ரி-ஷி-வா-19
🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁
“எதுக்கு டி அடிச்ச? ஒன்பது வயசு பெரியவனை அடிக்கலாமா?” என்று சுற்றும் முற்றும் பார்த்தான்.
“அடிக்க மட்டும் இல்லை கொல்லணும். தண்ணி அடிக்கிற, காதலிச்சிருக்க, இதுல ஊமக்குசும்பாட்டும் என் மேல சாஸ் கொட்டின.
உன்னை போய் தாத்தா நல்லவன் சொல்லறாரே அதான் டா தாங்க முடியலை. இங்க நான் என்னவோ திமிர் பிடிச்சவளாட்டும் பெயரெடுக்கறேன்.
எவளையோ வெறுப்பேத்த நான் தான் கிடைச்சேனா.” என்றதும் ரிஷி வேந்தன் சிரித்தான்.
“நான் அப்படி என்னலை ஷிவ். வர்ற வழியும் அதுதான். அவளா பார்த்துட்டா நானும் சீன் போட்டேன். என் பொடிடப்பி, சாஸ், யம்மி பெப்பரோனி பீட்சா இதுல தப்பு என்னடி” என்று கொஞ்சவும் ஷிவாலி அவன் வாங்கி வந்த ரோஜா மணம் வீச அவனையும் இரசித்தாள்.
“உனக்கு என்ன என் ஹார்ட் காலியா இருந்த இடத்துல தான் நீ டெண்ட் கட்டி பங்காள கட்டிட்ட,” என்று பேசவும் ஷிவாலியோ பூவை பறித்து அவன் தலையிலேயே அடித்து சென்றாள்.
பூவை கொய்தியா? என் மனதை கொய்தியா? என்று புரிபடாமல் பின்னால் சென்றான்.
“காரமா இருந்தா கூட பரவாயில்லை கிஸ்ஸடிக்கணும் போல இருக்கே. நேத்து எந்த நினைவும் உன்னை தாண்டி வரக்கூடாது கையை பிடிக்க ஆசைப்பட்டேன். இப்ப கையை பிடிக்கணுமென்ற எண்ணம் என்னவோ சுனாமி மாதிரி மனசுகுள்ள அடிக்குது.” என்றவன் புருவமேற்றி செய்யட்டுமா என்பது போல வினா தொடுத்து பதிலுக்கு காத்திருந்தான்.
“நோ… நோ… எனக்கு தூக்கம் வருது. ஏதாவது சொல்லி கிட்ட நெருங்கின, வீடே புல்டவுசர் விட்டு ஏத்துற மாதிரி கத்துவேன்.” என்றவள் அறைக்குள் சென்று அடைகாத்தாள்.
ரிஷிக்கோ வானதி பற்றி பேசியதில் விடைப்பெற்று போனது அவன் வருத்தங்கள். மனம் முழுக்க ஷிவாலி என்ற பூச்சென்டு வாசம் உணர்ந்தவன், உறங்க அறைக்குள் வரவும் ஷிவாலி முட்டி மடக்கி கட்டி அமர்ந்து இருந்தாள்.
ஏதோ யோசிக்கின்றாளென புரிந்ததும், “தப்பா எதுவும் யோசிக்காதே பொடிடப்பி, காதலிச்சதை சொல்லி உன்னிடம் உண்மையா இருக்க தான் ஆசைப்பட்டேன். உன்னை காயப்படுத்தறதுக்கு இல்லை.” என்றான்.
அவளோ நிதானமாக “நானும் லவ் பண்ணினேன்னு சொன்னா என்ன பண்ணுவ?” என்றதும் ரிஷிவேந்தன் இதயம் துடிக்க மறந்தது.
“ஷிவ்… முதல்லயே சொல்லியிருந்த நீ விரும்பறவனை சேர்த்து வச்சிருப்பேன்.” என்றவன் பெரிய காதல் கோட்டையே இடிந்து விழுந்த வலியில் வருந்தினான்.
இரண்டு நிமிடம் கழித்து, “இப்பவும் குடிமுழுகலை.. யாருனு சொல்லு ஷிவ். நான் கல்யாணம் பண்ணி வைக்கிறேன். டிவோர்ஸ் தர்றேன்.” என்றான் வலியோடு.
“ஒரு தியாக மயிரும் செய்ய வேண்டாம். நானே பிரேக் அப் பண்ணிட்டேன்.” என்று கூலாக கூறினாள்.
“கஷ்டமா இருக்குமே ஷிவ். இல்லை…. முதல்ல கஷ்டமா இருக்கும். பிறவு பழகிடும்… இதுவும் கடந்து போகும்னு மாறிடும்னு சொல்ல வந்தேன். ஆமா எப்ப பிரேக்அப் ஆச்சு. ரீசண்டாவா? ரியலி சாரி ஷிவ். இனி விளையாட மாட்டேன். உனக்கான ஸ்பேஸ்ல தலையிட மாட்டேன்.” என்றான் ரிஷி.
“ரொம்ப பீலிங் டாக் விடாதே. இது என்னோட இரண்டாவது பிரேக்கப். முதல்ல பஸ்ட் இயர் படிக்கிறப்ப ரிச்சார்ட் என்ற கிறிஸ்டியன் பையனை லவ் பண்ணினேன். அப்ப ஒரு தடவை பிரேக் அப் ஆகிடுச்சு.
தேர்ட் இயர்ல அகைன் ரூபனை லவ் பண்ணினேன். அதுவும் பிஃப்த் செம் ஆரம்பம் அப்பவே இரண்டாவது தடவை பிரேக் அப் பண்ணிட்டேன்.
சோ காதலிச்சு அது ஃபெயிலியர் ஆனதுக்கு கண்ணீர் விட எனக்கு நேரமில்லை. அதுவும் இல்லாம என்னோட கேரக்டருக்கு ஒத்துவராதவனை நினைச்சி நினைச்சி பீல் பண்ண நான் ஒன்னும் நீ இல்லை.” என்று கூறிவிட்டு படுக்க ஆரம்பித்தாள்.
புரண்டு புரண்டு படுத்தவள் திரும்பி ரிஷியருகே திரும்பவும், அவனோ யோசித்து கொண்டிருக்க, “என்ன திங்க் பண்ணற?” என்று கேட்டு விரிந்த கூந்தலை அள்ளி முடித்து தலையணையை முட்டுக்கொடுத்து சாய்ந்தாள்.
“இல்லை… லவ் பண்ணிருக்கியே.. நீ தனியா சந்திச்சிருக்கியா?” என்றதும் “அடேய் அடேய்… மூளை போகுது பாரு பக்கிக்கு. சீ… நீயும் அம்புட்டு தான்ல. எவனுக்கும் நல்ல புத்தியே இருக்காதா. ஊரை சுத்தி பார்த்தா தொட்டானா முத்தம் கொடுத்தானா அதுயிதுனு கேள்வி குடைந்து வந்துடுவீங்களே. இரிட்டேட்டிங்.” என்று முனங்கினாள் ஷிவாலி.
“ஷிவ்… நான் அப்படி நினைக்கலை.” என்றவன் பதறி கூறி, “தனியா சந்திச்சா நல்லா பேசியிருப்ப, பிறகு காதலை பிரேக் அப் என்றால் வலிக்காதா? என்ன காரணத்துல பிரிஞ்சிங்க?” என்று கேட்டான்.
“முடிஞ்சுப்போன இழவுக்கு இப்ப எதுக்கு அழுவப் பார்க்கற. அதெல்லாம் மூவ் ஆன் பண்ணிட்டேன். நீ சொல்லிக்குற அளவுக்கு கூட எதுவும் என் மனசுல ஒழப்பலை. ஜஸ்ட் பாஸிங் க்ளவுட்ஸ்” என்று தோளைக் குலுக்கவும் ரிஷி விசித்திரமாய் பார்த்தான்.
ஒரு சின்ன தயக்கம், காதலிச்சதை பத்தி புருஷனிடம் சொல்லறோமே என்ற பயம், அதுவும் இரண்டு லவ் பெயிலியர் அருவருப்போ அசிங்கமோ படாம கேஷூவலாக பேசியவளை வியக்காமல் இருக்க முடியவில்லை.
அவன் மனதில் வானதியை பற்றி சொல்லாதப் போது நெருஞ்சி முள்ளாய் படுத்தியது. தற்போது அது வருடிய மயிலிறகாய் இதயத்தில் இதம் பரவவும் இவளுக்கு அப்படி எந்த உணர்ச்சியும் இருப்பதாய் தோன்றவில்லையே என்று அதிசயித்தான்.
“என்ன என்னையே விழுங்குற… உங்க காலம் மாதிரி எங்க காலம் இல்லை. அவன் விரும்பினான் நான் விரும்பினேன். என்னை இப்படியிரு அப்படியிருனு ரிச்சர்ட் ஆர்டர் போட்டான். ஐ ஹேட் ரூல்ஸ் அண்ட் ரெகுலேஷன். எனக்கு எவன் டா ரூல்ஸ் போடறதுனு கோட்டை அழிச்சிட்டு அதை தாண்டி வந்துட்டேன். இது முதல் பிரேக் அப்.
இரண்டாவது ரூபன் அவன் முதல் லவ் பத்தி தோண்டி துருவி அதை பத்தியே கேட்டு என்னோட ஒழுக்கத்தை சீண்டினான். ரப்பிஸாட்டும் சந்தேகப்பட்டான். போடா நீயும் உன் காதலும் அவனுக்கும் குட்பாய் சொல்லிட்டேன்.
என்னை அப்படியே அக்சப்ட் பண்ணணும். இந்த ரூல்ஸ் போட்டாலோ சந்தேகப்பட்டாளோ இமிடியட்லி பிரேக் அப் தான். நான் யாருக்கும் அடங்கி போக மாட்டேன். என் லைப் எனக்கு பிடிச்ச மாதிரி வாழ்வேன். இதுல அப்பா அம்மா கூட உள்ள வரக்கூடாது. ஐ நீட் பிரைவேசி.” என்று திமிராய் கர்வமாய் கூறினாள்.
ரிஷி அனைத்தும் செவியில் ஏற்றியவன் “அப்ப உங்க தாத்தாவுக்காக ஏன் யோசித்த? அப்படியே மேரேஜ் வேண்டாம்னு சொல்லியிருக்கலாமே?” என்று கேட்டான்.
“பச்… பாட்டி தாத்தா சின்னதுல இருந்தே என்னிடம் ஓவர் செல்லம் கொடுத்தாங்க. இன்பெக்ட் நான் இப்படி தான் என்ற போது என்னை அப்படியே ஏற்றுக் கொண்டாங்க. என் பேத்தி அப்படி தான் இருப்பானு எனக்கு எத்தனை முறை சப்போர்ட் செய்தாங்க. அப்படி எனக்காக பார்த்து பார்த்து அப்பாவிடம் எத்தனை முறை ஆர்கியூமெண்ட் பண்ணினாங்க தெரியுமா?
நான் கையில்லாத டிரஸ் போடறதா இருக்கட்டும். தொடை தெரிய ஷார்ட்ஸ் போடறதா இருக்கட்டும், ஊட்டி காலேஜ்ல தான் படிப்பேன்னு அடம்பிடிச்சப்ப, முடி வார மாட்டேன் என்றதாகட்டும், இடுப்பு தெரிய லெகங்கா தான் என்னோட ரிசப்ஷன் டிரஸ் என்று கூறினப்ப கூட, எதுனாலும் உடை உணவு எண்ணங்கள் எதுனாலும் அவ இஷ்டம் விடுனு சொன்னாங்க. என்னை என் மனசுக்கு ஏற்ற மாதிரி வாழ சப்போர்ட் பண்ணினவங்க.
ஏன்னு தெரியலை… உன்னை ரிஜெக்ட் பண்ணியும் என்னை கோர்த்து விடறாங்கன்னதும் முதல்ல எரிச்சலா வந்தது. பிறகு பிடிச்சா வாழ்வேன் இல்லை டிவோர்ஸ் பண்ணிக்கலாம்னு நானே டிசைட் பண்ணிட்டேன்” என்று கூலாக கூறியவளை கண்டு ரிஷியோ கதைக் கேட்டவன் செருமிக் கொண்டு “குட் டிசிஷன் மா. கீப் இட் அப்” என்றவன் மனதளவில் அரண்டு தான் போனான்.
“தேங்க்யூ குட் நைட்” என்றவள் போர்வையை முகம் முழுக்க போர்த்தி படுத்து கொண்டாள்.
ரிஷியோ ‘அப்போ… நான் கூட ஏதாவது சொன்னா ரிஜெக்ட் பீஸாகிடுவேனோ?’ என்று பேனை பார்த்து எண்ணியவன் இடது பக்கம் திரும்பி அவளை பார்த்தான். துளி முகமும் தெரியாமல் போர்வை போற்றி இருக்க, ‘லவ் சொன்னா ஜர்க் ஆகும். பாவம் சின்ன பொண்ணு அதை ஏற்று வாழ ப்ரிப்பர் ஆகும்னு பார்த்தா, இது எனக்கு மேல இரண்டு லவ் பெயிலியர்னு சொல்லி என்னை ஜர்க் பண்ணுது. போதாதுக்கு ஒரு சின்ன ரியாக்ஷன் தான் காட்டுது.
பெரிசா பீல் பண்ணலை… இதே நான் எல்லாம் வானதி கல்யாணத்தப்ப அம்மாவிடம் எப்படி புலம்பினேன். என்னம்மா பீல் பண்ணினேன். இப்ப எந்த எண்ணமும் பாதிக்கலை. எனக்கு என் ஷிவ் கிடைச்சதால செம ஹாப்பி. இருந்தாலும் ஷிவ்-கு துளி கூட பெரிசா பீல் ஆகுற மாதிரி தெரியலையே.
இதான் 2k வா… துன்பத்தையே தூரப்போனு கண்டுக்காம இருக்கறதும், ஜாலியோ ஜிம்கானா மாதிரி லைப்பை என்ஜாய் பண்ணறதும். இதுவும் நல்லா தான் இருக்கு. நமக்காக மட்டும் யோசித்து நமக்காக வாழறது.’ என்றவன் இம்முறை திரும்பி பார்க்க, ஷிவாலி இவன் பக்கம் திரும்பி படுக்க முனைய முகமானது போர்வையிலிருந்து அவன் காண விடுதலைப் பெற்றிருந்தது.
‘பீட்சால இருக்கற சீஸ் மாதிரி இருக்கா. எது என்னவானாலும் அவளை ஹாப்பியா பார்த்துக்கணும். திருமணமான கூட அவளோட மனதை கஷ்டப்படுத்தாம அவளை அவளா வாழ விடணும். இதுக்கு நான் பெருசா எதுவும் பண்ண வேண்டாம். அவளுக்கு எதுக்கும் தடை கூறாம இருந்தாலே போதும்.’ என்று மனமானது எடுத்துரைக்க முறுவலித்து மெதுவாக அவள் இதழில் அலைபாய்ந்த சிகையை அவளின் காதோரத்திலும் அவன் மனதையும் ஒரு சேர அடக்கினான்.
சொல்வதெல்லாம் செயலில் செயல்படுத்த இயலுமா என்பது காலம் வரையறுக்கும்.
-சட்னி சாஸ் தொடரும்
-பிரவீணா தங்கராஜ்.

intha generation apadi nalum nan eppadiyo apadiye vidngaindependent ah tha solra thavira ethum wrong route la pola sila ponnunga mari antha vishayathula shiv superb
Super super. Very intresting sis.