ரி-ஷி-வா-23
🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁
தனியாக நகம் கடித்தபடி இருளில் வரிவடிவமாய் இருந்த நிழலுருவாய் இருந்த டேபிளில் பேனா ஸ்டாண்டையே வெறித்தாள். அப்படியே உறங்கினாள்.
அடுத்த நாள் ரிஷி எழுந்து பல் விலக்க, ஷிவாலி அவனை அடிக்கடி பார்க்க, “என்ன?” என்றதும் “ஒன்னுமில்லை” என்று எழுந்தாள்.
“காபி வேண்டும்” என்று கேட்பவளிடம் ரிஷி அச்சோ கீழே சாவி எங்க இருக்குனு கேட்கணும்.’ என்று போனை எடுத்து தனதன்னைக்கு அழைத்தான்.
“மா.. சாவி எங்க வச்சிருக்க?” என்று கொட்டாவி விட்டு கேட்டு முடித்தான்.
“ரிஷி… வர்ற அவசரத்துல அங்க வைக்கலை டா. நானே கையோட எடுத்துட்டு வந்துட்டேன். நீ நம்ம தெரு முனையில வர்றியா. சரிகாவை ஹாஸ்பிடல் போறதால வீட்டுக்கு வந்து கொடுக்க முடியாது. நீ தெரு முனையில் நின்றா கொடுத்துட்டு அப்படியே போவேன். அப்பா இங்கிருந்தபடியே வேலைக்கு போனார்.” என்று கேட்டதும் நேரம் கூற கால் மணி நேரத்தில் கிராஸ் செய்ய நேரலாமென கூறியதும் காத்திருந்தான்.
ஷிவாலியோ அதற்குள் பசி பசியென கத்தி கொண்டிருந்தாள்.
ரிஷி சாவி வாங்கி ராகி மால்ட் போட்டுமேலே எடுத்து வருவதற்குள் குளித்து முடித்து ஷார்ட்ஸ் மற்றும் டீஷர்ட் என்று நேற்று போலவே ஹாலில் உலாத்தியவள் அவன் கையிலிருந்த பிடுங்கி குடித்தாள்.
நான்கு மிடறு குடித்ததும் தான் ‘அப்பாடா’ என்றதொரு மூச்சை வெளியிட்டாள்.
ரிஷியோ காபி பாருகியபடி ஏதோ சிந்திக்க செய்தான்.
“என்ன யோசனை?” என்றதும் “சரிகா வீட்ல ஹரிஷ் குழந்தையை எதிர்பார்க்கறார். அவளுக்கு இன்னிக்கு ஹாஸ்பிடல் போய் செக்கப் பண்ண அம்மா போயிருக்காங்க. ஏதோ இரண்டு நாள் பார் ஆனதிலேயே ஹாஸ்பிடல்ல போகவும் தயங்கறாங்க.
நல்ல விஷயமா இருந்தா சரிகா சந்தோஷப்படுவா. இல்லைனா… ரொம்ப நொந்துடுவா” என்று பேசினான்.
“என்ன மடத்தனம் இது. கல்யாணமானா உடனே குழந்தை வேண்டுமா. என்ன ஏஜ் இருக்கும் உன் தங்கச்சிக்கு?” என்று கத்தினாள்.
அவள் கத்தவும் “அதான் கவலையே. ஹரிஷிடம் ஒரு முறை குழந்தை பொறுமையா வர்றப்ப வரட்டும்னு அம்மா கூட ஒரு முறை சொன்னாங்க. என்னவோ அவருக்கு அது பிடிக்கலை. அதுக்கு பிறகு பட்டும் படாமலும் தான் வீட்டுக்கு வர்றார்” என்று காபி கப்பை எடுத்து சென்று சிங்கில் போட்டான்.
அதற்கு பிறகு ஷிவாலி எடுத்து வந்த கட்டிலை மாட்டி விட்டான்.
அவன் அறையிலிருந்த கட்டிலை மடக்கி வைக்க, ஷிவாலிய ஹாலில் போட்டு வைக்க கூறினாள்.
“எதுக்கு? என்னை வெளியே படுக்க வச்சிட்டு நீ ஜாலியா இங்க தூங்கவா? ஓய்… அப்படி ஏதாவது ஐடியா வச்சிருந்த இப்பவே மூட்டை கட்டிடு.” என்று முடித்தான். அதன் பேச்சில் சற்று கடுமை ஏறியிருந்தது.
“நீயும் ஹிரிஷ் மாதிரி தான்ல?” என்றதும், ரிஷி பட்டென திரும்பி முறைத்து நின்றான்.
“என்னிடம் பேசறதுக்கு முன்ன ஒரு முறை யோசித்து பேசு. அக்கா தங்கை அம்மாவோட கவலையை அறிந்து வளர்ற எனக்கு பொண்டாட்டியை எப்படி வச்சிக்கணும்னு தெரியும்.
இத்தனை நாள்ல அத்து மீறினேனா டி. ஆசையை அடக்கிட தான் கிஸ் பண்ணினேன். அது கூட நீ பஸ்ட் டைம் பெரிசா ரியாக்ட் பண்ணலை. உன் கண்ணுல பிடிச்சிருந்ததுனு புரிந்தது. பட் அதுக்கு மேல போகலையே. உனக்கும் டைம் வேண்டும். எனக்குமே உன்னை அக்சப்ட் பண்ண டைம் வேண்டும்.
நீ என் ஆபிஸ்ல வந்து கேட்டியே மனசாட்சி இல்லையாடானு. அந்த ஒரு வோர்டே மனசுக்குள்ள என்னவென்னவோ பண்ணுது.” என்றவன் கவலையாய் கூறினான்.
தற்போது செட் செய்த கட்டிலில் அமர்ந்து தலையை அழுத்த கோதி முடித்தான்.
ஷிவாலியோ அவனை கண்டு இரண்டு அடி தள்ளி அமர்ந்து அவனின் கவலையை அறிந்தாள்.
அவளுக்குமே அன்று பேசியது இந்தளவு காயப்படுத்தியிருக்குமென எண்ணவில்லை.
“ஐ அம் சாரி. நான் பேசியது ஹர்ட் பண்ணியிருக்குனு தெரியாது. என்னை மாதிரி நீ மறந்தினுப்பனு நினைச்சேன்.
நான் நினைச்சிருந்தா வீட்ல பிடிவாதமா கல்யாணத்தை நிறுத்தியிருக்க முடியும். என் மேலயும் பால்ட் தான். அதை விடுத்து உன்னை மனசாட்சியில்லாதவன்னு திட்டிட்டேன்.
நீ எங்கக்காவுக்கு யோசித்தியே அதுக்கே உன்னை பாராட்டலாம். நீ சுமார் ரகம் தான்” என்று கூறவும் ரிஷி அவளை கண்டு முறுவலித்தான்.
“சுமாரா.. உன்னை..” என்று அவளை துரத்த, இரண்டு மூன்று ஹால் அறை கிச்சன் என்று சுற்றி விட்டு மெத்தையில் அமர்ந்தனர்.
“ரிஷி அன்னிக்கு அப்படி சொன்னப்ப அதுவே ரேங்க் மாதிரி சீனை போட்ட” என்றவள் ஓடியாடி “பசிக்குது ரிஷி.” என்றதும் “சாவி இருக்கு கீழே போவோம்” என்று அழைத்து வந்தான்.
ஷிவாலி தோசை சுட, ரிஷி சட்னி வைத்திட அதன் பின், உணவு மேஜையில் ஏறி சாப்பிட ஆரம்பித்தனர்.
அடுத்து மேலே போக எண்ணவும், பிட்னஸ் கருவிகளை தூக்கி எடுத்து செல்ல “பார்டா… குட்டி தொப்பையை ஓர்க் அவுட் பண்ணி கரைக்க போறியா? உனக்கு ஏன் இந்த தேவையில்லாத வேலை.” என்று கேலி செய்தாள்.
ரிஷி பதில் பேசாமல் உடற்பயிற்சி கருவிகளை முன்பு அவள் இருந்த அறையில் வைத்து விட்டு, ஹாலில் அவளிடம் ஒரு போட்டோ ஆல்பத்தை கொடுத்தான்.
லேஸை பிரித்து திண்றபடி போட்டோவை பார்க்க அதில் ரிஷியின் குழந்தை புகைப்படம் முதல் வரிசையாய் இருந்தது.
“ஏ… நீயா இது. அழகாயிருக்க, பரவாயில்லையே… குழந்தையா இருக்கறச்ச கன்னத்துல குழி எல்லாம் இருக்கு.” என்றவள் பார்வை தற்போது கன்னத்தில் உள்ளதா என்று ஆராய்ந்தாள்.
இன்னும் சில திருப்புதலில் “கியூட்டா இருக்க ஆனா பிம்பிள்ஸா இருக்கு.” என்று திருப்ப, “உப்ஸ் இதென்ன மீசையா” என்று கிலுக்கி சிரித்தாள். கம்புளி பூச்சு போல மெலிதாய் இருக்க, அடுத்தடுத்த புகைப்படம் எல்லாம் ரஃப்பான கன்னமும் தெனாவட்டான பார்வையுமாக ஆளை இழுக்கும் அழகில் இருந்தான். ஆனால் முந்தைய போட்டோவை விட சற்று நிறம் குறைந்திருந்தான்.
கிரிக்கேட் விளையாடியது போன்று இருந்தவையே கூறியது அவனின் இளமை மொட்டு விடும் பருவத்தில் அதிகம் ஊர்சுற்றி நிறமிழந்திருப்பதை.
அடுத்து கல்லூரி புகைப்படங்கள் வரவும் ஓர்க் அவுட் செய்யும் புகைப்படமும் காந்தர்வ கண்ணணாக காட்சியளித்ததுமாக புகைப்படம் அதிகம் இருந்தது.
தற்போது இல்லாமல் முன்பே இது போன்ற பயிற்சி செய்து உடலை கட்டுப்கோப்பையாக வைத்திருக்க கண்டாள்.
“அதுல பிட்னஸ் கருவிகள் ஆல்ரெடி உபயோகச்சது இருக்கா.. ஒல்ட்பிட்னஸ் திங்க்ஸை விற்றுட்டேன். இது புதுசா ஆர்டர் தந்தது.
மேபீ எல்லாமே புது வீட்ல அழகா புதுசா அடுக்கி நிறுத்தணும்னு ஆசையா இருக்கலாம். அதனால தான் திரும்ப வாங்க ஆர்டர் பண்ணினேன்.
உன்னை இம்பிரஸ் பண்ண வாங்கலை. நடுவுல கொஞ்ச நாள் ஒர்க்அவுட் பண்ணலை. ஹோர்க் ப்ரம் ஹோம்-ஆஹ் லேட்டா எந்திரிச்சி குளிச்சி நல்லா சாப்பிட்டு லைட்டா தூங்கி, அம்மா கையால இஷ்டத்துக்கு வகை வகையா சாப்பிட்டு குட்டி தொப்பை வளர்த்துட்டேன்.
இனி நீ சமைச்சதை இரண்டு வாரம் சாப்பிட்டேன் உடம்பு மெலிஞ்சிடும்.” என்று அவளை நக்கலும் செய்தான்.
“அப்படி ரொம்ப கவலைபட்டா நான் சமைக்கலை. உங்க மம்மியே சமைக்கட்டும். நான் வேடிக்கை பார்க்கறேன்” என்றவள் அறைக்குள் சென்றாள்.
“ஆமா… என் டிரஸ் பீரோ அங்க இல்ல வச்சேன். இங்க எப்படி வந்தது.?” என்று தாடையில் கை வைத்து கேட்டாள்.
“ஆமா.. பீரோவை அங்க வச்சி நீ தனியா இந்த ரூம்ல பதுங்க பார்த்த, நீ கீழே தோசை சுடறப்ப பீரோவை இங்க நகர்த்திட்டேன்.” என்றவன் அருகே அமர்ந்தான்.
“இனி இதான் நம்ம மாஸ்டர் பெட்ரூம்.” என்று சிமிட்டினான்.
“பார்டா.” என்றவள் போனை எடுக்க, பாஸ்வோர்ட் போட்டு ஓபன் செய்து தோழிகளிடம் பேசினாள்.
ரிஷியோ அவள் பேசுவதால் எழுந்து கீழே சென்றான்.
நீண்ட நேரம் பேசிவிட்டு ரிஷியை தேட, கீழே இருப்பதை கண்டு செல்ல யோசித்தாள்.
தங்கள் மெத்தையில் சென்று படுத்து உருண்டாள். போன் கால், முகநூல், ட்விட்டர் என்று சென்று முடிக்க, நிதானமாக ரிஷிவேந்தன் வந்து ஷிவாலி காலில் சொடக்கெடுத்தான்.
“ஏய்..” என்று முகம் சுளித்து எழுந்தமர்ந்தாள்.
“ஆமா… நீ பாட்டுக்கு போன்லயே இருக்கியே. மதியம் சாப்பிடணுமே என்ன பண்ணுவ?” என்று கேட்டான்.
“என்ன பண்ணணும்? ரிஷி இப்ப வந்து சொல்லற. முதல்லயே சொல்லி தொலைக்கலாமே. நான் அட்லீஸ்ட் யூடுயூப் பார்த்து ட்ரை பண்ணியிருப்பேனே?” என்று கூறினாள்.
“அடிப்பாவி என்ன கொல்ல ட்ரை பண்ண எவ்ளோ கூலா சொல்லற. மீன்குழம்பை எண்ணெய் மிதக்க அப்படியே மீன் உடையாம ருசித்து சாப்பிடறவன் டி. எங்கம்மா சமையல் ஒரு கரண்டி கூடமிச்சம் வைக்காம சாப்பிடுற ஆளு நான்.
உன் சமையலை சாப்பிட்டேன் அம்புட்டு தான். ஸ்ரெயிட்டா மேலோகத்துக்கு டிக்கேட் வாங்கிடுவேன். நீ அந்த ரிஸ்க் எடுக்காதே. நானும் உன் சமையலை சாப்பிட ரிஸ்க் எடுக்க மாட்டேன்.” என்று இலகுவாக கூறியப் பின்னரே புதிதாய் வந்த ஷிவாலியிடம் அன்னை உணவு பெருமை பொங்க கூறி அவளை மட்டம் தட்டி கேலி செய்தது புரிந்தது.
“ஏன்டா… நான் சமைக்கவேயில்லை அதுக்குள்ள இப்படி பேசற. ஆன்ட்டி வர வரை கொஞ்சமா ஹெல்ப் பண்ண பார்த்தேன். நோ வே இனி திண்ணா திண்ணு. இல்லை போ. நான் ஆர்டர் கொடுத்துக்கறேன்.” என்று போனை நோண்டினாள்.
“பிசாசே… ஆர்டர் பண்ணிட்டேன். ஒரு மணிக்கு டெலிவரி மணி இப்ப பன்னிரெண்டு. உன்னை ஹர்ட் பண்ண சொல்லலை. ஜஸ்ட் கலாய்ச்சேன்.” என்றதும் ஷிவாலி அதனை செவிக்கு எடுக்கவில்லை.
“என்ன சொல்லு… நான் காம்பர்மன்ஸ் ஆக மாட்டேன்.” என்று அங்கிருந்து வெளியேறினாள்.
ரிஷிக்கோ ‘ஸப்பா… புரிந்துக்கவே ஆரம்பிக்கலை இதுல வாயை ஏன்டா விடற ரிஷி’ என்று பின் தொடர்ந்தாள்.
ஷிவாலியோ “மாஸ்மலோன் இனிப்பை எடுத்து மென்றுக் கொண்டு “டிவி பார்க்கணும்னா கீழே தான் போகணுமா?” என்று கேட்டாள்.
ரிஷி சங்கடமாய் “ஆமா… இதுவரை அப்படி தான். ம்ம்.. இங்க நமக்குனு செப்ரைய்டா என்றால் புதுசு வாங்கணும். இரண்டு மாசம் பொறு வாங்கிடறேன்” என்று கூறினான்.
“பெரிசா எனக்காக எல்லாம் வாங்கணும்னு சீனை போடாதே.” என்று திண்றவளின் தட்டில் இருந்து அவனும் ஒரு மாஸ்மலோனை எடுத்து சுவைக்க, “என்னது டி சௌக்குசௌக்குனு” மென்றவன் ஷிவாலியை பார்த்தான்.
“நான் திங்கறதையே குறை சொல்லு.” என்று குறைப்பட்டவள் அவனின் முகசுழிப்போடு சாப்பிடும் தோரணையை கண்டு அவனிடம் “இதுல என்ன பாகற்காயை தெளிச்சா வச்சியிருக்கேன்.” என்று கூறி உதட்டை ஈரப்படுத்தி நின்றாள்.
அன்னிக்கு சாப்பிட்டதை விட கம்பேர் பண்ணினா நீ எதுவும் கலக்கலை. ஆனா டேஸ்ட் அன்னிக்கு ஒரு மார்க்கமா இருந்தாலும் சம்திங் வேற லெவல்ல இருந்தது. பட் இன்னிக்கு இனிப்பா இருந்தாலும் அந்த டேஸ்ட் மிஸ்ஸிங்” என்று பேசினான்.
“டேஸ்ட் பண்ணி பார்க்காம சொல்லாதே.” என்று ஷிவாலி கூறிவிட்டு தலை நிமிர்த்தாது பேசி முடித்து மெதுவாய் இமைகள் மேலழும்ப, முதலில் புரியாது குழம்பியவன் அவள் பேச்சின் சாரம்சம் புரிந்து அவளை காண அவளின் உடல்மொழி சிம்டம் அவனுக்கு சாதகமாக இருக்க, அவளின் உதட்டில் முற்றுகையிட்டான்.
இம்முறை அவனுக்கு இசைந்து முத்தங்களை பரிமாறினாள்.
உமிழ்நீர் இடமாற்றம் அடைந்து அவர்கள் புதுஉலகத்தில் சஞ்சரிக்க, வீட்டின் அழைப்பு மணி அடித்தது.
ஷிவாலி ரிஷியை விலகி தள்ளிவிட்டு பெருமூச்சை வெளியிட்டு கூந்தலை ஒதுக்கி முடிக்க, “யார் அந்த கரடி?” என்று ரிஷி முனங்கி எழ மனமின்றி அறை கதவை திறந்து வெளியேறினான்.
ஷிவாலியோ ‘பச்… இவனை விட்டு விலக நினைச்சி பிளான் போட்டா, பிளானே இல்லாம நானே போய் விழறேன்.’ என்று ஷிவாலி முனங்கியபடி இளமையின் பிடியில் ஆட்கொண்டு அவனிடம் தொலைந்து கொண்டிருந்தாள்.
-அலப்பறை தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்.

Nee epadiye erukrathu than nallathu
Super super. Intresting
shivu ma ipo thana start panra inum niraya iruku nee avan side vila