Skip to content
Home » 08.அழகிற்கு ஏதடி வர்ணங்கள்

08.அழகிற்கு ஏதடி வர்ணங்கள்

ஒவ்வொரு நாளும் எழுந்து கொள்ளும் போது இன்று எதற்காக? எப்படி? யாரிடம்? சிக்கி உருவக்கேலி மற்றும் அவமானங்களை சந்திக்கப் போகின்றமோ எனும் பயத்திலே அவள் விடியல் ஆரம்பமாகும் இன்று அந்த விடியலை ஜன்னல் வழியாக பார்த்தப்படியே திரும்பி தன்னை எவ்வித மாற்றமும் இன்றி அப்படியே காட்டும் ஆளுயர கண்ணாடியை பார்த்தாள் கலைச்செல்வி தன்னிடம் அப்படி என்ன இருக்கிறது என்று காலேஜ் பெண்களின் கனவு நாயகனாக வலம் வரும் யாதவிற்கு தன்னை பிடித்திருக்கிறது என்று தான் எவ்வளவு யோசித்தாலும் அவளுக்கு புரியவில்லை ஒவ்வொரு நாளும் அவனை சந்திக்கும் போது அவனுடைய காதலும் அக்கறையும் கூடிக்கொண்டே போவதை கண்ணுற்றவளுக்கு வியப்பாக இருந்தது.

வெகுநேரமாக நின்று தன்னை அந்த கண்ணாடியில் ஆராய்ந்து விட்டு‌ ஒருவழியாக பையை எடுத்துக்கொண்டு கிளம்பியவளை கண்ட பின்பு தான் இவ்வளவு நேரம் அவளை கண்காணித்துக் கொண்டு இருந்த கல்யாணி நிம்மதி பெருமூச்சு விட்டார் “ஒரு காலத்திலே கண்ணாடியே பார்க்க மாட்டா இப்போ என்னடான்னா அதையே தான் தொடர்ந்து வெறிச்சு வெறிச்சு பார்த்துக்கிட்டு இருக்கா ஏதாவது கேட்க போனா அவங்க அப்பா வரிஞ்சு கட்டிக்கிட்டு வராரு எனக்கெதுக்கு வம்பு…” என்றபடி தன் பாட்டில் புலம்பிக்கொண்டு வேலையை பார்த்தார் கல்யாணி.

வழமையாக காலேஜ் வருபவளை வரவேற்கும் விதமாக கேட் அருகில் நிற்பவனை இன்று ஏனோ காணவில்லை எவ்வளவு தடுத்தும் அவள் விழிகள் அலைப்புறுதலை நிறுத்தவில்லை அவனை தேடி உலா வந்தது ஆனால் அவள் கண்ணில் சிக்கவே இல்லை யோசனையுடனே தன் க்ளாஸ்க்குள் நுழைய அங்கே வேண்டா வெறுப்பாக உட்கார்ந்து நோட்ஸ் எழுதிக்கொண்டு இருந்த ஸ்ரீ இவள் வந்து அமர அவளைப் பார்த்து புன்னகைத்தவள்.

“ஏன்டி இவ்வளவு லேட் எப்பவும் நேரமா வருவ இன்னைக்கு எல்லாரும் வந்ததுக்கு அப்பறம் வந்திருக்க என்னாச்சு…”

“அது.. ஒன்னுமில்லை அப்பா கொண்டு வந்து விட லேட்டாகிடுச்சு அதான்…” என்றவள் சிரமப்பட்டு தன் உணர்வுகளை மறைத்துக்கொண்டு இயல்பாக இருப்பது போல் காட்டிக்கொண்டாள் காதலிக்கும் போது கள்ளத்தனமும் வந்து குடி கொண்டு விடும் என்று சொல்ல கேட்டு இருக்கிறாள் அது தன் விடயத்திலே நடக்கும் என்பதை இப்போது தான் உணர்கிறாள் அன்றைய நாளுக்கு உரிய பாடங்கள் அனைத்தும் நிகழ்ந்தது ஆனால் எதுவும் அவள் கருத்தில் பதியவில்லை காரணம் கேன்டீன் சென்ற போது கூட அவனை காண கிடைக்காமல் போனது தான் ஒன்றை எதிர்பார்ப்போடு தேடுவதும் அது கிடைக்காமல் போக கிலோ கணக்கில் சோகத்தை தாங்கி நிற்கும் அவள் முகத்தை கூடவே இருந்து கவனித்துக்கொண்டு தான் இருந்தாள் ஸ்ரீ.

“நடத்து நடத்து இன்னும் எவ்ளோ நேரம் இப்படி இருக்கேன்னு பாக்குறேன்…” என சிரிப்பை மறைத்துக்கொண்டு நண்பியை வேடிக்கை பார்த்தாள் இதற்கு மேல் விட்டால் அழுது விடுவேன் என்ற நிலையில் இருந்தவளை பார்க்க கவலையாக இருந்தது “அந்த மனுஷன் பின்னாலேயும் முன்னாலேயும் திரியிறப்போ கண்டுக்காம இருந்தவ இப்போ ஒரு நாள் காணாததும் இப்படி ஆகிட்டாளே கேட்டாலும் எதுவும் சொல்ல மாட்டா இதுக்கு அதான் வழி இருடி மவளே உன் மனசுலே இருக்கிறதை வெளியே கொண்டு வரேன் எத்தனை நாளைக்கு தான் மறைக்கிறேன்னு நானும் பாக்குறேன்…” என்று நினைத்தப்படியே திடீரென தாங்கள் அமர்ந்து இருந்த வகுப்பறையின் ஜன்னல் புறம் திரும்பி “ஹாய் சீனியர்…” என காற்றில் கையசைக்க இவளின் குரலில் நினைவுகளில் மூழ்கி இருந்தவள் அவசரமாக நிமிர்ந்து அங்கும் இங்கும் விழிகளை உருட்டி தேட விடை என்னவோ பூஜ்ஜியம்.

“ஹேய் ஸ்ரீ எங்கடி சீனியர்…”

“ஏன்டி உனக்கு கண்ணு தெரியலயா அதோ பாரு…”

“எங்கே எங்கே…” என தேடியவளை கண்டு அப்படி வாடி வழிக்கு என்ற எண்ணத்தோடு கன்னத்தை கையில் தாங்கியபடி கலை… என்றதும் தேடுவதை விட்டுவிட்டு இவளை ஸ்லோமோஷனில் திரும்பி பார்க்க தன் இரு புருவத்தையும் உயர்த்தி என்ன? என்பது போல் கேட்டாள் ஸ்ரீ அதன் பிறகு தான் அவள் தன்னை வைத்து டெஸ்ட் பண்ணி இருப்பது புரிய ஈஈ… என பற்களை காட்டி அசடு வழிந்தாள்.

“மேடம் இந்த ஹார்ட்டுக்குள்ள சீனியருக்கு இடத்தை பட்டா போட்டாச்சு போல கேடி என்கிட்டயே மறைச்சிட்டலே…”

“அது வந்து மறைக்கனும்னு இல்லை ஸ்ரீ பிடிச்சிருக்கு ஆனா சொல்ல தான் பயமா இருக்கு மொத இது ஒத்து வருமான்னு தெரியல அதான்…” என்றவளின் தோள் பற்றியவள் “எதையும் யோசிக்காதே இப்படி உன்னை தாங்குற ஒரு மனுஷன் கிடைக்க குடுத்து வெச்சு இருக்கனும் அவ்வளவு சீக்கிரம் யாருக்குமே இப்படி ஒருத்தன் கிடைச்சிற மாட்டான்…” என்றவள் கூறியதை மனதில் ஏற்றிக்கொண்டவள் காலேஜ் முடிய வெளியே வந்து இருவரும் ஆட்டோவிற்காக காத்திருந்தனர்.

“என்னாச்சு ஸ்ரீ இன்னைக்கு தனியா ஆட்டோல வரனும்னு நிக்கிற உன் அக்கா எங்கே அவங்க கூட தானே நீ பஸ்லே போவ…”

“இன்னைக்கு அவ லீவ் அதான் ஆட்டோல போகலாம்னு வந்துட்டேன்‌ சரி அது இருக்கட்டும் சீனியர் காலேஜ் வராம இருக்கிற ஆள் இல்லையே அப்பறம் இன்னைக்கு வராம இருக்காரு ஏதும் தெரியுமா உனக்கு…”

“அது தெரிஞ்சா நான் ஏன்டி காலேஜ் முழுக்க தேட போறேன்…” என சோகமாக கூறியவளின் மண்டையில் ஒரு குட்டு வைத்தவள்.

“உடனே மூஞ்சை தூக்காம மூளையே கொஞ்சம் வேலை செய்ய வை மக்கு அதான் உன் ஃபோன்ல அவர் நம்பர் இருக்குல்ல கோல் பண்ணி பேசு…”

“அய்யோ நானா? முடியாது முடியாது…”. என உடனே மறுத்தவளை முறைத்துப் பார்த்த ஸ்ரீ “நீயெல்லாம்… போடி என் வாயை கிளறாம…” என்றபடி அவள் போனை வாங்கி யாதவ் சீனியர்… என சேவ் பண்ணி இருந்த நம்பருக்கு அழைத்தாள்.

“ஹலோ…” என‌ நீண்ட நேர தொடர்புக்கு பின் அந்த குரல் கேட்டது “ஹலோ யாரு செந்தில் அண்ணாவா பேசுறது…”

“ஆமா இது கலைச்செல்வி நம்பர் தானே ஆனா நீங்க யாரு பேசுறது..”

“நான் ஸ்ரீ பேசுறேன் அண்ணா இது அவளோட ஃபோன்ல இருந்து பேசுறேன் சீனியர் எங்கே அண்ணா இன்னைக்கு காலேஜ் வரல…”

“அவன் எப்படிமா வருவான் அவன் தான் ஆக்ஷ்சிடன் ஆகி ஹாஸ்பிடலிலே படுத்துக்கெடக்கானே…”

“ஹாஸ்பிடலா? எந்த ஹாஸ்பிடல் அண்ணா…” என விசாரிக்க நடந்தை சொன்னான் அவள் அருகில் இருந்து கேட்டுக்கொண்டு இருந்தவளுக்கு நெஞ்சு படபடவென அடித்துக்கொண்டது போனை வைத்தவள் “கலை வா நாம ஹாஸ்பிடல் போய் என்ன ஏதுன்னு பார்த்திட்டு வரலாம்…” என அழைக்க கன்னம் தாண்டிய கண்ணீர் துளிகளை துடைத்து விட்டப்படி “வேணாம் ஸ்ரீ நாம அங்கே போக வேணாம் உணர்ந்த காதலை கூட சொல்லலே நான் அதுக்குள்ள அவருக்கு ஆக்ஷ்சிடன் ஆகிருக்கு எல்லாம் என்னாலே தான் நான் ஒரு அபசகுணம் ஸ்ரீ அவர்கூட நான் இருந்தா அவருக்கு எல்லாம் கெட்டது தான் நடக்கும்…” என கண்ணீர் சிந்தியவளின்‌ கன்னத்தை அழுத்திப்பிடித்து தன் முகம் பார்க்க வைத்தவள்.

“அபசகுணம் அது இதுன்னு ஊர் கிழவிகள் மாதிரி பொலம்பிட்டு இருக்காம மொதல்ல ஆட்டோல ஏறு போகலாம்…” என அவளை அழைத்துக்கொண்டு செந்தில் கூறிய ஹாஸ்பிடலுக்கு வந்து சேர்ந்தனர் இருவரும்.

ஹாஸ்பிடலில் அட்மிட் பண்ணி இருந்தது சீஎம் மகன் என்பதால் பாதுகாப்புக்கு ஒன்றும் அங்கு குறை இருக்கவில்லை இருவரும் எங்கு இருக்கிறான் என்பதை விசாரித்து விட்டு அந்த அறையை நோக்கி செல்லும் முன் பாடிகார்ட்ஸ் மூலம் தடுத்து நிறுத்தப்பட்டு இருந்தனர் யானை சைஸில் நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு நின்றவர்களை கண்டு அவ்வளவு பயம் கலைச்செல்விக்கு ஸ்ரீயின் பின்பு மறைந்து கொண்டாள்.

“யார் நீங்க? இங்கே எல்லாம் வரக்கூடாது அந்தப் பக்கம் போங்க…”

“நாங்க சீனியரை பார்க்க தான் வந்தோம் சீனியர்கிட்ட போய் எங்க பேரை சொல்லுங்க அப்பறம் அவரே எங்களை உள்ள விட சொல்லுவாறு…”

“முடியாது நீங்க இங்கே இருந்து கிளம்புங்க…” என விரட்டுவதிலே குறியாக இருக்க “வாடி போயிறலாம்…” அவனை தன்னால் காண முடியாது என்ற வலியில் கலங்கிய விழிகளுடன் ஸ்ரீயை பிடித்து இழுத்துக்கொண்டு இருந்தாள் கலைச்செல்வி.

“அடே இருடி வாசலோட போறத்துக்கா நூறு ருவா செலவழிச்சு வந்தோம் சும்மா இரு அவங்க எப்படி நம்மலே விடாம இருக்காங்கன்னு பார்க்கலாம்‌…” என்றவள் மீண்டும் கலைச்செல்வியின் ஃபோன் மூலம் யாதவ் போனிற்கு அழைத்து செந்திலிடம் விஷயத்தை சொல்ல அவன் உடனே யாதவ் இருந்த அறையில் இருந்து வெளியே வந்தவன் இவர்களை உள்ளே அழைத்து சென்றான்‌.

ஆங்காங்கே காயமும் கீறல்களுடனும் சோர்வாக படுத்திருந்த யாதவ்யை கண்டதும் கட்டுப்படுத்தி வைத்த மொத்த அழுகையும் உடைப்பெடுத்து விட்டது யா..தவ்… என அழுதவளை தனியாக விட்டு விட்டு அங்கிருந்து மற்ற இருவரும் வெளியே சென்றனர்.

யாதவ்… என நெருங்கியவளின் குரல் அவனுக்கு கேட்டது போலும் லேசாக விழிகளை திறந்தான் அவன்.

“யாதவ்… யாதவ்… ஆர் யூ ஓகே…” என வடியும் கண்ணீரை ஒரு கையால் துடைத்துக் கொண்டு கேட்டவளை நன்றாக இமை மூடி திறந்து பார்க்க திகைத்து போனான் “செ… செல்வி… நீ என்னமா இங்கே செய்ற…” என்றவனின் குரலில் சோர்வு அப்பட்டமாக தெரிந்தது.

“உங்களை பார்க்க தான் வந்தேன் உங்களுக்கு ஆக்ஷ்சிடன் ஆகிடுச்சுன்னு செந்தில் அண்ணா சொன்னாங்க அதான் நானும் ஸ்ரீயும் சேர்ந்து வந்தோம்…”

“ம்ம் இது லேசான அடி தான் இன்னும் ரெண்டு நாளையிலே காலேஜ் வந்திடுவேன் நீ பத்திரமா மொத வீட்டுக்கு போ நேரமாகிடுச்சு பாரு அன்கிள் ஆன்டி உன்னை தேடப்போறாங்க…”

“அதை நான் சமாளிச்சுக்கிறேன் உங்… உங்களுக்கு இப்போ எப்படி இருக்கு…” என்றவளை பார்த்தப்படியே மெதுவாக எழுந்து அமர்ந்தான் அதில் லேசாக வலியில் முகத்தை சுருக்கினான் ஆனால் அவள் முன் வலியை காட்டாது உடனே மறைத்துக்கொண்டு“எனக்கு ஒன்னுமில்லை செல்வி பைக்ல போயிட்டு இருக்கிறப்போ பின்னாடி வந்த ஒரு கார்காரன் இடிச்சிட்டான் அதுலே பேலன்ஸ் மிஸ்ஸாகி விழுந்திட்டேன் இந்த காயம் எல்லாம் இன்னும் ரெண்டு நாளையிலே ஆறிடும் சில் ஓகே‌…” என்றவன் அவள் கையைப் பிடித்து தன் கைக்குள் வைத்துக்கொண்டவன் சில நிமிடங்கள் அவள் முகத்தையே பார்த்துக் கொண்டு இருந்தான் அதில் அவள் பார்வையை தாழ்த்திக்கொள்ள “அழுதியா செல்வி…” என்றவன் அவள் கன்னத்தை துடைத்து விட அவளுக்கு ஏனோ அழுகை நிற்பதுக்கு பதிலாக இன்னும் அழுகை தான் வந்தது‌.

5 thoughts on “08.அழகிற்கு ஏதடி வர்ணங்கள்”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *