ரிஷிவா-17
🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁
வீட்டினை பூட்டி அவளின் உடமையை அள்ளிய பேக்கை எடுத்து வந்தவனை விடுத்து கீழே சரண்யா இருக்கும் வீட்டில் நுழைய பார்க்க அங்கேயும் பூட்டியிருந்தது.
“என்ன பார்க்குற எங்கம்மா கோவிலுக்கு போயிருக்காங்க. இங்க இருந்தா அவங்களிடமும் ஐஸ் வச்சி பேசி கவுப்ப, நல்ல வேளை அவங்க இல்லை.” என்று இழுத்து கொண்டே பேசி சென்றவனை கண்டு விக்கித்து நின்றாள்.
“இங்..இங்க.. பாரு உன்னை பிடிக்கலைனு நான் முதல்லயே சொன்னேன். இப்ப மேரேஜானப் பிறகு இப்படி அங்க கொண்டு போய் விட்டா எங்க தாத்தா பாட்டி பீல் பண்ணுவாங்க.
தாத்தா வேற ஹாஸ்பிடல் எல்லாம் போயிட்டு வந்தார். அவருக்கு மைல்ட் அட்டாக். நான் தாத்தா பாட்டி செல்லம்.” என்று கலங்கியவாறு கூறினாள்.
கொஞ்சம் திமிரை கைவிட்டு சுயநலமாய் அவனிடம் கெஞ்சினாள்.
“என்னை கட்டிக்க பிடிக்காம தானே வந்த கரெக்ட், அதை அப்படியே சொல்லிட்டு உங்க வீட்லயே இரு. ஒரு முத்தம் கொடுத்தது குத்தமா டி” என்று பைக்கை உதைத்து “ஏறு கொண்டு போய் வீட்ல விட்டுடுவேன்.” என்று எறிந்து விழுந்தான்.
அவள் ஏறாமல் மறுக்க, “ஏறு டி” என்று அதட்டினான்.
அதில் சற்று பயந்து ஏறினாள். முறுக்கி கொண்டு ரிஷி பைக்கில் பறந்தான்.
சுடிதார் அணிந்தவள் இரண்டு பக்கம் கால் போட்டு “ரிஷி.. ரிஷி.. நான்.. நான்.. உன்னை தொல்லை பண்ண மாட்டேன். நீ என்னை தொல்லைப் பண்ணாதே. உனக்கு என்ன கிஸ் வேண்டுமா. ஓகே.. ஓகே.. கொடு.. கிஸ் கொடு நோபிராப்ளம்.” என்று கூறியவளை கண்டு வண்டியை நிறுத்தி சுற்றி முற்றி பார்த்தான்.
சிவப்பு சிக்னல் இருக்க, “எதுக்கு மௌவுத்வாஷை காலி பண்ணி அதை டஜன் கணக்குல வாங்கணுமா? நாம சாஸும் மௌவுத்வாஷும் வாங்கியே நேரம் போகும். தேவையில்லை” என்று சிக்னலை வெறித்து பதில் தந்தான்.
“ஓகே… அதெல்லாம் பண்ண மாட்டேன். வீட்டுக்கே போயிடலாம் ப்ளிஸ். அப்பாவுக்கு தெரிந்தது என்னை அடிவெளுத்துடுவார். அம்மா துடப்பத்தை வச்சி சாத்து சாத்து சாத்துவாங்க. ரிஷி வண்டியை திருப்பு” என்று அவன் தோளில் குத்திக் கொண்டே கெஞ்சி கேட்டு வந்தாள்.
“என்னை விட ஒன்பது வயசு சின்னவ நீ. எதுக்கு என் பெயரை ரிஷி ரிஷினு கூப்பிடற? தோள்ல எதுக்கு தட்டற. மேலயிருந்து கையை எடு” என்று கூறவும் அவன் பின்னங்கழுத்து மீதே தலையை வைத்து “ஓ மை காட். இப்படி நடக்கும்னா நான் முன்னவே தடுத்திருக்க மாட்டேன்.” என்று நெற்றியை வலது இடதென ஆட்டினாள்.
“உங்க வீடு வந்துடுச்சு இறங்கு” என்று கூறவும் “அவ்ளோ சொல்லியும் இங்க கூட்டிட்டு வந்துட்டல, எங்க தாத்தாவுக்கு ஏதாவது ஆச்சு உன்னை கொன்றுடுவேன் டா” என்று இறங்கியவள் இவ்வளவு நேரம் கெஞ்சியதை மீறி மிரட்ட ஆரம்பித்தாள்.
“என்னடி கெஞ்சியதுல கேட்கலை என்றதும் மிஞ்சறியா” என்று முழங்கையை மடக்கி விட்டு முன் வந்தான்.
“ஏய் லூசு… உங்கப்பா அம்மா தான் இன்னிக்கு வர சொன்னாங்க. சர்ப்பிரைஸா அழைச்சிட்டு வந்தேன்.” என்று சிரித்தவனை ஷிவாலி அவனை அடிக்க அங்கும் இங்கும் பார்த்து பூந்தொட்டியை தூக்கி மேலே போட முயல, “உங்க வீட்ல இருந்து யாராவது பார்க்க போறாங்க” என்று ஓடி செல்ல அவனை துரத்தி வந்தவள் தொட்டியை தூக்கியபடி வந்தாள்.
அவன் பேச்சை கேளாது அவன் மீது போட வந்தவளின் முயற்சியை தடுத்து தொட்டியை பிடித்து கீழே வைத்து இரு கையையும் இறுகப் பிடித்தான்.
“பொறுக்கி… எது எதுல விளையாடறதுல இல்லை. நான் பயந்துட்டேன்.” என்றதும் ”ஷிவ்… நான் உன்னை எந்த சந்தர்ப்பத்துலையும், உன் பிறந்த வீட்ல திரும்ப விடறதுக்காக தாலி கட்டலை.” என்றவன் நேசத்தோடு கூறி முடிக்க ஷிவாலி அவனின் வார்த்தையில் மதிமயங்க அவனோ வீட்டிற்குள் நுழைந்தான்.
வீட்டிற்குள் சிக்கன் வாசம் இழுக்க, ஷிவாலியோ அவனின் சட்டையை பிடித்து இழுத்து, தள்ளிவிட்டு முன் நடந்தாள்.
அவளின் இடையில் சிறு அழுத்தம் கொடுத்து பின்னால் இழுத்து அவன் மீண்டும் முன்னேறி சென்றிட, பெண்ணவளின் உடலில் ரசவாதம் நிகழ்ந்து முடிந்தது.
உடல் ரோமங்கள் சிலிர்தடங்கி ஷிவாலி அவனை தேட ராமமூர்த்தி வரவும் ஷிவாலி அமைதியாகி போனாள். அவனோ அவளிடம் வெறுப்பேற்றி விளையாடினான்.
“வாங்க மாப்பிள்ளை சம்பந்தி இப்ப தான் நீங்க தனியா வர்றதா சொன்னார்” என்று மகளின் முகம் காண அவளோ தாத்தாவை தேடி ஓடினாள்.
சந்தியா ஹரிகரனோடு நின்றிருந்தாள். சந்தியா முகம் என்னவோ போன்றதொரு தோற்றம் இருக்க, “ஏய் சந்தி… எப்படி இருக்க? சே நீ இங்க தான் இருக்கறல, நான் தான் தனியா தடிமாடுகிட்ட சிக்கிக்கிட்டேன்.” என்று கூற சரண்யா மற்றும் ராஜலட்சுமி மனோகரி பாட்டியோடு கீழிறங்கி வந்தார்கள்.
“உங்க அத்த நாத்தனார் எங்க?” என்று அக்காவின் தோளில் கை வைக்க, “எல்லாரும் ஊருக்கு போயாச்சு” என்றவள் தங்கையின் கையை தட்டிவிட்டு அவள் அறைக்கு சென்றாள்.
சந்தியாவிற்கு தந்தை தன் கணவர் ஹரிகரனிடம் முகம் திருப்பி ஓரிரு வார்த்தையில் பேசி முடித்து வந்தவர் ரிஷிவேந்தனை கண்டதும் முகமலர்ந்து ஓடிவந்ததை கண்டு கோபம் வந்தது.
அதுவும் ரிஷியோடு சோபாவில் பேசி சிரிக்க ஹரிகரனோ புத்தகம் படித்து தனித்திருக்க கஷ்டமாய் இருந்தது.
ஆனால் சந்தியா ஒன்றை மறந்து போனாள். அவளாலும் ஹரிகரனாலும் தந்தை நிறைய பேரிடம் தலைகுணிவு அடைந்துள்ளார் என்று அறியாது போனாள்.
போதாதற்கு சுஜாதா உறவுகள் மத்தியில் பையன் வீட்டுக்காரர்கள் என்று கெத்து காட்ட எடக்குமடக்காக இரண்டு மூன்று நிகழ்வில் முத்துராமனை வைத்து செய்து விட்டார்.
அதனாலையோ என்னவோ இயல்பாய் கூட பேசாது ராமமூர்த்தி ஒதுங்கி கொண்டார்.
ரிஷியோடு பேசும் போது அவருக்கு அந்த பாஸிடிவ் பீலும் மகன் போன்ற பந்தமும் இணைந்து கிடைக்க சந்தியா உற்றென்று தான் சுற்றி திரிநதாள். கூடவே ஷிவாலியிடம் முகம் திருப்புதல் வேறு.
ஷிவாலிக்கு புரியாமல் இல்லை. அவளுக்கு கண் பார்க்க கதை புரியாமல் இருக்குமா?
இந்த காலத்து பிள்ளைகளுக்கு படம் பார்த்து கதை கண்டறிய தெரியாதா. ஆனால் அக்காவிடம் எதையும் பேசி புரிய வைக்க அவளுக்கு பிடிக்காது. அவரவர் தானாக புரிந்திட வேண்டியது இதெல்லாம்.
ஹரிகரன் சந்தியா இருவரும் கடமைக்கு வீட்டுக்கு வரக்கூறி விட்டு ஹரிகரன் பைக்கில் சென்று விட்டார்கள்.
சரண்யா கண்ணபிரான் இருவரும் மதியம் விருந்து முடித்து கிளம்ப ஆயத்தமானார்கள்.
“டேய் துணியெல்லாம் அதோ அந்த சூட்கேசில் இருக்கு. ஆபிஸ் லீவை அதிகப்படுத்துவியோ இல்லை வேலைக்கு போவியோ அது உன் இஷ்டம்” என்று விடைப்பெற, “சரிம்மா சரண்யா” என்று கன்னம் பிடித்து ஆட்டி கண்ணபிரானிடம் “ப்பா.. அமேசான்ல பிட்னஸ் திங்க்ஸ் வரும் வாங்கி வையுங்க” என்று கையசைத்து வழியனுப்பி வைத்தான்.
ஷிவாலியோ அவர்கள் சென்றதும் ரிஷியை பார்த்து தாடையை தோளில் இடித்து சென்றாள். பனியாரம் பிட்னஸ் திங்க்ஸ் யூஸ் பண்ண போகுதா? என்ற இடக்கான வந்தது
அவனும் புன்னகை மாறாது வீட்டுக்கு வர வேதாச்சலம் சோபாவில் அமர வைத்து பேத்தி பேசறாளா? அதுயிது என்று நூல்விட்டு பார்த்தார்.
“தாத்தா… அவளை என்னிடம் பிடிச்சி கொடுத்துட்டிங்க. இனி கவலை வேண்டாம். எப்படியும் நான் பார்த்துப்பேன்.” என்று கைகளில் நேசமாய் அழுத்தம் கொடுத்தான்.
ஷிவாலியோ அறையில் ‘மூஞ்சை பாரு பனியாரம். வர்ற வழியில் முழுக்க, பயமுறுத்திட்டான். இதுல முத்தம் வேற.” என்று முனங்கினாள். ஆனால் அவனின் முத்தங்கள் பல கனவை தீமூட்டி எரிய வைத்தது.
“முத்தம் முத்தம் முத்தமா மூன்றாம் உலக யுத்தமா ஆசை கனவு பத்துமா ஆயிரம்” என்று பாட, “டேய்… ஏதாவது பாடறதா இருந்தா வெளியே போ. இங்க வந்து பாடாதே. என்னிடமிருந்து நாலடி தள்ளி நில்லு” என்று அரற்றினாள்.
பாட்டியின் பேச்சு சத்தம் வெளியே கேட்பது புரிய அறைக்குள் பேச்சை மெதுவாக பேசினாள்.
“பொடிடப்பி… பாடறதே உனக்காக தான். வெளியே போய் எதுக்குடி பாடணும். எனக்கென்னவோ பில்டிங் ஸ்ட்ராங்கு பேஸ்மட்டம் வீக்குனு மாதிரில உன் முகற கட்டை தெரியுது.” என்று ஷிவாலியை அர்த்தமாய் பார்த்து முடிக்க, “தடிமாடு” என்று முனங்கி வெளியேறினாள்.
அவள் சென்றதும் மெத்தையில் அமர்ந்தவன், ‘ஷிவ்.. உன்னை நெருங்கவும் கஷ்டமா தான் இருக்கு. விலகவும் கஷ்டமா தான் இருக்கு ஆனா உங்க தாத்தா என்னை பேச்சாலயே கட்டிப் போட்டுட்டாறே. நான் என்ன செய்வேன் அவரோட கோரிக்கையா உன்னை மணந்துட்டேன். ஆனா உன்னோட மனசு ஹர்ட் ஆகறதும் வலிக்குது.
இதுல என் சுயநலம் எனக்கு கல்யாணம் ஆகணுமென்ற டிசிஷன்ல அன்னிக்கு என்னை தள்ளிடுச்சு.
உங்கப்பா வந்த அன்னிக்கு அவ வராம இருந்து இருக்கலாம். என்னிடம் பேசாம போயிருக்கலாம். அப்படி நடந்திருந்தா மேபீ அடுத்த நாளே நான் உனக்காக ‘என்ன தாத்தா ஒன்பது வருஷம் இந்த பிள்ளை என்னை விட சின்ன பொண்ணு. என்ன அவசரம் சின்ன பொண்ணை கல்யாணம் பண்ணி வைக்க.. அதுவும் என்னோட… பெரிய பொண்ணை கட்டிக் கொடுத்து, கொஞ்ச நாள் கழிச்சி சின்னவளுக்கு பாருங்க. நான் வேண்டாம்’னு பேசியிருப்பேன்.
ஆனா என் எக்ஸ் அவ வந்தா… என்னிடம் பேசிட்டா… என்னை அறியாம சுயநலமா நானே முடிவெடுக்க பேச வச்சிட்டா. கல்யாணம் பண்ணணும்னு அது மட்டும் தான் தோணுச்சு. எனக்கு ஏஜ் டிபரெண்ட் உன்னை பார்த்தப் பிறகு தவறா தோணலை ஷிவ். எனக்கு நீ மேட்சா இருப்பனு மனசுக்கு பட்டுச்சு. ஆனா உன் மனசு என்ன நினைக்கும்னு அப்ப சுயநலமா தான் இருந்தேன்.’ என்றவன் மனதிற்குள் மன்னிப்பு கேட்டு நின்றான்.
-சட்னி சாஸ் அலைப்பறைகள்
-பிரவீணா தங்கராஜ்.

Super super. Intresting sis. Rishi dont feel. Shiv will like u. So she will accept u soon.
Rishi unaku x vera irukala ava vanthu pesinathuku apram than nee intha mari mudivu eduthiya okk but athuvum nallathu than
Yellam thana vazhiku varuva