Skip to content
Home » 13.அழகிற்கு ஏதடி வர்ணங்கள்

13.அழகிற்கு ஏதடி வர்ணங்கள்

வலிகள் புதிது இல்லை கடந்து வந்த பாதை எல்லாம் உருவ கேலியினால் பல முகங்களின் மூலம் வலியை அனுபவித்து இருந்தவள் தான் ஏன் இவர்கள் செந்தில் சொல்லி செய்தாலும் அவர்களின் வார்த்தைகள் அவளை காயப்படுத்தாமல் இருக்கவில்லையே ஆனால் அதை விட இந்த ஏமாற்றத்தின் வலியை தாங்கிக்கொள்ள முடியாமல் திண்டாடினாள் அவன் பேசிய காதல் வார்த்தைகள் தன்னை அவன் பார்த்துக்கொண்ட விதம் என அனைத்தும் கண் முன் நிழலாக வந்து போக தாங்க முடியாமல் வாய் விட்டு கத்தி அழுதாள் நல்ல வேளை அது யாருக்கும் கேட்கவில்லை அதற்கு மேலும் அங்கு இருக்க முடியாமல் உடனே வீட்டை நோக்கி நடந்தவள் ஆட்டோவை கூட பிடிக்காமல் தன் பாட்டிற்கு நடந்து சென்றவளின் முன்பு காரை கொண்டு வந்து நிறுத்தினான் யாதவ்.

“செல்வி உனக்காக நான் வெயிட் பண்ணிட்டு இருக்கேன் ஆனா நீ என்னை கண்டுக்காம போற வா வந்து ஏறு கொஞ்சம் தூரம் தனியா போய் பேசலாம்…” என்றவனை அடிப்பட்ட பார்வை பார்த்தவள் ஏதும் பேசாமல் நடக்க புரியாத பார்வையுடன் அவளை பின்தொடர்ந்து வந்தவன் “எதுக்கு கோபமா இருக்க ப்ளீஸ் என்னை பாரு செல்வி என்னன்னு சொன்னா தானே தெரியும் செல்வி செல்வி… அட நில்லுமா நீ பேசாம இருக்கும் போது எனக்கு அதிகமா வலிக்குது…” என்றவனின் கன்னத்தில் மொத்த கோபத்தையும் சேர்த்து விட்டால் ஒரு அறை.

“ரொம்ப நடிக்காதேடா எனக்கு எல்லாம் தெரியும் உன்னையும் போய் நல்லவன்னு நினைச்சேன் பாரு என்னை தேய்ந்த செருப்பாலே அடிக்கனும் எப்படி எப்படி நீங்களா ஒரு நாலுபேரை செட் பண்ணி என்னை கேவலமா பேச வைப்பீங்களாம் அப்பறம் அதை தட்டி கேக்குற மாதிரி வந்து நீங்க உங்களை ஒரு ஹீரோவா காட்டிப்பீங்களாம் இதுலே நீ ரொம்ப கவலைப்படுற மத்தப்படி எனக்கு இந்த கலர் பத்தி எந்த பிரச்சனையும் இல்லை நீ கேட்டதுக்காக தான் பண்ணுறேன்னு க்ரீமை வாங்கி கொடுத்து…. ஹப்பா சாமி உன் ட்ராமாவே நினைச்சா இப்போ கூட அப்படியே மெய்சிலிர்க்குது ச்சே உனக்கு அசிங்கமா இல்லை இந்த பொழப்பு பொழைக்கிறதுக்கு போய் செத்து தொலையலாம்…” என்றவளை நிமிர்ந்து பார்த்தவனின் விழிகள் சிவந்து போனது அதே நேரம் அவள் எதிர்பாராத நேரத்தில் அவளை இழுத்து தன் காரினுள் தள்ளி உடன் ஏறியவன் உடனே அவளை அங்கிருந்து கடத்தி சென்றான்.

“விடுடா… என்னை… விடு…” என கார் கதவை திறக்க போராட அவனோ கார் கதவை லாக் பண்ணி அவள் முகத்தில் மயக்க மருந்து ஸ்ப்ரேயை அடித்து விட சிறிது நேரத்திலே மயங்கி சரிந்தாள் பெண்ணவள் தன் ஃபோனை எடுத்து செந்திலுக்கு அழைத்தான்.

“எங்கயாச்சும் விஷயத்தை உலறினியா? அவளுக்கு விஷயம் தெரிஞ்சு போச்சு இன்னைக்கு அந்த நாலுபேரை விட்டு பேசி அவள் கவலைப்பட்டு இருக்கிற நேரம் சமாதானப்படுத்திற மாதிரி அப்படியே தூக்கிட்டு வரலாம்னு ஸ்கெட்ச் போட்டேன் ஆனா நடந்தது வேற ஆமா நீ உடனே நம்ம இடத்துக்கு வந்திடு நானும் அங்கே தான் வரேன் அங்க‌ வெச்சு மீதியே பேசிக்கலாம்…” என்றவன் அழைப்பை துண்டித்து விட்டு தன்னருகில் இருந்தவளை தான் பார்த்தான்.

“சாரி செல்வி நான் பண்ணுறது தப்பு தான் ஆனா அதுக்காக என் லவ் பொய் இல்லை அந்த லவ்வோட சேர்த்து இந்த தப்பையும் பண்ணிடுறேன் ரியலி சாரி ஆனா எதுக்காகவும்‌ என் வேலையை நான் விட மாட்டேன்…” என மயக்கத்தில் இருந்தவளிடம் பேச அவளுக்கு அது கேட்டால் தானே ஆனால் பெண்ணவளோ அவன் கையணைப்பில் தான் இருந்தாள் ஒரு கையால் அவளை தன்னோடு சேர்த்து அணைத்தபடி தான் ஒரு கையால் வண்டியை ஓட்டியவன் காட்டு வழி‌ப்பாதை நடுவில் புகுந்து மேடு பள்ளங்களுக்கு இடையே காரை வளைத்து ஓட்டியதை பார்த்தாலே தெரிந்து விடும் அவனுக்கு இதில் எல்லாம் நன்கு பழக்கம் என்று சில மணிநேர பயணத்திற்கு பின்பு அந்த இடத்தை அடைந்தனர்‌.

அதே நேரம் லேசாக மயக்கத்தில் இருந்து விழித்தாள் கலைச்செல்வி அரைக்கண் திறந்து பார்த்தவளை தூக்கி தன் தோளில் போட்டுக் கொண்டு நடந்தான் யாதவ் சுற்றி மரங்கள் சூழ்ந்து இருக்க அதன் நடுவில் ஒரு கட்டிடம் இந்த காட்டுக்குள் இப்படி ஒரு இடம் இருப்பது யாருக்கும் தெரியாது போலும் மிகவும் ரகசியமாக பாதுகாக்கப்படுகிறது என்பதை அதை சுற்றி இருந்த செக்யூரிட்டி சிஸ்டங்களில் இருந்தே தெரிந்து கொள்ள கூடியதாக இருந்தது.

பெண்ணவளும் அவன் தோளில் இருந்தபடியே அனைத்தையும் பார்த்தாள் யாதவ் தன் கைரேகையை‌ வைத்ததும் பெரிய கதவொன்று திறந்து கொண்டது அதற்குள் போனதும் கதவு தானாக மூடிக்கொண்டது ஆங்காங்கே வெள்ளை கோட் அணிந்து எதையோ தீவிரமாக ஆராய்ச்சி செய்து கொண்டு இருந்தார்கள் சிலர்.

பெண்ணவளை கொண்டு வந்து ஒரு இருக்கையில் அமர வைத்தவன் அவள் மயக்கம் தெளிய தண்ணீர் எடுத்து அவள் முகத்தில் தெளித்து அவள் முகத்தில் படர்ந்து இருந்த நீர் துளிகளை துடைத்து விட்டான் அதில் சற்று தெளிந்து கண்களை திறந்தவளுக்கு தண்ணீரை குடிக்க வைத்து அவள் முகம் பார்க்க அவளோ அவன் முகத்தை பார்க்காது பார்வையை திருப்பிக்கொண்டாள்.

செல்வி… என அவள் கைப்பற்ற அவசரமாக அவன் கரத்தை தட்டி விட்டவள் “என்னை அப்படி கூப்பிடாதே உன்னை பார்க்கவே எனக்கு எரிச்சலா இருக்கு…” என்றவளின் வார்த்தை அவன் மனதை காயப்படுத்தியது அதே நேரம் செந்தில் ஒரு டாக்டருடன் இவர்கள் அருகில் வந்தான் அந்த டாக்டரை பார்த்தவுடனே தெரிந்தது அவன் நம் நாட்டை சார்ந்தவன் அல்ல என்பது ஏன் என்றால் அவன் முகத்தோற்றம் ஒரு சீன நாட்டுக்காரனை போல் இருந்தது அத்தோடு அவன் தான் இந்த ஆராய்ச்சி கூடத்தின் தலைவன்.

“ஹாய் டாக்டர் சியாங்கோ இவ தான் அந்த பொண்ணு…” என்று‌ யாதவ் சொல்ல கலைச்செல்வியை அவன் பார்த்து புன்னகைத்து விட்டு நெருங்க பயத்தில் எழுந்து யாதவ் பின் நின்று அவனை கட்டிக்கொண்டாள் கலைச்செல்வி ஏமாற்றியவன் என அறிந்தும் அவனிடமே தஞ்சம் புகுந்த வைத்திடுகிறது இந்த காதல் கொண்ட மனது.

“நீங்க சொன்ன மாதிரி அவளோட ஒயில் ஸ்கினை டேமேஜ் பண்ணி அதிகமா பருக்கள், மார்க் வர மாதிரி பண்ணிட்டோம் முன்னாடி அவளோட ஃபோட்டோ பார்த்திருந்த உங்களுக்கு அது நல்லாவே தெரியும்ன்னு நினைக்கிறேன் இப்போ நீங்க உங்க ரிசர்ச்யை பண்ணி பாருங்க…” என்ற செந்திலின் பேச்சை கேட்டு பீதியாகினாள் பெண்ணவளுக்கு இவர்களின் பேச்சில் கொஞ்சம் கொஞ்சமாக திட்ட புரிய ஆரம்பித்தது அப்போ வேண்டும் என்று தான் இந்த க்ரீம் ப்ராடக்ட்களை தன்னை பாவிக்க வைத்தார்களா? இதனால் எனக்கு‌ இவ்வளவு சைட் எஃபெக்ட் வரும் என்று தெரிந்து தான் அதை கொடுத்து இருந்திருக்கிறார்கள் இதோ மீண்டும் தன்னை ஏதோ‌ செய்ய போகிறார்கள் என தெரிந்தவளுக்கு அங்கிருந்து தப்பிக்க வழி தேட அது முடியாமல் போனதில் தவித்து போக நீல நிற உடை அணிந்த இருவர் வந்து அவளின் கரம் பற்றி இழுத்து செல்ல கத்தியபடி அவர்களை எதிர்க்க முடியாமல் தன் நிலை எண்ணி நொந்தபடி அவர்கள் இழுத்த இழுப்பிற்கு சென்றாள்.

4 thoughts on “13.அழகிற்கு ஏதடி வர்ணங்கள்”

  1. CRVS2797

    அடப்பாவிங்களா..! செல்வியை என்ன பண்ணப் போறாங்கன்னு தெரியலையே…???

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *