ரி-ஷி-வா-12
🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁
கண்கள் சொருக கன்னத்தில் கை வைத்து அமர்ந்து விட்டான் ரிஷிவேந்தன்.
புடவை எடுக்கின்றேன் என்ற பெயரில் உணவு முடித்து வந்த மூன்று வீட்டு பெண்களும் மாற்றி மாற்றி கடைக்காரனை படுத்தி எடுத்தனர்.
திருமணப் பட்டு எடுக்க சுஜாதாவோ இதென்னங்கயானை விலை பூனை விலையா இருக்கு. எங்கவூர்லயே கல்யாணப்பட்டை நெய்து அனுப்பறாங்க. ஆனா இங்க ஒரிஜினல் பட்டு மாதிரி தெரியலை.” என்று அழகழகாய் இருந்தவையை விலை அதிகமென்று தட்டி கழித்தார்.
சந்தியாவிற்கே ஒர் கட்டத்தில் ஹரி அங்க பாரு ஷிவாலி வீட்ல பார்க்கறது எல்லாம் இதை விட அதிகமான விலை. இதுக்கே உங்கம்மா இப்படி பேசினா. கல்யாண மண்டபத்துல நான் தனியா அவ தனியா டிரஸை காட்டி கொடுக்கும்.
ஏற்கனவே அப்பா நீங்க ஆட்களும் வரலை சின்னதா மண்டபம் பிடிச்சி என்ன பண்ண அடுத்த கொஞ்ச நாள்லயே சின்னவளுக்கு விமர்சனையா வச்சா நாமளே லவ் மேரேஜ் இவ்ளோ தான் மரியாதைனு காட்டிக்கறதா நினைப்பாங்கனு தான். ஒரே மேடையில ஒர மாதிரி நிறைவா கொடுக்கணும்னு அப்பா விரும்பறார். டிரஸ் மட்டும் இப்படி இதுவே குறை கூறினா.. என்ன ஹரி?” என்று தனியாக முனங்கிடவும் ஹரியோ “ம்மா.. அவளுக்கு பிடிச்சதை எடுக்கட்டும்.” என்றான்.
சுஜாதா அதன் பின் முகம் தூக்கி வைக்க கயல் அன்னை விருப்பத்தில் அவளுக்கு பிடித்ததாய் எடுத்தாள்.
சரண்யாவோ மனோகரி பாட்டியிடம் சேர்த்து ஷிவாலிக்கு எடுக்க, பிங்க் நிற ஜரிகை உடல் முழுக்க எடுத்ததும், இது பிடிச்சிருந்தா எடுத்திடுவோம்.” என்று கூற ராமமூர்த்தியோ போனை பிடுங்கி “உனக்கு தான் புடவை எடுக்கறாங்க. அட்லிஸ்ட் அங்யாவது பாரு” என்று அதட்டவும் அவரை திட்டிக் கொண்டே திரும்பினாள்.
“என்னடா ஓகே வா?” என்றதும், தந்தை அருகே நிற்க, “அதான் எனக்கு பிடிச்ச மாதிரி எடுக்கறியே பாட்டி ஓகே” என்று கூறினாள்.
“நான் பண்ணலை சம்மந்திம்மா செலக்ஷன்” என்றதும் சரண்யா இதை அங்க தனியா எடுத்து வச்சிடுங்க. இது செலக்டட்
“சரிகா கவிதா எடுத்துட்டா அடுத்து துணை சேலை எடுக்கலாம்” என்று கூறவும் அன்னை மருமகளுக்கு எடுத்த சேலையின் விலையை பார்த்து தங்களுக்கு அது போன்றதை தேடினார்கள். ஒன்று மிதமிஞ்சிய திருமண புடவை அல்லது அதற்கடுத்த நிலை என்றதும் அதனை எடுத்தார்கள்.
பொண்ணு வீட்டில் மற்றொரு பட்டு எடுக்க நேரம் ஆகவும் “கல்யாணப்பட்டு எடுத்தாச்சுல கொடுங்க போனை” என்று தங்தையிடமிருந்து பிடுங்கி சென்றாள் ஷிவாலி.
‘மனசுல அப்படியே கடிவளம் போட்டு வளர்த்து விடறாதா நினைப்பு. காதலிக்கலைனா கூட எதிர்ல வர்றவனை இழுத்துட்டு போய் கல்யாணம் பண்ணிப்பேன்.’ என்று தந்தையை திட்டிக் கொண்டு அவ்விடம் விட்டு வந்தவள் எதிரே வந்த ரிஷி மீது மோதினாள்.
“ஆண்டவா… ஏன் இந்த பாரத்தை என் மேல தள்ளற” என்று நெஞ்சை நீவிவிட்டு, “அறிவிருக்கா டி. எதிர்ல யார் வர்றா என்னனு பார்க்க மாட்ட? கண்ணை போன்லயே விட்டுக்கோ.” என்று கேட்டுவிட்டான். எதிரில் வந்தவனும் ரிஷியாக இருக்க அதிர்ந்தாள். இதில் அவனது பேச்சு வேறு.
“உன் கண்ணு எங்க போச்சு. நீ தள்ளி போக வேண்டியது தானே. தடிமாடு… நானா எப்ப மோத வருவேன்னு காத்திருக்க?” என்று கீழே விழுந்த போனை எடுத்து பார்த்தாள்.
லேசாய் கீறல் விட்டயிருந்தது ஆனால் கவனிக்கவில்லை. “ஆமாடி… எனக்கு ஆசைப்பாரு உன்னிடம் மோத பொடிடப்பி.” என்று கடுப்பாய் மொழிந்தான் ரிஷி.
“அங்க பாரு உன் அக்கா ஹரிகரனோட நல்லா பேசி சிரிக்கிறா. ஆனா நல்லது செய்ய போய் உன்னிடம் மாட்டிக்கிட்ட நான் சிரிக்கவும் முடியாம விலகவும் முடியாம 90′ கிட்ஸா கிடந்து தவிக்கறேன்.” என்றதும் ஷிவாலி சிரித்து விட்டாள்.
“என்னது கிட்ஸா…? டேய்.. இரண்டு குழந்தைக்கு அப்பா மாதிரி இருப்ப, நீ நைட்டீன்ஸ் கிட்ஸா அதுசரி மிச்சம் மீதி இந்த கல்யாணம் ஆகாம மீம்ஸ் போட்டு அவங்களை அவங்களே ஆறுதல் படுத்திப்பிங்களே… அவங்க தானே
வாசு மதியம் என்ன சொன்னான் தெரியுமா. அத்த அத்த இந்த பிஸ்கேட் என்றதால தான் மாமா வாங்கி திங்கலை. இதே க்ரீம் பிஸ்கேட் என்றால் அவரும் ஷேர் வாங்கி சாப்பிடுவாருனு கவலைப்பட்டான் தெரியுமா? இன்னமும் குழந்தை திங்கறதை பிடுங்கி திங்குற கூட்டம் தானே நீ.” என்று சலிப்பாய் கூறி அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்து வாட்டர் பாட்டிலில் நீரை அருந்தினாள்.
“ஏ… ஆமா டி. பிஸ்கேட் பங்கு போட்டு திண்பேன். இப்ப என்ன யாருக்கும் கொடுக்காம திங்கமாட்டேன். ஆனா உன்னை பாரு. யாராவது தண்ணி கேட்டுடுவாங்கனு பாட்டிலை சப்பி குடிக்கிற. அதென்ன சின்னதா ஹோல். அதை உறிஞ்சு குடிக்கிற பொடி டப்பி பொடி டப்பி” என்று கூறினான்.
“இங்க பாருடா… ரொம்ப பேசாதே. நிஜமாவே கல்யாண மண்டபத்துல இருந்து ஓடிடுவேன்.” என்று மிரட்டினாள்.
“போ உனக்காக பின் வாசலை திறந்தே வைக்க சொல்லறேன்.” என்று அவனும் கூறினான்.
“அடலூசே… கல்யாண மண்டபத்துல பின் வாசல் இல்லை. சைட்ல தான் கிச்சன் ஐயிட்டம் எடுத்துட்டு போக ஒரு வழியும். இந்தபக்கம் ஒரு வழியும் இருக்கும்.” என்று கூறி போனை எடுத்தாள்.
‘அச்சச்சோ இவ என்ன வழி முதல் கொண்டு சொல்லறா… நிஜமாவே ஓடிடுவாளோ’ என்று பதற, அதற்குள் ராமமூர்த்தி தலை தெறிய, “அய்யோ அப்பா” என்று ஓடினாள்.
ராமமூர்த்தி ஏற்கனவே ஷிவாலி ரிஷிவேந்தன் பேசுவதை தூரத்தில் பார்த்து விட்டு தான் வந்தார். ஏதேனும் மகள் இடக்காக வார்த்தை விடுவாளே என்று பதறி வந்தார்.
“என்ன தம்பி ஏதாவது.?” என்று பதறி முடித்தார்.
“சின்ன கழுதை ஏதாவது இடக்கா பேசிட்டாளா? அப்படியிருந்தா மன்னிச்சிடுங்க தம்பி.” என்று ராமமூர்த்தி பெண்ணை பெற்றவராய் அஞ்சினார்.
ஒரு வரன் போனால் மற்றொரு வரன் அமையும் என்று அலட்சியப்படுத்தலாம். ஆனால் அவரோ பெரிய மகளால் சின்னவள் வாழ்க்கை யாரும் சரிப்பட்டு அமைய மாட்டார்கள் என்று எண்ணினார். மற்றொரு காரணம் ரிஷிவேந்தனை என்ன காரணமென்றே அறியாது பிடித்திருக்கிறது.
வேதாச்சலத்திற்கும் ராமமூர்த்திக்கும் ரிஷியை பிடிக்கிறது.
“அங்கிள்… அவங்க இடக்கா பேசினாலும் சரியா பேசறாங்க. என் வயசென்ன அவங்க வயசென்ன? இந்த காலத்துல ஒன்பது வயது வித்தியாசம் எவ்ளோ கஷ்டம் தெரியுமா? பிடிச்சி அவங்களா கல்யாணம் பண்ணிக்கறது வேற. பிடிக்காம திணிக்கறது தப்பில்லையா.
ஆக்சுவலி நான் சுயநலத்தோட தான் இதுவரை உம்முனு இருந்துட்டேன். எதுக்கோ ஒரு முறை பேச தான் வாய் திறக்கறேன். பெரியவங்க லவ் பண்ணியதால கல்யாணம் பண்ண முடியாது. சின்னவங்களுக்கு என்ன பிடிக்கலையே கட்டாயப்படுத்தி கட்டி வச்சா பாவமில்லையா?
டேடி லிட்டில் பிரின்சஸ் என்பது பார்த்தாலே தெரியுது. அப்பறம் எப்படி அவங்களிடம் என்னை திணிக்க பார்க்கறிங்க.” என்று விரும்பிக் கொண்டிருக்கும் பெண்ணிற்காக ஒரு வார்த்தை கேட்டு நின்றான்.
“தயவு செய்து கல்யாணத்தை நிறுத்தற மாதிரி எதுவும் பேசாதிங்க தம்பி. எங்கப்பா உடல்நிலை தாங்காது. என் பெரிய பொண்ணு தான் விரும்பினா. என் சின்ன பொண்ணு யாரையும் விரும்பாது. ஏன்னா அது யாரையும் கிட்ட நெருங்க விடாது.” என்று கூறவும், ரிஷி வேகமாக தலையாட்டினான்.
“அய்யோ அங்கிள் நான் லவ் பண்ணறான்னு அர்த்தத்துல பேசலை. ஏஜ் டிபரண்ட்ல மேரேஜாகி அவளோட பிரெண்ட்ஸ் கேலி பண்ணலாம். அவளுக்கும் ஒவ்வொரு நாளும் அது நெருடும்ல. பிடிச்சி கட்டிக்கறவங்க வேற. அவங்க லைப் ஸ்மூத்தா இருக்கும். அவங்களுக்கு பிடிக்காம எப்படி வாழ்வாங்க?” என்று கூறினான்.
“அதெல்லாம் பிடிக்கும் தம்பி. அப்பா உடம்பு சரியில்லையேனு பயந்து தான் அமைதியா இருக்கா. ஆனா அதே நேரம் உங்களை சுத்தமா பிடிக்கலைனு சொல்லிட முடியாதே.
கண்ணுக்கு லட்சணமா இருக்கிங்க. அவங்க அவங்கனு தான் என்னிடம் என் மகளை மரியாதை தந்து பேசறிங்க.
யாருனே தெரியாத அன்னிக்கு என் பெரிய பொண்ணு மனசை புரிய வச்சி உங்களுக்கு மேரேஜ் ஸ்டாப் ஆகுமென்றாலும் எனக்கு புரியற மாதிரி சொல்லிட்டு போனிங்க. இப்பவும் சின்ன பொண்ணோட மனசை பற்றி யோசிக்கறிங்க. என் பெரிய பொண்ணு விரும்பினா அதனால நீங்க சொன்னது கருத்துல ஏற்றிக்கிட்டேன். சின்ன பொண்ணுங்க மனசுல யாருமில்லை.
அது வீம்பு பண்ணுது. வந்ததும் அதுக்கு அதிர்ச்சியில்லையா.. ஆனா உங்களை விட்டா அதுக்கு சரியான ஆளுயில்லை. நீங்க பயப்படுற அளவுக்கு வயசு பிரச்சனையேயில்லை. அது லேட்டா புரியறப்ப அவளோ நாங்களோ உங்களை மிஸ் பண்ணிடக் கூடாதே” என்று கூறவும் ரிஷிவேந்தனோ ‘நானும் அவளை மிஸ் பண்ண விரும்பலை. ஆனா அவ என்ன ஐடியால இருக்காளோ.’ என்று தவிப்பாய் அவளை கண்டான்.
இம்முறை பில் போட திருமண பட்டு உடையெல்லாம் அடுக்க, ஆளாளுக்கு அவர்கள் வாங்கியதை பிரித்து நின்றனர்.
ரிஷி வேந்தனோ கிரிடிட் கார்டு டெபிட்கார்டு என்று இரண்டையும் நீட்டினான்.
ஹரிகரனோ சந்தியா வீட்டின் எதிரே என்பதால் சந்தியாவை அழைத்து செல்வதாக கூறவும் ராமமூர்த்தியிடம் செல்ல அனுமதி வேண்டி நின்றாள்.
“அப்பா… அத்த வீடு எதிர்ல தானே இருக்கு. எங்களோட வான்னு கூப்பிடறாங்க.” என்றதும் தலையாட்டினார்.
ரிஷி குடும்பத்தோடு “காபி குடித்து கிளம்பலாமே” என்றார் ராமமூர்த்தி.
கவிதாவும் அவர்கள் பசங்களும் “ஆமா பசிக்குது” என்று கூறியதும் மறுக்க பார்த்த “ரிஷி சரிவாங்க” என்று அழைத்து சென்றான்.
“மாமா எங்களுக்கும் காபியா?எங்களுக்கு ஐஸ்கிரீம் வேண்டும்.” என்றதும் “ஓகே டா” என்று தோளில் அணைத்து வந்தான்.
டேபிளை சுத்தம் செய்து முடித்த பேரர் “சொல்லுங்க மா காபியா டீயா?” என்றதும் ஆளாளுக்கு காபி டீ என்று மாற்றி மாற்றி கூற, “எனக்கு ஃபலூடா” என்று ஷிவாலி கூறினாள்.
“ஐஸ்கிரீம் ஃபலூடா ஜூஸ் எல்லாம் அந்த சேர்ல போங்க மேடம். இங்க காபி டீ” என்று சுட்டிக்காட்ட, ஐஸ்கிரீம் கடையோட்டிய இடமாக ஜூஸ் தயாரிக்க எழுந்தாள்.
“மாமா இங்க உட்கார்ந்திருக்க ஐஸ்கிரீம் அங்க வா” என்று அழைத்து இல்லை இல்லை இழுத்து வந்தார்கள் வருண் மற்றும் வாசு.
இங்க நான் பார்த்துக்கறேன் நீ போடா” என்று சரண்யா கூறவும் ரிஷிவேந்தன் தயக்கமாய் செல்ல அதற்குள் அருகருகே வாசு வருண் அமர்ந்து காலாட்டி மகிழ்ச்சியாய் ஐஸ்கிரீம் சாட்டினை பார்த்து தேவையை கூற பிளேவர் தேடினார்கள்.
ஷிவாலி அருகே இடமிருக்க அமர்ந்தான். அவனை ஒரு முறை பார்த்து முறைத்து விட்டு பிறகு எதிர்வினை காட்டவில்லை.
“ஒரு ஃபலூடா, ஒரு வெண்ணிலா ஒரு பிஸ்தா ஐஸ்கிரீம், ஒரு லெமன் ஜூஸ் ஸ்வீட் வித் சால்ட்” என்று கூறிவிட்டு ஷிவாலியை கண்களால் பருகினான்.
“சேலை பிடிச்சிருக்கா? பார்த்தியா இல்லையா?” என்று கேட்டான்.
“பார்த்தேன் பிடிச்சிருக்கு” என்று பதில் தந்துவிட்டு எதிரே இருக்கும் இரண்டு வானரத்தை கண்டாள்.
குழந்தை இருக்கு பேசாதே என்பது போன்ற அர்த்தப் பார்வை அதில் அடங்கியிருந்தது.
ஐஸ்கிரீம் வந்து விட இரு குட்டி வானரங்களும் வேகமாக போட்டி போட்டு சாப்பிட ஆரம்பித்தார்கள்.
“ஏய்… நான் தான் பஸ்ட்” இல்ல நான் தான் பஸ்ட்” என்று கத்தி கவிதாவை தேடி போனார்கள்.
ஜூஸ் வரவும் பருக துவங்க, “எங்க அப்பாவிடம் போட்டு கொடுத்துட்டியா?” என்று கேட்டாள் ஷிவாலி.
“இதப்பாரு நான் எதுவும் போட்டு கொடுக்கலை. அவரிடம் ஏஜ் டிபரெண்ட்ல என்னை ஏன் கட்டி வைக்கிறிங்கனு கேட்டேன். அவருக்கு என்னவோ என்னை பிடிச்சிருக்கு அது ஏன்னு தெரியலை. அதெல்லாம் பெரிசில்லைனு பேசறார். என்னோட பங்குல கடைசியா நானே சொல்லிட்டேன். இதுக்கு மேலனா நானா பொண்ணு பிடிக்கலைனு போகணும். அப்படி பண்ணினா…..” என்று நிறுத்தினான்.
பேரர் வந்து ஃபலூடா கொண்டு வரவும் அமைதி காத்தான்.
பேரர் வைத்து விட்டு சென்றதும், “அப்படி பண்ணினா எங்கம்மா என்னை செருப்பால அடிப்பாங்க. மன்னிக்க மாட்டாங்க. ஏன்டா கல்யாண பத்திரிக்கை வந்துடுச்சு, கல்யாணப் புடவை எடுத்தாச்சு இப்பவந்து பேசறேன்னு திட்டுவாங்க. ஏன் ஜென்மத்துக்கு என்னிடம் பேசாம கூட கொல்லுவாங்க. என் தரப்புல முடிஞ்சவரை உதவிட்டேன். இனி முடியாது எனக்கு வேற உன்னை பிடிச்சிருக்கு. நான் எப்படி நிறுத்துவேன்.” என்று கூறி ஒரே மடக்கில் ஜூஸை குடித்து முடித்து வைத்தான்.
“சோ… நிறுத்த மாட்ட?” என்று அவனை வெட்டும் பார்வை பார்த்தாள்.
“இங்க பாரு எனக்கு கல்யாணம் ஆகுமா ஆகாதானு எனக்கே டவுட் வருது. விடு கல்யாண தேதி வரை பூவா தலையா என்று த்ரில்லரோடவே இருக்கேன்.
என் கூட படிச்ச பசங்க எல்லாம் கலாய்க்கறாங்க. அவனவனுக்கு ஒரு குழந்தை. சிலருக்கு இரண்டு… நான் மட்டும் தான் சிங்கிளா சிங்கமாட்டும் சுத்திட்டு இருக்கேன்.
இப்ப சிங்கிள் லைப் போதும்னு பிக்ஸ் ஆகிட்டேன். சோ.. நிறுத்த மாட்டேன். அப்பறம் பொடிடப்பி சொல்லணும்னு மனசு துடிக்குது. கிழிஞ்ச ஜீனா இருந்தாலும் உனக்கு அம்சமா இருக்கு. நான் பில் பே பண்ணிட்டேன் ஃபலூடா காலி. அங்க இருக்கறவங்க எல்லாம் அடுத்து இங்க தான் லுக் விடுவாங்க. எங்கம்மாவை அத்தனு சொல்லு, அக்கா தங்கையை அண்ணினு சொல்லணும். முடிஞ்சா போறப்ப சொல்லிடு. இப்ப நான் எஸ் ஆகிடறேன் பாய். அப்பறம் உடனே கத்தாதே” என்றவன் போகும் போது கிழிந்திருந்த இடத்தில் கிள்ளி வைத்து சென்றான்.
“ஸ்ஆ” என்று தேய்த்தவள் மறைவாக இடமிருக்க அவன் செய்து சென்ற வேளை யாரும் அறியாது போயினர்.
இரு குடும்பமும் விடைப்பெற துவங்க, “போயிட்டு வர்றேன் மா. நல்லா சாப்பிட்டு உடம்பை தேற்று.” என்றதும் தலையாட்டினாள்.
“இன்னமும் என்ன மௌனமா தலையாட்டறிங்க. அம்மாவை அத்தனு சொல்லணும். இரண்டு நாத்தனார் அண்ணினு கூப்பிடணும் பழகிடுங்க” என்று கூற, ஷிவாலியோ இதுக்கு தான் கூறி சென்றானா? என்றிருந்தது.
“அட கவிதா… உன் தம்பி கூட தான் அங்கிள் அங்கிளுனு சொல்லறான் மாமா அத்தை ஆச்சினு சொல்ல வேண்டியது தானே. உன் தம்பியிடம் முதல்ல சொல்லு” என்று ஆதரவாய் பேச, ரிஷியோ போகும் போது அழைக்க இருந்தவன் அசடு வழிந்து நின்றான்.
இரு குடும்பமும் இரு திசையில் பயணிக்க ஆரம்பித்தனர். விரைவில் திருமணம் என்ற விழாவில் ஒன்றாக சங்கமித்து ஒரு குடும்பமாய் மாறிட அதற்கான கனவுகளை கண்டு பேசியபடி சென்றனர்.
ரிஷிவேந்தன் மட்டும் ‘அவளுக்கு என்ன பிடிக்கணும்னா என்ன பண்ணணும்? என்று தவித்தபடி பயணித்தான்.
-சட்னி சாஸ் தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்.

Rishi your state is very confused. Let’s see what will happen? Intresting sis.
un anasula irukuratha innaiku mulusa sollita rishi eni ava mudivu than theriyanum