ரி-ஷி-கா-16
🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁
ஹரிஷோ வேலைக்கு இங்கிருந்தே சென்றிட, குமாரோ வெள்ளித்திரை நாயகன் ப்ரனித்தின் படம் எத்தனை நாள் தங்கள் தியேட்டரில் ஓடியதென்று பெருமை பேசி அதற்கு எத்தனை விசில், பாலபிஷேகம் என்று நடந்தவையை விவரித்தான். ஒரு முறை ஒவ்வொரு மாவட்டத்திலும் அவர் எதிர்பார்த்த படம் முதல் நாள் வசூலை கேட்க தன்னிடம் தொடர்பு கொண்டதாக பேச, ஷிவாலியோ காதில் இரத்தம் வராத குறையாக கேட்டு நின்றாள்.
கவிதாவோ “திங்க்ஸ் எல்லாம் எடுத்து வைக்க போகலை.” என்று ஷிவாலியிடம் கேட்டாள்.
“யாராவது பிரிச்சி தந்தா எடுத்து வைக்க ஈஸியா இருக்கும். நீங்க வர்றிங்களா அண்ணி.” என்று கேட்டிட, கவிதாவும் சரிகாவும் வருவதாக கூறிட மாடிக்கு சென்றார்கள்.
மூவரும் மாடிக்கு செல்ல, ரிஷியோ அச்சச்சோ இவ அக்காவை படுத்தி எடுப்பாளா, இல்லை அக்கா இவளை படுத்தி எடுப்பாங்களா… எதுனாலும் என் தலை உருளுமே. கடவுளே என்று விழிக்க, சரண்யா உணர்ந்தவராக, “நீயும் போய் உதவி செய் போ” என்றதும் இரண்டு இனண்டு படியாய் தாவி ஓடினான்.
அவன் சென்ற நேரம் வாசு எதையோ ஓபன் செய்வதாக பரிசு பொருளை திறக்க, அது கண்ணாடி என்றதும் கை நழுவி உடைந்தது.
“ஏன்டா, என்ன டா உடைச்ச? அய்யோ.. உன்னை யாரு இது பிரிக்க வரச்சொன்னா” என்று கவிதா வேகமாக அடிக்க சென்றார்.
“எதுக்குங்க குழந்தையை போய் அடிக்கறிங்க. உடைஞ்சா என்ன புதுசா வாங்கிக்கலாம். கையை கிழிச்சிட போகுது.” என்று முதலில் வாசுவை தூக்கி வேறொரு இடத்தில் அமர வைத்து இந்த பிரசெண்டை பிரிங்க” என்று கொடுக்க அம்மா திட்டியதில் வாங்காது விழித்து நின்றான் அந்த வால் குழந்தை.
“என்ன அத்தக்கு ஹெல்ப் பண்ணு” என்றதும் வாசு பிரித்து பார்க்க ஆர்வமானான்.
ஆறு கண்ணாடி டம்ளர் அதில் மூன்று உடைந்ததை குப்பை கூடையில் போட்டு விட்டு, மீதியை கிச்சனில் வைக்க சென்றாள்.
மேல் ஸெல்பில் ஒரு டம்ளர் இருக்க அதனை எடுத்து பார்த்தாள். மேல இரண்டு பீர் இருக்க, கிச்சன் பக்கம் போய் திரும்பி வராதவளை கண்டு வந்தவன் அவள் பார்வை சென்ற திசையில் பீர் பாட்டில் கண்டதும் கதவை மெதுவாக மூடி “இதெல்லாம் ஏன் எடுக்கற, என்று அங்கிருந்த துணியால் மூடினான்.
“நீ நல்லவனாடா? எங்க தாத்தா உன்னை வார்த்தைக்கு வார்த்தை நல்லவன் வல்லவன் சொல்லறார். இந்த பழக்கத்தை எல்லாம் சொல்லியிருக்க வேண்டியது தானே” என்றதும் “கத்தாதே.. கத்தாதே.. ப்ளிஸ்.. வந்த அடுத்த நாளே மாட்டி விடாதே. என் செல்லம்ல… என் தங்கம்ல” என்று தாடை பிடித்து கொஞ்ச, வருண் ஓடிவந்து, அத்த இது எனக்கு தர்றியா பிரட் டோஸ்டர் தானே. நான் எடுத்துக்கவா அம்மாவிடம் கேட்டேன் வாங்கறேன் வாங்கறேன்னு ஏமாத்தறாங்க” என்றதும் “ம்ம் எடுத்துக்கோ” என்று வெளிவந்தாள்.
“வருண் அத்தையிடம் கொடு.” என்று கவிதா மிரட்ட, “அச்சோ ஏன் மிரட்டறிங்க எடுத்துக்கட்டும்” என்று கூறி அமர்ந்தாள்.
ஒவ்வொன்றாய் பிரிக்க, “இதெல்லாம் என்னது? பிரெண்ட்ஸ் கிப்டா பெயர் போட்டு இருக்கு” என்று சரிகா கேட்க “பிரெண்ட்ஸ் இல்லை ரிலேட்டிவ்ஸ் கிப்டா இருக்கும். என்னோட பிரெண்ட்ஸ்க்கு என் மேரேஜ் தெரியாது.” என்றவள் பிரித்து பார்க்க, அதிலிருந்து சரிகா ஒரு கிப்டை எடுத்து கொண்டாள்.
மற்றவை கிச்சனில் வருண் வாசு கொடுக்க கொடுக்க அடுக்கினாள்.
ரிஷியோ அவள் பீர் பாட்டிலை மேலே வைத்து மூடியதை கண்டு, நிம்மதியடைந்தவனாக கையை கட்டி வேடிக்கை பார்த்தான்.
கவிதா சரிகாவோடு ஷிவாலி அவளுக்கே உண்டான பாணியில் பழகவும் ரசித்தான்.
ஹால் காலியானதும் மெத்தையை போடாமல் அப்படியே வைத்திருந்தனர். மற்றவை அனைத்தும் ஆங்காங்கே கச்சிதமாய் பொருத்தி விட்டு முடிக்க மதிய உணவு ரெடி என்று கீழே ஓடினார்கள்.
“என்னடா காலையில கீழே வந்து கிச்சனுலேயே பார்வை போகுதுன்னு குமார் மாமா சொன்னார். இப்ப என்னடானா இங்க எல்லாரும் இருக்கறப்ப கிச்சன்ல என்ன குசுகுசுனு செல்லம் தங்கம்னு… பார்த்துடா பொசுக்குனு விழுந்துடாதே. அக்கா தங்கையை கழட்டி விடமாட்டியே” என்றதும் ரிஷியோ “ஏன்க்கா…” என்று சலித்து கீழே அவளை இழுத்து நடந்தான்.
ஷிவாலியோ ‘மூஞ்சியை பாரு என்னை விட்டுட்டு போகுது.’ என்று முனங்கினாள்.
மனோகரி அதற்குள் என்ன பேசினாரோ சரண்யாவோ ஷிவாலியை பார்த்து நான் பார்த்துக்றேன் அத்த, பொண்ணுங்க போகட்டும்” என்றதும் மகிழ்ச்சியாய் உணர்ந்தார்.
மாலை சிற்றுண்டி சாப்பிட்டு மனோகரி வேதாச்சலம் செல்ல துடித்தனர்.
“ஏ… மனோ….கரி… சந்தோஷமா.. உன் வீட்டுக்கார் உடல்நிலைக்காகவும் உனக்காகவும் கல்யாணம் பண்ணிக்கிட்டேன்.
மிஸ்டர் வேதாச்சலம் என்னை விட கொஞ்ச நாள் பார்த்தவன் நல்லவன் இல்லை… பார்த்துக்கறேன்” என்று கூற இருவரும் கன்னத்தில் மாறி மாறி முத்தமிட்டு கண்ணீரோடு விடைப்பெற்றனர்.
ஹரிஷ் சரிகா இருவரும் அவர்கள் வீட்டுக்கு சென்றனர். கவிதாவோ நாளை மறுநாள் கிளம்புவதாக இருந்தது.
இரவு வரவும் தனியாக படுத்து கொள்ள, “உடம்பு சரியில்லைனா என்ன அங்கயே வந்து படுத்துக்கோயேன். எனக்கு என்னமோ மாதிரி பீல்லாகுது.” என்று கூறினான்.
“இங்க பாரு… கல்யாணம் பண்ண தாத்தா பாட்டி பீல் பண்ணுவாங்கனு பண்ணிட்டேன். நீ பேட்சுலர் இல்லைனு ஊருக்கு தெரிந்தா போதும். உன்னோடலாம் என்னால வாழ முடியாது. நீ வேற நான் வேற. உன் தாட்ஸ் என் தாட்ஸ் ஒத்துப் போகாது. நீ சொன்ன மாதிரி கொஞ்ச நாள்ல டிவோர்ஸ் வாங்கிக்கறேன். அதுக்குள்ள ஜாப் சர்ச் பண்ணிக்கறேன். மணி இயர்ன் பண்ணிட்டு அப்பறம் இன்னிக்கு வந்த திங்க்ஸ் எல்லாம் எடுத்துட்டு ஓடிடறேன்.” என்றதும் இவளிடம் ஆசையாக பேச வந்த ரிஷியோ கோபமாக நின்றிருந்தான்.
“இங்க பார்… ஏதோ இங்க த்ரி டேட்ஸ் இரு. மத்தபடி அங்க வந்து சேரு. உன்னிடமெல்லாம் சாப்ட் ஹெண்டலிங் வேஸ்ட்” என்று கடுகடுக்க, “உன்னை யாரு மேன் என்னிடம் சாப்டாவோ ஹார்டாவோ ஹாண்டில் பண்ண சொன்னது.
நீ ஒன்னும் என்னை ஹாண்டில் பண்ணவே தேவையில்லை. லீவ் மீ அலோன்.” என்று சிடுசிடுத்தாள்.
காலையில் அடுக்கி வைத்தப் பொழுது ஆனந்தம் கொண்டவன் மனம் தற்போது கடுகடுத்தது. அவளின் உடமையை தனியாக இங்கே எடுத்து பிரித்திருக்கின்றாள். ஒன்று கூட அவன் அறையில் வைக்க வில்லையென தாமதமாக புரிபட்டது.
கொண்டு வந்த பாலை ஒரே மடக்கில் குடித்து விட்டு, “என்ன பார்க்கற உனக்குனு தான் அம்மா கொடுத்தாங்க. என்னோட பேசவோ பழகவோ யோசிக்கற உனக்கு எதுக்கு டி நான் சேவகம் பண்ணணும்.” என்று கதவை எட்டி உதைத்து சென்றான்.
“இடியட்” என்று உரைத்து விட்டு படுத்து கொண்டாள்.
அடுத்த இரண்டு தினம் மாடியில் இருவரும் இருந்தால் யாரும் அவர்களாகவே வந்து பேச்சு தொடுக்கவில்லை. சின்னசிறுசுகள் என்றும் புதிதாக மணந்தவர்கள் என்றும் தனிமை கொடுத்தனர்.
அதை மீறி லீவு போட்டு வீட்டிலிருந்ததால் ரிஷிக்கே போரடிக்க வாசு வருணை அழைத்து விளையாடுவான்.
சரண்யா தடுக்க வில்லை ஆனால் கவிதாவிடம் குமாரோ “இப்ப தான் கல்யாணமாச்சு இவனுங்களை எதுக்குடி மேல அனுப்புற” என்று கடிந்தார்.
கணவன் கூறியப்பின் வருண் வாசுவிடம் இங்கயே விளையாடுங்க என்று போனை கொடுத்திட அவர்கள் கீழே இருந்தனர்கள்.
ரிஷிக்கோ இரண்டு நாளைக்கே அவளின் நிஜமும் நிழலும் வீட்டில் உலாவ பேசாது ஒதுங்க முடியவில்லை.
தானாக ஏதேனும் வருண் வாசுவுக்கென்று ஸ்நாக்ஸ் வாங்கி வந்தால் அவளின் அறையில் வைத்து விட்டு பேசாது கடந்தான்.
மூன்றாவது நாள் கவிதா-குமார் என்று புறப்பட, “வருணுக்கும் வாசுக்கும் வந்த ரிமோட் கார் ஏரோபிளேன் என்று அருகேயிருந்த கடையில் ஆர்டர் தர கொடுக்கவும் மகிழ்ச்சியாய் பெற்றுக் கொண்டனர்.
வாசு ஷிவாலியின் கன்னத்தில் முத்தம் வைக்க, ஷிவாலியோ பதில் அன்பாய் அவன் கன்னம் முத்தம் வைத்து ”சோ ஸ்வீட்டி” என்றதும் ரிஷிவேந்தன் இதயம் எரிந்தது.
பாவி… என்னை வெறுப்பேத்தறா.. எனக்கு ஒரு சின்ன பிளையிங் கிஸ் கூட கிடைக்கலை. இந்த பொடிவண்டு எல்லாம் கன்ன முத்தம் வாங்குது.’ என்று பொறுமினான்.
கவிதா குடும்பம் சென்றதும் வீடே காலியாக மாறியது. கீழே சரண்யா கண்ணபிரான் இரண்டு பெட்ரூம் அறையில் ஹாலே கதியென்று இருந்தார்கள். புதிதாக வந்த வீடு என்றதாலும் அக்கம் பக்கம் மனிதர்கள் பழக்கம் இல்லாது போக டிவியே கதி சமையல் கட்டே புழக்கம் என்று சரண்யா இருக்க, கண்ணபிரான் மட்டும் டிவி சில நேரம் மாலை வாக்கிங் என்று சென்று இரவு வருவார்.
அடுத்த நாள் காலையில் எழுந்த ரிஷியோ மெத்தையில் நீண்ட நேரம் கால் மடித்து அமர்ந்தவன் எழுந்து பக்கத்து அறைக்கு வந்து நிற்க, போனில் எதையோ நோண்டியிருந்தாள்.
“என்ன?” என்று சிப்ஸை அரைத்து கொண்டே கேட்க அவள் கேட்ட தோரணையும் உடல் மொழியும் திமிராய் பறைச்சாற்ற, கொத்தாய் சிகையை அழுத்தப்பற்றி முத்தமிட ஆரம்பித்தான்.
எதிர்பாரா முத்தங்கள் விழிகளை பெரிதாக்கி அபிநயம் பிடிக்க, ரிஷியை தள்ளிவிட தோற்றும் இயலாது காலை ஓங்கி மிதித்தாள்.
வலியில் விடுவிக்க, “என்னடி திண்ண பஸ்ட் கிஸ் ஸ்வீட்டா மெமரபிளா திங்க் பண்ணினா… ஸப்பா… காரம்” என்று தண்ணியை எடுத்து குடித்தான்.
“கேட்கறேன்ல என்ன திண்ண?” என்று மடமடக்கென்று நீரை பருகினான்.
“நீ என்ன பண்ணயிருக்க. தடிமாடு… தடிமாடு…” என்று உதட்டின் எச்சியை துப்ப ஆரம்பித்தாள்.
பௌலில் சிப்ஸும் தக்காளி சாஸும் சில்லி சாஸும் கலந்திருந்தாள். ஏற்கனவே அது சால்ட் சிப்ஸ் என்றதால் உப்பு இனிப்பு காரம் என்றிருக்க எலுமிச்சையை வேறு பிழிந்து விட்டிருப்பாள் போல, புளிப்பும் சேர்ந்திருந்தது.
“குரங்கே… பாகற்காயை ஏன் விட்டு வச்ச அதையும் அரைச்சி தெளிச்சி வைக்க வேண்டியது தானே.” என்று கடிந்தான்.
அவனுக்கு சினிமாவில் போன்று முத்தக்காட்சியில் மென்கோந்து ஓட்டி எடுப்பது போல எதிர்பார்த்திருக்க இவளின் இந்த எலுமிச்சை சாறு, தக்காளி சாஸ், சில்லிசாஸ், சால்ட் சிப்ஸ் என்ற வகை மண்டையை காய வைத்து விட்டது.
“நீ முத்தம் கொடுத்துட்டுல அது தான் எனக்கு கசப்பு. போட வென்று” என்று மௌத் வாஷ் எடுத்து கொப்பளிக்க ஆரம்பித்தாள்.
அவளின் செய்கை கோபத்தை கிளப்ப, “கிளம்பு டி. அப்படியொன்னும் நீ இங்க கஷ்டப்பட வேண்டாம். கிளம்பு.. கிளம்பு. ஒரு கிஸ்ஸுக்கு மௌவுத்வாஷா?” என்று அவளின் பேக்பேக்கை எடுத்து துணியை திணித்து அவளின் கை புஜத்தை பற்றி இழுத்து வந்தான்.
ஷிவாலியோ அவனின் இழுப்பும் செய்கையும் புரியாது தவித்தவளாய் படியில் இறங்கினாள். ரிஷி கோபமாய் அவளை அவள் வீட்டிலேயே விட செல்ல தயாராகுவதை கண்டு ஷிவாலி மிரண்டுவிட்டாள்.
-சட்னி சாஸ் அலப்பறைகள் தொடரும்
-பிரவீணா தங்கராஜ்.

Super super. Excellent sis.
Adavadi panringale da
Rishi ena da kovam varum thana athukaga taknu dress la eduthu vachi anupi vida pakuriye ena achi unaku