ரி-ஷி-வா-10
🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁
ஹரிகரன் வீட்டிலிருந்து அவன் அப்பா முத்துராமன், அம்மா சுஜாதா, தங்கை கயல்விழி, தங்கை கணவர் நவீன், அவர்கள் குழந்தை நவ்யா என்று வரவும் அன்றே அவர்கள் பங்கிற்கு பூப்பழம் என்று மாற்றி நிச்சயத்து போக, அருகேயிருந்த ஷிவாலியோ அக்காவின் புது சேலை மல்லி சூடி அழகு பார்த்து ஹரிகரன் மற்றும் சந்தியா என்று இணைந்து நிற்க புகைப்படம் எடுத்து முடித்தார்கள்.
“கல்யாணம் உங்க இஷ்டப்படி செய்யுங்க. எங்க பக்கம் யாரும் வரமாட்டாங்க. அதனால கொஞ்சம் பேருக்கு சொல்வோம். கல்யாணத்துல மூன்றுல ஒன்னா பிரிக்கறதா சொன்னிங்க. அப்படி பார்த்தா எங்க வீட்டு ஆட்கள் குறைவா இருக்க, நாங்க அதிகமா கொடுக்கற மாதிரி ஆகாதா. அதனால ஒரு பங்குல பாதி தான் தரமுடியும். அப்பறம் எங்க இஷ்டத்துக்கு தான் சேலை தாலி போடுவோம். கட்டாயப்படுத்தாதிங்க.” என்று கறாராக மொழிந்தனர்.
ஹரிகரனுக்கு கஷ்டமாக போனது. ஆனாலும் அன்னை வீட்டிலேயே கூறிவிட்டாரே. அந்த பையனோட இரண்டு பேர் கூடபிறந்தவங்க, சொந்தம் சம்மந்தி என்று நீளமா இருக்கும். நாம செலவுல முன்றுல ஒன்றா கொடுத்தா கூட நமக்கு நஷ்டம். யார் யாருக்கோ செலவு பண்ண நாம யாரு டா. என்று கூறிவிட்டனர்.
அப்பறம் நீ லவ் மேரேஜ் என்று உனக்கு கம்மியா நகை நட்டு போட்டு துரத்த போறாங்க. அதெல்லாம் சரிபாதி வாங்கிடு’ என்று கூறவும் ஒருவேளை இது அந்த ரிஷியோடு ஈகோ பிரச்சனையை இழுக்கும் போல அதனால் அம்மா கேட்டால் அமைதியாக நின்றிட வேண்டும்.’ என்று முடிவெடுத்து வந்தவன் ஆயிற்றே.
அப்பறம் உங்க பொண்ணு இரண்டு பேரையும் பாகுபாடு பார்க்க மாட்டிங்கனு நினைக்கிறேன். அதனால நகை நட்டு எப்படி இரண்டு பேருக்கும் ஒரே அளவு தானே? எவ்ளோ போடுவீங்க?” என்று ஹரி அன்னை கேட்டதும், சந்தியாவுக்கு இதென்ன இப்படி கேட்கின்றனர் என்று ஆனது.
இதெல்லாம் சகஜமென்று ராஜலட்சுமி இருந்தார்.
மனோகரியோ “ஒருத்திக்கு தான் கல்யாணம் என்று வரன் பார்த்தது. ஆனா இரண்டு திருமணம் முடிக்கலாம்னு தோன்றியதும் இருக்கிற நகையில பாதி பாதி தான் இரண்டு பேருக்கும் கொடுக்க போறோம்.
ஆனா இதுல சின்ன பேத்தியை கட்டிக்கொடுக்கிற இடத்துல வரதட்சை பற்றி பேச்செடுக்கலை. எங்க இஷ்டப்படி போடுங்கனு சொல்லிட்டாங்க
உங்க மகளுக்கு ஆசையா போடறது போடுங்க. ஆனா வரதட்சனையா எதுவும் போடாதிங்கனு சொல்லிட்டாரு.” என்றதும் இவர்கள் பேச்சே எரிச்சலில் அறைக்குள் இருந்த ஷிவாலிக்கு ‘பார்டா… அம்புட்டு நல்லவனா டா நீயு’ என்று ரிஷிவேந்தனை மெய்ச்சியது.
தற்போது ஹரிகரன் வீட்டுப்பக்கம் வாய் திறக்கவில்லை.
நாங்களும் அதை தான் சொல்ல வந்தோம். நீங்க போடறதை போடுங்க. ஆனா வரதட்சனையா போடாதிங்க” என்று கூற, ஹிரிக்கே அதிசயம் தான்.
வீட்டிலிருந்த போது நாற்பது பவுன் கேட்டு கார் கேட்க எண்ணியிருந்தார்கள். அது முடியாது போக எரிச்சலாய் கை நனைத்தார்கள்.
முதல் நாளென்று கை நனைப்பதால் வெஜிடேரியன் செய்து வைத்தார்கள். ஆனால் அதுவும் ஹரியின் தாய் சுஜாதாவுக்கு ஒரு குறை.
என்ன செய்ய பையன் விரும்பிட்டானே என்று வாயை அடக்கினார்கள். ஒரு வழியாக திருமண தேதிக்கும் மண்டபத்திற்கும் சம்மதம் கூறி சென்றனர்.
திருமணத்துக்கு பிறகு எதிரே இருக்கும் வீடு போதாது என்று வீடு தேட கூறினார்கள். எதிரே ஒற்றை அறை அதிலேயே பாத்ரூம் என்று மாடி போர்ஷன் கொண்டது. பேச்சுலருக்கு சரிப்படும் அடுத்து திருமணம் செய்யப் போவதாலும் பொருட்கள் அதிகமாகும் குடும்பமும் விருத்தியாகுமென எண்ணி வீட்டை பார்க்க கூறிட தினமும் சந்தியாவோடு ஹரிகரன் வீடு தேடுதல் வேட்டையிலும் ஈடுப்பட்டான்.
ரிஷி அவனாக நம்பர் தெரிந்தாலும் அன்று பேசியதோடு சரி மீண்டும் அழைக்க அவனுக்கு பயம். எங்கே அவள் பேசியே தன்னை இளகி தன் வாயாலேயே திருமணத்தை தடை செய்திடுவாளோயென்று இடவெளி விடுத்தான்.
ஷிவாலி அவளுக்கும் அவனிடம் பேசவோ பழகவோ விருப்பமில்லை.
இப்படியே இருந்திட, பத்திரிக்கை அடிக்கவும் புடவை எடுக்கவும் சேர்ந்து செல்ல முடிவெடுத்தனர்.
முதலில் பத்திரிக்கை செலக்ட் செய்ய, ஆரம்பிக்க இரு திருமணம் என்பதால், மணமகன் மணமகள் புகைப்படத்தை அவர்கள் அவர்கள் அழைப்பிதழில் அச்சிட முடிவெடுத்தனர்.
வீட்டில் முடிவெடுக்கும் பத்திரிக்கையை பார்க்க கூட ஷிவாலிக்கு விருப்பமில்லை. அதனால் ராமமூர்த்தி ரிஷி கண்ணபிரான் மேலும் ஹரிகரன் என்று நால்வரும் தேர்வு செய்தனர்.
ஜோடி மாறிடப்போகுது பார்த்து கொடுங்க” என்றதும் ஹரிகரன் வீட்டில் நிச்சயம் செய்த நேரம் எடுத்த ஜோடி புகைப்படத்தை வாட்சப்பில் உடனடியாக அனுப்பினான்.
ஜோடிகளின் புகைப்படத்தை ஒட்டி, அவரவர் விருப்பப்படி உறவினரை அதில் முன்னிலைப்படுத்தி எழுதி கொடுக்க, ரிஷி மற்றும் ஷிவாலி புகைப்படம் மட்டும் வீட்டிற்கு சென்று தருவதாக கூறினார்கள்.
வீட்டில் வந்து ஷிவாலியிடம் நல்ல புகைப்படத்தை கேட்டு நிற்க, அவளோ “எனக்கு கல்யாணம் வேண்டாம்னு சொல்லறேன். நீங்க போட்டோ கேட்கறிங்க. என்னிடம் ஒரு போட்டோவும் இல்லை” என்று மனோகரியிடம் முறுக்கி நின்றாள்.
“அடிப்பாவி புது டிரஸ் போடுறப்ப எல்லாம் போட்டோ எடுத்தியே என்ன டி பண்ணின?” என்று மனோகரி பாட்டி திட்டிட, அந்த நேரம் ரிஷிவேந்தன் வேதாச்சலத்திற்கு போன் செய்து உடல்நலத்தை பற்றி கேட்டறிய, இவளின் குரல் அறைக்குள் வரை கேட்டது.
அவளிடம் பேச மாட்டானே தவிர, தாத்தா வேதாச்சலத்தோடு பேசும் போது கீச்கீச் என்று ஷிவாலி குரல் கேட்டு ரசிப்பான்.
இன்றும் அப்படியே கேட்டு விட, “சரி தாத்தா உடம்பை கவனிச்சிக்கோங்க.” என்று அணைத்தவன் கையோடு இரவு, ஷிவாலிக்கு அழைக்க முடிவெடுத்தான்.
ஷிவாலி மனம் தான் திருமணம் வேண்டாமென்றது. ஆனால் ஷிவாலியை சுற்றிய கூட்டமெல்லாம் திருமணத்திற்கு தயாராக உடை நகை என்று படையெடுத்தது.
ஷிவாலிக்கு நகை எடுக்க விருப்பமில்லை. அவள் வீட்டிலே இருந்து கொண்டாள். சந்தியா தான் குதுகலமாக அன்னை பாட்டியோடு சென்றாள்.
ஷிவாலிக்கு தேவையான நகைகள் எல்லாம் மனோகரி பாட்டியே ஆராய்ந்து எடுத்தார்.
“மனோ நகை எடுக்கறது நாம. அதனால ஷிவாலி வரலைனாலும் சமாளிச்சாச்சு. புடவை எடுக்க மாப்பிள்ளை வீட்டாட்களோட போகணும். அங்க இரண்டு வீட்டு சம்மந்தி ஆட்களும் வருவாங்க. அங்க ரிஷி பேரனோட அக்கா, தங்கை, அவங்க அம்மா வருவாங்க. இந்த பக்கம் ஹரிகரனோட அம்மா, தங்கை வருவாங்க. அந்த இடத்துல ஷிவாலி கல்யாணத்தை பிடிக்காம உற்றுனு இருந்தா கஷ்டமா போகாதா? இல்லை பார்க்கறவங்களுக்கு சந்தேகம் வராதா. கொஞ்சம் அவளிடம் பேசி சிரிச்ச முகமா வரச் சொல்லுமா. நாம கிணத்துல பிடிச்சி தள்ளலைனு புரியவை.” என்று கூறினார் வேதாச்சலம்.
பேத்தியின் செய்கையால் எந்த சஞ்சலமும் வந்திடக்கூடாதென்று ஆலோசனை தந்தார்.
பாட்டியோ “சில பிரச்சனையை நாம கிளறாம அப்படியே விட்டாலும் கூட பிரச்சனை பெருசாகாது.
அடுத்தவங்க முன்ன ஷிவாலி வாய் நீளாது. தேவையில்லாம அவமானப்படுத்த மாட்டா” என்று பேத்தியை புரிந்து கூறினார்.
இரவு ரிஷி உணவை விழுங்கி மாடிக்கு வந்தான். ஷிவாலி எண்ணிற்கு அழைத்து
“ஹலோ” என்று ஷிவானி எடுக்க, “சின்ன வயசுல ஸ்பீக்கரை முழுங்கிட்டியா? போன் எடுக்கறப்பவே ஹலோ… னு கத்தற?” என்றான் காதை தேய்த்தபடி.
“என்ன பிரச்சனை உனக்கு. நான் இப்படி தான் கத்துவேன். உனக்கு பிடிக்கலை டிராப் தி மேரேஜ் ” என்றாள் ஷிவாலி.
“டிராப் பண்ணற ஐடியா எனக்கில்லை டியர்.
ஆமா… பத்திரிக்கைக்கு போட்டோ கேட்டா கொடுக்க மாட்டேனு இன்னிக்கு காலையில உங்க பாட்டியிடம் சொன்ன. நீ கொடுக்கலை நான் உன்னோட பிக் கொடுப்பேன்.” என்றான்.
“டேய்.. என் போட்டோ யாராலும் எடுக்க முடியாது. என் போனை லாக் பண்ணியிருக்கேன்.” என்று கெத்தாக கூறினாள்.
“உன் வாட்சப்ல ஒரு போட்டோ அனுப்பியிருக்கேன்
அதை கல்யாண பத்திரிக்கையில போடலாமானு பார்த்து சொல்லு டி செல்லம் அத்தான் லைன்லயே இருக்கேன்.” என்றான் நமுட்டு சிரிப்போடு.
“டியா… செல்லமா… அத்தானா… அடேய்… உன்னை” என்று வாட்சப்பை திறக்க அவள் முட்டிவரை ஸ்போர்ட்ஸ் டிரஸ் அணிந்து இருந்ததை காணவும், அதிர்ந்தாள்.
“இதை எங்க இருந்து எடுத்த,?” என்று கேட்டாள் கோபமாக.
“உன் காலேஜ் வெப்சைட்ல.” என்றான்.
“உனக்கெதுக்கு என் போட்டோ.?” என்று ஷிவாலி கத்த, “சும்மா… பார்க்க எடுத்தது. வருங்கால மனைவி பார்க்க, ஏன் பார்க்க ஆசைப்பட கூடாதா? என்னம்மா இது நியாயம். நீ கேட்டா தரப்போறியா? அதனால நானே இருந்த மூளையை கசக்கி தேடி எடுத்தேன். பயங்கர உஷார் பார்ட்டி டி நீ. சோஷியல் மீடியால ஒரு பிக் கூட காணோம்.” என்று கலாய்த்தான்.
“திரும்ப திரும்ப டி போட்ட வீட்டுக்கு வந்து கடிச்சி வைச்சிடுவேன்” என்று கூற, “வாவ்… இசிட். கன்னமா உதடா? நைட்டானா கனவு காண பிக் வேண்டாமா?” என்றதும் பட்டென போனை வைத்தாள்.
போனமுறை ஷிவாலியின் திருமணத்திற்கு எடுத்த கூட்டு புகைப்படத்தில் மனோகரியிடம் தனியாக எடுத்தவையை பத்திரிக்கைக்கு அவராகவே தரவும் பத்திரிக்கை ஒரு புறம் மாடல் மட்டும் அடித்து வந்து சேர்ந்தது.
அதனை கண்டு ஷிவாலியோ “பனியாரம் மாதிரி இருக்கான். ஒரு நல்ல போட்டோ கூட கொடுக்க தெரியலை. இவனை போய் தாத்தாவுக்கும் பாட்டிக்கும் எப்படி பிடிச்சது” என்று கவலை கொண்டாள்.
போதாதற்கு அவன் போட்டோல கனவு காண என்ற நக்கல் பேச்சில் இம்முறை அந்த புகைப்படத்தை கண்டு ஏற்கனவே எடுத்து வைத்த புகைப்படத்தை சேர்த்து எது நன்றாக உள்ளதென பார்த்தாள்.
‘இதே நல்லாயிருக்கு.’ என்று முனங்கியவள் ‘அடச்சே… வரவர இவனை போய்’ என்று பத்திரிக்கையை தூர போட்டு படுத்து கொண்டாள்.
-சட்னி சாஸ் தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்.

Super super Rishi. Age different is real one. But. Rishi will adjust Shivali. Intresting sis.
Summavathu seendi paakanum unaku
SUPER EPI . RISHI UNAKU ARIVU ATHIGAM THAN . AGE VANTHU ORU VISHAYAMA THA NAMAKU THONUTHU TAKNU AANA LIFE NA ENANU VAZHA THERINJAVANGALUKU ATHU PERUSA IRUKATHU
ATHULA ORU SILAR LIFE KAPATRA PADUM ORU SILARKU VILUNTHUDUM . ITHULA EVANGA EPPADI JODI NU PAKALAM .
Super