக்கிட்டிருக்க இது ஒன்னும் உன் வீடு மாதிரி கிடையாது கூப்பிட்டதும் வேலைக்காரங்க வந்து எல்லாத்தையும் செஞ்சி தர எல்லாத்தையும் தெரிஞ்சு நடந்துக்க..” என்றவரின் பேச்சில் புரியாமல் விழித்தவள் “ஆன்டி என்ன? செய்யனும்..” என கேட்டவளுக்கு அவர்கள் எதை தன்னிடம் எதிர்பார்க்கிறார்கள் என்பது தான் தெரியவில்லை பெருமூச்சு ஒன்றை வெளியேற்றி விட்டு சமயலறைக்குள் நுழைந்து கொண்டார் இரண்டு நிமிடம் போகும் அவரையே பார்த்து நின்றவள் என்ன நினைத்தாளோ அவர் பின்னாலே வந்து நிற்க அவள் வரவை உணர்ந்தவராய் “இது ஒன்னும் நீ பிறந்து வளர்ந்த பட்டனம் இல்ல கிராமம் அதுக்கு ஏத்த மாதிரி பல விஷயங்கள் இருக்கு அதுக்கு தகுந்து நீயும் மாறனும் மொதல்ல வெள்ளைகாரி கணக்கா  ஆன்டி நோன்டின்னு கூப்பிடாம அத்தைன்னு கூப்பிடு அப்பறம் கல்யாணம் ஆன பொண்ணுங்க புடவை தான் கட்டுவாங்க…” என்றவர் எதையோ ஞாபகம் வந்தவராய் “ஆமா உனக்கு சமைக்க தெரியுமா?…” “நார்மல் டிஸ் மட்டும் சமைக்க தெரியும் ஆன்… இல்லை அத்தை…”என்றவளை ஒரு பார்வை பார்த்தவர் நார்மல்ன்னா…. என புரியாமல் கேட்க “நூடில்ஸ், தோசை ஹா அப்பளம் செய்ய கூட தெரியும்…” என்றவளை கண்டு தலையில் அடித்து கொண்டார் எப்பிடி அப்பளத்தை பொரிச்சு நூடில்ஸ்லே பிசைஞ்சு சாப்புடுவியா?…” என்றார் கடுப்போடு “ஒருத்தியா நீ சமாளிச்சிடுவ வீட்டுக்கு ஆளுங்க வந்தாளோ இல்ல இந்த குடும்பத்துக்கு எனக்கு ஏலாத நேரம் சமைச்சு போடுற நெலம வந்தா இதையா செஞ்சு போடுவ..” என்றவரிடம் தயக்கமாக,”சாரி அத்தை அது…. அது…. ரொம்ப நாளா நான் தனியே தான் இருப்பேன் கிடைக்கிறதை சாப்பிட்டு பழகிடுச்சு இப்போவும் வீட்டுலே இருக்கும் போது சமைச்சு வெச்சிருப்பாங்க சாப்பிடுவேன் நானா எதுவும் பண்ணிகிட்டது இல்லை தோசை கூட ஹாஸ்டலே சமைக்கிற அம்மா செய்றதை பார்த்து செஞ்சேன்…” என்றாள் மறைவின்றி ஏனோ தன் வீட்டார்கள் முன் அங்கிருந்த சமூதாயத்திற்கு முன் கோபம் திமிர் என முகமூடி அணிந்து நடமாடியவள் இன்று வந்த ஒரு நாள் ஒட்டுதலில் அவள் அவளாக இயல்போடு இருந்தாள் அதன் வெளிப்பாடே கோபமாக பேசும் மாமியாரிடமும் எந்த வித தயக்கமும் இன்றி மெலிதான புன்னகையோடு கூறினாள் அவளை புரியாத பார்வை பார்த்த பொன்னி அதற்கு மேல் எதையும் தோண்டி கேட்கவில்லை ஏனோ ஒரு வகையில் இவள் பாதிக்கபட்டிருக்கிறாள் என்பதை அவளின் பேச்சிலும் ஹாஸ்டல் பற்றி கூறுகையில் அந்த கண்ணில் காட்டிய சிறு வலியிலும் கண்டு கொண்டார்.”சரி சரி கூடமாட நான் வேலை செய்யும் போது ஒத்தாசையா நில்லு அப்பறம் நீயே கத்துக்குவே….” என்றவர்.”சரி இந்தா வந்து டீ போட்டு குடி…” என்று அவர் விலகி கொள்ள இஞ்சி நசுக்கி காய்த்த பாலில் டீ தூள் கலந்து வடித்து இரண்டு கப்யில் ஊற்றி எடுத்தவள் ஒன்றை அவரிடம் கொடுக்க அவரோ அதை ஒரு பார்வை பார்த்து விட்டு காய்களை நறுக்க தொடங்கினார்.”பயபுடாம குடிங்க நான் நல்லா தான் டீ போடுவேன்…” என்றவளின் கேலியில் அவளை முறைத்து பார்த்தவர் “வெச்சிட்டு போய் உன் மத்த வேலை கெடந்தா பாரு…” என்று அங்கிருந்து விரட்ட அவரை புன்னகையோடு நின்று பார்த்தவள் பின் தன்னறைக்குள்  புகுந்து கொண்டு முடியை உலர்த்தி  விரித்து விட அது அவளின் மார்பளவு வரை அழகாக வெட்டி விடபட்டிருந்தது சிறு க்ளிப்யில் கூந்தலை அடக்கி விட்டவள் இயற்கையாக ஒப்பனை இன்றி கலையாக இருந்த அந்த மதி முகத்தில் ஒற்றை கருப்பு பொட்டு ஒன்றை ஒட்டி கொண்டாள் இது போல் உடை இப்படி அலங்காரம் எல்லாம் பண்ணி கொள்ள ஆசைபடுவாள் ஆனால் அதுக்கான நேரம் இன்று தான் கிடைத்தது சிவந்திருந்த உதட்டினை குவித்து சூடான டீயை  ஊதிஉறிஞ்சியபடி தன் ஃபோனை எடுத்து ஆராய்ந்தவள் பத்மாவிற்கு அழைக்க அது ஸ்விட்ஸ் ஆப் என வர அதை தூக்கி ஓரமாக வைத்து விட்டு வெளியே வந்தவள் கூடத்திலே அமர்ந்து விட்டாள் ஏதோ ஒர் சிந்தனையில் அவள் கவலையாக இருப்பதை கண்ட பொன்னி.”இந்தா பிள்ளை இங்கன வா வெரசா வேலையை முடிக்கனும் ஆம்பளைங்க சாப்பிட வந்திடுவாங்க…” என்று பாத்திரம் கழுவ சொல்ல மற்றயதை ஓரம் தள்ளி விட்டு வேலையை கவனிக்க தொடங்கினாள்.மதியத்துக்கான உணவுகளை செய்து முடித்தவரின் அருகே ஆர்வமாக அவரிற்கு ஒத்தாசையாக நின்றுவேலை செய்து கொண்டிருந்தவள் “இனி என்ன அத்தை பண்ணனும்…” “எல்லாம் மூடி அங்கே மேசையிலே வை பசிச்சா போட்டு சாப்பிடு காலையிலே செஞ்ச இட்லியும் சட்னியும் அங்கனேஇருக்கு…” என ஒரு பாத்திரத்தை காட்டியவர்.”அப்பறம் உன் புருஷன் வந்தா சாப்பாடு எடுத்து பரிமாறு வூட்டுக்க பத்திரமா இரு..” என்று கூறியபடி தனது முகத்தை கழுவி வந்தவர் தனியாக எடுத்து வைத்த சாப்பாட்டை எடுத்து கொண்டு வெளியே செல்ல அதை கண்டவள்.”அத்தை நீங்க எங்க போறீங்க…””நான் இப்போ வேலைக்கு போற நேரம் அதான்…” என்றவர் தனது பையை தூக்கி கொண்டு நடக்க போகும் அவரை பார்த்தவளிற்கு அவரை பார்க்கவே கஷ்டமாக இருந்தது அவர் அவள் கண்ணில் இருந்து மறையும் வரை வாசலில் நின்று பார்த்து கொண்டிருந்தாள் கவிரத்னா.பத்மாவதி நாராயணன் இருவரும் கிளம்பியிருக்க அக்கா தங்கை இருவரும் ஹாலில் அமர்ந்து படு தீவிரமாக யோசித்து கொண்டிருந்தனர் “ஏன் அக்கா அந்த ராஷி கெட்டவ இருக்காளே அவ இங்கயிருந்து போகும் போது அண்ணிகிட்ட அப்பிடி நடந்துகிட்டா அது ஏன்?…” என்ற திவ்யாவின் கேள்வியில் ரேஷ்மாவும் குழம்பி தான் நின்றாள்.”அது தான்டி நானும் யோசிச்சுக்கிட்டு இருக்கேன் ஒருத்தங்க பாசமா அவள் கூட இருந்தா அவங்களுக்காக என்ன வேணா செய்றவ அதே சமயம் அவளை கண்டுக்காதவங்களை உதறி தள்ளிடுவா நம்ம அண்ணியும் அப்பிடி தானே அவகிட்ட நடப்பாங்க அவங்க நம்ம கட்சி அப்பிடி இருக்கிறப்போ எங்கயோ இடிக்குதுடி…” என்றவர்களின் பேச்சை அறையில் இருந்து கீழே வரும் போதும் கேட்ட நிலாவிற்கு பக்கென்று இருந்தது.”அய்யோ…… சும்மா இருக்கிற வாயிக்கு அவல் கிடைச்ச கதையால்ல இருக்கு கடவுளே என்னை இதுங்ககிட்ட இருந்து காப்பாத்து…” என்றவளிற்கு அதே சமயம் கவிரத்னாவின் நினைவும் வந்து செல்ல என்ன செய்கிறாளோ ஏது செய்கிறாளோ என்று மனது கிடந்து தவிக்க தொடங்கியது.கவிரத்னா பார்த்து கொண்டிருந்த அழகுசாதன பொருட்களை தயாரித்து சந்தைபடுத்தி கொண்டிருந்த கம்பனி கூட தற்போது தீபக் வசம் வந்திருக்க இரண்டின் வேலையும் தலை மேல் இருக்க ஆபிஸில் இருந்து அனைத்தையும் பார்த்து கொண்டிருந்த நேரம் கவிரத்னாவிடம் பிஏவாக வேலை செய்யும் அருண் தீபக்யிற்கு அழைக்க அதை எடுத்தவனிடம் “சார் நாளைக்கு கம்பனிலே அமெளன்ட் செக் பண்ணுற நாள் அதோட பாரின்க்கு திங்ஸ் எல்லாம் சேல் பண்ணுறத்துக்கான வேலை எல்லாம் முடிஞ்சு சைன் பண்ணுறது மட்டும் பாக்கி அதை பண்ணினா அவங்க கேட்ட டைம்க்கு அனுப்ப முடியும் நாளைக்கு மார்னிங் கம்பனிக்கு வந்திடுங்க சார்….”என்றவனிடம் சரி வரேன்… என்று அழைப்பை துண்டித்தவனுக்கு “ஏன் உனக்கிட்டயும் தானே கேட்டா அதுக்கு உன் பொண்டாட்டி கொடுத்தாளா?…” என்றதாயின் வார்த்தை அவன் காதில் வந்து விழ தன் மனைவி மேல் கோபம் வந்தது அவனுக்கு இந்த விடயம் புதிது வீட்டில் இருப்பவர்கள் அவளை வெறுத்தாலும் அவனோ மூன்று தங்கையும் ஒரே போல் தான் பார்ப்பான்ஆனால் தேவைக்கு அதிகமாக யாருடனும் அவ்வளவாக பேச மாட்டான் தந்தை என்றால் அவனிடம் ஒரு மரியாதை கலந்த அன்பு இருக்கஅவரின் பேச்சிற்கு மறுவார்த்தை பேசாதவன் இதையே அந்த இரண்டு தங்கைகளும் தங்களின் காரியத்தைசாதிப்பதற்காக பயன்படுத்தி கொள்வார்கள்.நிலாவிடம் இது பற்றி கேட்க வேண்டும் என்பதற்காக அன்று வீட்டிற்கு நேரத்தோடு வந்தவன் கண்டது ஒரு வேலையாள் அவர்களின் குடும்ப புகைபடத்தை துடைத்து கொண்டிருப்பதை எதார்த்தமாக கடந்து செல்ல முயன்றவன் என்ன நினைத்தானோ திரும்பி நின்று பார்த்தான் அதில் அன்னை தந்தை தங்கைமார் அவர்களின் கணவர் மற்றும் குழந்தைகள் இருக்க அத்தோடு அவர்களில் ஒருவராக அவன் நிலா அவனின் மகன் என அனைவரும் குடும்பமாக நின்று கொண்டிருக்க  அவள் மட்டும் அதில் இல்லைஎட்டு வயது வரை தான் அவனின் கடைசி தங்கை இந்த வீட்டில் இருந்தாள் அதன் பிறகு ஹாஸ்டல் போனவள் தான் 23 வயதில் தான் மீண்டும் வீட்டிற்கு வந்தாள் தற்போது ஒரு வருடமே பிறந்த வீட்டில் இருந்தாள் ஏன் இந்த போட்டோ எடுக்கும் போது கூட வீட்டில் தான் இருந்தாள் ஆனால் ஏன் போட்டோவிற்கு நிற்கவில்லை என்று இப்போது தான் யோசிக்கிறான் பிசினஸ் பிசினஸ் என்று அதனைசுற்றி கொண்டிருப்பவனுக்கு எங்கு வீட்டில் நடப்பது தெரிய போகிறதுஅறைக்குள் வந்தவனின் பின் வந்த நிலா “என்னாச்சு இன்னைக்கு அதிசயமா? இப்போ வீட்டுக்கு வந்திருக்கீங்க…..””ஏன்? அதுலே உனக்கு என்ன பிரச்சினை போய் வேலையை பாரு எனக்கு பைல் பார்க்க வேண்டிருக்கு…” என டென்சனாக கத்தியவனை கோபமாக பார்த்தவள்.”அதானே பார்த்தேன் என்னடா அதிசயமா பட்ட பகலுலே வீட்டுக்கு எல்லாம் வராரு எப்பவும் கம்பனியே தானே கட்டிக்கிட்டு இருப்பாருன்னு போங்க போய் அந்த பைல்யே கட்டிக்கிட்டு குடும்பம் நடத்துங்க நீங்க எனக்கு புருஷனா இருக்கிறதும் சரி நான் வாழா வெட்டியா எங்கப்பன் வீட்டுக்கு போய் இருக்கிறதும் சரி…” என்று இதுவரைக்கும் இதை எல்லாம் அமைதியாக கடந்து வந்தவளிற்கு பல சிந்தனையில் இருந்தவள் பொறுக்க முடியாமல் கத்தி விட்டாள்.ஏய்… என பற்களை கடித்து கொண்டு அடிக்க பாய்ந்தவனை கண்டு பயத்தோடு கையை கொண்டு முகத்தை மூடி கொண்டவளிற்கு மேனி நடுங்க தன் நெற்றியை நீவி விட்டவன் “எதுக்குடி இப்பிடி பேசுற உனக்கு என்னடி குறை வெச்சேன் பணத்துலயா? சாப்பாட்டிலயா? இல்லை நகை ட்ரெஸ்ன்னு இது எதுலயா? உனக்கு பிடிச்ச மாதிரி தானே வாங்கி கொடுக்கிறேன்…‌ இவ்வளோ பண்ணியும் உன் பேராசை அடங்கலயா?இதுக்கு முன்னாடி இரண்டு வேளை சாப்பாடும் ஓட்டு வீடும் போட்டுக்க ட்ரெஸ் இல்லாம கிழிஞ்சதையே தெச்சு போட்டுக்கிட்டு வாழ்ந்தது எல்லாம் மறந்து போச்சா என் தங்கச்சி பணம் கேட்டிருக்கா அதுக்கு நீ குடுக்காம இல்லன்னு சொல்லிருக்க அது இப்போ வரைக்கும் எனக்கு தெரியாம வேற பார்த்திக்கிட்டலே ச்சே நீ இப்பிடி இருப்பேன்னு நினைக்கவே இல்லடி….” என்று பேசி கொண்டு போனவனின் பேச்சில் கடுப்பாகி ஆஆஆ……. என கத்தியவள் ஆத்திரம் தலைக்கேற விட்டால் ஒரு அறை அவன் கன்னத்தில் தீப்பொறி பறப்பதற்கு சாந்தமான நிலா இன்று சந்திரமுகியா மாறினாள்.

3 thoughts on “05.காரிகை”

  1. Kalidevi

    Oru veetuku moothavan ipo than ithellam yosikura una kattitu vanthava kuda un kida poranthavaluku etho nallathu pani iruka athu enanu kekama nee ena ena Kora vacha nu pesura ella vangi kodutha pothuma pesu nila nee ithula tha theriyanum avan eppadi irunthu irukanu

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *