Skip to content
Home » 04.காரிகை

04.காரிகை

“இதுதான் அம்மா அங்க நடந்தது அவங்க அப்பிடி கேட்டதும் என்னாலே வேற வழியில்லாம செஞ்சிட்டேன் நான் கல்யாணம் பண்ணி கிட்டாலும் என்னோட கடமையே தவறாம செய்வேன் நம்பும்மா…” என்றவனின் பார்வை தங்கை இருவரையும் தொட்டு மீண்டது விக்ராந்த்யின் இளகிய மனதை அறிந்த பெற்றவள் “உன்னை நம்பாமே வேற யாரப்பா நம்ப போறேன் பெத்தவன் காசிலே ஊரை சுத்திக்கிட்டு எனக்கு என்னனு திரியிறே பசங்க முன்னாடி நீ எங்களுக்கு அந்த சாமி குடுத்த வரம்ய்யா…” என்றவர் கலங்கிய கண்களை துடைத்து அவன் நெற்றியில் முத்தமிட்டார்.

“சரிய்யா இந்த பேச்சை இவடத்தை விடு இனி நடக்க போறதை பார்க்கலாம்..” என்றவர் மற்றவர்கள் புறம் திரும்பி “நேரமாகுது போய் படுங்க…” என்றதும் அக்கா தங்கை இருவரும் எதோ பேச்சு வார்த்தையில் மற்றையது மறந்து தங்களது அறைக்குள் சென்று கதவை சாற்றி கொண்டனர். அங்கு கால்களை மடக்கி சுவற்றில் சாய்ந்தபடி அமர்ந்திருந்தவளை கண்ட பொன்னி அவளை ஒரு பார்வை பார்த்து விட்டு ஹாலில் பாயை விரித்து இரண்டு தலைகாணி, பெட்சீட் என போட்டு அதில் உறங்க போக அதை கண்ட விக்ராந்த்

.”அம்மா நீங்க போய் உள்ள படுங்க இரண்டு பேரும் ரா பகலா வேலை பாக்குறீங்க வயசுக்கு ஏற்ற நோயும் வரதுன்னு உங்க ரெண்டு பேருக்கு மெட்ரஸ் வாங்கி கொடுத்திருக்கேன் அதுலே படுக்காம கீழே பாய் போட்டு படுக்க போறீங்க…” என்றவனையும் ரத்னாவையும் மாறி மாறி பார்க்க அதை புரிந்து கொண்டவன் “நீங்க போய் படுங்கம்மா அவங்க என் ரூம்லே தூங்கட்டும் நான் இங்கே படுத்துக்கிறேன்…” என்றவனிடம் தலையசைத்து விட்டு நகரந்து விட ஒரு பெருமூச்சை எடுத்து விட்டவன் ரத்னா அருகே போய் நின்றான் “மேடம்….. உள்ள வாங்க குளிர் காத்து வேற வீசுது…” என்றவனை நிமிர்ந்து பார்த்தவள் “எனக்கு தூக்கம் வரல மிஸ்டர் நீங்க போய் தூங்குங்க நான் கொஞ்ச நேரம் இருந்துட்டு வரேன்…” என்றவள் இரவில் மின்னிய வெண்ணிலவை பார்த்தபடி அமர்ந்திருந்தாள்.அவளருகே சற்று இடைவெளி விட்டு அமர்ந்தவன் “உங்களுக்கு இங்க இருக்க சங்கடமா இருக்கா மேடம்…” என்றவனை பார்க்காமலே கண்களை மூடி தான் இருந்த வீட்டையும் தன் புகுந்த வீட்டையும் நினைத்து பார்த்தாள் இந்த வீடும் ஆட்களும் சொர்க்கமாக தோன்றியது அவளிற்கு மெலிதான புன்னகையுடனே மறுப்பாக தலையசைத்தவள் “என்னை வெளியே இருந்து பார்த்தா உங்களுக்கு ஒரு கம்பனியோட எம்டி பணக்கார பொண்ணுன்னு தான் தெரியும் ஆனா நான் MDயா இருந்து எங்கப்பாகிட்ட சம்பளம் வாங்கிட்டு வேலை செய்றேன் அவ்வளோ தான்.. ” என்றவளை அவன் புரியாத பார்வை பார்த்தவன் எதையோ நினைத்து கேட்க வாய் எடுக்க அதை திசை திருப்பும் பொருட்டு நீங்க தூங்கலயா? என்றவளிடம் மறுப்பாக தலையசைத்தவன் “ரொம்ப நேரம் வெளியே இருக்காதீங்க வாங்க உள்ள போலாம்…” என்று அவளை அழைக்க இதற்கு மேலும் மறுக்க பிடிக்காமல் அவனோடு வீட்டுக்குள் செல்ல ஒரு அறையை காட்டி அதற்குள் நுழைந்தான் அந்த வீட்டின் ஒரு சிறிய அறை அது அவனுடையதாக இருந்தது எப்போதாவது வீட்டிற்கு வருபவனிற்கு இந்த அறையை அவ்வொருத்தனிற்கு போதுமானதாக இருந்தது.

அந்த அறையில் கதவுக்கு பின் சுவரில் உடை மாட்டி வைப்பதற்கான ரேக் ஒன்று அதில் அவனுடைய இரண்டு உடைகள் அவ்வறையின் மூலையில் ஒரு சிறிய கபோர்ட் அதனோடு ஒரு நாற்காலி மேஜை போடபட்டு சில பைல்கள் இருந்தது  இவ்வளவு தான் அவனறையில் இருப்பவை அவள் அந்த அறையை பார்த்து கொண்டிருக்கும் போது அவனுடைய பாயை விரித்து அதில் ஒரு பெட்சீட்யை விரித்து தலைகாணியை வைத்தவன் போர்த்தி கொள்ள ஒரு போர்வையை கொடுத்து விட்டு அங்கிருந்து நகர்ந்து தங்கையின் அறைக்கு வெளியே மேசையில் இருந்த அவளது பெட்டியை எடுத்து வந்து அந்த அறையில் வைத்தவன் “நான் வெளியே தான் இருப்பேன் மேடம் எதுன்னாலும் கூப்பிடுங்க…” என்றுவெளியே வந்து ஹாலில் ஓரமாக இருந்த பாயில் படுத்தவனுக்கு அடுத்து என்ன? செய்வது என்ற யோசனை வந்து மண்டையை திண்ண தொடங்கியது வெகுநேரம் அது இது என யோசித்தவன் கடைசியில் ஒரு முடிவிற்கு வந்தவனாய் உறங்க தொடங்கினான்.

பாயில் படுத்து அங்கு இங்கு என்று புரள தொடங்க அதில் பாயில் உள்ள பன் வேறு அவளின் மேல் குத்த நெளிந்து கொண்டு எழுந்து அமர்ந்தாள் பழக்கபட்டவர்களுக்கு அது ஒரு சுகமான பஞ்சு மெத்தை ஆனால் இவளிற்கு அது  எல்லாம் புதிது என்பதால் உறங்க கூட கஷ்டமாக இருந்தது அப் படுக்கையை விட்டு சீமெந்து தரையில் அமர்ந்தவள் அடுத்து என்ன? செய்யலாம் என்ற யோசனையில் இருந்தாள் உழைத்து சாப்பிட்டவளுக்கு இங்கு என்ன செய்வது என்பது திகைப்பாக இருக்க அதே சமயம் உழைக்காமல் சும்மா  இருக்கவும் முடியவில்லை சேவலின் அலாரத்தில் நேரத்தை பார்த்தாள் 3.30…. என பல்லை காட்ட கண்கள் சொருகி அவள் விழிகள் தூக்கத்திற்கு கெஞ்ச அப்படியே வெறுந்தரையில் உறங்கி போனாள்.எப்போதும் போல் அதிகாலையிலே எழுந்து பழகிய பொன்னி கொண்டையை அள்ளி முடிந்து வெளியே வர மகன் அங்கு உறங்கி கொண்டிருப்பதை கண்டவர் மெதுவாக தன் வேலைகளை தொடங்கினார் ஒவ்வொருவராக எழுந்து வர அக்சிதா முற்றத்தை ஒதுக்கி கோலம் போட அவளை கண்ட பக்கத்து வீட்டு பெண் “ஏய் புள்ள என்ன உங்க அண்ணன் பட்டனத்துலே அவன் வேலை பார்த்த இடத்திலே இருந்து ஒரு பொண்ணை கல்யாணம் கட்டி கூட்டி வந்திருக்கானாமே நெசமா?…” என காலங்காத்தாலே அடுத்தவன் வீட்டில் நடப்பதை அறிந்து கொள்ள அவ்வளவு ஆர்வத்தில் முகம் கூட கழுவாமல் வந்து நின்று கேட்டவரை கண்டு பற்களை கடித்த அக்சிதா அதை அவரிடம் காட்டாமல்,”ஆமா சித்தி அவங்க எங்க அண்ணி தான் அண்ணனை விருப்பட்டு கல்யாணம் கட்டி வந்திருக்காங்க…” என்றவள் “ஆமா உங்க பொண்ணு ஏதோ ஒரு மாற்று மதத்து பையனை கல்யாணம் பண்ணிட்டு புள்ளயை வாங்கிட்டு வந்து நின்னாங்கன்னு பஞ்சாயத்து கூட்டிட்டாங்களாமே அது என்ன சங்கதி…” என வேண்டும் என்ற பேச்சை எடுத்தவளை கண்டவரின் முகம் சுருங்கி போய் விட அவளை சமாளிப்பதற்காக “அது… அ…து இருத்தா வரேன் பாலை அடுப்புலே வெச்சிட்டு வந்திட்டேன் அதை போய் பார்த்திட்டு வரேன்…” என்று போலியாக இளித்து வைத்து போனவரை கண்டு பெருமூச்சு ஒன்றை வெளியிட்டவள்.

“அடுத்தவன் வூட்டு பிரச்சினையை தெரிஞ்சு கூடி கதைக்கிறதுன்னா இதுங்களுக்கு அடுப்புலே பால் என்ன பாம் வெச்சாலும் தெரியாது வந்திட்டாளுங்க அவன் அவன் வீட்டுக்குள்ள நாரி போய் கெடக்குது இதுலே அடுத்தவன் குப்பையை தோண்ட…” என தன் பங்கிற்கு திட்டி தீர்த்து விட்டு வீட்டுக்குள் வர இவளின் பேச்சை கேட்டு எழுந்த விக்ராந்த் எதுவும் பேசாமல் அமைதியாகி விட்டான் இப்பிடி பேசுவதற்கு என்ற ஒரு கூட்டம் சுற்றும் அவர்களுக்கு எல்லாம் விம் போட்டு விளக்கி சொன்னாலும் அப்போதும் எதையாவது திரித்து கூறி அவர்களாக ஒரு கதையை கட்டி விடுவார்கள் இதை எல்லாம் அறிந்தவன் ஊராரிடம் மிச்சம் பேச்சு வைத்து கொள்ள மாட்டான் விரைப்பாகவே நிற்பான் அவர்களும் அவனை அமைதியாக கடந்து விடுவார்கள் ஒரு வாரத்திற்கு ஒவ்வொருத்தர் வீட்டிலும் இந்த டாபிக் ஓடுவதோடு வெளியில் போய் வரும் போது குறு குறு பார்வைகளும் தொடரும் என்பதும் நன்றாக அறிந்த ஒரு விடயம் தான் இதை எல்லாம் கடந்து வந்து தானே ஆக வேண்டும்.

ஒவ்வொரும் தங்கள் பணிக்கு செல்ல தயாராகி கூடத்திற்கு வந்தாலும் இன்னும் கவிரத்னா எழுந்தபாடில்லை அவளை தூக்கம் விட்டபாடும் இல்லை அதை எல்லாம் கவனித்த பொன்னிக்கு கொஞ்சம் கோபமும் எட்டி பார்த்தது அது அவர் குணம் கிடையாது காலம் காலமாக கிராமங்களில் பெண்கள் ஒரு குடும்பத்தில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என அறிந்து தெரிந்து பழக்கபட்டவருக்கு அதை தன் வீட்டுக்கு வந்தவளிடம் எதிர்பார்த்தார் இது குடும்பத்தில் சகஜமான விடயமேஅந்த அறைக்குள் இருக்கும் பைக் சாவியை எடுக்க செல்ல வேண்டும் ஆனால் எப்பிடி எடுப்பது என தலையை தட்டி குறுக்கும் நெடுக்கும் நடந்து கொண்டிருந்தான் அது அவனின் அறையாக இருந்தாலும் இப்போது ரத்னா உறங்கி கொண்டிருக்க சட்டென நுழைய புலங்க தயக்கம் வந்து ஒட்டி கொண்டது.அவனருகே தன் பின்னலை சரி செய்தவாறு ஸ்கூல் யூனிபோர்ம்யுடன் வந்து நின்ற அகல்யா அவன் தோளை சுரண்டினாள் அண்ணே….. என்ற அழைப்போடு அவள் பக்கம் பார்வையை திருப்பியவனிடம் “டைம் ஆச்சுண்ணே கூட்டி போய் விடு…” என்று சினுங்கியவளிடம் “குட்டிமா அது சாவி அண்ணா ரூம்லடா அதை எடுக்கனும்..” என்றவனை புரியாமல் பார்த்தவள் “அதுக்கு எதுக்குண்ணே இங்கன நிக்கிற போய் எடுக்க வேண்டியது தானே இப்பிடியே நின்னா சாவி வந்திடுமா வர வர உனக்கு என்னமோ ஆகுது…” என்று அவசரமாக கதவை தள்ளி கொண்டு அறைக்குள் ஓட அவனின் ஹேய்….. என்ற பதட்டமான குரல் அப்படியே நின்றது அங்கு படுத்திருந்தவளை கண்டு உடலை குறுக்கி வெறுந்தரையில் படுத்து கொண்டிருந்தவளை கண்டு மனம் ஏனோ சொல்ல முடியா தவிப்பில் மருக அவளிடம் அசைவு ஏற்பட அங்கிருந்து முற்றத்திற்கு வந்து நின்று கொண்டான்.

லேசாக கண்களை திறந்தாள் அறையில் யாரோ நடமாடுவதை உணர்ந்து அவள் விழித்து விட்டதை கண்ட அகல்யா “குட்மார்னிங் அண்ணி…..” என அழகாய் சிரிக்க அவளின் புன்னகை முகம் ஒரு உற்சாகத்தை கொடுத்தது “குட் மார்னிங் அகல்மா ஸ்கூல் கிளம்பிட்டியா?…” என்றவள் தன்னை சரி செய்து கொண்டபடியே எழுந்து நின்றாள்.”ஆமா அண்ணி  பைக் சாவி எடுக்க வந்தேன் சரி அண்ணி லேட்டாகிடுச்சு நான் போயிட்டு வரேன்…” என்றவள் கையசைத்து வெளியில் ஓட உதட்டில் மறையாத புன்னகையுடன் அனைத்தையும் எடுத்து வைத்து விட்டு குளியளறைக்கு சென்று விடஅதற்கிடையில் அக்சிதா ரெடியாகி வெளியில் வந்தவள் அங்கு தன் அண்ணன் தங்கை இருவரும் கிளம்பி நிற்பதை கண்டவள் “அண்ணா நில்லு….. ” என ஓடி வந்தாள் பையுடன் என்ன? பாப்பா என புரியாமல் பார்த்தவனிடம் “என்னை பஸ் ஸ்டாப்லே இறக்கி விட்டிடுண்ணா அப்பாக்கு இன்னைக்கு வேலையிருக்காம்…” என்றவளிடம் தலையசைக்க ஓடி வந்து தங்கையின் பின் அமர்ந்து கொள்ள பைக்யை எடுத்தவன்

.”பாப்பா நல்லா படி அத்தை மாமா பத்தி எதுவும் போட்டு குழப்பிக்காதே…” என்றவனிடம் “இனிமே அதை பத்தி யோசிக்க போறதில்லைண்ணா நேத்து எனக்குள்ள ஒரு முடிவு எடுத்துட்டேன்…” என தீர்க்கமாக சொன்னவளை கண்ணாடி வழியாக பார்த்தவனுக்கு நிம்மதி பெருமூச்சு ஒன்று வெளியாகியது பத்திரமா போ என்று இறக்கி விட்டு அதன் எதிர்திசையில் பைக்யை விட்டான் ஸ்கூல் ஊரிலே இருப்பதனால் பிரச்சினையில்லை சைக்கிளில் தான் அகல்யா சென்று வருவாள் காலேஜ் செல்ல வேண்டும் என்றால் அடுத்த ஊருக்கு செல்ல வேண்டும் காலையில் எப்போதும் காத்தவராயன் கொண்டு வந்து பஸ் தரிப்பிடத்தில் விட்டு விட்டு சென்று விடுவார் ஆனால் இவன் வீட்டுக்கு வந்தால் சைக்கிளில் செல்பவளுக்கு கால் வலி, கை வலி என்று இல்லாத வலி எல்லாம் வந்து அண்ணனோடு பைக்கில் ஸ்கூல் போக தான் ஆசைபடுவாள் அதை அறிந்த விக்ராந்த்யும் அவள் ஆசையை நிறைவேற்றி விடுவான்.குளித்து முடித்து வந்தவள் அடுத்து என்ன செய்வது என தெரியாமல் முழித்து கொண்டு நிற்க “இந்தா புள்ள இங்கவா…” என அதட்டலோடு அழைத்த பொன்னியின் கண்களில் கோபத்தை கண்டு புரியாமல் திகைத்து நின்று கொண்டிருந்தாள் கவிரத்னா.

2 thoughts on “04.காரிகை”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *