Skip to content
Home » 90’s பையன் 2k பொண்ணு-29

90’s பையன் 2k பொண்ணு-29

ரி-ஷி-வா-29

 🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁  

தலைமுடியை டவலில் சினிமா பட நாயகி போல மாட்டிக்கொண்டு, டவுசர் டாப் என்று அணிந்து, “தண்ணி சுடுது தெரியுமா. பச்.. காலையில குளிச்சப்ப சில்லைனு இருந்தது. இப்ப சூடாயிருக்கு.” என்று சாப்பிட அமர்ந்தாள்.

“டேங்க் சூடாகியிருக்கும்.” என்றவன் பரிமாற, “எனக்கு பிரட் அல்வா வேண்டாம். ஒன்ஸ் நான் ரிஜெக்ட் பண்ணினா திரும்ப அதை திரும்பி கூட பார்க்க மாட்டேன்.” என்று அவனிடமே திரும்ப கொடுத்தாள்.

“ஏய்… அதான் நமக்குள்ள எல்லாம் ஸ்மூத்தா இருக்கே. இன்னும் என்ன கோபம்?” என்றவனிடம், “ரிஜெக்டட் பீஸ் இனி ஆல்வேஸ் ரிஜெக்டட் ரிஷி.” என்று சாப்பிட்டாள்.

ரிஷிக்கு ஏதோவொன்று வயிற்றில் அமிலம் கரைத்தது. இந்த நொடியை இதே போல பேசி கரைக்க மனமின்றி “ஓகே அப்ப இனி எனக்கும் பிரட் அல்வா வேண்டாம்” என்று தள்ளி வைத்தான்.

ஷிவாலியோ மடியில் தட்டை வைத்துவிட்டு அவனின் கழுத்தை கட்டி உதட்டில் முத்தத்தை ஒற்றி எடுத்தாள்.

பின்னர் அவன் சாப்பிட்டு நீர் அருந்த அதே வார்டர் பாட்டில் பருகினாள்.

முன்பு எச்சி என்று கூறியவள், இன்றோ அதை பொருட்படுத்தாததை கண்டு உள்ளுக்குள் ரசித்தான்.

“ஏன் ஷிவ் எங்கயாவது போகலாமா?” என்றதும் “எங்க வீட்டுக்கு கூட்டிட்டு போ” என்று கூறியவளிடம், “உங்க அப்பா அம்மா வீட்டுக்கு போகலாம்.” என்றதும் ஷிவாலி மௌனமானாள்.

“சட்டுனு அத்தை மாமா நம்ம வீடு இதெல்லாம் வரமாட்டேங்குது ரிஷி. வேண்டும்னு பண்ணறதில்லை… பழக்கம்” என்றாள்.

“ஐ நோ பேபி.” என்று பாத்திரத்தை விளக்க போட்டு விட்டு நீ கிளம்பி ரெடியாகு. நானும் கிளம்பிட்டு இதை போகறப்ப டிஸ்போஸ் பண்ணிடணும்” என்று நேற்று அருந்திய மது பாட்டிலை கவரில் பேக் செய்தான்.

இருவரும் கிளம்பி செல்ல, வழியில் “டேய் பணியாரம் உன் எக்ஸ் வீடு எது?” என்று கேட்டாள்.

“எதுக்கு… லாஸ்டைம் அந்த பக்கம் வந்து திட்டின. அதனால இப்ப சுத்திட்டு போறேன்” என்று உரைத்தான்.

“அடேய்… படுத்தாதே… வண்டியை திருப்பு. ஜஸ்ட் வீட்டை காட்டு” என்று கூற, அனைத்து வித கடவுளை வேண்டி திருப்பினான்.

போகின்ற வழியில் குப்பை தொட்டி அருகே மக்கும் குப்பை மக்கா குப்பை என்று பிரித்துயிருக்க அதில் தனது பாட்டிலை போட்டு விட்டு கூலிங் கிளாஸை அவளிடம் கொடுத்தான்.

“ஓய் பொடிடப்பி கூலிங் கிளாஸ் போட்டிருக்க தானே. வர்ற பச்சை வீடு.” என்று மறுபுறம் திரும்பிக் கொண்டான். எங்கே கூடுதலாய் ஒரு நொடி பார்த்தாலும் ஷிவாலியிடம் வாங்கி கட்டிக்கொள்வதென்று.

“ரிஷி இரண்டு டிக்கேட் பால்கனில உட்கார்ந்திருக்கு. அதுவா பாரு” என்றதும் அவனும் கண்ணாடி அணிந்திருக்க பார்த்து விட்டு அவளும் அவ ஹஸ்பண்டும்” என்று கூறினான்.

“பொண்ணு நல்லா தான் இருக்கு. ஹஸ்பண்டுக்கு காபி கொடுத்து பவ்யமா இருக்கு. அடக்கம் ஒடுக்கமான பொண்ணா டா” என்று கேட்டாள்.

“அய்ய… பவ்யமா அடக்கம் ஒடுக்கமா இருந்து என்ன பிரோஜனம். செல்பிஷ் டி.” என்றான்.

“ஏன் ரிஷி அவ ட்ரிங் பண்ண மாட்டா தானே.” என்று கேட்டாள்.

வானதி வீட்டை தாண்டி வந்ததும் ரிஷி ஷிவாலி பேச்சு அவளை பற்றி தொடர, “ஷிவ்… அவளோட உன்னை கம்பேர் பண்ணாதே. எனக்கு பிடிக்காது. அவ குடிப்பாளோ அடக்கமானவளோ அதெல்லாம் எனக்கு இப்ப தேவையற்றது.

எனக்கு என் ஷிவ் குடிச்சாலும் சரி மரியாதை தரலனைனாலும் சரி, ஏன் அடக்கம் ஒடுக்கமா இல்லைனாலும் உன்னை பிடிச்சிடுச்சு. நீ என் பாதி. இனி எவளும் என்னையோ என் மனதையோ உன்னிடமிருந்து பிரிக்க முடியாது.” என்றவனின் கோபங்கள் கண்டு கன்னம் வருடினாள்.

“பைக்கில போகும் போது வருடாதே ஷிவ். கூசுது.” என்று நெளிந்தான்.

“வெட்கம் நெளிவு எல்லாம் நான் தானே டா படணும். உனக்கென்ன நெளியற?” என்றதும் அடுத்த நொடி “ஆமா டி நான் உன்னை கடிச்சி என் நகம் பட்டு நீ வெட்கப்படணும். ஆனா என் கன்னத்தை பாரு கடிச்சி வச்சிருக்க. என் முதுகை பாரு நகத்தால கீறிவிட்டிருக்க. நாளை மறுநாள் ஆபிஸ் போனா அவனவன் ஓட்டி தள்ளுவானுங்க.” என்று பைக் கண்ணாடியில் அவள் கடித்த இடத்தை சுட்டி காட்டினான்.

“அப்ப அந்த டைம் கடிக்கணும்னு தோனுச்சு. கடிச்சிட்டேன் வேண்டுமின்னே கடிக்கலை.” என்று அவனிடம் பைக்கில் சண்டை போட ஆரம்பித்தாள்.

“இல்லை… நீ வேண்டும்னு தான் பண்ணின” என்றான்.

வண்டியை நிறுத்திவிட்டு இறங்கியதும் அதையே கூற, “இல்லை டா” என்று அரற்றினாள்.

அவள் காதில் கிசுகிசுவாய் பேசி முடிக்க “சீ நீ டபுள் மீனிங்ல பேசற” என்று அழைப்பு மணி அடித்து விட்டு வாசலில் இருந்தனர்.

ராஜலட்சுமி திறக்கவும் வரவேற்று அமர வைத்தார்.

அம்மா சரிகா வீட்டுக்கு போனதும், போரடிக்குனு இங்க வந்துட்டதா கூறினான்.

வேதாச்சலம் அடிக்கடி பார்வை அவன் கன்னம் தீண்டி சென்றது.

மனோகரியோ சண்டை போட்டு வந்திருப்பாளோ என்று கணவரிடம் விவாதித்து கொண்டிருக்க ராஜலட்சுமியோ மருமகன் முகத்தை சரிவர பார்க்காத அடக்கமான மாமியாராக இருக்க கண்ணில் கருத்தில் எழுவில்லை.

மனோகரியும் வேதாச்சலமும் பேரன் பேத்தியை கண்டு எந்த அடிப்படையில் இதனை எடுத்துக் கொள்ள என்று புரிபடவில்லை.

மனோகரி தனியாக அறைக்கு அழைத்து கேட்க, மாடியில் வாக்கிங் போக வேதாச்சலத்தோடு ரிஷிவேந்தன் நடந்தான்.

இங்கு பேரனிடம் அவரும் அறையில் பேத்தியிடம் மனோகரியும் ஒன்றுப்போல் கேட்டனர். ஆனால் வினாக்கள் வேறு விதமாக.

“ரிஷி தம்பி பாப்பா அடிச்சிடுச்சா… இதென்ன பற்தடம்” என்றதும் வெட்கப்பட்டு நாணினான்.

“என்ன ஷிவா குட்டி அந்த தம்பி முகத்துல பற்தடமா இருக்கு. உன்னிடம் அது அத்துமீறி கடிச்சி வச்சிட்டியா. இல்லை இங்க வர சண்டை போட்டியா” என்று கலங்கி கேட்டாள் மனோகரி.

“அய்யோ பாட்டி… அவனெல்லாம் அத்துமீறுவானா? அது அம்பி பாட்டி. நான் தான் அவனோட ரெமோவா ரொமான்ஸா இருந்தப்ப கடிச்சது.” என்றதும் மனோகரி பேத்தியை ‘என்னடி சொல்லற’ என்று விழித்தார்.

“செம்புல பெயல் நீர்போல…. கேள்விப்பட்டிருப்பியே… அப்படி கலந்துட்டோம்” என்று கூறி கண்ணடித்தாள்.

மாடியில் ரிஷியோ, “தாத்தா அவ அடிக்கலை. நீங்க என்ன என்னை அவ அடிச்சா வேடிக்கை பார்ப்பேன்னு நினைச்சிங்களா. இது அவ ஆசையா காதலோட மன்மதலீலை விளையாடினப்ப கொடுத்தது.” என்று தங்கள் வாழ்க்கை முறையையும் கூறினான். அவரும் பேத்தி ரிஷியோடு இனி வாழ ஆரம்பித்து விட்டார்கள் என்று அந்த முதியவர் ஆனந்தம் அடைந்தார்.

“சந்தோஷம் பா. சந்தோஷம்… எங்க அவ உன்னை காயப்போட்டு அதுக்கு வேற சண்டை வருமோனு பயந்தேன்.” என்று கூறவும், “தாத்தா அவ என் பொறுப்பு. ஒரு பூவை போல பத்திரமா பார்த்துப்பேன்.” என்றவனை அணைத்து கொண்டார்.

தனது சந்தோஷத்தை மனையாளோடு கூற வேதாச்சலம் படிகளில் இறங்கினார். “அதுசரி… இப்பவாது ரிஷி தம்பியை புரிஞ்சிட்டு போனியே சந்தோஷம் தாயி.” என்று முத்தமிடவும் இரு முதிய ஜோடியும் கண்களால் உனக்கும் தெரிந்ததா என்று கேட்டுக் கொண்டனர்.

அதை பார்த்து இளைய ஜோடிகளோ மாறாத புன்னகையை மாற்றி கொண்டனர்.

ராஜலட்சுமியோ காபி சிற்றுண்டி என்று தர மனோகரி மூலமாக ராஜலட்சுமிக்கு விஷயம் தெரிந்து கொண்டார்.

இனி சின்னவள் வாழ்க்கை புரிதலோடு சென்றிடும் என்று மனம் நிறைந்தது.

ராமமூர்த்தியோ மாப்பிள்ளையை கண்டதும் நலம் விசாரித்து மகிழ்ந்தார்.

அதன் பின் இரவில் ரிஷி ஷிவாலி பகலில் கண்ட வேட்கை போன்று இரவிலும் தணித்து கொண்டனர்.

இரவெல்லாம் ‘ரிஷி ஷிவ்’ என்ற முனங்கல் மட்டும் ஒலிக்க செய்தனர்

அடுத்த நாள் காலை எழுந்த பொழுது ஷிவாலி குளித்து அரட்டை அடிக்க படம் பார்க்க என்று சோபாவில் இருக்க, சந்தியா ஹரிகரன் வந்திருந்தனர்.

சந்தியாவை வரவேற்க அவளோ ‘இவ எப்ப வந்தா?’ என்று அறைக்குள் நுழைய பார்க்க அங்கே ரிஷிவேந்தன் உறங்க கண்டு பையை ஹாலிலேயே வைத்து முகம் அலம்பினாள்.

ராஜலட்சுமி தான் அப்பா அறையில போய் தூங்கு டி. காபி போடவா. ஹரிகரன் மாப்பிள்ளை வீட்ல எல்லாரும் நல்லாயிருக்காங்களா.” என்று கேட்க “நல்லாயிருக்காங்க” என்று ஹரியை அழைத்து தந்தை கட்டிலில் அமர்ந்தாள்.

ராமமூர்த்தி கறி வாங்க கடைக்கு சென்றிருக்க, அதிகாலை வந்த தம்பதியர் கையை பிசைந்தனர்.

ரிஷி எழுந்தாலும் ஷிவாலியோ டேய்… இங்கயே இருக்கணும் அதுவும் என்னை கொஞ்சிட்டே இருக்கணும்” என்று அவன் மடியில் படுத்து கொண்டாள்.

சந்தியாவுக்கே ஆச்சரியம் தான். தன்னால் உடனடியாக தங்கைக்கு திருமணம் நடந்து அவள் முகம் திரும்பி வாழ மாட்டாள். தனக்கான அங்கீகாரம் அதற்குள் பொறந்தவீட்டில் புகுந்த வீட்டில் பெயரெடுக்க எண்ணியிருக்க, ஷிவாலியோ எளிதில் ரிஷியோடு ஐக்கியம் ஆனதால் எப்பொழுதும் போல ஷிவாலியே வீட்டிற்கு பிடித்த மகளாக வலம் வந்தாள்.

ரிஷியும் ஹரிகரனோட சிறிதளவு பேசிட, நேரம் போனது.

“ரிஷி… ரூம்ல போய் தூங்கலாமா?” என்று வாட்ஸப்பில் எதிரெதிர் இருக்க கேட்டு வைத்தாள்.

மெஸேஜை பார்த்து முறுவலிட்டு, நம்ம வீட்டுக்கு வா… முப்பொழுதும் மூழ்கடிக்க வைக்கிறேன். இங்க நோ டா செல்லம்” என்று அனுப்பி வைத்தான்.

உதடு கோணித்த எமோஜி அனுப்பிவிட்டு அன்னையிடம் வந்தாள்.

“எங்கடி தங்க கம்பள்? ஒரு நகையை கழுத்துல போட்டிட்டு வரலாம்ல. எல்லாத்தையும் அப்படியே பூட்டி வைக்க போறியா” என்று அதட்டு போட்டார்.

“ராஜலட்சுமி… நான் போட்டிருக்குற டிரஸுக்கு நகைக்கடை மாதிரி வர முடியாது. எங்கத்தையே என்னை ஆர்டர் போடலை நீ என்ன சில்வண்டு சில்வண்டு” என்று அன்னையை திட்டினாள்.

“சந்தியா ஊருக்கு போட்டுட்டு போன நகையை கொடுத்தா பீரோல வச்சிடுவேன்” என்று ராஜி பார்வை பதிக்க, ‘அடியாத்தி… இந்த அம்மா என்னிடம் கேட்டது இந்த மீனுக்கு வலை வீசவா… உஷார் பார்ட்டி’ என்று தாயை மெச்சுதலாய் மனதில் பாராட்டினாள்.

“ம்மா… அது வந்து… நீ கொடுத்த நகை அத்தையிடம் இருக்கு. மொத்த நகையும் எடுத்துட்டு வர பயந்து பாதி தான் எடுத்துட்டு வந்தோம்.” என்றாள்.

“அதென்னடி போகறப்ப நீயும் உன் புருஷனும் தானே போனிங்க. இப்பவும் நீங்க தானே. என்ன பயம்?” என்றவர், “உன் நகையை உங்க மாமியார் வீட்ல வச்சிக்கோ. என் நகையை மட்டும் கொடு.” என்று கேட்டார்

“அதான்மா… அதோட உன் நகை அங்க இருக்கு” என்று கூறவும் ராஜி கொதித்து விட்டார்.

உன்னிடம் போறப்ப சொல்லி தானே கொடுத்தேன். இப்படி வந்து நின்னா என்ன அர்த்தம். சரி விடு… உன்னோடதை அந்த ஆரத்தை எடுத்து கொடு. நான் கல்யாணத்துக்கும் சம்பந்தி வீட்டுக்கும் போகறதா இருந்தா அதுவரை போட்டுக்கறேன்” என்றதும் சந்தியா தயங்கினாள்.

“என்ன தயக்கம் பையில தானே இருக்கு.” என்றதும் “இல்லைமா வீட்டுக்கு போய் வச்சிட்டேன்.” என்று சட்டென கூறிவிட்டாள்.

“ஆக வீட்டுக்கு போய் நகையை வச்சிட்டு சவதானமா நேரா இங்க வந்திருக்குற மாதிரி நடிக்கிற” என்றதும், ம்மா..” என்று சந்தியா கத்திவிட்டாள்.

“கத்தாத டி… உங்கப்பா காலையில சின்ன மாப்பிள்ளைக்கு படிக்க இங்கிலிஷ் பேப்பர் வாங்கணும்னு உங்க தெரு வழியா தாண்டி தான் போனாராம். காலையிலேயே அங்க போயிட்டு தான் இங்க வந்திருக்க. பெத்த அம்மாவிடம் என்ன திருட்டு தனம்.” என்றதும் சந்தியா அழுகை உடைப்பெடுத்தது.

“ம்மா.. உன் நகை மட்டும் காணாம போயிடுச்சு மா. அதெப்படி ஒன்னு மட்டும் காணோம்னு கேட்டதுக்கு, எங்க மேல திருட்டு பட்டம் கட்டறியானு வாய்க்கு வந்தபடி பேசறாங்க. சத்தியமா அந்த நகைமட்டும் எப்படி போச்சுனு தெரியலைனு அவர் மேல சத்தியம் பண்ணி பேசறாங்க.

பெத்த என் மேல சத்தியம் பண்ணறாங்கனு அவர் என்னை திட்டறார். நாத்தனார் அவர் வீட்டுக்காரர் மேல சந்தேகப்பட முடியலை. அவங்க அதுக்கும் திட்டறாங்க. அதையும் மீறி அவங்க வீட்டுக்கு போய் இவரு அலசி பார்த்துட்டார். எங்கயும் காணோம் மா.

நாங்களே அங்க இருந்து சண்டை போட்டு இங்க வந்துட்டேன். அவரும் என்னோட பேசலை. நகையோட வந்தா உன் நகையை கேட்பனு தான் வீட்ல வச்சிட்டு வந்து இங்க வந்தோம். அது கூட வீட்ல இருந்தா நிம்மதியில்லை” என்று அழுதாள்.

ஷிவாலிக்கோ கதை கேட்கும் ஆர்வமாக கையை கன்னத்தில் வைத்து அமர்ந்திருந்தாள்.

ராஜலட்சுமியோ நெஞ்சில் கைவைத்து பயந்தார். நகை காணாமல் போனதற்காக அல்ல. இதென்ன போனயிடத்தில் நகை காணோம் என்றதும், சம்பந்தி வீட்டார் எப்படியோ காதல் கீதலென இவள் என்ன அவஸ்தை படுகின்றாளோ என்று பயந்தார்.

அவர் கூட சண்டையா..?” என்று ராஜி கேட்க, “கொஞ்சமா.. ஆனா என்னிடம் அங்க இருந்தவரை கோபமா இருந்தார். இப்ப கொஞ்சம் பரவாயில்லை. அவருக்கும் தர்மசங்கடமா இருக்கு. காதலிச்சு இந்த இடைப்பட்ட நாள்ல இப்படி ஒரு அசம்பாவிதமா என்றதும் உங்க வீட்ல என்னை தப்பா எடுத்துப்பாங்க தானே. எங்க குடும்பத்தையும் தப்பா பேசுவாங்கனு ஒரே புலம்பல்.” என்று பேசவும், ராஜலட்சுமி இடிந்து போனார்.

யாரிடம் என்ன கூறுவது ஏற்கனவே கணவருக்கு பெரியவளையும் பெரிய மாப்பிள்ளையும் பிடிப்பதில்லை. ஜாதி விட்டு, காதல் என்று இஷ்டத்துக்கு ஆடிவிட்டாளே என்றும் ஹரிகரன் குடும்பத்தையும் இரண்டு மூன்று நிகழ்வில் பிடிக்காமல் போனதே காரணம். தற்போது இது வேறா என்ற மலைப்பு தோன்றியது.

“ஷிவாகுட்டி… இதை பத்தி அப்பாவிடம் பேதாதே. உங்க பாட்டியிடமும் சொல்லிடாதே. நிதானமா இரண்டு நாள் போனதும் சொல்லலாம்.” என்று கோரிக்கை வைத்தார் மகளிடம்.

சந்தியாவை பார்க்க பாவமாக தோன்ற, “எனக்கு தேவையில்லாத பிரச்சனையில தலையிட மாட்டேன் மா. நான் ரிஷி கூட ஈவினிங் கிளம்பிடுவேன்” என்றாள்.

-அலப்பறை தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்.

1 thought on “90’s பையன் 2k பொண்ணு-29”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Leave the field below empty!