Skip to content
Home » 19) மோதலில் ஒரு காதல்

19) மோதலில் ஒரு காதல்

இத சாப்பிடு மகி என அடம்பிடித்தான் வம்சி.  வம்சியினை  பார்த்து கொண்டிருந்தவளுக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை.  

  வம்சி நான் இதை சாப்பிடனுமா?… என பவ்வியமாக கேட்ட மகிழிடம், ஆமா மகி உன் காதலன் உனக்காக சமைச்சிருக்கேன் எனக்காக சாப்பிட  மாட்டையா?.. என மேலும் குழம்பினான்.

    சரி அப்போ நான் இத சாப்பிட்டா எனக்கு என்ன செய்வ என கேட்ட மகிழுக்கு உனக்காக எதுவாயினும் செய்வேன் என்றான். மகிழ், அப்படினா சரி ஊட்டிவிடு என வாயை திறந்தாள். 

அவளுக்கு ஒரு வாய் ஊட்டி விட்டவன், நீ இது எல்லாம் சாப்பிட்டா தான் நீ எது கேட்டாலும் செய்வேன் என மகிழுக்கு நினைவுப்படுத்தினான் வம்சி. மகிழின் கண்களில் சிறு சிறு நீர்த்துளிகள் எட்டிப்பார்க்க, அவளுக்கு உணவை தொடர்ந்து ஊட்டினான்.   

ஆம், அவளுக்கு பிடித்த உணவு தான், ஆனால் அவளுக்கு பிடித்திடாத விதத்தில் சமைத்திருந்தான் வம்சி. குடிகாரன் இந்த சாப்பாட்டை சாப்பிட்டால் கூட இந்த  காரத்தில் போதை தெளிந்து விடுவான் போல,    அவனது இந்த கொடிய காரத்தையும் சாப்பிட்டு கொண்டிருக்கிறாளே இவளுக்கு கோவிலே கட்டிவிடலாம் போல் உள்ளது. அதற்கும் ஓர் காரணம் உண்டு.  

அடுத்ததாக எடுத்த நண்டு வறுவலில் பச்சை வண்ணம் மாறாமல் காரத்தை கொட்டி இரு நிமிடம் மட்டுமே வேக வைத்தவன், அதை மூந்துவிட்டு வாமிட் எடுப்பது போல நடித்தான்.   காரம் முழுவதையும் உண்டு முடித்த மகிழின் கண்களில் நீர் கொத்து கொத்தாக தடம் பிடித்து ஒட ஆரம்பித்தது. எதிரே அமர்ந்திருந்தவன்,  அழும் அந்த முகத்தை பார்த்து சந்தோஷப்பட்டாலும், காதல் வயப்பட்ட மனம் பதைபதைத்தது. 

  அவளும் அவளால் முடிந்தவரை தண்ணீர் குடித்தும் சர்க்கரையை வாயில் போட்டும்,  எச்சில் விழிங்கியும் என்னவோ செய்தும் காரம் துளியளவும் குறையவில்லை.     இதுவரை பொறுத்தவள் காரத்தால் கத்தவே ஆரம்பிக்க அவனது மனதும் உடைந்தே போனது. பின் ஓடிச்சென்று ஐஸ்வாட்டர், ஐஸ்கிரீம் கொண்டு வந்து தந்தான் வம்சி‌.    

   இதை அனைத்தையும் உண்டும் காரம் தாங்க முடியாமல் தொண்டையை பிடித்து ஹாஆஆஆஆ என கத்தினாள். இதுவரை பொறுமையாக பார்த்திருந்தவன், அவளை இழுத்து தன் மீது அமர வைத்து அவள் கன்னத்தை பிடித்து அவள் உதட்டோடு தன் உதட்டை வைத்து இதழ் பதித்து அவள் காரத்தை குறைக்க முற்பட்டான்.    

காரம் சிறிதுசிறிதாக தனிய அவள் கண்ணிலிருந்தும் நீர் குறைந்தது. இதனை அறிந்தவன் அவள் தன் காதலை அறியக்கூடாது என நினைத்து இதுவரை மென்மையாக வறுடிய அவள் உதட்டை கடிக்க ஆரம்பித்தான்.     இவ்வளவு நேரம் இதமாய் உணர்ந்தவளுக்கு இவனது நடவடிக்கை புரியாமல், வலி ஏற்பட நின்ற கண்ணீர் மீண்டும் தடம் பிடித்தது, உதடுகளும் வலியில் துடிதுடித்தது, இதனை கண்டு மெலிதாக புன்னகைத்தவன் அவனிடம் இருந்து அவளை விடுவித்தான். சாரி சாரி சிறையில் இருந்து விடுதலை தந்தான்.   

இதையும்  அத்துனையும் தாங்கி கொண்டவள், “இப்ப நான் என்ன சொன்னாலும் கேட்பயா வம்சி , நான் எது கேட்டாலும் பதில்  சொல்லுவையா?…என்றாள் அத்துனை வலியிலும்,      அவளை ஆச்சர்யமாக பார்த்தவன்,    எதுவும் பேசாமல்   சரி என தலையாட்டினான்.

      மெலிதாக  புன்முறுவல் சிந்தியவள் வலியிலும், நீ யாரை எதற்காக கொலை பண்ண, அதும் எனக்காக கொன்னனு சொன்ன, என தன் சந்தேகத்தை கேட்டாள்.         ம் இப்ப மேடம் சாப்டிங்களே ஆடு,கோழி, மீனு,நண்டு இது எல்லாம் தான் நான் கொன்னது , அப்போ இதுலாம் கொலை தான உனக்காக தான இதுலாம் அதான் அப்படி சொன்னேன் என சொல்லி  சிரித்து கொண்டே பெட்டில் சரிந்தான். 

   படுபாவி அப்படி யார கொன்னனு சொல்லுவான்னு பாத்தா நீ சாப்டதுதானு சொல்றான் சரியான சேடிஸ்ட். கருமம் இதுலாம் என் நேரம், கெட்டது சொல்லிகிட்டா வரும் இவன லவ் பண்ண பாவத்துக்கு இன்னும் என்னலாம் அனுபவிக்கனுமோ?…. என தலையில் அடித்து கொண்டு அவளுக்கென ஒதுக்கிய‌ சோஃபாவில் படுக்க சென்றவளை  பிடித்து நிறுத்தினான்‌ வம்சி.   

     என்ன தூக்கம் வருதா?… இந்தா இந்த  பேப்பர்ல இருக்கறதெல்லாம் படிச்சிட்டு தூங்கு என ஒரு பேப்பரை அவள் மூஞ்சில் விட்டெறிந்தான்

.❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️        

       மறுநாள் காலை அனைவரும் மகிழின் வீட்டில் அவள் தந்தை மறுவீட்டு அழைப்பிற்க்காக  அழைத்ததால் கூடியிருந்தனர்.  

    என்னதான் தாய் வீடாயினும் கல்யாணத்திற்கு பின் விருந்தாளியாகவே உபசரிக்கப்பட்டாள் மகிழ். ஆதலால் வாடிய முகத்துடன் இருந்த மகிழின் காதருகில் சென்ற வம்சி என்ன என்னைய மாட்டி விடலானு பாக்குறையா?… ஒழுங்கா மூஞ்ச சிரிச்ச முகமா வச்சிக்கோ இல்லைனா நேத்து நைட்டு என்ன பண்ணனு உங்க அப்பா கிட்ட சொல்லிடுவேன்  என எச்சரித்தான்.   

  இவனுக்கு நேரங்காலம் தெரியாது கண்டபடி லூசுத்தனமா உலறிட்டு இருப்பான் என கேசுவலாக விட்டுவிட்டாள்.      ஆனந்த் மற்றும் லோகேஷ் , மச்சி இதுலாம் ஓவரா இருக்கு மகிய சாப்பிடவாவது விடு என நக்கலடிக்க,     அதுலாம் முடியாதுடா, என் பொண்டாட்டி என்னுரிமை நான் எங்க வேணாலும் கொஞ்சுவேன் நீயும் வேணுனா கொஞ்சிக்கோங்கடா….. ஆனா  உங்க  பொண்டாட்டிங்கள என்று பதிலளித்தான் வம்சி.     இதை கண்டு சிரித்த கிருஷ் மகிழ் ஆனந்தமாக தான் இருக்கிறாள் என பொய்கணக்கிட்டு கொண்டார்.        

  பிரியாவிற்கும் கௌரிக்கும் வம்சி திருந்திவிட்டான் போல என சில மணி துளிகள் எண்ணினர். மதுவும் இவன் செயலை பார்த்து ஆச்சரித்து தான் போனாள்.  

        சாப்பிட்டு முடித்தபின் வம்சி கிருஷ்ணாவிடம் தனியாக பேச வேண்டுமென அழைத்து சென்று அறை மணிநேரமாகியும் வராமல் இருக்க மகிழுக்கு பயம் தட்டியது.  

     பின் அனைவரும் அவர்களின் வீட்டிற்கு செல்லலாம் என கிளம்பினார்கள். பிரியாவின் வேண்டுகோளுக்காக அருகிலுள்ள பார்க்கிற்கு போகலாம் என முடிவு செய்தனர்.  

      பார்க்கிற்கு செல்வதால் மாதவன், மதுரவாணி, சுமித்ரா, மற்றும் ஆருத்ரனையும் அழைத்து சென்றனர்.அனைவரும் பைக்கில் சென்றால் டிரிப் போல இருக்கும் என மகிழ் ஐடியா கொடுக்க, நாம பார்க் போயிட்டு எப்படியும் நம்ம வீட்டுக்கு போகனும் அதுலா கம்பர்ட்புளா இருக்காது என அவளது ஆசைக்கு உலை வைக்க பார்த்தான் வம்சி.  

     வம்சியை தவிர மற்றவர்கள் மகிழின் ஆசையை மதிக்க மகிழின் பெற்றோர்களுக்கு சந்தேகம் வந்துவிட கூடாதென்று வம்சியும் ஒப்பு கொண்டான்.அனைவரும் பேர் பேராக அமர்ந்திருக்க,     மகிழ் அவள் ஸ்கூட்டியை பல நாட்களுக்கு பின் பார்க்க அதனிடம் வேகமாக ஓடிச்சென்று, ஹே ஜாக்லி எப்படி இருக்க , ஐ மிஸ் யூ ஜாக்லி செல்லக்குட்டி, இனிமே உன்ன பிரிஞ்சி என்னால இனிமேலும் இருக்க முடியாது ,  வா இன்னைக்கு உன் கூடத்தான் டிராவால்  ஓக்கேவா ஜாக்லி பேபி என அதன் கண்ணாடிக்கு முத்தத்தை அள்ளி தெளித்தாள்.    

இதை பார்த்து கொண்டிருந்த வம்சிக்கு வயிரெரிச்சலே எடுத்து விட்டது, புருசன விட அந்த டகரடப்பாவ தான் மிஸ் பண்றாலாம் இவ, நாம ஆசையா முத்தம் குடுத்தா அழுகிறா, இப்ப இந்த ஸ்கூட்டியை  முத்தம் குடுத்தே  வாஷ் பண்ணிருவா போல, ஏய் சக்காலத்தா பேர பாரு ஜாக்கு சீக்குனு டகரடப்பா நீ மட்டும் என் வீட்டுக்கு வந்த உன்ன பெட்ரோல் ஊத்தி கொழுத்தி விடுவேன் என கொதிகொதித்தான் மனதில்.  

ஆனந்த்_யாஷினி, லோகேஷ்_மதுப்பிரியா,கௌரி சங்கர்_ பிரியா,மாதவன்_ மதுரவாணி,என அனைவரும் தயாராக இருக்க,   

   ஸ்கூட்டியை ஸ்டார்ட் செய்து இதிலே போலாம் என ஆர்பாட்டம் செய்தாள் மகிழ்.அதுலாம் முடியாது , இதுல நான் எங்கடி கால் வைக்கிறது என அவளிடம் அமுக்கமாக கேட்க, வாங்க சார் என் ஜாக்லியிலே நிறைய வசதி இருக்கு பனைமரம் போல இருக்க உன்னையும் உட்கார வைக்க வசதி இருக்கு என சொன்னாள்‌.  

    ஓஓஓ இந்த டகரடப்பால அப்படி என்னதான் வசதி இருக்கு சொல்லு பாக்கலாம் என்று வம்சி காதருகில் கேட்க, உட்காருங்க சொல்றேன் என மகிழ் கூற வம்சி யோசனையில் நின்றிருந்தான்‌. ஹே நீ உட்காரலனா நகரு  நான் என் அம்மு கூட வரேன் என்று அவனௌ தள்ளி விட்டு வண்டிக்கு அருகில் போய் நின்றான் ஆருத்ரன்.  

    சரிசரி யாராவது வாங்க அடிபடாம என மகிழ் சொல்ல, இவ யார் வந்தாலும் கூப்பிட்டு போய்டுவா போல என ஆருத்ரனை இடித்து தள்ளி விட்டு ஸ்கூட்டியில் ஓடி அமர்ந்து கொண்டான் வம்சி.     சுமியும் ஆருத்ரனும் ஒன்றாக வந்தனர்.மகிழ் சொன்னது போல அவளது ஸ்கூட்டி, வசதியாகவே இருந்தது.ஆனால் வாய் வலியாக புகழ்ந்தால் சீன் போடுவால் என அமைதியாக அந்த பயணத்தை  வம்சி இரசித்தான்.   

அவன் காதல் மனது தன் மனைவி பாட்டியின் நிலைமைக்கு காரணமாக இருக்க மாட்டாள் என நம்பிக்கை தர , அந்த வீடியோவே அவன் மனதில் அலைபாய்ந்து கொண்டிருந்தது. 

     யாஷினி ஐ லவ் மை ஹஸ்பன்ட் என்று சத்தமாக கத்தி கொண்டு தன் கையை விரித்து துப்பாட்டாவை பறக்கவிட்டு அந்த டிரிப்பை இரசித்தாள். அவள் சொல்லி முடித்ததும் ஐ லவ் மை  யாஷினி பொண்டாட்டி என கத்தி கையை விட்டுவிட்டு வண்டியை ஓட்ட சிறிது தடுமாறிய ஆனந்த்  பின் சரிசெய்து கொண்டான். என்னடா உன்ன நம்பி கழுத்த நீட்டின பாவத்துக்கு கொன்னுறுவ போல என கிண்டலடித்தாள் யாஷினி.   

   அவர்களை முந்தியடித்து கொண்டு வண்டியோட்டியவர்களில்  “நீ உள்ள இடத்தை தவிர மற்ற இடம் அனைத்தும் என்னை பொறுத்தவரை நரகமே”…. என வண்டியிலிருந்து லைட்டாக எழுந்து கத்தினாள் பிரியா. தவமே நீ எனக்கு கிடைத்ததே  வரமடி என கத்திய கௌரி அவளை வண்டி ஓட்டுமாறு சொல்ல ஓடிக்கொண்டிருக்கும் நிலையிலே இடமாறி அமர்ந்தார்கள் பிரியாவும் கௌரியும்.

அவன் இருக்கும் தைரியத்தில் அவளும் வண்டியோட்ட, அவளை தீணடிதீண்டி வெட்க செய்து இரசித்தான்.   

   இவர்கள் கூட பரவாயில்லை, மதுவும் லோகேஷும் ஒருவரை ஒருவர் கட்டி பிடித்து கொண்டு நன்றி சொல்ல உனக்கு வார்த்தையில்ல எனக்கு நான்தான் மயங்குற காலமுல்ல வரைக்கும் காலடையில் கிடப்பேன் என பாடினாள் மதுப்பிரியா.

அவளுக்கு பதிலளிக்க உன்னை எனக்கு ரொம்ப பிடிக்கும் சொல்லுறதை கேளு என பாடல் பாட அவர்களின்  முதல் பயணம் ஸ்வீட்டாக இனித்தது.

      இவர்கள் ஏன் மதுவும் மாதவனும் கூட சிரிக்கலாம் பறக்கலாம் கவலைகள் மறக்கலாம் என பாடல் பாடிக்கொண்டே அந்த பயணத்தை இரசித்தனர்.     வசியும், மகிழும் ஒன்றாக வருகிறார் என்று அடித்து கொண்டே வந்தாள் சுமித்ரா. சுமியின் தோழன் ஆருத்ரன் அதே கொலை வெறியில்தான் வந்தான். காரணம் மகிழின் கொடி போன்ற இடையில் வம்சியின் கை படிந்திருந்ததால்.   

    கல்யாணம் ஆனவங்க ரொமான்ஸ் பண்றத பாக்குறதே தப்பு இதுல பொறாமை வேற என பொசிங்கி கொண்டிருந்தான் கௌரி.    

  ஆளாளுக்கு எவ்வளவு அழகாக லவ்வ சொல்லிட்டு போறாங்க இவ என்னனா சும்மா வரான் என திட்டிக்கொண்டிருந்தவள் பூனை குறுக்கே ஓடியதால் சடன் பிரேக் போடவே அவள் இடையை பற்றி இருந்தான் வம்சி.     

மகிழ், என்ன இடுப்பபையே பிடிச்சிட்டு இருக்க நான் பிரேக் போட்டு முடிச்சி ஹாப் நவர் ஆகுது கையை எடுடா  என்றிட வெடிக்கென்று கை எடுத்து கொண்டான் வம்சி.     

         சிறிது நேர பயணத்தில் பார்க் வந்துவிட, சிட்டாக பறந்து சென்று விளையாட ஆரம்பித்தார்கள். சர்க்கஸ், ஹைடென்சிக் , கோகோ இதையெல்லாம்  விளையாடி முடித்த கலைப்பில் அமர்ந்திருந்தனர். மதுரவாணி ஆசையாககபடி விளையாடலாம என்று கேட்க, ஆண்கள் ஒரு டீமாகவும் பெண்கள் ஒரு டீமாகவும் பிரிந்து கொண்டனர்.       

   பெண்கள் அனைவரும் சேரியை தூக்கி சொருகி கொள்ள, வாயை பிளந்து பார்த்து கொண்டிருந்த ஆனந்த், லோகேஷ், கௌரியை உரிட்டி மிரட்டி விளையாட்டில் கவனம் கொண்டு வந்தான் வம்சி.     முதலாவதாக களம் இறங்கிய யாஷினி, ஆனந்த் இருக்கும் இடத்திற்கு சென்று கண்ணடிக்க அவளை பாரத்திருந்தவனுக்கு  ஐஸ்கட்டியை கொட்டியது போல சில்லென்று இருக்க, மெய்மறந்து நிற்க மாதவன் அவனை உலுக்கியும் நடப்புக்கு வரவில்லை. அவனை அவுட் செய்து விட்டு டீமுடன் போய் சேர்ந்தவள் வெளியே போ வெளியே போ என கரகோசமிட்டனர்.

ஒரே உதை வம்சி உதைக்க நடப்புக்கு வந்துவிட, ஆண்கள் அவனை வாழ்த்தி எடுத்தனர்.        அடுத்ததாக களமிரங்கிய மாதவன், கபடி கபடி என முணகி கொண்டே அவர்களை தொட அருகில் செல்ல ஐந்து பெண்களும் அவனை அடக்கி பிடித்தனர்.இரு நிமிடமாக நகர இயலாததால், அவனும் அவுட்டாகினான். அவனை நம்பி இருந்த ஆண்களுக்கு இதற்க்கு மேலுமா விளையாடனும் என்றாகி விட்டது.

மாதவன் குணிந்த தலையோடு ஆனந்த் அருகில் சென்று அமர ” இவரு ஸ்கூல்ல பெரிய அப்பாடக்கரு, உன்ன மிஞ்ச யாருமில்லைனு உன் தங்கச்சி சொன்னா” ஆனா நீ இப்படி கேவலமா தோத்துட்டு வந்துட்டையேடா…..வெட்கமா இல்லை என வாயை சுளித்தான்.     பின் களமிரங்கினால் பிரியா, கௌரியை பார்த்து இவன் சும்மாவே அவ பின்னாடி போவான் இதுல இப்ப என்ன பண்ண போறானோ என முட்ட முட்ட முழித்தான் வம்சி. அவன் நினைத்தது போலவே பிரியாவை சைட் அடித்து கொண்டிருந்தவனை,

டச் செய்து விட்டு தன் டீமிற்கு குடுகுடுவென ஓடிவிட்டாள் பிரியா. போன பின், தம்பி வெளியே போ நீ அவுட் என மதுப்பிரியா கத்த ” ஏய் கருவாச்சி கிஷ்தர மாதிரிகிட்ட வந்துட்டு டச் பண்ணிட்டு ஓடிட்டையா என கேட்டிட, வம்சி அவன் எதிரில் வந்து ஆட்டத்தில் கவனம் வேணும் அவள வாய பிளந்து பார்த்தா அப்படி தான் ஆகும் போ போய் வெளிய உட்க்காரு நாங்க பாத்துக்கிறோம் என வழியனுப்பி வைத்தான்.     

பின் லோகேஷ் கலம் இருங்க தயாராக இருக்க, அவனை தடுத்து விட்டு தான் செல்வதாக பர்மிஷன் வாங்கி கொண்டு உள்நுழைந்தான் வம்சி. வம்சியின் டாரக்கெட் மகிழினியாக இருக்க, அந்தப்பக்கம் இந்தப்பக்கம் என அசையாமல் வம்சியை  மகிழ் பார்த்து கொண்டிருக்க, அவளிடம் நெருங்கிய வம்சியை  பிடித்து  கோட்டிற்கு வெளியே தள்ளி  விட்டனர் மீதமிருந்த நால்வரும்.தலையில் கைவைத்தே அமர்ந்துவிட்டான்  கௌரியும்,மாதவனும்.அவர்களின் அருகில் வந்த வம்சி அமர ஏதோ நாங்க பாத்துக்குறனு சொன்ன, போய் மகிழ முட்டகண்ண போட்டு பார்த்துட்டு இப்புடி அவுட் ஆகிட்டு வரையே வெட்கமா இல்லை என்றான் ஆனந்த். சாரிடா கொஞ்சம் சிளிப் ஆகிட்ட அந்த குள்ளச்சி பார்வையில் என தம் நிலையை உணர்த்தினான் வம்சி.     

  இறுதியாக கலமிறங்கிய மதுப்பிரியாவை பார்த்த லோகேஷ் அவளை தூக்கிக்கொண்டு சுத்த, பெண்கள் அவளை சூதரிக்க கத்த  ஆரம்பித்தனர்.  இதை காதில் வாங்கி கொள்ளாமல் அவளும் அவனுடன் சேர்ந்து கொள்ள இரு நிமிடங்களாக தன் டீமிற்க்கு செல்லாததால் அவுட் ஆகினாள் முதல் ஆளாக தன் டீமில். பெண்கள் அவளை திட்டி தீர்த்தாலும், தைரியமாக இருந்தார்கள்.    வானம் இருட்ட ஆரம்பிக்க, இதுதான் சமயம் என நினைத்த வம்சி எல்லாம் கிளம்பலாம் இட்ஸ் டைம் டூ லேட் என சொல்ல, அனைவரும்  வீட்டிற்கு செல்ல புறப்பட்டனர்.

     நல்ல வேலை லோகேஷ் மானத்தை காப்பாத்துன என அவனை பாராட்டி கொண்டே பயணம் செய்தனர். பாதி வழியிலே மேகம் கருகூப்பாகி மழை பொழிய ஆரம்பித்தது. அதனை இரசித்தபடி பெண்கள் வர எங்காவது நிற்க இடம் கிடைக்குமா என பார்த்து கொண்டே வந்தார்கள் ஆண்கள.

  ஒரு நிழல் கூடமிருக்க, அங்கே நின்றிருந்தனர். மழையில் நனைந்ததால் நடுங்கி கொண்டிருந்த பெண்களை கட்டி கொண்டனர் ஆண்கள் வம்சியை தவிர,      மகிழுக்கு நடுக்கம் ஏற்பட வாயெல்லாம் படபடவென அடிக்க ஆரம்பித்தது. அவளை கட்டியணைக்க இருகரம் வந்தது.

     சண்டை மீளும் _____________________________________________  

2 thoughts on “19) மோதலில் ஒரு காதல்”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *