நீண்ட நாட்கள் பின்னர் வந்த அவன் அழைப்பில் இன்பமாக அதிர்ந்தவள் துளியும் தாமதிக்காமல் எடுத்து பேசினாள்.
“ஹலோ யாதவ்…”
“ஹலோ செல்விமா என் மேல கோபமா இருக்கியா?..” என்ற அவனின் குரல் கேட்டு எங்கு இனி அவள் கோபத்தை கட்டி வைக்க “ச்சே ச்சே அதெல்லாம் இல்லை யாதவ்…”
“சாரி தங்கம் அப்பா புது பிஸ்னஸ் ஸ்டார்ட் பண்ணிட்டாரா அந்த வேலையிலே சுத்திட்டு இருந்தேன் சுத்தமா உன்கூட பேசவே முடியலைடா செல்வி…”
“வேலைன்னா என்ன பண்ணுறது விடுங்க யாதவ் அதான் இப்போ பேசுறீங்களே அப்பறம் என்ன சாப்டீங்களா?..”
“இல்ல இனிமே தான் சாப்பிடனும் நீ டாக்டர்கிட்ட போனியா என்ன சொன்னாங்க…” என அவன் கேட்டதும் டாக்டர் கூறிய அனைத்தையும் ஒன்று விடாமல் சொன்னவள் “க்ரீம் மாதிரி ஒரு மருந்து கொடுத்து இருக்காங்க அது மூலமா கொஞ்சம் குணமாகிட்டு வருது…”
“அப்படியா ஆனா சாரி தங்கம் என் ப்ரெண்டு குடுத்தான்னு என்ன ஏதுன்னு பார்க்காம உன்கிட்ட அதை வந்து குடுத்திட்டேன் அதனாலே தானே உனக்கு இப்படி ஆகிடுச்சு என்னை மன்னிச்சிடுமா…” என்றவனின் குரல் உடைந்ததை கேட்டு வருத்தப்படுகிறான் என்பதை புரிந்து கொண்டவள் அவனை சமாதானப்படுத்த இறங்கி விட்டாள் கலைச்செல்வி.
“நீ என்ன சொன்னாலும் மனசு கேட்க மாட்டேங்குது உன்னை பார்க்கனும் போல இருக்கு இப்போ உன் வீட்டுக்கு வரவா…”
“இப்போவா? அப்பா அம்மா எல்லாரும் வீட்டை இருக்காங்க இந்நேரம் நீங்க வந்தா என் அம்மா என்னை நல்லா மொத்தி எடுத்திருவாங்க…”
“ப்ளீஸ் செல்வி ஜஸ்ட் ஒரு மணிநேரம் வந்து தான் பார்த்திட்டு போயிடுறேன்…”
“யாதவ் இது என்ன விளையாட்டு நான் நாளைக்கு காலேஜ் வரேன் அப்போ பார்த்துக்கலாம் அதுவரைக்கும் வெயிட் பண்ணுங்க…”
“நாளைக்கு வரைக்கும் வெயிட் பண்ணனுமா? சரி ஓகே…” என்றவன் சிறிது நேரம் பேசிவிட்டு வைக்க பெண்ணவளும் நிம்மதியாக உறங்கியவளுக்கு அடுத்தடுத்த அதிர்ச்சிகள் காத்திருக்க போகின்றது என்பதை அறியாமல் போனாள்.
வழமையாக காலேஜ் சென்றவள் அன்று ஸ்ரீ வராததால் தனியாக இருக்க வேண்டிய நிலை லைப்ரரியில் இருந்து எடுத்த புத்தகத்தை திருப்பி கொடுக்க வேண்டி இருந்ததால் அதை கொடுத்து விட்டு வரலாம் என்று போனவள் இவளை ஆரம்பத்தில் இருந்து தொல்லை செய்து கொண்டு இருந்த அந்த நால்வரின் பேச்சையும் கேட்க நேர்ந்தது கூடவே அவன் கூடவே சுத்தும் செந்திலின் குரலையும்.
“செந்தில் அண்ணா எங்களாலே அந்த பொண்ணு ரொம்பவே கஷ்டப்பட்டிருச்சு இதுக்கு மேலேயும் பேச சொன்னா எப்படி அண்ணா? பார்க்கவே பாவமா இருக்கு அது வாழ்க்கையே விட்டிடுங்க நாங்களும் ரொம்ப கஷ்டப்படுற குடும்பத்திலே இருந்து வந்தவங்க தான் நாங்க படிச்சு தொழில் எடுத்தா தான் எங்க குடும்பத்துக்கு சோறு போட முடியும் இப்படி எங்க படிப்பை வெச்சு மிரட்டி கலைச்செல்விகிட்ட இப்படி நடந்துக்க வைக்கிறீங்களே உங்களுக்கு கொஞ்சம் கூட மனசாட்சின்னு ஒன்னு இல்லையா?நீங்க எங்கே படிப்பை வெச்சு பண்ண சொல்லுறதாலே கடுப்புலே அந்த பொண்ணை ஓவரா டார்ச்சர் பண்ணிட்டோம்..”
“அந்த பொண்ணு காலேஜ் வர முன்னாடியே போட்டோவை காட்டி ரேகிங் பண்ண வெச்சு அதுவும் அந்த பொண்ணோட தோற்றத்தை வெச்சு பேச சொல்லி கட்டாயப்படுத்தினீங்க…”
“கட்டாயப்படுத்தினது மட்டுமா? ஏன் ஸ்டேஜ்ல அந்த பொண்ணுக்கு தண்ணி அடிச்சு ஸ்பீக்கர் வயரையும் கழட்டி விட்டு அவமானப்படுத்த சொல்லிட்டு நீங்க ரெண்டுப்பேரும் நல்லவங்க மாதிரி எங்களை மாட்டுக்கு மாதிரி போட்டு அடிச்சிங்க அத்தனை பேர் முன்னாடி அந்த பொண்ணு மட்டும் இல்லை நாங்களும் தானே அடி வாங்கினோம் இன்னும் அந்த தடயம் கூட போகல அடிக்கிறது கூட ப்ளேன்ல இல்ல ஜஸ்ட் ரெத்தம் வர மாதிரி மேக்கப் பண்ணிக்கலாம்னு நீங்க சொன்னீங்க ஆனா யாதவ் சீனியர் அடிச்ச அடி இப்போவும் வலிக்கிற மாதிரி இருக்கு…”
“எங்களை வெச்சு நாடகம் ஆடினது எல்லாம் போதும் இனிமே எங்களை தொந்தரவு பண்ணாதீங்க அதான் நீங்க சொன்னதை விட அதிகமாவே பண்ணிட்டோமே அப்பறம் என்ன ப்ளீஸ் விட்டிடுங்க…”என நால்வரும் மாறி மாறி பேசியதை அலட்சியப்படுத்திய செந்தில்.
“டேய் டேய்… பொலம்பாதீங்கடா அதான் எல்லாத்துக்கும் சேர்த்து பணம் கொடுக்குறோம்ல அடியை வாங்கிகிட்டா தான் என்ன… சரி இதுதான் கடைசி அதை ஏதாவது சொல்லி மட்டம் தட்டி அழ வைங்க போதும் அப்போ தான் திரும்ப அது எங்க வழிக்கு வரும்….”
“அண்ணா நீங்க அந்த பொண்ணோட கலரையும் அழகையும் வெச்சு மட்டம் தட்ட சொன்னீங்க பண்ணோம் திடீர்னு அந்த கருப்பு கலர் இருந்த இடம் தெரியாத மாதிரி வந்தா இப்போ அதையும் விட்டு வைக்காம ஏதாவது சொல்லுங்கன்னு எங்ககிட்ட வந்து நிக்கிறீங்க அப்படி அந்த பொண்ணை வெச்சு என்ன தான் பண்ண போறீங்க இல்ல அந்த பொண்ணை அப்படி கேலி பண்ணி பேசுறதுல உங்களுக்கு அப்படி என்ன நிறைஞ்சிட போகுதுன்னு தான் எனக்கு சுத்தமா தெரியல…”
“பணம்டா பணம் என்ன புரியலயா? அவளை வெச்சு நாங்க உழைக்கிறோம் அவளோட வீக்னெஸ் எங்களோட பலம் அந்த தாழ்வு மனப்பான்மையை வெச்சு தான் நாங்க பணம் சம்பாதிக்கிறோம் எங்களுக்கு அவளோட ஸ்கின் வேணும் அதுக்காக தான் உங்களை வெச்சு அவளை அசிங்கப்படுத்தி பேசுற மாதிரி சீன் க்ரியேட் பண்ணி கலைச்செல்வியே நம்ப வைத்தது எல்லாம் அவளை எங்களோட வேலைக்கு பயன்படுத்த நாங்க இன்னும் நெருங்க வேண்டி இருந்ததாலே தான் யாதவ் அவளை காதலிக்கிறதா நடிச்சிட்டு இருக்கான்…”
“அப்போ யாதவ் அண்ணா உண்மையா லவ் பண்ணலயா? என்ன தான் எங்களை அப்படி இப்படி பண்ண சொன்னாலும் உங்களை மாதிரி ஓவரா பண்ண சொன்னதில்லை ரொம்ப காயப்படுத்த விடமாட்டாரு அவரு கலைச்செல்வியை பார்த்துக்கிற விதத்தை பார்த்து உண்மையா தான் நேசிக்கிறாருன்னு நினைச்சேன்…”
“அப்படியா என் நண்பன் அப்போ நல்லா தான் நடிச்சிருக்கான்ல…” என சிரித்த செந்திலை அந்த நால்வரும் என்ன ரகம் என்பது போல் பார்த்து வைக்க “சரி சரி பேச்சு எல்லாத்தையும் விட்டிட்டு சொன்ன வேலையே செய்ங்க உங்க எதிர்காலம் எங்க கையிலே செய்ய மாட்டேன்னு ஏதாவது பிரச்சினை பண்ணா அப்பறம் லைஃப்யே க்ளோஸ் பண்ணிடுவோம் ஞாபகம் இருக்கட்டும்…” என்றவன் அங்கிருந்து செல்ல நடந்த அனைத்தையும் கேட்டுக் கொண்டு இருந்தவளுக்கு எதையும் கிரகித்துக் கொள்ள முடியவில்லை அவளை மீறி அழுகை தான் வந்தது எவ்வளவு தடுத்தும் முடியவில்லை அதே நேரம் அந்த நால்வரும் வேறு வழியின்றி அவன் சொல்லி சென்ற வேலைமை முடிக்கலாம் என்று வந்த பொழுது இவளை காண நேர்ந்தது முதலில் திகைத்தவர்கள் அவளின் முகத்தில் பிரதிபலிக்கும் ஏமாற்றத்தின் வலியை கண்டு அவள் அனைத்தையும் கேட்டு விட்டாள் என புரிந்து கொண்டனர்.
அவர்கள் அவளை நோக்கி வந்தனர் அவர்களை பார்த்தவள் “அண்ணா… நீங்க இப்போ பேசிக்கிட்டது எல்லாம் உண்மை தானா?…” என கேட்டாலும் அப்படி இருந்திடக்கூடாது என்று ஒரு பக்கம் மானங்கெட்ட மனம் நினைத்துக் கொண்டது.
“எங்க மேல சத்தியம் இவங்க ரெண்டு பேரும் தான் எங்களை அப்படி உன்னை பேசி அசிங்கப்படுத்த எல்லாம் சொன்னது நாங்க விரும்பி உன்னை பண்ணது இல்லைமா…”
“ஆமா கலைச்செல்வி அந்த யாதவ் நல்லவன் இல்லை உன்னை காதல் பேர்ல ஏமாத்துறான் ஆனா உன்னை மாதிரி நிறைய பொண்ணுங்களை அவன் தேவைக்கு வேற விதமா யூஸ் பண்ணிக்கிறான்னு மட்டும் தான் எங்களுக்கு தெரியும் ஆனா என்ன ஏதுன்னு சரியா தெரியல அதை ரொம்ப சீக்ரெட் ஆஹ் வைத்திருக்கான் அந்த யாதவ் எப்படியாவது அவன்கிட்ட இருந்து தப்பிச்சிடு அதான் உனக்கு நல்லது…”
“ஆமா தப்பிச்சிடு நீ எதுக்காக இந்த காலேஜ் வந்தியோ அதுக்கான வேலையே பாரு அவனை கண்டுக்காத நாங்களும் உனக்கு உண்மை தெரிஞ்சிடுச்சுன்னு சொல்ல மாட்டோம்…”
“அப்பறம் கலைச்செல்வி சின்ன விஷயத்துக்கும் பயந்து அழுதுட்டு நிக்காதே அதை தான் அவனுங்களுக்கு சாதகமா பயன்படுத்திக்கிறாங்க இனியாவது தைரியமா அலர்ட்டா இரு பத்திரம்…” என்று விட்டு அந்த நால்வரும் போக மடங்கி அமர்ந்தாள் பெண்ணவள் யாரை நல்லவன் என்று நம்பினாளோ அவன் கெட்டவனாகவும் கெட்டவர்கள் என்று நம்பியவர்களை அந்த நல்லவன் தான் தனக்கு எதிராக பயன்படுத்தி இருக்கிறான் என்று தெரிய வந்ததில் மொத்தமாக இடிந்து போனாள் கலைச்செல்வி.
Adapavi yadhav neeya ippadi panra nallan mathuri itunthu n
இப்பவாவது முழிச்சு மீண்டு வந்துட்டா சரி. இல்லை, இன்னும் இன்னும் அடிப்பட்டே தீருவேன்னு சொன்னா யார் என்ன செய்ய முடியும்…?
Sema sema interesting epi
Nice epi👍
அடப்பாவி அரசியல்வாதி பையன் தானே