Skip to content
Home » 10) மோதலில் ஒரு காதல்

10) மோதலில் ஒரு காதல்

மோதலில் ஒரு காதல்          

     மேடையேறியவர்களை ஒரு புன்னகையுடன் வரவேற்றார் ஆதி.ஆதி: தேங்க்ஸ் ப்ரண்ஸ் என கைகுழுக்க,வம்சி:  “நோ தேங்க்ஸ் சார் இட்ஸ் ஆல் மை டியூட்டிஸ் ”   என கம்பீரமான குரலில் கூறினான்.

மதுப்பிரியா மற்றும் பிரியா: சிரித்த வண்ணம் வம்சியை பெருமையாக பார்த்தார்கள்.கூட்டத்திலிருந்து எழுந்த வாசு, “இந்த டிராமாவெல்லாம் பார்க்க சகிக்கலை” என கூச்சளிட்டான் .ஆதி: விருவிருவென மைக்கிடம் சென்று “ஜஸ்ட் லீவ் அதர்ஸ்” என செந்தீயாய் பொறிந்தான்.

அண்ட் வாசு யூ பிளடி என கத்த,வாசு: என்ன சார் நாங்க எல்லாம் போகனுமா? … ஆமாமா நீங்க அந்த பஸ்ட் இயர் ஸ்டூடண்ட் வச்சே இந்த ஆப்ரேஷன் , சாரி சாரி இந்த கொலையை நல்லா பண்ணுங்க என கூச்சலிட,ஆதி: பஸ்ட் இயர் ஸ்டூடண்ட் என்றதும் ஆதிக்கு தூக்கி வாரி போட்டது.

இவர்களால் இதை நன்றாக செய்ய முடியுமா?…என பலவாறு யோசித்தான்.வம்சி: ஆதியிடம் சென்று அவரின் தோல் மீது ஆறுதலாக கை வைத்து” எங்களால முடியும் சார்”,என்ற ஒரேயொரு வசனம் தான் பேசினான்.ஆதி: ஒரு தெளிவு பெற்று, “பர்ஸ்ட் இயரோ ,லாஸ்ட் இயரோ தைரியமா எதையும் பேஸ் பண்ண வேண்டும் என வந்திருக்க இவங்களே உங்களை விட சிறந்தவர்கள் என பேசினார்.

வாசு ப்ரண்ட்: என்ன தம்பி  ஜெயிலுக்கு போக அவ்வளவு ஆர்வமா?  என நக்கலாக வலது புற வாயை பிதுக்கி கேட்க,ஆதி:” ஷட் அப் கெட் லாஸ்ட்” என கத்தவாசு: போறம், போறம் இவனுங்கள வச்சிகிட்டு நீ என்ன தான் பண்றன்னு பார்க்குற மிஸ்டர் ஆதித்யா ராஜ். வாசு நண்பன்: ஆமா இது ஒன்னும் கபடி விளையாடுற கிரவ்ண்ட் இல்லை, சப்ஜுட் போட என எளக்காரமாக பார்க்க,வம்சி: “ஷட் அப்” சீனியர்  இவ்வளவு வாய் பேசுற நீங்க , ஏன் அவர் வர சொன்ன அப்போ எழுந்திருக்கவில்லை , தைரியமான ஆளாக இருந்தால் வய வேண்டியது தான என சீற,வாசு:  அடேங்கப்பா , நாங்க தான் தைரியமில்லாதவங்க , “நீங்க அப்டி என்னதான் கிழிக்கிரிங்கணு பார்க்கத்தான் போறம்” அதும் பஸ்ட் இயர  நம்பி களத்துல இறங்கிற இந்த ஆதிக்கு எதிரா ஒரு கூட்டத்தையே நாங்க கூட்டுவம் என கத்தினான்.பிரியா: என்ன சீனியர் ப்ளாக்மைலா ?.. இந்த ஆப்ரேஷன் அன்சக்க்ஷஸ் ஆனால் மட்டும் இந்த மாதிரிலாம் கூட்டத்தை கூட்டுங்க என சவால் விடுத்தாள்.வாசு: என்னம்மா துல்லுற ஓஓஓஓ வயசு அப்படி என்ன பண்ணுவ என  கூற,கௌரி: “என்னதான் உங்க ப்ராப்ளம்” வாட் யூ வான்ட் என  எரிச்சலாக கேட்க,வாசு: இப்படி கேளுங்க, நீங்களும் அவங்களுக்கு எங்கள மாதிரி எந்த ஒரு ஹெல்ப்பும் பண்ண கூடாது என கூறினான்.மகிழ்: “வாட் ஸ் திஸ் நான் சென்ஸ் “, என்னப் பேசுறிங்க ஹெல்ப் பண்ண வேண்டிய நாமலே இப்டி பண்ணா பேசண்ட் என்ன பண்ணுவாங்க ?என பொரிந்தாள்.யாஷினி: “அப்படியெல்லாம் செய்ய முடியாதுனா என்ன பண்ணுவீர்ங்கள்” என்று கேட்டாள்.வாசு: அப்ப எல்லாரும் ரெடியா இருங்க “வேலை முடிஞ்ச உடனே உங்களையும் இந்த ஆதி  என் நண்பன் போலவே ஜெயிலுக்கு அனுப்பி விடுவான்” என சொல்லி கொண்டே அவன் நண்பர்களுடன்  வெளியே சென்றனர்.கௌரி: என்ன சார் ஜெயிலு கியிலுன்னு சொல்றாங்க என குழப்ப முகத்துடன் ஆதியிடம் கேட்க ஆதி: ஆமா அவ ப்ரண்டு ஜெயில்ல தான் இருக்கான், ஆனால் அதுக்கு அவனே தான் காரணம். ஆப்ரேஷன் பண்ண  பேஷண்ட்டோட ரிலேஷன் கிட்ட 50 லேக்ஸ்  வரை பணம் பிடுங்க ட்ரை பண்ணான். அதான் அவன் ஜெயில கலி திங்கறான் என முழுவதுவமாக கூறி முடித்தார். ஆனந்த்: இப்பல்லாம் எங்க சார் கலி போடுறாங்க சிக்கன் பிரியாணி, ரைஸ்னு, விதவிதமா போடுறாங்க நீங்க வேற கலி, கம்மங்கூலுன்னுட்டு இருக்கிங்க என நிலைமையை மாற்றும் பொருட்டு பேச அனைவரும் பெக்கபெக்கவென  சிரித்தனர்.ஆதி: ஓகே ப்ரண்ஸ் இன்னும் 2 அவர்ஸ்ல இந்த ஆப்ரேஷன் ஸ்ட்டார்ட் ஆகிடும்னு நினைக்கிற அன்ட் அந்த பேஷண்ட் ஒரு “”ப்ரக்னன்ஸி லேடி” .       இவங்களுக்கு டுவிண்ஸ்  பேபி, அதுமட்டுமில்லை அவங்க ஹஸ்பன்ட் மிலிட்டரியில இறந்துட்டார் .  சோ எனக்கு “அந்த லேடி அண்ட் அந்த பேபிஸ்க்கும் எதுவுமே ஆக கூடாது ப்ரண்ஸ் ” என கூறினார் ஆதி.    கண்டிப்பாக சார் என அனைவரும் அவருக்கு வாக்கு கொடுக்க,      இன்னும் என்ன தோழா           

      எத்தனையோ நாளா       நம்மை இங்கு நாமே தொலைத்தோமோ வந்தாள் அலையாய் வருவோம்வீழ்ந்தாள் விதையாய் வீழ்வோம்                 

      என சுமித்ரா பாடினாள்.

ஆப்ரேஷன் தியேட்டரில்,   சிறிது மயங்கிய நிலையில் அந்த கர்ப்பிணி பெண் இருந்தாள். அவளது கண்களில் நீர் ஆறாக ஓட வலியில் துடி துடித்தாள்.     

சீப் டாக்டர் ஒருவரின் உதவியுடன் வேறு வழியில்லாததால் ” சீப் டாக்டரின் கருத்துப்படி பத்து டிரைனிங் டாக்டர்ஸ் ” இந்த ஆப்ரேஷன் செய்ய முடிவு செய்தனர்.     கர்ப்பிணி பெண்ணுக்கு இரத்தம் தேவைப்பட, அவளது ப்ளட் குரூப் பி நெகட்டிவ் (B-ve)என இருக்க, மகிழாகவே சார் என் ப்ளட் குரூப் அதான் சோ நான் டொனேட் பன்றேன் என சீப் டாக்டர் ராகவனிடம் சொன்னாள்.    அங்கிருந்த அனைவரின் மனதிலும் ஒரு நல்லிடத்தை பிடித்தாள் மகிழ். அவளிடம் நெருங்கிய வம்சி உனக்கு கூட உதவிலாம் செய்ய தெரியுமா ?… என சீண்டினான்‌   ” சார் நானும் வசிப்பையன் போல தான்”.. என கூறி  இரு கண்களை ஒரேமாதிரி மூடி கண்ணடித்தாள்.   

   டோனரான மகிழுக்கு  அனைத்து ஸ்கிரீனிங் டெஸ்டுகளும்  நெகட்டிவ் ( HBsAg, Anti Hcv,Hiv, Syphilis, mp,mf) என அனைத்தும் நெகடிவ் வர மற்ற வேலைகள் விறுவிறுவென ஆரம்பித்தது.வம்சியின் மொத்த கவனமும் மகிழின் மீதே இருக்க , கௌரி வம்சியை அவ்வப்போது நோட் செய்தான்.      டோனர் பிளட் கலக்சன் டிரிப் நேரடியாக கர்ப்பிணி பெண்ணுக்கு செலுத்த முயன்றனர்.     முதலில் மகிழின் கையில் வெய்ன் கண்டறிந்து இன்ஜெக்ட் செய்து அதை நேராக கர்ப்பிணி பெண்ணிடம் செலுத்த, வலியில் துடிதுடித்த பெண், அந்த டிரிப் கனக்க்ஷனை தட்டி விட்டாள்.     சோ வேறு வழியில்லாததால் இரண்டு குழந்தைகளில் ஒரு குழந்தயை நார்மல் டெலிவரி செய்து, மற்றொரு பேபியை ஆப்ரேஷன் செய்து எடுத்துவிடலாம்  என்று சீப் டாக்டர் கூறினார்.    

          மொத்தமாக ஆப்ரேஷன் உடை, கிளவ், மாஸ்க், கேப், அண்ட் ஆல் திங்ஸ்  ரெடியாக இருக்க,    லோகேஷ், ஆனந்த்  இருவரும் கர்ப்பிணி பெண்ணின் காது மடல்களிடம் சென்று,      சிஸ்டர், உங்க ஹெல்பும் இதுல எங்களுக்கு கொஞ்சம் தேவைப்படுது முடிஞ்ச வரை உங்களை வளைத்து புஷ் பண்ணுங்க சிஸ்டர் என ஊக்கப்படுத்தினார்கள்.    அந்த பெண் அந்த நிலையிலும் நான் செய்றேன் தம்பி என் இரண்டு குழந்தைகளும் எனக்கு வேணும் என் புருசன் ஆசைய நான் நிறைவேற்றுவேன் என கூறி புஷ் செய்தாள்.     

    அப்பெண்மணிக்கு பிரசவம் பார்ப்பது வம்சி மற்றும் கௌரி.” எந்த விதத்திலும் தைரியத்தை இழுக்க கூடாது என வேண்டி” அவனது முதல் சிகிச்சை யை தொடர்ந்தான் வம்சி.    “வெற்றி நிச்சயம் “, என கோசமிட்டு கௌரியும் சிகிச்சையை ஆரம்பிக்கலோகேஷ்: புஷ் சிஸ் புஷ் என கூறி அப்பெண் முதுகை வளைக்க உதவினான்.ஆனந்த்: வெல் சிஸ் வெல் என உற்சாகப்படுத்த,வம்சி: குழந்தை வெளியே வருகிறதா இல்லையா என பார்த்து அவர்களிடம் இல்லை என கையசைத்து கொண்டிருந்தான்.கெளரி: அந்த பெண்ணின் கைகால்களை நசுக்கி விட,யாஷினி ,மதுப்பிரியா : அப்பெண்ணின் வயிற்றை சிறிதுசிறிதாக நகற்றி குழந்தை வெளிவர உதவி செய்ய ,பிரியா: தாயின் வலியை அறிந்து அவளிடம் சென்று,         வலியின் உணர்வே           

          உன்         உயிர்கள் வெளிவர               உதவி செய்          என கவிதை கூறி  உற்சாகப் படுத்தினாள்.         ஆப்ரேஷன் தியேட்டரே பெரும் பரப்பரப்பாக இயங்கியது.      

       அப்பெண் முழு மூச்சாக இழுத்து ஹாஆஆஆஆஆஆஆ என கத்தி அவளை முழுதாக வளைத்து புஷ் செய்ய பனிக்குடத்திலிருந்து ஒரு குழந்தையின் தலை வெளியேற பனிக்குடம் உடைந்துவிட பாதியிலே சிறிதாக மயங்கிய நிலையை அடைந்தாள்.வம்சி: தலை வெளியை வர மெதுவாக அக்குழந்தை தலையை பிடித்து மென்மையாக வெளியே எடுத்தான்.கௌரி: இரண்டு கிளிப் போட்டு அந்த தொப்புள் கொடியை கட் செய்து அந்த குழந்தையை மகிழிடம் கொடுத்தான்.மகிழ்: அவ்வளவு சந்தோஷமாக அந்த குழந்தையை கையில் வாங்கி நெற்றியில் முத்தம் பதித்தாள்.அக்குழந்தை அழத்தொடங்கியது , சுமித்ராவிடம் குழந்தையை குடுத்து கிளீன் செய்து வர சொல்ல , மகிழை ஏளனப்பார்வை பார்த்து குழந்தையை கையில் வாங்கி , சுத்தம் செய்து மீண்டும் மகிழிடமே படுக்க வைத்தாள்.   மயங்கியவளை எழுப்ப லோகேஷ், ஆன்ந்த், பிரியா போராடினார்கள்.  கௌரி அவளது கால்களை தேய்த்து சூடேற்ற , லோகேஷின்  ஒரு அறையில் சிறிது விழிப்பு கொண்டாள்.   

   முதுகை வலைத்து ராகவன் அமர சொல்ல வயிற்றில் ஒரு குழந்தையுடனும் , குழந்தை பெற்ற வலியிலும் துடிதுடித்து கொண்டே அவளை முழுவதுமாக மடங்கி அமர்ந்து கத்தோ கத்தென கத்தினாள்.  அனைவரின் கண்களிலும் நீர் கடலாக ஓட,     

      வலி தாங்கமல் பெட்டின் மேலிருந்த கையை எடுத்து அருகிலிருந்த லோகேஷ் கையில் கீரினாள்.லோகேஷ்: அப்பெண்ணின் வலியை விட தன் வலி சிறியதென நினைத்து அப்படித்தான் சிஸ் அப்படிதான் என மோட்டிவேட் செய்யதாலும் அவனது கையில் இரத்தம் தடம் பிடித்து ஓடியது.கௌரி: அவளது முதுகில் அனஸ்தீசியா (மயக்கமருந்து) ஊசியை செலுத்த சிறிது நேரத்திலே மயங்கினாள்.வம்சி: எந்தவித பதட்டமின்றி அந்த ஆப்ரேஷனை ஆரம்பிக்க, மகிழிடம் சென்று அந்த பிளட் டிரிப் கனக்க்ஷன் செய்ய அவளது கையை பிடித்து வெய்ன் கண்டறிந்து ஒரே குத்தில் இர்த்தம் டிரிப் கனக்சனின் டியூப்பில் நிறைய மறுமுனையை கௌரி கர்ப்பிணி பெண்ணின் கையில் செலுத்த ,          மகிழின் ப்ளட் கர்ப்பிணி பெண்ணுக்கு நேரடியாக சென்றது.    

  வம்சி குத்துகையில் ஷ்ஷ்ஷ் என சிறிதாக சிணுங்கி கண்களை இருக மூடிக்கொண்டு, மறுமுனையில் பிறந்த குழந்தையை அணைத்தாள்‌ மகிழ்.   வம்சியின் மனம் முழுவதும் மகிழ் ஆட்கொள்ள அவளது நெற்றியில் இதமாக ஒரு மென்மை முத்தம் பதித்தான். அதையெல்லாம் உணராமல்  வசிப்பையா போய் அவங்களுக்கு ஆப்ரேஷன் பண்ணு என ஆணையிட்டாள்.     கர்ப்பிணி பெண் இடம் சென்று அவளது வயிற்றில் நன்றாக அசைவு கொடுத்து அடிவயிற்றில் ஒரு சிறிய பிளேடால் கீரினான்‌.      அப்பெண் மயக்க நிலையிலும் ஆஆஆஆ என முணுமுணுக்க, அடுத்த அடிவயிற்றில் இருந்த மற்றொரு லேயரை கிழித்தான்.மீண்டும் மீதியிருந்த ஒரேயொரு லேயரை பூவை விட மென்மையாக கிழிக்க, அம்மா அம்மா என கர்ப்பிணி பெண் கத்தினாள்.   

லோகேஷ் மற்றும் ஆன்ந்த் அவள் நெற்றி, கை கால்களை பிடித்துவிட்டனர்.  கர்ப்பிணி பெண் வலியில் அழுது அழுது கறைந்தாள்.வம்சி: கடைசி லேயரை கிளித்தபின் பனிக்குட தண்ணீர், பிளட் என இரண்டும் ஒன்றாக வெளியேற , வெளி வந்த அந்த குழந்தையை, அவன் அந்த பிஞ்சு குழந்தையின் தலையை நன்றாக பிடித்து கொண்டு ஒரே மூச்சாக வெளியெடுக்க, முழுவதுமாக மயங்கி அன்கான்சியஸ் நிலையை அடைந்தாள் கர்ப்பிணி பெண்.கௌரி: கிளிப் போட்டு கட் செய்து விட்டு அந்த குழந்தையை தற்போது பிரியாவிடம் கொடுத்தான்.வம்சி மற்றும் கௌரி வேறெதையும் கவனிக்காமல் , அந்த கர்ப்பிணி பெண்ணின் கிழிந்த வயிற்றை தையலிட அவர்களுக்கு உதவியாக சுமித்ரா இருந்தாள்‌.  காட்டன், சிசர், ஸ்டுச்சிங் கம்பி என எதை கேட்டாலும் காலதாமதம் இன்றி எடுத்து கொடுத்தாள் சுமி.  

     அந்த ஆப்ரேஷன் இரண்டு மணி நேரத்தில் முடிவடைய, அனைவர் மனதிலும் அவரவர் அம்மாவின் எண்ணம் தோன்றியது .    சிறிது மயக்க நிலையில் மகிழ் இருக்க , வம்சியின் கண்கள் தானாக கலங்கியது. 

   தன்னை தானே சரிசெய்து கொண்ட வம்சி , பிரியாவிடம் சென்று குட்டிமா குழந்தை ஏன் அழவில்லை என கேட்க,     அனைவரது மனதும் தாறுமாறாக துடித்தது.                        

 

1 thought on “10) மோதலில் ஒரு காதல்”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *