ரி-ஷி-வா-22
🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁
அதிகாலையில் ஹரிகரன் பைக்கில் வந்து சந்தியா வீட்டில் ஹாலில் அவள் முன் நின்றான்.
“என்ன அவசரம் அங்கயே இருந்து இருக்கலாம்.” என்றான் அவன்.
“நீ ரொம்ப பேசிட்ட” என்று சந்தியா ஆரம்பித்தாலும் அவனை உட்கார வைத்து அவன் தோளில் சாய்ந்தாள்.
ராஜலட்சுமி வரவும் தள்ளி அமர்ந்தவன், காபி நீட்டவும் வாங்கி பருகினான்.
ராமமூர்த்தி வரவும் அவர் முகம் காண கூசி நின்றான். திருமணம் முடித்து சில நாட்களிலேயே இப்படி வீட்டிற்கு தனியாக வரவிட்டு விட்டானே என்றதால் அவனிடம் பேசவோ பார்க்கவோ விருப்பமின்றி கடந்து பேப்பர் வாங்க சென்றார்.
ஷிவாலி குளித்து முடித்து வெளிவந்தவள், ஹரியை பார்த்து நாகரிகமாய் முறுவலிட்டு மாடிக்கு ஓடினாள்.
ரிஷியோ கட்டிலில் படுத்திருந்தவன் தலைக்கு தலையணை வைக்காமல் அதனை அணைத்து படுத்திருக்க, அதனை உருவினாள்.
“ஷிவ்..” என்று கண் திறவாமலேயே தலையணையை தேடினான். ஷிவாலிக்கோ அவன் கைக்கு தலையணை கொடுத்துவிட்டு, முட்செடியிலிருந்து ஒரு முள்ளை உடைத்து அவன் கையில் மெதுவாய் அழுத்தம் கொடுத்து சுரண்டினாள்.
முதலில் ஏதோ ஊர்வதை அறிந்து தட்டி விட, கையை எடுத்துவிட்டாள். மீண்டும் அதே போல செய்ய, கொசுவை அடிப்பது போல கையை தூக்கவும் முள் குத்தியது.
“ம்மா..” என்று எழுந்தவனிடம் “குட் மார்னிங்” என்று சிரித்தவளை கண்டு முள்ளை கையில் வைத்து நின்றவளை கண்டு “ஏன்டி.” என்று எழுந்தான்.
“ஹரிகரன் மாமா வந்திருக்கார். அநேகமா சமாதானம் போல” என்று சிரிக்க, முகத்தை கைகளால் அழுத்த துடைத்து முடித்தான்.
“காலையிலயே வருவார்னு தெரியும்” என்று அங்கிருந்த டேப்பில் முகம் அலம்பினான்.
“எப்படி?” என்று கேட்டு நின்றவளின் ஸ்கர்டில் முகம் துடைத்தான்.
“ஏய்…” என்று தள்ளி வர அதற்குள் முகம் துடைத்து முடித்து, நிமிர்ந்து “மேரேஜாகி பிஸிகல் பாண்டிங்ல இருந்த லவ் பேர்ட்ஸ் தனியா வந்தா ஆண் பேர்ட்ஸ் ஆட்டோமெடிக்கா அடுத்த நாள் வரும்.” என்று கூறவும் ஷிவாலி “ஓ… ஆண் மனசு அப்படியா?” என்று நக்கலாய் கேட்டாள்.
“ஓய்… தி சேம் பீலிங் பொண்ணுக்கும் இருக்கும். உங்கக்கா முறுக்கிட்டு இருக்க மாட்டாங்க. சண்டை எதுக்கோ அதை பற்றி பேசாம சமாதானம் ஆகியிருப்பாங்க.
எப்படியும் ஒரு வருஷம் இப்படி தான் இருக்கும்” என்று அனுபவம் கண்டவன் போல கூறவும் ஷிவாலி “ஓ…ஓஹ்..” என்று தாடையில் கைவைத்து அவனை நோட்டமிட்டாள்
“அம்மா தாயே… ஆபிஸ் பிரெண்ட்ஸ், காலேஜ் பிரெண்ட்ஸ் சொல்வானுங்க. இரண்டு நாள் தான்டா தனியா படுக்க முடிந்தது. பிஸிகல் டச் இல்லைனா என்னவோ மாதிரி பேட் பீலாகும்னு மேரேஜ் ஆன சம் இயர்ல சண்டை போட்டு சமாதானமாக சொல்வாங்க. அதனால பிரச்சனை அகைன் பேசாமலே சமாதானமாவாங்க.” என்றான்.
“அப்போ ஆப்டர் சம் இயர்ஸ் ஆனா என்னப் பண்ணுவாங்க?” என்று கதை கேட்டாள்.
“ம்ம்… அதுக்குள்ள தான் குழந்தை குட்டினு கமிட்மெண்ட் வந்திடுமே. அதனால கவனம் வேற வேற என்று போயிடும். ஜாப் குழந்தை பணம்னு ஓடுவாங்க. மோஸ்டா என்னோட ஆபிஸ் கொலிக் இப்படி தான் பார்த்திருக்கேன். ஒன்று இரண்டு விதிவிலக்கு” என்று கட்டிலில் அமர்ந்தான்.
“ம்ம்… சரி கீழே வா.” என்று அவனை கூப்பிட, அவளோடு நடந்தான்.
இன்றும் கையை பிடிக்க செல்ல அவனுக்கு முன் அவனின் கை புஜத்தினை பிடித்து நடந்தாள்.
ரிஷி காட்டில் மழை என்பது போல பார்க்க வேதாச்சலம் மனோகரி வரவும் கையை விடுவித்தாள். அதானே பார்த்தேன் இது கேடி’ என்று அவளின் நடிப்பை பிரமித்தான்.
குளித்து சாப்பிட்டு ஹாலிலேயே சுற்ற, ஹரிகரன் சந்தியா இருவரும் அறையில் இருக்க, ஷிவாலிக்கு கூட தன் சொந்த வீட்டில் தனதறையாக இருந்தவையில் ஒதுங்கிருக்கவே முடிந்தது.
மதியம் வரை பார்த்தவள் “தூக்கம் வந்தா தாத்தா ரூம்ல போய் படுத்துக்கோ” என்று ஷிவாலி ரிஷியிடம் கூற, அவளை கண்டு “அதெல்லாம் வராது ஒர்க் இருக்கு” என்று லேப்டாப்பில் மூழ்கினான்.
“நாம வீட்டுக்கு போகலாம்னாலும் ஓகே தான்.” என்றதும் மடிகணினியில் பார்வை பதித்து கொண்டே அவளை ஒருமுறை கண்டு “ஈவினிங் போகலாமா?” என்று கேட்டான்.
“ம்ம்.. பெஸ்ட். தாத்தாவிடம் ஒர்க் இருக்குனு சொல்லிடு. அம்மாவிடம் சொல்லிடறேன்” என்று ஓட முயன்றவளிடம் “சடனா கிளம்பிட்டு சொல்லிக்கலாம்.” என்று கூறிவிட்டு விரலின் நகங்களை நோட்டமிட்டான்.
“இடது கையில நல்லா ஷேப்பா இருக்கு நெய்ல்ஸ். பேய் நகம் மாதிரி வலது கை நகம் கடிச்சி கடிச்சி வச்சியிருக்க?” என்றான்.
“டென்ஷன் ஆனா கடிப்பேன். இல்லை… அப்நார்மலா இருந்தாலும்” என்றவள் உருவிக் கொண்டு போனாள்.
இரண்டு மணி அளவில் “சாப்பிட்டதும் கிளம்பறோம் தாத்தா. சில ஒர்க் பெண்டிரைவ்ல சேவ் பண்ணியிருக்கேன். அதனால வீட்டுக்கு போகணும். நேரம் கிடைக்கிறப்ப திரும்ப வர்றேன்” என்று பக்குவமாய் கூறவும் தாத்தா மறுக்கவில்லை. கூடுதலாக இருக்கவும் தடுக்கவில்லை.
“சரியா… ஷிவா குட்டிய பார்த்துக்கோ. கொஞ்சம் வாய் அதிகம். ஆனா பாசம் வச்ச பிள்ளை” என்று கூறினார்.
மனோகரியோ ஷிவாவை அழைத்து பேச பேச, “பாட்டி போரடிக் ப்ளிஸ் அட்வைஸ் பண்ணாதே.” என்று கழண்டு கொண்டாள்.
ராஜலட்சுமியோ மதியம் மணக்க மணக்க கறி வகைககள் செய்து வைக்க, டேபிளில் ராமமூர்த்தி மாப்பிள்ளை இருவரும் சாப்பிட்டு முடித்து கை அலம்பும் போது, “எப்ப வீட்டுக்கு வந்தாலும் இப்ப மாதிரியே சேர்ந்தே வாங்க சேர்ந்தே போங்க மாப்பிள்ளை.
தனியா வந்தா என் மக கண்ணை கசக்காம வரணும். நீங்க மத்தவங்க மாதிரி கண்கலங்க விடமாட்டிங்க. ஆனாலும் பெத்த கடமை சொல்லிடறேன்.” என்று ரிஷியிடம் வேண்டுதல் வைத்தார்.
நாசுக்காய் ஹரிகரனுக்கு கொட்டு வைத்ததார் எனலாம்.
“ஷிவா குட்டி பெரும்பாலும் அது உண்டு அது வேலையுண்டு தான் இருக்கும். செல்லம் கொடுத்து வளர்த்தாலும் அவளால ஒரு கம்பிளைனும் இதுவரை வந்ததில்லை.” என்று ராஜலட்சுமி கூறவும் சந்தியா எழுந்து அறைக்குள் சென்று இருந்தாள்.
ஹரிகரனோ, உடனே சென்று விட்டால் நகை நட்டோடு சந்தியாவை அழைத்து செல்வது கடினமாகிவிடுமென அமைதியாய் இருந்தான்.
அரைமணி நேரத்தில் ரிஷி மற்றும் ஷிவாலி சொல்லிக் கொண்டு கிளம்பினார்கள்.
ராஜலட்சுமியிடம் சந்தியா தொடர்ச்சியாய் புலம்பினாள்.
ஐந்து சவரன் நகையை முன் வைத்து விட்டு, “ஊருக்கு போய் வந்ததும் திரும்ப வரணும் சந்தியா. இது எங்க அத்தை எனக்கு கொடுத்தது. எங்க அம்மா கொடுத்தது இல்லை” என்று கூற சந்தியா தலையாட்டி அன்றே தங்கி செல்வதாக கூறினார்கள்.
இங்கு ரிஷி ஷிவாலி வந்ததும் தாய் தந்தை இல்லாமல் வீடு பூட்டி இருந்தது.
மாடிக்கு படிகளில் நடந்தபடி அன்னை சரண்யாவிற்கு அழைத்தான்.
“எங்கம்மா இருக்க? வீடு பூட்டியிருக்கு?” என்று தாங்கள் வந்து விட்டதை கூறி கேட்டு தங்கள் மாடிவீட்டின் கதவை திறந்தான்.
“நீ நாளைக்கு வருவனு இங்க சரிகா வீட்டுக்கு வந்திருக்கோம் டா. சரிகாவுக்கு மயக்கம் வந்துடுச்சாம்.
மாப்பிள்ளை ஹரிஷ் கூப்பிட்டாரு. உனக்கே தெரியும் அவரா உதவி கேட்கறது குறைவு.” என்று பேசிக் கொண்டே போக வீட்டில் செருப்பை ஸ்டாண்டில் வைத்து கேட்டுக் கொண்டே சரிம்மா நீ சரிகாவை பாரு.” என்றவன் அணைத்து விட்டான்.
“அம்மா வீட்ல இருப்பாங்கனு பார்த்தேன். இப்ப சரிகா வீட்டுக்கு போயிருக்காங்க.” என்றவன் ஷிவாலியை தேட, அவளோ மடமடவென ஐஸ் வாட்டர் குடித்து நின்றாள்.
கிட்சனில் எதையோ உருட்ட ஆரம்பித்தாள்.
“என்ன தேடற?” என்றான் ரிஷி.
“பசிக்குது எதையாவது திண்ண இருக்கானு தேடறேன்.” என்று கூறியதும், ரிஷியோ “ஓ மைகாட். நைட் டின்னர் வேற செய்யணும். அம்மா சாவி எடுத்துட்டு போயிருக்காங்களா எங்க வச்சிட்டு போனாங்களோ. அப்படியே என்றாலும் எதுவும் இருக்காதுனு தான் நினைக்கிறேன். ம்ம்.. இரு நான் போய் டின்னர் வாங்கிட்டு வந்துடறேன்.” என்று பைக் சாவியை எடுத்தான்.
“ஏய்… நானும் வர்றேன். ஸ்நாக்ஸ் வாங்கணும்” என்று ஓடி வர அவன் திரும்பவும் இடித்து நின்றாள்.
“அம்மாடி… ஆள் தான் சில்வண்டு மாதிரி இருக்க, இடிச்சா யானை மோதுற பீல்” என்று நெஞ்சை தேய்த்தவனை கை முட்டியால் இடித்து “வா.” என்று தள்ளி சென்றாள்.
பைக்கில் ஏறியதும் தோளில் கையை வைத்து வந்தாள். ரிஷி… குல்பி வாங்கலாமா?” என்று கேட்டதும், “முதல்ல சாப்பிட ஏதாவது வாங்கிடுவோம். ஹோட்டல் போகணும்னா ரொம்ப நேரமாகும். ரெடிமேட் தோசை மாவு வாங்கிடலாம்” என்று டிபார்ட்மெண்ட் கடைக்குள் சென்றார்கள்.
பொருள் எடுத்து செல்லும் டிராலியை இழுத்து கொண்டு அதில் காலை வைத்து வீலில் விளையாடியபடி இருந்தாள்.
ரிஷியோ “வாலு” என்று பொருட்களை எடுத்து வைத்தவன் லேஸ் இருக்கும் பக்கம் வந்ததும், “ஓய்… இதை வாங்கி கூட திண்ணு தொலை. ஆனா கண்டதும் ஊத்தி மிக்ஸ் பண்ணின உதைப்பேன். லெமனை வேற பிழிஞ்சி சதி பண்ணிட்டியே டி.” என்றவன் அவள் எடுத்து வைக்கும் திண்பண்டத்தை கவனித்தான்.
டார்க் பேண்டஸி, லேஸ், கிட்கேட், சில்கி சாக்லேட், மேட்ஆங்கிள்ஸ், மாஸ்மலோன்ஸ் என்று எடுத்து வைக்க, “ஏய்… முதல்ல டின்னர் சாப்பிட தோசை மாவை எடுத்து வச்சியா?” என்று அதனை எடுத்து வைத்தாள்.
“தோசைக்கு இட்லி பொடி எடுத்து வை” என்று உத்தரவிட்டவளை ”அப்ப… சட்னியும் வைக்க தெரியாதா?” என்றவன் இட்லி பொடியையும் எடுத்து வைத்தான்.
“எதுவும் சமைக்க தெரியாது மேன். சாப்பிட மட்டும் தெரியும்” என்று சலித்தாள்.
தனியாக ரிஷி முறுக்கு, காராபூந்தி, தேன்மிட்டாய், பர்பி என்று தேடி எடுத்தான்.
“ஆமா… தோசை எதுல சுடுவ?” என்று கேட்டாள்.
“புத்திசாலி நீ கொண்டு வந்த திங்க்ஸ்ல இன்டக்ஸ் ஸ்டவ் இருக்கு அண்ட் பேன் இருக்கு. சுட தெரியுமா?” என்று கேட்டான்.
“ரொம்ப ஓட்டாதே தெரியும்.” என்று பில் போட கார்டை எடுக்க அவனுக்கு முன்னால் அவனின் கார்டை அவள் நீட்டினாள்.
பில் போட்டு பாஸ்வோர்ட் கேட்க “ஹலோ ‘பே’னு பார்க்காதே பின்நம்பர் போடு” என்று கூறவும் ரிஷியோ அசடு வழிந்து பின்நம்பர் போட்டு முடித்தான்.
கார்டு திரும்ப வாங்கவும் ஷிவாலியே வைத்து கொள்ள, “அதான் ஓடி போகலையே… கார்டை இங்க தள்ளு” என்று கேட்டான்.
“ம்ம்.. எப்ப வேண்டுமென்றாலும் ஓடிப் போவோன் யூஸ் பண்ணிக்கறேன். ஆமா பின் நம்பர் 3236 ஆஹ். யூஸ் பண்ணிக்கறேன்” என்று விழியை அபிநயனத்தோடு உருட்டினாள்.
“அது சரி என்னை களோபரத்தோடவே வச்சியிருக்கணும்னு முடிவு கட்டிட்டட.” என்றவன் பைக்கை உயிர்பிக்க, கவரை முன் வைத்து தோளை பிடிக்கவும், லாலிபாப்பை பிரித்து சப்பிக் கொண்டே, “அடிக்கடி இந்த டிபார்ட்மெண்டுக்கு வருவியா?” என்றாள்.
“ம்ம்.. பக்கத்துல இருக்குல” என்று கூறினான்.
“பக்கத்துல இருக்குனு வர்றியா அந்த பில் போடுற பொண்ணை சைட் அடிக்க வருவியா. இஇஇனு உன்னையே பார்க்குறா?” என்றதும், “அடிப்பாவி அம்மா சத்தியமா நான் பார்க்கலை. உன்னை தான் சைட் அடிச்சேன்.” என்றான். அவள் அதை பற்றி பிறகு கேட்கவும் இல்லை.
வீடு வரவும் “குயிக்கா தோசை சுடறியா பசிக்குது” என்றதும் ஆவென விழித்தவன் “இந்த டயலாக்கை நான் சொல்லணும். ம்ம்… இட்ஸு ஓகே செய்யறேன்.” என்றவன் சுட்டு முடிக்க அரை டவுசர் போன்றதொரு கால்சட்டையை அணிந்து ‘இப்யூ தேர் டச் மீ‘ என்ற வாசகம் அணிந்து வந்து நின்றவளை கண்டு அதிர்ந்தான்.
“வாவ் ரெடியா?” என்று தோசைக்கு இட்லி பொடி வைத்து வாங்கி வந்த எண்ணெயை ஊற்றி குழைத்து சாப்பிட்டாள்.
“யம்மி.” என்று கூறி சாப்பிட, அவளின் உடையை கண்டு அமைதியாய் சுட்டு கொடுத்து அவனும் விழுங்கினான்.
“உங்க வீட்ல இந்த டிரஸ் போட்டா மாமா திட்ட மாட்டார்.” என்று கேட்டான். தொடைகள் பளிச்சிட, அவனின் மோக எண்ணங்களை தீண்டியது.
“நான் எங்க வீட்ல இருப்பேன். ஹாஸ்டல்ல தானே. அங்க இதை போடுவேன். என்னோட இருக்கிற ரூம்மேட்டும் போடுவாங்க. இதுல என்ன இருக்கு?” என்றாள்.
‘அதானே.. பொண்ணுங்க அதுவும் உன் ஏஜ் ரூம்மேட். இதுல என்ன இருக்கு. ஆனா வீட்ல நான் இருக்கேனே. நான் பையன் டி, என் எதிர்ல ஷையா இல்லையா.. அய்யோ.. இவளை பார்க்க எனக்கு தான் வெட்கம் வருது. வெட்கம் மட்டுமா..’. என்றவன் மனதிலேயே புலம்பி தண்ணீர் ஜக்கை காலி செய்து எழுந்தான்.
நொடியில் அம்மா வந்தப் பிறகும் போடுவாளா என்று அதிர்ந்தான்.
“ஏய்.. அம்மா வந்தாலும் போடுவியா?” என்றதும், “தடிமாடே… போடமாட்டேன். புத்தி போகுது பாரு.” என்று தட்டை சிங்கில் போட்டு விட்டு படுக்க சென்றாள்.
நகத்தை பாதி கடித்து ரிஷியை பார்த்து சிந்தனை வயப்பட்டவள் தலையை ஆட்டி வேண்டாம் என்று படுக்க செல்ல இங்கிருந்த பொழுது உபயோகித்த அறையில் கட்டிலை காணாது விழித்தாள்.
தட்டை அலம்பியவன் டவலில் கைதுடைத்து கொண்டே, “அந்த கட்டில் கீழே ஹால்ல இருக்கும், மேரேஜ் அப்ப இடைஞ்சலா இருக்குமேனு இங்க போட்டது. இப்ப அகைன் பழைய பிளேஸ்க்கு போயிருக்கும்.
நீ கொண்டு வந்த கட்டிலை நாளைக்கு அட்டாச் பண்ணுவோம்.” என்று பார்வை தனதறை பக்கமாக காட்டி நின்றான்.
உள்ளே வர மனதுக்குள் தயக்கம் இருந்தாலும் வெளியே நான் ரொம்ப தைரியசாலி என்று வந்தாள்.
போர்வை ஒன்றை அவள் முன் கொடுத்து “என்னோட பழகி என்னை பிடிச்ச பிறகு டிசைட் பண்ணு. குட் நைட்.” என்று படுக்க, அந்த கட்டிலில் அவளுக்கு படுக்க சரியான அளவு மட்டும் இருந்தது. உருளவோ அதீத இடமோ இல்லை என்றதும் புரிந்தது.
அமைதியாய் முதுகுகாட்டி படுத்து கொண்டாள்.
அவளின் மனதில் சந்தியா ஹரி சண்டை என்றதற்கு ரிஷி பேசிய பேச்சு மனதில் வந்து போனது. ஒரு வருடம் கழித்து மாறுமா இந்த மனம். அப்படின்னா ஒரு வருடம் ரிஷியோட தள்ளி நின்று அவனின் செய்கையை குணத்தை ஆராயலாமா? என்று சிந்திக்க மனமோ ஒரு வருடம் இருப்பது கடினமல்லவா என்று நகைத்தது.
-அலைப்பறை தொடரும்
-பிரவீணா தங்கராஜ்.

Oru Varsha mellam romba jaasthi ma. Rishi paavam
one yr waste pana poriya shivu rishi sonnathu crt than first yr apadi than sikram samadhanam nadkum athe mari life fulla iruntha nalla irukum athu thana husband wife kulla iruka nalla rlationship