Skip to content
Home » 7) மோதலில் ஒரு காதல்

7) மோதலில் ஒரு காதல்

 மோதலில் ஒரு காதல்  

திரும்பி பார்த்த பின்முழு மதி அவளது முகமாகும்   மல்லிகை அவளது மணமாகும்மின்னல்கள் அவளது விழியாகும்  மௌனங்கள் அவளது மொழியாகும்….   

         என அவளது முகம், விழி, மணம், மொழியென வெண்ணிற சேரியில் வைலன் டிசைனிங் கலவையாக வந்தவளை ஒவ்வொன்றாக  ரசித்து கொண்டு மெய் மறந்து நின்றான் வம்சி கிருஷ்ணன்.     மறுபுறம் பார்க்க கௌரி  அதே சேரியில் வந்த பிரியாவின் அழகை கண்டு கண்ணெடுக்காமல் ரசிக்க,    அவனிடம் சென்று எனக்கு இந்த சேரி எப்படி இருக்கு கௌரி என ஆசையாக கேட்க,                   

      ஏதோ இருக்கிறதென கேலிப்புன்னகையுடன் வெறும் வாயில் மட்டும் கூறி அவளை ரசித்து கொண்டே இருந்தான்.             ஓஓ அப்படியா , என இடுப்பில் கை வைத்து முறைக்க, இல்லடா குலாப் சும்மா சொன்ன என கூறியும் , ஒன்னும் தேவையில்லை என வாயை பிதிக்கி காட்டி விட்டு நடக்க ஆரம்பித்தாள் பிரியா. 

     அவள் பின்னே சென்று,மீண்டும் சும்மா தாமா சொன்ன “யூ லுக் லைக் ஏஞ்சல்”  பேபி என சொல்ல , உள்ளுக்குள் அத்தி பூத்தார் போல் மகிழ்ந்தாள் . இருப்பினும் அவனை கொஞ்சம் கெஞ்ச வைப்போம் என நினைத்து அதெல்லாம் நீயே வச்சுக்க என கூறி முகத்தை திருப்பி கொண்டு நடக்க  கௌரி: கோவக்கார கிளியே என அழைக்க   பிரியா: புருவத்தை தூக்கி முறைத்தவளிடம் நெருங்கி   கோவைக்கார கிளியேஏஏஏஏ என்னை     

   கொத்தி விட்டு போகாதேஅருவாள் மனையை போல புருவம்        தூக்கி காட்டாதே  ஏனோ ஏனோ கொஞ்சம்    வலி கூடுதே காதல் இதுதானா ஆஆ    என அவளிடம் பாடலாக பாடி அவளின் இடுப்பை கிள்ளி அவளை அணைக்க பெண்ணவள் வெட்கித்தான் போனாள். கொஞ்சும் காதல் மழையில் மயிலாக அடியவர்களின் செவிக்கு,      டியூட்டிக்கு டைம் ஆகுது வசி , டே வசி , வசிப்பையா என வம்சியை மகிழ்  உழுக்கிய சத்தத்தில்         

    பிரியா & கௌரி: தாம் இருக்கும் இடத்தை நினைத்து இருவரும் விலகி நின்றனர். 

____________________&&&&________________               

பின் சுயநிலை அடைந்த வம்சியின் கையை பிடித்து இழுத்துக்கொண்டே “என்னதான் வேடிக்கை” அங்க என்ன பொங்கலும் புளிசாதமுமா போடுறாங்க” என அவனை திட்டிக்கொண்டே  இழுத்து மெடிக்கல் ப்ளாக்கிற்கு சென்றாள்.        இவளது செயலை கண்டு எரிச்சல் பட்டுஇவளை எதாவது செய்யனும் என சுமித்ரா யோசிக்க ” பழைய ஐடியா ஒன்று எட்டி பார்த்தது” ,      அது  அது ஒன்னுமில்லை அங்க ஒன்னா கேள்ஸ் வந்தாங்களா அவர்களைதான் சைட் அடித்து கொண்டிருந்தேன் என சமாளிக்க,   

அவனது கையை படார் என கீழே விட்டு விட்டு, வெட்கமா இல்லையென மகிழ் கோபமாக கேட்க,       “இதுக்கெல்லாம் வெட்க படணுமா”??…என விழியை விரித்தான் .  

     ஐயோ என தலையில் அடித்து கொண்டே திரும்பி பார்க்க அவர்களை நெருங்கி வந்த சுமி  மகியின் நினைவை கலைக்கும் நோக்கத்துடன் “ஹாய் மகி பேபி யூ ஆர் சோ குயூட் “என கூறினாள்.    தேங்க்ஸ் என்று பல்லை கடித்து கொண்டு கூறிவிட்டு போகலாமா என கேள்வி பார்வையை வம்சிக்கு காட்டினாள் . சரி வா சுமிகுட்டி போலாமென அவளையும் அழைத்து சென்றான் வம்சி .             

    ஏளனச்சிரிப்புடன் சுமி மகிழைப் பார்க்க,அவள் வேகவேகமாக நடந்து போனாள்.  மகிழை  தடுக்க நினைத்து சுமி காலை நீட்டினாள். இதை  கவனிக்காமல் வேகமாக சென்று மடக்கி விழப்போன மகிழை தாவி பிடித்து தாங்கி நின்றான் வம்சி.        

      வம்சியின் கண்களும் மகிழின் கண்களும் ஒரே சீராக பாய்ந்தது.  வம்சி மொத்தமாக மகிழிடம் பிளாட் ஆக, வம்சி யின் பார்வை வீற்றை தாங்க முடியாமல் கண்களை சிமிட்டி சிமிட்டி அவளும் அவனின் அழகை ரசித்தாள்.              கீழ விழுந்து சேரியில் கரையாகி அசிங்க படுவாள் என நினைத்த‌ சுமிக்கு சுவற்றில் முட்டி கொள்ளலாம் போல் இருந்தது. அவர்களை எரிச்சலாக பார்த்து விட்டு அவ்விடத்திலிருந்து நகர்ந்து ஓடினாள்.   

    ஆனந்த் மற்றும் லோகேஷ் இது ஹாஸ்பிடலா இல்ல பார்க்கா என‌க் கோரசாக கத்த , உங்களுக்கு அமையலைனு வருத்தமா என கௌரி கேட்க, மதுப்பிரியாவை லோகி ஏக்கம் ஆகவும், ஆனந்த்  மற்றும் யாஷினி விழிகளாலே பேசிக்கொண்டு இருந்தனர்.        மகிழை நிலைப்படுத்திய வம்சி, குட்டி கரணம் போட்டா சீக்கிரம் போகலானு யாருடா உனக்கு சொன்னாங்க ? அதுக்காக பொசுக்குனு இப்படி களம் இறங்கிடலாமா ? நான் இல்லைனா என்ன ஆகிருப்ப என நக்கலடிக்க, அவனை செல்லமாக அடித்தாள் மகிழ்.      

     _________________&&&&&&___________________                    மெடிக்கல் ப்ளாக்கில்         

                 வம்சி , மகி, சுமி, ராகேஷ் நால்வருக்கும் வார்டு டியூட்டி என்பதால் ,அவரவர் நோயாளிகளுக்கு  என்ன என்ன டிரீட்மென்ட் என பைலை ஆராய்ந்து கொண்டிருந்தனர்.     

   வெகு விரைவில் அனைத்தையும் முடித்த வம்சி திரும்பி பார்க்க பெட்டின் ஆப்போஷிட்டில் இருந்த குளுக்கோஸ் டிராப்பை  எட்டி எட்டி  சரி செய்து விட்டு திரும்ப தடுமாறி பேஷண்ட் மீதே விழப்போன மகிழை மீண்டும் பிடித்து நிலைப்படுத்தினான் வம்சி.  வம்சி: “என்ன மேடம் இன்னைக்கு தடுமாற்றம் பயங்கரமா இருக்கு” என கேட்க,  மகிழ்: அது என் கைக்கு எட்டவில்லை சார் அதனால் தான் என கூறவம்சி: “அதுக்காக உன்னை கட்டிப்பிடி வைத்தியமா பண்ண சொன்னாங்க” என அவளை சீண்டினான்.மகிழ்: மூஞ்சை தூக்கி வைத்து கொண்டு நான் என்ன வேண்டுமென்றா செய்தேன் என கோபமாக கூறினாள்.வம்சி: அவளை சமாதானம் செய்ய நினைத்து “* இன்னைக்கு பார்க்க ஒரு டால் மாதிரி இருக்க மகிமா*” பட் ஒரேயொரு குறைதான் என சொல்லமகிழ்: என்னது குறையா ? என தனது உடைகளை சரி செய்து வம்சியை பார்க்கவம்சி: அட லூசு அதுலாம் இல்லை.”கொஞ்சம் பூ வச்சா தேவதை மாதிரி இருப்ப ” என‌ ஏக்க ஆசையுடன் கூறினான்.மகிழ்: நிஜமாவா!!! என கண்கள் பிதுங்கும் அளவு ஆச்சர்யமாக கேட்டாள்வம்சி: ஆமான்டா மகிமா…… என கூறமகிழ்: அப்படினா போய் வாங்கிட்டு வாங்க சார் என ஒரு உள்நோக்கத்துடன் கேட்ட மகிழுக்குவம்சி: என்ன நானா?… நோ, நெவர், ட்ஸ் இம்பாஷிபில் மகிமா ….. என கூறுபவனை மகிழ் : சிறிது முறைத்து , ஏன் சார் எனக்காக  வாங்கிட்டு வர மாட்டிங்களா?..என சோகமான முகத்துடன் கூறுவதை பார்த்துவம்சி: நீ உன் மூஞ்ச பியூஸ்போன பல்ப் மாறி வச்சாலும் இதுலாம் என்கிட்ட நடக்காது என நக்கலாக சொன்னான். மகிழ்:  ஓஓஓஓஓ அப்படியா என மனதில் நினைத்து , இங்க கொஞ்சம் வாங்களேன் சார் என அழைத்த மகிழை ஒரு வேலை வாங்கிட்டு வாங்க சார்ன்னு  காலைப்பிடிச்சு கெஞ்சுவாளா?. என யோசனையுடன் அவளிடம் சென்று நிற்க,  மகிழ்:  எந்தவொரு பேச்சும் பேசாமல், அவனது கையை தன் கையால் முறுக்கி, குணிய வைத்து கும்மு கும்மென்று கும்மினாள்.பின் அவன் தலைமுடியை பிடித்து மாட்டை சுத்துவது போல சுத்து சுத்தென சுத்தி  பெருமூச்சி விட,வம்சி: கிழிந்து போன‌ துணியைப்போல , “ஏன் ஏன்மா இந்த கொலைவெறி என”.. எந்தவித சத்தமும் இல்லாமல் மெல்லிய குரலில் கேட்டான்.மகிழ்: ஏன் சார் ரீசனே இல்லாமல் என்ன பளார் பளார்னு அடிச்சிங்களே நான் ஏன்னு கேட்டனாஆஆ… இல்ல உங்கள குனிய  வச்சு  இந்தமாறி கும்முகும்முனு குத்துனனா??…. இல்ல உங்க தலையை பிடிச்சு தறதறவென சுத்துனனாஆஆ?…என பாவமாக மூஞ்சை வைத்து கொண்டு கேட்க,வம்சி: அடிப்பாவி கேட்டனா?..குத்துனனா?.. தலையை சுத்துனனானு?.. எல்லாத்தையும் தான செஞ்ச , இல்ல நாம தான் அவ இதெல்லாம் செஞ்சானு நினைச்சிட்டு இருக்கமா?…என உள்ளுக்குள் பைத்தியம் போல் புலுங்கி கொண்டிருக்கமகிழ்: அப்படியும் இல்லாம ,உங்க சட்டை ஜோப்பை பிடித்து இழுத்து கிழிச்சனா ? என கிழித்து காட்டி சொல்லுங்க சார் சொல்லுங்க என கண்ணை மூடி கதறுவது போல ஆக்டிங் செய்யவம்சி: அம்மா தாயி  உன்‌ நடிப்புக்கு ஆஸ்கார் அவார்டே தரலாம் என்ன ஒரு நடிப்பு என புலம்பமகிழ்: சார்ர்ர்ர்ர்….. என இழுக்கவம்சி: இப்ப என்ன உனக்கு  பூ தான வேணும் , ஜஸ்ட் வெய்ட் டென் மினிட்ஸ் என கூறி காற்றாக பறக்க    மகிழ்: அவனை பார்த்து வயிற்றை பிடித்துக்கொண்டு சிரித்து நாம ஒன்னுமே பண்ணலைப்பா பூ வைத்தால் நல்லா இருக்குன்னு சொன்னாங்க ,     

சோ வாங்கிட்டு வாங்கன்னு பக்குவமாக நம்ம பாலிசில புரிய வைச்சோம் அவ்ளோதான் என தன்னை தானே பெருமையாக புகழ்ந்து கொண்டிருந்தாள்.

___________________&&&&&________________

வெளிவந்த வம்சி:—-               

பூ வச்சா நல்லா இருக்கும்னு சொன்னது ஒரு தப்பாடா ?…..நாறு நாறா கிழிகிழினு கிழிச்சுட்டு, பச்சபிள்ள மாதிரி மூஞ்ச வெச்சி இந்த மாதிரிலா நான் பண்ணனானு கேட்குறாளே பாவிமக சரியான ” டார்ச்சர்”. ஒருவேளை பிரியா சிஸ்டர் இதுக்கு தான் கேர்புள்ளா இருக்க சொல்லிருப்பாங்களோ? என தலையை சொரிந்து கொண்டு அவனுக்கு அவனே புலம்ப,            எதிரிலிருந்த ஒருவர் “பார்க்க நல்ல பையனாதான் இருக்கான்” ஆனால் சட்டையெல்லாம் கிழிச்சு, தலையெல்லாம் கழைஞ்சி , அதும் தனக்கு தானே பேசிக்கிறத பார்த்தால் பைத்தியமா இருப்பான் போல, என வசி காதுப்பட கூற                      என்ன சட்டையும் கிழிஞ்சிருச்சா?…பாவி பாவி என் மானத்தை வாங்கிட்டளேஏஏஏ என புலம்பி அவனது ஹாஸ்பிடல் கோட்டை கிழிஞ்ச சண்டையின் மீதே போட்டு, தலையை கையாளே வாறி சரி செய்து விட்டு அவரை பார்க்க,               ஓஓஓஓஓ டாக்டரா ….. இரண்டும் ஒன்றுதான் என கலாய்தான்.         

       காதை மூடிக்கொண்டு வேகவேகமாக ஓடி , பூக்கடையின் முன் நின்று கடையிலிருந்த பாட்டியிடம் ” பாட்டி இரண்டு முழம் பூ தாங்க என “.. கேட்க, என்ன தம்பி குளுக்கோஸ் பாட்டில் கேட்கிறமாதிரி  வந்து வந்து பூ கேட்கிறிங்க ” சம்சாரத்தோட நீங்களும் படிக்க வந்திருக்காங்களா??… என பாட்டி இவ்வாறு  விரலை வாய் மீது வைத்து கேள்வியாக கேட்டது.       

   என்னது நீங்களுமா???…… அப்போ வேற யாரு என சுற்றி முற்றி பார்க்க,   

              சாதனை படைத்தது போல ஸ்டைலாக நின்று பூவை முகர்ந்து கொண்டிருந்தான் கௌரி.   

       “யூ  டூ ”  என்று நினைத்து கௌரியிடம் சென்றான் வம்சி.கௌரிக்கு விழுந்த குத்தை பற்றி நாம அடுத்த எபில பார்க்கலாம் பாய் ப்ரண்ஸ்.   

     சண்டை மீளும்

கௌசல்யா வேல்முருகன் 💝

2 thoughts on “7) மோதலில் ஒரு காதல்”

  1. CRVS2797

    முதல்ல லவ் பண்ண வைப்பாங்க அப்புறம் அடிப்பாங்க… இதானே பெண்களோட பாலிஸியே…!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *