ரி-ஷி-வா-21
🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁
ஷிவாலி அவள் காலில் வந்து விழுந்த டம்ளரை காலாலே தள்ளிவிட்டு, நடந்து செல்ல, ‘ஷிவ்.’ என்றவாறு டம்ளரை எடுத்து வைத்தான் ரிஷி.
சந்தியா ஷிவாலி ரிஷியை இருவரையும் பார்த்து அறைக்குள் முடங்கினாள்.
கீழே இரண்டறை மட்டும் இருக்க, ஒன்றில் தாத்தா பாட்டி என்று உடல்நலமில்லாது இருந்திட, மற்றொரு அறையில் ஷிவாலி சந்தியா என்று இருந்தார்கள்
தற்போது திருமணம் எதிர்பாராது இரண்டு ஜோடிக்கு முடிவானதும் ரிஷி ஷிவாலி இல்லாத போது ஹரிகரன் சந்தியா தங்கியிருந்தனர்.
அவர்கள் சென்றதும் ரிஷி ஷிவாலி மாறி மாறி தங்கவும் அறை பற்றாகுறை இல்லை. சந்தியா கோபித்து கொண்டு அறைக்குள் முடங்க, ரிஷி ஷிவாலி அறைக்குள் செல்ல இயலாது ரிஷி தவிர்த்தான்.
ஷிவாலியோ சந்தியா முகம் பார்த்து கண்டும் காணாது கம்பள் செயின் பிரேஸ்லேட் ஹேண்ட்பேக் என்று வரிசையாக கழட்டி வைத்து பல் க்ளிப்பால் கூந்தலை அடக்கி கொண்டு வெளியே வந்தாள்.
ரிஷி போனை வைத்து கொண்டு அதில் மூழ்குவதாக அமர்ந்திருந்தான். தந்தை இல்லாதது தாய் கிச்சனில் கையை பிசைந்து புலம்ப மனோகரி மெதுவாய் அதட்டுவது புரிப்பட்டது.
வேதாச்சலமோ ரிஷியிடம் பேச தயங்கினார்.
ஷிவாலியோ ஷார்ட்ஸ் டீ ஷர்ட் என்று வந்து கொடுக்க, அவளாக கொடுப்பது திகைத்தாலும் வாங்கி கொண்டான்.
வேதாச்சலத்தின் அறைக்கு சென்று உடை மாற்றி ஜீனை ஹாங்கரில் மாட்டிவிட்டு, மெதுவாய் ஆபிஸிற்கு போனை போட்டு மாடிக்கு ஏறினான்.
ஷிவாலியோ அவன் செல்வதை கண்டு சற்று நேரமெடுத்து மேலே வந்தாள்.
“ஹனிமூனா… ம்… போகணும். ஏன்.. நீ எனக்கு செலவு பண்ணி வழியனுப்ப போறியா டா மாமூ.. ரொம்ப ஆர்வமா இருக்க.. தூஉஉஉஉ… வேலையை பாரு. வர்றப்ப வருவேன்” என்று பேசி திரும்ப, ஷிவாலியோ மக்கில் நீர் எடுத்து வந்து அவள் வளர்த்த பூச்செடிக்கு சிறிதளவு நீரை ஊற்றினாள்.
ஷிவாலியை பார்த்து முறுவலிட்டு நின்றான்.
ஷிவாலியும் பதிலுக்கு முறுவலிட்டாள். அது சிநேகம் என்பது புரிபட, அதிக நேரம் பிடிக்கவில்லை. அங்கே இவன் வைத்த வெள்ளை ரோஜா தொட்டு பார்த்தாள்.
மெதுவாய் அவள் கரத்தை பற்றியவன், பொதுவா சிவப்பு ரோஜா எல்லாருக்கும் பிடிக்கும். எனக்கு ஓயிட் ரோஸ் பிடிக்கும். அதனால தான் முதல்ல அதை வாங்கினேன்.” என்றவன் அவள் கைகளில் மோதிர விரலில் அவன் அணிவித்ததை தடவிக்கொண்டே கூறினான்.
“கையை விடு” என்று ஷிவாலி உருவாமல் அவனாக விடுவிக்க கோரி கோரிக்கை வைத்தாள்.
“முடியாது… தியேட்டர்ல பிடிச்சப்ப நீ விட சொல்லலை. இப்ப என்ன?” என்று கேட்டு முடித்தான்.
“அப்போ குளிருச்சு. உன் தீண்டலில் இதமா இருந்தது சரினு விட்டுட்டேன்.” என்றதும், அவனோ இல்லை என்பதாக தலையாட்டினான்.
“பொய்.” என்றவன் “உனக்கு என்னை பிடிச்சிருக்கு. அது தான் காரணம்” என்றதும் அங்கும் இங்கும் பார்வையை திருப்பி “மேபீ… பார்த்ததும் பிடித்தது உனக்கு பழகிட தோணனும் எனக்கு. அவ்ளோ தான்” என்றதும் முகம் அவனை ஏறிட தயங்கியது.
“ஏய்… இது ஒரு பாட்டு.. அச்சோ… இங்க நிற்குது… ஆனா மனசை தாண்டி எந்த படம் என்ன பாட்டுனு சொல்ல வரலை.” என்று இதயத்தின் பக்கம் கை வைத்து கூறினான்.
அவன் கைகளோடு அவள் கைகளும் சேர்ந்தே அவன் நெஞ்சில் உரசியது.
“ரீல் விடாதே.. கையை விடு.” என்று கூறினாள்.
“சரி படம், பாட்டை விடு. எனக்கு உன்னை பிடிக்குதுனு தெரியுதா.. நல்லது… உனக்கு என்னிடம் பழகணும்னு தோணுதா?” என்றான் ஆர்வத்தோடு.
“ம்ம்… நீ சுமாரா இருக்க, பழகலாம்… பிரெண்ட்ஷிப்போட யார் யாரோடவோ பழகறேன். நீ..” என்றவள் அவனை ஏறிட்டாள்.
“சோ… பழகி பார்க்க முடிவு பண்ணியிருக்க?” என்றவன் உதடு மடித்து முறுவலித்தான்.
“அதனால என்ன? நல்லா சாப்பிடுவேன் வாங்கி கொடு. உன்னோட ஊர் சுத்தினா எனக்கு எந்த அப்ஜக்ஷனும் இல்லை.
உங்க வீட்ல இருந்த வரை ஆன்ட்டி நல்லா பார்த்துக்கறாங்க.” என்று பேச இடை வெட்டி “ஆன்ட்டி இல்லை அத்தை” என்று திருத்தினான்.
“ஸப்பா… ஓகே அத்தை. நல்லா பார்த்துக்கறாங்க.” என்று பேசினார்கள்.
அந்நேரம் வேதாச்சலம் மாடிக்கு கஷ்டப்பட்டு வந்தார். ஏதோ சந்தியாவால் சோர்ந்து போயிருப்பது தெரிந்தது. ஆனால் கேட்கவில்லை. ஷிவாலியோ தாத்தா வரவும் அவரிடம் போய் வந்த படத்தை பற்றி கதையளந்தாள்.
மற்ற நேரமாக இருந்தால் கதை கேட்டு நடிகரை பற்றி புது கருத்துக்களை அவர் பார்வையிலிருந்து வெளியிட்டு இருப்பார்.
“ஏய்… கதையை அப்பறம் சொல்லு போ” என்று ஷிவாலியை அடக்கினான்.
“நீ போடா.” என்று தாத்தாவிடம் திரும்பினாள்.
“ஷிவா குட்டி தாத்தா எதிர்ல ரிஷியை அப்படி வாடா போடா சொல்லாதே டா. மனசு வலிக்குது.” என்றதும் ஷிவாலியோ, “அச்சோ… தாத்தா… எது எதுக்கு எல்லாம் கவலைப்படுவிங்க? அவனை கூப்பிடலை… சாரி சாரி அவரை கூப்பிடலை.” என்று மாற்றினாள்.
மற்ற நேரமென்றால் உடன்பட்டு சென்றிட மாட்டாள். ஆனால் அக்காவால் ஏதோவொன்று என்றதால் அமைதியானாள்.
இப்படி தான் நமக்காக என்று சில குணத்தை அன்பு வைத்தவர்களுக்காக சில நேரம் மாற்றி விடும். அது நமக்கே தெரியாது. அப்படி தான் ஷிவாலி தற்போது மாறி நின்றாள்.
“சந்தியா… ஹரிகரனோட சண்டை போட்டு வந்திருக்கா.” என்றவர் ரிஷியை பார்த்தார்.
“அவங்க பெர்ஷனல் நமக்கு எதுக்கு தாத்தா. கணவன் மனைவி சண்டை அதுவா வரும் போகும். நாம நடுவுல போகக் கூடாதே.” என்றான். ஷிவாலியோ அவனை ஏறிட்டு பார்த்து, அவன் கூறுவதை ஆமோதிப்பதாக அமைதியானாள்.
ஆனாலும் தங்கை அல்லவா “என்னவாம் தாத்தா… அவ இஷ்டப்படி தானே கல்யாணம் பண்ணியாச்சு. திடீரென என்ன சண்டை.” என்று கேட்டாள்.
“ஹரியோட ஊருக்கு வரச்சொல்லி அவங்க அம்மா சுஜாதா போன் பண்ணியிருக்காங்க.
லவ் மேரேஜ் என்றதால முதல்ல ஊர்ல ஏதாவது பேசுவாங்கனு தான் அங்க வருவதை தவிர்க்க பார்த்தாங்க. பட் இப்ப ஏதோ வர சொல்லறாங்க.
சந்தியா போகறதுக்கு சந்தோஷமா தலையாட்டியிருக்கா. ஆனா வர்றப்ப நகை நட்டு என்று போட்டு பட்டு கட்டி வரச் சொல்லியிருக்காங்க.
இப்ப போட்டிருக்கிற நகையோட கூடுதலா ஐந்து பவுன் போட்டு வர சொல்லறாங்க. அப்ப தான் கழுத்து நிறை நகை அதுயிதுனு பார்க்க கிராண்டா தெரியுமாம் ஹரி இவளிடம் அம்மாவோட நகையை ஜஸ்ட் வாங்கி போட்டு வர சொல்றார்.” என்று கூறி முடித்தார்.
“அம்மாவோடது போட்டு அனுப்புங்க. பிரச்சனை முடியும். ஏன் இதுக்கு அவங்க இரண்டு பேரும் சண்டை போடறாங்க” என்று கேட்டாள் ஷிவாலி.
“அவங்க அம்மாவோட பேசறப்ப போனை ஸ்பீக்கர்ல போட்டு பேசியிருக்கார்.
என்னவோ சந்தியாவோட பேச்சை கேட்டு மாமனார் வீட்ல இருந்துடாதே. அவயிஷ்டத்துக்கு பணத்தை செலவழிக்காதே. பணத்தை அவகையில கொடுக்காதே, இப்படி நிறைய பேசியிருக்காங்க.
சந்தியா கோபமா நான் என்ன அப்படிப்பட்ட கேரக்டரா என்ன உங்க அம்மா இப்படி பேசறாங்கனு வாதம் புரிந்திருக்கா.
அவங்க அப்படி தான் பேசுவாங்க. காதுல வாங்காதேனு சொல்ல, ஒரு நேரம் போல ஒரு நேரம் நீ அவங்க சொல்லறதை கேட்டு என்னை பேசினா. பிறகு அவங்களுக்கு நான் எப்படி மரியாதை தருவேன் உங்களுக்கும் எனக்கும் சண்டை வராதானு கேட்டிருக்கா.
ஹரி மாப்பிள்ளை பேச, வாக்குவாதம் ஆகவும் ‘நீ என்னை விட்டு ரிஷியை பொண்ணு பார்க்க வச்சவள் தானே. இன்னேரம் ரிஷி மட்டும் இல்லைனா எவனையாவது கல்யாணம் கட்டி குடும்பம் நடத்துவனு ஏதோ பேசிட்டார்.
சந்தியா பதிலுக்கு நீ கூட தான் என்னை பொண்ணு பார்க்க வந்தாலும் ஜன்னல்ல இருந்து வேடிக்கை பார்த்த, ரிஷி மட்டும் என் பாயிண்ட் ஆப் வியூ நினைச்சி அப்பாவிடம் பேசலைனா நீ என்ன புடுங்கியிருப்பனு கேட்டிருக்கா.
காதலிக்கிற போது பேசற வாடா போடா என்ற வார்த்தை இனிமையா இருந்தது. ஆனா சண்டைப் போட்டப்ப அதுவே தப்பா போயிடும்.
இப்ப வார்த்தைகளை அள்ளி வீசிட்டு இவளும் வந்துயிருக்கா, அவனும் ஏசியிருக்கான். இதுல நாம என்ன செய்ய? புத்திமதி சொல்லவும் முடியலை. இவங்களை நினைச்சி நமக்கு தான் நெஞ்சு வலிக்கு” என்றவரை திண்டில் அமர வைத்தான் ரிஷி.
“ஒரே ஆறுதல் நீயும் ஷிவா குட்டியும் ஒரளவு சுமூகமா பேசி பழகறிங்க. இந்த கிழவனுக்கு அது தான் இப்ப நிம்மதியா இருக்கு.” என்றதும் ரிஷியோ “தாத்தா ரிலாக்ஸ்… ஷிவா தலைகாணி எடுத்துட்டு வா சாய்ந்துக்கட்டும்” என்றதும் மாடிபடியில் வைத்திருந்த மடக்கு கட்டிலை விரித்து விட்டு, கீழே சென்று தலையணை எடுத்து வந்தாள்.
படுக்க கூறியும் மறுத்துவிட்டு ரிஷியிடம் பேசுவதை தான் பெரிதாய் நிம்மதியாக எண்ணினார்.
நெடுநேரம் போகவும் இரவு உணவு உண்டு விட்டு டிவியில் படம் பார்த்தார்கள்.
சிந்தியா உணவை மறுத்துவிட்டு அறையில் இருந்தாள்.
ரிஷியும் ஷிவாலியும் உறங்க அந்த அறையில் தடையாக சந்தியா இருக்கவும், அவளிடம் கூறவும் தயங்கி இருக்க, ரிஷியே “நான் மாடில தூங்கறேன்” என்று நழுவியிருந்தான்.
ஷிவாலியோ அக்காவோடு படுத்துக் கொண்டாலும், எதையும் கேட்கவில்லை. பாடலை ஸ்பீக்கரில் கேட்டு கொண்டாள்.
“லைட்டை ஆப் பண்ணு. எனக்கு தூக்கம் வருது. ஸ்பீக்கரை ஆப் பண்ணு” என்றதும் சந்தியா கத்த கத்த அதை கண்டுக்காது ஷிவாலி, “நான் என்னிஷ்டபடி தான் இருப்பேன் சந்தியா. உன்னால என் மேரேஜ் ஆனது. இப்ப இங்க வந்து கண்ணை கசக்கிட்டு இருக்க, நான் ஏதாவது கேட்டேனா? உனக்காகவும் ஒரு பெர்சன்டேஜ் கல்யாணம் பண்ணியது தான்.
உனக்காக யோசித்தேன். அதனால என்னோட இந்த ரொட்டீன் லைப்பை முடக்காதே ” என்று கூறவும் சந்தியா அழுதுக் கொண்டே திரும்பி கொண்டாள்.
ஷிவாலியோ நேற்று அந்த குரங்கு கூடவே படுத்திருந்தது. இப்ப மாடில தனியா என்ன பண்ணறானோ? பாவம் எதுவும் கேட்கலை, அவனா நிலைமையை புரிந்து மாடில படுத்துக் கொண்டான்.
ஒரு மெஸேஜ் தட்டி விடலாமா? என்று யோசிக்க, இல்லை.. வேண்டாம்… அப்பறம் ஓவரா சீனை போடுவான். பக்கம் பக்கமா பேசியே அறுப்பான் 90’ஸ் கிட்.’ என்று எண்ணி தவிர்த்தாள்.
தன்னிரு கைகளை பிணைத்து யோசிக்க, தியேட்டரில் அவன் கைகளை பிணைத்து இருந்த வெட்பம் தற்போது தோன்றியது.
அவனின் தொடுதல் தீண்டல் காதருகே விடும் வெட்ப மூச்சுக்காற்று என்று எண்ணி எண்ணி பார்த்தவளுக்கு ரிஷியின் கைகளை பற்ற வேண்டுமென்ற விருப்பம் உண்டானது.
ரிஷிக்கோ படுத்ததும் கையை பிடிக்க விடறா, முத்தம் கொடுக்க விடறா, என்னோட நல்லா பேசறா, பழகனும்னு அவளா சொல்லறா, அவளோட பாஸ்ட் லவ்வை தைரியமா ஷேர் பண்ணறா, மேபீ நான் எடக்கா கேட்டா டாட்டா காட்டிடுவா அது வேற விஷயம். ஆனா என்னிடம் மனம் திறந்து சொல்லறா. அவளோட இந்த பகிர்வை நான் பெரிதா எடுத்துக்க மாட்டேன்னு நம்பியிருப்பா, கொஞ்சம் கொஞ்சமா என்னை விரும்புவா அவளோட ஆக்டிவிட்டிஸ் அப்படி தான் இருக்கு. என்னோட பழகறப்ப அவளுக்கு இந்த வயசு வித்தியாசம் எல்லாம் தோணலை.’ என்றவன் சிந்தனை அவளையே நினைத்து கொண்டு காலாட்டி விட்டத்தை ரசித்து உறங்கினான்.
-அலப்பறை தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்

Rishi romba nalla paiyana irukan kandipa una pidikama pogathu shivu ku paru ipove nee illama iruka mudila avalala
Maatram varum