ரி-ஷி-வா-18
🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁
ஒரே மெத்தையில் ரிஷியோடு உறங்க, எரிச்சலாய் வந்தது. ஆனால் ரிஷி மாலையிலிருந்து அமைதியாக இருப்பது கருத்தில் பதிய, ஷிவாலி அமைதியானவனிடம் என்ன வம்பு செய்வாள்.
அதனால் அமைதியாகவே சாப்பிட்டு பேசாமல் எப்பொழுதும் போல இருந்து கொண்டாள்.
அர்த்த ராத்திரி எழுந்தவன் உறங்க மனமின்றி, ஷிவாலி கைகளை பிடித்து கன்னத்தில் வைத்துக் கொண்டான்.
யாரோ தன்னிரு கைகளை இறுக பற்றி கொள்வதை உணர்ந்து அரை உறக்கத்தில் எழவும், தன் கையை பிடித்து வைத்ததிருப்பது ரிஷி என்றதும் விலுக்கென்று உருவினாள்.
“என்ன பண்ணற?” என்று கண்கள் கசக்கி மினி லைட்டை போட்டாள்.
தற்போது தான் உறங்க ஆரம்பித்த ரிஷிவேந்தனோ, “கெட்ட கனவா வருது ஷிவ். தூக்கமே வரலை… எப்பவும் இப்படி இருந்தா அம்மாவோட ஹால்ல படுத்துப்பேன். இங்க புது இடம் பாரு, அம்மாவும் இல்லை, அதனால உன் கையை பிடிச்சி தூங்க ட்ரை பண்ணினேன். மச் பெட்டர் தூக்கம் வந்துச்சு” என்று ரிஷிவேந்தன் கண்ணை அரை உறக்கத்தோடு கூறி அவள் கையை பற்றி கொள்ள முயன்றான்.
அவனுக்கு அந்த நேரம் தாய் அரவணைப்பாவது அவளிடமிருந்து எதிர்பார்த்தான். ஆனால் அவனின் மனதை புரிந்து அரவணைக்க அவளுக்கு வயதும் இல்லை பக்குவமும் இல்லை. சிறு பெண் அல்லவா.
“ஏய்.ய்ய்.. என்ன பண்ணற, இங்க பாரு ரிஷி, இந்த அத்துமீறல் எல்லாம் பண்ணாதே.” என்று அவனிடமிருந்து திரும்ப கையை உருவினாள்.
பெண்ணின் கைகள் காமத்திற்கு மட்டும் என்று முடிவு செய்தவளோ, அவன் தன்னிடம் அத்துமீறுவதாக முடிவெடுத்திருந்தாள். தாயும் அரவணைப்பாளென இனி தானே அறிந்து நடக்க அனுபவம் கற்று தரும்.
“ஷிவ்… எனக்கு என்னென்னவோ தோணுது. ப்ளிஸ்… என் கையை மட்டும் பிடிச்சிக்கோ” என்றவனிடம் “விளையாடறியா என்னென்னவோ தோணும் டா.. தோணும். முத்தம் வச்சப்பவே நீ சரியில்லை” என்று அவன் மறந்தவையை நினைவுப்படுத்தினாள்.
ரிஷியோ, முத்தம் நினைவு வந்ததும் அவள் கையை விடுவித்து “ஐ அம் சாரி… ஐ நீட் கிஸ்” என்றவன் முத்தமிட ஆரம்பித்தான்.
அவனுக்கு மனதில் ஷிவ் எண்ணங்கள் மட்டும் ஆக்கிரமிக்க இப்படி செய்து விட மனமானது நிம்மதியுற்றது.
முனங்கலாய் ஷிவாலி சத்தம் கேட்டாலும், ரிஷியின் வலிய கரத்தில் அடங்கிவிட்டாள்.
அடுத்த நாள் காலை எழுந்தப்போது ரிஷி தலையை அழுத்தமாய் கோதி எழுந்தான்.
“அச்சச்சோ பொடிடப்பி எழுந்ததும் என்ன திட்ட ஆரம்பிக்கலாம். நாம சேஃப்பா தாத்தா கூட ஓடிடணும்” என்று குளிக்க ஆரம்பித்து வெளியேறிட, ஷிவாலி எழுந்துக்கவேயில்லை. மனோகரி வந்து காபி கொடுத்து எழுப்பியதும் தான் நேரம் பார்த்தாள்.
ரிஷி இல்லாமல் போகவும், “அவன் எங்க பாட்டி?” என்று கேட்டதும், “வீட்டுக்காரரை அவன் இவன்னு சொல்லக்கூடாது டி” என்று அதட்டினார்.
“மனோ கட்டிக்கிட்ட புருஷனை நாதா பிரபு என்றது உங்க அடிமைத்தனம். டேய் புருஷா மடையா அடேய் அவன் இவன் என்றது தான் எங்க ஸ்டெயில்” என்றவள் காபி பருகவும், மனோகரி சிரித்து கொண்டே சென்று விட்டார்.
முன்பை விட கணவன் என்றாவது பேசிவிட்டாளே என்ற ஆனந்தம் அது.
ரிஷி மாடியில் வேதாச்சலத்தோடு நடக்க செய்தான்.
“இவ என்ன தாத்தா முட்செடியா வச்சிருக்கா. பூ பூக்கிற செடியோ கண்ணுக்கு அழகா வைக்க மாட்டாளா?” என்று கேட்டு பேசிக் கொண்டிருந்தான்.
“இந்த இடைப்பட்ட நாளில் என் பேத்தி பத்தி என்ன புரிஞ்சிக்கிட்ட ரிஷி?” என்றவரிடம் சூரியன் உதித்து மேலெழுந்த தடத்தை வெறித்து பார்த்து தாடையில் ஆள்காட்டி விரலால் தேய்த்து “ரொம்ப நல்ல பொண்ணு தாத்தா. இந்த காலத்துல உங்க மேலயும் பாட்டி மேலயும் அன்பு வச்சிருக்கா. நீங்க அதை மிஸ்யூஸ் பண்ணிட்டிங்க. நீங்க அவளுக்கு என்னை விட ஏஜ் கம்மியா ஒருத்தனை கட்டி வச்சிருக்கலாம்.
அவளுக்கு மாமா மேல பயமெல்லாம் இல்லை. அத்தையோட துடப்பத்தை கண்டு பயம் இருக்கு. கல்யாணம் பத்தி பெரிசா அபிப்ராயம் இதுவரை யோசித்து இருக்க மாட்டா தாத்தா.
ஏஜை வச்சி கொஞ்சம் அதிகமாகவே பயந்துயிருக்கா. ஆனா என்னை அவ வெறுக்கவும் இல்லை. என்னை அக்சப்ட் பண்ண ட்ரை பண்ணறா. எனக்கு என்னவோ உங்க பேத்தி கொஞ்சம் சரியா ட்யூன் பண்ணினா போதும்” என்றான்.
வேதாச்சலமோ “உண்மை தான் திருமணம் பற்றி எந்த எண்ணமும் அவளுக்கு இல்லை. அக்கா மேரேஜ் கூட யோசிக்கலை. சடனா பொண்ணு பார்க்க வந்திருக்காங்கனு கேஷ்வலா இருந்தா. அடுத்து அவளுக்கு நீ என்று கை காட்டவும் பத்ரகாளியா நின்னுட்டா.
தேமேனு இருந்தவளுக்கு சட்டுனு பரிப்போன சுதந்திரம். உன்னையும் அவளையும் பார்த்தா வயசு வித்தியாசம் தெரியாதுபா. நீ தான் சொல்லிட்டே இருக்க. அவ அதை பத்தி பேசின மாதிரி படலை” என்றதும் தான் ஷிவாலி முதல் நாள் தவிர அப்படியொன்றும் அதிகம் புலம்பாதது கருத்தில் அகப்பட்டது.
அவன் யோசனையில் இருந்திட, வேதாச்சலம் கீழே இறங்கியிருந்தார்.
அவனும் இறங்கும் நேரம் ஷிவாலி இழுக்க, “ஏய் தாத்தா பார்க்க போறார் விடுடி” என்று ஓடப்பார்த்தான்.
“பார்க்கட்டும் கட்டி வச்சார் தானே. ஏன்டா இப்படி பண்ணின.” என்று பின்னால் தள்ளி விட்டபடியே பேசினாள்.
“ஒழுங்கா பேசு ஷிவ். நான் ஒன்னும் பண்ணலை. முத்தம் மட்டும் கொடுத்தேன். கேட்கறவங்க தப்பா எடுத்துக்க போறாங்க.” என்றான் சில்மிஷப் பேச்சுடன்.
“மண்ணங்கட்டி… என்னிடம் பர்மிஷன் கேட்டியா. நீயா இரண்டாவது முறை அத்துமீறுற, நான் என்ன உன் வீட்டு நாய்குட்டியா?” என்று தள்ள, “ஷிவ் மாடி எட்ஜஸ் தள்ளிவிட்டா விழுந்துடுவேன். நான் பேசறதை ஒழுங்கா கேளு.” என்று கூறி மௌவுனமானான்.
ஷிவாலியும் அவனை கண்டு அலட்தியப்படுத்தி திரும்ப, “உங்க ஜென்ரேஷன் நின்னு கேட்கற அளவுக்கு பொறுமையில்லையா?” என்றதும் படக்கென திரும்பி “என்னடா பொறுமை இல்லை. உன்னை விட அதிகமாவே பொறுமை பொறுப்பு விளக்கெண்ணெய் இருக்கு. சும்மா நல்லவன்னு பேசி கடுப்படிக்காதே” என்று சீறினாள்.
“என்னை வேண்டாம்னா நீயே உங்க அப்பா தாத்தாவிடம் மறுத்து பேசயிருக்கலாமே ஷிவ் ஏன் பண்ணலை?” என்று கேட்டான்.
“அது..தாத்தாவுக்கு உடம்பு சரியில்லை. கொஞ்சம் பயம் அவருக்கு ஏதாவது ஆச்சுனா” என்று கூறினாள்.
“ரைட்… அப்ப உன்னோட செல்பிஷ். உன்னால உங்க வீட்டுக்கு எந்த கெடுதலும் வரக்கூடாது அது தானே.
எனக்கு சுயநலம் இருக்க கூடாதா. எனக்கு மேரேஜாகணும்னு. இதுல என்ன தப்பு.
அப்ப கூட உங்கக்கா காதலிக்கறானு சொல்லி உங்க வீட்ல பேசி அவ காதலை பதமா சேர்த்து வச்சிருக்கேன்.
இதே ஏஜ் டிபரெண்ட் மட்டும் உனக்கு உதைக்கலைனா நீ என்னை விரும்பிருப்ப ஷிவ்.” என்றான்.
அவனை முறைத்து விட்டு “நினைப்பு தான்” என்று சுவர் திண்டில் சாய்ந்தாள்.
“ட்ரூ ஷிவ்… நான் கிஸ் பண்ணினப்ப கோ ஆப்ரேட் பண்ணின?” என்றதும் தலையை சிலுப்பி கொண்டு அவன் பக்கம் பாராது திரும்பினாள்.
முதுகு காட்டி நின்றவள் கையை கட்டி “எஸ்… சோ வாட். அது பிடிச்சிருந்தது. என்ஜாய் பண்ணினேன்.” என்று வேகநடையிட்டாள்
“அது ஜஸ்ட் கெமிஸ்ட்ரி ஹார்மோன் சேஞ்சஸ், பையன் என்றதால வந்தது” என்று சொல்லி செல்ல துடித்தாள்.
“பையன் என்றதால இல்லை. நான் உன் ஹப்பி என்றதால. நீ வேண்டுமின்னா ட்ரை பண்ணி பாரு.” என்று நூறுசதம் நம்பிக்கையாய் கூறினான்.
“யாரையும் கிஸ் பண்ண மாட்டேனு நினைக்காதே.” என்று வீம்பாய் மொழிந்தாள்.
“பண்ணு… பண்ணி பாரு… என்னை மாதிரி ஒருத்தனை முதல்ல நெருங்க விடறியானு பாரு. நான் வேற மத்தவங்க வேறனு தானா புரியும்.” என்றவன் செடிகளில் கைகளை அலசிவிட்டு, “ஒரு பூ பறிச்சு லவ் எக்ஸ்போஸு பண்ணலாம்னா எல்லாம் முட்செடி. அடுத்த தடவை பாரு எல்லாம் கலர் புல்லா மாற்றி விடறேன்.” என்றவன் கீழிறங்கினான்.
சட்டென என்ன தோன்றியதோ மேலேயெறி வந்தான்.
அதேயிடத்தில் ஷிவாலி யோசனைவயப்பட்டு நின்றிருந்தாள்.
“அப்பறம் இன்னொன்னு சொல்ல மறந்துட்டேன். உன்னை கல்யாணம் பண்ண மற்றொரு ரீசன் என்னோட எக்ஸ் லவ்வர்.” என்றதும் தன்னை தேடி வந்து முத்தமிட போகின்றான் என்ற எண்ணத்தில் தீயை ஊற்றியிருந்தான்.
“பார்க்ல சிவனேனு கிரிக்கேட் விளையாடிட்டு இருந்தேன். அன்னிக்கு என்னை தேடி வந்து வருணும் வாசுவையும் பார்த்து உன் குழந்தைகளானு கேட்டா, இல்லை அக்கா பசங்கனு சொன்னேன். இளக்காரமா இன்னும் அவளை நினைச்சி மேரேஜ் பண்ணலைனு சீனை உருவாக்கி பேசினா.
அது கூட ஓகே. பட் எனக்கு எல்லாம் இனி மேரேஜ் நடக்கவே நடக்காதுனு உசுப்பேத்தினா பாரு, எரிச்சலா வந்தது.
இதுல ஒரு நாள் முன்ன தான் சந்தியாவை பொண்ணு பார்க்க வந்து சொதப்பியதா, கோபத்தோட விளையாடுற இன்ட்ரஸ்டே போச்சு.
வருணும் வாசுவும் பாலை எடுக்க போனவனும் வந்துட்டாங்க. அவளும் இளப்பமா சிரிச்சிட்டே போயிட்டா. விளையாட பிடிக்கலைனு வருண் வாசுவிடம் சொல்ல அதே நேரம் கவிதா அக்கா வந்தா.
உங்கப்பா தாத்தா வந்திருப்பதா சொன்னதும் இதென்னடா அவங்க எதுக்கு வந்தாங்கனு குழப்பமா வந்தேன்.
அவங்க உன்னை கட்டிக்க கேட்டதும், அடுத்த முகூர்த்தத்துலயே கல்யாணம் பண்ணி வானதி மூஞ்சில கரிபூசனும்னு தான் தோனுச்சு. அதனால தான் உன்னை கல்யாணம் பண்ண ஓகே சொன்னேன்.
ஏஜ் டிபரெண்ட் பத்தி அப்ப தெரியாது. தெரிஞ்சப்ப உங்க தாத்தாவிடம் சொன்னேன். அவர் தான் என்னை கன்வின்ஸ் பண்ணிட்டார். உனக்கு என்னை” என்று கூறவும் ஷிவாலியோ தலையை உலுக்கி கொண்டு ரிஷியருகே வந்தாள்.
“என்னடா பேசற… நீ ஏற்கனவே ஒருத்தியை லவ் பண்ணிருக்கியா? என்னை மேரேஜ் பண்ணறவனோட ஹார்ட் எனக்கு மட்டும் தான் வேண்டும்னு கனவெல்லாம் கண்டேன். தடிமாடே… அதையும் உடைச்சிட்டியா” என்று கதற, பின்னால் சென்றவன் ஒரு பூந்தொட்டியை உடைத்து விட்டு விழித்தான்.
இவன் இதயம் அவளுக்கு மட்டும் என்ற வார்த்தை அவனை திகைக்க வைத்து சந்தோஷத்தில் மிதக்க வைத்தது. அவளுக்கு தான் ஏதோ ஏமாற்றம் தாக்கி சென்றது.
அவன் மகிழ்ச்சியில் திளைத்த நேரம் அவள் இறங்கி வீட்டிற்குள் சென்றதை தாமதமாக உணர்ந்து ஓடினான்.
கதவு மூடியிருக்க, “ஷிவாலி… கதவை திற” என்றதும், “முடியாது போடா” என்ற கோபக்குரல் வரவும் யாருமில்லையென சோபாவில் அமைதியாக உட்கார்ந்தான்.
சிறிது நேரம் கழித்து வேதாச்சலத்தோடு ரிஷி பேசும் சத்தம் கேட்டதும், ‘தடிமாடு வந்து சமாதானம் செய்யறானா ஹாயா தாத்தா கூட கதை பேசறான்.’ என்று பொறுமியவளுக்கு இத்தனை நாளாய் அவனை திட்டியது மறந்தே போனது.
நகத்தை கடித்தபடி தீவிரமாய் யோசனையில் சுழன்றாள்.
மதியம் ஆனதும் அவளாக கதவை திறந்து வந்து சாப்பிடவும் ரிஷி தழுவும் பார்வையை வீச, ‘இந்த பார்வை என்னை மட்டும் பார்க்கலை. இதுக்கு முன்ன ஒருத்தியையும் பார்த்திருக்கு’ என்றது தான் மூளைக்குள் வண்டாய் ஓடியது.
அதன் பின் மனோகரியோடு மடியில் படுத்து கொண்டாள்.
ஆபிஸ் கால் வரவும் ரிஷி லேப்டாபை எடுத்து ஹெட்செட்டோடு பேச ஆரம்பித்து விட்டான். பின்னர் வீட்டிலிருக்க பிடிக்காமல் நர்சரி சென்றவன் பூத்து குலுங்கும் செடியோடு வந்தான். மாடியில் தான் உடைத்த செடிக்கு பதிலாக அதனை வைத்து விட்டு நிமிர, அங்கே ஷிவாலி கையை கட்டி நின்றாள்.
“இந்த ஒரு ஹார்ட் ஒரு காதல் அப்படி தான டா உங்க லைப். இப்ப எங்கிருந்து இன்னொரு லவ்?” என்றதும் ரிஷியோ “நீ என்னை லவ் பண்ணறியா?” என்று அருகே வர இரண்டடி பின் நகர்ந்து “இல்லை… இல்லை” என்றாள் ஆணித்தரமாக.
“நான் அப்படியே பழைய லவ்வோட தாடி வைக்க இருக்க விருப்பமில்லை ஷிவ். என்னோட அப்பா அம்மா அக்கா தங்கை குட்டி பசங்க இவங்களை விட காதல் பெருசா படலை.
புரியலையா…. எனக்கு இருபத்திரெண்டுலயே லவ் புட்டுக்கிச்சு. வானதிக்கு கல்யாணம் பேச்சு எடுத்தப்ப என்னிடம் வந்து பேசினா. ஒரே காலேஜ் ஒரே ஏரியா, சேம் பஸ் அதனால பழக்கம். பட் அக்காவுக்கு கல்யாணம் ஆகாம என்னால மேரேஜ் பண்ண முடியாது என்பதை விளக்கினேன்.
அவ சிட்டுவேஷன் அவங்க வீட்ல கல்யாணம் பண்ணி வைக்க ட்ரை பண்ணினாங்க. மேற்படிப்பு படி.. அதுக்குள்ள அக்காவுக்கு மேரேஜ் முடிச்சிட்டு பேசறேன்னு சொன்னேன். அவளும் ஓகேனு மேற்படிப்பு படிச்சா.
பட்… படிச்சதும் ஒரு ஏழாம் அறிவு அவளுக்குள் திறந்துடுச்சு.
அக்கா தங்கை அம்மா அப்பா ஜாயிண்ட் பேமிலி பிடிக்கலைனு சொன்னா. அக்கா கன்சீவ் ஆனதும் வளைகாப்பு பிரசவம்னு செலவழிக்கவும் முகம் சுழிச்சா. வருண் வாசுவுக்கு ஏதாவது வாங்கி தந்தா காசை கரியாக்கறியானு பேசினா. சம் டைம் இரிடேட்டா இருந்தது. நீ நினைக்கிற மாதிரி தனியா போய் பேசியோ தியேட்டர் பார்க் பீச்னு பிரைவேட் பிளேஸ் எல்லாம் போகலை. எப்பவும் பஸ் ஸ்டாப் தான். மிஞ்சி மிஞ்சி போனா நாடார் கடை போன் தான்.” என்றதும் ஷிவாலி அவனை கதை சொல்லு டா மகனே உன்னை அப்பறம் வச்சிக்கறேன் என்ற ரீதியில் பார்த்து வைத்தாள்.
“ஒரு நாள் அம்மா அப்பாவோட தனியா, அக்காவுக்கு தங்கைக்கு தெரியாம நாங்க மூன்று பேரும் போய் வானதி வீட்ல பொண்ணு கேட்டோம். முதல்ல பிடிக்காம பேசியவர் என்னை பார்த்தும் பிடிச்சது.
தனி குடித்தனம் வைக்கணும்னு அவங்க அப்பா பேசினார். அப்பா தலையாட்டினார். என்னால ஏற்க முடியலை. அப்பா அம்மா கூடவே இருப்பாங்கனு சொன்னேன்.
அவ யோசிச்சா. இதுக்கு நடுவுல அவளோட படிப்புக்கு ஏற்ற மாதிரி வேலை பணம் என்று கெத்தா இருந்தா. அதனாலயோ என்னவோ உதாசினம் அதிகமாச்சு.
காதலிக்கறேன்னு சொன்னது அவ தான். என்னை கல்யாணம் பண்ணி உன்னோடவே கூட்டிட்டு போ ரிஷினு சொன்னதும் அவ தான்.
இந்த பொண்ணுங்க வேலைக்கு போனா சிலருக்கு கொம்பு முளைக்குமாம் அவளுக்கு முளைச்சது. அழகா இருக்கேன் நீ வேண்டாம்னா கூட அடுத்த மாதம் கட்டிக்க ஆள் ரெடினு பேசினா.
அப்ப தான் தெரிந்தது வீட்ல அவளுக்கு டாக்டர் மாப்பிள்ளை வந்து பார்த்துட்டு போனது. பொண்ணு பார்க்க எப்படி விட்டா? சந்தியா மாதிரி போர்ஸூடுனு நினைச்சேன். பட் அவ கோ-ஓர்க்கர் அபிராமினு ஒருத்தங்க சொன்னாங்க கொஞ்ச நாளா பேசி பழகி இவளும் ஓகே சொன்னது தெரிய வந்தது. ஆமா அவங்க அப்பா ரிலேட்டிவ்ல பார்த்து பழக விட்டிருக்கார். வில்லனா மாறாமலே பிரிக்க சதி அதுனு தெரியலை அவளுக்கு.
முதல்ல நான் பார்த்த வானதி என்னிடம் வந்து வெட்கப்பட்டு காதலை சொல்லி என்னிடம் அன்பை தேடினவள். நான் அதுக்கு பிறகு பார்த்த வானதி வேலைக்கு போய் உலகத்தை அறிந்து மனிதர்களை விட பணமும் கர்வமும் ஒரு கிரேட் பொஷிஷன் கண்ட வானதி.
டாக்டர்.கமலநாதனோட மனைவியா இப்ப எப்பவாது பார்க்கறேன்.
என்னவோ நான் அவளை மிஸ் பண்ணி தான் தாடி வைக்கிறேன்னு நினைப்பு. அது டிரெண்டிங்னு சொன்னா நம்ப மாட்டறா.
அக்கா குழந்தை பிரசவம், சரிகா மேரேஜ், வீட்டு லோன்னு நான் பிஸியா இருக்க, என்னவோ அவளை நினைச்சி நினைச்சி மேரேஜ் பண்ணலைனும், இப்ப ஏஜ் அதிகமானதால பொண்ணு கிடைக்கலைனு அவளா தப்பா யூகிச்சுக்கிட்டு சுத்துற முட்டாள் மேதாவி.
அதனால தான் நேத்து அவ வீட்டு பக்கமா கூட்டிட்டு உன்னை சுத்தி கூட்டிட்டு வந்தேன். நீ கூட என் முதுகு தோள்ல சாய்ந்து கெஞ்சிட்டே வந்தியே அப்போ” என்றவனை கண்டு, ஷிவாலி அவனின் கன்னத்தில் அறைந்து நின்றாள்.
-சட்னி சாஸ் அலைப்பறைகள்
-பிரவீணா தங்கராஜ்.

nee unamiya love pani iruka aana ava una venam sollitu poita sila ponnunga apadi than panam velai nu poita mariduvanga antha mari oru sila vishayam puiryama irukuthunga
Eva aduthu yena Ada poralo
Very intresting sis