கதவை திறக்க பீட்சா , பிரியாணி மற்றும் சிலபல கிரேவிஷ் என அவர்கள் ஆர்டர் செய்த உணவு வந்திருக்க அதை வாங்கி கொண்டு அமுக்கு டுமுக்கு அமால் டுமால், அமுக்கு டுமுக்கு அமால் டுமால்னு பாடிக்கொண்டே குத்தாட்டம் போட்ட பெண்களின் கையிலிருந்த பார்சலை கண்டு ஆண்களும் குத்தாட்டம் போட்டனர்.
நமக்கு தான வாங்கியிருக்கம் இவனுங்க ஏன் அமுக்கு டுமுக்குனு இப்படி குத்தாட்டம் போடுறானுங்க என பெண்கள் விழிக்க நல்ல வேலை பண்ணிங்க வாங்க வாங்க பசி கொள்ளுது முதல்ல சாப்பிடலாம் என பார்சலை வாங்க ஆர்வமாக ஆண்கள் வர, நில்லுங்க இது எல்லாம் எங்களுக்கு மட்டும் ஆர்டர் பண்ணம் என மகிழ் சத்தமாக சொல்ல, ஆண்களின் வயிறோ பர்பர் என பசியில் சத்தமிட, அது ஏன் உங்களுக்கு மட்டும் என மாதவன் கேட்ட கேள்விக்கு , அது என்னமோ தெரியவில்லை நாங்களே சமைத்ததாலோ என்னமோ இத சாப்பிடவே தோணல அதான் எங்களுக்கு மட்டும் ஆர்டர் பண்ணம்,நீங்க அத சாப்பிடுங்க, நாங்க இதையே அட்ஜஸ்ட் பண்ணிக்கிறோம் என முகம் சுளித்தபடி பெண்கள் கோரசமிட, உங்கள எல்லாம் அவ்ளோ உசாரா பெத்திருக்காங்க என வம்சி சொன்னான்.
பெண்கள் சமாளிக்கும் பட்சத்தில், சிரித்து வைக்க , இது என்னடா நமக்குனு வந்த சோதனை வயிறு வேற சோறுசோறுனு கத்துதே என பாவமாக கௌரி சொல்ல, டோன்ட் வரி “நம்ம ரெண்டு பேரும் சேர் பண்ணிக்கலாம் பாதாம் “என கூட்டு சேர்ந்தாள் பிரியா. சோறு என்றவுடன் மதுவும் மாதவனை கூட்டு சேர்த்து கொள்ள, ஆனந்த்,லோகேஷும்,யாஷினி , மதுப்பிரியாவை பார்க்க வந்து தொலைங்க என அழுத்து கொள்ள, அதனால என்ன நமக்கு சோறுதான் முக்கியம் என அடித்து கொண்டு சாப்பிட ஆரம்பித்தனர். வம்சி மகிழையே பார்க்க, இதுக்கு அப்புறம் என்ன அதான் அவங்க எல்லாரும் பேர்பேரா சாப்பிட போய்ட்டாங்களே , மீதி நீயும் நானும் தான் இருக்கம் , வா வந்து ஒட்டிக்க என அழைக்க , இதற்காகவே காத்திருந்தவன் போல ஒட்டி கொள்ள, போனா போகுதுன்னு உனக்கு கொஞ்சுண்டு தர அப்பறம் சாப்பிட்டு இன்னும் கொஞ்சம்னுலா கேட்க கூடாது,. நான் சாப்பாட்டு விசயத்தில ரொம்ப ஸ்டிரிட் அண்ட் கரர் ஒக்கேவா என கேட்க சோறு கண்ட இடம் சொர்க்க வாசல் என கூறி ஒப்பு கொண்டான் மகிழின் கட்டளைக்கு.
பிரியாவும் கௌரியும் மாறிமாறி ஊட்டி கொண்டு சாப்பிட , ஆனந்த், உண்ணும் பகுதியிலிருந்து எடுத்து சாப்பிட்டாள் யாஷினி. லோகேஷ் மதுப்பிரியா இது எனக்கு இது உனக்கு என பிரித்த பாகத்தை மட்டும் சாப்பிட, இது எனக்கு தான் இது எனக்கு தான் என பிரியாணியிலிருந்த லெக்பீசை சண்டையிட்டு கொண்டு சாப்பிட்டனர் மகிழும் , வம்சியும்.
எதிர்ப்புறம் சாப்பிட்டு கொண்டிருந்த மதுவும் மாதவனும் ” நான் இந்த மாதிரி ஒரு குரூப் ஸ்டடிய இந்த உலகத்துலேயே பார்த்ததில்லை” என சொல்லி ஹைபை அடித்து கொள்ள, அனைவரும் நமட்டு சிரிப்பு சிரித்த சமாளித்தனர்.இனிமையாக அன்றைய தினம் இவ்வாறு கரைந்தது.
கல்லாரியில் மதிய உணவை ப்ரேக் டைமிலே சாப்பிடுவதும், மதியம் வம்சி,கௌரியிடம் அடம்பிடித்து ஹோட்டலில் வாங்கி சாப்பிடுவதுமாகவும், ஹாஸ்பிடலில் ஒன்றாக கூடி கும்மி அடித்து கொண்டும் காலங்கள் இனிதாக கறைய,
மூன்றாம் ஆண்டின் முதல் நாளில் கல்லூரியில் காலெடுத்து வைத்தனர். இவர்கள் அனைவரும் நல்ல நண்பர்களாக மாறிய நிலையில், நண்பர்கள் முன்னாலே ப்ரப்போஷ் செய்த லோகேஷிற்கு அறையை மட்டுமே பரிசாக அளித்தாள் மதுப்பிரியா. அதற்கு பிறகு அவனிடம் பேசுவதேயில்லை. இதை தன் கண் முன்பாகவே கண்ட வம்சிக்கு அந்த அடி அவனுக்கும் விழுமென நினைத்து காதலை மறைத்தே வைத்திருக்க, மகழ் செய்யும் ஒவ்வொரு குறும்புத்தனமும் அவள்மீது எண்ணற்ற காதல் ஆசையை வளர்த்தது வம்சிக்கு. யாஷினி ஆனந்தின் காதலை ஏற்றுக் கொண்டதால் தன்னவளுக்காக எதையும் செய்யும் அளவு துணிபவனாகவும், தன் அண்ணனுக்கு ஆறுதலாகவும் இருந்தான்
. பிரியாவின் பெற்றோர்கள் தங்கள் அனைவரையும் சந்திக்க வருவதாக சொன்னதை எண்ணி பயத்திலே காலத்தை கடத்தி கொண்டிருந்தாள் மகிழ்.அவள் மனம் முழுவதும் இந்த முறையாவது கௌரியை பிரியாவிற்கென பேசி முடிப்பார்களா என பலவித பழைய நினைவுகள் அவளது கண்முன் வந்து வந்து தொல்லை செய்து கொண்டிருந்தது. பிரியாவின் பெற்றோர் வந்துவிட்டாள் தான் யார் என்பதை வம்சி அறிந்து கொள்வானே, அதன் பிறகும் எங்களது நட்பு இவ்வாறு இனிதாகவே செல்லுமா எனவும் எண்ணி எண்ணி மனதுடைந்து நொந்து கொண்டிருந்தான் கௌரி.
பிரியா இம்முறை எந்தவொரு காரணத்திற்காகவும் தன்னவனை விட்டு கொடுக்க கூடாது என முடிவெடுத்து வெளியில் தைரியமாகவும், உள்ளுக்குள் மகிழையும் இழிவாக பேசுவார்களோ என நொந்து கொண்டிருந்தாள்.
லோகேஷ் மதுப்பிரியாவிடம் பேச முயற்சிக்கவும், மது அவனை அவமானம் செய்வதுமாக நாட்கள் கடந்தது. பிரியாவின் பெற்றோர்களுடன் மகிழின் மாமனான ஆருத்ரன் வருவதாக கூறியிருக்க, இவனை வைத்தே நாம் காரியத்தை சாதித்து விடலாம் என நினைத்தார்கள் சுமித்ராவும், ராகேஷீம்.
மகிழை ராகேஷ் விரும்புவதாக சுமியிடம் சொல்லி ஒரு சட்ஜிசன் கேட்டபோது ,மகிழினியை பற்றி தவறாக தாறுமாறாக அனைத்தையும் கூறி அவளை வெறுக்கும் அளவு ராகேஷை மாற்றி இருந்தாள் சுமித்ரா. ராகேசும் மகிழினியை நினைத்து பெரிய காதல் கோட்டை கட்டியிருக்க அதை தரைமட்டமாக உடைத்து விட்டாளென ,அவளை எதாவது செய்ய வேண்டுமென முடிவு எடுத்து சுமித்ராவிடம் சிநேகிதம் வைத்திருந்தான்.
மகிழின் வீட்டில் பிரியாவின் பெற்றோர் வந்த பிறகு, மகிழின் வீட்டில் வாரத்தில் விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை ஒன்றாக கூடும் வழக்கத்தால் அன்றும் மகிழின் நண்பர்கள் வந்திருந்தனர். வந்ததிலிருந்து அரட்டை அடித்து கொண்டிருக்க, அப்போது ஒரு ஹாரன் சத்தத்துடன் BMW காரிலிருந்து வெளிவந்த மதிமாறன் மற்றும் சரண்யாவை ஒரு புன்னகையுடன் வரவேற்றாள் தேவசேனா. மாறனை கட்டி அணைத்து இத்தனை நாள் பிரிந்திருந்த ஆதங்கத்தை தீர்த்தார் கிருஷ்ணன்.
பின் ஆருத்ரன் எங்க என்று கேட்டவருக்கு அவனுது நண்பர்களை சந்தித்து விட்டு வருவதாக சென்றுள்ளான் என்றார் மாறன் அவர்களை நலம் விசாரித்துவிட்டு , ஆர அமர உட்கார்ந்து சாப்பிட்டனர். கிருஷ்ணனும் தேவசேனாவும் வெகு நாட்களுக்கு பிறகு அனைவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிடும் தருணத்தை ரசித்து கொண்டிருந்தனர்.
மதிமாறன் மனதில் இவன் இன்னும் மாறவே இல்லை, அன்பின் உருவமாக உள்ளதை நினைத்து ஒரு நிமிடம் மகிழ்ந்தாலும், இந்த அன்பு ஒன்றே வாழ்க்கைக்கு போதாது என யோசித்து கொண்டே சாப்பிட்டு முடித்தார். சரண்யாவும் மாறனை போன்றே எதிலும் ஒரு இலாபம் இருக்க வேண்டும் என்றே நினைப்பவள். இம்முறை இந்தியா வந்ததற்கான ஒரே காரணம் பிரியாவின் திருமணத்தில் இலாபம் காணவே.
அனைவரும் சாப்பிட்டு முடித்து டிவியில் மூழ்கி இருக்கும் வேலையில், பிரியாவின் மனதானது , என் கௌரியை இவங்க பணம் இல்லையென்று தானே அப்போது ரிஜக்ட் பண்ணாங்க, பட் இப்பவும் கௌரி அப்படியே தான் இருக்கான் எங்களை சேர்த்து வைப்பார்களா ? இல்லை பழையபடி பிரித்து விடுவார்களா?…என பலபல யோசனையில் இருக்க அவளது முகத்தில் வியர்வை துளி கொட்டி தீர்த்தது.
அவளது மனதை நன்கு அறிந்தவளான மகிழ் பிரியாவின் கையை ஆறுதலாக பிடித்து “நீங்க உங்க லவ் ஸ்டார்ட் பண்ணும் போது நீங்க டென்த் தான் முடிச்சிருந்திங்க” அதனால தான் உங்க பேரண்ஸ் உங்கள அதட்டி இருப்பாங்க , கண்டிப்பாக இப்ப ஒத்துப்பாங்க ஏன்னா இப்ப உங்களுக்கு ஓரளவு மெச்சூரிட்டி வந்திருச்சு , சோ கவலைப்படாதே என பிரியா செவி அறியும் அளவு மட்டுமே பேசினாள்
பிரியாவின் முகம் சிறிது நேரத்தில் ஒரு தெளிவடைய, அவளது மூளை சிறிது யோசனையில் இருந்தது.
ஆனந்த், லோகேஷ், யாஷினி, மதுப்பிரியா நால்வரும் சாப்பிட்டு முடித்து விட்டு நாளை நடக்கவிருக்கும் செமினார்க்காக பிரிப்பர் செய்ய மாடியில் இருந்த ரூமிற்கு சென்றர். பிரியாவின் எதிர்ப்புறம் அமர்ந்திருந்த கௌரி, நான், இந்த வீடு,என் அப்பா, அம்மா ,இந்த உறவுகள்,என் மகி,மதுக்கட்டி இவங்களோட சேட்டையெல்லாம் விட்டு தன்னந்தனி மரமாக பிரிந்து இருந்ததற்கு காரணமான சுமித்ராவை வதைத்துக் கொண்டிருந்தான் யார் செவிக்கும் எட்டாத விதத்தில். வம்சியோ தன் நண்பனின் முகத்தில் இதுவரை கண்டிராத கோபத்தை முதன்முதலாக காண்பதால் சிறிது கலங்கிதான் போனான்.இருப்பினும் தன் நண்பனுக்கு துணையாக நிற்க வேண்டும் என முடிவெடுத்து அவன் தலையை மென்மையாக வருடுவிட , சிறிது கோபம் தனிந்தது கௌரிக்கு.
சாப்பிட்டு முடித்து விட்டு மதிமாறனும் , சரண்யாவும் பிரியாவிடம் வந்து அவள் அமர்ந்திருந்த சோஃப்பாவின் எதிரிலிருந்த சோஃப்பாவில் அமர்ந்து, நீ இன்னுமா அவனை விரும்புகிறாய் என சரண்யா கேட்ட கேள்விக்கு குனிந்த தலை நிமிராமலே அமைதி காத்த பிரியாவை பார்த்து அவள் இன்னும் கௌரியைதான் விரும்புகிறாள் என அறிந்து கொண்டனர். பிறகு கௌரியிடம் நெருங்கிய மதிமாறனுக்கு மரியாதை தர எழுந்து நின்றவனிடம் வந்த மாறன் “நீ இன்னும் உன் தகுதியை வளர்த்துக்கவே இல்லை இதுல உன்ன நம்பி நாங்க எப்படிடா எங்க பொண்ணு கல்யாணம் செய்து வைக்க முடியும்”….. என கௌரியின் முகத்திற்கு முதுகை காட்டி எரிச்சலாக இடுப்பில் கை வைத்து கத்தினார்.
“பிரியாவை தான் வளர்த்தாலும் அவளை பெற்றவர்களை எதிர்த்து பேசக்கூடாது”…. என அமைதி காத்திருந்தார் கிருஷ் மற்றும் தேவசேனா.
கௌரியே அமைதியை கலைக்கும் விதத்தில் என்னால என் பிரியா குட்டிமாவ நல்ல படியாக பார்த்துக்க முடியும் என அவனது மொத்த காதலையும் வார்த்தையாலே சொல்ல , அதை உணர்ந்த பிரியா , ஆமா டேட் அவருடைய அன்பு எங்கள சந்தோஷமா வாழ வைக்கும் என கௌரிக்கு சப்போர்ட் செய்ய, “இட்ஸ் இம்பாஷிபில் “என பிரியாவிடம் வந்து நின்ற சரண்யா அன்பால் ஒன்னும் பண்ண முடியாது பிரியாமா, இப்ப வேனா இதுலாம் நல்லா இருக்கும் பட் பியூட்சர்ல நிறைய ப்ராப்ளம் பேஸ் பண்ணனும் நீ என எரிந்து விழுந்தாள்.
நான் நல்லா பார்த்துப்பன் ஆண்டி என் பிரியாவை என சொன்ன கௌரியிடம் , எப்படி பார்த்துக்க முடியும் உன்னால, ஆப்ட்ரால் ஒரு வேலை சாப்பாட்டுக்கே உன் சம்பாத்தியம் இல்லாம அடுத்தவங்களை நம்பி இருக்க உன்னால எப்படி என் பொண்ண பாத்துக்க முடியும் “” என அவன் முன் கையை நீட்டி கேள்வி கேட்டார் சரண்யா.
இவையனைத்தையும் கேட்ட கௌரியின் மனது சுக்கு நூறாய் உடைந்து விட, பிரியா தாயின் முன் வந்து நின்று தலையில் இரு கைகளையும் வைத்து அழுது கொண்டே ஒரு எரிச்சல் கலந்த குரலில் “அவரால என்ன நல்லா பார்த்துக்க முடியும்னு உங்களுக்கு நிருபிக்கனும்னா நாங்க என்ன பண்ணனும்”…. என்று கேட்டாள்
ஒரு நமட்டு சிரிப்புடன் இத கேளு உனக்கு ஒரு 300 பவுன் நகை, பத்து பதினைந்து கார் , நீ திரும்பி பார்த்து ரசிக்கும் அளவு இடம் அனைத்தையும் வாங்கும் அளவுக்கு ஒரு பணக்காரனாகும் போதுதான் எங்களால் அவனை நம்பி உன்னை ஒப்படைக்க முடியும் என முடித்தார் மதிமாறன்.
கௌரிக்கென தங்குவதற்கே ஒரு வீடு கூட இல்லாத போது அவர் கூறியதை எப்படி செய்ய முடியும் என நினைத்து சிலையாக நின்றான் கௌரி.
முடியும் இது எல்லாமே முடியும், இதுக்கு மேலையும் உங்க பொண்ணு பிரியா திரும்பி பார்க்குற இடம் எல்லா வாங்கி குடுக்க முடியும் என்ற குரல் வர அனைவரும் திரும்பி பார்த்தனர்.
சண்டை மீளும் _____________________________________________
Very nice epi.