ரி-ஷி-கா-14
🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁
இரண்டு பக்கம் எதிரெதிரே மேடை அமைத்து ஒன்றில் ஹரிகரன்-சந்தியா’ மற்றொன்றில் ரிஷிவேந்தன்-ஷிவாலி என்று நின்றியிருக்க, நடுவே இசையை மட்டும் முழக்கம் செய்து மெலடி பாடலை ஒலிக்க விட்டனர்
ஹரிகரன்-சந்தியா பக்கம் கூட்டம் குறைவாக என்றாலும் ராமமூர்த்தி தங்கள் சொந்த பந்தத்தினை அங்கு அனுப்பி கலந்து அமர வைத்தார்.
போட்டோ எடுக்கவும் அந்த மெத்தடையே உபயோகித்தார். சந்தியாவோ எதிரே ரிஷி ஷிவாலியை பார்த்து சலித்தாள்.
ஷிவாலி அவளுக்கு சிற்சில நகை அணிந்து நின்றாலும் அழகில் அக்காவை மிஞ்சியிருந்தாள். அது என்னவோ தன் உடையை விட தங்கை உடை பிடித்து அதிகம் விரும்பினாள் சந்தியா.
இந்த மேடையில் கீறியும் பாம்பும், எலியும் பூனையுமாக முகம் தூக்கி வைத்து ஷிவாலி சிடுசிடுவென நின்றிருந்தாள்.
“நாளைக்கு தானே ஓடப்போற இன்னிக்கு சிரியேன். மூஞ்சு ஏற்கனவே சகிக்காது. இதுல உற்றுனு இருந்த மாப்பிள்ளைக்கு ஏற்ற பொண்ணாப்பா இதுனு பேச்சு வரும்.
என்னை மாதிரி சிரிச்ச முகமா இரு.” என்று காதில் மெதுவாய் கூறவும், “ஆமா இளிச்சவாயன் மாதிரியா?” என்று கேட்டு விட்டு எதிரே அக்கா ஹரிகரன் மாமா என்று நின்றிருக்க, தங்கள் மேடைக்கு கீழே தாத்தா பாட்டி பார்வதி சிவனாக மலர்ந்து வருவோரிடம் பேசி மகிழ கண்டு அமைதியாய் அட்டேன்ஸன் ஸ்டேடடிஸ் என்று இருந்தாள்.
“எதுக்கு சிடுசிடுனு இருக்க பொடிடப்பி? உனக்கு பிடிச்ச மாதிரி லெகங்கா எடுத்து ரிசப்ஷன்ல போட்டிருக்க, கொஞ்சம் இடுப்பு மடிப்புனு தெரிந்தாலும் ஆபாசமா தெரியலை. எனக்கும் டைம் பாஸ் ஆகுது” என்றவனை கடுப்போடு திரும்பினாள்.
“பொடிடப்பி சொன்ன கத்திடுவேன். அப்பறம் இந்த ஹோல் மண்டபத்துல இவனை எனக்கு பிடிக்கலைனு சொல்லிட்டு இறங்கிடுவேன்.” என்று மிரட்டினாள்.
“அந்த கூட்டத்துல டார்க் ப்ளூ சேலைகட்டி ஒரு பொண்ணு அழுவுதே எதுக்கு தெரியுமா? என்னை கல்யாணம் பண்ணிக்க முடியாம லவ் பீல்ல அழுவுதாம்.
நீ சொல்லிட்டு போ. நான் அவளை மேடையில உட்கார வச்சி வாழ்க்கை கொடுக்கறேன்.” என்று கெத்தாக கூறவும், “சீ… உனக்காகவா அழறா? டேஸ்ட் இல்லாத பக்கி.” என்று பேச, அது மேடையில் மணமகள் அழகாய் கிசுகிசுத்து பேசுவதாகவே பதிந்தது.
இப்படியே வரவேற்பு முழுவதுமாய் சமரிட்டு முடிந்தது.
கவிதா தான் எப்பவும் போல “அது என்ன டா டிரஸ் எங்க வீட்ல இருந்து வந்தவங்க எல்லாம் இடுப்பு தெரியுதுனு கிசுகிசுத்து போனாங்க” என்றாள். உண்மையில் நல்ல நிறம் என்று சொல்லி சென்றது அவளுக்கு தம்பி தங்களை இனி கழட்டி விட்டு மனைவி காலடியே கதியென்று ஆகிடுவானோ என்ற அச்சத்தில் பேசினாள்.
சரிகாவோ “அண்ணா அண்ணியோட சேர்ந்து சாப்பிட்டு வர சொன்னாங்க” என்று கூறிவிட்டு அகன்றாள்.
ஷிவாலி பரோட்டா சப்பத்தி மட்டும் வாங்கிக் கொண்டு குருமாவை தொட்டு சாப்பிடவும், ரிஷியோ இட்லியும் இடியாப்பமும் சாப்பிட துவங்கினான்.
வருண் வாசு ஆளுக்கு ஒருபக்கம் உட்கார்ந்து சாப்பிட ஷிவாலியிடம் எதுவும் பேசவில்லை.
“எப்ப ஓடிப்போக போற? சொன்னா வசதியா இருக்கும்.” என்று என்று இட்லியை பிய்த்து சாம்பாரில் ஊறவைத்து சாப்பிட்டான்.
நுனி கையால் சப்பாத்தி பிய்த்து குருமா தொட்டு சாப்பிட்டவள், “என்ன வசதி? வீட்டுக்கு போய் ஒளிஞ்சுப்பியா” என்று இடக்காய் கேட்டாள்.
“சேசே… ஓடிப்போற நேரமா பார்த்து நானும் உன்னோட ஓடிவந்துடலாம்னு இருக்கேன்.” என்றதும், அவனை முறைத்து விட்டு திரும்பினாள்.
“கேஸ் வச்சிருக்கியா? இல்லை தரவா. பேசாம என் கார்டு எடுத்துட்டு போயிடு. மச் பெட்டர் செலவு எவ்ளோனாலும் பண்ணு. தேவைப்பட்டா என் வீட்ல கூட வந்து ஒளிஞ்சுக்கோ” என்றதும் அவனை கண்டு “நக்கலா பேசாதே டா. இதற்கெல்லாம் சேர்த்து வச்சி உன்னை கொல்லுவேன்.” என்றதும் தானாக கண்ணீர் வழிந்தது அவளுக்கு.
“ஏய்… குழம்புல காரம் அதிகமா? அழுவுற… இந்தா ரசகுல்லா சாப்பிடு. இல்லை இந்த பிரெட் அல்வா.” என்றதும் தட்டிவிட்டாள்.
“ஐஸ்க்ரீம் ட்ரை பண்ணறியா. இங்க பாரு… இங்க பாரு ஷிவாலி. ஏய்… நிஜமா தான் சொல்லறேன் கார்டு வச்சிக்கோ தப்பிச்சி போனா செலவுக்கு உதவும். இல்லைனாலும் வச்சிக்கோ.” என்று கொடுத்தான்.
அழுதவள் அதனை கையில் வைத்து அவனை விநோதமாக பார்த்து நின்றாள்.
அவளின் பர்ஸில் வைத்து விட்டு, “தேங்க்ஸ் தேவைப்பட்டா செலவுக்கு உபயோகப்படுத்திக்கறேன்” என்று கை அலம்ப சென்றாள்.
“ஏய்.. இரு நானும் வர்றேன்.” என்றவன் பின்னால் வந்தான்.
இருவரும் சேர்ந்து புகைப்படம் எடுக்கும் போது முன்பை விட தெளிவாய் நின்றாள்.
இரவு மண்டப அறையில் உறங்க ரிஷிக்கு உறக்கம் வராமல் தவித்தான்.
வேதாச்சலம் ரிஷி வேந்தன் அறைக்கு வந்து படுக்க, “என்னப்பா எல்லாம் சரியா இருக்கா. அங்க பேத்தி ஏசி வச்சிட்டா குளிருது. என்றதும் ரிஷி “அதனால என்ன தாத்தா இங்க தூங்குங்க” என்று தலையணை எடுத்து தர, இந்த மண்டபத்துல இரண்டு கல்யாணம் ஒன்னு மணமக்களுக்கு பிடிச்சி காதல் கல்யாணம். இன்னொன்னு மணமக்களுக்கு பிடிக்காத அரேஜ் மேரேஜ். இரண்டுமே நல்விதமா நடக்கும், இரண்டும் நிலைக்கும்.
ஆனா உன் மனசுக்கு கூடுதலா சந்தோஷமா இருப்ப” என்று ஆசிர்வாதம் அளித்தார்.
ரிஷிவேந்தனுக்கோ அது சரி அவ ஓடிப்போற ஆர்வத்துல இருக்கா. எப்படி காண்பிடன்ஸா சொல்லறார் என்றாலும் தாத்தா மனம் புண்படும்படியாக எதையும் மறுக்கவில்லை.
அடுத்த நாள் காலையில் அக்னி முன் இரு ஜோடிகளும் ஐயர் ஓதும் மந்திரத்தில் கர்ம சிரத்தையாய் அமர்ந்திருந்தனர்.
“என்ன ஓடிப் போகலை?” என்று அக்னியில் ஐயர் கொடுத்தவையை போட்டு கொண்டு மென்குரலில் கேட்டான்.
“நான் தூங்கிட்டா நடுவுல எழுந்துக்க மாட்டேன். அதனால பிளான் சொதப்பிடுச்சு” என்று கைக்குட்டையால் மூக்கை உறிந்தாள்.
“கல்யாணம் தான் கட்டிட்டுகிட்டு ஓடிப்போலாமா?” என்று கேட்டு வைக்க, ஷிவாலியோ, இந்த கடுப்புலயும் காமெடி பண்ணற பாரு. சப்பா… முடியலை.” என்றவள் கொட்டாவி விடுத்து நின்றாள்.
“கொட்டாவியாவிடுற, நல்லா தூங்கின தானே?” என்று கேட்டான்.
“இல்லைனா தூங்க விடுவியா போவியா… நானே என் லைப் தடிமாடு கையில போகுதேனு கவலையில இருக்கேன்.” என்று அமைதியாய் இருந்தாள்.
“பொடிடப்பி” என்று கூறிவிட்டு ஐயரை பார்க்க, அவரோ “லவ் மேரேஜ் பண்ணறேள் அதுக்காக இப்படியா பேசிட்டே இருக்கேள்.” என்று கூறினார்.
“சார்…. லவ் மேரேஜ் அந்த ஜோடி. நாங்க அரேன்ஜ் மேரேஜ்” என்று பிரித்து தெளிவாக்கினான்.
“அப்படியா?” என்று சந்தேகித்து இரண்டு ஜோடியையும் பார்த்து “நம்புற மாதிரி இல்லை. அவ செவனேனு இருக்கா. நீயும் இந்த அம்பியும் தான் தொனதொனனு பேசிண்டே இருக்கேள். நான் உங்களை இல்லை லவ் மேரேஜூனு நினைச்சேன். நன்னா பண்றேன்.” என்று மலர்களும் மஞ்சள் அரிசியும் கலந்த தட்டை கொடுத்து அனைவரிடமும் ஆதிர்வாதம் பெற்று வர அனுப்பி வைத்தார்.
கொஞ்ச நேரத்தில் மங்கல நாத இசையில் கெட்டிமேள கொட்ட, ரிஷிவேந்தன் ஷிவாலி கழுத்தில் தங்க தாலியை அணிவித்தான்.
குங்கும் சூட, அவளை அணைத்து பிடித்திட, தானாக ஷிவாலி அவனை நோக்கி பார்வையை செலுத்தினாள்.
செஞ்சாந்து வைத்து முடித்து, கண்கள் கலக்க பார்வை பரிமாற்றங்கள் செய்தனர்.
அதன் பின் ஷிவாலி முகம் வாடி போனது. இரண்டு மணி நேர போட்டோ உணவு உறவினர் போதாதற்கு உடையோடு அலங்கரித்த நகைகள் என்றதும் ஷிவாலி எரிந்து விழுந்தாள்.
வீட்டுக்கு வந்து பட்டுபுடவை கசகசக்க ரிஷிவேந்தனோடு நின்றாள்.
பட்டுவேஷ்டி சட்டையில் கழுத்தில் தங்க செயின் மார்பில் புரள, கன்னக்குழி சிரிப்பில் அவளது மகிழ்ச்சி மொத்தமாய் புதைந்து போனது போன்றதொரு வலி.
எல்லாம் முடிந்ததோ? இனி தப்பிக்கவோ ஓடுவதோ இயலாத ஒன்றாகிவிட்டதே. என்று கிடைத்த தனிமையில் வருந்தினாள்.
“ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது. ரிஷிவேந்தன் வாட்சிங் டியர். இந்தா… நீ காலையில இருந்து எதுவும் சாப்பிடலையாம் மனோகரி பாட்டி சொன்னாங்க. இதை குடி” என்று மில்க் ஷேக்கை நீட்டினான்.
“எனக்கு ஒன்னும் வேண்டாம் போடா” என்று அதனை தட்டி விட, சரியாய் சரண்யா வரவும் காலடியில் விழுந்தது.
“என்ன என்ன மில்க் ஷேக் இந்த நேரமா… ஏன்டா சாப்பிட கூட்டிட்டு போ” என்று அனுப்பினார்.
“வேண்டாம் வேண்டாம் ரூமுக்கு கொண்டு வர சொல்லறேன். சரிகா.. சரிகா..” என்று அழைக்க சென்றார்.
“இங்க பாரு நான் உங்க வீட்ல வர்றவங்களுக்கு ரெஸ்பெக்ட் தர்றேன்ல… அந்த கர்டென்ஸிக்காவது என் அம்மா அப்பாவுக்கு மரியாதை தா. எங்க அக்கா கவிதாவுக்கும், சரிகா சின்ன பொண்ணு கொடுக்கலைனா கூட பரவாயில்லை.” என்று கூறவும் போனை வைத்து கையில் விளையாடி காலாட்டி அமர்ந்தாள்.
சரிகா கதவை தட்டி வந்து, “அம்மா கொடுக்க சொன்னாங்க” என்று இருவரிடமும் தட்டை நீட்டவும், “தேங்க்யூ” என்று கூறினாள்.
வருண் வாசு எங்க?” என்று ரிஷி கேட்க “அவங்க ஒரே ஆட்டம் அண்ணா.” என்று கூறி வெளியேறினாள்.
ஷிவாலி வேகமாய் பாதி சாப்பிட்டு முடிக்க, ரிஷி சாப்பிடாமல் சாதத்தினை கையிலேந்தி அவளை உறுத்து விழித்தான்.
“நமக்கு மேரேஜ் ஆகிடுச்சு ஷிவாலி” என்று கூறவும் சாதத்தினை விழுங்கி விட்டு, “ஒரு செயின் என்னோட லைப்பை ஜட்ஜ் பண்ண விடமாட்டேன்.” என்றவள் கை அலம்ப சென்றாள்.
“அப்ப ஒரு கிஸ், ஒரு ஹக் ஒரு.. தீண்டல் சீண்டல் இப்படி ஒவ்வொன்னும் உன்னோட லைப்பை ஜட்ஜ் பண்ணாது தானே. கெட்ரெடி” என்று அவள் தனியாக சாப்பிட வைத்த குலோப்ஜாமூனை அவள் கையிலிருந்து அப்படியே எடுத்து அவனுக்கு ஊட்டி விடும் படியாக செய்து விழுங்கினான்.
-சட்னி சாஸ் அலைப்பறைகள் தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்.
