ரி-ஷி-வா-2
🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁
பெண் வீட்டாட்கள் “வாங்க வாங்க…” என்று வரவேற்றவர்கள் ரிஷியின் குடும்பத்தை கண்டு மிரண்டு விட்டார்.
அம்மா, அப்பா, மகன் என்றவரை கூறியிருக்க, கூட தரகர் என்று நால்வரை எதிர்பார்த்திருந்த அக்குடும்பத்திற்கு இந்த ஒன்பது பேர் வந்தால் திகைப்பாகாதா?
வீட்டுக்கு வந்தப்பின் அந்த அதிர்வை காட்டிக் கொள்ளாமல் வரவேற்றார் அவ்வீட்டு பெண்ணின் தகப்பன் ராமமூர்த்தி.
பெண் வீட்டில் ராமமூர்த்தியை தவிர்த்து அவர் மனைவி ராஜலட்சுமி கைக்குப்பி வரவேற்றார்.
வீட்டில் ராமமூர்த்தி-ராஜலட்சுமியை தவிர்த்து ராமமூர்த்தியின் அம்மா மனோகரி அப்பா வேதாச்சலம் என்று இருக்க சந்தியா மட்டும் அறைக்குள் இருந்தாள்.
“என்னங்க இது இத்தனை பேர்?” என்று ராஜலட்சுமி மலைத்து இருக்க மனோகரியோ வந்தவரை கண்டு முகம் எல்லாம் மகிழ்ச்சியாக, “அடடடே… பொண்ணு பார்க்க இத்தனை பேர் வந்தது ரொம்ப சந்தோஷமா இருக்கு. இது தான் மாப்பிள்ளை தம்பியா?” என்று கண்ணாடியை துடைத்து பார்க்க ரிஷிவேந்தன் மூச்சை உள்ளிழுத்து சின்ன தொப்பையை தெரியாமல் அட்ஜஸ்ட் செய்தான்.
“பார்க்க நல்லாதான் இருக்கார்” என்று மனோகரி தன் கணவர் வேதாச்சலத்திடம் கூறவும் அவரும் அதை ஆமோதித்தார்.
“எங்க வீட்ல பொண்ணு பார்க்க வந்தா, பெரியவ என்னை விட்டு என் தம்பிக்கு பார்க்கறியானு கேட்பா. சின்னவள் அக்கா மாதிரி தானே மா நானும் அண்ணவோட அண்ணியை பார்க்க வேண்டாமானு அலுத்துப்பா.
இதுல பெரிய பொண்ணு கவிதாவோட பசங்க இருக்காங்களே.. மாமாவோட அத்தையை பார்க்கணும்னு அன்புத்தொல்லை.
பேஸிக்கலி இந்த காலத்துல நாங்க கொஞ்சம் பெரிய குடும்பம் தான் ஆனாலும் ரிஷிக்கு கல்யாணம் ஆனா நீங்க பயப்பட தேவையில்லை. அவன் தனிக்குடும்பம் போனாலும் எங்களுக்கு ஆட்சேபனை இல்லை.” என்று சரண்யா பேசவும் உள்ளிருந்த சந்தியாவிற்கு தலை சுற்றலே வந்தது.
இது எங்க பெரிய பொண்ணு கவிதா. அவளோட வீட்டுக்காரர் தேனீ-ல சினிமா தியேட்டர் வச்சிருக்கார். அவங்க பசங்க வருண்தேவ்,வாசுதேவ் கொஞ்சம் சேட்டை பிடிச்சுதுங்க.
சின்ன பொண்ணு சரிகா அவர் கணவர் ஹரிஷ் ‘தேமா கூல்டிரிங்க்ஸ்’ கம்பெனில மேனேஜரா இருக்கார். இப்ப தான் கல்யாணம் ஆச்சு.
இப்ப வீட்ல நாங்க மூன்று பேர் தான். ரிஷிக்கு இதுக்கு முன்ன நிறைய வரன் வந்துச்சு ஆனா ஜாதகம் சரியா அமையலை. உங்க பொண்ணு ஜாதகம் தான் சரியா அமைஞ்சது” என்றதும் சந்தியா தலையில் அடித்து கொண்டாள்.
“எங்களுக்கும் நிறைய ஜாதகம் செட்டாகலை. இப்ப தான் நீங்க பொருந்துதுனு சொல்லறிங்க. எங்களுக்கு ஜாதகம் மேல நம்பிக்கை கொஞ்சம் குறைவு தான். எங்க சின்ன பேத்தி தான் அஸ்ட்ராலஜி அதுயிதுனு என்னவென்னவோ சொல்வா.
உங்க குடும்பம் பெரிசுனாலும் அப்ப தங்கறது மூன்று பேர் தான்.” என்று வேதாச்சலம் பேசபேச நேரத்தை பார்த்து பார்த்து முடித்தாள் சந்தியா.
ரிஷிக்கோ ‘அடப்பாவமே உங்க அறிமுகமோ, ஜாதகமோ எவன்யா கேட்டது. எனக்கு பொண்ணை காட்டுங்க. காட்டிட்டு எவ்ளோ நேரமென்றாலும் பேசுங்க. இப்படி கண்ணுல பொண்ணை காட்டாம பேசினா ஒரு வாலிப பையன் மனசு நோகாது.’ என்பது போல தவிப்பாய் மூச்சை உள்ளிழுத்து தளர்வாய் விட்டான்.
‘ஓ கியூட்டி நீ ஸ்வீட்டி
உன் ப்யூட்டி அதில் மாட்டி
நான் மெல்லமா மெல்லமா..’ என்று பாடியவள் வீட்டுக்குள் நுழைந்து மிரட்சியாய் நின்றாள் ஷிவாலி.
‘ஓ மை காட் இதுவா பொண்ணு. அம்சமா இருக்கே. கண்ணுக்கு குளிர்ச்சியா மேல சுடிதார் டாப்பு, கீழே ஸ்கர்டு இதென்ன டிரஸ்ஸுனு தெரியலை. வரவர பொண்ணுங்க டிரஸ் கலரு மேட்சிங் என்றால் மாத்தி மாத்தி போடுவாங்களோ.’ என்று ரிஷியின் எண்ணத்தின் ஊர்வலம் போனது மூளை.
‘அடமடையா.. பொண்ணை காட்டலை காட்டலைனு கதறின வந்ததும் என்ன ஆராய்ச்சி பண்ணற. பொண்ணோட முஞ்சியை பாரு டா.’ என்று மனம் காறி உமிழ்ந்தது.
காதில் ஹெட்செட்டை கழற்றி சூயிங்கம்மை மென்றபடி, “யாருப்பா இவங்க எல்லாம்?” என்று கேட்டாள் அந்த புதியவள்.
“இது எங்க சின்ன பெண் ஷிவாலி. ஊட்டில படிப்பு முடிச்சி இப்ப தான் வர்றா. அவளுக்கு பொண்ணு பார்க்கறது சொல்லலை.” என்று கூறவும் ரிஷி வீட்டார் பயந்து மிரண்டனர்.
“அச்சச்சோ பயப்பட வேண்டாம். நீங்க பார்க்க வந்த பொண்ணு சந்தியா ரூம்ல இருக்கா. இது நீங்க பார்க்க வந்த பொண்ணோட தங்கை.” என்று மனோகரி விவரித்து தெளிவாக்க, ரிஷியோ ஆவென்ற பார்வையை கொஞ்சம் கொஞ்சமாய் இயல்பாய் மாற்றி வணக்கம் வைத்தான்.
ஷிவாலி அனிச்சையாய் வணக்கம் வைத்து, “என்னம்மா நடக்குது?” என்று கேட்க தந்தையோ ”அக்கா தனியா இருக்கா. அவளை பொண்ணு பார்க்க வந்திருக்காங்க. கூட போய் இரும்மா” என்று ராமமூர்த்தி நாசுக்காய் சந்தியா அறைக்கு அனுப்பினார்.
‘ஆஹா… பொண்ணு இந்த ரூம்ல தான் இருக்கா? நான் வேற பேக்கு மாதிரி இந்த ரூம் கதவையே பார்த்திட்டு இருக்கேன். பக்கம் தான் ‘ என்று இதுவரை இந்த பக்கம் பார்த்தவன் தற்போது அந்த அறையை அளவிட்டான்.
“ஏ.. பொண்ணு பார்க்க வந்தாங்களா… கங்கிராட்ஸ் அக்கா. நேத்து போன் பண்ணறப்ப சொல்லவேயில்லை. ஆமா அதுல யாரு மாப்பிள்ளை?” என்று ஷிவாலி கேட்க, ரிஷிக்கோ ‘அடப்போங்கயா… என்னை பார்த்தா என்ன தோனுது. இவ ரொம்ப பண்ணறா. பார்த்ததும் பட்டுனு மாப்பிள்ளைனு தெரியலையா. அங்க கவிதா பக்கத்துல குமார் மாமா இருக்கார். சரிகா பக்கத்துல ஹரிஷ் இருக்கார். என் பக்கத்துல தான் யாரும், என்று பார்க்க, வருண் மடியிலும் வாசு பக்கத்திலும் என்று இருக்க, தலை உதறினான். எட்டு வயதில் ஏழு வயதில் அக்கா பசங்களை மடியில் இருந்தனர்
‘கடவுளே… இந்த பொண்ணு முன்னாடி நான் இரண்டு குழந்தைக்கு தகப்பானாட்டும் தெரிந்திருப்பேனோ.
இவனுங்களை எப்படி கழட்டி விட, என்று யோசித்து “சாரி காயிஸ் ரெஸ்ட் ரூம் போகணும்” என்று ஆபிஸில் சகபணியாளரிடம் பேசி கழண்டுக் கொள்ளும் அதே ஐடியாவே உதிக்க கேட்டு விட்டான். கேட்டப்பின்னே மடத்தனத்தை உணர்ந்தான்.
உள்ளிருந்து ஒரு பெண் குரல் விழுந்து சிரிக்க கேட்டது. சரிகா, கவிதா கூட நாணி போக, சரண்யாவோ ‘எங்க வந்துடா இப்படி பேசி தொலைக்கிற” என்று மனதில் வைதாள்.
சிரிக்கும் சத்தம் கேட்டே அது தற்போது வந்த பெண்ணின் குரல் என்றவரை ரிஷி அறிந்து விட்டான்.
ஹாலில் இருந்த ரெஸ்ட் ரூமில் வேதாச்சலம் கைகாட்டி நின்றார். ரிஷியும் நெளிந்தபடி நடந்து கதவை தாழிட்டான்.
‘அய்யோ ரிஷி ஏன்டா இப்படி பாத்ரூம் போகணும்னு சொல்லிட்டு வந்த. பாரு அந்த பொண்ணு சிரிக்குது. பொடி டப்பி மாதிரி இருக்கு குட்டியா அதெல்லாம் கேலி பண்ணுது.
இப்ப அசிங்கமா போச்சு. இதுல நெளிந்துக்கிட்ட வந்து நானே எனக்கு ஆப்பு வைக்கிறேன். எத்தனையோ ஜாதகம் வீட்டுக்கு வந்த வேகத்துலயே திரும்பி போயிடுச்சு.
கடவுளே அக்கா கல்யாணம், சீர்வரிசை, வளைகாப்பு, குழந்தை பிறப்பு, இப்ப தங்கை கல்யாணம் அதுயிதுனு நடுவுல வீட்டு லோன். இதுக்கு நடுவுல ஜாதகம் ராகு கேது சனிப்பெயர்ச்சி எல்லாரும் ரவுண்ட்ஸ் பண்ணிட்டு போயிட்டாங்க.
என்னோட கூட படிச்ச பையனுக்கு எல்லாம் பொம்பள பிள்ளை பிறந்து அது வயசுக்கு வந்துடுச்சி டா, நகை சேர்க்கணும்னு என்னிடம் புலம்பறாங்க.
எனக்கு இங்க பொண்ணே கிடைக்காம ஏதேதோ தடைப்பட்டு காளஹஸ்தி, திருமணஞ்சேரினு சுத்த விடற. கடவுளே பாத்ரூம்ல புலம்ப விடற நியாயமா? சரி விடு… பாரதியே பாடியிருக்கார் *கூளத்தை மலத்தை வணங்கல் வேண்டும்*னு இந்த பாத்ரூம்ல இருந்தும் கடவுளை நினைக்க கூடாதா.
இங்க பாரு கடவுளே… என்ன புலம்ப விடாம எனக்கு ஒரு துணையை காட்டுற’ என்று பார்க்க அங்கே கண்ணாடி தான் இருந்தது. அவனுக்கே அவன் புலம்பல் கடுப்பாக, இடத்தை ஆராய்ந்தான்.
அடப்பாவமே இது குளியலறை பாத்ருமா… செத்தான்டா சேகரு.’ என்று கதவை திறந்து வெளியே வர, அங்கே ஒரு பெண் முதுகு காட்டி அக்கா கவிதாவுக்கும் மாமா குமாருக்கும் காபி கொடுப்பதை கண்டான்.
“இங்க உட்காருங்க தம்பி” என்று வேதாச்சலம் அவரருகே அமர வைக்க, “சந்தியா மாப்பிள்ளை” என்று வேதாச்சலம் அறிமுகப்படுத்த ஓரெட்டு ரிஷிவேந்தனை பார்க்க, அவனும் மென்னகை உதிர்க்க, சந்தியா காபி கொடுத்து மனோகரி அருகே அமர்ந்தாள்.
“என் மக படிச்சி முடிச்சி வேலைக்கு போயிட்டு இருக்கா. இரண்டு வருடம் வேலை செய்துட்டு பிறகு கல்யாணம் பண்ணறேன்னு சொன்னா. அதனால தான் இத்தனை காலமா வரன் பார்க்கலை.” என்று கூற, ரிஷியோ காபி பருகி சந்தியாவை தான் ஆவலாய் பார்க்க முனைந்தான்.
ஆனால் நடுவே பூப்போட்ட பாவாடையில் ஷிவாலி கைநிறைய சாக்லேட்டை எடுத்து வந்து வருண்தேவ், வாசுதேவிடம் கொடுக்க, அவளை நோக்கி பார்வை சென்றது.
உங்களுக்கு சந்தியாவை பிடிச்சதுனா அடுத்து மற்றவையெல்லாம் பேசலாம்.” என்று ராமமூர்த்தி இடைப் புகுந்திட்டார்.
அதன் பின்னே சந்தியாவை கண்டான்.
வருணோ ‘சித்தி சித்தப்பா தனியா போய் பேசினாங்களே. அது மாதிரி பேசப்போறியா மாமா?” என்று கேட்டதும் திகைத்து முடிக்க, ரிஷிக்கோ பக்கென்றானது.
ஹரிஷை பற்றி அறிந்ததால் அவனுக்கு தங்கையை பிடித்ததாலும் பேச ஒரு வாய்ப்பை வழங்கினான் ரிஷி. அது தற்போது தனக்கு ஆட்டம் காட்டுமென அறியாது விழித்தான்.
“அதெல்லாம் இங்க எப்படியோ சும்மா இருடா.” என்று கவிதா வருணை அடக்கினாள்.
“அதெல்லாம் பேச வச்சிடலாம். சந்தியா தம்பியை கூட்டிட்டு மாடில போய் பேசிட்டு வாமா.” என்று மனோகரி கூறவும் ரிஷிக்கு குத்து பாட்டு காதில் விழுந்து ஆடத்தோன்றியது. ஆனால் பவ்வியமாக சரண்யா கண்ணபிரானை பார்த்தான்.
“போ பேசிட்டு வா ரிஷி” என்றதும், சந்தியா எழவும் ரிஷி அவள் பின்னால் சென்றான்.
-பிரவீணா தங்கராஜ்

Yenaku yennamo chinna ponna than kothu viduvaanga pola entha writer ji .. eva yenna solla poralo
Wow sema comedy sis. Rishi super comedy performance. Fantastic sis.
SANTHOSAMA PORAN MELA POI PESITU MOTHAMA HURT AI VARA PORAN POLA