Skip to content
Home » 08.காரிகை

08.காரிகை

தங்கைகள் கண்ணில் இருந்து மறையும் வரை பார்த்து நின்றவன் கவிரத்னாவை திரும்பி பார்த்து”உங்ககிட்ட புடவை ஏதும் இருக்காங்க…” என்றவனிடம் ஆமாம் என்பது போல் தலையாட்டினாள்

அதை கட்டிட்டு ரெடியாகி வாங்க என்றவனிடம் தயக்கமாக “அது…. அ..து எனக்கு கட்ட தெரியாதுங்க அதான் அத்தை சொல்லியும் கட்டிக்காம இருந்தேன்…” என்றவள் பாவமாக விழிக்க “முதல் முதலா கோவிலுக்கு போறப்போ அதுவும் நாம கல்யாணமாகி போகும் போது இப்படி தான் போகனும் அம்மாவும் இதை தான் சொல்லுவாங்க… என்றவன் யோசிக்க தொடங்கி சரி உங்களுக்கு பிடிச்சதை உடுத்தி வாங்க போலாம்…” என்றவன் பேச்சில் என்ன உணர்ந்தாளோ “சரி நான் அத்தையே ஹெல்ப் பண்ண சொல்லி கட்டிட்டு வரேன்…” என்று பொன்னியை தேடி சென்றாள்.அத்தை… என அழைக்க திரும்பி பாராமலே ம்ம்… கொட்ட இவளுக்கு தான் தயக்கம் வந்து ஒட்டி கொண்டது அவள் எதுவும் பேசாமல் போட்டிருந்த ஷால்யின் முனையை பிடித்து திருகி கொண்டிருக்க ஓரபார்வை பார்த்தவர் “என்னன்னு சொல்லு இல்லன்னா தள்ளி நில்லு…” என்று வேலையை பார்க்க இப்போது கிளம்ப வேண்டும் என்பதற்காக தனது தேவையை சொல்ல தொடங்கினாள்

.”அது எனக்கு புடவை கட்டி விடுறீங்களா? ப்ளீஸ் கோவிலுக்கு போகும் போது புடவை கட்டனும்ன்னு அவரு சொன்னாரு…” என்றவள் அதற்கு காரணத்தையும் சொல்ல அவர் அவளை முறைப்பாக பார்த்தபடி “ஆமா அப்படி என்னத்த தெரிஞ்சு வெச்சிருக்கவே வீட்டு பொம்பளைக்கு அடிப்படையா என்ன என்ன செய்யனும்ன்னு கூட கத்து வெச்சிக்காம கெடக்க இதை கூட சொல்லி குடுக்காம உங்கம்மா என்ன தான் செஞ்சாக…” என்று வெடுக்கென கேட்டவரின் பேச்சில் சற்று கோபமும் வந்து ஒட்டி கொள்ள தெரியாததை தெரியாதுன்னு தான் சொல்ல முடியும் என்று மனதோடு சொல்லி கொண்டவள் சாரி அத்தை என்று நேராக தன்னறைக்கு சென்று கதவை சாத்தியவள் என்ன செய்து புடவை கட்டுவது என யோசித்தவளிற்கு அவள் போன் கண்ணில் பட அதை எடுத்து யூடியுப் மூலமாக வீடியோ ஒன்றை தெரிவு செய்து புடவை எடுத்து கட்ட தொடங்கினாள் முதலில் சிரமாக இருந்தாலும் தட்டு தடுமாறி புடவையை சுற்றி கட்டி கொண்டு வெளியே வரவும் விக்ராந்த் வேட்டி சட்டையோடு வந்து நிற்கவும் சரியாக இருந்தது.

கோபமாக போய் கதவை அடைத்து கொண்டவளின் மேல் ஒரு பார்வையும் சமையலில் ஒரு பார்வையை வைத்து கொண்டிருந்தார் பொன்னி இவள் வெளியே வந்ததும் அவரும் வெளியே வந்து அவளை பிடித்து நிறுத்தி ஒழுங்காக மடிப்பு எடுத்து சேப்டி பின் எடுத்து குத்தி விட்டவரின் கவனம் அவள் புடவையில் இருந்தது அப்புடவையை பார்த்தாளே ஒரு கணக்கு வரும் என அறிந்தவர் எங்கு தன் பிள்ளைகளும் இப்படி ஆசைபட்டு விடுவார்களோ…. என்ற பயமும் எழுந்தது அதை மறைத்து விட்டு அவளின் தலை முடியை பின்னி விட்டவர் அவளின் தாலியை எடுத்து வெளியில் போட்டு விட்டு தயார்படுத்தி மகனிடம் திரும்பி கூட்டிட்டு போ… என்று திரும்பி தன் வேலையை கவனிக்க சென்று விட இவள் தான் போகும் தன் மாமியாரை சிறு புன்னகையுடன் பார்த்து நின்றாள்.

அவளை ஒரு முறை பார்த்த விக்ராந்த் வாங்க என்று பைக்கில் ஏறி அழைத்து செல்ல ஒருவித படபடப்போடு ஏறி கொண்டவள் பிடிமானத்துக்கு எதை பிடிப்பது என தெரியாமல் முழித்து கொண்டு வர அந்த மண்பாதையின் எக்குத்தப்பான வளைவில் அவசரமாக அவன் தோள்யை பற்றி கொள்ள அவளை கண்ணாடி வழியாக பார்த்தவன் எதுவும் பேசாமல் பாதையில் கவனம் செலுத்த தொடங்கினான் இவளோ அந்த கிராமத்தின் அழகில் லயித்து தன்னவனுடனான பயணத்தை ரசித்தபடி பயணித்து கொண்டிருந்தாள்.

ஓரிடத்தில் பைக் நிற்க அதில் சுயம் பெற்று திரும்பி விக்ராந்த்யை பார்த்தவளிடம் இறங்க சொல்ல இறங்கி கொண்டாள் இதான் நம்ம ஊரோட கோயில் என்றபடி முன்னால் நடந்தான் அவன் பின்னால் புடவை கட்டியதில் நடக்க சிரமபட்டு தடுமாறி நடந்து வந்தாள் கவிரத்னா அவளின் தடுமாற்றத்தை உணர்ந்து அவள் முன் தன் கையை நீட்ட அதை பற்றி கொண்டு நடக்க அங்கிருந்த பெண்கள் சிலர் தங்களை பார்ப்பதும் பின் அவர்களுக்குள் குசு குசுவென பேசி கொள்வதை கண்டவள் விக்ராந்தின் கையில் அழுத்தம் கொடுக்க அதில் திரும்பி பார்த்தவன் என்னாச்சுங்க ஏன் ஒரு மாதிரி இருக்கீங்க… என்றவனிடம் அவர்களை கண்களால் காட்டி சொல்ல “ம்ம் அதை எல்லாம் கண்டுக்காதீங்க நீங்க வாங்க… என்றவனுக்கு போன் வர ஏங்க இந்தாங்க என்று பணத்தை நீட்டி போய் அர்ச்சனை தட்டு வாங்கிட்டு வாங்க போய் சாமி கும்பிடலாம்…” என்று போனில் பேச தொடங்க இவளும் சரி என்று அங்கு பூ மாலை அர்ச்சனை தட்டு பழம் ஊதுபத்தி என தனியாக அடுக்கி விற்று கொண்டிருந்தவரிடம் சென்று அர்ச்சனை தட்டு குடுங்க பாட்டி என அப்பொருட்களை விற்று கொண்டிருந்தவரிடம் பணத்தை நீட்டி கேட்டவளை ஒரு பார்வை பார்த்து விட்டு அதை எடுத்து கொடுத்தபடியே “உன்ன இந்த ஊருலே பாத்த மாட்டுக்கு தெரியலயே ஆமா நீ எந்த ஊரு புள்ளத்தா…” என கேட்ட பாட்டிக்கு பதில் தெரியும் விதமாக அவளருகே வந்து நின்றான் விக்ராந்த்.எம் பெஞ்சாதி தான் தாயம்மா பாட்டி… என அவர் தொணியிலே பதில் சொல்ல “அடே ராசா உம் பெஞ்சாதியா மூக்கும் முழியுமா நல்லா லட்ஷனமா தான் கெடக்கா ஊர்கார புள்ளக சொன்னாலுக நம்ம பொன்னி வீட்டு பையனுக்கு வெளியூர் பொண்ணு வாக்கப்பட்டு வந்திருக்குன்னு நானும் வெசனப்பட்டேன் எப்படி பட்ட பொண்ணோன்னு இப்ப பாத்ததும் தான்யா மனசு நிம்மதியா கெடக்கு என் ராஷாக்கு ஏத்த ராணியாத்தா இருக்கா இந்த புள்ள…” என மனம் நிறைந்த அன்போடு சொல்ல அதை கேட்ட விக்ராந்த் “அப்பிடியா? அப்போ எங்களை ஆசிர்வாதம் பண்ணு பாட்டி…” என்று கவிரத்னாவையும் இழுத்து கொண்டு காலில் விழ அவர்களை வாழ்த்தி நெற்றியில் முத்தமிட்டவர் “இந்தாய்யா உம் பெஞ்சாதி தலையிலே வெச்சிவிடு…” என மல்லிகை பூ எடுத்து கொடுக்க அதை புன்னகையோடு பெற்றவன் வாங்கி எந்த தயக்கமும் இன்றி அவள் தலையில் வைத்து விட என்ன என்று புரியாத உணர்வில் லேசாக காரிகையின் கண்கள் கலங்கியது.இருவரையும் மனநிறைவோடு பார்த்தவர் “சரியா போய் சாமி கும்பிட்டு வா நேரமாகுது…” என்று அனுப்பி வைக்க வரேன் பாட்டி என இருவரும் விடைப்பெற்று கோவிலிற்கு நுழைய இவர்களை எதிர்பார்த்து காத்திருந்தது போல் அக்சிதாவும் அகல்யாவும் இவர்களை நோக்கி வந்தனர்.பாப்பா சாமி கும்பிட்டாச்சா… என்றவனிடம் நீங்க வரும் வரைக்கும் காத்திருந்தோம் அண்ணா…. என்றவளிடம் சரி  வாங்க… என மூவரையும் அழைத்து கொண்டு அம்மன் முன் நிற்க பூசாரி அவர்களை நோக்கி வந்தார் “அடே விக்ராந்த் என்னப்பா எப்பிடி இருக்க…” என்றவரிடம் புன்னகை முகமாக பேசியவன் அர்ச்சனை தட்டை நீட்ட யாரு பேர்லே பண்ண என்றதும் இரு தங்கையும் அண்ணன் அண்ணி பேர்லே பண்ணிடுங்க… என அவசரமாக சொல்ல அவர்களை பார்த்து புன்னகைத்த கவிரத்னா “குடும்பத்துலே இருக்கிற எல்லார் பேர்லேயும் பண்ணலாம்ங்க…” என்று விக்ராந்திடம் சொல்ல அவனும் லேசான புன்னகையுடன் அவர்களின் பேர் நட்சத்திரங்களை கூறியவன் கவிரத்னாவினது தெரியாததால் அவளை பார்க்க புன்னகையுடன்தன்னுடையதை சொல்ல அவரும் அதை கேட்டு கொண்டு பூஜை செய்ய தொடங்கினார்.கண்களை மூடி வேண்டி கொண்டிருந்தனர் நால்வரும்”சாமி எங்களுக்கான வாழ்க்கை இதுதான்னு முடிவாகிடுச்சு இதுகு பிறகு வர சந்தோஷமோ துக்கமோ ரெண்டுலேயும் எங்களை பிரிச்சிடாம இப்படியே தம்பதியா கடைசி வரை இருக்க வெச்சிடு அது போதும்…” என்று இருவரும் சொல்லி வைத்தாற் போல் வேண்டி கொண்டு கண்களை திறந்தவர்கள் முன் பூசாரி அர்ச்சனை தட்டோடு நிற்க தீபாரதனையை கண்களில் ஒற்றி கொண்டு விபூதியை எடுத்து நெற்றியில் கீற்றாக பூசி கொண்டனர் அவரோ குங்குமம் எடுத்து விக்ராந்த்யிடம் நீட்டி வகுட்டிலேயும் தாலியிலேயும் வெச்சுவிடுப்பா… என்று புன்னகையுடன் சொல்ல அதை சரி என்று ஏற்று கொண்டவன் கவிரத்னாவை பார்க்க அவளும் இவன் கண்களையே பார்த்து நின்றாள்நெற்றி வகுட்டில் குங்குமத்தை வைக்க அவளின் பொன்நிறத்திற்கு அது இன்னும் அழகு கூட்டியது அதை அகல்யா அக்சிதாவின் போனை வாங்கி போட்டோ எடுத்து அவளிடம் காட்ட வெட்கம் வந்து ஒட்டி கொண்டது அது கூட அவளுக்கு புதிது எங்கிருந்து தனக்கு இப்படியான உணர்வுகள் தோன்றுகிறது அவன் தொடுதலில் சிலிர்த்து அடங்கும் மேனியை எண்ணி மேலும் வெட்கம் வந்து சேர்ந்தது ஏன் இதற்கு முன் இப்படி ஒரு மோனநிலை தன்னிடம் ஏற்படவில்லையே ஒரு வேளை இதுதான் மஞ்சக்கயிறு மேஜிக்கா புருஷன்ங்கிறதாலே வந்த ஒட்டுதலா? என யோசித்து கொண்டிருந்தவளை களைத்தது அகல்யாவின் கீச்சு குரல் “அண்ணி…. நாம குளத்துக்கு போயிட்டு வரலாமா? இங்கனே தான் இருக்கு…” என கண்கள் மின்ன கேட்க…..”ஹேய் பேசாம வாடி அண்ணா வேற கெளம்பனும் இப்போ போய் குளம் வயலுன்னு அம்மா பாத்துக்கிட்டு இருப்பாக வா…” என்று அக்ஷ்சிதா இழுக்க “உனக்கு நான் எதுவும் கேட்டுட கூடாதே இடையிலே வந்திடுவே மூக்கை நுழைச்சிட்டு நா அண்ணிகிட்ட தான் கேட்டேன் உன்கிட்ட இல்ல போ அங்கிட்டு…” என கண்களை சுருக்கி படபடவென பேசி தள்ளி விட்டு கவிரத்னாவின் கைபிடித்து நீங்க சொல்லுங்கண்ணி போலாமா?…” என்றவளின் கன்னத்தை தடவி “அகல்மா நாம இன்னொரு நாள் வரலாம் சரியா இப்போ வீட்டுக்கு போலாம்…” என்று சமாதானபடுத்தி அழைக்க அண்ணி சொன்னா சரிதான் என முத்து பற்கள் தெரிய சிரித்தவளை கண்டு ரத்னா கன்னம் கிள்ளஅக்ஷ்சிதாவோ “பாத்தியாண்ணே இதை நான் சொன்ன போ கேட்டாளா இப்ப அவங்க அண்ணிசொன்னாங்கன்னு கேக்குறா?…” என்று சிறிதாக கோபம் கொண்டாள்

.”அவளுக்கு அண்ணின்னா உனக்கு யாரு பாப்பா ம்ம்…. அவங்க நம்ம வீட்டு மூத்த மருமக உன் அண்ணன் பொண்டாட்டி நீ அதுக்காவது ஒரு மரியாதை தரனும்ல அவங்க கூட அகல் மாதிரி பேசலன்னாலும் மூணாவது மனுசங்க மாதிரி நடத்த வேணாமே அவங்களுக்கும் சங்கடம் இல்லையா?…” என தன்மையாக சொல்ல “சாரிண்ணே ஆனா கொஞ்சம் டைம் எடுத்துகிடுதேன்…” என்றவளின் தோள் தட்டி சரி வா என்று அழைத்து கொண்டு வெளியே வர அகல்யா கவிரத்னாவின் கைபிடித்து அங்கிருந்த இடங்களை எல்லாம் கை காட்டி பேசிய படி வர அதை புன்னகையுடன் கேட்ட படி உடன் நடந்தாள் காரிகையவள்.

மூவரும் நடக்க பின்னால் பைக்யை மெதுவாக ஓட்டியபடி விக்ராந்த் வர நால்வரும் வீடு வந்து சேர்ந்தனர் கோவிலுக்கு போய் வந்தது புடவை கட்டி இருப்பது என அன்று கொஞ்சம் வித்தியாசமான அனுபவத்தில் உழன்று கொண்டிருந்தவளுக்கு ஒருபக்கம் ஏன் என்று தெரியாத அளவு அப்படி ஒரு மகிழ்ச்சி பொன்னியுடன் சேர்ந்து சமைத்ததை எடுத்து வைத்து அனைவரையும்  சாப்பிட கூப்பிட்டு திரும்பவும் வீட்டுக்குள் ஒரு பெண் ஓடி வந்து மாமா….. என்று  விக்ராந்த்யை கட்டி கொள்ளவும் சரியாக இருந்தது.

3 thoughts on “08.காரிகை”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *