Skip to content
Home » 90’s பையன் 2k பொண்ணு-28

90’s பையன் 2k பொண்ணு-28

ரி-ஷி-வா-28

 🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁  

    எத்தனையோ முறை ஆபிஸில் பெண்கள் டீம் லஞ்சில் சேர்ந்து குடித்த பொழுது சோஷியல் ட்ரிங் என்று எடுத்து கொண்டாலும் தன்னவள் குடிக்க போகின்றாள், அதுவும் தன் கண்ணெதிரில் என்றது நெருடலாய் இருந்தது.

    இதுவரை கிண்டல் கேலி செய்த மனசாட்சி, ‘அவ உன்னிடம் அவ பீலிங்கை அவ தாட்ஸை, ஓபனா பேசறா. அவளுக்கு தேவை அவ செய்கையை மறைக்காம பேசறா. டோண்ட் வொர்ரி ரிஷி. அன்பை கொடுத்தா அன்பு பெருகுமே தவிர என்னைக்கும் குறையாது‘ என்று எடுத்துரைக்க முகம் மலர்ந்தது.

      ஒரு டம்ளரில் ஊற்றி முடித்து அதிக நீரை சேர்த்து வைத்தவன் முறுக்கை எடுக்க சென்ற நேரம் ஷிவ் காலி செய்து கீழே வைத்தவள் மூச்சு வாங்க, வாஷ்பேஷனில் வாந்தி வருகின்றதா என்று வாயை மூடி காத்திருந்தாள்.

      நாற்றம் அடித்தது ஆனால் வாந்தி உணர்வு வரவில்லை என்றதும் ரிஷியை பார்க்க, அவனோ “போதும் போய் தூங்கு.” என்று அறைக்கு போக கூறினான்.

    ” இல்லை இன்னொரு முறை” என்று கேட்டாள்.

    “பொடிடப்பி… ஏதாவது ஆகி உங்க தாத்தா என்னை திட்டவா டி. இங்க பாரு… எங்கம்மாகிட்ட கூட இதை ஷேர் பண்ண முடியாது. என்னை கொன்று புதைப்பாங்க. போய் தூங்கு.” என்று விரட்டினான்.

       அவனிடமிருந்து பிடுங்கி ஒரே ‘கலக் கலக்’ என்று இரண்டு மூன்று முறை விழுங்கினாள்.

     “அடிப்பாவி பொடிடப்பி” என்று பிடுங்கி பின்னால் மறைத்தான்.

     “நான் புல்லா காலி பண்ணணும். கொடு” என்றாள்.

      “ஏ… விளையாடறியா… அறைந்துட போறேன் போடி.” என்றவன் மீதே மோதி அவனுக்கு பின்னாலிருந்த பாட்டிலை பிடுங்க முயன்றாள்.
  
     “ஷிவ்… நீ சரியில்லை. நீ என்னவோ மாதிரி சுத்தற, உண்மையை சொல்லுடி. ஏற்கனவே பழக்கமிருக்க?” என்று பிணாத்தினான்.

      “இல்லைடா… நான் உண்மைய தான் பேசுவேன். பொய் என் வாய்ல இருந்து வராது.” என்று கூறியவள் அவனின் தாடியை பிடித்து இழுக்க “ஓ மை காட் வலிக்குது” என்று அவளை கிச்சன் மேடை மீது தூக்கி அமர வைத்தான்.

    மீதி பாட்டிலை கேட்பவளிடம் கொடுக்க மறுத்து புத்திமதி கூற அவளோ கேட்டுக் கொண்டே இருந்தாள்.

    “இருந்தா தானடி கேட்ப?” என்று அவன் தொண்டையில் சரித்து கொண்டான்.

      காலி பாட்டிலை வைத்து விட்டு அவளோடு கிச்சனில் மேடையிலேயே அமர்ந்தான்.

       அடுப்போ மிக்ஸியோ எதுவும் இன்றி காலி மேடையாக காட்சியளிக்க ஏதோ ஒரு பூங்காவில் அமர்ந்து பேசும் தோரணையில் காலாட்டி அவன் தோள் மீது சாய்ந்திருந்தாள்.

      “ரிஷி… ரிஷி… வேந்தா… உன்னை எனக்கு பிடிச்சிருக்கு. ஐ திங்க் ஐ பால் இன் லவ் வித் யூ ரிஷி.” என்று பேசினாள்.

   ரிஷியின் உதடு மென்னகை விரிந்து, அவளின் கையோடு பிணைத்து அவளின் நகம்  ரேகையை கவனித்தான்.

     “ரிஷி… ரிஷிவேந்தா… புரியுதா…” என்று அவன் கன்னம் பிடித்து கேட்க, தலையாட்டினான்.

     “அவ்ளோ தான் ரியாக்ஷனா… வானத்துக்கும் பூமிக்கும் குதிப்பனு நினைச்சேன்.” என்றாள்.

     “நீ ட்ரிங் பண்ணிருக்க ஷிவ். காலையில சொல்லு குதிச்சி காட்டறேன்.” என்று மூக்கை ஆட்டினான்.

    “ம்கும் ம்கும்… நீ என்னை லூசர் ஆக்கிட்ட. நீ வின் பண்ணிட்ட, தாத்தா பாட்டி வின் பண்ணிட்டாங்க. நான் மட்டும் லூசர்.” என்று சிணுங்கி புலம்பினாள்.

     “அன்பை விதைக்கிறவங்க யாரும் தோற்று போக மாட்டாங்க ஷிவ்.

    நீயும் தோற்கலை. என் மனசை ஜெயிச்சியிருக்க.” என்றான்.

     “உனக்கு என்னை ரொம்ப பிடிச்சிருக்கா ரிஷி.” என்று தலைசாய்த்து கேட்டாள்.

    “ரொம்ப ரொம்ப… பிடிச்சிருக்கு.” என்று தலையில் முத்தமிட்டான்.

     “லிப்ல கிஸ் பண்ணு” என்று கேட்க, ரிஷியோ தயங்கினான்.

      இதற்கு முன் எல்லாம் அவளிடம் முத்தமிட பர்மிஷன் கேட்டு கொடுக்கவில்லை. அவனாக தான் அவள் கண்ணில் தோன்றிய காதல் உணர்வில் வலிய சென்று கொடுத்தான்.

    இன்று அவள் கண்ணில் காதல் தாண்டி மோகமும் ஆசையும் வழிந்தது. அதனை கண்டறிந்தவனாக அவளை எப்படி கையாள என்று புரியாது தவித்தான்.

    ஏதேனும் செய்து போதையில் செய்தான் என்ற அவப்பெயரை தாங்கி வாழ அவனுக்கு விருப்பமில்லை. அதே நேரம் தன்னவள் பார்வையின் பொருள் உணர்ந்தும் அதனை நிறைவேற்ற முடியாது சிந்திக்கலானான்.

     “ரிஷி… ரிஷி…” என்று ஜபம் செய்தவளின் குரலில் “ஹம்.. சொல்லு ஷிவ்” என்றான்.

     “ஷல் வீ கிராஸ் தி பார்டர் ரிஷி?” என்று கேட்டாள். ரிஷி “ஷிவ்?” என்று புரியாமல் திகைத்தான்.

    “டேக் மீ ரிஷி.” என்று அவன் உதட்டில் முத்தம் வைத்தாள்.

     ரிஷியோ “ம்ம்” என்று முத்தமிட்டான்.
 
     அடுத்த நாள் காலை பத்து மணிக்கு ஷிவாலி தலை பாரத்தோடு கண்ணை கசக்கினாள்.

     கிச்சன் மேடையில் ரிஷியை அணைத்து உறங்கியிருப்பது புரிந்தது.

     அவளின் நேற்றைய பேச்சு மங்கலாய் நினைவலையில் வந்து செல்ல தன் பேச்சும் செயலும் எண்ணி தன்னை கவனித்தாள். அவள் பயந்தது போல எதுவும் நிகழவில்லை.

   முதலில் அப்பாடா என்ற நிம்மதியும், அடுத்த நொடியே ஏன் நானா சொல்லியும் என்னிடம் அத்துமீறலை, என்று குழம்பியும் போனாள்.

     ரிஷியோ அவளின் அசைவுகளில் விழித்து “ஹாய் குட்மார்னிங்.. என்ன போதை தெளிஞ்சதா?” என்று எழுந்து சிங்கில் முகத்தை அலம்பினான்.

     ஷிவாலி எதுவும் பேசாது “ம்ம்.” என்றாள்.
   
     அவளிடம் வேறு கேலி கிண்டல் என்று ஆரம்பிக்காமல் பேஸ்ட் பிரஷ் எடுத்து நீட்டினான்.

     இருவரும் பிரஷ் செய்தனர். ஷிவாலி மட்டும் அடிக்கடி ரிஷியை பார்க்க, அவனோ தாடியை ட்ரம் செய்ய தொட்டு பார்ததான்.

    “பச்.. நேத்தும் இன்னிக்கும் டூ லேட்.. இப்படியே எழுந்தேன்.. ஆபிஸ் போகறப்ப கஷ்டமா இருக்கும்.” என்று குளிக்க சென்றான்.

தங்கள் வீட்டிலிருந்து கீழே சென்று கதவை திறந்தாள் ஷிவாலி. அவனோடு இருக்க தயக்கம் கொண்டு, கீழே வந்து அவனுக்கு காபி தயாரித்தாள்.

     அவளுக்கு சரண்யா கூறியது போல ரோஸ் மில்க் எடுத்து கொண்டாள்.

       ரிஷி கீழே வந்தப்பொழுது அவள் காபியை நீட்டி விட்டு மாடிக்கு குளிக்க சென்றாள்.

    ரிஷியோ காபி குடித்து மணியை பார்க்க பன்னிரெண்டு முப்பது ஆனது. பிரட்ஆம்லேட் மட்டும் இரண்டு போட்டு கொண்டு போனில் பிரியாணி ஆர்டர் தந்து விட்டு மாடிக்கு வந்தான்.

    ஷிவாலியிடம் பிரட்ஆம்லேட் தட்டை நீட்ட மறுக்காமல் வாங்கி கொண்டாள்.

     சாப்பிட்டு கொண்டே, “நீ ஏன் எடுத்துக்கலை?” என்று கேட்டாள். அவள் குரல் தானா என்று ஐயம் கொள்ளும் வகையில் இருந்தது.

    “நானும் தான் எடுத்துக்கிட்டேன்.” என்று பிரட்ஆம்லேட்டை கூறினான்.

     “பச்” என்று சலித்து ஷிவாலி திரும்பவும், “ஓ… நீ நேத்து பேசியதை கேட்கறியா…” என்றான்.

      அங்கு அமைதி நிலவவும், “ஷிவ்.. நேத்தே எடுத்துக்கிட்டா அது அன்கான்ஸியஸ்ல நடந்திருக்கும். வாழ்நாள் பூரா உறுத்தும் ஷிவ். ஏதோவொரு வேகத்துல நீ கேட்டு நானும் அதுக்கு ஒத்துழைப்பா நடந்துக்கிட்டா. வேண்டாம் தோனுச்சு.

      உனக்கு இப்பவும் அதே மைண்ட் இருந்தா சொல்லு.” என்று பதில் தொடுத்து வினாவும் வீசினான்.

      தண்ணீரை குடித்து முடித்து, வைக்க அது சரியாக வைக்காமல் கீழே விழ பார்த்தது.

    அதனை பிடித்து ஜன்னல் பக்கம் இருந்த இடத்தில் வைத்தான்.

    மணி பன்னிரெண்டை தொட்டு பன்னிரெண்டு முறை ஓசை எழுப்பியது.

      “ல…லஞ்ச் செய்யணுமே.” என்றாள். போனை எடுத்து ஆர்டர் கொடுத்து விட்டதை காட்டினான். டெலிவரி டைம் இன்னமும் நேரமேடுக்கும் என்று காட்டியது. 

     அவள் விழிகள் போனை கண்டு அவன் கண்களை கண்டும் நிலையற்று சுழன்று முடித்தது.

      ரிஷி அவளருகே மெதுவாய் வந்து இருகைகளிலும் அவளை ஏந்தி தனது படுக்கயறைக்கு சென்று கதவை காலால் தட்டி விட அது ஆட்டோமெடிக்காக சாற்றிக் கொண்டது.

    அவளின் முத்த தேவையை நிறைவேற்றி, முன்னேறிக்கொண்டு இருந்தான்.

***

     ஹரியும் சந்தியாவும் ஊருக்கு வந்ததும் முதலில் ஆர்வமாய் வரேவேற்ற சுஜாதா. பின்னர் சுஜாதாவின் கேள்வி மொழிகளுக்குள் திக்கு முக்காடி நின்றாள் சந்தியா.

   ஹரிகரனோ தலையை தேய்த்து கொண்டு பார்வையாளராய் இருந்தானே தவிர வார்த்தைக்கும் சந்தியாவின் பக்கம் சென்று பேசி எடுத்துரைக்கவில்லை.

      முதல் நாள் நகை பொம்மையாக வந்தவள் அடுத்தடுத்த நாட்களில் ஒவ்வொன்றாய் கழட்டி பீரோவுக்கு சென்றது.

     ஊரில் திருட்டு பயமென்று ஹரியும் அமைதியாக விடுத்தான்.

     சந்தியாவோ “இந்தளவு பயம்னா ஏன் நகையை எடுத்துட்டு வர சொல்லணும். கொஞ்சம் நஞ்சம் இல்லை ஹரி” என்று கூறவும், “இங்க பாரு… அம்மா ஏதோ ஊர்ல உன்னை மதிக்கணும்னு போட்டுட்டு வரச்சொன்னாங்க. அவ்ளோ தான். நாளை மறுநாள் போனதும் எடுத்துட்டு போயிடலாம். உன்னோடது எதுவும் விற்று திண்ணுட மாட்டேன்.” என்று கோபமாய் மொழிந்தான்.

     “சரி சரி ஏன் கோபப்படுற எனக்கு இங்க வந்ததே பிடிக்கலை. என்னவோ இஷ்டத்துக்கு உட்கார கூட முடியலை. காலை நீட்டதே மாமனார்னா மரியாதை இல்லை எழுந்திருனு கத்தறாங்க. தன்மையா சொன்னா எழுந்துக்க மாட்டேன். இதுல சாப்பிடும் பொழுது விரட்டி விடற மாதிரி பண்ணறாங்க.

    உன் தங்கச்சி ஹஸ்பெண்ட் அவர் பெயர் என்ன நவீனா… அந்தாள் வந்தா நான் இழுத்து போர்த்திக்கணும்னு உங்கம்மா ரூல்ஸ். ஏன் உங்க வீட்டு மாப்பிள்ளை என்ன பொறுக்கியா?” என்று பேசினாள்.
  
     “சந்தியா… வார்த்தையை பார்த்து பேசு. அம்மா அப்படி தான் ஆம்பளைங்க யார் வந்தாலும் அடக்கம் ஓடுக்கம் எதிர்பார்ப்பாங்க. இதுல என்ன தப்பு.” என்று பேசினான்.

“ஹரி… அதோட மீனிங் என்ன தெரியுமா? அடக்கம் ஓடுக்கம் இல்லை. என்னை இன்டேரக்டா சந்தேகப்படுற மாதிரியும் உங்க வீட்டு மாப்பிள்ளை பொறுக்கி என்பதும் தான். உனக்கு எப்படி புரிய வைக்க, எனிவே எனக்கு தேவையில்லாத விஷயம். நான் இந்த ரூம்லயே இருந்துக்கறேன். நாளைக்கு மறுநாள் ஊருக்கு கிளம்பலாம்.” என்று தலையை பிடித்தாள்.

   சந்தியாவுக்கு இங்கு வந்ததிலிருந்து தலைவலி பின்னியெடுக்கின்றது.

       சுஜாதா ஒரு புறம் நகை நட்டு என்று பெருமை பேசி தன்னை பற்றி ஒன்றும் பெரிதாய் மதிக்காதது.

முத்துராமன் மறுபுறம் அவர் வயதில் இருப்பவரிடம் எல்லாம், ‘எங்க இந்த காலத்து பொண்ணுங்க வேலைக்கு என்று வர்ற பசங்களை காதலிச்சி கைக்குள்ள போடறாங்க. நம்ம என்ன பக்கத்துல இருந்து பார்க்க முடியுமா என்ன? எல்லாம் தனியா இருந்து அவங்கவங்க இஷ்டபடி வாழறாங்க’ என்று திருமணம் முடிந்தும் குறைப் பட்டு கொண்டே புலம்பினார்.

    ஏதோ ஹரியை வலை வீசி பிடித்து கைக்குள்ள போட்டுகொண்டதாக இருந்தது அவர் பேச்சு. துரத்தி துரத்தி காதலில் விழ வைத்தது இந்த ஹரிகரன் என்று கூறினாலும் ஆம்பளை பின்னாடி வந்தா உடரே அவன் பக்கம் சாய்ந்திடுவியா என்ற குத்தல் விழும் என்று அவர்கள் பேச்சிலிருந்து புரிந்துக்கொண்டாள்

      ஹரி தங்கை மட்டும் கொஞ்சம் அமைதி. அமைதி என்பதை விட பயந்த சுபாவம் என்பதால் தனியாக குழந்தையோடு அவள் பாட்டிற்கு இருந்தாள்.

    இந்த நவீன் எந்த ரகம் என்று தெரியாவிட்டாலும் ஒரே ஊர் என்று தினமும் வந்து சென்றிடுகின்றான்.

     அவளுக்கு தன்வீட்டில் அவள் சென்றதும் ஹரி சென்று வருவது கருத்தில் பதியவில்லை. நவீன் மாலினி வந்து செல்வது உறுத்தியது.

     பல பெண்களும் இப்படி தான். தான் மட்டும் அம்மா வீட்டுக்கு போய் ராணியாக ஒரு வேலை செய்யாமல் சுகபோகமாக இருந்துவிட்டு வருவது. அதே தன் வீட்டிற்கு நாத்தனார் வந்து விட்டால் ஏதோ முனங்கிக் கொண்டே எரிச்சலிலேயே சுழல்வது.

அவர்களும் தன்னை போல தாய் வீட்டிற்கு வந்து ஓய்வு எடுக்கலாமென என்றும் எண்ணிட மாட்டார்கள். சந்தியா விதிவிலக்கல்ல. அவளும் சராசரி பெண் என்பதை நிருபித்து இருந்தாள். இதற்கு போதாத குறைக்கு நவ்யா வேறு அழுதுழது ஓய்ந்ததாள்.

      எப்படா வீட்டுக்கு போகவேண்டும் என்ற மனநிலையில் சுற்றி திரிந்தாள் சந்தியா.

****

    மணி இரண்டு அடிக்க பத்து நிமிடம் ஆகும் நேரம் ரிஷி போன் ஒலித்தது.

    பத்து நிமிடத்திற்கு முன் தான் களைப்புற்று கண் சொருகியவன் எழுந்து அட்டன் செய்து பேசி முடித்து போனை அணைத்தான்.

     போர்வைக்குள் தனது ஷார்ட் டீ-ஷர்ட் தேடி எடுத்தவன் மடமடவென அணிந்து முகம் அலம்பி கைகளாலே தலையை கோதி முடித்து கீழே கேட் சாவி எடுத்து கொண்டு சென்றான்.

      பிரியாணி தான் வீடு தேடி வந்து கொடுத்துவிட்டு பணத்தை வாங்கி சென்றான்.

    ரசீது கொடுக்கும் நேரம் ரிஷி வயது உடைய பையனோ ரிஷி கன்னம் பார்தது வைக்க, ரிஷியோ ரசீது பெற்று கன்னத்தை தடவிக் கொண்டே, ‘இந்த பொடிடப்பி குங்குமம் எதுவும் வைக்க மாட்டாளே. பிறகு ஏன் அந்த பையன் குறுகுறுனு பார்க்கறான். பொட்டு ஏதாவது வச்சியிருப்பாளோ? கன்னத்துல ஸ்டிக்கர் பொட்டு இருக்குமோ’ என்று படிகளில் இரண்டு இரண்டாய் தாவியவன் அவளுக்கு முத்தம் வைக்கிறப்ப பொட்டு எதுவும் வச்சது மாதிரி தெரியலையே. ஆக்சுவலி பொடிடப்பி இயரிங்க்ஸ் அசசரிஸ் எதுவும் மாட்டியிருந்த மாதிரி தெரியலையே.’ என்று மாடிக்கு வந்து பீரோ கண்ணாடியில் கன்னத்தை பார்த்தான்.

   அங்கே பற்தடம் மட்டும் ஆழமாக பதிந்து இருக்க, “ஷிவ்…. பொடிடப்பி..” என்று குரல் கூடுதலாய் ஒலித்து முடித்தான்.

     போர்வைக்குள் தலையை மட்டும் நீட்டி, “எனக்கு வேற டிரஸ் எடுத்து தர்றியா. குளிச்சிட்டு வந்துடறேன்.” என்று களைத்து கூறியவளிடம் அவன் அதிர்வோ சிறு பொய் கோபமோ கூட பறந்தோடியது.

    ஆடையை எடுத்து கொடுத்துவிட்டு உணவை தயாராக ஹாலில் எடுத்து வைத்தான்.

இம்முறை தானாக பிரட் அல்லவா பாக்ஸை இரண்டும் அவள் தட்டருகே வைத்து விட்டான்.

-அலப்பறை தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்.


3 thoughts on “90’s பையன் 2k பொண்ணு-28”

  1. Kalidevi

    pidikama mrg panalum shivu life ah ethuka try panra konjam konjama, aana intha sandhiya love panitu ipo paru avaluku antha family pidikala antha family ku avala pidikama etho panranga vera . good rishi intha vati halwa avaluke va unaku venama

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Leave the field below empty!