Skip to content
Home » 90’s பையன் 2k பொண்ணு-35

90’s பையன் 2k பொண்ணு-35

ரிஷிவா-35

     ஷிவாலிக்கு முத்து முத்தாய் வே ர்வை அரும்பியது.

     இதென்ன இப்படி இருக்குமோ? என்று பயந்தாள். ஆனால் இங்கிருந்து சென்றது முதல் பாதுகாப்பாய் தான் இருந்தனர். அதனால் அப்படியெல்லாம் இருக்காது என்று நம்பினாள்.

    நீரை எடுத்து மடக்மடக்கென்று குடிக்காரி போல குடித்து வாட்டர் பாட்டிலை காலி செய்தாள்.

    முழு வாட்டர் பாட்டில் காலியானதும் அங்கே செல்வதற்கு முன்னே நடந்த நிகழ்வுகள் கண்முன் விரிய கோபமாய் ரிஷிவேந்தனை பார்த்தாள்.

    அவனோ தட்டை கழுவ கூட தேவையின்றி அன்னையின் கைப்பக்குவத்தில் மிச்சம் மீதி சொட்டுக்கள் கூடயின்றி வழித்து முடித்து அவளை பார்க்க, ஷிவ் முறைக்க கண்டான்.

     கண்ணபிரான் கை அலம்ப சென்றதும் “பிரியாணி விட இது செமையா இல்லை” என்று கூறினான்.

     டொம்மென்று பாட்டிலை வைத்தவளோ கோபமாய் தொடர் முறைப்பை பரிசாய் தந்தாள்.

     ‘என்ன தட்டை வழிச்சு சாப்பிட்டா பிடிக்காதோ. பீட்சா மூஞ்சிக்கு இந்த மாதிரி சாப்பிடுற சுகம் எங்க தெரிய போகுது.’ என்று முனங்கினாள்.

     அவளோ ‘பணியாரம்.. பணியாரம்.. மேல வாடி உனக்கு இருக்கு’ என்று கடிந்தாள்.

     நெடு நேரம் டிவி பார்க்க, அவனை கூப்பிடவும் முடியாது அமைதியாக சோபாவில் கோபமாகவே கடுகடுப்பாய் இருந்தாள்.

      சரண்யா இரண்டு மூன்று முறை பார்த்து விட்டு, “டேய்… டிவியை வேண்டுமின்னா மேல எடுத்துட்டு போய் வச்சிக்கோ டா.” என்று கூறினார்.

    “ம்மா… யார் வந்தாலும் இங்க வந்துட்டு தான் மேல வருவாங்க. வருண் வாசு வந்தா நாள் முழுக்க டிவி பார்ப்பாங்க.  இங்கயே இருக்கட்டும்மா வேண்டும்னா ஆறு மாதம் போனதும் வாங்கிக்கறேன்” என்றான்.

     சரண்யாவிற்கு இதற்கு மேல் எப்படி அனுப்ப என்று அமைதியாய் கடக்க கண்ணபிரான் வந்து ”வேந்தா.” என்று ஒரு குரல் கணீரென கூப்பிட்டார்.

     “அப்பா.” என்று பம்மியபடி எழ முற்பட்டான்.

    “ஏன்டா நேர நேரத்துக்கு தூங்க வேண்டாமா, போய் தூங்கு. எப்ப பாரு கம்பியூட்டர் முன்ன பார்க்கறது. இப்ப டிவியா. நைட்டு தூங்கறப்ப இந்த போன் கம்பியூட்டர் டிவியை எல்லாம் அவாய்ட் பண்ணுடா” என்று கூறவும் “சரிப்பா” என்று தலையாட்டி உடனடியாய் டிவியை அணைத்தான்.

       ஷிவாலிக்கு அவனின் பவ்யம் கலந்த பேச்சு ‘அடடடா’ என்ற எண்ணம் வந்து சிரிப்பை தந்தது. ஆனால் அவளிருக்கும் நிலையை கண்டு கோபம் கொப்பளிக்க முன் சென்றாள்.

     ஷிவாலி போனதும் ரிஷி,
“பேர் வச்சாலும் வைக்காம போனாலும் மல்லி வாசம்
அது குத்தால சுக வாசம்
அட இப்போதும் எப்போதும் முப்போதும் தொட்டுப் பேசும்
இந்த பெண்ணோட சகவாசம்

மொட்டுத்தான் வந்து சொட்டுத் தேன் தந்து
கிட்டத்தான் ஒட்டத்தான் கட்டத்தான் அப்பபப்பா” என்று பாடியபடி வந்து கதவை தாழிட்டான்.

    பின்னாலிருந்து தலையணையை வைத்து அடித்ததும், “பாட்டாடா பாடற.. யூ இடியட்” என்று மோத்தினாள்.

     “ஏம்மா… ஏன்… இந்த பாட்டு பிடிக்கலையே… ஏய்.. இது ரீமேக் சாங்க் டி. பழைய பாட்டு இல்லை.” என்று தடுக்க அவளோ “தடிமாடே..” என்று அடிக்க, “ஏய்.. ஷிவ்.. வலிக்குது டி, நோஞ்சான் மாதிரி இருக்க எப்படி வலிக்குது தெரியுமா” என்று அடி வாங்கியவன் தடுக்க மட்டும் முயன்றான்.

     “பாவி படுபாவி.. பேசி பேசியே குழப்பறதுக்குனு வந்தவன் டா நீ. நல்லவனா எங்க அப்பா, தாத்தா பாட்டினு பேசியே அவங்களுக்கு உன்னை பிடிக்க வச்சவன் நீ” என்று குமறினாள்.

    “ஏன் ஷிவ் அத்தைக்கு என்னை பிடிக்காதா” என்று அதிமுக்கிய கேள்வியை கேட்டு விட்டு விழித்தான்.

    “ஓ… சாருக்கு இப்ப முக்கியமா இந்த கேள்விக்கு விடை தெரியணுமோ.” என்று மொத்தி மூச்சு வாங்கினாள்.

     “ஏய் என்னை அடிச்சிட்டு உனக்கு ஏன் இப்படி மூச்சு வாங்குது. முதல்ல தண்ணியை குடி” என்று வாட்டர் பாட்டிலை நீட்டினான். அவளை கைத்தாங்கலாக தங்கள் அறைக்கு அழைத்து வந்தான்.
    
    நீரை பருகி மெத்தையில் அமர்ந்து நிதானித்திட, மெத்தை என்றதும் “பேசி பேசியே திரும்ப இங்க.. உன்னைய” என்று அடிக்க ஆரம்பிக்க, “பொடிடப்பி என்னடி பிரச்சனை?” என்றதும் முகம் புதைத்து அழுதாள்.

    “ஐ அம் பிரகனன்ட் டா தடிமாடே” என்று குலுங்கி அழுதாள்.
   
     ஆசையாய் முகம் மலர, இவள் அழுவதால் ஆனந்தத்தை அடக்கினான்.

       “எ..எப்ப.. எப்படி? நாம தான் பாதுகாப்பா?” என்று கைப்பிடிக்க, “தடிமாடே… கொடைக்கானல் போகறதுக்கு முன்னாடி” என்று அழுதாள்.

    ‘அடிசக்க.’ என்றவன் மனமோ “நான் என்னடி பண்ணுவேன். அது பிளான் பண்ணாம பண்ணியது. இப்ப நான் என்ன பண்ண. எந்த டாக்டரிடமும் போன” என்றான் நைசாக.

     “டாக்டரிடம் எல்லாம் போகலை. ஈவினிங் காபி குடிச்சப்ப வாமிட் வந்துச்சு. அதோட காபியை குடிக்கவே முடியலை. இங்க வந்தா சாப்பிடவும் முடியலை. வாமிட் வருது மயக்கம் வருது. டேஸ் கவுண்ட் பண்ணி பார்த்தா சிக்ஸ்டி டேஸ் டா” என்று கூறவும் ரிஷி நிதானமாக கையை பிடித்தான்.

      “விடு கையை. எனக்கு இதெல்லாம் வேண்டாம்னு சொன்னேனா இல்லையா… ஏன் டா இப்டி பண்ணின.” என்று திட்டினாள்.
  
    ‘என்னவோ நான் மட்டும் காரணம் மாதிரி திட்டறா. இவளா தானே பார்டர் கிராஸ் பண்ணலாமானு பெக் போட்டு உளறினா. ரிஷி இதை இப்ப நீ சொன்ன பொடிடப்பி தலைகாணியை வச்சிட்டு பேட்டால அடிக்கலாம் வாயை மூடி சமத்தா இருப்போம்.’ என்று சூளுரைத்து கொண்டான்.

     “டாக்டரிடம் நாளைக்கு போய் என்ன ஏதுனு கேட்போமா?” என்றான்.

     “தடிமாடே… அங்க போனா உங்க அம்மாவுக்கு எங்கம்மாவுக்கு எல்லாம் தெரிந்திடும். எங்க போற ஏது போறனு கேட்டு காதுல ஓட்டைய போட்டுடுவாங்க. மனோகரிக்கு தெரிஞ்சது நான் ஏதாவது கோல்மால் பண்ணுவேன்னு எதிர்லயே உட்கார்ந்து காவல் காப்பாங்க.” என்று புலம்பினாள்.

      “அப்ப என்ன பண்ணப் போற? முதல்ல கன்சீவா தான் இருக்கியானு டெஸ்ட் பண்ணினா தானே தெரியும். நீயா முடிவு பண்ணினா என்ன அர்த்தம்?” என்று வினவினான்.

       “அது எங்க வாங்கின?” என்று கேட்டாள்.

    “இங்க தான் என் ஸ்கூல் பிரெண்டோட பிரெண்ட் லோகு மெடிக்கல் ஷாப் வச்சிருக்கான் வாங்கினேன்.” என்று கூறினான்.

    “அவனிடம் போய் பிரகனன்ஸி கிட் வாங்கிட்டு வா. வீட்ல செக் பண்ணிடலாம். அந்த ரிசல்ட் எடுத்துட்டு ஹாஸ்பிடல் போகலாம். ஒருவேளை நீ சொல்ற மாதிரி இருந்தா நான் பயப்படாம இருப்பேன்” என்று சாந்தமானாள்.

      “அப்ப இரு… நான் போய் வாங்கிட்டு வந்திடறேன். கடை பதினொன்னு வரை திறந்து இருக்கும்” என்று எழுந்துக் கொண்டு வேகமாய் டீ-ஷர்டையை மாட்டினான்.

        பூனை போல மெல்ல பதுங்கி கேட் திறந்து பைக்கை எடுத்து மெடிக்கல் ஷாப் கடைக்கு வந்தான்.

      “என்ன ரிஷி போன தடவை அதை வாங்கிட்டு போன. அப்பவும் பிரகனன்ஸி கிட் வேண்டுமா?” என்று காலம் நேரம் இன்றி கேட்டு தொலைத்தான் லோகு.

     “ம்ம்… ஆமா.. உன் கடைக்கு கேஸ் போட்டு இழுத்து மூடறேன் இரு.” என்றவன் முகமெங்கும் ஆனந்தமாய் வாங்கி சென்றான்.

      வீட்டுக்கு வந்த நேரம் கையில் கொடுத்து “இயர்லி மார்னிங் டெஸ்ட் பண்ணினா குட் ரிசல்ட் சரியா காட்டுமாம்.” என்று கொடுத்தான்.

      “ஒரு அட்டையா வாங்கின?” என்று பாக்ஸை சுட்டி காட்டி கேட்டாள்.

    “இது எதுக்குடி ஒரு பாக்ஸூ ஒன்னு போதாது. இது கடைசி பாக்ஸ்னு அப்படியே கொடுத்துயிருப்பான்.” என்று கூறினான்.

       இரவெல்லாம் தூங்காமல் நேரத்தை பார்த்து பார்த்து தவித்தாள்.

   ஷிவ் எனக்கும் தூக்கம் வரலை” என்று இடையை பிடித்து தன்னருகே அரவணைக்க, “கையை எடு. நான் செம கடுப்புல இருக்கேன்.” என்றதும் கையை எடுத்து விட்டான்.

    ‘நான் செம ஹாப்பில இருக்கேன் ஷிவ். ஆனா ஆசை படலை… முதல்ல என்னனு தெரிந்துக்கறேன். எதிர்பார்ப்பு ஏமாற்றத்தை தந்துடுமோனு பயம் வரும். எதிர்பார்ப்பு இல்லைனா எதுவும் தோன்றாது.’ என்று இமை மூடி, கடவுளே ஷிவ் ஆசைப்படி நடக்கட்டும். அவ வெளி ஆசையை விட உள்மனதோட ஆசை எதுவோ அதை நிறவேத்து. ஏன்னா என் ஷிவ் வெளியே காட்டுற குணத்தை விட உள்மனசு வேற நினைக்கும்.’ என்று வேண்டினான்.

    உறங்காது நேரத்தை பார்த்து கொட்டாவி விட்டபடி மணி ஒன்றாக உறங்கினாள்.

      காலை ஆறு  மணிக்கு எழுந்து நேரம் பார்த்தவள் வேகமாய் அட்டைப்பெட்டியை எடுத்து சென்றாள்.

    அட்டை உள்ளே பிரிக்க இரண்டு கிட் இருந்தது. ஒவ்வொன்றும் வேறு வேறு கம்பெனி பெயரை தாங்கி இருந்தது.

    எதை உபயோகப்படுத்த என்று விழித்தவள் இரண்டையும் பிரித்தாள்.

     இது செவ்வகவடிவமா இருக்கு. இது ஓவல் ஷேப்ல இருக்கு.’ என்று இரண்டிலும் டெஸ்ட் செய்து பார்த்தாள்.

     பத்து நிமிட போராட்டம் அங்கே உலாத்தி கொண்டிருந்தாள். முடிவாக அவள் தேடிய ஆரம்பம் பதிலை காட்டியது.

    தலையை தாங்கியபடி கதவை திறந்து “ரிஷி ரிஷி… தடிமாடே” என்று எழுப்ப விதிர்த்து எழுந்து “என்னாச்சு ரிசல்ட் ரிசல்ட் என்னாச்சு” என்று தூக்கத்திலிருந்து எழுந்தான்.

    “இங்க பாரு” என்று மூக்கை உறிந்து காட்டினாள்.

     செவ்வக வடிவத்தில் இருந்த பிரகனன்ஸி கிட்டில் இரண்டு கோடும், ஓவல் ஷேப்பில் ஒரு கோடும் இருந்தது.

   முதலில் மகிழ்ந்தவன் இரண்டு இரு வேறு முடிவு காட்டவும், நீ எப்ப வாங்கின.” என்றான்.

     “அந்த அட்டப்பெட்டியில தான் இரண்டும் இருந்தது.” என்றாள் கோபமாக.

     “சரி நீ ஏன் இரண்டு யூஸ் பண்ணின.” என்று கேட்டான்.

      “வாங்கினது வேஸ்டாக கூடாதுனு இரண்டுலயும் டெஸ்ட் பண்ணினேன். இப்படி இருக்கு. இதுல எதை எடுத்துக்க” என்று சலித்தாள்.

    ”நாம இதையே எடுத்துக்கலாமே” என்று இரண்டு கோட்டை காட்டியதை எடுத்தான்.

    அவன் கையிலேயே இரண்டு தட்டு தட்டி, “டேய்… காமெடி பண்ணாதே இப்ப பிரகனன்ட் என்று எடுத்துக்கணுமா. இல்லை இது வெறும் தப்பா காட்டுது பீரியட்ஸ் வேற காரணத்துல தள்ளிப் போகுதானு எப்படி கண்டுபிடிக்க?” என்று அவனையே குடைந்தாள்.

    “முதல்ல பல் விளக்கிட்டு காபி குடிச்சிக்கறேன் டி” என்று ரிஷி நழுவினான்.

      அடுத்து காபி குடிச்சிக்கறேன், இதோ பாத்ரூம் போயிட்டு வந்துடறேன் என்று சுண்டு விரலால் அவஸ்தையுற்று கூற, ‘போய் தொலை’ என்று கடுகடுப்பாய் நேரம் போக்கினாள்.

    அடுத்து வேலைக்கு போகாமல் இருவரும் ஒரு லேடி மருத்துவரை சந்தித்து காட்டி என்ன ஏதென அறியலாம் என்று ரிஷி கூறினான்.

    பெற்றோரிடம் கூறி ஆசை வளர்பானேன் என்பது அவன் எண்ணம். பெற்றோருக்கு இது போன்றதை அறிவித்தால் பெத்துக்க கூறி தொந்தரவு செய்வார்கள் என்பது ஷிவாலி எண்ணம்.

    அந்த பிரம்மனோ எனது விளையாட்டில் உங்கள் எண்ணங்களை விட எனது எண்ணமும் செயலும் ஆட்சி செய்யும் என்று உரைத்தது போல பகடி விளையாடினார்.

       அலுவலகம் செல்வதாக இருவரும் சேர்ந்து நிஷாந்தினி என்பவரிடம் அப்பாயின்மெண்ட் வாங்கி டோக்கன் எண் அழைப்புக்காக காத்திருந்தனர்.

  “நான் ஒர்க் பண்ணற நர்மதா டாக்டரோட அத்தை இவங்க” என்று கூறினாள்.

     “ஓ… சூப்பர் ஷிவ்” என்று கை கொடுக்க அவனை அணலாய் முறைத்தாள்.

     அதிகாலை என்பதால் கூட்டம் சற்று குறைவாக இருக்க, “ஷிவ் குழந்தை இருந்தா என்ன பண்ணுவ. இல்லைனா ஒன்னும் பிரச்சனையில்லை. இருந்தா என்ன பண்ணுவ.?” என்று கவலையாய் கேட்டான்.

     “ரிஷி கலைச்சிடுவேன். எனக்கு இந்த குழந்தை குட்டி இப்ப வேண்டாம்.” என்றாள் யோசிக்காமல்.

     “என்ன பேசற ஷிவ். அது உன்னோடதும் என்னோடதும் சேர்ந்து உதித்த கலவை டி. நம்ம குழந்தை” என்று பேசினான்.

     “ஸ்டாப்பிட் ரிஷி. முதல்ல உனக்கும் எனக்கும் திருமணம் என்றதே எனக்கு ஏற்றுக்க முடியலை. இதுல குழந்தையா… நீ முதல்ல என்னிடம் அன்பா இருக்கியா இல்லையானு வாழ்ந்து பார்த்து உன் கேரக்டரை புரிந்து அப்ப பெத்துக்கறேன் இப்ப எனக்கு வேண்டாம். அதுவுமில்லாம என்னோட பேங்க் பேலன்ஸ்ல அட்லிஸ்ட் இரண்டு லட்சமாவது சேர்த்துட்டு தான் நான் குழந்தைக்கான கனவை யோசிப்பேன்” என்றாள்.

    “இரண்டு லட்சம் எதுக்கு… நான் வேண்டுமின்னா இரண்டுக்கு பதில் பத்து லட்சமா கூட போடறேன் என் அகவுண்ட்ல இருந்தா என்ன உன் அக்கவுண்ட்ல இருந்தா என்ன?” என்றான்.

     “அய்யோ ரிஷி உனக்கு புரியலையா. நான் நம்ம சேர்ந்து இருக்கறப்ப பேசலை. ஒரு வேலை சண்டையில பிரிஞ்சிட்டா… டிவோர்ஸ் ஆனா…. நான் எல்லாம் அப்பா வீட்டுக்கு போக மாட்டேன். தனியா ஹாஸ்டல்ல காலேஜ் டேஸ் மாதிரி இருப்பேன்.

உன்னை விட்டு பிரிஞ்சா உன் பணத்தை எப்படி வாங்குவேன்” என்ற கனம் ரிஷி அவளை அடித்திருக்க வேண்டும். ஆனால் அந்த முட்டாளோ கையை கட்டி கோபத்தை அடக்கினான்.

“என்ன ஷிவ் பேசற. டிவோர்ஸ் பிரிஞ்சு வாழ்ந்தா.. என்னவென்னவோ பேசற. உனக்கு என்னோட வாழுற லைப்ல நம்பிக்கை இல்லையா.” என்று கேட்டான்.

     “நம்பிக்கை….. இருக்கு ரிஷி. ஆனா…” என்று பேச டாக்டர் வரவும் ஷிவாலியை, நர்ஸ் மாலினி அழைத்து “டாக்டர் உங்களை உள்ள வர சொன்னாங்க” என்று கூறி கடந்தாள்.

     ரிஷி ஷிவாலி இருவரும் உள்ளே செல்ல, அவர்கள் காட்டிய இரண்டு பிரகனன்ஸி ரிப்போர்டும் பார்த்து விட்டு கையை தொட்டு பார்த்தார்.

     ஹார்ட் பீட்ல இரண்டு நாடியா சரியா கேட்கலையே. எதுக்கோ ஒரு ஸ்கேன் எடுத்துக்கோங்க. ஒரு ஆப்ரேஷன் இருக்கு. அது முடிச்சதும் உங்க ரிப்போர்ட்டை  பார்க்கறேன்.” என்று கடந்தார்.

      ஸ்கேன் ரிப்போர்ட் எடுக்க, குழந்தை இருக்கா, ஏதாவது சொல்லுங்க என்று அந்த ஸ்கேன் எடுக்கும் ஆட்களிடம் தொடர் கேள்வியில் “ம்மா.. ஒரு நிமிஷம் அங்க உட்காருங்க. ரிப்போர்ட் வந்ததும் கூப்பிடுவேன்” என்று நடந்தார்.

   ஷிவாலி ரிஷி மீண்டும் ஒரு தெளிவான பதிலுக்காய் காத்திருந்தனர்.

-அலப்பறை தொடரும்
-பிரவீணா தங்கராஜ்.

2 thoughts on “90’s பையன் 2k பொண்ணு-35”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Leave the field below empty!