Skip to content
Home » 6) மோதலில் ஒரு காதல்

6) மோதலில் ஒரு காதல்

மோதலில் ஒரு காதல் 💞      

பிரியா சென்று பார்க்க, பாத்ரூமில் அப்பெட்டியை கட்டிக்கொண்டு இது இது எல்லாமே எனக்கு தான் என கத்தினாள் மகிழ்.ஒட்டு மொத்த குடும்பமும் ஒன்றாகக்கூட , மகிழிடம் சென்ற அப்பா ” தங்கம் என்னடா ஆச்சு  ஏன்டா  இப்படி  ஒரு பதற்றம்” எனக்கேட்க ,                    

     “இல்லப்பா இது எனக்கு மட்டும் தானப்பா ?”…  என கேட்க, மகிழின் காதை பிடித்து திருகிய தேவசேனா அதுல அப்புடி என்னடி இருக்கு என கேட்க , முழிப்பு வந்த மகி அச்சோ உலறிவிட்டோமா என முழிக்க மகிழை பார்த்து பிரியா மற்றும் மது சிரிக்க, ஆமா ஆமா பாத்ரூம் கழுவுற போஸ்டிங் உனக்கு மட்டும் தான் என மாதவன் சொல்லவும் சிரித்தார்கள்.               என்ன பாத்ரூமா என சுற்றி முற்றி பார்த்து ” அடச்சீசீ இப்படி அசிங்கப்பட்டுடனே ” சரி சரி வந்தது வந்தாச்சு எதாவது சொல்லி சமாளிப்போம் என‌ வாயை திறக்க,      

     ஆமா அதுலாம் இருக்கட்டும், கருவாச்சி “நீ ஒன்னே ஒன்னுதானு சுவற்றுல போய் மட்டுனு முட்டுனையே அது எதுக்கு என மதுராவாணி அவளையும் கோர்த்து விட , இருவரின் சேட்டைதான் என   அனைவரும் நினைத்தனர். சரிசரி போய் ரெடி ஆகிட்டு வாங்க சாப்பிடலாம் எனக்கூறி விட்டு சமையலறைக்குள் சென்றார் தேவசேனா.            சரிமா என கோரசாக கூறிக்கொண்டே பிரியா மதுவை முறைத்து எரித்து விடுவது போல் பார்க்க அவளை ஒரு பொருட்டாக கூட மதிக்காமல், ” என் தங்கை மதுரவாணி ” என பெருமையாக  டைலாக் பேசி நன்றி கூறும் வண்ணம் பார்த்தவளிடம் , நான் இருக்கும்போது நீ வருத்தப்படலாமா?என அஸ்கி வாய்சில் பேசிக் கொண்டனர்.          

             தலையிலடித்து கொண்டிருந்த பிரியாவிற்கு பழிப்பு காட்டிக்கொண்டு ரிப்ரஸ் ஆக சென்றனர்.              சாப்பிட்டு முடித்து அனைவரும் படுக்கச் செல்ல, மகிழ் அப்பெட்டியிலுருந்து ஒரு சாக்கோபாரை எடுத்து ருசி பார்த்தாள், பிரியா குலாப்ஜாமுனை சுவைத்தாள்._________________&&&&&_________________      

         அதேசமயம் வம்சியிடம் ” என்ன வம்சி ராசா பழிவாங்குறனு சொல்லிட்டு இப்ப பால்டப்பா பின்னாடி சுத்திட்டு இருக்க போல” என நாசுக்காக போட்டு வாங்க நினைத்து கௌரி கேட்க,            

  அதெல்லாம் இல்ல மச்சி , என் ப்ரண்ட் ஒருத்தன் *குலாப்ஜாமுன் சாப்பிடனும்னு ஆசைப்பட்டான்.  அதான் ஒன்னும் தெரியாத அந்த பச்சமண்ண நான் தனியா அழைச்சிட்டு போனேன், “எப்படியும் குலாப்ஜாமுனை ருசி பார்த்திருப்பானு தோணுது “என கூறும்போதே போதும் ராசா போதும் பசிக்குது சாப்பிடலாமா என நாசுக்காக நழுவியவனை பார்த்து நக்கலாக சிரித்தான் வம்சி கிருஷ்ணன்.  

சாப்பிட்டு படுத்தப்பின் லைட்டா தூங்கியகௌரியிடம்    டே மச்சி என அழைக்க ம் சொல்லு என்றான் கௌரி   மீண்டும்        வம்சி: மச்சி…….       கௌரி: திரும்பி படுத்து சொல்லுடா..என   தூக்க கலக்கத்துடன் கூற‌.       வம்சி: மீண்டும் டே மச்சி… என‌ அழைக்க   

    கௌரி: முட்ட முட்ட முழித்து சொல்லும் சொல்லி தொலையும் என சிறிது எரிச்சலாக கூற        வம்சி: என் தங்க மச்சியென கௌரியின் உதட்டை தடவிக்கொண்டு அழைக்க ,      

   கௌரி: டே வம்சிராசா நான் ஒன்னும் உன் ஆள் இல்ல சோ சட்அப் அண்ட் நவுந்துப்படு என கத்த         வம்சி: குட்நைட் சொல்லத்தான் கூப்பிட்ட நீ ஓவரா பன்றடா ,…… என சிணுங்க     

   கௌரி: அதெப்படி ராசா தூங்கிட்டு இருந்தவன எழுப்பி இந்த குட்நைட் சொல்லலைனு யாருடா அழுதாஆ என மிகமிக எரிச்சலாக கூற‌    வம்சி:. பாவமாக மூகத்தை வைத்து கொண்டு போடா மச்சி , அந்த பிரியா பொண்ணு கிட்ட மட்டும் ஈஈஈஈஈஈனு இழிச்சு இழிச்சு பேசுற என்கிட்ட மட்டும் எரிஞ்சு எரிஞ்சு பேசுற என கம்ப்லைன்ட் செய்ய      கௌரி: ஈஈஈஈஈ தலையெல்லாம் தக்கடி தக்கடி  என ஆடுமளவு சிரித்து கொண்டு குட்நைட் போதுமா ( சாவடிக்குறானே) தூங்கு என கூறி தூங்கினான்.   வம்சி: புரண்டு புரண்டு படுத்தும் தூக்கம் வராமல் மச்சியென அழைக்க,   கௌரி: எடு செருப்ப நாயே  ஒழுங்கா தூங்கு என்ன இம்ச பண்ணாமல்  என கொதியாய் கொதித்தான்      வம்சி: பின் கண்ணை இருக மூடிக்கொண்டு 100, 99, 98, 97, 96, 95என  22 வர எண்ணுகையில் தூங்கிவிட்டான்.

__________________&&&&&&__________________   

அதிகாலை எழுந்த மதுரவாணி , அவர்களையும் எழுப்பிவிட வேண்டுமென்று மகிழின் ரூமிற்கு வர பெட்டின் இறுதியில் ஒரு ஓரமாக ஒட்டி கொண்டு இருந்த பிரியாவிடம் சென்று, கருவாச்சி, கருவாச்சி என உழுக்கியும் எந்தவிதமான சலனமும் இன்றி படுத்து இருந்தவளை  பெட்டில் எழுந்து நின்று இரு கைகளையும் இடுப்பில் வைத்து பிரியாவை உதைக்க,             கீழே விழுந்தவள் அப்போதும் விழிக்காமல் ஐயோ காப்பாத்துங்க காப்பாத்துங்க என கத்த அடித்து பிடித்து எழுநதாள் மகிழ். கடுப்புடன் பிரியாவின் மண்டையில் மங் என்று கொட்ட ,விழித்து கனவா என விழித்தாள்.          ஆமா குட்டிமா இன்னைக்கு எதுக்கு இவ்வளவு சீக்கிரம் எழுப்பி இருக்க, எங்களுக்கு ஹாஸ்பிடல் டியூட்டி எட்டு மணிக்கு தான்டா என மீண்டும் பெட்டில் சரிந்தவளை  இறுக்கி பிடித்து ஏ அறிவு கெட்ட குள்ளச்சி இன்னைக்கு என்ன நாள் ? என கேள்வியாக மது கேட்க       

      மகி,” மரியாதை மண்ண கவ்வுது என முணுமுணுக்க” , காலண்டரை பார்த்த பிரியா ஆமா இன்னைக்கு டாடி மம்மிக்கு 27த் வெட்டிங்டே என கூற, அட ஆமால்ல என மகிழும் சொல்ல      

          அப்பா கோவிலுக்கு போகனும்னு சொன்னாங்க அதான், சரி இத போட்டுட்டு தான் கோவிலுக்கு வரனும் இல்லனா டூ விட்டுறுவ என மது கூற,            

       “தங்கமே உன் ஆசையை நிறைவேற்ற தானே நாங்களாம் இருக்கம் ” என பிரியா நேசத்துடன் சொல்ல ,”ஓக்கே ” போய் ரெடி ஆகிட்டு வாங்க என அவளும் ரெடியாக சென்றாள்.          

      ஒருமணி நேரத்தில் ரெடியாகி வந்த மகிழ் படிக்கட்டில் அவள் கட்டியிருந்த சாரி தடுத்து தடுமாறி விழ போக  அவளை பிடித்து பிரியா நிலைப்படுத்த    

   மாதவன்: எதுக்கு இந்த வேண்டாத வேலை குட்டிச்சாத்தாங்களா என நக்கல் அடிக்க    மது: அண்ணா அமைதியா இரு எனக்கூறமாதவன் : பின்ன ” என்னடா செல்லம் காலங்காத்தால இந்த கொடுமையெல்லாம் பார்க்கனுமுனு என் தலையில எழுதிருக்கு போல என்ன‌ பண்ண” என கூறபிரியா:  காட் ஸ் கிரேட் என  தேன்ங்  பண்ணி எல்லாம் உன்” ஹெட் ரைட்டிங் டா” என பதிலளித்தாள்.மது: அப்பா ஆசையா வாங்கி குடுத்தாருடா அதான் என கூற ‌மாதவன்: ஓஓஓஓவென மகி, பிரியாவைப் பார்த்து ” என்ன அக்கா இன்னைக்கு ரெண்டு பேரும் தேவதைமாறி இருக்கிங்க  என்று அடக்கிய சிரிப்புடன் கூற மூன்று பேரும் அவனை மொத்து மொத்துவென மொத்தினர்.   கணவனின் பின் பூ போல வந்த தேவசேனாவை பார்த்து   மகிழ்: ஏய் குட்டிமா இது நம்ம ஹிட்லறம்மாவாடி?….   மது: அக்கா எனக்கு இதுலாம் பார்த்தால் நெஞ்சு அடைக்கிற மாதிரி இருக்கு டேப்லெட் எதாவது வச்சிருக்கயா ? என அம்மா வை இருவரும் சீண்ட     பிரியா: தன் பெற்றோர்களுக்கும் வெட்டிங்டே என‌ நினைத்து ( எத்தனை முறை கால் செய்தும் அவர்கள் அட்டன் பண்ணவில்லை) கலங்கினாள்.   கிளம்பலாம் என தேவசேனா கட்டளையிட     

     அதான பார்த்தன்.  ஒரு நாள் நிம்மதியா இருக்க விடமாட்டயே என மது கூற,  ஷ்ஷ்ஷ், மது குட்டி “வாய் அதிகமானா சேதாரம் பெருசா இருக்கும் ” அப்புறம் உனக்கு எப்படி வசதி என மகளை உஷார் செய்தார் கிருஷ்ணன்.       முறைத்த தேவசேனாவின்  இடையில் சிறிது கோலமிட , வெட்கம் கொண்ட அம்மாவை கண்டு ஓஓஓஓஓஓஓ வென அனைவரும் கோரசமிட்டனர்.   

        பிரியாவின் நினைவை கலைக்கும் பொருட்டு ” ஆர் யூ டிரைவ் பார் டுடே” என‌க் கேட்ட மகிழிடமிருந்து கீயை பிடிங்கி ஐ என்று சந்தோஷத்தில் காற்றாக பறந்து , நேற்று ஈவ்னிங் நடந்ததை பேசிக்கொண்டு சென்றனர். அவர்களை கவனித்த வண்ணம் அனைவரும் கிளம்பினர்

________________&&&&&&&________________   

   மறுபுறம் எழுந்து உடற்பயிற்சியை முடித்து காபியுடன் வந்து கௌரியை எழுப்பிய வம்சியை கட்டிக்கொண்டு ” ஒன்னே ஒன்னு செல்லும் ப்ளீஸ் டி” என கெஞ்சினான்.       

  ” போதும் போதமென்ற அளவு “அவனை அடித்து போதும் நிறுத்து உன் ரொமான்ச என‌ வம்சி  கத்த , எழுந்து தலையை சொரிந்து கொண்டு அட எல்லாம் கனவாஆ? …. நானே நிஜம்முனு நினைச்சே  என வம்சியை பார்க்க வம்சி இவனை வெட்டவா ? குத்தவாவென பார்த்தான்.        

      காபி கப்பை கையிலெடுத்து ” டே வெறுங்கப்ப காபினு சொல்லி ஏமாத்துறையா? என‌ சமாளிக்க , அத ரொமான்ஸ் பண்றதுக்கு முன்னாடி யோசிச்சிருக்னும் என வம்சி சீற ஈஈஈஈஈ என‌ பல்லை  காட்டி அசடு வழிந்தான் கௌரி.            ரெடியாகி இருவரும் காரில் பயணித்து ஹாஸ்பிடல் செல்ல முன் நடத்திய பாடங்களை ரிவிசன் செய்து கொண்டு வந்தான் வம்சி.         _______________&&&&&&_________________   

   ஆனந்த் மற்றும் லோகேஷ் ரெடியாகி ஹாஸ்டலில் இருந்து வெளிவர ஸ்கூட்டி ஸ்டார்ட் ‌ஆகாத கடுப்பில் உதைத்து கொண்டிருந்த மதுப்பிரியாவை பார்த்து கண் இமைக்க மறந்தான் லோகேஷ்.   

      ஆனந்த், வழியுது லோகி தொடைச்சிக்க என நக்கலடித்து விட்டு சரிங்க போய் ஹெல்ப் ‌பண்ணுங்க என‌ கண்ணிமைத்து கூற , வேறோரு ஸ்கூட்டியில் வந்த யாஷினி வாக்கா இதுல போலாமென அழைக்க ,       _”அட  வட  போச்சே” என கூறி சத்தமாக சிரிக்க யாஷினியின் பார்வையில் ஆனந்த் பட்டான். ம் போலான்டி என ப்ரியா கூற,          ஆனந்திற்கு ஆமா சீக்கிரம் உட்காரு டியூட்டிக்கு டைமாகுது என குலு குடுத்து கண்ணடிக்க,” இவனுக்கு அமையுது ஆனா நமக்கு ” என தலையில் அடித்து கொண்டான் லோகேஷ்.  என்னடா ரொம்ப எரியுது போல  என்றான் ஆனந்த்.        அப்பெண்கள் முன் செல்ல அவர்களை ரசித்த வண்ணம் அவர்களின் பின்னால் சென்றனர் ஆடவர்கள்.

_________________-&&&&&__________________

        கடவுளை வழிபட்டு அரட்டை அடித்து கொண்டு டைம் பார்த்த மகிழ் ஐய்யோ டைம் 7 டி என கூறி பிரியா வை இழுத்து ஓடுபவளை, பார்த்துபோங்க என கை காட்டி அனுப்பி வைத்தனர்.       

      முதலில் வந்த கௌரி, வம்சி டியூட்டியைபிரித்து தகவல் பலகையில் ஒட்டி விட்டு ,    

        அவள் வந்து விட்டாளா என வாசலையே எட்டி எட்டி பார்த்து ஏமாற்றத்தையே பரிசாக பெற்ற வம்சி  கௌரியை பார்க்க,  அவனும் ஆவளுடன் வாசலை பார்த்து பார்த்து ஏமாற்றத்தை பெற்றான்.          பின் வம்சி அனைவரையும் மெடிக்கல் ப்ளாக்கிற்கு (block) அழைத்தச்செல்ல , இதற்கு மேல் முடியாதென  கௌரியும் சர்ஜரி ப்ளாக்கிற்கு  சிறு சோகத்துடன் அனைவரையும் அழைத்துச்செல்ல ,     

    “நாங்களும் வருகிறோம் ப்ளிஸ் வெய்ட்” என்ற குரலில்  திரும்பி பார்த்து  திகைத்து நின்றனர் .    

                சண்டை மீளும்

கௌசல்யா வேல்முருகன் 💝_

_____________________________________    

   இது கரண்ட் கல்யாண கோலத்துல காலேஜ்ல இவங்க லவ் எப்படி கண்டினியூ பண்ணாங்கன்னு சொல்றது… ஃப்ளாஷ்பேக் போல… பிகாஸ் ஸ்டோரி இதுக்கு அப்புறம் கொஞ்ச கொஞ்சமா புரிய வரும்… கமெண்ட் செய்பவர்களுக்கு மிக்க நன்றி 💝.     

2 thoughts on “6) மோதலில் ஒரு காதல்”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *