ரிஷிவா-31
🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁
சரிகா வீட்டைக்கு சென்று சாவி கொடுத்துவிட்டு மதியம் அங்கேயே சாப்பிட்டனர்.
பக்கத்திலே கறிக்கடை இருக்க, ஆட்டு கறி வாங்கி மட்டனு குழம்பு செய்து விட்டனர்.
ஷிவாலி இம்முறையும் சுடிதார் தேவதையாக ஹனிமூன் செல்வதற்கு தானே என்று அணிந்து செல்ல, இங்கே ரிஷி அழைத்து வந்ததும் முதலில் திகைத்தாள்.
முதல்லயே சொன்னானா இவன் என்ற கோபம் வந்தாலும் ரிஷியிடம் அதனை காட்டிக்கவில்லை. ஆனால் சரிகா அத்தை கண்ணை சுருக்கி மேலிருந்து கீழே வரை பார்வை விடுத்து சென்றதும் ரிஷியை முறைத்து விட்டாள்.
“நான் என்ன எக்ஸிபிஷன் பொம்மையா டா. அந்த தாய் கிளவி என்னை இந்த லுக் விடுது.” என்று கத்தினாள்.
“ஷிவ் ஷிவ்… மெதுவா பேசு. இது நம்ம வீடு இல்லை. ஏதாவது பேசினா சரிகாவை தான் ஹர்ட் பண்ணுவாஙக. என்ன உங்க அண்ணி இப்படி பேசறா இப்படி டிரஸ் போடறானு கேட்பாங்க. அமைதியா இரு அவங்களே மறந்துடுவாங்க. அம்மாவை விட வயசுல பெரியவங்க ஷிவ்” என்றதும் ஷிவ் முகம் தூக்கி வைத்தாள்.
சரண்யாவோ சம்பந்திம்மா வயதில் இவர்களை விட பெரியவள் என்று செய்கையை கண்டுக்காது வேடிக்கை பார்த்தார்.
ஷிவாலி முகம் கடுகடுக்க, ரிஷி அவளிடம் சமாதானம் செய்வதை ஓரவிழியில் பார்த்து, ‘அச்சோ.. என் புள்ள சமாதானம் எல்லாம் பண்ணுதே. பரவாயில்லை அக்மார்க் கணவன் மெட்டீரியலா மாறிட்டான்.’ என்று நடிகை சரண்யா மாமியார் ரோல் செய்தால் எப்படியிருக்குமோ அப்படி தான் பூரித்து நின்றார்.
சரிகா ஒரு தட்டு எடுத்து வந்து அதில் சேலை, பூ, பழம் குங்குமம் மஞ்சள் வளையல் வெற்றிலை பாக்கு என்று கொண்டு வந்து கொடுத்தாள்.
ஷிவாலி திருதிருவென விழிக்க, “நீங்க ஊருக்கு போயிட்டு வந்தப்பிறகு விருந்து வைக்கலாம்னு பையன் சொன்னான்.
இது முதல் முறை வந்ததால கொடுக்க எடுத்து வச்ச உடுப்பு. உங்க அண்ணியிடம் வாங்கிக்கோ.” என்று ஹரிஷ் அம்மா பார்வதி கூறவும், ரிஷியும் “வாங்கிக்கோ” என்றதும் பெற்றுக் கொண்டாள்.
“அண்ணி உங்க அளவு பிளவுஸ் வச்சி ஜாக்கேட் நானே தைச்சிட்டேன். போட்டு பார்த்து கரெக்டா இருக்கானு சொல்லறிங்களா.” என்று கேட்டாள் சரிகா.
தனக்காக ஒருத்தி மெனக்கெட்டு ஜாக்கெட்டை டிசைனாக தைத்து கொடுக்க மாட்டி பார்த்து சரியென்று சொல்ல என்ன குறைந்திடப் போகின்றது.
மாலை கிளம்பும் வரை நேரம் போக வேண்டுமே என்று ஷிவாலியும் தனக்கும் போராடிக்காதென சரியென்று ஜாக்கேட் மட்டும் எடுக்க, “இந்தா… இதையும் சேர்த்து கட்டிக்கிட்டு வாமா” என்று ஹரிஷ் தாய் பார்வதி கூறவும் ஷிவாலியோ ரிஷியை பார்வையில் மறுக்க கூறி துணைக்கு அழைத்தாள்.
அவனோ ‘ப்ளிஸ் எனக்காக ஜஸ்ட் டைம் பாஸ் தானே’ என்று மென்குரலில் அவளிடம் கூறினான்.
பெருமூச்சை வெளியிட்டு சேலையை எடுத்து தோளில் போட்டு மாற்றும் அறையை கேட்டாள்.
‘அம்மா.. நீங்க போய் அவளுக்கு கட்டி விடுங்க. ஷிவ்க்கு சேலைக் கட்ட தெரியாது.’ என்று காதை கடிக்க, “நான் கட்டி விடவா மா” என்று சரண்யா எழுந்தார்.
“நோ தேங்க்ஸ் ஆன்ட்.. ட்.. அத்தை. நானே கட்டிடுவேன்” என்று கூறவும் ரிஷி நேத்து கட்ட தெரியாது என்று கூறினாள் என்று பார்வை பதித்தான்.
அவளோ ‘போச்சு வாயை விட்டுட்டேனா?’ என்று மாற்றொரு அறைக்கு சென்று சேலை மாற்ற சென்றாள்.
இங்கு ரிஷியோ ‘இவ எதுக்கு பொய் சொன்னா. என்னிடம் இன்னமும் இந்த பொடிடப்பி ஏதோ கேப் விட்டு பழகுற மாதிரியே தோனுதே.’ என்று கோபமாய் நின்றான்.
சேலை அணிந்து வந்தவளை பார்க்காமல் முகம் திருப்பி நிற்க, சரிகா மூன்று முழம் மல்லிப்பூவை எடுத்து தலையில் வைத்தாள்.
உனக்கு எந்த டிரஸும் அழகா தான் இருக்கு” என்று ஹரிஷ் அம்மா நெட்டி முறிக்கவும் தான் ஷிவாலி மனம் சற்று தாய் கிழவி மீது பாசம் பொங்கியது.
இது ஒரு வகை. தன்னை கண்டு கேலி செய்தோ முகம் திருப்பி ஏதேனும் குறை கூறினால் அவர்களிடம் பேச பழக பிடிக்காமல் ஒதுங்குவது. அதே ஆட்கள் ஒரு பாராட்டு பத்திரம் வாசித்து விட்டால் பேச பழக நெருடாமல் பழக மனம் உந்துவது.
அந்த நிலையில் ஷிவாலி இருந்தாள். ரிஷியை கண்களில் சேலை நல்லாயிருக்கா என்று கேட்க திரும்பினாள். அவனோ முகம் திரும்பி ‘உற்’றென்று இருக்க கண்டாள்.
கள்ளனுக்கு தெரியாதா காரணம். அவள் சொன்ன சேலை கட்ட தெரியாது என்ற பேச்சு அவனுக்கு தற்போது முரனாய் இருக்க கோபிக்காமல் இருப்பானா?
அப்படியென்ன கேட்டான் அக்கா ஊரில் செல்ல ஒரு சேலை எடுத்துவை என்றதற்கு மறுத்து இருக்கலாம். ஆனால் சேலை கட்ட தெரியாது என்று பச்சை பொய் கூறிவிட்டு தற்போது அம்மா உதவ வருகின்றேன் என்று எழுந்ததும் அவளே அசத்தலாய் அணிந்து வந்தாள்.
ரிஷியும் ஷிவாலியும் சேர்ந்து ஆசிர்வாதம் வாங்க கூறவும் ரிஷி எழுந்து வந்து ஹரிஷ் அம்மாவின் பாதம் பணிந்தான். கூடவே ஷிவாலி விழுந்தாள்.
“ரிஷி சேலை நல்லாயிருக்கா” என்றதும் அவன் பதில் தராமல் சட்டென எழுந்து விட்டான்.
ரிஷி இரவு பயணம் செல்வதால் சரண்யா மற்றும் ஹரிஷ் அம்மா பார்வதி சப்பாத்தி உருட்ட, சரிகாவும் அண்ணா அண்ணியிடம் பேசட்டும் என்று அவளுமே கிச்சனில் கரை ஒதுங்கினாள்.
“சேலை நல்லாயிருக்கா உன் தங்கை கரெக்டா பிளவுஸ் தச்சிருக்காங்க. டிசைன் கூட பிடிச்சிருக்கு” என்றாள்.
முகம் திருப்பி போனை எடுத்து அவளை போலவே டெம்பிள் ரன் விளையாட ஆரம்பிக்க, “சாரி… கோபமா இருக்கனு தெரியுது. உங்கக்கா வீட்டுக்கு போக ஒரு சேலை எடுத்து வைக்க சொன்ன. கட்ட தெரியாதுனு பொய் சொல்லிட்டு இங்க கட்டிட்டு வந்ததுக்கு தானே?” என்று அவளே கேட்டு அவன் முகம் பார்க்க, அவனோ தீவிரமாய் போனில் விளையாடினான்.
“நிஜமா அப்போ சேலை எடுத்து வைக்க பிடிக்கலை. உங்கக்கா என்னை கிழிஞ்ச ஜீன்ஸ் போட்டேன்னு என்னோட காஸ்ட்லி ஜீனை கேவலப்படுத்திட்டாங்க. அது மூவாயிரம் தெரியுமா. ஆசையா எனக்கு பிடிச்சி வாங்கினேன். எப்பவும் என்னோட பேவரெட் டிரஸ் அது.
சிலருக்கு பேவரெட் டிரஸ் பேவரெட் பிளேஸுக்கு மனசுக்கு பிடிச்ச இடத்துக்கு போடணும்னு ஆசையிருக்கும். எனக்கு பிடிச்ச நாள் தான் அதை போடுவேன். அதனால தான் கல்யாணப்பட்டு எடுக்கறப்ப போட்டேன்.
மேபீ அப்பவே என்னை அறியாம உன்னை பிடிச்சிருக்கு. அதனால தான் என்னையும் அறியாம அந்த டிரஸ் போட்டேன்.
உங்கக்கா அதை கிண்டல் செய்யவும் அவங்க ஊர்ல அவங்களுக்கு பிடிச்ச சேலை போடணுமானு தான் வேண்டுமின்னே எடுத்து வைக்கலை.
பட் இப்ப ஆன்ட்டி எனக்கு சேலை கட்டி விடறேன்னு சொன்னதும் என்னோட பார்ட்ஸ் ஆப் பாடியை அவங்களுக்கு காட்டிட்டு நிற்க பிடிக்கலை. அதனால தான் அவங்களை அவாய்ட் பண்ணி நானே கட்டிட்டு வர உண்மையை சொல்லிட்டேன்.
என்னோட பார்ட்ஸ் ஆப் பாடியை உன்னோட கண்ணு மட்டும் தான் பார்க்கணும்” என்று கடைசியாய் பெரிய ஐஸை தலையில் போடவும் திரும்பினான்.
“பொய் சொன்னதுக்கு பனிஷ்மெண்டா இந்த சேலையோட தான் என்னோட டிராவல் பண்ணற” என்று திரும்பிக்கொண்டான்.
“ம்ம்.. எனக்கு வேர்க்காது. ஏசி பஸ் தானே பரவாயில்லை. பணியாரம் முகத்தை இந்த பக்கம் திருப்பேன்”
“போடி டி பொடிடப்பி… பீட்ஸா மூஞ்சி…” என்று மூக்கை கிள்ளி வைத்தான்.
‘இவளே அறியாம தான் உண்மை உளறினா ஆனா எப்படி சமாளிக்குது இந்த பொடிடப்பி. இதை இனி நம்பக்கூடாது. என்று மனசாட்சி கூற, ‘சேசே உள்ளத்தாலும் உடலாலும் ஐ லவ் ரிஷினு சொல்லியிருக்கா. ஆனா இப்படி தான் ஸம்டைம் என்னை சின்னதா காயப்படுத்த பார்க்கறா. ஆனா கொஞ்சம் மாறியிருக்கா. நான் கோபப்பட்டா அவளா இறங்கி வர்றா’ என்று கூறி அவன் மனதை ஒப்பேத்தி கொண்டான்.
“ஆமா நடுவுல கொஞ்சம் பொய்யை அள்ளி விட்ட, என்னை பிடிச்சதால தான் உன் பேவரெட் டிரஸ் போட்டேன்னு.” என்று கேட்டான்.
“நிஜமா பிடிச்சது. நீ பாஸா பெயிலானு பார்த்தா பாஸ் மார்க் வாங்கற லெவல்ல தான் இருக்க. அதுவும் இல்லாம ஏஜ் சொன்னாதான் தெரியுது. மற்ற படி நீ என் ஏஜ் குருப் மாதிரி தான் இருக்க. அதனால தான் சைட் அடிச்சிட்டேன்.” என்று கூறி காலால் அவன் காலை இடித்தாள்.
“ஷிவ் இது நம்ம வீடு இல்லை. சும்மாயிரு” என்று நகர்ந்து அமர்ந்தான்.
இப்படியே கொஞ்சம் கொஞ்சமாய் நேரம் போக மணி நான்கிற்கு கிளம்பி கோயம்பேடு அருகே சர்வேஷ் டிராவல்ஸ் என்று பிரைவேட் இடத்தில் பஸ் ஏற சென்றனர்.
இங்கே பார்வதி சரண்யா சரிகாவிடம் கையசைத்து சப்பாத்தி வாங்கி கொண்டு ஜன்னல் இருக்கையில் அமர்ந்தனர்.
இரயில் பெட்டி போல ஒவ்வொரு இருக்கைக்கும் தடுப்பு போட்டு கச்சிதமாய் இருக்க, ஏசியின் குளிரில் கண்ணாடி ஜன்னல் ஸ்கிரினை திறந்து வெளியே பார்வையிட்டனர்.
“புது அனுபவம்ல?” என்றவனிடம் “அய்ய ஊட்டிக்கு லீவு முடிஞ்சி போவேன். ஆனா ஏசி பஸ்ல இல்லை… நார்மல் பஸ் ராமமூர்த்தி கஞ்சபிசினாறி” என்று கூறவும் ரிஷி சிரித்து விட்டான்.
“ஏய் லூசு… நாம இப்படி போறதை சொல்லறேன். இருந்தாலும் மாமனாரை இப்படி வாறுற? நல்ல மனுஷன்” என்று பாராட்டு பத்திரம் வாசித்தான்.
“என்னது நல்ல மனுஷனா… அடேய் கிறுக்கா… பெரிய மக லவ் பண்ணறதை கமுக்கமா மூடி மறைச்சி உன் தலையில கட்ட பார்த்தார். அவர் உனக்கு நல்ல மனுஷனா…?” என்று முடியை எடுத்து முன்னால் போட்டு சாய்ந்தாள்.
அவளின் தலையிலிருந்த மல்லிப்பூ வாசம் ரிஷியின் சுவாசத்தில் கலந்து போதையேற்றியது.
“அவர் அப்பாவா யோசித்தார். அதை தப்பு சொல்ல முடியாதே. அதோட அம்சமா ஒரு பொண்ணை எனக்கு பெத்து கொடுத்திருக்கார்.” என்றவனும் சாய்ந்து கிறக்கமாய் கூறினான்.
“பஸ் எப்ப கிளம்பும்.” என்று கேட்டு அவர்கள் இருந்த இடத்தில் ஸ்கீரின் ஜிப்பை திறந்து தலைநீட்டி பார்த்தாள்.
பாதி பேர் ஏறி லக்கேஜ் வைக்கவும் அமரவும் என்று இருக்க, தலையை இழுத்து கொண்டு, ஜிப்பை மூடினாள்.
“எப்ப எடுப்பாங்க” என்றாள்.
“ஆறரை.. மணி இப்ப ஆறேகால்” என்றான்.
“அய்யோ மூச்சு முட்டுது.” என்றவள் இறுக்கையில் அவனை இடித்து கொண்டே இருக்க, “ஒருயிடமா உட்கார்ந்து வர்றியா என்னை மோதிட்டே இருக்க” என்றான்.
முறைத்து கொண்டு திரும்ப முயன்றவளிடம், சும்மா சும்மா இடிச்சிட்டு இருந்தா பிறகு நான் கிள்ள ஆரம்பிப்பேன்.” என்றவன் கைகள் அவளின் வெற்றிடையில் பதிந்தது.
அவளோ அவனின் இரு கையையும் இடையில் கோர்த்தபடி அணைத்து கொண்டு நெஞ்சில் சாய்ந்தாள்.
“மேடம் இது பஸ்ஸு… நீங்க என்ன நினைச்சிங்க” என்றவன் அவளை எழுப்பவில்லை.
“நீ தியேட்டர்ல படம் காட்டின.” என்று தாடையில் தலையை வைத்து இடித்தாள்.
“அதுவேற இதுவேற. முதல்ல எழுந்திரி. டிக்கேட் காட்டணும். நான் போய் ஸ்நாக்ஸ் வாங்கிட்டு வர்றேன்” என்று நாசூக்காய் தவிர்த்து எழுந்துவிட்டான்.
அவனுக்குமே அவளை அணைத்து கொண்டு அங்கே சில்மிஷ சீண்டல் புரிய ஆசை தான். ஆனால் மனம் தடுக்கவும் செய்ய சற்று எழுந்து அவளுக்கு ஸ்நாக்ஸ் வாங்க கிளம்பினான். சிப்ஸ் பேக்கேட் கூல்டிரிக்ஸ் என்று வாங்கி வந்தான். ஏற்கனவே வாட்டர் பாட்டில் இருக்க, சற்று நேரம் செல்ல வண்டி புறப்படவும் ஏறினான்.
வண்டி நகரவும் ரிஷியை தேடி போன் போட, பஸ்குள்ள தான் இருக்கேன் வந்துட்டேன்” என்று கூறி துண்டித்தான்.
சில நிமிடம் அவன் வருகைக்கு காத்திருக்க வராமல் போகவும், ‘ஒரு வேளை பஸ் மாறி ஏறிட்டானா?’ என்று குழம்பி மீண்டும் போனை போட்டாள்.
-அலைப்பறை தொடரும்
-பிரவீணா தங்கராஜ்.

love konjam over aguthu athanala vera ethana vara potho?
Akka veetla yenna kaathirukko
Wow super. Cute romance. But where is Rishi? Intresting sis.