Skip to content
Home » 18) மோதலில் ஒரு காதல்

18) மோதலில் ஒரு காதல்

வம்சியின் கோலத்தை கண்டு, இது உண்மையா?… இல்ல பொய்யா?….. என அவள் மண்டையின் மேல் வெள்ளை நிற குருவிகள் வட்டமடித்து கொண்டிருந்தது.    

  அவளிடம் நெருங்கி வந்த வம்சி,” எதுக்கு இப்படி முழிக்கிற “,..என பேச ஆரம்பிக்க, வாட் ஹேப்பண்ட் வம்சி,   என்ன இது என அவன் சட்டையை கை காட்டி ஏன் உன் சட்டை எல்லாம்  இரத்த கறையாக உள்ளது, உனக்கெதாவது அடிப்பட்டிடுத்தா?… என அவன் கை, கால் துணிகளை விலக்கி வேகமாக அவனை ஜெக் செய்தாள்.

      ஹே, “என்ன விடு  என அவள் கையை உதறி விட்டு ,  என்னடி நடிக்கிறயா?…என்று பல்லை நறநறவென கடித்தவன் , அவளை மேலிருந்து கீழாக ஒரு கேவலமான லுக் விட்டு ,   என்ன மேனா மிணிக்கி எதுக்கு இப்படிலாம் மேக்கப் போட்டு வந்து இங்க மிணிக்கிட்டு இருக்க” , என அவளை கொச்சையான வார்த்தைகளில்  அவளை கலங்கபடுத்தினான்.   

   அவன் பேச்சில் ஒரு எரிச்சல் உருவாக, எதுக்கு வம்சி இப்புடி அசிங்கமா பேசிட்டு இருக்க , நீ படிச்ச பையன் தான இவ்வளவு கீழ்தரமாவா பேசுவ என அவள் மனதில் பட்டதை தெள்ள தெளிவாக சத்தமாக கேட்டு மூச்சு விட்டாள்.   

   அவளை சோப்பாவில் சரித்தவன், இந்த மாதிரி நான் பேசறதுக்கு நீ தான்டி காரணம், உன்னால தான் நான் இப்படி கேவலமா பேசுறன், அதுமட்டுமா உனக்காக ஒரு கொலையையே பண்ணிட்டு வந்திருக்கேன் என கத்தி விட்டு குளியலறையில் நுழைந்து விட்டான்

.❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️    

கௌரி மற்றும் பிரியா ரூமில்,     மெதுவாக உள் நுழைந்தவள், பெட்டில் கௌரி இல்லாததால் பால்கனியில் சென்று பார்க்க, நான்காவது நாளில் சிறிய தோற்றத்துடன் அழகான வளைவுடன் இருந்த வானிலிருந்த நிலாவை கண்டு இரசித்து கொண்டிருந்தான்.   

அவனருகில் சென்று தன் தொண்டையை செருமி கௌரியை நடப்புக்கு கொண்டு வந்த பிரியா, கௌரியின் கண்களில் இருந்து கண்ணீர் வடிவதை பார்த்து, என்ன செய்வதென்றே புரியாமல் அப்படியே நின்றாள்.   

  மேலும் விம்மி விம்மி அழுந்த கௌரி பிரியாவை கட்டியணைத்து, ஏன் குலாப்ஜாமுன் எனக்கு மட்டும் இப்படிலாம் நடக்குது , நானும் மனிதன் தான என்னால மட்டும் எவ்வளவு துன்பங்களை தாங்க முடியும் என அழுது கரைந்தான்.     அவன் அழுகும் வரை எந்தவொரு பேச்சும் பேசாமல் அமைதி காத்தவள், அவன் அழுது முடித்தவுடன் அவனை அறைந்தாள்.

அவள் அறைந்த கன்னத்தை பிடித்து கொண்டு வலி கலந்த பார்வையுடன் பிரியாவை பார்த்தான் கௌரி.   

  என்ன அடி ரொம்ப வலிக்குதா?… என மூஞ்சை அப்பாவியாக வைத்து கொண்டு கேட்ட பிரியிவிடம்,  அடிச்சிட்டு வலிக்குதா?… இனிக்குதானா?…. கேட்குற,  இப்ப எதுக்கு இப்படி அடிச்ச?… என கேட்டான்.    நீ ரொம்பவும் பீல் பண்ணி அழுதிட்டு இருந்த உன்ன இதுக்கு மேல சமாளிக்க முடியாதுன்னு தான் நான் உன்னை அடிச்சேன் என பதிலுறைத்தாள்.

( இது நல்ல ஐடியாவா இருக்கே, இனிமே யாராவது கஷ்டமா இருக்குனு நம்ம கிட்ட வந்து பீல் பண்ணி அழட்டும் நம்ம பிரியா டெக்னிக்கை பாலோ பண்ணிருவோம்😜 )     

பின் கௌரி சிறிது தெளிவடைய அவனது கன்னத்தை பற்றிய பிரியா, நம்ம கூட இல்லாதவர்களை நினைத்து வருத்தப்படுறதால, அவங்க இப்ப நம்ம கிட்ட திரும்பி வரப்போறதில்லை,   

   இது எல்லாமே உங்க பேரண்ஸ் பேசி முடிச்சிட்டு தான் உங்கள சின்ன வயசுலயே விட்டுட்டு டைவஸ் பண்ணிட்டு தனித்தனியாக போய்டாங்க, இதுக்கு மேலேயும் அவங்களுக்காக நீ பீல் பண்ணிட்டு இருக்காத கௌரி.    

அப்புறம் உனக்கு ஒரு தங்கச்சி இருக்கா அவ லைஃப்பக் கூட நீ தான் செட்டில் பண்ணனும் நியாபகம் இருக்கா?… என அவனது தலையாய கடமைகளை நினைவு படுத்தினாள்.   

  தன்னை பற்றியும் தன் தங்கையை பற்றியும் அக்கறை கொள்ளும் பிரியாவை நினைத்து பெருமைப்பட்டான் கௌரி.   இன்று காலை நடந்ததை அனைத்தையும் பிரியாவிடம் சொல்லி, மகிழின் நிலையை தெளிவாக உணர்த்திய கௌரி,        

    நம்ம இந்த பர்ஸ்ட் நைட்ட அவங்களுக்காக தள்ளி வைக்கலாமானு நினைக்கிறேன். அவங்க ஓரளவு நார்மல் ஆன அப்புறம் அவங்க ஹாப்பியா இருக்க அப்போ நம்ம வாழ்க்கையை தொடங்கலாம் என கௌரி கூற நினைத்தவற்றையே பிரியா சொல்லி கொண்டிருக்க,    இதுக்கு பேர்தான்” மேட் ஃபார் ஈச் அதர்” போல நெஞ்சம் நெகிழ்ந்தான். பின் அவர்கள் இருவரும்  சேர்ந்தே நிலவை இரசிக்க ஆரம்பித்தனர்.

❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️

  மறுமுனையில் இருந்த ரூமில்,    

  கை, கால்கள் என அனைத்து பாடி பாரட்ஷ்களும் நடனமாடி கொண்டிருந்தது லோகேஷிற்கு.    உள் நுழைந்த மதுப்பிரியா ஹே எதுக்கிப்படி கை கால்லாம் உதறுது?.. என கேட்க,    எ

னக்கு தெரியில, மே பி ” இதுலாம் பஸ்ட் டைம்ன்றதால”…கூட இப்படி இருக்கலாம்னு தோணுது என சொன்னவனிடம்,   

ஆமா நாங்க அப்படியே பத்து பதினைந்து தடவை கல்யாணம் பண்ணி , இதுலலாம் எக்ஸ்பெர்ட் என நெற்றி சுருங்க கூறியவளிடம்,” அப்போ நான்தான் பதினாறா?. ‌ என்று கேட்டவனை பொழ பொழவென பொழந்தாள்.   

   பாடியிலுள்ள அனைத்து பார்ட்ஸ்களும் குத்துயிரும் குலையுயிருமாக இருக்க ,” தாலி கட்டுன புருசன இந்த அடி அடிக்கிறயேடி நீ எல்லாம் தமிழ்நாட்டு பொண்ணா?… என்று கேட்டான். 

    அவனை மேலிருந்து கீழாக  ஒரு லுக் விட்டு “தமிழ்நாட்டு பொண்ணுங்கறதால தான்டா இன்னும்  உயிர் உன் உடம்புல ஊசல் ஆடிட்டு இருக்கு”….என கையை தட்டி விட்டு ஒரு வேலை நான் பஞ்சாப் பொண்ணா மாறுனும்னு ஆசைப்படுறயா?…. என ஆப்சன் குடுத்தவளை,   

கை கூப்பி வணங்கி, நீ பொண்ணானே தெரியல இதுல தமிழ்நாட்டு பொண்ணு, பஞ்சாப் பொண்ணுன்னு வேற பில்டப் என உள்ளுக்குள் கொதிக்க,    

  நீதான் இந்த வீட்டு குத்துவிளக்கு என்ன அடிச்சு உன்னை ஏன் நீயே அசிங்கப்படுத்திக்கிறே, ஒரு வேலை என்ன அடிக்கனும்னு தோணுனா சொல்லு நானே என்ன அடிச்சிக்கிற உனக்கு எதுக்கு கஷ்டம் என அழுது கொண்டே சொன்னான். 

சிரித்து முடித்த மது ” என்ன ஒரு புத்திசாலித்தனம், நீ பொழச்சிக்குவடா என அவனது தோளை தட்டிவிட, அடிபட்ட இடத்திலே அடிக்க ஐயோ அம்மா “.. என்று கத்தினான்.    பின்பு இருவரிடமும் நல்ல நட்பு வளர வேண்டும் என இன்றைய நாளை தள்ளி வைத்து விடலாம் என முடிவெடுத்தனர்.

💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘     

வீட்டிற்கு புறப்பட்ட பெரியவர்கள், பனிரெண்டு மணிக்கு வீட்டை அடைந்தனர். வீட்டினுள் நுழைந்த பிரியாவின் பெற்றோர் நாளை அமெரிக்கா கிளம்புவதற்காக தங்களது உடைமைகளை பேக் செய்து கொண்டிருந்தனர்.    

மதிமாறன், இன்னும் கொஞ்ச நாள்ல நம்ம பொண்ணு பிரியாவை நல்லா பிரைன் வாஷ் பண்ணி கௌரியை டிவேர்ஸ் பண்ண வச்சிட்டு வேற ஒரு நல்ல பணக்கார பையனுக்கு கல்யாணம் செய்து வைத்துவிடலாம் என பேச,    அவனிடம் நெருங்கி வந்த சரண்யா, அவன் அப்பா, அம்மாவை பிரிச்சு அவன் சொத்தையும் மொத்தமா எழுதி வாங்கியாச்சு, இது நாள் வர நம்ம அந்த கௌரிக்கு பண்ணதுலாம் பத்தாதுனு இன்னும் இது வேற செய்யலாம்னு நினைச்சுட்டு இருக்கயா?…. மாறா , இதுலாம் ரொம்ப தப்பு, தாலிங்கறது சாதாரணமான விஷயம் இல்லை, அதும் நம்ம தமிழ்நாட்டு பெண்களுக்கு    “கற்பும், தாலியும் இரண்டு கண்கள் மாதிரி , எதையும் விட்டு குடுக்க மாட்டாங்க”, இதுக்கு மேலையும் இந்த மாதிரி சீப்பா எதாவது ஐடியா பண்ணிட்டு இருந்த செருப்பால் அடிப்பேன் என மிரட்டினாள்.

    அது மட்டும் இல்ல இந்த மாதிரி எதாவது பண்ணிட்டு இருந்த அப்புறம் இதை நான் எல்லார்கிட்டயும் சொல்லிடுவேன் என கண்டித்தாள். இவள் கண்டிப்பால் என எதிர்பாராதவன் அமைதியானான்

.         படுக்கையில் இருந்த கிருஷ்” என் பொண்ணு நினைச்சா கவலையா இருக்கு தேவ், அவ குழந்தை தனமா இத்தனை நாளா வளர்ந்துடா….ஆனா இப்போ என கவலையில் ஆழ்ந்தார் கிருஷ்ணன்.    

அவ எங்க வளர்ந்தா, நீங்கதான அப்படி அவள் வளர்த்தி கெடுத்து வச்சிருக்கிங்க, நீங்கலாம் பயப்படற மாறி மகிழுக்குலாம் ஒன்னும் ஆகாது , வம்சிக்கு தான் என்ன ஆகுமோ? ஏது ஆகுமோனு வயித்துல நெருப்ப கட்டிட்டு இருக்கேன் என கூறி முடித்தார் தேவசேனா.     

பிரியாவும் மகிழும் இல்லாததால், வீடே கலையற்று இருப்பது போல் உணர்ந்த மாதவன்” என்றுமே சத்தமாயிருக்கும் அந்த அறை இன்று அமைதியாக இருப்பதை நினைத்து” கண்ணீர் துளி எட்டிப்பார்த்தது அவன் கண்ணில்.. எப்பவும் சண்டை போட்டு கொண்டே இருந்தா கூட ஜாலியா இருக்கும், ஆனா இப்ப அப்படி இல்லையே குட்டி, “அதுங்க இருந்தாலும் தொல்லை இல்லை என்றாலும் தொல்லை” என மதுவிடம் மன வேதனையை கொட்டித்தீர்த்தான்.     ஆனால் மது தன் அக்காவின் நிலை என்னவென்று தெரிந்தும் , உதவ இயலாதவளாக இருப்பதால் வருத்தத்தில் இருந்தாள். அதிர்ச்சி கலந்த எந்த விஷயமும் அப்பாவிடம் சொல்ல கூடாது என்பதை மகிழ் நினைவுபடுத்தியதால் அமைதி காத்தாள்.

💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞  

  புதுமனையில்    யாஷினி வெட்க நடையுடன் நத்தைப்போல மெதுவாக நகர்ந்து உள்நுழைய,     யாருமா இது?… இப்படி ஒழிஞ்சி ஒழிஞ்சு  வாரது?… என கேலியான வார்த்தைகளை பேசினான் ஆனந்த்.     நார்மலான யாஷினி , “டே தட் இஸ் நர்வெஸ்”, என்று சொல்லி புசுபுசுவென மூக்கிலிருந்து கோப காற்றை வீசினாள்.முறைத்தவளை செல்லம், புஜ்ஜி,பஜ்ஜி என அழகு செல்ல மொழிப்பேசி கொஞ்சி அவளை கட்டியணைத்தான். 

     மகிழுக்கு குழப்பம் ஏற்பட, அவன் வெளியே வந்தவுடன் கேட்டுவிடலாம் என அமைதி காத்து கைகளை பிசைந்தபடி சோஃபாவில் அமர்ந்து  கொண்டிருந்தாள்‌.குளியலறையில் இருந்து வெளிவந்தவன் மகிழின் முகத்தை கூட பார்க்காமல் , ரூமிலிருந்து வெளிவந்து படியிறங்கி படபடவென கிச்சனில் நுழைந்த வம்சி அவளுக்கு பிடித்த அனைத்தையும் சமைத்து எடுத்து வந்தான்.  

   குழப்பத்துடன் இருந்தவள் முன் அவற்றை வைத்து ” இந்த சிக்கன் பிரியாணி, சிக்கன் 65, ஆட்டுக்கால் சூஃப், நண்டு வறுவல்,  பிஸ் ஃபிரே” என்ற அனைத்துமே உனக்கு தான் எடுத்து சாப்பிடு என்று சொல்லி விட்டு அவள் எதிரே இருந்த பெட்டில் பொத்தென அமர்ந்தான்.      

  மகிழின் மனதில் மேலும் குழப்பம் ஏற்பட்டது. கொஞ்ச நேர முன்னாடி என்னால்தான் கொலை செய்தேன்  என எரிந்து பேசிவிட்டு சென்றான். பட் இப்போ எனக்கு என்னவெல்லாம் பிடிக்குமோ அத எல்லாம் அவனே சமைத்து கொண்டு வந்து சாப்பிடுனு சொல்றான் , இவன்  என் வில்லனா?… இல்ல என் ஹீரோவா?…   

  ஒருவேலை ” நரகத்தில் எப்படியும் வாழ வைப்பானு நம்பிக்கையா வந்தா நரகத்திற்கே அனுப்பிடுவானோ?… என யோசித்த மகிழுக்கு அந்த இளங்காற்றிலும் வேர்த்து கொட்டியது.    ஹே மகி என்ன இப்படி முழிச்சிட்டு இருக்க , இதை சாப்பிடு , இதுல்லாம் உனக்கு பிடிக்குமென்று தான் நான்‌ ஆசைஆசையாய்  செய்து கொண்டு வந்தேன்” என பிரியாணியை ஒரு வாய் எடுத்த ஊட்ட வந்தான் வம்சி.  

💞💞💞 சண்டை மீளும் ❤️❤️❤️._____________________________________________     

1 thought on “18) மோதலில் ஒரு காதல்”

  1. CRVS 2797

    அய்யோடா..! இவன் என்ன அந்நியன் பாதி, ரெமோ மீதிங்கற மாதிரியே நடந்துக்கிறான்…???

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *