துஷ்யந்தா-36
இரண்டு மாதம் ஒப்பந்த காலம் முடிவடைய ஒரு வாரம் இருந்தது.
அதுவரை பிரகதி விதுரன் வாழ்வு அழகாய் பயணித்தது. ஆனால் அன்று ஒப்பந்தமும் வேண்டாம். இதே இரண்டு மாத கெடுவை போல வாழ்க்கை முழுவதும் வாழலாமா? என்று அவனோடு விவாகரத்து வேண்டாமென கூறிட பிரகதி கிளம்பினாள்.
காலையிலேயே விதுரன் வேகமாக அலுவலகம் செல்ல வேண்டுமென புறப்பட்டிருந்தான். அதனால் கதிரின் காரில் தனியாக விதுரனிடம் பேச மனதில் ஒத்திகை பார்த்துக் கொண்டே வந்தாள்.
அலுவலகம் வந்த நேரம் அவளின் தளத்தில் யாருமில்லை. பணியாட்கள் அனைவரும் வராமல் இருந்தனர்.
இன்னிக்கு ஆபிஸ் லீவா? இல்லையே… விதுரன் அவசரமா வந்தானே… என்றவள் மனதில் தனக்குள் கேட்டுக்கொண்டே காலியான இடங்களை பார்வையிட்டவாறே வந்தாள்.
விதுரன் அறைக்கு வந்ததும் காலியாக இருக்க, ஏதாவது மீட்டிங்னு வேறயிடத்துக்கு போயிட்டானோ. நான் இங்க தனியா இருக்கேன். ஆனா ஆபிஸ் கதவெல்லாம் திறந்திருக்கே என்று குழம்பி விதுரனுக்கு அழைத்தாள்.
“விதுர் எங்கயிருக்க?” என்றாள். அவனோ “ஆபிஸ்ல இருக்கேன் பிரகதி நீ பொறுமையா வா. நோ பிராப்ளம்” என்று துண்டித்து விட்டான்.
“நான் ஆபிஸ்ல தா..” என்றவள் போன் அணைத்து விட்டானென புரிய இங்க இல்லைனா எங்கப் போயிருப்பான் என்று அவன் அறையிலிருந்த சிசிடிவியில் நேரம் கணக்கிட்டு அவன் சென்ற இடத்தை காண ஓட்டி பார்த்தாள்.
தர்மா யாரையோ மாடிக்கு இழுத்து செல்ல, விதுரனோ கோர்ட்டை கழட்டி சேரில் வைத்து விட்டு, முழுக்கையை மடக்கி கோபமாக லிப்டில் செல்வதை கண்டாள்.
யாரா இருக்கும்? என்று யோசித்து விட்டு மாடிக்கு செல்ல விரைந்தாள்.
சேலை தடுக்கிக்கிட லிப்டில் சென்றதும் கடைசி பிளோரை அழுத்தினாள்.
யாரையோ இரத்தம் வர்ற வரை அடிச்சி துவைக்க போறான். பிரகதி கூல்.. உணர்ச்சி வசப்படாதே… என்று தனக்கு தானே கூறிக்கொண்டு “துஷ்யந்தா… ஏ… துஷ்யந்தா.. உன் சகுந்தலா தேடி வந்தா…” என்று ஹம் செய்து வந்தவள் அடுத்த நொடி கண்ட காட்சியில் நெஞ்சை பிடித்து நின்றாள்.
விதுரன் பளபளக்கும் புத்தம் புது கத்தியால் ஒருவனின் குரல் வளையை நோக்கி வீச, இரத்த துளிகள் அவள் உடையில் தெறித்தது.
இதற்கு முன் மகேஷ் என்ற ஒருவனை நேரில் சந்திக்க கேட்ட பொழுது ‘அவன் செத்துட்டான்’ என்று சாதாரணமாக கூறிய பொழுது திட்டியிருக்கின்றாள், கோபித்து இருந்தாள். ஆனால் அது விளையாட்டுக்கு கூறியிருப்பானோ என்றே எண்ணினாள். ஏன்னென்றால் தன்னிடம் வம்பு வளர்க்க, ‘நைட் தயாராயிரு. உன் அம்மாவிடம் பிளஸ்ஸிங் வாங்கு, உனக்கு சேதாரம் தான்’ என்றெல்லாம் அச்சுருத்தி பேசியதை வைத்து பயந்த பிரகதி பின்னர் அவனின் கண்ணியம் கண்டு அது இதுபோன்று பேசியதை எல்லாம் விளையாட்டு பேச்சென்று முடிவு கட்டினாள்.
ஆனால் அதெல்லாம் உண்மையல்ல.. நான் சொன்னதை செய்யும் ரகம் என்று காட்டுபவனை கண்டு மிரண்டு இருந்தாள்.
கத்தி அலற கூட இயலாத அளவிற்கு அதிர்ச்சியில் வாயடைத்து நின்றாள்.
தன்னிடம் இந்த குறிப்பிட்ட காலத்தில் அறைக்குள் காட்டிய முகம் வேறு. அதில் அக்கறை அன்பு, காதல், காமம், பாசம், நேசம், அக்கறை, நலன், மையல் மயக்கம் கொண்டிருந்தவன் இவன் அல்ல.
இவன் முதன் முதலில் அராஜகம் செய்த அரக்கன், ராட்சஷன், அசுரன் என்பதாய் உள்ளம் எடுத்துரைத்தது.
பிரகதி பார்வை விரிந்தேயிருக்க, விதுரன் கையிலிருந்த கத்தி இடம் மாறியது. மற்றொருவன் வந்து பவ்யமாய் பெற்று கொண்டு இருவர் அந்த பிணத்தை பேக் செய்ய, தர்மா கைகழுவ நீரை தரவும் அலம்பியவன் அதன் பின்னே பிரகதியை கவனித்தான்.
“ஏய்… பிரகதி நீ எங்க இங்க வந்த.” என்றவன் அருகே வர, தலையை ஆட்டி அருகே வராதே என்று பின்னங்கால் பிடறி தெறிக்க படிக்கட்டில் ஓடினாள்.
“பிரகதி நில்லு.. பிரகதி.. இப்ப நிற்கலை கொன்றுடுவேன் டி” என்றான்.
வேகமாக கீழேயிறங்க, அவளுக்கும் முன் லிப்ட்டில் வந்தவன் அவளை கைப்பற்றி நிறுத்த போராடினான்.
இவன் பழைய விதுரன் என்றால் பழைய பிரகதி தலை தூக்க வேண்டாமா. “கையை விடு” என்று கத்த அந்த தளத்தின் மொத்த மனித தலையும் இருவரை தான் பார்த்தது.
அது இன்பா பணிப்புரியும் அலுவலகம் வேறு. அவனும் பார்த்திட விதுரன் அவமானமாக உணர்ந்தான்.
“பிரகதி கத்தாதே.. ஒரு நிமிஷம் கேளு.” என்றான் பற்கலை கடித்தபடி.
அவளோ விதுரனை சட்டை செய்யாமல் லிப்டில் ஏறினாள். அவனுமே லிப்டில் ஏற மற்றவர்கள் அனைவருமே வெளியேறினார்கள். யாருமின்றி இவனோடா? என்று பிரகதி வெளிவந்து படிக்கட்டிலேயே நடந்தாள்.
“பிரகதி.. பிரகதி.. நில்லு லிப்ட்ல பேசுவோம். உள்ள வா” என்று கைப்பிடிக்க “கொலைக்கார கையை எடு” என்று அரற்றினாள்.
விதுரனுக்கு ஒரு பெண் பின்னால் ஓடி கெஞ்சுவது புதியது. இதுவரை இறங்கி வந்ததே தன்னியல்பு அல்ல என்று தாமதமாக தோன்ற “போடி… அப்படியே டிவோர்ஸ் கொடுத்துட்டு போ. எப்படியும் இதை சாக்கு வச்சி என் உசுரை வாங்குவ” என்று கத்தி லிப்டில் மாடிக்கு அவனது அறைக்கு சென்றான்.
கதிரின் காரில் ஏறிடவும் நிம்மதியாய் உணர்ந்தான். இனி வீட்டுக்கு சென்று சமாதானத்தை பார்த்து கொள்வோமென விட்டு பிடித்தான்.
பிரகதியோ காரில் அழுதழுது வீட்டிற்கு வந்தாள். கதிரிடம் போன் செய்து பிரகதியிடம் பேச வேண்டாமெ கூறியிருந்தான்.
ஆதித்யாவிடம் தன் செயலை ரத்தின சுருக்கமாக கூறினான்.
ஆதித்யா பதிலுக்கு எதுவும் கூறவில்லை. “நீ ஒன்னு பண்ணற அது ஒன்னு நடக்குது விதுரா. கொஞ்சம் சீக்கிரம் வா. எப்படியும் பிரகதி என்னிடம் வாதாடுவா. உங்க பேரனை கண்டிக்கலையா மனுஷனா அவன்னு திட்டுவா. சாபம் கொடுப்பா வந்து வாங்கிக் கட்டிக்கோ” என்று கடிந்தார்.
அவர் கடிந்திட அது அப்பொழுது வந்த பிரகதிக்கு எரிச்சலை கிளப்பியது.
ஆக ஆதித்யா தாத்தா எதுவும் கேட்க போவதில்லை என அவளாக எண்ணி பெட்டியை எடுத்து வைத்தாள். பீரோவை தேடி உடைகளை அடுக்க, அங்கே அவள் ஒப்பந்தமிட்ட தாள்கள் இருக்க கையிலெடுத்தாள்.
அதற்கு பின் ஒரு பத்திரம் இருக்க வாசித்து முடித்தாள்.
மியூட்சுவல் டிவோர்ஸ் பத்திரம் என்றதும் தேதியை பார்த்தாள். ஒரு வருடம் முடிவடைந்ததாக காட்டியது.
இங்கு சென்னைக்கு வந்த நாட்களுக்கு முன்னதாகவே அன்னையை வைத்திருந்த தேதியில் திருமணத்தை பதிவு செய்திருப்பான் போல. அதனால் முன்கூட்டியே விவாகரத்து பத்திரம் தயாராய் இருந்தது.
இவன் ஒப்பந்தம் பெயருக்கு போட்டிருப்பானென எண்ணியவளுக்கு கண்கள் கரித்தது.
அவன் பேசுவதெல்லாம் விளையாட்டுக்கில்லை. உண்மையும் தானே. இந்த குறிப்பிட்ட நாட்களில் தன்னோடு வாழ்ந்த நாட்களுக்கும் நிமிடங்களுக்கும் அர்த்தமென்ன? என்று தோன்றியது.
அவள் கையில் வைத்திருந்ததை பிடுங்கியவன் “ஒரு நிமிஷம் நில்லுனா நின்னியா. என்னடி பிரச்சனை உனக்கு. அவன்..” என்று ஆரம்பிக்கும் முன், “உன்னோட வேலைக்காரங்க இல்லை நான். நீ நிற்க சொன்னா நிற்க. கைய விடு. மனுஷனா டா நீ. கண்ணை மூடினா கழுத்துல இருந்து குபுக்குனு ரத்தம் தெறிச்சது தான் வந்து நிற்குது. ஆனா நீ குற்றவுணர்வே இல்லாம இருக்க.” என்றாள்.
“செத்தவன் சாக வேண்டியவன் பிறகு எப்படி குற்றவுணர்வு வரும்.” என்று முன் நின்றான்.
“அய்யா சாமி என்னை விட்டுடு. நான் இங்க இருக்க மாட்டேன். விவாகரத்து வந்துடுச்சு. நம்ம ஒப்பந்தப்படி நாளும் வந்துடுச்சு. நான் எங்க வீட்டுக்கு போறேன். என்னைய விட்டுடு. உன்னை மாதிரி அரக்கனோட என்னால வாழ முடியாது. நீ சொன்ன மாதிரி இரண்டு மாதம் வாழ்ந்துட்டேன். நான் போறேன்” என்று சூட்கேஸில் துணிமணியை அடுக்கினாள்.
“பிரகதி அவசரப்படற” என்றான் விதுரன்.
“அவசரமா…. நானா… உன் பேச்சை கேட்டு இந்த ரூம்ல உன் கண்டிஷனுக்கு உட்பட்டு யோசித்து விதுரன் என்ற எமகாதகனை மறந்து என்னோட காதல் துஷ்யந்தனா உணர்ந்து வாழ்ந்தேன்.
அந்த வாழ்க்கை அர்ததமில்லாம போச்சு. நீ எப்பவும் நீ தான். நான் எப்பவும் நான் தான். உன்னை விரும்பி தொலைச்ச பாவத்துக்கு நல்லா வச்சி செஞ்சுட்டடா. ஒரு கொலைக்காரனோட குடும்பம் நடத்தியிருக்கேன். சே…
என்னயிருந்தாலும் எங்கம்மா வாழ்க்கை தீபிகா வாழ்க்கை இன்பா வாழ்க்கைனு அழிச்சவன் நீ என்பதே மறக்க முயன்றும் மறக்க கூடாதபடி நிற்கறேன். நான் போறேன்…” என்றாள்.
அவள் பேசியதிலேயே தன்னை எந்தளவு விரும்புகின்றாளென அறிந்தவன் தன்னை விட்டு போக மாட்டாளென நம்பினான். ஆனால் தற்போது இருக்கும் கோபம் மட்டுப்படும் வரை அவள் விரும்பிய இடம் செல்லட்டுமென விதுரன் முடிவெடுத்தான்.
முடிவெடுத்தவனின் எண்ணங்கள் தெளிவாக “அவசரப்படறியே மா… கையெழுத்து பிரகாரம் நாளைக்கு தானே முடியுது. இன்னிக்கு இங்க தான் இருக்கணும்.” என்றான்.
பிரகதிக்கோ “ஒரு நாள்ல என்ன பண்ண போற.” என்று எரிச்சலில் கத்தினாள்.
“இரண்டு மாத பிராப்பிட்ல என்ன பண்ணினேன். அதே தான். ஒன் நைட் வேல்யூ தெரியலையே.” என்று சிரித்தான்.
“உன்னால எப்படி டா சிரிக்க முடியுது. இப்படி பேச முடியுது. சே…” என்று முகம் சுழித்தாள்.
“கோபத்துல இருக்க பிரகதி. கூல்லாகு.” என்றவன் வெளியேறியிருந்தான்.
பிரகதியோ தன் வீட்டுக்கு வரப்போவதாக பட்டுவிடம் கூறி இடத்தை சுத்தம் செய்ய சொன்னாள். பற்றாத குறைக்கு திங்க்ஸும் வாங்க கூறினாள்.
இரவு அவளை அறியாமல் விதுரனை அணைத்து விட்டாள். அடுத்த நாள் காலையில் ‘இங்கிருந்தா அவன் தப்பை அவன் உணரவே மாட்டான். என்னாலும் இவனை அருகே வைத்து தண்டனை வழங்க இயலாது’ என்பதை போல எண்ணினாள்.
அனிலிகா போன் செய்தப் பொழுது அங்கு செல்ல விமான டிக்கெட் பதிவு செய்தாள்.
அடுத்த நாள் செல்ல தயாரானவளை சீண்டி விட “தாலி மெட்டி மட்டும் வேண்டுமா பிரகதி. ஓகே என் நினைவோட இருக்கட்டும்” என்ற அடுத்த நொடி கழட்டி அவன் முன் தூரயெறிந்தாள்.
இதற்கு முன் இப்படி செய்த நொடிகளை வைத்து செய்து விட்டாள். ஆனால் விதுரன் ஒரு நொடி அதிர்ந்து பின்னர் அதனை கையிலெடுத்தான்.
முதல்ல இருந்தே இதை பொம்மையா நினைச்சிட்டோம். அதான் வேல்யூவே நமக்கு தெரியலை. இட்ஸ் ஓகே குத்துதுனு எத்தனை முறை கழட்டி இருப்போம். அப்ப இந்த செண்டிமெண்ட் பார்த்தோமா என்ன?
பட் இதை நான் ஆசையா அணிவிச்சேன்.” என்றவன் மெட்டியை வருடினான்.
இட்ஸ் ஓகே… விதுரனுக்கு நோ செண்டிமெண்ட். இன்னிக்கு ஈவினிங் நானே கொண்டு போய் விடறேன்” என்றான்.
“நான் ஒன்னும் பார்ன் பேபி இல்லை. எனக்கு வழி தெரியும்” என்றாள்.
“என்னோட கடைசி ரூல்ஸ் நீ பார்க்கலையா. இதே போல மனம் ஒன்று படலைனா கடைசி நாள் நானே கொண்டு போய் விட்டுடுவேன்னு போட்டிருந்தேன். உன் தேவைகள் முழுமையா இருக்கானு செக் பண்ணிட்டு விடுவேனு போட்டிருந்தேன். ஐ திங் நீ 5த் ரூல்ஸ்கு பிறகு படிக்கலைனு நல்லாவே தெரியுது.” என்றவன் சிரிக்க பிரகதி கோபமாய் திரும்பி கொண்டாள்.
அவசரமாய் போன் வரவும் கிளம்பி விட்டான்.
விதுரனுக்கு சென்டிமெண்ட்னா இல்லைனு சொல்லற உனக்கு என் பிரிவு செண்டிமெண்டா ஹர்ட் பண்ணும்டா என்று பிரிய தயாரானாள். மொத்தமாய் பிரியலாமா? இல்லை கொஞ்ச காலமா என்று யோசித்தவளுக்கு அந்த அலறல் கேட்டது.
கீழே கேட்டில் யாரோ அழுது கரைந்து கத்துவது கேட்டது.
சாபங்களை கேட்க கேட்க பிரகதி செவிகள் செவிடாக இருந்தால் நலமாக இருந்திருக்குமே என்று எண்ணாமல் இல்லை. இவளே விதுரனை சாபமிட்டு இருக்கின்றாள். ஆனால் அது வேறாக தோன்றியது. இன்றோ நேற்று இறந்து போனவனின் மனைவியின் சாபமானது தன்னை இம்சித்தது.
போக வேண்டுமென பிரிய வேண்டும் என்ற எண்ணம் வலுத்தது.
அருகேயிருந்து அல்லல்பட்டு சகிப்பதை விட முந்தைய வாழ்வாக மறைந்து வாழ்வது செல்வதும் சாலசிறந்ததாக தோன்றியது.
விதுரன் மாலை வந்து அவனாக தன் அன்னை வீட்டில் விட்டு சென்றான். போகும் பொழுது முத்தமிட்டு, என்னோட இருந்துட்ட… என் அருகாமை என் இதயதுடிப்பு என் அணைப்பு இதெல்லாம் இல்லாம இருக்க முடியாது. வீணா கஷ்டப்படாதே… இரண்டு நாள் சண்டை போட்டு மூனாவது நாள் சமாதானம் ஆகலாம் பிரகதி. அதான் நமக்கான வாழ்க்கை. நாம அந்த கேட்டகிரி தம்பதிகள்” என்று எடுத்துரைத்தான்.
எதுவும் காதில் ஏற்றிக்க பிடிக்காமல் நின்றவளை இழுத்து முத்தமிட்டு சென்றான். அன்று ஓடியொளிந்து சென்றாள் ஆஸ்திரேலியாவுக்கு.
முதலில் அவள் அங்கு செல்வாள் என்றதும் அப்ப கோபம் பெரிசு. சரி ஒரு மாசம் பிறகு சமாதானம் செய்வோம் என்று விதுரன் விட்டுவிட்டான்.
அடுத்து குழந்தை வயிற்றில் இருந்த நேரம் ஏதோ பத்திரம் தேடிய கணம் ஒப்பந்த பேப்பரும் கண்ணில்பட்டது. அதில் முக்கிய குறிப்பு என்று ‘இந்த இடைப்பட்ட நாட்களில் நீ கன்சீவ் ஆனா அந்த குழந்தை எனக்கு சொந்தம். பெத்து கொடுத்துட்டு போகணும்’ என்றிருக்க பிரகதி அச்சத்தில் தான் அடுத்த கொஞ்ச நாளிலேயே லண்டனில் தஞ்சமானாள்.
எட்வினின் அக்கறை, அவன் செய்த உதவிகள் அவளுக்கு இதம் தந்தது. இடம் பார்த்து, வேலை ஏற்பாடு செய்து, தன்னை மருத்துவமனைக்கு அழைத்து போனான்.
கூடவே காதலை தாங்கி பதிலையும் கேட்டான். முதலில் மொத்தமாய் மறுத்தாள். விதுரன் கூறியது போல அவன் அருகாமையில் இருந்துவிட்டு வேறொரு ஆடவனை துளியும் எண்ண மனம் வரவில்லை. ஆனால் குழந்தையை தூக்கி கொண்டு ராட்ஷனாக சென்றிடுவானோ என்ற அச்சம் இருந்தது.
அப்படி தானே செய்து விட்டான்.
இதே எட்வினை மணந்தபிறகு குழந்தையை கையிலிருந்தால் அது விதுரன் குழந்தையென்று யோசிக்காமல் எட்வின் குழந்தையாக எண்ணி குழந்தையை தன்னிடமிருந்து பறிக்க மாட்டானென நம்பினாள்.
எட்வினிடம் தன்னிலையை கூறியும் மறுத்தவளிடம் அவன் இந்த காரணமும் கூறி குழந்தைக்கு பாதுகாப்பு என்று எடுத்துரைத்து யோசிக்கவும் எட்வின் அதனை பிடித்து கொண்டு நானா உன்னை போஸ் பண்ண மாட்டேன். குழந்தை பிறந்ததும் மேரேஜ் பண்ணிப்போம். பிறகு காலம் கனியும் வரை காத்திருக்கின்றேன் என்று கூறியிருக்க, செவி சாய்த்தாள். எட்வினை மணக்க சம்மதித்ததற்கு அது மட்டுமே காரணம்.
இடையில் ஆதித்யா தாத்தாவை பார்க்க வந்த பொழுது தன்வீ ஆறு மாத குழந்தை அனிலிகாவிடம் விட்டு விட்டு வந்தாள்.
அதனாலேயே அடிக்கடி போன் செய்து மகளின் நிலையை கேட்டறிந்தாள். இங்கு வருவதற்கு என்று அமுதமூட்ட கூட இயலாதென ஐந்து நாட்கள் மருந்தை உட்கொண்டு வந்தாள்.
ஆதித்யா விதுரனோடு சேர்த்து வைக்க பேசவும், எனக்கும் எட்வினுக்கும் திருமணம் என்ற இடியை விதுரன் மீது வீசினாள்.
-விதுரகதி தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்.
Vidhu oda Ella action Kum oru valied reason irruku pakkara namakku thayrithu ana unakku thayriyaliya prathi ?
Un nilamaium kastam thaan summa ellarum un purushanukku sabam kudutha , ivanum avanoda bad face mattum thaan ellarukum kattaran ….apo ne ipti thaan yosipa …
Vithu un nature la irrunthu konjam irangi vanthu prathi ta explain paniruntha intha pirvu pregnancy, delivery nu ellam pathurukalam , ne sonna mari 2 nal sandai 3 nal samathanamnu life poirukum , thathavum nimathiya thirupthiya kanna mudiruparu …..
Super👍👍
Nice epi…. Waiting for next ud….
Excellent romance. Pragati can hear from vithuran words. Intresting
pragathi eduthaa mudivu thappu than kandipa avana pesa vidave illa apo thana enanu sola mudium ipo thrinjithu thukitu vanthutan kolanthaiya ithuku apram eppadium nee avana ethukittu vazha than pora