Skip to content
Home » 12) மோதலில் ஒரு காதல்

12) மோதலில் ஒரு காதல்

வம்சி சார் இந்த படிப்பு எக்ஸாம்க்குலாம்  முன்னாடி நாம போக வேண்டிய இடம் ஒன்னு இருக்கு வாங்க போகலாம் என்று மகிழ் சொல்ல,   ப்ச் எங்க மகிமா போகனும் டையர்டா இருக்கு போய்தான் ஆகனுமா என களைப்பில் கேட்டான் வம்சி.          சொல்ல மாட்டேன் ஆனா நீங்கதான் கூட்டு போகனும் என மகிழ் சி

று பிள்ளை தனமாக கேட்க, காதல் வயப்பட்ட கள்வன் வேண்டாம் என்றா சொல்லி விடுவான்.     மகிழ் தனியாக இருந்தால் தன் காதலை வெளிப்படுத்த ஈசியாக இருக்கும் என வம்சி யோசனையில் இருக்க,   

    ஓடிச்சென்று பிரியா ,கௌரி, ஆனந்த், லோகேஷ் என நால்வரையும் அழைத்து வந்தாள் மகிழ்‌.     மகிழினியை பார்த்த வம்சி , ஐயோ இவள் என்ன இப்படி இருக்கா?  என்ன மட்டும் கூப்பிட்டு இருக்கான்னு நினைத்து ஏகப்பட்ட கனவு கண்டனே எல்லாத்தையும் பொசுக்குனு  சுக்கு நூறா உடைச்சிட்டாளே இந்த குள்ளச்சி என அடிவயிறு பற்றி எரிந்தது.       வம்சியிடம் வந்த மகிழ் கிளம்பலாம் சார் எனக் கூற , நான் வரலை

மகி  அதான் இத்தனை பேரு இருக்காங்கல்ல அவங்களோட போய்டு வா என மெல்லிய குரலில் கூறினான்.     அய்யோ அறிவு கெட்ட டாக்டரே எல்லாரும் நீங்களாகிட முடியுமா வாங்க சார் போலாம் என அழைக்க,     நீங்க ஆகிட முடியுமா அப்ப மகிழும் என்ன காதலிக்கிறாராளா?  என்ற நப்பாசையில் இல்ல இது கனவா என  யோசனையில் நின்றிருந்தான்‌ வம்சி.     

   பட் நம்ம மகி, இன்னைக்கு நீ மாட்டுனடா மாங்காமடையா என ஒரு கள்ள சிரிப்பு சிரித்து, அவன் கையை பிடித்து இழுத்துச் செல்ல,      மகிழினியை பார்த்த வண்ணம் அவளுடனே நகர்ந்தான் வம்சி.  அவர்கள் பின்னே  பிரியாவின் கையை பிடித்து கொண்டு கௌரி அழைத்து சென்றான்.      மகிழ் வழி சொல்ல வம்சி காரை செலுத்தினான், இவள் என்ன செய்ய போறாளோ என பிரியா யோசித்து அடியே குள்ள எங்கதான்‌ போக சொல்ற , பாவம் வம்சி அண்ணா என வம்சிக்கு பரிந்து பேசினாள் பிரியா‌.  

    உனக்கு  என்னடி பொறாமை வாய அடக்கி உட்காரு இல்லனா உன்ன தூக்கி வீசிடுவன் பாத்துக்கோ என மிரட்டினாள் மகிழ்.      

வாயின்‌மீது ஒரு விரலை வைத்து அடக்கமாக அமர்ந்த பிரியாவை , எதுக்கு செல்லம் வம்பு.  அது அவங்க விசயம் நம்ம போகக்கூடாது என அறிவுரை கூறிய கௌரியை போதும் போதும் நிப்பாட்டு காதுல ரத்தம் வர அளவு அட்வைஸ் பண்ணுவ போல என கௌரியின் வாயை அடைத்தாள் பிரியா.       

சார் அங்க நிறுத்துங்க என மகிழ் சொல்ல  ஒரு பெரிய ஷாப்பிங்மாலின் முன்‌நிறுத்தினான் வம்சி.  மகிழ் வாடா வா என் டிரஸ்ஸையா குறை சொன்னாய். உன்ன என்ன பண்ண போறன் பாரு என மனதில் நினைத்து அவனை பார்க்க, வம்சியோ ஒரு வேலை லவ் சொல்றதுக்கு கிஃப்ட் எதாவது வாங்குவாளோ என பூரித்து கடையின் முன் நிறுத்திய வேகத்தில் வா மகிமா போகலாம் என அழைக்க, வரேன் சார் என மகிழ் கூறினாள்.     சிறிது கோபமாக என்ன சார் மோருனுட்டு  இருக்க பேர் சொல்லியே கூப்பிடு, ஓக்கேவா  (காதலனாக உள்ளுக்குள் நினைத்து வெளியில் ) என சொல்ல,   நம்ம எப்பவும் அப்டி தான் கூப்பிடுவோம் இவனுக்கு இப்போதான் தெரியுதோ என விழிக்க   காட்இட் என வம்சி கேட்க, ம் சார் என திரும்ப சொல்ல , மூக்குப்புடைத்தது வம்சிக்கு ,    ஈஈஈஈஈ என பல்லை காட்டி கடையில் சென்று 🏃 வாங்க வேண்டியவற்றைவாங்கி விட்டு வெளியே வந்த மகி, டேய்  என அழைக்க வம்சி எந்தவித கலக்கமின்றி நின்றான் ‌. அவன் முன் வந்த நின்று ஏன் காது கேட்காதா என மகி கேட்டாள்.     

  எதுக்கு இந்த குள்ளச்சி இப்டி இங்க வந்து கத்திட்டு இருக்கா என யோசித்து காது கேட்களடா  என வம்சி கூற, ஓஓஓஓ அதுவும் போச்சா என கலாய்த்தாள்.   

   என்ன என கேட்க , சரிசரி உள்ள போய் பில் கட்டிட்டு வா என கொஞ்சம் சத்தமாக கத்த , எதுக்கு இப்படி கத்துற பொறுமையா சொல்லேன் என்ற வமசியிடம் நெருங்கி நீ தானடா காது கேட்களனு சொன்ன என உச்சி கொட்டினாள்.     சரி போதும் வா என அழைத்து சென்று பில் கேட்க , கௌண்டரில்  நின்றவர் குடுத்து பில்லில் நெஞ்சடைத்து நின்றான் வம்சி.    

என்ன  பில்லா  இதுஉஉ என மண்டையை பிய்த்து கொண்டு, மகிழை பார்க்க அவள் சிரித்து கொண்டே  பில்ல கட்டிட்டு வாடா என கூறினாள்.     ஒரு மூச்சை இழுத்து விட்டு ,500 ரூபாய்க்கு வாங்கிருப்னு பார்த்தா 50000 ரூபாய்க்கு அப்புடி என்னதான் வாங்குன என  கேட்க,     

என்ன டா எப்ப பாத்தாலும் ச்சும்மா சும்மா கேள்வி கேட்குற, கட்டிட்டு வாடானா கட்டு என கூறிவிட்டு கார் அருகில் சென்று நின்றாள்.அவனும் அவள் பின்னே சென்று என்னாளலாம் பில் கட்ட முடியாது என  சொல்ல அவனது பர்சை பிடிங்கி ஏடிஎம் கார்டு எடுத்து கொண்டு கடைக்கு சென்ற மகிழை பிடித்தான் .      எப்போதும் போல அவள்  வில்லத்தனத்தை தொடங்கினாள் மகிழ்‌.       அவன் கையை நறநறவென      பிடித்து கடித்து விட்டு,            அவனிடம் சென்று நீ   தான வம்சி அன்னைக்கு சொன்ன அந்த ஜீன்க்கு பிளாக் கலர் டீசர்ட் போட்டாதான் நல்ல இருக்கும் இது நல்லா இல்லனு  அதுக்கு தான் இங்க வந்து கொஞ்சமா பட்சஸ் பண்ணுன அதுல எதாவது தப்பா என அப்பாவியாக  கேட்டாள்.என்னது கொஞ்சமா ???? என வம்சிக்கு விழியே பிதிங்கி விட்டது.ஆமா வம்சி கொஞ்சம் தான் என சொல்லி இது கூட எனக்காக பண்ண மாட்டிங்களா என அவனை பார்த்து கேட்க,    பிள்ளை ஏதோ பிளான் பண்ணிட்டா இவகிட்ட அடி, கடிலாம் வாங்கி சாகுறதுக்கு பில்லையே கட்டிடலாம் என பதறியடித்து கார்டை பிடிங்கி ஓடிச்சென்று பில்லை கட்டினான்.     அவனை பார்த்து இனிமே எதாவது சொல்லுவ இல்ல சொல்லித்தான் பாறேன் நீ தான் தைரியமான ஆளாச்சே சொல்லு என பேசி மகிழ்  புன்னகைக்க , அவள் மண்டையில் நங்கென்று கொட்டினான் கௌரி.   நானும் போனாப்போகுதுனுப் பாத்தா என் மச்சிய ரொம்ப தான் படுத்துற என கௌரி  எகிற,        

        நல்ல வேலை உன் மச்சி பச்சி ஆகலனு சந்தோஷப்படு என கூறி சிரித்தாள் மகிழ்.        

   இவள என  கொஞ்சம் பொறிந்து தள்ளிவிட்டு வேகமாக வம்சியிடம் சென்று அவளுக்கு தான் அறிவில்ல உனக்குமா இல்ல என கேட்க ,   ”  உன்கூட இருக்கப்ப அதுலாம் எனக்கு இருக்குமா “… என மகிழை ரசித்துகொண்டே சொன்னான் வம்சி.   என்ன ஆனாலும் என்ன கலாய்க்காம மட்டும் இருக்க மாட்ட என கௌரி பிதற்ற, எனக்கு வாய்த்த ஒரே அடிமை நீ தான் உன்ன விடுவேனா என பேசிக்கொண்டே காரிடம் வந்து மகிழிடம்  போலாமா என கேட்டான் வம்சி.      

போய்டலாம்  பட் இந்த பட்சஸ்ஸெல்லாம் யாரு உங்க பாட்டியா தூக்கிட்டு வருவாங்க என கேட்க, வம்சியின் கோபம் தலைக்கேறியது. இத பாரு உனக்கு பில் கட்டுனதே பெருசு இதுக்கு மேல எதாவது பேசுன உன் பல்லுபகுடலாம் உடைச்சிடுவேன்  என கத்த , அமைதியாக காரில் அமர்ந்தவள் அவள் வீடு வரும்வரை வாயை திறக்கவில்லை.      அவளை ட்ராப் செய்து விட்டு வேகமாக காரை எடுத்து சென்றவனையை பார்த்து நின்றிருந்தாள் மகிழ்.         _________________&&&&&_______________      

   அடுத்த நாள் காலை குரூப் டிஸ்கஸ்சிங் என்ற பெயரில் மகிழின் வீட்டில் அனைவரும் கூடினார்கள்.                  அவகிட்ட அப்டி கோபப்பட்டிருக்கக்     கூடாது ,அவ காதல் சொல்ல வரப்போ நானே கெடுத்துக்கிட்டன்.  என்ன இருந்தாலும் அவ பண்ணுனதும் தப்பு தான். ஆனாலும் இவகிட்ட மட்டும்  ஈகோ பாக்க முடியிலயே , நம்மலா போய் மன்னிப்பு கேட்கலாமா என புலம்பி கொண்டிருந்தான் வம்சி.            

   ஏதோ ஒரு இனம் புரியாத உணர்வு மகிழின் மனதை ஆட்டி படைத்தது. அது அவள் அதிகாலை  கண்ட கனவால் ,    வம்சியின் கையில் சிக்கிய மகிழை விடுவிக்க அங்கு யாருமில்லை, அவனது முத்து பற்களை காட்டி முதன் முதலில் சிர்த்த வம்சியை கண் கொட்டாமல் ரசித்திருந்தாள் .  

   அதனை உணர்ந்த வம்சி மகிழின் இதழ் நோக்கி குனிந்து என்ன செல்லம் அப்டி பார்க்குற, உனக்கு அவ்வளவு பிடிச்சிருக்கா என்று கேட்டான் வம்சி.    ஆமா என் ஹஸ்பன்ட் சிரிக்கிறது எனக்கு பிடிச்சிருக்கு அதனால் பார்க்குற உனக்கென்னயா , என மகிழ் கூறினாள்    சிறிது கூட இடைவெளி விடாமல் கண்களில் ஆரம்பத்த முத்தமழையை இறுதியாக அவளின் இதழை பார்த்து வர அடித்து பிடித்து எழுந்து விட்டாள் மகிழ்.          என்றுமே வம்சியை இவ்வாறு காணாதவளுக்கு பதற்றம் மட்டுமே ஏற்பட்டது ‌.       

    என்ன இது வசியும் நானும் என்ன இப்படி ஒரு கனவு , இதும் நல்லாதான் இருக்கு ஆனா அவன்தான் எப்ப பார்த்தாலும் என்கிட்ட சண்டையே போடுறானே எனக்கும் அவனுக்கும் செட் ஆகாது,அதும் அவன் எங்க நான் எங்க என்று யோசித்தவள்,        ஆதலால் அவன் வந்தாலும் அவனை கண்டு கொள்ள கூடாது என முடிவெடுத்தாள்.        இருவரின் இதயம் ஒன்று           சேர துடிக்கும் போது       இருவரின் மூளையோ           பிரிக்க திட்டமிடுகிறது💔❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️    அனைவரும் படிப்பில் மட்டுமே கவனம் செலுத்தி இருக்க, அங்கு வந்த தேவசேனா மகிழை அழைத்துதேவா: மகி நாங்க என் ப்ரண்ட் வீட்டுக்கு போகுனும்குற கட்டாயத்துல இருக்கோம் அவங்களுக்கு எதாவது சாப்பிட செஞ்சு குடுடா மாவு பக்கத்துலயே உப்பு, சோட்டாப்புலாம் வச்சிருக்கேன் பாத்து பத்திரமா பண்ணு சரியா என கேட்கமகி: யூ டோண்ட் வொரி சேனாமா ,நான் பாத்துக்குற நீ பயப்படாமல் போ என சொல்ல,தேவா : பயமே உன்னால்தான் தயவு செஞ்சி தப்பு தப்பா பண்ணி பிள்ளைங்கள  கொன்றத என அட்வைஸ் செய்பவரை முறைத்து தள்ளினாள் மகிழ்.

இதை ஒட்டு கேட்டுக்கொண்டிருந்தான் மாதவன்.பெற்றவர்களை வழி அனுப்பி வைத்த மகிழ் ,பிரியா, யாஷினி,மதுப்பிரியா ,மது என ஒட்டு மொத்த பெண்களிடமும் விசயத்தை சொல்ல விஷயம் தீயாய் ஆண்களுக்கும் பரவியது.பெண்கள் அனைவரும் சமையலறை செல்ல,     வம்சி மகிழிடம் பேச வாய்ப்பு கிடைக்காமல் தத்தளித்து கொண்டிருக்க,         

ஐய்யோ எங்கள காப்பாத்துங்க எங்கள காப்பாத்துங்க என்ற குரலில் ,         ஐயோ என்ன சத்தம் யாருக்கு என்ன ஆச்சு என பதறியடித்து சமயலறைக்கு வம்சி  ஓட,     

   ❤️❤️❤️ சண்டை மீளும் 💞💞💞

1 thought on “12) மோதலில் ஒரு காதல்”

  1. CRVS2797

    ஆனாலும் ரொம்பவே ரிஸ்க் எடுக்குறாங்கப்பா சாப்பாடு விஷயத்துல…இது தேவையா..?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *