ஸ்டடி டேவை ஜாலியாக என்ஜாய் வந்த நண்பர்கள் ஐயோ என்று கத்திய திசையை நோக்கி அனைவரும் ஓடிச்சென்றனர். தேவசேனா சொன்ன பேச்சை தவிர வேறு எதுவும் செய்ய மாட்டாள் மகிழ் என்று நம்பி இருந்தவர்களுக்கு அங்கு நடந்த காட்சியே வேறு. மகிழ், பூரி சுடலாம் என்று கோதுமை மாவை எடுக்க முயற்சி செய்தாள். எட்டாத உயரத்தில் இருந்த அந்த மாவின் நுனியில் அவள் விரலால் தொட அவளது முகத்திலே அத்துணை மாவும் கொட்டிவிட,
இவளின் சத்தம் கேட்டு வெகுவேகமாக ஓடி வந்த பிரியா ஐய்யோ பேய் என்று கத்தினாள். மதுவும் இவளை பார்த்து கத்திட மற்றவர்களும் வந்து சேர்ந்தனர்.
என்னடி பண்ற என்ற பிரியாவிடம் அதுவா டி அம்மாவும் அப்பாவும் வெளிய வேலையா கிளம்பிட்டாங்க. அதான் தேவமா என்னையவே உங்களுக்கு சமைச்சு தர சொன்னாங்க. நானும் உங்களுக்கு பாசமா இங்க வந்து பூரி சுட்டு தரலாம்னு கோதுமை மாவு தேடிட்டு இருந்தானா அது என் தலைக்கு மேல இருந்துச்சு. அதை எடுக்க இந்த ஷேர் போட்டு ஏறி அந்த மாவு இருந்த டப்பாவின் கடைசி நுனிய புடிச்சு இப்ப அதெல்லாம் என் மேல கொட்டிடுச்சு பிரியா என்று இழுத்தாள்.
என்னது தேவுமா உன்ன நம்பி சமைக்க சொல்லிட்டு போய்ட்டாங்களா என்று பதறினாள் பிரியா. வம்சி மற்றும் கௌரி இருவரும் விழி விரித்து முழித்தனர். லோகேஷ் மற்றும் ஆனந்த் இவளுக்கு முதல்ல சமைக்க தெரியுமா என்று வாய்விட்டு கேட்டு விட உப்பு போட்ட டீக்கதை அங்கே படலமாக ஆரம்பித்தது.
அதென்னடா உப்பு டீ என்று வம்சியும் தீவிரமாக கவனிக்க, மகிழினி செய்த உப்பு டீயையும் குப்புட்டியை ருசி பார்த்த கிருஷ்ணரின் கோலாகலத்தையும் ஒவ்வொன்றாக சொல்லி பிரியாவும் மதுரவாணியும் சிரித்து கொண்டனர்.
வம்சி அப்போ உனக்கு சமையல் சுத்தமா வராதா மகி என்று கேட்டான். சுத்தமா இல்ல வம்சி ராசா சுட்டு போட்டா கூட வராது என்றான் மாதவன். கௌரிக்கு இதை கேட்டதும் சத்தமாகவே சிரிப்பு வந்துவிட்டது. தினம் ஆயிரத்து ஐந்நூறு எட்டு முறை சொல்லுவான் எனக்கு வர மனைவி அதை சமையென்று எப்படி வேலை வாங்க போறேன்னு பாருடா என்று. அதை நினைவு கூர்ந்தவனுக்கு பீறிட்டு சிரிப்பு வந்தது.
கௌரி வம்சையின் அருகில் சென்று என்ன மச்சி இந்த மேடத்தை வச்சுக்கிட்டு தான் தினம் ஆயிரத்து ஐந்நூறு எட்டு வேலை வாங்க போறீங்களா என்று கேட்டுவிட்டு சிரித்தான். சரி பெண்கள் அனைவரும் சமைத்து விடலாம் என்றபடி ஐந்து பெண்களும் கிச்சனில் இருக்க மீதி அனைவரும் வெளியே அமர்ந்து நக்கல் அடித்துக் கொண்டிருந்தனர். பிரியா தான் யாஷினியை பார்த்து சரிடி உனக்கு என்ன தெரியுதோ அதெல்லாம் பண்ணு நாங்க கட் பண்ணி தர வேண்டியத கட் பண்ணி தருகிறோம் என்று சொல்லவும் அவளுக்கும் பிதுங்கி விட்டது விழிகள்.
என்னடி பிரியா என்ன கேள்வி கேக்குற. எனக்கு ஒண்ணுமே சமைக்க தெரியாதுடி என்று ஒத்துக் கொண்ட யாசினியை அட உனக்குமா என்ற வகையில் பார்த்தனர் மற்ற பெண்கள் அனைவரும். இதில் மதுப்பிரியா மட்டும் சமைக்க ஓரளவு தெரியும் என்று சொன்னாள். இப்போது அவளை அனைவரும் பார்த்தனர்.
வெளியில் இருந்த ஆண் படலங்களோ இந்த ஐந்து பேத்துல ஒருத்தரை கூடவா சமைக்க தெரியாது என்ற ரீதியில் பேசிக்கொண்டிருந்தன. கௌரி- பிரியா கிச்சன் பக்கம் போனதே இல்லையாடா கண்டிப்பா அவளுக்கு ஒன்னும் தெரியாது.
பிரியா மேடத்துக்கு உப்பு எது சோட்டப்பு எதுன்னு கூட வித்தியாசம் தெரியல. சோட்டாப்பு போட்டாத்தான் இட்லி உஃப்பூனு வருமானு கேட்குறாள் என்றதும் என்ன மச்சி நடக்குது இங்க என்று இழுத்தான் ஆனந்த்.
அதான்டா ஒரு செடி ஒரு பிளவர் என்று சொன்னபடி நகத்தை கடித்தான் கௌரி. நாங்க வேணும்னா ஒரு செடியில பத்து பிளவர பூக்க வைக்கவா என்ற லோகேஷிடம் கும்பிடு போட்டு பூத்த பூவ பொசுக்கிடாதிங்க ராசாங்களா என்று கூறினான்.
மதுப்பிரியாவோ தனது மொபைலை எடுத்து நோண்டிக் கொண்டிருந்தாள். என்னடி கடமை இருக்கும் போது போன் யூஸ் பண்ணிட்டு இருக்க என்று முறைத்தாள் மகிழினி. அடியே நான் ஒன்னும் தேவையில்லாதது மொபைல யூஸ் பண்ணலை. நானும் சமையல் குறிப்புகள் தான் ஆன்லைன்லில் பார்த்துகிட்டு இருக்கன் என்றாள் மதுப்பிரியா.
அப்போ உனக்கும் சமைக்க தெரியாதாடி என்று அனைவரும் விழி விரித்தனர். அதான் யூடியூப் இருக்குள்ள அந்த தெய்வம் இருக்க நமக்கு எதுக்கு இம்புட்டு குழப்பம் என்றவளை அனைவரும் அட்டாக் செய்தனர். வெளியே இருந்த ஆண்கள் அனைவரும் வயிற்றில் உருண்டோடிய சத்தத்துடன் இருந்தனர்.
இவளுங்க சமைக்க போறாங்களா இல்லை சமையலை உருவாக்க போறாங்களா? என்ற ஆனந்திடம்,
இங்க பாருங்க அவளுங்க சமைக்குறதுக்கு உள்ள எப்படியாவது நம்ம தப்பிச்சு போயிடலாம் _ மாதவன்
என்னடா உங்க அக்காங்க சமைக்கிறதுக்கு பெருமையா பேசுவன்னு பார்த்தால் இப்படி சொல்றாய் என்றான் லோகேஷ்.
அப்பாவி புள்ளைங்களா இருக்கிங்களேடா தயவு செஞ்சு நம்ம இங்க இருந்து வெளிய மட்டும் போயிடலாம். அப்புறம் நான் எல்லாம் தெள்ளம் தெளிவாக பேசுகிறேன் என்று பயந்தபடி சொன்ன மாதவன் சொல்ல உண்மையான பிம்பம் அப்போது தான் புரிய ஆரம்பித்தது. சமையலறையில் இருந்து டமால் என்று சத்தமும் கருகும் வாசனையும் வந்தது. என்னடா இதுவெல்லாம் என்று ஆண்கள் ஓடிச்சென்று பார்த்து வியந்தனர்.
மாதவன் இப்போது தப்பித்து ஓடி விடலாமா என்று யோசிக்க அடிச்சு மூஞ்ச உடைச்சிடுவேன். வாடா பாவம் புள்ளைங்க ரொம்ப கஷ்டப்பட்டு இருக்கும்ங்க. அவங்களை போய் கலாய்க்கிரையே டா பிசாசே என்று வம்சி அவனை திட்டி அவனையும் தங்களுடன் அழைத்து சென்றான். அதே நேரம் அவர்கள் வீட்டின் காலிங் பெல் சத்தம் கேட்டது….
… சண்டை மீளும் …
இவங்க சமையல் செஞ்சு கிழிச்ச மாதிரி தான்.