Skip to content
Home » 25) மோதலில் ஒரு காதல்

25) மோதலில் ஒரு காதல்

காலிங் பெல் அடித்த கதவை திறந்தார் வம்சியின் தாய். முகத்தில் அவ்வளவு சிரித்த முகப்புன்னகையுடன் எதிரில் இருந்தவர்களை வரவேற்றார் சித்ரா. 

    அவர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த அவர்களின் மருமகள்களான பிரியா, மகிழ், மதுப்பிரியா,யாஷினி, மற்றும் அவர்களுடன் குட்டி தேவதை என்று அழைக்கப்படும் மதுரவாணி ஆகியோரே நின்றிருந்தனர்.

பின்ன வேறு எதுற்காக இவ்வளவு சிரிப்பு வரும்.     கலகலப்பாக வந்தவர்கள், வம்சி, கௌரி, லோகி, ஆனந்த் ஆகியோர் படியில் நின்றிருந்த போசை பார்த்து விட்டு ,

        பல்லிகட்டு சபரிமலைக்கு படிக்கட்டு வம்சிக்கு என பாடிய மகிழை முறைத்தான் வம்சி.    

  படியில் இருந்தவன் சரிங்க அத்தை சீக்கிரம் வாங்க, உங்க தொல்லைங்க இல்லல்ல உங்க பிள்ளைங்க வீடு வந்து சேர்ந்துட்டாங்க என்று போனில்  காத்திருந்தவரிடம் சொல்ல நிம்மதி அடைந்தார் தேவசேனா. 

    வாசலிலே நின்று பழிப்பு காட்டி கொண்டிருந்தவர்களை உள்ள வாங்க தங்கங்களா ஏன் வெளியே நிற்குறிங்க என சொல்லியபடி படி இறங்கினார் ராஜா.       

       எதுவாயிருந்தாலும் என் அப்பா அம்மாகிட்ட பேசிக்கோங்க ஆதி என்று சொல்லிய நித்யாவின் முறைப்பை பெற்ற ஆதி அப்ப மேடம்க்கு என்ன பிடிச்சிருக்கு போல என்று குதூகளித்தான் ஆதி.    நான் பேரண்ஸ கேட்க சொன்ன நீங்களா ஒன்னு முடிவு பண்ணிட்டு அப்புறம் கல்யாணம் நடக்கலனு “தேவதாசன் மாறி தாடி முடியலாம் வளர்த்துகிட்டு தேவதாசன் நானும் ஒரு ஜாதிதானடானு பாடக்கூடாது”, என குறும்பு பேசினாள். 

   அவளை பார்த்த ஆதிக்கு என்னம்மா பேசுறாயா என்றானது. நான் உன் பேரண்ஸ்கிட்ட பேசனுனா உனக்கு விருப்பம் இருந்தா மட்டும் தான்னு சொன்னன் அதான் ஒரு நம்பிக்கை என்றான்.      நித்யா என்று அவளையும் மகிழ் அழைக்க வம்சி அறையில் இருந்தவள் தப்பிக்க வாய்ப்பு கிடைத்தது என்று வெளியே ஓடிவந்தாள்.

     படிகளில்  வரிசையாக நிற்கும் தன் சகோதர்களை பார்த்து என்னடா நடக்குது இங்க என அப்பாவியாக முகத்தை வைத்து கேட்டிட, ஆடு நடக்குது, மாடு நடக்குது, கூடவே நாயும் நடக்குது,  அப்றம் உன் பின்னால் வர ஆதியும் நடக்குறார் என கோசமிட்டான் ஆனந்த்.   

   இக்கூற்றை உள்வாங்கிய வம்சியின் பெற்றோர்,  அவளை பாரக்க மகளின் நெளிவு சுழிவை கண்டு மகிழ்ச்சி கொண்டனர். திருமணம் என்பதில் விருப்பம் இல்லை என்று இத்தனை நாளாய் சொல்லும் மகளின் முகத்தில் இருந்த மாற்றத்தை பார்த்து தான் அந்த மகிழ்ச்சி.  

    இப்படியே நாங்க வெளியவே தான் நிற்கனுமா யாரும் உள்ள வர சொல்ல மாட்டிங்களா என்று சொன்ன பிரியாவிடம்  நெருங்கி வந்த கௌரி எத்தனை டைம் சொல்லு வாங்க  என்றான்.

    சரி சரி போய் ஆரத்தி எடுத்துட்டு வாங்க என்று யாஷினி சொல்ல அவளருகில் வந்த ஆனந்த் “இவங்க பெரிய எலிசபெத் மகாராணி  எப்பவும் ஆரத்தி எடுத்தாதான் உள்ள வருவாங்க”, என சொல்லி வாயில் கைவைத்தால் பாட்டிமார்கள் போல.    

ஆமா நாங்க எலிசபெத் ராணி இல்லதான் இந்த வீட்டுக்கு இப்ப வரப்போற பொக்கிஷம் எலிசபெத்த விட பெரியவங்க என்று சொல்லி நகர்ந்து நின்றாள் மகிழ். அப்போதே அவள் பின்னால் வீல்சாரில் அமர்ந்திருந்த மஞ்சுமாவை மற்றவர்கள் கண்டனர்.   சிரித்த முகத்துடன் இருந்த மஞ்சுவை பார்த்து அனைவரின் முகத்திலும் தௌசன்ட் வாட்ஸ் பவர் மின்னியது.    

வம்சியின் பெற்றோர்கள் தங்கள் மருமகள்களை நினைத்து நெஞ்சம் மகிழ்ந்தனர். வம்சியின் கண்ணில் ஆனந்த கண்ணீர் தத்தளித்தது‌. அவனை பார்த்த மகிழ் நீ “என்னடா சும்மா சும்மா மோட்டார் அணையே ஓப்பன் பண்ணிரே”, என்று கிண்டல் பேசினாள்.   

பின் ஆரத்தியுடன் வந்த நித்யாவும் அவளின் பெற்றோரும் சேர்ந்து ஆரத்தி எடுத்து அவர்களை உள்ளே அழைத்து வந்தனர். அந்த நொடியே வம்சியின் மனதில் இதுவரை பதிந்திருந்த கூற்று தவறென நினைத்து தன்னை நொந்து கொண்டான்‌.  

மகிழ் போன்ற ஒரு மனைவி, அவள் போன்ற ஒரு காதல் துணை கிடைக்க கோடி புண்ணியம் செய்திருக்க வேண்டும் என மனம் நெகிழ்ந்தான் வம்சி. அதை வாய்விட்டே சொல்லி விட்டார் ராஜா.      இந்த மாதிரி மருமகள்கள்  கிடைக்க நாங்க குடுத்து வைத்திருக்க வேண்டும் என்று சொல்லிட பெண்களின் முகம் பிரகாசமாக மாறியது.

இதுவரை நான் தவறுதலாக நினைத்திருந்தோம் என்றும் மகிழிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என முடிவெடுத்தான் வம்சி. மற்ற ஆண்கள் தன் துணைவிகளின் செயலை எண்ணி நெகிழ்ந்தனர்.    

  மஞ்சு பாட்டிக்கு இன்னும் நினைவு திரும்பவில்லை இருப்பினும் நம்முடன் இருந்தால் முன்னேற்றம் வரும் என ரிஷி டாக்டர் சொன்னார்  என புலுகினாள் மகிழ்.

அனைவருக்கும் இதுவும் சரியென பட மஞ்சுமாவிற்கு ஒரு ரூமில் அழைத்து சென்று தேவையானவற்றை சரிசெய்து கொண்டிருந்தாள் மகிழ்.    இப்படி நினைத்து மகிழை பெருமையாக பார்த்து கொண்டிருந்தனர் வம்சியும் வம்சியின் பெற்றோர் மற்றும் மற்ற ஆண்கள். உண்மை தெரிந்த பெண்கள் கமுக்கமாக இருந்தனர்.       

பின் சிறிது நேரம் ஓய்வு எடுக்கலாம் என ரூமிற்க்கு சென்ற மகிழை காண விரைந்து சென்றான் வம்சி. அவனை தடுத்த ராஜா டே என் மருமக இன்னும் சாப்பிடல ஒழுங்கா சாப்பிட வை என மிரட்டினார்.

பின் மின்னல் வேகத்தில் தட்டில் சாப்பாட்டுடன் ரூமை அடைந்தான்.    இதற்கிடையே ஆதியும் ராஜாவும் பேச வேண்டும் என முடிவெடுத்து வெளியில் உள்ள தோட்டத்தில் சந்தித்தனர். வாத்துகளை மேய்த்த படி நின்றிருந்த ஆதியின் பின் வந்த ராஜா “ஹாய் மாப்பிள்ளை “என கேசுவலாக கூறினார்.

    அவர் சொன்ன வார்த்தையில் சந்தோஷமாக இருந்தாலும் எப்படி கண்டு பிடித்தார் என சிந்தனையில் மூழ்க, அட இது ஒன்னும் டெட் எக்ஸாம் இல்ல மாப்பிள்ளை இதலாம் யாராவது சொல்லிதான் புரியனும்கிற வயசும் எங்களுக்கு இல்லை.  

   என் பிள்ளைய பார்த்தப்பவே எனக்கு நல்லா புரிஞ்சு போச்சு. அதான் நானும் என் மனைவியும் முடிவு பண்ணிட்டோம். பட் உங்களுக்கு விருப்பமானு கேட்கத்தான் இங்க வரச்சொன்னேன் என்றார் ராஜா.    

ஆதியின் உள்மனதில் உடனே ஒப்பு கொண்டாள் என்ன நினைப்பார்கள் என்று எண்ணம் வேறு அப்போ எட்டி பார்த்தது. சிரித்த முகத்துடன் “யோசித்து சொல்றேன் அங்கிள் “என்றிட ராஜாவின் முகம் வாடியது. அவர் முகச்சுளிப்பை கண்டவனின் மனம் தவறு செய்து விட்டாய் ஆதி என துடித்தது.   

பின் அங்கிள் “உங்க பொண்ணுக்கு ஓக்கேனா எனக்கும் ஓக்கே அங்கிள், “அவங்கள பர்ஸ்ட் கேளுங்க” ,……என்று தன் முடிவுக்கு முற்று வைத்தான்.   சாப்பாட்டுடன் உள் நுழைந்த வம்சி மகிழை காணாததால் பால்கனிக்கு செல்ல, அங்கு சின்னஞ்சிறு குருவிகளின் அலைபாயும் சத்தத்துடன் மெய் மறந்து வேடிக்கை பார்த்தபடி நின்றிருந்தாள் மகிழ்‌.

அவள் அருகில் வந்த வம்சி அவள் அறியா அந்த நேரத்தில் அவளை பின்புறமாக கட்டியணைத்து சாரி மகி அண்ட் தேங்க்ஸ் என ஒரு சேர ஒப்பித்தான்.    

அவன் புறம் திரும்பிய மகி கேள்வியாக புருவத்தை உயர்த்தி காட்ட, அவளை வைத்த கண் வாங்காமல் பாரத்தான் வம்சி. அவனிடம் எதற்க்காக சாரி சார் என்று கேட்க,   

  மகி இனிமே நீ என்ன உன் இஷ்டப்படி கூப்பிடலாம் இந்த சார்லாம் வேண்டாம் என்றான்.   என்ன சார் திடீரென இந்த முடிவு ஆக்ச்சுவலி உங்க முதல்  தண்டனையே இதுதான்‌. ஏன் இனிமே கூப்பிட கூடாது என கேள்வி எழுப்பினாள் மகிழ்.   

   மகி அது அப்போ தெரியாம ….உன்ன பத்தி புரியாம…என ஏதேதோ உலரி கொண்டிருந்த வம்சியிடம் அப்போ இப்ப நீங்க என்ன புரிந்து கொண்டிர்கள், ம்ம்ம் அப்படிதான சொல்ல வரிங்க சார் என்றாள் ஒரு முறைப்புடன்.  

ப்ளீஸ் மகி நான் சொல்ல வரத பொறுமையா கேட்டு பேசு மகி என கெஞ்சியவனிடம் எனக்கு பசிக்குது எப்பவும் போல அந்த கார சாப்பாட்டை ஊட்டி விடுவிங்களா இல்ல இப்படியே தான் பேசி கொல்லுவிங்கலா வம்சி சார் என்றாள்.  

   அவளின் பேச்சில் தெரிந்த எரிச்சலில் இனி இதை பற்றி பேசி எந்த புரியோஜனம் இல்லை தக்க சமயத்தில் பேசலாம் என முடிவெடுத்த வம்சி கொண்டு வந்த உணவை ஒரு வாய் ஊட்டிவிட, தற்போது மகிழின் கண்ணில் இருந்து கண்ணீர் வரவில்லை.

    அடுத்த வாய் அவன் ஊட்ட வரும் போது இல்லல்ல இது எனக்கான சாப்பாடு இல்ல சார் “எனக்கு நீங்க எப்பவும் காரமான சாப்பாட்டை தான் தருவிங்க”,…. நீங்க மறந்துட்டிங்கனு நினைக்கிறேன் அதான் உங்க ரெண்டாவது தண்டனை  என அவனுக்கு நினைவு படுத்துவது போல் குற்றிகாட்டினாள். 

மனம் தளர்ந்தாலும் வெளிகாட்டி கொள்ளாமல் அம்மா அப்பா இருக்க வர இப்படிதான் என சொல்லி, வேறு எதாவது பேசலாம் என முற்றிலும் பேச்சை மாற்றினான் வம்சி. 

  “ஓஓஓஓஓ அதானா சார் நான்கூட கொஞ்ச நேரத்துல இதுலாம் பாசம்னு நம்பிட்ட என்றாள்” மகிழ்.அடியேய் ஏன்டி என்ன படுத்துற என மனதில் புலுகியவன் சிரிப்பு காட்டி ஆமா உங்கள கடத்திட்டு போக ரௌடி கேங்ஸ் வந்தாங்களே  அவங்க என்ன ஆனாங்க என்று ஆர்வமாக கேட்டு அப்போதும் மாட்டி கொண்டான்.

    ஏன்டா ரௌடிங்க வரானுங்கனு தெரிஞ்சும் நீ அசால்டா படியில் நின்னு போன் யூஸ் பண்ணிட்டு இருக்க அப்பிடின்னா எங்களுக்கு என்ன ஆனா என்னனு தான எல்லாரும் இருந்திருக்கிங்க என வம்பிழுத்தாள்.   அவளிடம் கெஞ்சி சாந்தப்படுத்திய வம்சியிடம் இப்ப ஃப்ளாஷ் பேக் போகனுமா என்றிட ஆம் என தலையசைத்தவனுக்கு ஒரு கட்டளை இட்டாள்.

மற்றவர்களும் வந்தாள் மட்டும் தான் நான் சொல்லுவேன் என்றிட எறும்பின் வேகத்தை விட வேகமாய் கூட்டத்தை கூட்டினான். அங்க என்ன நடந்துச்சுனா என்று பிரியா ஆரம்பிக்க,

   மகிழினியை தாக்க ஒரு அடியாள் தன் இடுப்பில் சொருகி வைத்திருந்த கத்தியை எடுத்தான்.   

பக்கத்து கடையில் பழங்கள் வாங்க சென்றிருந்த பிரியா கனியை ருசிப்பார்க்க நினைத்ததால், அப்போது அந்த அடியாளிடம் வந்து  அவனிடம் இருந்த கத்தியை பிடிங்கி ஆப்பிளை கட் செய்து ருசி பார்த்தவள், ம்ம்ம் நல்லா டேஸ்டா இருக்கு என உச்சு கொட்டி மற்றவர்களுக்கு சிறு துண்டுகளை வெட்டி குடுத்தாள்.

     இதை அனைத்தையும் பார்த்திருந்த அந்த அடியாள் பாஸ் ” இதுங்க கிட்ட கத்தியும் புரியோஜனம் இல்லை கத்தியெடுத்தும் புரியோஜனம் இல்லை போல”என சிறு பிள்ளை போல சொல்லி  தன் கையால் கண்ணை பிசைந்தபடி கூறினான்.

    நடப்பதை பார்த்து கொண்டிருந்த தேவா ” என்னடா இந்த சூனாபானாக்கு வந்த சோதனை”, என வாய் விட்டே உலறி கொண்டிருக்க அவனிடம் கத்தியை குடுத்தாள் பிரியா. 

  கத்தியை குடுத்தவளின் கழுத்தில் கத்தியை வைத்தான் தேவா. பிரியா எந்தவொரு பயத்தையும் முகத்தில் காட்டாமல் அவன் வயிற்றிற்கு கீழ் ஒரேயொரு ஒரு உதை தான் விட்டாள்.   

  ஐயோ என கத்தியவன் கத்தியை கீழே போட்டு கதறினான். என் வாழ்க்கையே போச்சே பாவி உன்ன ……. என்று கைககளை மடிக்கி முட்டியிட்டு  வலியில் துடித்தான்.

பின்ன யாருக்கிட்ட என தன்னிடம் இல்லாத மீசையை முறுக்கினாள் பிரியா.  

   மகிழை அட்டாக் செய்த ஒரு அடியாளை தட்டி விட்டு அங்கு வந்து நின்றான் வாசு. அட வாசு அண்ணா நீங்க எங்க இங்க என்று கேட்டவளுக்கு, அவன்தான்மா என் நண்பன் என்று சொன்னவனிடம் ” ஏன்னா புடிச்சதே புடிச்சிங்க நல்ல ப்ரண்டா பிடிக்க மாட்டிங்களா!… என்றாள் மகிழ்.  

   அப்போது ஒரு அடியால் அடிக்க வர அவனை தடுத்த மகிழிடம் “நண்பன்ல என்னமா நல்ல நண்பன் கெட்ட நண்பன் நண்பன்னாலே நல்ல நண்பன் தான்” என்று பெருமை பேசினான்.   

ஏன்‌ வாயில எதாவது  நல்ல வார்த்தை வந்திட போகுது என மிரட்டி,  ஆமா ஆமா உன் நண்பனுக்கு அங்க பழத்த அடி போல போய் அவன கவனி என்று அனுப்பி வைத்தாள். அவள் அருகில் நின்றிருந்த மதுப்பிரியா இவனுங்க இப்படி டைலாக் பேசி பேசியே நட்பை வளர்க்குறேனு  கெடுத்துறானுங்க மகி என்று சொல்லி வாயை பிதிக்கினாள்.  

ஒரு‌ ஐந்து நிமிடத்தில் அத்தனை அடியாட்களும் மகி, யாஷி, மது,பிரியா அடித்த அடியில் வழி பொறுக்காமல் கதற, யாஷினி 108 ற்க்கு கால் செய்து “இந்த ஹாஸ்பிடல் வெளிய ஒரு கும்பல் அடிச்சிட்டு கத்திட்டு இருக்குதுங்க வந்து அள்ளிட்டு போங்க” …… என்று போனில் பேசி கட் செய்து காரில் ஏறி  காற்றாக பறந்தனர்.   

   தேவா…… இந்த பொண்ணுங்கள அவனுங்க தைரியமா இப்படி வெளியே விட்டிறிக்கும் போதாவது நம்ம யோசிச்சு பார்த்திருக்கலாம் என சொல்ல,  

      பாஸ் நமக்கே இப்படி அடினா    இதுங்கள  கட்டுன அந்த புண்ணியவானுங்களுக்கு என்றான் அடியாளில் ஒருவன். இதையெல்லாம் ஒளிந்து பார்த்திருந்த நான்கு கண்களில் கோப தீய் பறபறவென பத்திக்கொண்டது.     

    💞💞💞💞 சண்டை மீளும் ❤️❤️❤️❤️.

உங்களில் ஒருத்தி நான் 🥰💞.   

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *