Skip to content
Home » 07.காரிகை

07.காரிகை

வாழ்க்கை அதன் பாட்டில் அமைதியாக சென்றால் அதில் என்ன சுவாரஸ்யம் அன்று இரவு அனைவரும்  திண்ணையில் அமர்ந்து பேசி கொண்டிருக்க விக்ராந்த் வேலைக்கு செல்ல போவதை அறிவித்தான்.”ஏய்யா அத்தனை நாள் தனியா அங்கனே கெடந்து கஷ்டப்பட்ட நீ இப்ப தானே வந்திருக்க அதுவும் ஒரு வாரம் கூட இல்லையே அதுக்குள்ள திருப்ப வேலைக்கு போகனுமா?… என்று வருத்தபட்டு கேட்டவர் அதுமட்டுமாய்யா உனக்கும் உன் பொண்டாட்டிக்கும் தாலி பிரிச்சி கோர்க்கிற சடங்கிருக்கு அதை இன்னும் பண்ணலயே ஏங்க அமைதியா இருக்கியே ஏதாச்சும் சொல்லுங்க…” என்றவரிடம் “நான் ஜோசியர்கிட்ட கேட்டேன் நல்ல மூகூர்த்தம் இல்லன்னு சொல்லிட்டாரு தாயி… பொறுக்கலாம் நல்ல நாள் அமைஞ்சதும் சிறப்பா பண்ணுவோம் இல்லைன்னா மூணு மாசம் முடியட்டும்…” என்றவர் எழுந்து சென்று விட போகும் அவரை கண்டு பெருமூச்சு விட்டார் பொன்னி அவரின் மனமறிந்து இதை எல்லாம் பார்த்த விக்ராந்த் பொறுக்க முடியாமல் “நாளுக்கு நாள் வட்டி ஏறி கடன் கொடுத்தவங்க எல்லாம் வாசல்ல வந்து நிக்கிறானுங்க பொம்பளை புள்ள இருக்குற வீடு கடன் வாங்கினாலும் நம்ம மேல மரியாதை வெச்சிருக்கானுங்க அதை நாமலே கெடுத்துக்க கூடாதுன்னுநெனக்கிறேன் ம்மா நான் வீட்டிலே இருக்கிறது நல்லதில்ல வேலைக்கான எல்லா பார்மலிட்டிசும் முடிஞ்சு நாளன்னைக்கு போய் கம்பனியிலே ஜாய்ன் பண்ணுறது மட்டும் தான் பாக்கி என்றவன் நிறுத்தி நிதானமாய் இது எங்க விருப்பதோட நடந்த திருமணம் தாலி பிரிச்சு கோர்கிற பங்சன் நடக்கலன்னாலும் அவங்க என் பொண்டாட்டிங்கிறது மாறாது அன்னைக்கு அப்பா பேசினப்போ அமைதியா இருந்தது உங்க சந்தோஷத்துக்காக மட்டும் தான் அவங்களுக்கும் நம்ம குடும்ப நெலம தெரியும் அதை புரிஞ்சு நடந்துப்பாங்க..” என அத்தோடு முடித்து கொண்டு வீட்டுக்குள் சென்று தன்னிடத்தில் படுத்துக் கொள்ள மற்றவர்கள் ஒருவருக்கு ஒருவர் முகத்தை பார்த்து கொண்டு தங்களது அறைக்குள் நுழைந்து கொண்டனர்.காரிகையோ நடப்பதை எல்லாம் பார்த்து எதை எதையோ தன்பாட்டில் சிந்தித்து கொண்டிருந்தாள் தென்றலும் இரவின் மகிமையில் கட்டுண்டு சுழன்று கொண்டிருக்க அந்த மோனநிலையில் இருந்தவளை ஒருவனின் நிழல் உருவமும் காய்ந்த சருகுகளில் மிதித்து ஓடும் சத்தமும் அந்நிழல் இந்த வீட்டை பார்த்தபடி ஓடி வருவதும் பின் தடுமாற்றத்தோடு நிற்பதும் என அவ்வுருவத்தின் செயலலை கண்டவள் கூர்ந்து பார்க்க இருட்டில் முகம் தெரியவில்லை சட்டென வீட்டுக்குள் சென்று “விக்ராந்த்…. விக்ராந்த் கொஞ்சம் வெளியே வந்து பாருங்க…” என்று கை பிடித்து எழுப்பி வர என்னங்க.. என அவளின் பதட்டம் இவனையும் ஒட்டி கொள்ள விடாமல் என்ன? ஏது? என கேட்டபடியே வந்தான் அதுவும் அந்த நிழலை பார்க்கும் வரைக்கும் தான் இவனே…… என பற்களை கடித்து வேட்டியை மடித்து கட்டியவன் டேய்….. என கத்த அவ்வுருவமோ பதறியடித்து ஓட அவ்விடம் இருந்த உருட்டு கட்டையை எடுத்து ஓடும் காலிலே குறி பார்த்து அடிக்க அதில் கால் தடுக்கி குப்புற விழுந்தவனை நெருங்க போக அவனை தடுத்தது இவனின் சத்தம் கேட்டு வந்த அக்சிதாவின் குரல்.”விடுண்ணா கால்ல பட்ட அடிக்கு ஒரு வாரமாவது தேவைபடும் எந்திரிக்க இனியாவது புத்தி வந்து களவானி தனம் பண்ணாது…” என கோபமாக கூறியவளை புரியாமல் பார்த்தாள் கவிரத்னா தன்னை பார்க்கும் அண்ணியை திரும்பி ஒரு பார்வை பார்த்து விட்டு உள்ளே சென்று விட்டாள் இது தான் ஒரு வாரமாக நடக்கிறது அண்ணி… என சின்னவள் அழைத்து பேசினாலும் பெரியவளோ ஒரு பார்வையோடு கடந்து விடுவாள்.குப்புற விழுந்த உருவம் பல சாபங்களை விடுத்து தட்டுத் தடுமாறி எழுந்து நடக்க போகும் அவனையே குறையாத கோபத்தோடு சிவந்த விழிகளால் பார்த்து கொண்டிருந்தவன் தன் பின் சற்று புரியாத பார்வையோடு பதட்டத்தோடு நின்றவளை கண்டதும் “ச்சே… இங்கனே நீங்க எதுக்கு நின்னுக்கிட்டிருக்கீங்க உள்ளே போங்க…” என்று அதட்டலோடு குரலை உயர்த்த அதில் மிரண்ட பார்வையோடு அவனை பார்த்தவள் தன்னறைக்குள் ஓடி போய் கதவை அடைத்து கொண்டாள்.”இன்னைக்கு காலோட போச்சி இன்னொரு நாள் உன் மண்டையே பொலக்குறேன்டா பொறுக்கி பயே…” என சீறும் சிங்கமாய் கோபத்தோடு நின்று கொண்டிருந்தவன் இதுக்கு ஒரு வழி பண்ணனும் என முடிவு எடுத்து கொண்டு வந்து படுக்கதொடங்கியவனுக்கு உறக்கம் தான் வருவேனா என்றிருக்கையில்…,யாருக்கு எது எப்படி இருந்தால் என்ன??  நான் என் கடமையை சரியாக செய்வேன் என்று கடமை தவறாமல் வந்து நின்றவனின் பொற் கதிர் பூமி தாய்யை தழுவி கொள்ள வழக்கம் போல அனைவரும் எழுந்து தங்கள் வேலைகளை செய்ய தொடங்கினர்.அன்று விக்ராந்த் கிளம்புவதற்கு தயாராகி கொண்டிருக்க பொன்னி பரபரப்பாக சமையல் கட்டில் அவனுக்கு பிடித்த விதமாக அசைவத்தில் தடல் புடலாக தன் கை வரிசையை காட்ட தொடங்கி இருந்தார் அவர் செய்வதை பார்ப்பதும் அவருக்கு சிறு சிறு உதவியை செய்து கொடுப்பதும் என்றிருந்தவளை அழைத்தான் விக்ராந்த் “மேடம் கொஞ்சம் வாங்க உங்ககிட்ட பேசனும்…” என்று அதை கேட்டு பற்களை கடித்த பொன்னி “ஏய்யா இது என்ன அவங்க கம்பனியா? ஒழுங்கா பேர் சொல்லி கூப்பிடு நீயும் தான் எம் புள்ளைக்கு நீதான் பேரு வெச்ச மாட்டுக்கு பேரு சொல்லி கூப்பிடாதே…” என்று பக்கத்தில் நின்றவளுக்கும் ஒரு அதட்டு போட்டவரிடம் ம்மா…. விடு பழகிடுச்சு‌.. என்று அவன் சமாளிக்க “என்னய்யா பழகிடுச்சு இது தான் சபையிலே நாலு பேர் முன்னாடியும் வரும் அப்ப தேவையில்லாத சங்கடம் எல்லாம் நமக்கு தேவையா அதான் சொல்லிட்டு கெடக்கேன் மாத்திக்க…” என்றவர் சூடான எண்ணெய்யில் கடுகை தூக்கி போட அது பொரியும் சத்ததில் இரண்டடி தள்ளி நின்றவளை ஓர விழி கொண்டு பார்த்த பொன்னி “இங்கனயே நிக்க உன் புருஷன் கூப்பிட்டான்லே போய் என்னன்னு கேளு…” என்று விரட்ட விட்டால் போதும் என்று ஓடி விட்டாள் அவளை பின் தொடர்ந்து வந்த விக்ராந்த்.”ஏங்க அம்மா எதோ பேசுவாங்க கண்டுக்காதீங்க… என்றவனிடம் “அய்யோ விக்… இல்லை அது எனக்கும்‌ அப்படி கூப்பிட ஒரு மாதிரி தான் இருக்கு இதுலே உங்களே விட நான் மூணு வயசு சின்னவள் தானே நீங்கஎன்ன பேர் சொல்லியே கூப்பிடுங்க….”என்றவளிடம் “சடர்னா வரலே இனிமே கொஞ்சம் ட்ரை பண்ணுறேன்.. அய்யோ சொல்ல வந்ததை மறந்துட்டேன் பார்த்தீங்களா?…” என்றவன் தனது பர்ஸில் இருந்து ஆயிரம் ரூபா தாள் ஒன்றை எடுத்து அவள் கையில் திணித்தவன் “இதை உங்க செலவுக்கு வெச்சுக்கோங்க எதுவும் தேவைன்னா சங்கடபடாம அம்மாகிட்ட கேளுங்க இல்லையா எனக்கு கோல்ப் பண்ணுங்க நான் அம்மாகிட்ட சொல்லி செய்றேன் சரியா? அப்பறம் தங்கச்சிங்களே பார்த்துக்கோங்க உங்களே மாதிரி போல்டான பொண்ணுங்க கிடையாது அவங்க….” என்றவனிடம்,”அடே நீங்க வேற மிஸ்டர் உங்கம்மா அப்பறம் நீங்க நைட் அதட்டினது எல்லாம் பார்த்தா நான் தைரியமான பொண்ணு தானான்னு கூட டவுட் வந்திடுச்சு அவளோ பயமா இருக்கு…” என்றவளிடம் மெல்லிய புன்னகையுடன் “சாரிங்க அது அந்த பொறுக்கியே பார்த்ததும் கோவம் வந்திடுச்சு…” “சரி அதை விடுங்க… ஆமா எங்க? எந்த கம்பனிக்கு வேலைக்கு போறீங்க…” என்று விவரத்தை கேட்க தொடங்கினாள்.”அது கோயம்பத்தூர் நல்ல கம்பனி என் படிப்புக்கு ஏத்த மாதிரி நல்ல சம்பளத்தோட அங்க தான் வேலை இருக்கு அதான் அப்ளே பண்ணிட்டேன் மத்தது எல்லாம் உங்க பேமிலியோட கம்பனி ப்ரான்ச் தான் இருக்கு இது மட்டும் மிஞ்சி போனதுலே இருந்து செலக்ட் பண்ணினேன் மெயில் மூலமாவே பேசிட்டேன் இங்கயிருந்து பஸ் ஏறினா மிட் நைட் ஆகிடும் போய் ரீச் ஆக முன்னாடியே போனா வேலைக்கு போறதுக்குள்ள ரிலாக்ஸ் ஆகிடுவேன்…” என விளக்கம் கொடுக்க “சரி போனதும் கோல்ப் பண்ணுங்க…” என மெல்லமாக உதிர்த்தவளின் கண்களை தாண்டி உதட்டசைவில் பார்வை சென்று நிற்க திணறி திடுக்கிட்டவன் தன்னை சமன்படுத்தி கொண்டான் எதற்கு ஆட்டுகிறேன் என்று தெரியாமலே நாலா பக்கத்திற்கும் தலையை ஆட்டி வைத்தான் அவனை மெலிதான புன்னகையோடு பார்த்தவள் அறையில் இருந்து வெளியே வர அண்ணி…. என ஓடி வந்து கட்டிக் கொண்டு விலகியவளை இழுத்து அகல்யாவின் தலையில் ஒரு தட்டு தட்டி அடக்கினாள் அக்சிதா.”