👇 கதைகள் வாசிக்க / கேட்க 👇
💎 Premium Site🛒 Amazon Kindle▶️ YouTube Audio
Skip to content
Home » 90’s பையன் 2k பொண்ணு-36

90’s பையன் 2k பொண்ணு-36

ரி-ஷி-வா-36

 🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁  

     ரிஷி அருகே வந்து, “சப்போஸ் கன்சீவ் ஆனா எந்த டென்ஷனும் ஆகாத. நான் உன்னை கடைசி வரை இப்படியே பார்த்துப்பேன். அதனால கலைக்கிறதை பத்தி பேசாதே.” என்றான் நிதானமாக.

      “ம்ஹகும்… நான் ஸ்டடியா இல்லை.

    உன்னால…

   நீ பேசி பேசி கவுத்திட்ட. நான் நமக்குள்ள தானா உருவான கனெக்டிவிட்டியே ரசித்தேன். அது இப்படி கொண்டு வந்து விடும்னு எக்ஸ்பெக்ட் பண்ணலை. எவ்ளோ ஜாக்கிரதையா இருந்தும் கோட்டை விட்டுடேன்.” என்று புலம்பினாள்.

      “ஷிவ்… நீ எதிர்பாராதது நடந்ததும் பயப்படுற. என்னை புரிஞ்சிக்கலை அதுக்குள்ள குழந்தையானு திகைக்கிற. முதல்ல ஏன் என்னை புரிஞ்சுக்கணும்.

    உனக்கு நான் எனக்கு நீ என்று முடிவாச்சு. காலம் முழுக்க சேர்ந்து வாழ போறோம்னு நம்பிக்கை வை. தானா நீ என்னோட எல்லா கேரக்டரையும் ஒவ்வொரு செய்கையில புரிந்து நடப்ப, நானும் அதே நேரம் உன்னை புரிஞ்சுப்பேன்.

     என்னை கேட்டா நானே உன்னை புரிஞ்சுக்கலை.” என்று கூறவும் “வாயை மூடுடா. வக்கணையா பேசற.” என்று அழுதாள் 

     “சரி பேசலை… ரிசல்ட் வரட்டும்” என்று அமர்ந்தான்.

     “உனக்கு குளுகுளுனு இருக்குல. கல்யாணம் வேண்டாம்னு சொல்லி உன்னிடம் பேச வந்தவள் பிறகு வேற வழி இல்லாம கல்யாணம் பண்ணிட வச்சிட்ட, பிடிக்கலைனு சொன்னவளை பிடிக்குதுனு பேச வச்ச, குழந்தை குட்டினு ஒரு வருஷம் உன்னை புரிந்தப் பிறகு தான் வாழணும்னு இருந்த என்னை, உன்னோட வாழ வச்சி இப்ப குழந்தையை கொடுத்துட்ட, ஆக மொத்தம் நீ நைஸா உனக்கு சாதகமா எல்லாம் பண்ணிட்ட. எல்லாத்துக்கு காரணம் நீ தான்” என்று விசும்பினாள்.

   அந்த நேரம் ஒரு நர்ஸ் ரிஷியை கெட்டவனாய் பார்வை பார்த்து சென்றாள்.

    “ஷிவ் எதுவும் பேசாதே. நர்ஸ் எல்லாம் ஒரு மாதிரி பார்த்துட்டு போகுது. நான் என்னவோ உன்னை சித்திரவதை பண்ணின மாதிரி” என்று அருகே அமர்ந்தான்.

    “சித்திரவதை தான் பண்ணற. உன்னை முதல்லயே அவாய்ட் பண்ணிருக்கணும் ரிஷி.” என்று புலம்பியதையே புலம்பினாள்.

      “சும்மா என்னை கரிச்சுக் கொட்டாதே. என்னை பிடிக்கலைனா போடி. சும்மா நொய்யு நொய்யுனு.

    ஒரு கல்யாண ஆன ஆம்பளைக்கு சந்தோஷம் என்ன தெரியுமா. அவன் உயிர் கருவா குழந்தையா மாறி அப்பாவாகுற சந்தோஷம் தான் மிகப் பெரிய சந்தோஷம்.

   அந்த சந்தோஷத்தை அனுபவிக்க விடறியா டி. நானும் பொறுமையா போறேன்.

  நீ என்னடானா பொறுமையா போறதுல எருமை மேய்க்குற.” என்றான்.

      “ஓ… அப்ப இப்பவரை எனக்கு சப்போர்டா இருக்கற மாதிரி இருந்தாலும், உள்ளுக்குள் நீ இந்த விஷயத்தால சந்தோஷமா ரசிக்கிற தானே.” என்று கேட்டாள்.

     “கண்டிப்பா சந்தோஷமா தான் பீல் பண்ணறேன்.” என்றதும் அவனருகே இருந்து எழுந்தாள்.

    “உனக்கு அப்ப என்னை விட உனக்கு வரப்போற குழந்தை பெரிசா. இப்பவே என்னை இக்னோர் பண்ணற.”

    “இக்னோர் பண்ணலை ஷிவ்” என்று அமர வைக்க கையை பிடித்தான்.

     “பேசாதே ரிஷி.” என்று உதடு துடிக்க பயந்தாள்.

    அதே நேரம் ஷிவாலினி யாரு.. ரிப்போர்ட் வந்துடுச்சு. வாங்கிக்கோங்க.” என்று ஸ்கேன் ரிப்போர்ட் எடுக்கும் இடத்தில் கூப்பிட , ரிஷி எழும் முன் ஷிவாலி வேகமாய் சென்று பாஸிடிவ் நெகட்டிவ் என்றதை தேடி பக்கங்களை பிரித்தாள்.

      பாஸிடிவ் என்றதும் பைலை கீழே போட்டாள்.

     “ஷிவ்… என்னாச்சு” என்று எடுத்தான். பாஸிடிவ் என்றதும் உதடு விரிய அவளை காண அவளோ அவன் கன்னம் அறைந்து “சிரிக்காத டா.” என்றதும் பணிப்புரியும் பெண்ணோ, “மேடம் இங்க கத்திட்டே இருக்காதிங்க. எட்டு மணி நேர ஆப்ரேஷன் நடக்குது. நிஷாந்தினி டாக்டர் வர இன்னும் நாலு மணி நேரம் ஆகும். போய் அமைதியா உட்காருங்க.” என்றதும், ஷிவாலி விடுக்கென நகர்ந்தாள்.

     அவனும் பின்னாடியே வந்தவன், “எங்க ஓடுற டாக்டர் வந்ததும் கேட்டுட்டு போகலாம்.” என்று கையை பிடிக்க, “போடா தடிமாடே” என்று கை உதறி ஹாஸ்பிடல் விட்டு ஓடினாள்.

     ரிஷி செல்பவளை கண்டு முறுவளித்து, பைல்களை மடியில் வைத்து அமர்ந்தான்.

      மெதுவாய் பக்கங்கள் புரட்டி பார்த்து விட்டு பாஸிடிவ் ஓன்றதை வருடி விட்டு முகப்பு பக்கம் பார்த்தான்.

     அங்கிருந்த ஸ்கேன் ரிப்போர்டில் மீண்டும் சென்றான்.

   ரிப்போர்டை காட்டி “மேம் இதுல ஷிவாலினி மகேந்திரன் நேம் இருக்கு. என் ஓய்ப் பேரு ஷிவாலி என் பெயர் ரிஷிவேந்தன்.” என்று  பேசினான்.

     “அய்யோ சாரே… பேஷன்ட் பைல் மாறி போயி.. இவ்வட ஷிவாலி ஷிவாலினி பேஷண்ட் வந்துஉ… சேட்டன் கொஞ்சம் மனசிறங்கி மாப்பு பறைந்தி, இதே ஷிவாலி ரிஷிவேந்தன்.” என்று கொடுக்கவும் அதனை வாங்கி பார்த்தான்.

     அதில் இருந்த ரிப்போர்டை கண்டு, “ஓகே சிஸ்டர்… கொஞ்சம் அவசரம் நான் கிளம்பறேன். டாக்டரோட மருமகளிடம் பக்கத்துல தான் என் ஒய்ப் பிசியோதெரபி கிளாஸ் எடுக்கறாங்க அப்பறம் பார்த்துக்கறேன் கிளம்பறேன் சிஸ்டர்.” பின்னர் டாக்டர் வர தாமதமாகும் என்று அந்த பெண்ணிடமே நன்றி நவில்ந்து கிளம்பினான்.

