Skip to content
Home » 90’s பையன் 2k பொண்ணு-20

90’s பையன் 2k பொண்ணு-20

ரி-ஷி-வா-20

 🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁  

    ஷிவாலியின் கைகள் தாடியில் உரசிட அதன் குறுகுறுப்பில் விழித்திறந்தான் ரிஷி.

     ஷிவாலியோ குத்திட்டே இருக்கு என்று கையை சொரிந்து “ஏய் பிந்து ஏன் உன் கன்னம் குத்துது.” என்று முனங்கி ஷிவாலி அரை உறக்கத்தில் புலம்பினாள்.

     “ஏன்னா… அது என் தாடி மா. ட்ரிம் பண்ணியதுல குத்தலாம்.” என்ற ரிஷிவேந்தன் குரலில் அவன் நெஞ்சில் கையை வைத்து அழுத்தி எழுந்தாள்.

       “யாரது பிந்து?” என்றான் ஆர்வத்தில்.

     “என்னடா… சந்தேகமா…?” என்று எழுந்ததும் ஷிவாலி கோபமாக நின்றாள்.
     சிகையை அள்ளி முடித்து, சண்டைக்கோழியாக கேட்பவளிடம், “ஏய்.. சீ… எனக்கு எதுக்கு சந்தேகம் பிறக்க போகுது. நான் சாதாரணமா யாருனு கேட்டேன்.” என்று எழுந்திட செய்தான்.

     “பிந்து என் ஹாஸ்டல் ரூம் மேட்.” என்று பதில் தந்து குளிக்க சென்றாள்.

    இவளிடம் எதுவும் கேட்க கூடாது. நாம உண்டு நாம வேலையுண்டுனு இருக்கணும். குட்டிசாத்தான் எப்ப பாரு என்னை வம்பிழுத்துட்டு நான் என்னவோ வம்புளக்கிற மாதிரி பேசும்.’ என்று பல் விளக்கி முகத்தை டவலில் துடைத்து தாடியை தொட்டு தொட்டு பார்த்தான்.

     குத்துற மாதிரி தெரியலையே… அவ சாப்ட் கைக்கு குத்தியிருக்குமோ? ட்ரிம் பண்ணலாமா? இல்லை எடுத்துடலாமா? என்ற ஆழ்ந்த சிந்தனையில் இருக்க டவலில் மார்பளவு கட்டி தொடை தெரிய தலையில் பல் க்ளிப் அடக்கி துளி துளி நீரோடு வந்து உடைகளை அலசினாள்.

     ரிஷியோ நெஞ்சில் கை வைத்து, “என்ன நீ இப்படியே வந்துட்ட, இந்த ஷையா எதுவும் வரலை. எனக்கு ஷையா இருக்கே” என்றவன் கண்களை பார்க்க போராடியது.

     “பச் நான் பிந்து யோஷிதா மூன்று பேரும் ரூம் மேட். இதுல மூன்று பேரும் கேர்ள்ஸ் என்றதாலயும், பாத்ரூம் சின்னது என்றதால ரூம்ல தான் டிரஸ் சேஞ்சு. சோ இப்படி வந்து பழகிடுச்சு. இது என் ரூம் தானே. ஆக்சுவலி நீ வெளியே போய் இருக்கணும். இங்கயே இருந்து என்னை சைட் அடிக்கிற?” என்று புருவமேற்றி இடையில் கைவைத்து கேள்வி எழுப்பினாள்.

     “கரெக்ட்… நான் வெளியே போயிருக்கணும். ஆனா என்னவோ போக வேண்டாம்னு கால் அசையலை. உனக்கே அப்ஜக்ஷன் இல்லாதப்ப எனக்கு ஜாலியா இருக்கே. நானும் நானா இருக்கேனே விடேன்.” என்று கண் சிமிட்டினான்.