குதிக்காதேடி இன்னும் சின்ன புள்ளன்னு நெனப்பு தாவணி விலகியிருக்கு பாரு…” என்று அதை சரி செய்தவள் கண் ஜாடையால் கவிரத்னாவை காட்ட அதை புரிந்து கொண்ட சின்னவள் “அண்ணி அக்கா நானும் கோயிலுக்கு போக போறோம் நீங்களும் வரீங்களா?…” என்று கேட்க வந்ததில் இருந்து அடைந்து கிடந்தவளுக்கு போய் வந்தால் நன்றாக இருக்கும் என தோன்ற உற்சாகமாக தலையாட்டியவளிற்கு பொன்னி தனியாக நின்று சமைப்பதை கண்டதும் மறுக்க தோன்றிவிட்டது.அதை கண்ட அக்சிதா தன் தாயிடம் சென்று சொல்ல அடுத்த நொடி வெளியே வந்து “இந்தா புள்ள நீயும் கோவிலுக்கு போயிட்டுவா இன்னைக்கு அம்மனுக்கு சிறப்பு பூஜை இருக்கு தனியா போவாம உம் புருஷனையும் கூட கூட்டிப்போ…” என்றவர் தன் வேலையை கவனிக்க தொடங்க அவள் கேள்வியாக கணவனை காண அவனும் சம்மதாக தலையசைத்தான் அதை கண்டு அறைக்குள் ஓட போனவளின் கையை அவன் அவசரமாக பற்றி நிறுத்த அத் தீண்டலில் உடல் சொல்ல முடியாத உணர்வில் சிக்குண்டு தத்தளிக்க அவர்களின் மோன நிலையை களைக்கும் விதமாய் அண்ணே….. என்ற அக்சிதாவின் பக்கம் பார்வையை திருப்பி என்ன? என்பது போல் பார்க்க “நாங்க முன்னாடி போறோம் நீ அவங்களே கூட்டின்டு வாண்ணே…” என்றவள் அகல்யாவின் கை பிடித்து இழுத்து கொண்டு வெளியேற “நீ என்னக்கா சும்மா அடிக்கிற, இழுத்திக்கிட்டு போறே நீ போ நான் அண்ணியோட வரேன்…” என்று முறுக்கி கொண்டவளை ரெண்டு தட்டு தட்டி இழுத்து கொண்டு போக அவள் இழுப்பிற்கு கத்தியபடியே விடுடி என நகத்தால் பிராண்டி சண்டை போட பதிலுக்கு அவள் இழுத்து முதுகில் ஒன்று போட்டவள் அமைதியா வா என்று அடக்க முதுகை பிடித்து அழத் தொடங்கியவளின் அழுகை விக்ராந்த் போட்ட சத்தத்தில் விழுங்க பட்டு அமைதியாக நடக்க தொடங்கினாள் அகல் இது வழக்கமாக அக்கா தங்கைக்கு இடையில் நடப்பது தான் ஏன் இரண்டு சண்டை கோழிகளாக முட்டி கொண்டு ஒருவரின் தலைமுடியை இன்னொருத்தி கையிலும் மற்றவளின் கையில் பல்லால் கடித்த தடம் என மாறி மாறி சண்டை போட்டு கொள்வார்கள் ஆனால் அடுத்த ஐந்து நிமிடத்தில்  அப்படி ஒரு சண்டை நடந்ததா? என்ற கேள்விக்கு நமக்குள்ள தோன்ற தொடங்கி விடும் என்ற அளவுக்கு பாசமலராக சுற்ற தொடங்கி விடுவார்கள்.

3 thoughts on “07.காரிகை”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *