யாருமே இல்லாத அந்த வீட்டில் இருக்க வெறுமை வந்து சூழ்ந்து கொண்டதுதனிமையும் வெறுமையும் அவளிற்கு புதிது அல்ல ஆனால் இன்று அதை ஏற்றுகொள்ள தான் பிடிக்கவில்லை வயிறு தன் இருப்பை காட்டியும் அவள் இருந்த இடத்தை விட்டு எழுந்து கொள்வதாக இல்லை “கைவசம் ஒரு கடை இருக்கும் போது எதுக்காக அத்தை வேலைக்கு போறாங்க இதுலவிக்ராந்த் வேற சம்பாதிச்சாரு அதுலயும் பணம் சேர்ந்திருக்குமே அதை வெச்சு குடும்பத்தை கொண்டு போக முடியாதா? அப்பிடி எதற்கு பணத்தை புரட்ட ஒவ்வொரு திசையில் ஒவ்வொருவர் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள்….” என்று யோசித்து கொண்டிருந்தவளை களைத்தது விக்ராந்த்யின் பைக் ஹாரன் சத்தம் அவசரமாக ஓடி சென்று கதவை திறந்தவள் கண்டது வேட்டியின் நுனியை ஒரு கையால் தூக்கி பிடித்து கொண்டு சர்ட் கையை மடித்து விட்டு கம்பீரமாக வந்தவனை தான் ஒரு ஆணை கூட நிமிர்ந்து ரசனையுடன் பார்க்கிறாள் என்றால் அது அவளின் கண்ணாளன் மட்டுமே அதுவே சொல்ல முடியாத உணர்வுகளை நிகழ்த்தி கொண்டிருந்தது பெண்ணவளின் மனதினுள் எடுப்பான தோற்றம் திமிறி கொண்டிருக்கும் புஜம் கூர்மையான விழிகள் தடித்த இதழ்களை மறைத்த திருத்தி செதுக்கிய மீசை தாடி என கிரேக்க சிலை போல் இருந்தவனை கண்ணெடுக்காமல் பார்த்தவளின் பார்வை அவனை தொட்டதோ நிமிர்ந்து அவளை பார்த்தவன் “எதுக்காக மேடம் இங்கன நிக்குறீங்க அம்மா எங்க??..”என கேட்டபடி வீட்டிற்குள் நுழைய அவன் பின்னால் வந்தவள் “அத்தை வேலைக்கு போறேன்னு போனாங்க விக்ராந்த்…” என்றவள் சொன்னதை கேட்டு முகம் தொங்கி போனது அதை கவனித்தவள் ஏனோ அவன் முகபாவனை கண்டு பொறுக்க முடியாமல் அதை மாற்றும் விதமாக அவனருகிலே அமர்ந்தவள்.”விக்ராந்த் எதுக்காக வேலையை ரிசைன் பண்ணீங்க பழையபடி வேலைக்கு போயிருந்ததா அத்தை இப்படி வேலைக்கு போய்யிருக்க மாட்டாங்களே…” என்றவளிடம் ஒரு பெருமூச்சு விடுத்து “ஏங்க என்னயே என்ன குட்ட குட்ட குனியிறவன்னு நினைச்சீங்களா? எனக்குன்னு ஒரு ஆசை இருந்தது சொந்தமா தொழில் தொடங்கி அதை ரன் பண்ணனும்னு ஆனா எனக்கு அதை செய்றதுக்கு சூழ்நிலை தான் அமையலேஎன்ன சொன்னாலும் செய்றவன் நான் கிடையாது முதலாளின்னா அவனுக்கு அடிமையா இருக்க எனக்கு பிடிக்காது நான், என் வேலை அவ்ளோ தான் அதை மீறி என் மேல தப்பு இருந்தா மட்டும் நான் தலை குனிஞ்சு நிப்பனே ஒழிய நீ என்கிட்ட வேலை செய்றவன் நீ தகுதிலே குறைஞ்சவன்னு என்னை தட்டி வைக்க பார்த்தா நான் எதுக்கு குனியனும் உங்க அம்மா முன்னாடி நான் வேற நீங்க வேறன்னு பேசினது கூட ராணி மாதிரி வாழ்ந்த உங்களை இப்பிடி ஒரு வீட்டுலே வாழ வைக்க முடியாதுன்னு தான் அதோட எனக்கு அப்பறம் ரெண்டு பொண்ணுங்க இருக்காங்க அவங்களுக்கு நகைன்னு சேர்த்த எல்லாம் கூட கடனை அடைக்க வித்தாச்சு அவங்களுக்கு எல்லாம் சேர்த்து கட்டி வைக்கனும் இதுலே வீட்டை சுத்தி கடன் வேற இதுலே எனக்கான ஒரு வாழ்க்கையை நினைத்தா பார்க்க முடியும் அதான் அப்பிடி அங்க சொன்னேன் உங்க அப்பாபேசினது உங்க வீட்டாளுங்களோட ஏளன பார்வை இது எல்லாம் என்னை அங்க வேலை பார்க்க விடலே அதான் கிளம்பி வந்திட்டேன்…” என்றவனுக்கு கோபத்தில் தாடை இறுகியது “அம்மா இதுக்கு முன்னாடியும் வேலைக்கு போனாங்க அதையும் பார்க்க பிடிக்காம தாங்க உங்க கம்பனிக்கு வேலைக்கு வந்தது ஆனா அந்த கம்பனி சொந்தகாரங்க கடைசியிலே இப்பிடி நடந்துப்பானுங்கன்னு நினைச்சு கூட பார்க்கலே…” என்றவனின் பார்வை அவளின் கழுத்தில் இருந்த தாலியை தொட்டு மீண்டது.அவனின் பேச்சை கேட்டவளிற்கு வியப்பாக இருந்தது குடும்பத்திற்காக தன் கனவை அடமானம் வைத்து அவனுக்கு என்று எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் வாழ்கிறானே என்று இவன் எங்கு தன் அண்ணன் எங்கு என தோன்றாமலும் இல்லை “சரி அதையும் தான்னா அப்போ இன்னொரு காரணம் இருக்குதா?…..” என்றவனின் குடும்பம் பற்றி தானும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக பேச்சை வளர்த்தாள்.”ம்ம்….. அப்பாவோட கூட பிறந்த தங்கச்சி அவங்கே அன்னைக்கு வந்தாங்களே அவங்களோட பிரச்சினையே பார்க்க போய் இந்த நிலமையிலே இருக்கோம் ஆனா அவங்களுக்கு அது பத்தி எந்த கவலையும் இல்லை மாமன் சீர்வரிசைன்னு அப்பா ரொம்ப செய்யனும்னு எதிர்பார்ப்பாரு பாண்டி மாமா அதுக்காக அந்த வாய் இல்லா பூச்சியை போட்டு மிரட்டி அப்பாகிட்ட பணம் கேட்டு அனுப்புவாரு அப்பாக்கு அவங்களோட கண்ணீரை கண்டா மனசு தாங்காது தன்கிட்ட இருக்கிறது போதாதுன்னு கடன் வாங்கிதகுதிக்கு மீறி செய்வாரு இது நாளாக நாளாக போலீஸ் கேஸ்ன்னு வந்து நின்னது மாமா பணம் கட்டி சூதாட்டம் ஆடுவாரு அதுலே வட்டிக்கு பணம் எடுத்து கடைசியா அது வட்டிக்கு வட்டி ஏறி கடன் குடுத்தவங்க எல்லாம் போலீஸ்லே கம்பிளைன்ட் பண்ணி அது பெரிய பிரச்சினை ஆகிட்டு அத்தை அழுது அப்பாகிட்ட ஏதாவது பண்ண சொல்லி கெஞ்ச தொடங்கிட்டாங்க அதனாலே தான் அப்பா வீடு நிலம்ன்னு எல்லாம் அடமானம் வெச்சு பிரச்சினையை முடிச்சாங்க ஆனா இப்போ நாங்க மூணு வேளை சாப்பிடுறமோ இல்லையோ கடனை தான் அடைக்கிறோம் நான் வேலைக்கு போனதும் அம்மா வேலைக்கு போகாம வீட்டோட இருந்தாங்க அம்மா மட்டுமில்ல அக்சு பாப்பாவும் டுவிஸன் வெக்கிறா இதை எல்லாம் யோசிச்சா எனக்கு அடுத்து என்ன பண்ணுறதுன்னு கூட தெரியலே என்றவன் நெற்றியை பிடித்து கொண்டான்.அவர்கள் நிலையை அறிந்தவளுக்கு மலைப்பாக இருந்தது ஒரு தங்கை பாசத்திற்காக மொத்த குடும்பமும் இணைந்து அதை தீர்ப்பது எந்த விதத்தில் நியாயம் இதில் கொஞ்சம் குற்ற உணர்ச்சியே இல்லாமல் அன்னைக்கு பேசிய பேச்சு என்ன அதை நினைக்க நினைக்க அவளிற்கு ஆத்திரமாக வந்தது தாலியை இறக்கி வைக்கனுமாமே என உள்ளுக்குள் எரிமலையாக குமுறியவள் எல்லாம் சரியாகிடும் விக்ராந்த் என்று ஆறுதல் சொன்னவள் வாங்க சாப்பிடலாம் என அழைக்க வேண்டாங்க நீங்க சாப்பிட்டீங்களா? என்றவனிடம் மறுப்பாக தலையசைக்க “என்னங்க நீங்க இவளோ நேரம் சாப்பிடாமே வாங்க…” என்று கிட்சனுக்குள் நுழைய “ஹலோ ஹலோ மிஸ்டர் நீங்க எங்க போறீங்க…” என கேட்டவளிடம் “சாப்பாடு எடுத்து கொடுக்கங்க ஏன் என்னாச்சு?..” அவளின் பதட்டத்தில் குழப்பமாக கேட்டான்.”அய்யோ அத்தை இன்னைக்கு ட்ரெயினிங் கொடுத்திட்டு போயிருக்காங்க அதை நான் செய்யலே மாமியார் கொடுமை பண்ண ஆரம்பிச்சிடுவாங்க… என புன்னகையோடு சொன்னவள் நீங்க கையை கழுவிட்டு வாங்க நான் சாப்பாடு எடுத்து வைக்கிறேன்…” என்றவள் சொல்லியதோடு மட்டும் இல்லாமல் சாப்பாடு எடுத்து வைத்து தட்டு போட்டு தட்டு தடுமாறி பரிமாறினாள் அதை கண்டவன் “மேடம் அதான் வர மாட்டேங்குதுல அப்பறம் எதுக்கு சிரமபடுறீங்க அய்யோ கறிகுழம்பு இவளோ எல்லாம் ஊத்த கூடாதுங்க…” என்று அவனும் லேசாக சிரித்தபடியே அளவாக எடுத்து காட்டி போட்டு சாப்பிட அதை பார்த்தவள் “சாரி இனி கரெக்ட்டா பண்ணிடுறேன்…” என்றவள் அவனோடு அமர்ந்து சாப்பிட தொடங்கினாள் அதை கண்டவன் “எங்கம்மா ஏதாச்சும் சொன்னாங்களா?என்று சாப்பிட படியே கேட்க நடந்ததை கூற அதை கேட்டவன் “சாரிங்க அம்மா இங்கே பிறந்து வளர்ந்தவங்க அதனாலே இந்த சம்பிரதாயம் பண்பாடுன்னு எதாச்சும் சொல்லுவாங்க கோபபடாதீங்க நீங்க இங்க உங்க இஷ்டபடி இருங்க போதும்…” என்றவனிடம்.”அடே நீங்க வேற விக்ராந்த் எங்கம்மா கூட சிட்டி ஆளு படிச்சவங்க கூட அவங்க எல்லாரோடயும் பாசமா தான் இருப்பாங்க ஏன் எங்கண்ணி கூட கிராமத்துலே இருந்து வந்தவங்க அவங்க ரொம்ப நல்லா எல்லா வேலையும் செய்வாங்க அப்போ கூட எங்கம்மா அவங்களே குறை சொல்லிட்டு தான் இருப்பாங்க ஐ திங்க் மாமியார் போஸ்டிங் வந்தா எல்லாரும் இப்பிடி தான் இருப்பாங்க போல… ஆனா ஒன்னு சொல்லவா….” என ரகசியமாக பேசியவளை கண்டு எதோ முக்கியமானது என உணர்ந்து அவளை கூர்ந்து பார்த்தபடி என்ன? என்பது போல் பார்த்தவனிடம் “என் வாழ்க்கையே ஏனோ தானோன்னு தான் நான் வாழ ஆரம்பிச்சேன் ஆனா இப்போ ரொம்ப ரசிச்சு வாழுறேன் தெரியுமா?…” என்றவள் கண் சிமிட்டியபடி உணவை பிசைந்து ரசித்து உண்ண தொடங்க அதை பார்த்தவனின் கண்கள் அவளை வியப்பாக அளந்தது.”மேடம்…. உங்களே அங்க கம்பனிலே பார்க்கிறத்துக்கும் இங்க பாக்குறத்துக்கு ரொம்ப டிப்ரெண்டா இருக்கீங்க…” என்று மனதில் தோன்றியதை மறைக்காமல் கூற “ஓஹோ ரியலி அப்போ என்னை எனக்கு தெரியாம சைட் அடிச்சிருக்கீங்க…” என லேசாக முறைத்தாள் அதை கேட்டு அவனுக்கு புரையேறி இருமலோடு மறுப்பாக தலையசைக்க தண்ணீர் டம்ளரை அவன் பக்கமாக தள்ளி வைக்க அதை எடுத்து குடித்து தன்னை சமன்படுத்தி கொண்டவனிடம் “சரி சரி ரிலேக்ஸ் சும்மா தான் கேட்டேன் அதான் சொன்னனே மிஸ்டர் என் லைப்யே இப்போ தான் ரசிச்சு வாழுறேன்னு இது ரியல் அங்க இருக்கிறது போலி அவ்ளோ தான் சிம்பிள்…” என்றவள் சாப்பிட்டு முடித்து எழும்ப அவளையே வைத்த கண் வாங்காமல் பார்த்து கொண்டிருந்தான் விக்ராந்த்.தன் கன்னத்தில் கை வைத்து தன் மனையாளை அதிர்ந்து பார்த்து கொண்டிருந்த தீபக்யை இன்று என்ன நடந்தாலும் விடுவதாக இல்லை நிலா “நீங்க சொன்னதுல தான் அன்பு, சந்தோஷம், காதல் இது எல்லாம் இருக்கா? எனக்குன்னு எதிர்பாக்கிறது அது மட்டும் தான் நீங்க சொன்னீங்களே ஓட்டு வீடு இரண்டு வேளை சாப்பாடு கிழிஞ்ச ட்ரெஸ்ன்னு அது கொடுத்த சந்தோஷம் இங்க எனக்கு துளிகூட கிடைக்கலே அது தெரியுமா உங்களுக்கு…. என கண்ணீரோடு கத்தியவள் அது சரி அது உங்களுக்கு எப்பிடி தெரிய போகுது பணம் பிஸ்னஸ் மத்தது அப்பா இது இருந்தா மத்த எதுவும் உங்களுக்கு ஒரு பொருட்டே இல்லையே நீங்க பாட்டுக்கு ஆபிஸ் கிளம்பிடுவீங்க இந்த வீட்டுக்குள்ள என்ன நடக்குதுன்னு உங்களுக்கு தெரியுமா? இதுலே பெருமையா சொல்லிக்க வேண்டியது இந்த வீட்டுக்கு மூத்தவன்னு ச்சே அப்பறம் என்ன கேட்டீங்க பணம் ஏன் என் தங்கச்சிக்கு பணம் கொடுக்கலேன்னா ஓஓ இப்போ தான் ஐயாக்கு தெரியிதாக்கும் அப்பிடி தங்கச்சின்னு ஒருத்தி இருக்கான்னு…”என சீறியவள் ஆழ மூச்சு இழுத்து விட்டு “அப்பன் சொன்னான்னு ஒருத்தியை கட்டிக்கிட்டு தனக்கு அடுத்து சொத்தை ஆள வாரிசு உருவாக்கிட்டு தன் வேலையை பாக்குறவன் ஆம்பளை கிடையாது மொதல்ல வீட்டுக்கு மூத்தவனா ஆபிஸ்யை கவனிக்கிற மாதிரி வீட்டுலே என்ன நடக்குதுன்னு கண்ணை திறந்து பாருங்க அப்போவாவது இந்த பணம் சம்பாதிச்சு போடுற மூளைக்கு மத்த விஷயங்களையும் பல்பு எரியிதான்னு பார்க்கலாம்…” என அவனை முறைத்து விட்டு அங்கிருந்து போக போகும் அவளையே விழியகலாமல் பார்த்தான் தான் கட்டிய வாய் இல்லாத பூச்சா இந்த நிலா என்ற வியப்போடு….
Interesting
Super epi
Nice