      ‘அடியே குட்டி பட்டாசு… எதுக்கு தான் வீம்போ.’ என்றவனோ பைக்கை உயிர்பித்தான்.

      ஷிவாலியோ ஆட்டோவில் ஏறி சாய்ந்தமர, ஷேர் ஆட்டோவில் பக்கத்தில் ஒரு பெண் குழுந்தையோடு ஏறினாள்.

      பெண் குழந்தை நல்ல நிறமும் களையான முகம், குண்டு கன்னம், கருப்பு மை கருகமணி என்று போட்டு வாயில் கைவிட்டு எச்சியொழுக, விளையாடியிருந்தாள்.

      ஷிவாலி மெதுவாய் திரும்பி பார்த்து குழந்தையையே அசராது காணவும் அவளுக்குள் உண்டான தாய்மை எண்ணங்கள் அலை மோதியது.

        வேண்டாம் வேண்டாமென்று பேசும் தானே அந்த குழந்தையை இப்படி அணுஅணுவாய் ரசித்ததும், வருண் வாசு என்று குழந்தையோடு சுற்றி திரிந்த ரிஷிவேந்தனுக்கு ஆசை கனவு இருக்காதா என்ற எண்ணம் வந்தது.

   ஹரிகரன் மாமாவின் தங்கை பெண்ணை கூட எப்படி அன்பாய் பார்த்தான்.

    அவனை பார்க்க கூடாதென போனில் கேமிரா ஆன் செய்து அவனின் செய்கையை கண்ட கணங்களும் அவன் அந்த குழந்தையிடம் அன்பை பொழிந்ததும் பிஸ்கேட் ஊட்டி வாயை துடைத்து விட்டானே என்று எண்ணவும் தன்னால் கைகள் அருகேயிருக்கும் குழந்தையின் கையை எடுத்துவிட்டு வாயை துடைத்தாள்.

   அருகேயிருந்த பெண்ணோ, “எடுத்து எடுத்து விட்டாலும் கை சப்புவா சிஸ்டர்” என்று பேசவும் ஷிவாலி மென்னகையோடு கடந்தாள்.

   தன்னால் வயிற்றை தொட்டு பார்த்தாள். அவளுக்குள் ஆயிரம் பட்டாம்பூச்சி ஊர்வது போன்று தோன்றியது.

     “ரோஜா பூ பத்து ரூபா கவரு. மல்லி முழம் ஐம்பது ரூபாய்.” என்ற குரலில் சிக்னலில் இருந்ததை உணர்ந்தாள்.
  
    அருகேயிருந்த குழந்தை வைத்த பெண்மணியும் சென்றுவிட்டார் போல வெற்றிடமாக காட்சியளித்தது.

      “முகூர்த்த நேரம் மா. மல்லி முழம் ஐம்பது ரூபாய் விற்குது. நாங்க என்ன பண்ணமா.” என்று கூற, “ரோஜா.” என்றவள் முகம் புதைந்து அழுதாள்.

      ஆட்டோ மீண்டும் கிளம்பவும் வீட்டுக்கு வந்து சேர்ந்தாள்.

    போனை எடுத்து தன் பழைய பள்ளி நட்பை எடுத்து பார்த்தாள்.

    ரோஜா… என்றவள் அழுதழுது மெத்தையில் உறங்கிட ரிஷி வந்தவன் மாடியில் அவளிடம் பேச வந்தால் அவளோ அழுது அயர்ந்து உறங்கினாள்.

    “பொடிடப்பி எப்படியெல்லாம் பேசுது. ஸப்பா…மனசுல என்னதான் ஓடுமோ. ஒழுங்கா ரிப்போர்ட் பார்த்திருந்தா பொறுமையா என்னோடவே வந்திருப்பா.

   என்ன ஆசை காட்டி ஏமாத்திட்டா. நான் கூட கன்சீவ் ஆகிட்டாளோனு சந்தோஷத்துல இருந்தேன். இந்த பொடிடப்பி என்னை ஏமாத்திட்டாளே. எழுந்ததும் கன்சீவ் ஆகலைனு தெரிந்தா தான் மேடம் சந்தோஷமா இருப்பா.’ என்று அவளையே கண்டவன் அதிகம் அழுதியிருக்கின்றாளென புரிய வருந்தினான்.  ‘நான் தான் ஏமாந்துட்டேனா… டேய் ரிஷி காலமிருக்கு டா.’ என்று அவனுக்கு அவனாக கூறிக்கொண்டான்.

     இரவு உணவு உண்ணும் நேரத்திற்கும் எழாமல் உறங்கியவளை எழுப்ப மனமின்றி விட்டு விட்டான்.

   சரண்யா வந்து ‘பால் பிரெட்’ மட்டும் எடுத்து வந்து அறைக்குள் கொண்டு தர வாங்கி வைத்திருந்தான்.

         அன்னையிடம் கூறாததும் நல்லது தான் என்று உறங்க, அவளை இரவில் அணைத்து கொண்டான்.

    மணி இரண்டு முப்பது இருக்க திரும்பி படுக்க முனைந்தவளுக்கு நகர முடியாமல் சதியாய் ரிஷி கரங்கள் தென்பட, அது அன்பென்னும் விலங்கு போன்று காட்சியளித்தது.

   தானும் ரோஜா போல மாறி விடுவோமோ என்ற எண்ணங்கள் மோதவும், அவனின் கையிலிருந்து முரட்டு தனமாய் விடுபட்டாள்.

    அறை தூக்கத்தில் “என்னடி” என்று விழிக்க, “இப்படி தான் டா என்னை அணைச்சி உனக்கு அடிமையாக்குற. வேண்டாம்… எனக்கு இப்படி ஒரு அடிமை வாழ்க்கை வேண்டாம். என்னை விடு தனியா. நான் தனியா போயிக்கறேன்.” என்று கத்தினாள்.

     “போடி… டிவோர்ஸ் வாங்கிட்டு தனியா ஹாஸ்டலுக்கு போ. அன்டார்டிகா போ” என்று கத்தியவன் ‘இவ வேற தூக்கத்துல கை பட்டாலும் கால் பட்டாலும் குத்தம்னு சொல்வா’ என்று முனங்கி தலையணையை அணைத்து கொண்டான்.

       பூகம்பமே வந்தா கூட தூக்கத்துல எழுந்துக்காத என்னை, இவன் தீண்டலுக்கு உணர்வு வர வைச்சிட்டு இவன் நிம்மதியா தூங்கறான். ‘ போறேன் டா போறேன். டிவோர்ஸ் தானே நாளைக்கே போறேன். போக மாட்டேன்னு நினைக்கிறான்’ என்று மூக்குறிந்து ஹாலில் தனியாக தலையணையோடு தரையில் படுத்து உருண்டாள்.

      தரையில படுத்தா குழந்தைக்கு ஒத்துக்குமா? பசிக்குதே… சாப்பிட்டாளானு அக்கறையா கேட்டானா? என்று தண்ணீரை குடிக்க அறைக்கு வர அங்கே பால் பிரெட் என்று இருக்கவும் எடுத்து தொட்டு சாப்பிட்டு பாலை குடித்தாள்.

   இதென்ன பேய் பசி பசிக்குது. குழந்தை இருந்தா இப்படி தானா? சாப்பிட்டு சாப்பிட்டு வெயிட் போட போறேன். இந்த பணியாரம் மாதிரி நானும் பேட்(fat) ஆகிடுவேனா. ஒ மை காட்” என்று தரையில் உறங்க மனமின்றி அவனை தள்ளி விட்டு மறுபக்கம் நகர்த்தி அவளுக்கான இடத்தில் உறங்கினாள்.

     ‘கேடி… ஆசையில்லைனு பச்சை பொய் சொல்லிட்டு என்னல்லாம் இமேஜின் பண்ணுது.’ என்று ரிஷிவேந்தன் அந்த சிறு ஒளிர்வில் அவளின் நடவடிக்கையை கண்டு சிரிப்பை அடக்கி மெல்லிய விழிபடலத்தின் வாயிலாக வேடிக்கை பார்த்தான்.

-தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்
   

3 thoughts on “90’s பையன் 2k பொண்ணு-36”

  1. Kalidevi

    Yaruku intha aasai illama pogum athula shivu mattum ena , virupam illa mrg pani ipo una ethukittu valra udane kolanthaiya konjam yosikura avlothan , aana avaluku problem start aeiduchi eni tha shivu vera mari iruka pora

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Leave the field below empty!