👇 கதைகள் வாசிக்க / கேட்க 👇
💎 Premium Site🛒 Amazon Kindle▶️ YouTube Audio
Skip to content
Home » 90’s பையன் 2k பொண்ணு-11

90’s பையன் 2k பொண்ணு-11

ரி-ஷி-வா-11

 🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁  

       தன் போனில் இன்ஸ்டா முகநூல் ட்விட்டர் என்று முழ்கியிருந்தாள் ஷிவாலி. ஆர்.எம்.கே.வி வந்ததும் தலையை எட்டி பார்த்து, “பாட்டி என்னிடம் இது பிடிச்சிருக்கா அது பிடிச்சிருக்கானு உசிரை வாங்காதே. தாத்தா பேரை சொல்லி பிளாக்மெயில் பண்ண பார்த்தா அப்படியே ரைட் எடுத்து ஓலோ ஆட்டோ பிடிச்சி பறந்துடுவேன்” என்று கூற, மனோகரிக்கு திகில் பரவ தான் செய்தது.

   நேற்றே கணவர் வேதாச்சலம் சொல்லும் போது உறுத்தலாக இருந்தது. சமாளித்து விடலாமென எண்ணியிருக்க இறங்கும் போதே இந்த போடு போடுகின்றாளே என்று கடவுளை வேண்டினார்.

      ரிஷிவேந்தன் புன்னகை முகமாய் எட்டு வயது நிரம்பிய இரண்டு வாண்டுகளோடு படைசூழ வந்தான்.

    “மாமா அத்த.” என்று வருண் தேவ் சுட்டிக்காட்ட ஆங்காங்கே சின்ன சின்னதாய் கிழிசலோடு ஹாண்ட்பேக் சைடில் போட்டு போனை நோண்டிக் கொண்டு இருந்தாள்.

    ஹரிகரன் வீட்டில் தங்கை அம்மா என்று வரவும் சந்தியா ஓடிச்சென்று வரவேற்றாள்.

    ரிஷிவேந்தனுக்கு ஷிவாலி அப்படி தன் அன்னையும் அக்கா, தங்கையையும் வரவேற்கவில்லையென்ற கவலை சிறிதளவு எட்டிப் பார்த்தது.

    ஆனால் மனோகரியோ இருவீட்டு குடும்பத்தையும் வரவேற்றார்.

   ராஜலட்சுமி சின்ன மகளை இடித்து, சுட்டிக்காட்ட, “ம்மா.. என்ன?” என்று ரிஷியை கண்டு முகம் திருப்ப, “என்னடா கிழிஞ்ச ஜீனை போட்டிருக்கா?” என்று கவிதா காதை கடிக்க, ரிஷிக்கோ அக்காவிடம் என்ன சொல்லி விளக்க, இது தற்போது பரவி வரும் உடை என்றாலும் திருமணத்திற்கு அதுவும் கல்யாணப் பட்டை எடுக்க வர சற்றே சுடிதாராவதோ அல்லது அன்று வீட்டில் அணிந்த ஸ்கர்ட் சுடிடாப் போன்றதாகவோ அணிந்திருக்கலாமென வருத்தம் தோன்றியது.

     ஆனால் கவிதா காதை கடித்து கேட்ட இந்த கேள்விக்கு வருணோ, “ம்மா… இது ட்ரெண்டிங் மா. அத்தைக்கு நல்லாயிருக்கு. உனக்கு போட்டா தான் அசிங்கமா இருக்கும்” என்று காலை வாரினான்.

     சரிகாவுக்கும் ரிஷிவேந்தனுக்கும் சிரிப்பை வரவழைத்தது.

     கவிதாவிற்கு சொல்ல இயலாத வகையில் ஷிவாலி மேல் கடுப்பானது.

     “எப்படி ம்மா இருக்கே.” என்று சரண்யா வந்து கேட்டதும், ஷிவாலிக்கோ பெரியவர்களிடம் முகம் திருப்புதலை காட்ட மனமில்லை. அவர்கள் வந்ததும் ஏன் என்ன கவனிக்கலை. விசாரிக்கலைனு கேட்டாளாவது கோபிக்கலாம். ஆசையா வந்து கேட்டா அவமதிக்க இயலாது “பைன் ஆன்ட்டி” என்று தயங்கினாள்.

      “அன்னிக்கு கும்பல்ல யார் யாரு என்ன உறவுனு மறந்திருப்ப. ஏன் பார்த்திருக்க கூட மாட்ட, இது தான் கவிதா என் மூத்த பொண்ணு. தேனீல கட்டிக் கொடுத்திருக்கு. பெரிய மாப்பிள்ளை அங்க தான் சொந்தமா தியேட்டர் வச்சிருக்கார். அவளோட குழந்தைங்க வருண்தேவ் வாசுதேவ் ஒரு வருஷம் முன்ன பின்ன பிறந்தவனுங்க.” என்றதும், “இவங்களை நல்லா தெரியுமே. சாக்லேட்ஸ் கொடுத்தேன் நினைவியிருக்கா?” என்று எட்டு வயது ஏழு வயது உள்ள குழந்தையிடம் விளையாட்டாய் பேச்சை கொடுத்தாள்.

      “அத்த… உங்க டிரஸ் சூப்பர்” என்று வருண் பாராட்ட, “தேங்க்யூ. எப்படியும் புல் டே சுத்த விடுவாங்க காற்றோட்டமா இருக்கும்ல” என்று கண்ணடித்தாள்.

     “அதுக்கு டவுஸரை போடலாம். இன்னும் காற்றோட்டமா இருக்கும்” என்று கவிதா முனங்க, சரண்யாவோ கவிதாவை முறைத்து விட்டு, “இது சின்ன மக சரிகா இங்க தான் மாதவாக்கம்ல கட்டி கொடுத்திருக்கு. அவ புருஷன் தேமா கூல்டிரிக்ஸ்ல மேனேஜரா இருக்கார்.” என்று கூற கோக் பெப்சி ப்ரூட்டி பிஸ்ஸி கேள்விப்பட்டவளுக்கு தமிழ்நாட்டில்  புழங்கும் கூல்டிரிங்க்ஸ் பெயர் அறியாது போனாள்.

        குருட்டு வாக்கில் கை கொடுத்து விட்டாள். பேசுவதை காட்டிலும் இது சிறந்ததாகி போனது.

     ரிஷி குடும்பத்தில் குழந்தைகளை சேர்ந்து ஆறு பேரும், ஹரிகரன் வீட்டில் குட்டி குழந்தை நவ்யாவோடு மூன்று பேர் என்றும், ஷிவாலி வீட்டில் ராமமூர்த்தியோடு சேர்த்து ஐவர் என்று குழுமியிருக்க, கடைக்குள் சென்றனர்.

      முதலில் குழந்தைக்கு எடுக்க ஆரம்பித்தனர். ஆண்களுக்கு என்று எடுக்க ஆரம்பித்தனர். தனிதனி குடும்பமாக எடுத்து முடித்தவுடன் கல்யாணப்பட்டை பார்க்க போவதாக ஆடை தேர்ந்தெடுத்தல் ஆரம்பமானது.

     குழந்தைகளுக்கு கோர்ட் சூட் என்று ரிஷி அவன் பாட்டிற்கு எடுத்தான்.

    கவிதா சரிகா இருவரும் தங்கள் கணவர்களுக்கு உடை பார்த்து முடித்தார்கள்.

    சரண்யாவோ கண்ணபிரானுக்கு வேஷ்டி சட்டை என்று எடுத்து வைத்து, ஷிவாலி அருகே அமர்ந்தார்.

   “ஷிவாலியோ கடையில் யாரோ ஒருத்தர் அருகே இருப்பதாக கவனிக்காமல் டெம்பிள் ரன் விளையாடினாள்.

    பார்க்க ஏதோ ஆர்வமாய் யாரிடமோ கதைப்பது போல மாயத்தை தர, “அட விளையாடிட்டு இருக்கியா?” என்றதும் தான் அருகே யாரது என்றே அளவிட்டாள்.

    “அச்சோ.. நீ..நீங்களா. எனக்கு ஸேரி(saree) பத்தி ஒன்னும் தெரியாது. பிடிச்சிருந்தா எடுப்பேன். மற்றபடி அது என்ன மெட்டிரீயல் அதோட யூஸேஜ் எல்லாம் தெரியாது. அதனால தான் பாட்டியிடம் செலக்ட் பண்ண சொல்லிட்டு வந்தேன்.” என்று ஷிவாலி பதில் தந்தாள்.

   என்ன தான் ரிஷியிடம் திமிராய் கூறினாலும் திடீரென பெரிய மனுஷி சரண்யா பேச முகத்தில் அடிப்பது போல பேசமாட்டாள்.

       “உனக்கு என்ன கலர்மா பிடிக்கும்.?” என்றதும் “ஆல்வேஸ் பிங்க் அண்ட் ஒயிட்” என்று கூறிவிட்டு பாட்டி சந்தியாவை தேட, ராஜலட்சுமி வந்து அமர்ந்தாள்.

ராமமூர்த்தி தொலைவிலிருந்து மகள் ஏதேனும் இடக்கு பேசிட போகிறாளென அனுப்பி வைத்தார்.

     “எங்க வீட்ல எல்லாமே அத்த தான். அதுவும் சின்னவளுக்கு அவங்க பாட்டினா கொள்ள இஷ்டம். தாத்தா அப்பாவுக்கு டிரஸ் எடுத்ததும் அவங்க இவளுக்கு எடுக்கறப்ப ஒரு வார்த்தை கேட்டுப்பாங்க. மற்றபடி சேலை பத்தி தெரியாது.” என்று வரவும், ஷிவாலி தாயை ஒரு லுக்கு விட்டாள்.

     “அதனால என்ன பொறுமையா தெரிஞ்சுக்க போறா. அன்னிக்கு பொண்ணு பார்க்கறப்ப தானே படிப்பு முடிஞ்சு வந்தா.” என்றதும், ஆமென தலையாட்டினார் ராஜலட்சுமி.

   மேலும் “சமையல் கூட இன்னும் தெரியாது. யுடுயூப் பார்த்து செய்வா. ஆனா கறி மீன் வகை நல்லா வந்திடும். என்ன இந்த சாம்பார் புளிக்குழம்பு சொதப்பிடுவா. இனி தான் கத்து கொடுக்கணும்” என்று கைவிரித்து கவலையாய் கூறினார்.

    “அதனால என்ன நாங்க என்ன கல்யாணம் பண்ணி தனியானா தனியாவா விட்டுடுவோம்.

    இப்ப இருக்கற வீட்ல இரண்டு அறை தான். ஆனாலும் பையன் சொந்தமா வீடு வாங்கணும்னு ஆசைப்பட்டு தனியா இப்ப வாங்கி ஆல்டரேஷன் பண்ணறான். அது மேல பையனோடது. கீழே நாங்க இருக்க போறோம். ஏதாவது சமைக்க என்றால் நானே சொல்லித் தந்திடறேன். இல்லையா.. கொஞ்ச நாளைக்கு நானே சமைச்சி தந்துடறேன்.” என்று கண் சிமிட்டினார்.

    போனில் மூழ்கியபடி கேட்டிருந்த ஷிவாலிக்கு முறுவல் பூத்தது.

   சரண்யாவை ஒரு பார்வை பார்த்துவிட்டு ரிஷியை தேடினாள்.

       அவனோ தன் அக்கா குழந்தைகள் இருவருக்கும் உடை செலக்ட் செய்து விட்டு தாயை நோக்கி வந்தான்.
   
      வரும் வழியிலேயே நவ்யா அழுதுக் கொண்டு இருக்க, கயல்விழி கஷ்டப்படுவதை கண்டான்.

  ஹரிகரனோ கையை நீட்ட குழந்தை வர மறுத்தது. அழுகை அதிகமாக, “உன் குழந்தை யாரிடமும் போகாது. என்ன தான் வளர்த்திருக்க” என்று சுஜாதா குறைப்படவும், “இங்க கொடு மா.” என்று ரிஷிவேந்தன் வாங்கினான்.

     “யாரிடமும் பழக மாட்டா. அண்ணாவிடமே போனதில்லை.” என்றாலும் குழந்தையை கொடுத்தாள்.

      “ஓ… செல்லக்குட்டி பட்டுக்குட்டி இங்க பாருங்க… ஏய்… அங்க பாரு அங்க பாரு வாவ் கலர் கலர் பலூன்… பாப்பாவுக்கு வாங்கலாமா வருண் பலூன் வாங்கிட்டு வா.” என்று விரட்ட, வாங்கி வந்தான்.

      சற்று அழுகை மட்டுப்படவும், கொஞ்சம் நேரம் விளையாடியது.

     “டேய் வாசு பிஸ்கேட் வச்சிருக்க தானே. பாப்பாவுக்கு கொடு” என்றான் ரிஷி.

     “மாமா அது எனக்கு பசிச்சா சாப்பிட” என்று தர மறுத்து நின்றான்.

     வருணோ அவனிடம் வந்து, “வாசு பாப்பா ரொம்ப குட்டி பாப்பால… அதுக்கும் பசிக்கும்” என்றதும் பிஸ்கேட்டை எடுத்து கொடுத்தான்.

   குழந்தைக்கு தனியாக அங்கிருந்த பேப்பர் கப்பில் தண்ணீர் பிடித்து முக்கி ஊட்டிவிட அழகாய் சாப்பிட்டது.

    கன்னம் தாடை என பூசி சாப்பிட்டு முடித்திட, ரிஷியின் கைக்குட்டையை கொண்டு வாயை துடைத்தான்.

      தூரத்தில் போனில் கேமிராவை ஆன் செய்து எதிரே ரிஷியின் செய்கையை தான் கண்கானித்தாள்.

   இவளை பார்க்க வைக்க தான் இப்படி நாடகமாடுகின்றானென அவன் பார்வை இங்கு கண்டு அவள் பார்க்காமல் போனில் தலையை விட்டு இருக்கின்றாளென கடுப்பாகட்டும் அதை போனில் பார்த்து ரசிப்போமென காத்திருந்தாள்.
    
    ஆனால் ரிஷியோ, அவளிருக்கும் பக்கமே பாராது குழந்தைக்கு ஊட்டி விட்டு தட்டி கொடுத்தான்.

    அக்காவின் இரு குழந்தையான வருண் வாசுவிடம் இப்படி செய்து பழகிட தன்னால் ஈர்ப்போடு பழகினான்.

       குழந்தை கண் அயரவும், பெண்கள் ஆண்களுக்கு மற்றும் குழந்தைக்கு உடை எடுத்து விட்டு நிமிரந்தனர்.

    “பரவாயில்லையே உங்களிடம் பழகறா அண்ணா. தேங்க்ஸ் அண்ணா பார்த்துக்கிட்டதுக்கு” என்று கயல்விழி கூற, ஹரிகரன் சங்கடமாய் நின்றான்.
    அதன் பின் தங்கள் சாப்பிட நினைவு வந்தவுடன் கடையிலேயே எடுத்தவையை பில் வாங்கி பணம் கொடுத்து துணியை மீண்டும் டெலிவரி வாங்காமல், பக்கத்தில் சாப்பிட்டு வருவதாக கூறி சென்றனர்.

       ஆறு பேர் கொண்ட இருக்கைகளாக இருக்க ஹரிகரன் கயல்விழி சுஜாதா கூட சந்தியா அமர்ந்தாள். கயல் அருகே உறங்கியிருந்த நவ்யா படுக்க வைத்து கொண்டாள்.

       சரண்யா, கவிதா, சரிகா மற்றும் இரண்டு குட்டிஸோடு ரிஷி அமர்ந்தான். மாமா எனக்கு நூடுல்ஸ் மாமா எனக்கு ப்ரைட் ரைஸ் என்று கத்தினார்கள்.

     அக்கா மகன்களின் தலை கலைத்து விட்டு, ஆர்டர் தர்றேன் டா” என்று விளையாடினான்.

    ராமமூர்த்தி ராஜலட்சுமி மனோகரி மற்றும் ஷிவாலி அமர்ந்திருக்க, இரண்டிடம் காலியாக இருந்தது. சாம்பார் சாதம், மினிமீல்ஸ், தக்காளி சாதம் என்று மூவர் கூற ப்ரைடு ரைஸ் என்று ஷிவாலி கூறவும் மெதுவாய் சட்டென்று திரும்பாமல் இயல்பாய் ஷிவாலியை பார்க்க, அவளோ வந்த ப்ரைடு ரைஸிற்கு சாஸை ஊற்றி கொண்டிருந்தாள்.

    ஹரிகரன் சந்தியாவை காண அவர்கள் இருவரும் பேசியபடி ஒருவர் அருகே ஒருவர் சாப்பிட்டு எனக்கு இது வேண்டாம் என்று பொரியலை நகர்த்தி சாப்பிட்டனர்.

   ரிஷிக்கோ வந்ததிலிருந்து ஒரு வார்த்தை பேசாமல் ஒரு பார்வை வீசாமல் இருக்கும் ஷிவாலியை கண்டு மனம் பிசைய, “சாப்பிடு ரிஷி” என்று சரண்யா கூறவும் தலையாட்டி சாப்பிட ஆரம்பித்தான்.

-சட்னி சாஸ் தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்.

3 thoughts on “90’s பையன் 2k பொண்ணு-11”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Leave the field below empty!