Skip to content
Home » மோதலில் ஒரு காதல்-20

மோதலில் ஒரு காதல்-20

       மகி நடுக்கத்திலிருக்க அவளை கட்டி அணைக்க கையை ஏந்தி வந்தான் ஆருத்ரன். அவன் பின்புறம் வருவதால் மகி நடுக்கத்தில் அவனை பார்க்கவில்லை. ஆனால் எதார்த்தமாக திரும்பிய கௌரியின் கண்களில் பட்டுவிட்டது. பிரியாவை விட்டுவிட்டு வந்து அவன் மூக்கிலே ஒரு டோஷ் விட பொலபொலவென இரத்தம் வழிந்தது.      

அவனது சட்டையை இழுத்து பிடித்து ஏய் என்னடா பண்ற, அவ என் ப்ரண்டோட லைஃப் அண்ட் என் சிஸ்டர் அவள நீ ஏன்டா கட்டிப்பிடிக்க வர என எதற்கும் கோபப்படாதவன் அத்துனை கோபத்தை காட்டினான்.

பின் திரும்பி பார்த்த மகிழுக்கு தூக்கி வாரி போட்டது. நண்பனாக பழகியவனை அடிப்பதை தடுக்கவா இல்லை தவறுக்கு தண்டனை என்று விட்டு விடவா என யோசித்து கொண்டே நின்றாள்.    

ஆருத்ரனை அடித்தவன் கலைத்துப் போய், வம்சியிடம் வந்து அவனை கோபமாக பார்த்து, அவ உன் பொண்டாட்டிடா நீ எதோ உனக்கும் அவளுக்கும்  சம்மந்தமே இல்லாத மாதிரி இருக்க என்று அவனது சட்டை பட்டன் பிய்த்து ஓடும் அளவு அவனை நெருக்கினான்.       

பின் வம்சி அவனது கையை எடுத்து விட்டு, அவன் தோளை தட்டிவிட்டு ஏய் கூல் இதுலாம் அமெரிக்காவில் காமென் சோ அவ ஹெல்ப்பிங் மைண்ட்லதான் அப்படி பண்ணிருப்பான் கூல் என்று கேசுவலாக கூறினான்.   

   எதுடா ஹெல்ப் , ச்சீ இப்புடி பேச வெட்கமா இல்லை, அவள லவ் பண்ணும் போது மட்டும் அவள யாராவது பார்த்தாலே கண்ண பிடிங்கி காக்காக்கு போட்ட பட் இப்போ என்று சொல்லி அவனை விட்டு விட்டு தள்ளி போனான். இதெல்லாம் மகிழுக்கு அப்படியே தேனருவி போல செவியில் விழுந்தது.  

   டே அது அப்போ என்று சொல்லி எப்படியும் நான் கல்யாணம் பண்ணாம இருந்திருந்தா அவன் தான் பண்ணிருப்பா சோ ப்ளீஸ் இதலாம் ரொம்ப பெருசு பண்ணாத ஓக்கே என்றிட ,  மகிழின் முகத்தில் அவ்வளவு கோபம், ஆனால் அதை அவன் பொருட்படுத்தாமல் கிளம்ப தயாரானான்.  

மகிழின் ஸ்கூட்டியை அவன் ஓட்ட, அவன் பின் அமர்ந்து     இதயம் இந்த இதயம் இன்னும் எத்தனை இன்பங்கள் தாங்கிடுமோ……………இதயம் இந்த இதயம் இன்னும் எத்தனை துன்பங்கள் தாங்கிடுமோ………….           என பாடலை ஹெட்போனில் கேட்டப்படி குழம்பிய முகத்துடன் உம்மென்றே வந்தாள்.

வம்சிக்கு இது பிடிக்கவில்லை என்றாலும் ஏன் என கேட்டிட அவனது வாய் வரவில்லை.  

     கௌரி பிரியாவின் கையை தன் இடையுடன் இணைத்து அவள் நடுக்கம் குறைக்க உதவினான். பிரியா அவனது அன்பில் கரைந்தே போனாள். அவன் ஒவ்வொரு செயலும் அவளுக்கு ஆனந்தத்தை மட்டுமே கொடுத்தது. அவனை இருக்க அணைத்தவள் அவன் தோள் மீது சாய்ந்து கொண்டு உறங்கினாள். அதுவரை வண்டியில் சர்ரென பறந்தவன் மெதுவாக சென்றான் அவள் உறக்கம் கலையாத அளவு.    

சுமித்ரா ஆருவை ஒரு வேளையாவது உருப்படியா பண்றயா அவளக்கட்டி பிடிக்க சொன்ன அடி வாங்கிட்டு வந்திருக்க என எரியும் தீயில் மேலும் எண்ணெய் ஊற்றி விட, ஏய் நீ என்ன லூசா இல்ல மற கலண்டுருச்சா?…. நீயும் தான பார்த்த ,  உன்ன நம்பி, “நான் இதுலாம் செய்தேன் பாரு என்னதான் செருப்பால அடிக்கனும்”… என்று தன் தலையில் அடித்து கொண்டான். 

  சரி இந்தா என செருப்பு என அவளுடைய செருப்பை நீட்ட, நான் சும்மாதான் சொன்ன , ‌‌…… என கூறியவனிடம் சரி வா அங்க போய் பார்த்துக்கலாம் என மகிழின் வீட்டிற்கு இருவரும் கிளம்பினர்.   

மதுவின் கையை பிடித்து வண்டியில் அமர வைத்த லோகேஷ் பாதையில் கவனமாக வர , மதுப்பிரியாவிற்கு அவனது செயல் அனைத்துமே ஒரு சில்லென்ற உணர்வை ஏற்படுத்தியது.ஹே லோகி நீ எப்பவும் இப்புடி தான் ஜாலி டைப்பா?… என கேட்டாள். இதுகூட தெரியாமலா என்னை கல்யாணம் பண்ண, என வாயை பிதுக்கினான்.   

டே மறமண்டையா இதுலாம் தெரியுறதுக்கு நாம என்ன மூனு வருசம் லவ் பண்ணினமா என்ன?… லவ் சொல்லி பத்தே நாள்ள கல்யாணனு துணி வாங்க நகை வாங்கனு அவங்க கூப்பிட்டுட்டு போய்டாங்க, இதுல உன்ன பத்தி எப்படி தெரிஞ்சிக்கிறது என விளக்கமளித்து அவனை கட்டியணைத்து இப்போதான் உன்ன நான் புரிஞ்சுக்க போறேன் என சொல்ல, மகிழ்ச்சியில் வண்டியை செலுத்தினான் லோகேஷ்.    

ஆனந்த் எப்பவும் போல யாஷினியை தன் காதல் வலையில் சிக்க வைக்க பாடாய்பட்டான். இவர்கள் இருவரும் சிறுகுழந்தைகள் போல, எப்போதும் எதாவது உலரி கொண்டும் அடித்து கொண்டும் இருப்பர்.      

  யாஷினிஇஇஇஇ என அவள் பெயரை பல வீதி கேட்கும் அளவு இழுத்தான். என்ன எதுக்கு இப்படி மாஆனு  மாடு கத்துற மாதிரி கத்துற காதுல இருந்து இரத்தமே வந்திடும் போல என தன் கையால் காதை குடுகுடுவென குடைந்தாள்.  

அதுவாஆஆஆ என்றவனிடம், ஏய் ஒழுங்கா பேசு ஈஈஈஊஊஊனுட்டு இருந்த நான் உன் வண்டில இருந்து இறங்கி நடந்தே வந்திடுவேன் என  கூறி முகம் சுளித்தாள்.      அவள் அறியாதளவு ஒரு சிரிப்பு சிரித்து, அட வெடிகுண்டே அமைதியாவா என சொல்ல, டே உனக்குலாம் அறிவே இல்ல என்னப்போய் வெடிகுண்டுனு சொல்ற, நீதான் சிடுமூஞ்சு, சுரட்ட மண்டயன், பிஞ்சவாயன் என சொல்லி தனது ஒருபுற வாயை வளைத்தாள்.

❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️         

  வீட்டிற்கு வந்தவர்கள் ப்ரஷ் ஆக சென்று சாப்பிட அனைவரும் டைனிங் டேபிள் இருக்கும் இடத்தில் அமர்ந்தனர். அனைவரும் வந்த பிறகு ஈர முடியடன் சோக முகத்துடன் படியிறங்கி வந்தாள் மகிழ்.

வம்சிக்கு அவள் அப்படி இருப்பது வருத்தத்தை கொடுத்தாலும், வெளியே காட்டி கொள்ளாமல் கேசுவலாக இருந்தான்.       

அவர்கள் ஆர்டர் செய்த சிக்கன் ரைஸ், அண்ட் காளான் ரோஸ்ட் , சிக்கன் கிரேவி வந்துவிட மகிழும் சாப்பிட டேபிளில் அமர்ந்து கொண்டு வேடிக்கை பார்த்தபடி அமர்ந்திருந்தாள்.     மாதவனும் மதுவும் சாப்பிட்டு முடித்து விட்டு கெஸ்ட் ரூமிற்கு சென்று விட்டனர். ஆருத்ரனும்  சுமித்ராவும் மற்றொரு கெஸ்ட் ரூமிற்கு சென்று ஏதோ யோசித்துவிட்டு டிஸ்கஸ் செய்து கொண்டிருந்தனர்.      

ஆனந்த் யாஷினியின் அருகில் அமர்ந்து கொண்டு, சாப்பிடுடா என்று செல்லமாக அவளது கன்னத்தை தட்டினான். அவனுக்கு சிரித்த முகத்துடன் டே ஆனந்த் என்ன சாப்பிடு சாப்பிடுனுட்டு இருக்க நான் உன் பொண்டாட்டி தான, ஏன் நீ ஊட்டிவிட மாட்டையா?…. என வாயை பிதிக்கி அப்பாவியாக வைத்து கொண்டாள்.      

ஹே லூசு என்ன இப்படி சொல்லிட்ட இதுலாம் நீ சொல்லனுமா என்ன வா நான் ஊட்டி விடுறேன் என அவளருகில் எழுந்து சென்றான் ஆனந்த்.   

  ஒன்னும் தேவையில்லைடா, நானா கேட்ட அப்புறமா ஊட்டி விடுற என வாயை வளைக்க, அவளிடம் ப்ளீஸ் டா அம்மு சாப்பிடு என கெஞ்சினான்.    

சரி நீ இவ்வளவு கெஞ்சுறதால, சாப்பிடுரேன் ஊட்டி விடு என வாயை திறந்தால் அவனும் அவளுக்கு பிரியாணியை ஊட்டிவிட சாதத்திற்கு பதில் அவனுடைய கையையும் கடித்தாள் யாஷினி.     

ஹாஆ  வலிக்குது லூசு என்ன டி இப்படி பண்ற என அவர்கள் செல்ல சண்டைகளுடன் சாப்பிட ஆரம்பித்தனர்.      அவர்கள் அருகில் அமர்ந்திருந்தவர்கள் அவர்களை வேடிக்கையாக பார்த்து சிரித்தனர். மகிழ் அப்பொழுதும் சாப்பிடமால் சாப்பாட்டில் ஏ பி சி என எழுதி   விளையாடி கொண்டிருக்க ஹே என்ன பண்ணிட்டு இருக்க என அவளை அதட்டினான் வம்சி.   

  அவனை பார்த்தவள் அவனுக்கு பதிலெதும் சொல்லாமல், மீண்டும் சாப்பாட்டில் விளையாட ஆரம்பிக்க, வம்சியின் மூக்கு மிளகாய் பச்சியை போல பொறிந்தது. என்ன பண்ணிட்டு இருக்குனு கேட்ட என சத்தமிட,     குறும்பாக இதுவரை இருந்த அந்த இடம் அமைதியாக இருந்திட  அவர்களை வேடிக்கை பார்த்தனர்‌ மற்றவர்கள். என்னடி நான் கேட்டா பதில் சொல்லாமல் என்ன பண்ணிட்டு இருக்க, என்று சத்தமிட்டான்.     

அவனை ஒரு பார்வையால் குத்திய மகிழ், நான் எதுக்குடா உனக்கு பதில் சொல்லனும் நீ யாருடா எனக்கு என அவனுக்கு முன் தன் ஆள்காட்டி விரலை நீட்டி திட்டினாள்.     ஒரு நிமிடம் இதை எதிர்பாராதவன் திடுக்கிட்டு, என்ன மச்சி உன் பால்டப்பாக்கு மர கலண்டு போச்சு போல என அமைதியாக உட்கார்ந்திருந்த கௌரியையும் இதில் கோர்த்து விட்டான் வம்சி.    

ஆமான்டா மரதான் கலண்டு போச்சு போயும் போயும் உன்ன போய் லவ் பண்ண பாரு, இதுவும் பேசுவ இன்னமும் பேசுவே என புலம்பினாள். இப்ப எதுக்கு டி தேவை இல்லாம பேசிட்டு இருக்க என அவளை தன்புறம் திருப்பி அவளது சோல்டர்களை இருக்கமாக பிடித்து நெருங்கினான்.   

  ஹே கை எடுடா என அவனை உதறி விட்டு நீ கிட்ட வராத, உன்மேல் அவ்வளவு கோபத்துல இருக்க என்றவளை பார்த்திருந்தான் வசி.  என்ன சொன்ன அவன் அமெரிக்கால வளர்ந்தவன் இதுலாம் சகஜம் அப்பிடின்னு சொன்னல்ல, பட் நான் இந்தியால தான வளர்ந்தேன், அவனுக்கு சப்போர்ட் பண்ண நீ, என்ன பத்தி யோசிச்சு பார்த்ததையாடா?….. என தனது கவலைக்கான காரணத்தை கூறி முகத்தை தன் கைகளால் மூடி அழ ஆரம்பித்தாள்.        

அவளது நிலையை உணர்ந்த வம்சி, தெரியும் இதுதான் காரணம்னு தெரியும் டி பட் உன்ன சமாதானம் பண்ண நான் ஒன்னும் உன்ன லவ் பண்ண வம்சியில்ல, என் பாட்டியோட நிலைமைக்கு காரணமான  உன்ன சீரழிக்க போற வம்சி என சொல்லி சொடக்கிட்டான்.   

     அழுதவள் எழுந்து  ஓஓஓ சார் இப்படி தான் என பேச அதற்கு மேல் வார்த்தை வராமல் தடுமாறினாள். என்ன வார்த்தையே வரலையாடி ” நீ ஏன் என்ன லவ் பண்ணனு சொன்ன, ஏன் இந்த கல்யாணத்துக்கு சம்மதித்தனு தெரியாதா என்ன?…. உனக்கு அமௌண்ட் தான் முக்கியம் சோ என்ன லவ் பண்றனு சொல்லி என்ன ஏமாத்தி கல்யாணம் பண்ணிகிட்ட”,……என தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினான்.    

   உன்ன பார்த்தாலே அவமானமா இருக்கு, இதுல நீ உன் மானத்தையும் அமௌண்ட்க்கு யூஸ் பண்ணுவனு நெனச்ச தட்சால்வ் என சிம்பிளாக முடிக்க, வம்சியை அறைந்தாள் மகிழ்‌.         கண்களில் நீருடன் இங்க பாரு வசி உன் பாட்டி நிலைமைக்கும் நான்  காரணம் இல்ல,  வெறும் அமௌண்ட்காகவும் நான் உன்னை லவ் பண்ணவில்லை, உண்மையிலையே  “யூ ஆர் ரியல்லி இர்ரிடேட்டபுள் பெர்ஷன்”….., என கத்திவிட்டு சாப்பிடாமல் ரூமிற்குச் சென்று கதவை சாற்றிக் கொண்டு தேம்பி அழ ஆரம்பித்தவள் துயில் கொண்டாள்.     

  வம்சியிடம் அதன்பின் யாருமே பேசாமல் உணவை சாப்பிட்டுவிட்டு அவரவர் ரூமிற்கு சென்றுவிட, சாப்பாட்டை ஒரு பிளேட்டில் போட்டு எடுத்து கொண்டு தனது அறைக்கு சென்றான்.     

உள்நுழைந்தவன் கண்ணில் கண்ணீருடன் தூங்குகின்ற மகிழை தான் பார்த்தான். அவனுடைய நிலை அவனுக்கே புரியவில்லை,  அவள் அழ காரணம் நான் தான், ஆனால் அவள் அழுதால் ஏன்  என் மனம் தாங்கவில்லை, குழந்தை போல அடம்பிடிக்கும் மகி இன்று பேசாமல் அமைதியாகவே இருந்ததும், இறுதியாக சாப்பிடாமல் வந்துவிட அவனால் தாங்க முடியவில்லையே.

இதையெல்லாம் யோசித்து இருந்தாள் அவளை இனிமேலும் சிரமப்படுத்திருக்க மாட்டான்.        தூக்கத்தில் இருந்தவளை எழுப்பி அமர வைத்து சாப்பாட்டை ஊட்டினான் கண்ணீருடன் வம்சி, அவனை குறுகுறுவென பார்த்த மகிழ்,    

   வசி நீ உண்மையாகவும் நல்லவனா? கெட்டவனாடா?.. என்கிட்ட இருக்க மூளைய வச்சிக்கூட யோசிச்சு பார்த்துட்ட நீ எப்படி பட்டவனு என்னால கெஸ் பண்ணவே முடியலடா, ஐ ம் கண்பூஸிங், பட் ஐ லவ் யூ டா என‌ பிதற்றிட,       

அவளது பேச்சினை கேட்டு கொண்டே உணவை ஊட்ட மீண்டும் பேச ஆரம்பித்தாள் மகிழ் ” பகலெல்லாம் வார்த்தையாலும், செயலாலையும் ரொம்ப ஹேட் பண்ற, பட் நைட்லாம் இப்படி கேர்ரிங்கா பார்த்துக்குறயேடா வித்தவுட் என தூக்க கலக்கத்தில் அவனுக்கு அவள் சூட்டிய புனைப்பெயரை உலரிவிட்டாள்.   

    அதை சுதாரித்தவன், அவளிடம் போட்டு வாங்க அதுலாம் சரி மகி அதென்ன வித்தவுட் என்று நைசாக கேட்க, அதுவாஆஆஆஆஆ அது சொல்ல முடியாது போ என அவனுக்கு நாக்கை வெளி காட்டி பளிப்பு காட்டினாள்.     

அவளது குறும்பை இரசித்தவன் வைத்தகண் வாங்காமல் அவளையே பார்த்திருக்க, ஆஆஆ என வாயை பிளந்திருந்த மகிழ் ஹே சாப்பாட்ட ஊட்டாம என்ன வேடிக்கை என மிரட்ட கனவு உலகத்தில் இருந்து விழிப்பு கண்டான்.     

அவளுக்கு சாப்பாட்டை ஊட்டி முடித்தவன் அவளுடைய உதட்டை துடைத்துவிட ” இதுல்லாம் கனவா மட்டும் இருக்க கூடாது வசி” என தூக்கத்திலே உலரினாள். அவளை ஒரு பார்வை பார்த்து ஏன்? என கேட்டான்.    

  இந்த மாதிரி ஸ்வீட் மெமரிஷ்லா கண்டிப்பா நிஜமா இருக்காது வசி, அதும் நீ என்ன இவ்வளவு பாசமா பார்த்துக்குற மாதிரிலாம் ஜான்ஸே இல்ல” இட்ஸ் ஆல் மை டிரீம் சோ சேட்”,….என  நெற்றி புருவத்தை வளைத்து சோகமாக உம்மென்று முகத்தை வைத்து கொண்டாள்.அவளையே பார்த்தவனுக்கு அவனது தவறு உணர்ந்தது, இருப்பினும் அவனுக்கு தன்மானம் விட்டு கொடுக்கவில்லை.  

    வம்சிஇஇஇ என தூக்க கலக்கத்துடன் எழுந்து நின்றவள் கீழே சரிந்து விழப்போக  அவளை பிடித்து தன் பெட்டில் படுக்க வைத்து கொண்டான். அவள் மீண்டும் தூக்க கலக்கத்தில் வம்சி நீ நினைக்கிற மாதிரி உன் பாட்டியோட நிலைமைக்கு நான் காரணம் இல்ல அந்த சுமித்ரா தான் என உலர,

அவள் வாயை தன் விரலால் அடக்கி போதும் மகி ட்ஸ் டைம் டூ லேட் லெவன்னோ  கிலாக் ஆகுது தூங்கு என குழந்தையை தட்டி கொடுக்கும் தாய் போல் தட்டி கொடுக்க அவனுடைய வலது கையை பிடித்த வண்ணம் உறங்கிவிட்டாள்.வம்சியும் அவளருகிலே உறங்கிட அன்றைய கடிகாரம் சுழல ஆரம்பித்தது.

மறு அறையில் இருந்த கௌரியும் பிரியாவும் உறங்காமல் புரண்டு புரண்டு படுத்து கொண்டிருந்தனர்.    பிரியாவும் கௌரியும் ஒருவரை ஒருவர் பார்க்கும்படி சிறிய இடைவெளியுடன் இருக்க, கௌரி மகிழோட நிலைமையை நினைத்தா கவலையா இருக்குடா, பாவம் அவ என்று சோக கீதம் வாசித்தாள் பிரியா. 

   இங்க பாரு பிரியா அவங்க அதை சரி பண்ணிக்குவாங்க, எனக்கு என் நண்பன் மேல நம்பிக்கை இருக்கு அவன் அவள எவ்வளவு விரும்புறானு எனக்கு மட்டும் தான் தெரியும் சோ யூ டோண்ட் வொரி பேபி என தன் மனைவியின் கவலையை நீக்க முயற்சித்தான்.     

என்ன இருந்தாலும் இன்னைக்கு நம்ம முன்னாடிதான உன் ப்ரண்ட் அவள என்ன பாடுபடுத்துனா, ” அவ இந்த மாதிரி இதுக்கு முன்னாடி எப்பவும் பீல்லாகி நான் பார்த்ததே இல்லை, அவ பாவம்”… என தன் தோழியின் நிலையை நன்குணர்ந்தவள் அவளுக்காக பரிந்து பேசினாள்.    

  ஓக்கே இப்ப நாம என்ன பண்ண முடியும் அவங்க பெர்ஷ்னல்ல நாம இன்ரோ ஆகக்கூடாது டாமா என சொல்லி சோகமாக முகத்தை வைத்து கொண்டு சுவற்றின் மேல் புறத்தை  கௌரி பார்வையிட, பிரியாவிற்கு ஐயோவென்றானது.

  தன் தோழிக்கு பரிந்தவள் தன் கணவனை பற்றி யோசிக்கவில்லையே என தன்னையே நொந்து கொண்டாள்.ஆனால் கௌரி பிரியாவின் முகத்தை கண்டு அவளது கவலை நிலையை கண்டிட அவளை தன் அருகில் வருமாறு கண்ணசைக்க, அவனருகில் வந்தவளை கட்டியணைத்து எதைப்பற்றியும் யோசிக்காத தூங்குடா, நாளைக்கு வம்சியோட  பேரண்ஸ் இங்க வரப்போராங்க சோ கொஞ்சம் சீக்கிரம் எழுந்துக்கோ என அவளுக்கு செல்ல கட்டளையிட மறுப்பேதுமின்றி ஒப்பு கொண்டவள் அவன் மார்பிலே தஞ்சம் கொண்டு உறங்கிட, அவளை அணைத்தப்படி உறங்கினான் கௌரி.     

காலைப்பொழுது இனிமையாக விடிய, மதுவை எழுப்ப அரும்பாடுபட்டான் லோகேஷ்.   ஏ புள்ள கருப்பாயி விடிஞ்சாச்சி எழுந்திரு தாயி, ஏ எழுந்திரு என பாடியும் விட்டான், ஆடியும் விட்டான் அவளிடம் எந்தவித அசைவும் இல்லை. “இவ என்ன கும்பகர்ண தங்கச்சியா இருப்பாப்போல”… தூங்கு மூஞ்சி என முணுமுணுத்தான்.ஒருநாள் சீக்கிரம் எழுந்துட்டு ஓவர் சீன் போடாதடா என அதட்டியவள் எழுந்தமர்ந்தாள்  பெட்டில்.     

சரி சரி அதவிடு இன்னைக்கு வம்சியோட பேரண்ஸ் வராங்களாமா சோ சேரி கட்டி கொஞ்சம் அடக்க ஒடக்கமா இரு தாயி ப்ளீஸ் என மன்றாடினான்.ம்ம்ம பாக்கலாம் அதுலாம் இருக்கட்டும் அடக்கம் ஓக்கே அதைன்ன ஒடக்கமா என நெற்றியில் கைவைத்து யோசித்த படி வினவினாள்.     

அடடே அறிவு கொழுந்தே அதெப்படி திடீர்னு உனக்கு மூளையில மசாலா வாசிக்குது என நக்கலடிக்க அவளிடம் உதை வாங்கினான் லோகி. அவள் உதைத்த உதையில் பெட்டிலிருந்தவன் தொப்பென்று கீழே விழ, “டே உன் பில்டிங் ஸ்டாங் பட் பேஸ்மட்டம் வீக்” சினிமா டைலாக் பேசினாள் மதுப்பிரியா.   

   நக்கலடித்தவள் ஏன்டா எழுப்புறதே எழுப்புற ஒரு காஃபியோட வந்து எழுப்ப மாட்டையா?…. என கேட்டிட, என்னது நான் காஃபியோடயா என முகம் சுளித்தான்.      ஆமாடா நீ இழுக்குரத பார்த்தா வேற ஏதோ கனவு கண்டிருப்ப போல என ஒரு கண்ணை மூடி விசாரிக்க, ஆமா டி எழுந்து தலைக்கு குளிச்சிட்டு வந்து மாமா இந்தாங்க காஃபினு  நீ எழுப்புவனு  நெனச்சேன் என அவனது ஆசையை சொல்ல,   

அவனை பார்த்து சிரித்த மகி, நல்ல சீன்டா நிறைய தமிழ் படம் பார்ப்பப் போல, இதுலாம் எப்பவும் சீரியல், கதைக்கு தான் சரிப்படும் ரியாலிட்டுக்கு இல்லை என கூறினாள் மது.” கழுதைக்கு வாக்கப்பட்டுட்ட உதையும் வாங்கனும் ஊட்டியும் விடனும் போல” என நினைத்து வாயை பிதுக்கினான் லோகி.     

பக்கத்து அறையில் மகிழை எழுப்பி விட்ட வம்சி, ஏய் இன்னுமா முழிப்பு வரல  உட்க்கார்ந்து கண்ண மூடி தியானம் பண்றனு தூங்குறையா , என அவள் மண்டையில் கொட்டினான்.     உண்மையிலே தியானம் என்ற பெயரில் உறங்கி கொண்டிருந்தவள் ஐயோ வம்சி என்ன கொன்னுறாத அந்த பாராங்கல்ல மேல போட்டுட்டேய என உலரினாள்.ஆம் கனவில் மகிழை கொல்ல வம்சி பெரிய கல்லுடன் வரவே இவ்வாறு உலரிவிட்டாள்.   

  நினைச்சன்டி நீ தூங்கி தான் இருப்பனு என அவள் முன் அமர்ந்திருந்தவன் முறைக்க, அவனுக்கு ஈஈஈ என சிரிப்பு காட்டி நீ ஏழுமணிக்கு மிட் நைட்லையே எழுப்பிட்ட அதான் தூங்கிட்ட என சொல்ல, என்னது ஏழு மணி உனக்கு மிட்நைட்டா?…. என வாயை பிளந்தான்.  

      போதும் போதும் வாய் மூடு உள்ள இருக்க எல்லா கிரகங்களும் வெளிய வர தெரியுது என மகிழின் பளிப்பிற்கு அவளுடைய காதை திருகினான். வசி வலிக்குது விடு என கெஞ்ச, இங்க பாரு மகி இன்னைக்கு என் அம்மா, அப்பா, அக்கா எல்லாம் வராங்க அவங்க முன்னாடி கொஞ்சம் டீசண்டா நடந்துக்க ப்ளீஸ் என அதட்ட,    

   பண்ண மாட்டேன் என்னப்பண்ணுவ என தன் விரலை வளைத்து விளையாட்டு காட்ட, ம் உன் அப்பாகிட்ட உன்‌ன ஏன் கல்யாணம் பண்ணனு போட்டு குடுத்துடுவேன் என ப்ளாக்மைல் செய்தான்.     

   மன்னனின் பேச்சுக்கு மறுபேச்சா நோ, நெவர் என அவனுக்கு ஒப்புழைக்க,” அதெப்படி மகி கீழ விழுந்தாலும் மீசைல மண் ஒட்டலனு சமாளிக்கிற”…..என கூறி நக்கடித்தவனிடம்,  நான் என்ன உன்ன மாதிரி பையனா எனக்குலாம் மீசை இல்லயே என்றும் நான் பொண்ணுடா என்றும் கூறினாள் மகிழ்.     

என்ன சொல்ற நீ பொண்ணா?….. உன்ன எப்படி பொண்ணு லிஸ்டில சேர்த்தாங்க என அவனடித்த மொக்க ஜோக்குக்கு அவனே சிரித்து கொண்டான்.      இரண்டு மணி நேரத்திற்கு பிறகு, அந்த வீட்டையே ஒரு அலசு அலசிவிட்டான் வம்சி மகிழை காணாததால்,அவள் மீது அக்கறையெல்லாம் ஒன்றுமில்லை அவனுடைய பெற்றோருக்கு என்ன பதில் சொல்லதென்றுதான்  தேடினான்.     

ஏய் எங்கடி போய் தொலைஞ்ச, உன்கிட்ட சொல்லிதான வைத்தேன் எங்கேயும் போகாதன்னு, இப்ப என் பேரண்ஸ் வந்து கேட்டா நான் என்னடி பதில் சொல்லுவேன் என பிதற்றியபடி அவளை அறை மணி நேரமாக தேடினான்.  

அப்போது வீட்டின் காலிங் பெல் அடிக்க வம்சியின் முகத்தில் அத்தனை ஆனந்தம் எங்கோ சென்றவள் வந்துவிட்டாள் போல என்றெண்ணி கதவை திறக்க……….  

   ❣️❣️❣️ சண்டை மீளும் ❤️❤️❤️.___________________________________________

எல்லாம் எப்படி இருக்கிங்க, கதை எப்படி போகுதுன்னு சொல்லுங்க, அண்ட் தேங்க்ஸ் பார் எவ்ரிபடி.     உங்களில் ஒருத்தி நான் 🥰💞.                                  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *