யாதவ் வந்த இடத்தையும் இத்தனை நாள் கம்ப்ளைன்ட் கொடுக்கப்பட்ட பெயரில் தேடிக்கொண்டு இருந்த பெண்ணவள் ஒருவனை துப்பாக்கி முனையில் வைத்திருப்பதை கண்டு யோசனையுடன் தங்களோடு இருந்த ஒரு காவல் அதிகாரிக்கு மீடியாவை வர சொல்லு என குறிப்பு கொடுத்து விட்டு உடனே அவள் புறம் திரும்பி கலைச்செல்வி… என அழைக்க திரும்பி பார்த்தாள் அந்த நொடியை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு சியாங்கோ அவள் கையில் இருந்த துப்பாக்கியை பிடுங்கி அவளின் கழுத்தில் வைக்க அந்நிலையில் பெண்ணவளை கண்டு துடித்துப் போனான் யாதவ்.
“சியாங்கோ அவளை விட்டிடு…” என்றவனை கண்டு கலைச்செல்வி அந்நிலையிலும் முகத்தை திருப்பிக் கொண்டாள் புறக்கணிப்பு தன்னை தாக்கும் போது அதன் வலி அவனை கொல்லாமல் கொன்றதில் செத்துப் பிழைத்தான் இப்போது தான் புறக்கணிப்பின் வலி எப்படி இருக்கும் என்பதை உணர்வு பூர்வமாக அனுபவிக்கிறான் “இத்தனை நாள் எனக்கு வேலை பார்த்திட்டு இருந்த நீ இன்னைக்கு என்னை போலீஸ்கிட்ட காட்டிக்கொடுக்கிற அளவுக்கு வந்துட்டியா துரோகி எனக்கு துரோகம் செஞ்சவன் உயிரோடவே இருக்ககூடாது உன்னை என் கையாலே முடிக்கிறேன்…” என்றபடி அவசரமாக அவனை பார்த்து துப்பாக்கியை அழுத்த அவன் செயலை ஓரக்கண்ணால் பார்த்த பெண்ணவள் தன்னை மீறி பட படத்த மனதோடு அந்த துப்பாக்கியை அவசரமாக தட்டி விட குறி தப்பி யாதவிற்கு பக்கவாட்டில் இருந்த சுவற்றை துடைத்துக்கொண்டு சென்றது.
அதில் இருந்து தப்பித்து அவசரமாக அவளிடம் ஓடி வந்த யாதவ் சியாங்கோவை அடி பிண்ணி எடுத்தவன் பெண்ணவளை இழுத்து தன்னருகில் நிறுத்திக்கொண்டான் அதே நேரம் அக்கதவு வழியாக சென்றவர்கள் விஜி அக்காவின் துணையுடன் உணவு கொண்டு வரும் வண்டிக்காரனை அடித்து கட்டிப் போட்டுவிட்டு ஒவ்வொரு கட்டமாக இங்கு மாட்டிக்கொண்டு இருந்தவர்களை அந்த வண்டியிலே அங்கிருந்து வெளியே கூட்டி கொண்டு செல்ல நினைத்து முதலில் ஒரு பத்து பேரை அழைத்துக்கொண்டு காட்டை விட்டு வெளியே சென்றனர் இது அனைத்தும் பெண்ணவளின் திட்டமே அவளின் திட்டங்கள் எதுவும் சொதப்பாமல் வேலை செய்து கொண்டு இருந்தது.
அவர்களை பத்திரமாக ஒரிடத்தில் விட்டு விட்டு மற்றவர்களை அழைத்துக்கொண்டு செல்ல வரும் போது தான் போலீஸ் வண்டி நின்றதையும் காட்டுக்குள் ஒன்றன் பின் ஒன்றாக மீடியாகாரர்களின் வண்டிகள் செல்வதை கண்ணுற்றனர் எவரையும் நம்ப முடியாத காரணத்தால் தாங்கள் தப்பி செல்ல ஏதுவாக வண்டியை யார் கண்ணிலும் படாமல் மறைத்து வைத்து விட்டு விஜியும் அந்த பையனும் உள்ளே சென்றனர்.
அதற்குள் போலீசார் சியாங்கோ முதற்கொண்டு அவனிடம் வேலை செய்த அத்தனை பேரையும் அரெஸ்ட் பண்ணியவர்கள் கலைச்செல்வியிடம் நடந்ததை விசாரிக்க அனைத்தையும் ஒன்று விடாமல் கூறியவள் மறைந்து நின்று நடப்பதை பார்த்துக்கொண்டு இருந்த விஜியிடம் ஓடி வந்தவள் “இங்கே எந்த பிரச்சனையும் இல்லை விஜி அக்கா நம்ம சேப் தான் அவங்க எல்லாரையும் பத்திரமா விட்டீங்களா?…”
“கொஞ்சநேரம் தான் அவங்களுக்கு பாதுகாப்பு அதுக்குள்ள நாம எல்லாரும் ஒரு இடத்துக்கு போய் சேரனும்…” என்றவளிடம் “போயிறலாம் அக்கா இவங்க என்னை தேடி தான் வந்து இருக்காது அதுவும் நல்லது தான்…” கூறி தலையசைத்தவள் அவளின் கையை பற்றிக்கொண்டாள் மீதி இருந்தவர்களையும் கண்களால் வாங்க என்பது போல் அழைத்தாள் அனைவரும் ஒன்று சேர்ந்து நிற்க சியாங்கோ உடன் இருந்தவர்களை ஜீப்பில் ஏற்றி அழைத்துச்செல்ல சொன்ன இன்ஸ்பெக்டர் மீடியாகாரர்களிடம் சிறிது நேரம் பேசிவிட்டு மீதி இருந்தவர்களையும் அழைத்துக்கொண்டு கிளம்ப யாதவ்யும் அவர்களுடன் தான் பயணித்தான்.
சியாங்கோ வெளி உலகிற்கு தெரியாமல் வழி நடாத்தி வந்த ஆராய்ச்சி கூடம் இன்று கேமராவின் கண்கள் வழியாக டீவியில் வெட்ட வெளிச்சமாகி கொண்டு இருந்தது இன்ஸ்பெக்டர் இதில் தீவிரமாக இறங்கி இருந்தார் பாதிப்பட்ட அனைவரையும் அவர்களுடைய பெற்றோர்கள் உறவினர்களை வர வைத்து பத்திரமாக ஒப்படைத்தனர் தங்கள் வாழ்க்கை அங்கயே முடிந்து விடும் என எண்ணியவர்கள் தங்கள் வாழ்க்கையில் இப்படியொரு திருப்பத்தை நினைத்துப் பார்க்கவில்லை இதற்கு எல்லாம் காரணமாக இருந்த கலைச்செல்வியை அணைத்துக் கொண்டு நன்றி சொல்ல “நம்ம எல்லாரும் ஒன்னு சேரலன்னா இன்னைக்கு நம்மளை மாதிரி எத்தனையோ பேர் இவன்கிட்ட மாட்டி இருப்பாங்க அதை தெரிஞ்சு நாம அமைதியா இருந்தா அது மிகப்பெரிய பாவம் ஆனா இப்போ தான் மனசுக்கு நிம்மதியா இருக்கு அவனுங்க திட்டப்படி அடுத்து கடத்த இருந்த 10 பேரும் தப்பிச்சிட்டாங்க அதுக்கு மறைமுகமா நாம உதவி பண்ணி இருக்கிறோம் அக்கா…” என்று அவர்களோடு நெகிழ்வாக சொல்லிக் கொண்டு இருக்க அவர்களும் ஆமாம் என்று மகிழ்ந்தனர் அவர்களோடு பேசிக் கொண்டு மலரானவளை விழி எடுக்காமல் பார்த்துக் கொண்டு இருந்த யாதவ்யை கூட்டத்தில் இருந்த ஒருத்தி முறைத்துப் பார்த்து விட்டு கலைச்செல்வி புறம் கோபமாக திரும்பினாள்.
“உன்னை காதலித்து ஏமாற்றி கொண்டு வந்து விட்டதா சொன்னியே அது இவன் தானா?..” என கோபமாக கேட்டவளின் பார்வை சென்ற இடத்தை பார்த்து விட்டு ஆமாம் என்று தலையசைத்தாள்.
“என்னை அவனுங்ககிட்ட கொண்டு போய் விட்டதும் இவனும் இவன் கூட சுத்துவானே ஒருத்தன் அவனும் தான் கலைச்செல்வி இந்த ஊருக்கு படிக்க வந்த என்னை கடத்திட்டு போய் விட்டானுங்க கிட்டத்தட்ட ஒன்பது மாசமா அவனுங்ககிட்ட மாட்டிக்கிட்டு சித்திரவதை அனுபவிச்சேன் எனக்கு அப்பறமா ரெண்டு பசங்களை கொண்டு வந்து விட்டான் அவங்க ரெண்டு பேரும் இப்போ உயிரோட இல்லை…” என்றவளுக்கு கண்களில் ஈரம் துளிர்த்தது அதை துடைத்து விட்டப்படியே அவனை திரும்பி பார்த்தாள் அவனின் பார்வை இன்னும் கலைச்செல்வியிடம் இருப்பதை கண்டவள்.
“சியாங்கோவோட உண்மையான விசுவாசி இந்த யாதவ் அவன் கொடுத்த வேலையை செய்றவன் அநாவசியமா எந்த ஒரு விஷயத்துலயும் இன்வோல் ஆக மாட்டான் அப்படி இருக்கிறவன் உன்னை தேடி அங்கே வந்து அவனை அடிச்சு சண்டை போட்டது எல்லாம் பார்க்கிறப்போ அவன் காதல் பொய்யில்லைன்னு தோனுது நீ இவனை என்ன பண்ணலாங்கிற முடிவுல இருக்க கலைச்செல்வி…”
“தப்பு பண்ணா யாரா இருந்தாலும் தண்டனை அனுபவிச்சு தான் ஆகனும் அதுலே நான் உறுதியா இருக்கேன் சியாங்கோ செய்றது தப்புன்னு தெரிஞ்சும் உடந்தையா இருந்ததை எப்படி எத்துக்க முடியும் இப்படி ஒருத்தனாலே தான் நீங்க நான்னு இன்னைக்கு இவ்வளவு பேர் பாதிக்கப்பட்டு இருக்கிறோம் நம்ம தடுக்கலன்னா இன்னும் எத்தனையோ பேர் பாதிக்கப்பட்டும் இருந்து இருப்பாங்க இதை எல்லாம் கண்கூட பார்த்திட்டு எப்படி தண்டனை வாங்கி கொடுக்காம அப்படியே விட முடியும்…”
“ம்ம் அதுவும் சரி தான் அப்பறம் ரொம்ப நன்றி என்ன தான் நாம செய்ததுனு நீ சொன்னாலும் உன்னோட தைரியமும் தெளிவான முடிவும் தான் நாங்க எல்லாரும் வெளியே வரவே உதவி பண்ணி இருக்கு இது அத்தனைக்கும் காரணம் நீதான் ரொம்ப ரொம்ப நன்றி கலைச்செல்வி பத்திரமா இரு…” என விடைப்பெற்றவளோடு பல பேர் அங்கிருந்து சொல்லிக்கொண்டு கிளம்பினார்கள் அவர்களை அனுப்பி வைத்து விட்டு இன்ஸ்பெக்டர் பக்கம் திரும்பினாள் கலைச்செல்வி.
கையோட யாதவ் என்கிற பூச்சிகாரனையும் போலீஸ்ல புடிச்சுக் கொடுத்திடு கலைச்செல்வி.. அதான் நம்ப வைச்சு கழுத்தறுத்தவனுக்கு சரியான தண்டனை.
செம கலை தெரியாமல் செய்தால் தவறு மன்னிப்பு வழங்கலாம் தெரிந்தே செய்தால் அது குற்றம் துரோகம் அதற்கு தண்டனை தான் சரி
Crt kalai nee panathu avanuku kandipa thandanai kedaikanum una vitathuku apram tha thedir arivu vanthucha ithuku munnadibvita ponnunga sethu poirukanga avangaluku ena pathil sola
Superb epi interesting
Good epi👍