       ஷிவாலியோ டிரஸ் மாற்றும் தடுப்புக்கு பின் சென்று ஆடைகளை மாற்றவும் ரிஷிவேந்தன் மென்னகையோடு மெத்தையில் விழுந்தான்.

      ஆக்சுவலி ஆப்டர் மேரேஜ் இந்த சீன் எல்லாம் கேஷூவலா நடக்கும். பட் பொண்ணு வெட்கப்பட்டு நெளிவா.” என்றவன் தலைநிமிர்த்தி “உனக்கு வெட்கம்னா என்னனு தெரியுமா? படிச்சிருக்கியா… பார்த்திருக்கியா?” என்று கிண்டலாய் கேட்டதும் டவலை தூக்கி அவன் மேல் எறிந்து “ஃபக் யூ… கேலி பண்ணின ஐ கில் யூ” என்றாள்.

     “முதல்ல சொன்னதே நல்லாயிருக்கே.” என்று தலையணையை மடியில் வைத்து கன்னத்தில் கை வைத்து கேட்க, முதலில் என்ன சொன்னேன் என்று ஷிவாலி மூளை கண்டறிய ‘ஃபக் யூ’ என்றதை எண்ணி தலையிலடித்து ‘இதுக்கு வேற கவுண்டர் தருவானே’ என தனக்குள்ளே முனங்கினாள்.

     “பேட் வோர்ட்ஸ் ஈஸியா வருதுல… என்னை விட மாசத்துல பெரியவங்களா இருந்தாலும் வா போ என்ற ஒருமையா பேச மாட்டேன். 

    அதுவும் கெட்ட வார்த்தை…. பேசவே மாட்டேன்.

    மேபீ நாங்க ஐ மீன் ஆண்கள் கெட்ட வார்த்தை சரளமா வரும். என் ஆபிஸ்ல காலேஜ் பிரெண்ட்ஸ் பேசுவாங்க. நானும் பசங்களிடம் பேசறப்ப லைட்டா…  அதென்னவோ பொண்ணுங்ககிட்ட பேச வராது. ஒருவேளை கவிதா அக்கா சரிகா தங்கச்சி, அம்மா என்று கூட வாழறதால இருக்கலாம்.

     நீ பேசி கேட்க… அந்த பர்டிகுலர் வோர்ட் நல்லாவே இருக்கு. ஷல் ஐ ஹெல்ப் யூ” என்று கேட்டான்.

     “இங்க பார்… இப்படி சுத்தி வளைச்சி மரியாதை தா, வெட்கப்படு, இப்படி நட அப்படி நடனு கோட்டை இன்விஸிபளா போடணும்னு நினைக்காதே.

      அப்பறம் காதை தொட்டு தலை சுத்தி மூக்கை தொட்டு செக்ஸ் லைப்ல என்னை இழுக்க ட்ரை பண்ணாதே.” என்றவள் கதவை திறந்து வெளியேறியிருந்தாள்.

     ரிஷிவேந்தனுக்கோ அவளின் செய்கைகள் புதிதாக அறிந்திடும் ஆவல்கள் அதிகரிக்க வைத்தது.

     அதனால் பின் தொடர்ந்து சென்றவன் மனோகரி பாட்டி கொடுத்த காபியை வாங்கி பருகியபடி தன்னவளை நோட்டமிட சவுகரியமாய் அமர்ந்தான்.

     பொண்ணு பார்க்கறப்ப உட்கார்ந்த அதேயிடம் என்றதும் பொண்ணு சந்தியாவை பார்க்க வந்து ஷிவாலியை பார்த்தது நிழலாடியது.

  நல்லவேளை என் பார்வை சந்தியா மேல போகலை. என் ஷிவ் குட்டி மேல தான் இருந்திருக்கு. அவ தான் பொண்ணுனு பார்த்தேன் ஆழமா மனசுல பதியவச்சேன். பொண்ணு இந்த ரூம்னு சொன்னதும் பக்குனு இருந்தது. ஆனா என்னை எப்படியோ ஷிவ் கூடவே கனெக்ட் பண்ணிடுச்சு விதி.

       தனியாக சிரிக்க வேதாச்சலம் வந்து சேரவும் போனை ஒரம் கட்டி “வாங்க தாத்தா.” என்று அமர கூறினான்.

      “ஏதோ வீட்ல இருந்து வேலை பார்க்கறதா ஷிவா சொன்னா. நீங்க லீவு போடலையாபா.” என்றதும், ரிஷி   “பார்க்கணும் தாத்தா… மணி எட்டு முப்பதுக்கு லாகின் இன் பண்ணுவேன்.” என்றவன் ரிஷியை தேட அவளோ ஸ்கர்ட் டாப்ஸ் என்று போட்டு போனும் கையுமாக வலம் வந்தாள்.

      ரிஷிக்கு தாத்தாவோடு பேச்சும், டிவியும், ராமமூர்த்தியோடு வேலை விஷயம் பகிரவும், நடப்பு செய்தியை பேசவும், சரண்யா போன்று ராஜலட்சுமி உணவு முறையில் அசத்தவும் இதமாய் உணர்ந்தான்.

    கூடவே குட்டிசாத்தானை போல ஷிவாலியை ரசித்தும் திட்டியும் வம்பளந்தும் அவளோடு சட்னி சாஸ் அலப்பறைகளாக இருந்தார்கள்.

      மறு வீடென தினமும் கறிவிருந்து என்று சாப்பிட, ”திண்ணு திண்ணு நல்லா திண்ணு, இப்பவாது என்னோட ஜோடியா பார்க்கற மாதிரி இருக்க, ஒரு வாரத்துல பண்ணி மாடு மாதிரி ஆகிடு” என்று கூறவும், சாப்பிட வாய் வரை எடுத்து சென்றவன் கைகளை உதறி தட்டில் நிதானித்தான்.

       அவனை சொல்லிவிட்டு நன்றாக மொக்கும் ஷிவாலியை கண்டு “திங்கலைனா ஒல்லியா இளமையா இருப்பாங்கனு தெரியுமா. ரொம்ப பேசாதே… நீ இருக்கற பொடிடப்பி சைஸுக்கு நான் உனக்கு மேட்சிங்கா தான் இருக்கேன்.

   அப்படியே மேட்சிங்கா இல்லைனாலும் சோறை சாப்பிடாம இருந்து தியாகம் பண்ணமாட்டேன். உனக்கு ஜோடிப்பொருத்தம் குறையா பட்டுச்சுனா நீ நல்லா எக்ஸ்ட்ரா சாப்பிடு குண்டாகிடு. பிராப்ளம் சால்வ்டு.

    வயிற்றுக்கு வஞ்சனை வைக்க கூடாதுமா.” என்று கை முழுவதும் கறியும் சோறுமாக எடுத்து சாப்பிட ஆரம்பித்தான். போதாதற்கு சிக்கன் வறுவலை மறு கையில் வைத்து உண்ணவும், “பே” என்று ஷிவாலி சாப்பிட்டு முடிக்கவும் மென்முறுவல் செய்து அவளின் செய்கைக்கு அடிமையாகி கொண்டிருந்தான்.

       ராமமுர்த்தி ராஜலட்சுமி இருவரும் ரிஷியின் தேவையறிந்து நடந்திருந்தனர்.

    மகள் முகம் திருப்புதல் செய்கின்றாளா என்று சில நேரம் நோட்டம் விட்டாலும் ஷிவாலியோ சிப்ஸ் லாலிபாப் முதல் ரிஷிக்கு வேண்டுமா என்பது போல கேட்பாள்.

     அவனும் இந்த சேனல் வை. இந்த பாட்டு வை என்று பேசுவான். தம்பதியார் வெட்கம் கலந்த பேச்சு இராது, நண்பர்களாய் பேசிட ஷிவாலி மறுக்கவில்லை.

    இங்கு இவர்களின் பேச்சையே ராமமூர்த்தி தூரத்தில் ரசிக்க, ரிஷிக்கு அடுத்த நாள் போரடித்தது.

     “ஏய் ஷிவ்… மூவி போகலாமா?” என்று கேட்டதும், யா… பெஸ்ட் ஊட்டில இருந்து வந்ததும் கல்யாணம் அது இதுனு இந்த இரண்டரை மாசம் வெளியேவே விடலை. விக்ரம் போகலாம் என் பிரெண்ட்ஸ் எல்லாரும் படம் சூப்பரா இருக்குனு ரிவ்யூ போட்டிருக்காங்க.” என்று சுவாரசியம் கூட்டினாள்.

     “அப்ப வா போகலாம்.” என்று கிளம்ப ஆயத்தமானார்கள்.

     மனோகரியோ “ஒரு சுடிதாராவது போடலாமே டி” என்று கேட்டு நிற்க “பாட்டி இந்த ஸ்கர்ட் டாப்க்கு என்ன குறை அழகா இருக்கு. அவனே சும்மா இருக்கான்” என்றதும் வேதாச்சலம் வந்து காதை திருகினார்.

    ”நீ ரூமுக்குள்ள என்ன வேண்டுமின்னா கூப்பிட்டுக்கோ. என் முன்ன பேரனை மரியாதையா கூப்பிடணும்” என்று கட்டளையிட்டார்.

    “ஆசை தோசை… ரிஷி டேய்.. ரிஷி… டைம் ஆச்சு.” என்று வலித்தாலும் ஹை பிச்சில் கத்தினாள்.

    வேதாச்சலம் “ஷிவா ம்மா… தப்பு டா” என்று காதிலிருந்து கையெடுக்காது கூற, “வர்றேன் ஷிவ். டூ மினிட்ஸ்” என்றவன் பெல்ட் அணிந்து முடித்து, தலையை கைகளால் படியவைத்து போனை எடுத்தபடி வந்தான்.

    “யா ரெடி என்னாச்சு ஸ்டண் ஆகியிருக்கிங்க. தாத்தா ஏன் அழுவறார். ஷிவ் என்ன பண்ணின?” என்று கேட்டான்.

      “ஒன்னுமில்லை பா எப்பவும் போல ஷிவா வம்பிழுத்துட்டா. நீங்க நேரத்துக்கு படத்துக்கு போயிட்டு வாங்க” என்று மனோகரி கூறவும், “எல்லாரும் கிளம்பலையா..?” என்று ரிஷி கேட்டான்.

     “நல்லா சொன்னிங்க மாப்பிள்ளை, அப்பாவுக்கு இப்ப தானே உடம்பு பரவாயில்லை. அம்மாவுக்கு குளிர் ஒத்துக்காது. ராஜிக்கு வீட்ல வேலையிருக்கு. நானும் அப்பாவோட மருந்து வாங்க போகணும். நீங்க ஷிவாலி போயிட்டு வாங்க மாப்பிள்ளை.” என்று ஆனந்தமாய் அனுப்பி வைத்தார்.

     பைக்கில் ஸ்கர்ட் போட்டாலும் இரண்டு பக்கம் காலிட்டு அமர்ந்து “டிக்கட் கிடைக்கலை உன் மண்டையை உடைச்சிடுவேன் ரிஷி.” என்று பேசியபடி செல்ல பெரியவர்கள் ஆனந்தமாய் அவர்களின் புறப்படும் அழகை கண்டு களித்தனர்.

      “ரிஷி… படம் முடிஞ்சதும் ஹோட்டலில் சாப்பிடலாமா? முடிஞ்சா அப்படியே ஒரு ஷாபிக் போகலாமா?” என்று தோளில் தலை சாய்ந்து கேட்டாள்.

    “நீ எங்க கூப்பிட்டாலும் போகலாம்” என்றவன் கையை எடுத்து அவள் தலையில் அழுத்தம் கொடுத்தான்.

    ஷிவாலியோ அவன் தொடுகையில் மின்சாரம் தாக்கவும் தோளிலிருந்து தலையெடுத்தாள்.

    அவனின் பின்னந்தலையை பார்த்து தோளில் கையை வைத்தாள்.

     முகம் புதைக்க ஏங்கியது மனம். அவனின் வெட்பம் அவளுக்கு பிடித்திருக்க, உதடு விரிந்து சத்தமின்றி முறுவலிட்டாள்.

    அபிராமி தியேட்டர் வந்ததும் டிக்கட் ஆன்லைனில் வாங்கியதை காட்டி உள்ளே நுழைந்தார்கள்.

     ஆராவரமும் கூச்சலும் காதை கிழிக்க, ரிஷிவேந்தனின் கைகளை இறுக பற்றி காதை மூடினாள்.

     அவர்களின் இடம் வந்து அமரவும், விசில் சத்தம் அதிகரிக்க, படத்தின் பெயரை பிரதிபலித்தது.

    “ரிஷி… உனக்கு விசிலடிக்க தெரியுமா?” என்று கேட்டாள்.

     “யாரை பார்த்து என்ன கேட்ட. என்று விசிலடித்து காட்டினான்.

     “பரவாயில்லை… இப்ப நான் அடிக்கிறேன் பாரு” என்று அவளும் முயற்சிக்க, அவனை போலவே விசில் ஒலி எழுப்பினாள்.

   “ஏய் ஷிவ்… செமையா பண்ணற” என்று ரிஷி பேச பேச, ஷிவாலி மனமோ அவனிடம் நட்பாய் பேசுவது எளிதாய் மாறுவதும் புரிந்திட மெல்லமாய் படத்தை விடுத்து இருட்டில் இவனை பார்க்க, அவனோ கன்னத்திற்கு கையை முட்டு கொடுத்து, அவளையே பார்க்க ஷிவாலி சுதாரித்து விட்டு, “படம் பார்க்காம என்ன பார்க்கற” என்று ஹஸ்கி வாய்ஸில் கேட்டு நின்றாள்.

     “நியூ மேரிட் நான். உன்னை பார்க்காம படம் பார்த்தா தான் தப்பு. நீ படம் பாரு. நான் உன்னை ரசித்துக்கறேன்.” என்று கூறவும் “ஒன்னும் தேவையில்லை படம் பாரு. வீட்ல வந்து நாள் முழுக்க ரசி” என்று கடுகடுத்தாள்.

    “நான் பார்த்தா உனக்கென்ன? பக்கத்துல சீட்ல இருக்குறவன் சைட் அடிச்சா சும்மா தானே இருப்ப. நான் சைட் அடிச்சிக்கறேன்” என்றதும், “போடா.” என்று படத்தில் மூழ்க ஆரம்பித்தாள்.

     ரிஷி தன்னவளின் அழகில் மூழ்க ஆரம்பித்தான்.

    இடையில் இன்டர்வல் வரவும் பாப்கார்ன் ஐஸ்க்ரீம் என்று கொடுத்தான்.

    அவன் எக் பப்ஸ் சாப்பிட, எனக்கு அதுவும் வேண்டும்” என்று கூறியதும் சாப்பிட்டதை நீட்டினான்.

     “உதை வாங்குவ அது எச்சி… வேற வாங்கிட்டுவா.” என்று கூறினாள்.

   ரிஷிவேந்தன் புன்னகைத்து மீண்டும் வெளியே வந்து பப்ஸ் வாங்கி வந்தான். அதற்குள் முக்கால் வாசி ஐஸ்க்ரீம் முடித்தவள் சட்டென பப்ஸ் வாங்கி சாப்பிட்டாள்.

    அவள் கையிலிருந்த கடைசி பீஸ் ஐஸ்ஸை வாங்கி ரிஷி விழுங்கினான். அதற்கு அவள் ஆட்சேபித்தது போல தோன்றவில்லை.

   பாப்கார்னில் கையை விடும் நேரம் இருவரின் கைகள் உரசிக் கொண்டது. ரிஷி வேண்டுமென்றே உரசிட, அவனின் செயல் அறிந்து அவன் கைகளை கிள்ளி விட்டு பாப்கார்னை கவரை பிடுங்கி கொண்டாள்.

     “எனக்கு எதையும் தரமாட்டுற எனக்கு பதில் நீ குண்டா ஆன்டி மாதிரி ஆகப்போற இது என் சாபம்” என்று கூறவும் “தேங்க்யூ படம் போட போறாங்க வாயை மூடு” என்றதும், அவன் ‘வாயை தானே…’ என்று கூறி சுற்றி முற்றி பார்த்தான்.

    மின் விளக்குகள் ஒளியை இழக்க, அவளை தன் பக்கம் திருப்பி முத்தமிட்டிருந்தான். ஷிவாலி அவனின் டீஷர்ட் திருகவும், அவளின் கையை பிடித்து கொண்டான்.
 
   விசில் சத்தமும் படத்தின் வசனமும் அவர்களை நிகழ்காலத்திற்கு இழுத்து வர இதழை விடுவித்தவன் கையை விடுவிக்கவில்லை. அவள் உருவ முனைய அவனோ விடாது பிடித்திருக்க இவர்கள் தனி டிரைய்லர் ஓட்டிக் கொண்டிருந்தனர்.
  
      படம் பார்த்து ஓய்ந்தவளிடம் பைக்கில் கதை கேட்க, “ஆக்சுவலி பாதி படம் பார்த்தேன் மீதி நீ என்னை பார்க்கறது டிஸ்டபன்ஸா இருந்ததா அடிக்கடி பார்வை உன் பக்கம் வந்துச்சு, போதாதற்கு கையை வேற பிடிச்சிட்டு இருந்தியா… உன்னால சில சீன்ஸ் மிஸ் பண்ணிட்டேன். அகைன் பார்க்கணும்” என்றவளை நமுட்டு சிரிப்போடு தலையாட்டியபடி இருந்தான்.

     “சிரிக்காதே… உன்னை…” என்றவள் கழுத்தை நெறித்தாள்.

     “ப்ப்ளிக் வாட்சிங் ஷிவ். வீட்ல என்ன வேண்ணா பண்ணு” என்று கூறினான்.

    “ப்பளிக்ல தானே கிஸ் பண்ணின. அப்ப யாரும் பார்க்கலையா?” என்று கேட்டாள்.

    “பார்த்தாலும் கண்டுக்க மாட்டாங்க. சினிமா தியேட்டர்ல இது சகஜம்.” என்றான் இலகுவாக.

    “எங்க போக ஷாப்பிங் போகணும்னு சொன்ன?” என்று ஓரமாய் நிறுத்தி கேட்டான்.

   பதில் வராமல் போகவும் திரும்பி பார்க்க உதடு விரிந்து வேறோரு உலகில் உலாத்திய ஷிவாலியை கண்டு உலுக்கினான்.

    “வீட்டுக்கே போ. மைண்ட் ஸ்டடியா இல்லை. படத்தோட தாக்கம்” என்று கூறினாள்.

    ‘பச்ச பொய் சொல்லறாளே… சரி விடு வீட்டுக்கு வண்டியை விடறேன்’ என்று ரிஷிவேந்தன் ஷிவாலியின் பைக்கில் அமர வைத்து அவள் வீட்டின் இடத்திற்கே வந்தான்.

    ஷிவாலி வீட்டு வாசலில் அவர்கள் வரும் நேரம் டம்ளர் உருண்டு அதீத சத்தம் கேட்டு விழுந்தது.

-அலப்பறைகள் தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்.

3 thoughts on “90’s பையன் 2k பொண்ணு-20”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Leave the field below empty!