Skip to content
Home » 15) மோதலில் ஒரு காதல்

15) மோதலில் ஒரு காதல்

கௌரி மொத்தமாக மனதுடைந்த நிலையிலும் தன் காதல் துணையை பார்க்க, அவள் அழுது கரைந்து கொண்டிருந்தாள்.     

      பிரியாவின் மனம் முழுவதும் பணம் பணம் பணம் எப்போதும் பணம் ஒன்றே தான் வாழ்க்கை என  தன் பெற்றோர்கள் இருப்பார்கள் போல.  எனது ஆசையை பற்றி சிந்திக்காதவர்களை எதிர்த்து ஏன் நான் திருமணம் செய்து கொள்ள கூடாது என ஆழ்ந்த யோசனையில் இருந்தாள்.  

   இது எல்லாமே முடியும், இதுக்கு மேலேயும் பிரியா நிற்கும் இடத்தை கூட என் மகனால் வாங்க முடியும் என்ற குரல் கேட்ட திசையைப் பார்த்து அனைவரும் வியப்பாக விழித்தனர்.  

   பிரியாவுடைய நிலையை கண்டு உடைந்திருந்த மகிழும்  ஒரு உணர்ச்சியற்ற பார்வையில்  திரும்பி பார்க்க, அவர்களை திரும்பி பார்த்த வம்சியோ மகிழ்ச்சியில் ஆனந்த தாண்டவம் ஆடி கொண்டிருந்தான்.     ஆம் அங்கே வந்திருந்தது சாட்சாத் வம்சியின் பெற்றோரான ராஜமாணிக்கம்_சித்ராவும் தான்.   

கிருஷ்ணாவின் வீட்டு வாசலிலே நின்றிருந்தவர்களை தேவசேனா இன்முகத்துடன் அழைக்க , விறுவிறுவென உள்ளே வந்த ராஜமாணிக்கம் , நேராக மதிமாறனிடம் சென்று  அவன் தோள்மீது கைப்போட்டு,  என் மகனை போல தான் எங்களுக்கு கௌரியும். ஒரு வருடத்திற்கு முன்பே நான் கேட்டிருந்தேன் சொத்தை உனக்கும் பிரித்தெழுதுகிறேன் என , ஆனால் அவன் பெருந்தன்மையாக வேண்டாமென்று மறுத்துவிட்டான். 

      அவன் விருப்ப பட்டிருந்தால் என்றோ பலகோடி ரூபாய்க்கு சொந்தகாரனாகி இருந்திருப்பான். ஆனால் அவனுக்கு பணம் என்பதை ஒரு பொருளாகவே கருதினான். ஆதலால் அவன் அதில் எந்தவொரு ஆர்வம் விருப்பமற்றவன் ஆனான். 

     பட் நௌ நீங்க என் மகனை ரொம்ப கலங்க படித்திட்டிங்க.   நீங்க அவன சொன்ன வார்த்தைக்காகவே , என் இரு மகன்களுக்கும் என் சொத்தை சரி சமமாக பிரித்து எழுத முடிவு செய்து விட்டேன் என அழுத்தம் திருத்தமாக கூறுனார். 

    இதை நான் ஒத்துக்கொள்ள மாட்டேன் என வம்சி சொல்ல திடுக்கிட்டு அனைவரும் அவனை திரும்பி பார்க்க,     அதென்ன சரி சமமா! “நம்ம மொத்த சொத்துமே என மச்சானுக்குதான்”…என சொன்ன வம்சி அவனை கட்டியணைத்து கொண்டு தன் நன்றியை தெரிவித்த கௌரியின் முடியை வருடிக்கொடுத்தான்.    

வம்சியின் பெற்றோர், மகிழின் பெற்றோர் மனதில் மேலும் ஒரு நல்லிடத்தை பிடித்தனர். இந்த காலத்தில் இப்படி ஒரு குடும்பம் இருக்கிறது என திகைத்திருந்தாள் மகிழ்.      தற்போது பேயரைந்தார் போல பிரியாவின் பெற்றோர்கள் நின்றிருந்தனர். பின் வம்சி அவர்களிடம் வந்து இப்ப உங்களுக்கு இந்த கல்யாணம் ஓக்கே தான என சீற,     தன்னை சரிசெய்து கொண்ட சரண்யா, ம்ம்  சம்மதம்பா தம்பி என்றிட , பணம் என்றால் பிணத்தை கூட விட்டு வைக்க மாட்டார்கள் போல என நினைத்த மகிழின் பெற்றோர் ஒரு கேவலமான முறைப்பை அள்ளி தெளித்தனர்.   

பிறகு கல்யாணத்திற்கு ஒப்பு கொண்டதால், மகிழும் பிரியாவும் கட்டியணைத்து கொண்டும் , முத்த மழையை பொழிந்தும் தன் சந்தோசத்தை பகிர்ந்து கொண்டனர்.

❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

மகிழின் ரூமில் குரூப் ஸ்டடி

    ஆனந்த் மற்றும் யாஷினி சேர்ந்து படிக்கிறோம் என்ற பெயரில் சேட்டை அடித்து கொண்டிருந்தனர்.          யாஷினி படிப்பதற்கு புக் அல்லது நோட்ஸ்ஸை ஓப்பன் செய்தால் அதை மூடிவிட்டு மூடிவிட்டு விளையாட்டு காட்டினான் ஆனந்த், அவனை செல்லமாக அதட்டி கொண்டிருந்தாள் யாஷினி

ஏய் என்னடி பண்ற, புக்க புரட்டிட்டு இருக்கிறத பார்த்தா படிக்கிற மாதிரி தெரியல்லையே, பொம்மை தான பார்க்குற இந்த மாமாகிட்ட சொன்னா நானும் பார்ப்பல்ல என லோகேஷ் மதுப்பிரியாவை சீண்ட,     

   ஹலோ மிஸ்டர், நான் படிச்சா என்ன? பொம்மை பார்த்தா உனக்கென்ன? … “அண்ட் ஒன் மோர் திங்” …. “கிவ் ரோஸ்பக்கட் டேக் ரோஸ்பக்கட்”…என கடுகடுத்தாள்.   கிளுக்கென்று அங்கிருந்த அனைவரும் சிரிக்க, இப்ப எதுக்கு இப்படி சிரிக்கிறாங்க என ஒன்றும் புரியாமல் விழி விரித்து பார்த்தாள் மதுப்பிரியா.  

   “அதென்னடி ரோஸ்பக்கெட்!, உனக்கு எவ்வளவு திமிரு இருக்கோ , அதுக்கு அதிகமாகவே உன் வாய்க்கும் திமிரு அதிகம் போல , “நீ எனக்கு எப்ப அக்செப்ட் பண்ணுவையோ அப்போதான் வார்த்தை உச்சரிப்பு கரெக்ட்டா வரும்போல” … என நக்கலடித்தான் லோகேஷ். 

    ஹேய் என்ன என் குறைய சுட்டி காட்டுறயா , நீ விரும்புற பொண்ண இப்படித்தான் கஷ்டப்படுத்துவையா ?… என சிறிதாக மதுப்பிரியா கலங்க,      அய்யோ அம்மா தாயி, இனிமே உன்கிட்ட இப்படிலாம் பேசவே மாட்டேன். உனக்கு தேவையான ரோஸ்பக்கெட்டை  குடுத்தே பேசுறேன் என லோகேஷ் சொல்ல , சுறுசுறுவென கோபமேறியது மதுப்பிரியாவிற்கு.

     சரிசரி நீ கோபப்படாமல் இரு. நானாவது படிக்கிற நீ இப்படியே புஷ்புஷ்னு காத்த விட்டு பூரி சுடு எனக்கு உன்கிட்ட விளையாடலாம் டைம் இல்லை ஓக்கே வா என்றிட,    வலதுபுற  வாயை கோணலாக பிதிக்கி, நான்சென்ஸ், “இட்ஸ் வெரி பேட் கோமெடி” எனச்சொல்ல,     இதோ இதோ பாரு, அதான் உன் வாயு குழறுதுல்ல கொஞ்சம் சும்மாதான் இரும்  மா என்றான் லோகேஷ்.  

   என்னடா விட்டா ரொம்ப ஓவரா தான் பேசுற, எப்படியும் உனக்கு ஓக்கே சொல்லிறுவன்ற தைரியத்தில இப்படி பேசுறயா?…. என எரிச்சலாக தன்னையும் மீறி உண்மையை உலரிவிட,    எப்ப சொல்லுவா எப்படி சொல்லுவானு  காத்திட்டு இருந்தவனுக்கு கிளியராக புலப்பட்டுவிட    யாகுஉஉஉஉஉ இப்ப நான் என்ன பண்ணுவேன்.  கையும் காலும் பறக்குற மாதிரி இருக்கே!…      இது உண்மை தானா இல்ல அச்சோ பித்தே பிடிச்சிடும் போல இருக்கு. இத நான் எங்க போய் சொல்லுவேன்.  என் ரோஸ்பக்கெட் என்ன அக்சப்ட் பண்ணிட்டாளே!…. என எகிரி குதிக்க,     ரொம்ப பறக்காத இரண்டு இறக்கையும் உடச்சி பொடிமாஸ் போட்டு சாப்பிட்டிடுவா அந்த குழறுவாயு  என தன் தங்கையை பெருமை பீத்தினாள் யாஷினி . 

   அதுவரை ஆகாய விமானத்திற்கு மேல் இறக்கை கட்டி பறந்து கொண்டிருந்த லோகேஷ் இறக்கை உடைந்த பறவைப்போல  தத்தளித்தான். பாவமான பார்வையுடன்  மதுப்பிரியாவை பார்க்க,    இவ்வளவு நேரம் ” நீ எதுக்காக சந்தோஷப்பட்டயோ அதையேதான் நான் சொன்ன ” என  சொல்லி தலைகுனிந்து வெட்கப்பட,   யாஷினி ஓஓஓஓஓ என கோலமிட்டு நம்ம பண்ண வேலை நல்லபடியா முடிஞ்சிடுச்சு என ஹைபை அடித்து கொள்ள,     நம்ம லோகேஷிற்கு தலைகால் புரியவில்லை.

இது என் மதுவா! எவ்வளோ அழகா இன்டேரக்டா ப்ரப்போஷ் பண்றா என ஆச்சர்யமாக விழி விரித்து சிந்தனையில் இருக்க,    

என்ன மிஸ்டர் லோகேஷ் அக்செப்ட் பண்ற வரைக்கும் கோழி பின்னாடியே சுத்துற கோழிக்குஞ்சு மாறி சுத்துனிங்க , இப்ப என்னமோ சினம் பிடிச்ச சிங்கம் போல முறிக்கிட்டு இருக்கீங்க  என நக்கலடித்தாள் மதுப்பிரியா.  

   ஒரு சிரிப்பு சிரித்து ஆளை மொத்தமாக கவிழ்த்து விட்டு தன் காதலியை காதலாக பார்த்து அவளிடம் நெருங்கி கன்னத்தை பிடித்து கொஞ்ச , கண்களை இறுக மூடிக்கொண்ட மதுப்பிரியாவின் இதயம் தாறுமாறாக துடிக்க,    என்ஜாய்டா அண்ணா என ஆனந்த் சொன்ன பின் ஆணவனின் முதல் தீண்டலை ரசித்து கொண்டிருந்த மதுப்பிரியா உஷாராகி லோகேஷை  கண் விழித்து பார்த்து அவன் காதல் பார்வையில் கரைய தொடங்கினாள். 

   பின் சிறிது தெளிவடைய,  என்ன பண்றீங்க லோகி “கொஞ்சம் நகர்ந்து உட்காருங்க எல்லாம் பாக்குறாங்க” என சிணுங்க,   

ஷ்ஷ்ஷ், சத்தம் போடக்கூடாது, இப்பதான் நான் ரொம்ப ஹாப்பியா இருக்க , தேங்க் யூ சோ மச் ரோஸ்பக்கெட் எனச்சொல்லி மதுப்பிரியாவின் கன்னத்திலும் கண்களிலும் முத்தமிட்டான்.    

எதேச்சையாக திரும்பிய யாஷினியின் கண்ணில் இக்காட்சி பட்டு விட, அச்சோ , இவன விட்டா என் பச்சப்பிள்ளைய கெடுத்திடுவான் போல என பொறுமிக் கொண்டவள் ஆனந்தை பார்க்க, அவன் நோட்ஸ் எடுத்து கொண்டிருந்தான்.    

  லவ்வை சொல்லி பத்து நிமிஷம் கூட ஆகல, ஹக்கு, கிஸ்ஸுனு ஜெட்டு வேகத்துல இவன் தம்பி போயிட்டு இருக்கான்.  ஆறு மாசமா ஒரு ஹக் கேட்டா இதுலாம் தப்புன்னு அம்பி போல பேசிட்டு இருந்தயே படுபாவி  என  இரு கைகளையும் நன்றாக விரித்து ஆனந்தின் முதுகை அடித்தாள் யாஷினி.  ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️       

மகிழ் ரூமின் வெளியே “பட் ஒன் கண்டிசன்”, என வம்சியின் தந்தை சொல்ல, மதிமாறனும் சரண்யாவும் என்னவா இருக்கும் “ஒரு வேளை அவங்க பசங்க கல்யாணத்தை பண்ணி வைக்க சொல்லிடுவாங்களோ” என கிசுகிசுத்தனர்.          கௌரியும் வம்சியும் ” என்னப்பா கண்டிசன் போடுற அளவு பெரிய மனுஷன் ஆகிட்டப்போல “என நக்கலடிக்க         அடங்குங்கடா என மகிழ் சொல்ல, பிரியா கௌரியின் காலை மிதித்த மிதியில் கண் கலங்கியது. ( பின்ன சும்மாவா மாமனாரயே கலாய்க்குறானுங்களாலாமா?)  

   என்ன கண்டிஷன் ராஜா என அவரருகில் வந்து நின்ற கிருஷ் கேட்க,     என்னை தப்பா நினைக்காதே கிருஷ் என கூறி ஒரு பெருமூச்சை விட்டு ” உன் பொண்ணை என் பையனுக்கு கல்யாணம் பண்ணி வைக்கனும்” என ஒரே பேச்சாக கூறி முடித்தார்.   

மகிழும் வம்சியும்  தற்போது திகைத்து தான் போனார்கள்.      

கிருஷ்ணன் சிறிது சிந்தித்து, இது என் பொண்ணுங்களோட லைஃப், “சோ இத நீ என் பொண்ணுகிட்டயே கேட்டுக்க ராஜா” என்று சொன்னவரை பெருமையாக பார்த்தார் ராஜா’          ” ஆம் என்னதான் பெற்று வளர்த்திருந்தாலும், தன் மகளின் விருப்பத்திற்கு ஏற்ப எதிர்காலத்தை அமைத்து தரும் பெற்றோர் சொற்பமே”,     

      ராஜா நேராக மகிழிடம் சென்று  “மகிழ் உனக்கு என் மகனான வம்சியை கல்யாணம் பண்ணிக்க விருப்பமா?… எனக் கேட்க,         வம்சிக்கு இதுல விருப்பம் இருக்குமா?.. எப்பவும் வம்சி என்ன கோபிச்சுட்டு தான இருப்பான். நானும் வம்சியும் டாம் அண்ட் ஜெர்ரி மாதிரி தான் இருப்போம்.  ஒருவேளை கல்யாணத்துக்கு அப்புறமும் இப்படியே இருந்தால் என்ன பண்றது என மகிழின்  மூளையில் பறவைகள் வட்ட வடிவமாக சுத்த அவளை உழுக்கினாள் சித்ரா.        உழுக்கியதில் நினைவுக்கு வந்த மகி சித்ராவையே பார்க்க, என்னமா வாயடைத்து நிற்கிறாய் உனக்கு விருப்பம் இல்லையா என கேட்டவரிடம் சிறு புன்னகையை சிந்திவிட்டு, “நான் வம்சிக்கிட்ட கொஞ்சம் தனியா பேசணும்”… என்றாள்.

         தனது பெற்றோரிடம் அனுமதி பெற்று கொண்டு, மகிழினி வேகமாக செல்பவளையே பார்த்திருந்த வம்சியை போடா போய் பேசிட்டு வாடா எல்லாம் நல்ல தான் நடக்கும் ” ஆல் தி பெஸ்ட்” என ஊக்கமூட்டி அனுப்பினார் அவனது அப்பாவான ராஜா.(இவரு அப்பா தானா)    

   மகிழ் வேகவேகமாக சென்று அவளது ரூமிற்குள் நுழைந்து கொள்ள, அய்யோ இவ வேற கோபமா போறாளே!   பூரி கட்டைய தூக்கி வீசி அடிப்பாளோ! இல்ல வாய்ப்பில்ல ஏன்னா அவ அவளோட ரூமூக்கு உள்ள போயிருக்கா, சோ எப்படியும் பில்லோவ தூக்கி போட்டு தான் அடிக்கப்போறா என பதற,         அவகிட்ட உள்ள போய் அடி வாங்குறதுக்கு பதிலாக இப்படியே தப்பிச்சு ஓடிப்போய் விடு என மூளை கூற, காதல் வயப்பட்ட மனது போய் தான் பாரு என கூற இரு மனதாக மகிழின் ரூமில் நுழைந்தான் வம்சி. 

      ஒற்றை கால் முட்டியிட்டு தனது மோதிரத்தை கையிலெடுத்து “நான் உன்னை காதலிக்கிறேன் நீ என்னை காதலிப்பாயா?……ஐ லவ் யூ , டூ யூ லவ் மீ?….. எனக்கு நீங்கனா ரொம்ப இஷ்டமாக்கும் , உங்களுக்கு நானா இஷ்டமா?…..ஐ ஆம் இச் லிபே டிச்  , நீனு இச் லிபே டிச் மீது?….. எனக்கு உன் வாழ்வின் துணையாக வர சம்மதம் வசி, உனக்கு என்னை உன்  வாழ்வின் துணைவியாக ஏற்க விருப்பமா??………       

  நால்வரால் ஆசிர்வதிக்கப்பட்டு    

   மூன்று முடிச்சால் இணைத்து  

           இரு விரல் பிடித்து      

உன் வாழ்வின் மறுபகுதியின்    

          முதல் துணையாக                   

  என்னை அழைத்து               

            செல்வாயா!!!!!! வம்சி                        

                  என தனக்கு தெரிந்த தமிழ் , ஆங்கிலம், ஜெர்மனி முதலாக தனக்கு தெரிந்த அனைத்து மொழிகளிலும் சொல்லி தனது கவிதையாலும் தன் மொத்த காதலையும் வெளிப்படுத்தி வம்சியை பார்க்க,…….            சண்டை மீளும் ____________________________________________      

 

1 thought on “15) மோதலில் ஒரு காதல்”

  1. CRVS 2797

    அதானே பார்த்தேன்… என்னடா இது திடீர்ன்னு தெரியாத பாஷையில பேசறாங்களேன்னு பார்த்தா, எல்லா லாங்குவேஜ்லயும் லவ்வை அடிச்சு விட்டாங்க போல.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *