Skip to content
Home » 2) மோதலில் ஒரு காதல்

2) மோதலில் ஒரு காதல்

2) மோதலில் ஒரு காதல்   

      நால்வரும் ஒரே டிப்பார்ட்மென்டில் நுழைய, நால்வரின் மனநிலையும் வெவ்வேறு விதமாக தாறுமாறாக இருந்தது. 

     மகிழ் இவனோடு தான் நான்கு வருடங்கள் கழிக்கனும் எனவும், பிரியா இனம் புரியாத மகிழ்ச்சியில் நுழைய, கௌரிசங்கரோ பிரியாவின் சிரித்த முகத்தை பார்த்து கொண்டே செல்ல, வம்சிகிருஷ்ணன் அவன் வாழ்நாள் கனவை நிறைவேற்றியே ஆக வேண்டும் என்று நினைத்து நுழைந்து அவரவர் இடத்தில் சென்று அமர்ந்தனர் .      

  உள்ளே வந்த ப்ரபசர் அனைவரையும் இன்ரோ கொடுக்க  வேண்டும் என்று சொல்ல முதலில் எழுந்த மகிழ் என் பெயர் மகிழினிகிருஷ்ணன் என கூற ‌வம்சியோ ‘டகரடப்பா’வே நல்லா தான் இருக்கு என்று சத்தமாக கூற, அவனிடம் வந்த ப்ரபசர் “அப்ப நீ சொல்லு” என்றிட எழுந்த வேகத்தில் “ஐ ம் வம்சிகிருஷ்ணன், மை ப்புல் கான்சென்ட்ரேசன் இஸ்  பைல்ட் எ ஒன் ஓன் ஹாஸ்பிடல்” என சொல்ல ,  அவனை பார்த்த ‘டகரடப்பா என்ற மகிழினி’ இந்த மாங்காமடையனோட பேரு வம்சியா என முணுமுணுத்தாள்.

பின் எழுந்த பிரியா “{எனது பெயர் கருவாச்சி” என கூற அங்கு அனைவரும் பெக்கபெக்கவென வாயை பிடித்து கொண்டு சிரித்தனர். பிரியாவிடம் வந்த ப்ரபசர் “நிஜமாவே உன் பேரு கருவாச்சியா?”னு கேட்க  அதற்கும் ஆமாம் என்று சொன்னவளை ”போதும் தாயி போதும்” என சிரித்து கொண்டே அமர வைத்தார். பின் மகிழின் ஒரேயொரு கில்லில் தான் சுயநிலை அடைந்து பே என விழித்தாள்.   

      சிரித்து கொண்டே எழுந்த டிவின்ஸில் ஒருவர் என் பெயர் ஆனந்த்… இவன் எனது அண்ணா லோகேஷ் என பிரியாவை பார்த்து சிரித்து கொண்டே கூறினான்.  

       பின் எழுந்த பிரியாவின் பாதாம்பால் எனது பெயர் கௌரிசங்கர் என கூறுகையில் சங்கர் என எழுதியதை சங்கர் என்று எழுதி பார்த்த பிரியாவை பார்த்த பின்னரே பிரியாவின் தற்காலிக நிலையை கண்டு திடுக்கிட்டாள் மகிழினி. 

           இவ்வாறு காலைப்பொழுது இனிமையாக கரைய, மதிய உணவு வேலை வர வயிற்றை பிடித்துக்கொண்டு வேகமாக சென்று இடத்தை பிடித்த மகிழ் டிபன் பாக்ஸை ஓப்பன் செய்து பார்த்த பின்னே காலை நடந்த நிகழ்ச்சி கண் முன் வந்து சென்றது.

களோபரத்தில் உணவு வேறு வீணாகிவிட்டது. எல்லாம் அந்த வீணாப் போனவனாளதான்…  

   வயிறு கத்துது குள்ள என கூறுபவளை(பிரியா)  கண்டு கவலைப்பட்டாள் மகிழினி. ஹாய் என்ற குரலால் திரும்பி பார்க்க அங்கே நம் காமெடி பீசுகளான டுவின்ஸ் நின்றிருந்தனர்.       

   அவர்கள்  திரும்பியதும் ஆனந்த் தன்னை அறிமுகப்படுத்தி கொண்டு இது என் அண் என கூற வருவதற்குள் அவனை தடுத்த லோகேஷ் ” ஐ ம் லோகேஷ் ஐ ஹேவ் நோ ப்ரண்ட்ஸ்”  என்று வேறு எதோ பேச வந்தவனை போதும் பீட்டரு , இவன விட்டா விடிய விடிய பேசுவானு மனதில் நினைத்து நிறுத்தினான் ஆனந்த். இருவரும் இப்படி தான் எப்போதும் அடித்து கொண்டு இருப்பார்கள். 

    நிறுத்திய வேகத்தில் “பசிக்குது சாப்பிடலாமா?” என மகிழிடம் கேட்க அவளோ “நாங்க சாப்பிட்டு ஹாப் ஹவர் ஆகுது” என அசால்ட்டாக கூறிட,    நேரங்காலம் புரியாமல் பிரியாவும் என்ன நாம சாப்பிட்டம்மா… அதுவும் எனக்கு தெரியாம எப்ப டி சாப்பிட்டோம் என கேட்ட கருவாச்சிக்கு கண் அடித்து சிக்னல் காட்டிய மகிழிடம் “ஐயே நான் ஒன்னும் பையன் இல்லடி” என மொத்த மானத்தையும் பிளீச்சிங் பௌவுடர் போட்டு கழுவி ஊற்றினாள் பிரியா.  

   ஆனந்த் முறைக்க , இதுக்கு மேல தாங்காதுனு ஆமாப்பா பசிக்குது சாப்பிடலாமா? என கேட்ட மகிழை வெட்டவா? குத்தவா? என்ற ரீதியில் பார்த்தனர் லோகேஷம் ஆனந்தும்.   

 ஓ நாங்களா வந்து பேசுனதாள மேடம் ஓவரா பண்றாங்க என்றவர்களிடம் மன்றாடி சாப்பிட அமர வைத்து ஆனந்தின் டிபன் பாக்ஸை பிடிங்கி ஓப்பன் செய்ய அதிலோ பூரியும் குருமாவும் இருப்பதை பார்த்து சாப்பிட ஆரம்பித்தவள் “என்னா டேஸ்டு என்னா டேஸ்டு”னு உச்சி கொட்டி சாப்பிட்டாள்.

மகிழை பார்த்து “டே லோகேசு நாங்க சாப்பிட்டு ஹாப் அண்ட் ஹவர் ஆகுதுன்னு ஒரு நாய் சொல்லுச்சு அத நீ பாத்த?? என பிரியா கேட்க எந்த தெருவுலயாவது அடுத்த வேலை சாப்பாட்டை ரெடி பன்ன போயிடுச்சோ ? என்னமோ? என லோகேஷ் கூற அடக்கிய சிரிப்பை சிரித்தே விட்டான் ஆனந்த்.      

       இந்த சம்பவத்திற்கு சொந்தகாரியோ, சாப்பிடுவதே தனது வேலையாக இருக்க  மகிழின் கன்னத்தை நறுக்கென கடித்த பிரியாவிடம், “நான் உன் பிரெண்ட் மகிழினி உன் ஆளு கௌரி இல்லை”  என சொன்னவளை ‘லூசா நீ’ என நினைத்து  வாயை பிதுக்கினாள்.   

     இதுவெல்லாம் ஆகாதென்று பசியில் அருகில் இருந்த லோகேஷடைய டிபன் பாக்ஸை பிடிங்கி சாப்பிட ஆரம்பித்தவளை கண்டு சிரித்து கொண்டே சாப்பிட்டு ஜாலி செய்தார்கள். எதிர்புறமோ சாப்பிட்டு கொண்டிருந்த கௌரியிடம் ” மண்ணை சாப்பிடாதே பன்னி சாப்பாட்டை சாப்பிடு ” என்று சொன்ன வம்சியிடம் சிரித்து அசடு வழிந்தான்.     

  தன் கர்சிப்பை தூக்கிப்போட்ட வம்சி துடைச்சிக்க ரொம்ப வழியுது என்றான்  .  வம்சியே யாரோ தன்னை பார்ப்பதை உணர்ந்து திரும்பி பார்க்க அங்கே நால்வரும் அடித்து கொண்டு சாப்பிடுவதை பார்த்து இதுங்களாம் எம்பிபிஎஸ் படிக்கத்தான் வந்துச்சுங்களா ஏளனப்பார்வை பார்க்க, அய்யோ பாத்துட்டானோ என பதறியபடி விளையாடிக்கொண்டே அவனை  பார்த்த மகிழ், எதுக்கு வந்தமோ அந்த வேலையான் புத்தகத்தை புரட்டுபவனை பார்த்து ரோபோட்டா இருப்பா போல நினைத்து 2.o என சொன்ன மகிழை,      

    “என்னது டூ பாய்ன்ட் ஓவாஆஆ” என கேட்ட கருவாச்சிக்கு இப்ப நாம என்னத்த சொல்றது என விழித்தாள். எதாவது சொல்லி வைப்போம் என வடிவேலு டையலாக்கை சொல்லி திடப்படுத்தி கொண்டு “அதுவா அ..அது” என இழுக்க அவளையே  பார்த்துக் கொண்டே இருந்தனர். பேவென முழித்தாள் மகிழினி.     

     “அதுவா அது ஒன்னும் சொல்ல முடியாது என‌க் கூற வருபவளை நீ எப்படியும் மொக்கையா எதாவது சொல்லி நாங்க அதை நம்பி அப்படியா என கேட்டாலும் ஆமாம்னு கேவலமாக சமாளிப்ப… தேவையா எங்களுக்கு?” என ஆனந்த் சொன்னதற்கு ஆமாஞ்ஜாமி போட்ட பிரியாவின்  பார்வை போகிற வழியை பார்த்து அங்கு கௌரிசங்கர் இருக்கவும் ஓஹோஹோ என கத்திய மூவரையும் முறைத்தாள் பிரியா.       

  அனைவரும் சிரித்து கொண்டு இருக்க லோகேஷ் நீ ஏன் சாப்பாடு கொண்டு வரவில்லை என அதிமுக்கியமான கேள்வியை கேட்டான்.  அய்யோ கேட்டுட்டானே எதாவது சொல்லி சமாளிக்க வேண்டியதுதான் என்று நினைத்து வாயைக்கூட மகிழ் திறக்கவில்லை பிரியா காலையில் நடந்ததை சொல்லிட்டு  மூச்சு விட்டவளை அச்சோவென அவளது அடிபட்ட காலை பார்த்து விட்டு, மகிழை பார்த்து  சிரித்து கொண்டே நெட்டி முறித்தான். அவளோ சாதனை செய்தது போல நினைச்சி சிரித்து வைத்தாள்.    

        பின்ன என்ன மச்சி, எவ்ளோ அறிவு இருந்திருந்தா தவறையும் செஞ்சிட்டு அதுவும் அவனோட சிரிச்சிட்டே உயிரே இல்லாத கார அடிச்சிருப்பனு மகிழிடம் லோகேஷ் கேட்டான்.    

   தன் தவறை அப்போது தான் உணர்ந்தவள் வம்சிகிருஷ்ணனிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டு இருக்கையில் எதிரே வந்தவனை கண்டு எழுந்த நின்ற மகிழினியின் மொபைலிலிருந்தது                               

                     ‘என் வீட்டு பக்கம்  வந்து விடாத நாய்கள்  வச்சிருக்கேன்  உன்  பேரை வச்சுதானே  தினமும்   அதைகூப்பிடுவேன்’ என ஒலித்த போனை எடுத்தவளை    இழுத்து படார் என‌  அறைந்தான்.

அறைந்த அறையில்  பூமித்தாயை அணைத்து இருந்தாள் .   

          அவளை அறைந்தவனை பார்த்து யார் இவன்? ஏன் மகிழை அடித்தான்? என பார்த்து கொண்டிருந்தவர்களின் முன் நின்றவரின் காலை பிடித்து கெஞ்சினாள் மகிழ்.

“தாத்தா நீங்க எங்கள தப்பா புரிஞ்சுக்கிட்டிங்க…என்னை பேச விடுங்க கொஞ்ச நேரம்… ப்ளீஸ் கொஞ்சம் டைம் குடுத்தா நான் என்ன நடந்துச்சுன்னு புரிய வச்சிடுச்சிவேன்” அந்த பெரியவர் காலில் விழுந்திருந்த மகிழை எழுப்பிய பிரியாவின் பழைய வாழ்க்கையை நினைத்து கல்லாகி நின்றாள் மகிழ்.      

  அடித்தவரிடமே கெஞ்ச காரணம் என்ன???? பிரியாவின் பழைய வாழ்க்கையை நினைத்து மகிழ் ஏன் கல்லாக வேண்டும்…….?  

      சண்டை மீளும்

கௌசல்யா வேல்முருகன் 💝

அத நாம நாளைக்கு பாக்கலாம்.‌பாய் பிரண்ட்ஸ்    

7 thoughts on “2) மோதலில் ஒரு காதல்”

  1. CRVS2797

    அது என்ன ப்ளாஷ்பேக் தெரியலையே…? ஆனா பாவம்
    சந்தோஷமா இருந்தவங்களை
    ஒரு நிமிசத்துல கலைச்ச மாதிரியாயிடுச்சு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *